'>
Showing posts with label ஜாதகம். Show all posts
Showing posts with label ஜாதகம். Show all posts

Monday, May 6, 2019

ஆறில் இருந்து அறுபது வரை ( நூலின் நோக்கம் & உள்ளடக்கம் )



அண்ணே வணக்கம்ணே !
அச்சு நூலாக வெளி வந்து  பட்டைய கிளப்பிய ஜோதிடம் ,மனவியல் பாலியல் கூறுகளின் மகாவெடிப்பு “ ஆறில் இருந்து அறுபது வரை “320 பக்க  நூலின் அத்யாயங்கள் தொடர்பதிவுகளாக.
(இந்த தொடர்பதிவுகளின் மதிப்பு ரூ.300 என்பதை கவனத்தில் கொண்டு படித்து பயன் பெறுங்கள் . Pl share and spread )
நூலின் நோக்கம் & உள்ளடக்கம்

இந்த உள்ளடக்கத்தை இரண்டு விதமாக உபயோகித்து கொள்ளலாம். ஒன்று ஏற்கெனவே நீங்கள் பிறந்து வளர்ந்து -கல்வி கற்று - வேலை பெற்று - மணந்து - பிள்ளைகள் பெற்று ஓய்ந்து கூட போயிருக்கலாம். ஆனாலும் கவலையில்லை. இந்த புத்தகத்தில் நான் ஆராய்ச்சி பூர்வமாக சொல்லியிருக்கும் விஷயங்களை முக்கியமாக பரிகாரங்களை இன்று முதலே பின்பற்ற ஆரம்பித்து விடலாம். உங்கள் வயது என்னவோ அத்தனை மாதங்கள் மன உறுதியுடன் பின்பற்றி வந்தால் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறும். ஏற்கனவே சொன்னபடி பிறவாமையும் நிச்சயம் + இந்த பிறவியிலான வாழ்வும் சுமுகமாக மாறும். (ரிப்பீட்டு: சுகமாக அல்ல). But not tension! No anxieties!
இதை படிக்கும் நீங்கள் கல்வி கற்கும் / தொடரும் நிலையில் இருந்தால் குறைந்தபட்சம் இப்போதாவது உங்களுக்கு விதிக்கப்பட்ட கல்வியை பெறலாம். விதிக்கப்பட்ட வேலை / உத்யோகம் / வியாபாரம் - விதிக்கப்பட்ட வாழ்க்கைத்துணை இப்படி அமைத்துக் கொள்ளலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகளின் வாழ்வை திட்டமிடலாம்.




ஆறில் இருந்து அறுபது வரை ( எச்சரிக்கை )



அண்ணே வணக்கம்ணே !
அச்சு நூலாக வெளி வந்து  பட்டைய கிளப்பிய ஜோதிடம் ,மனவியல் பாலியல் கூறுகளின் மகாவெடிப்பு “ ஆறில் இருந்து அறுபது வரை “320 பக்க  நூலின் அத்யாயங்கள் தொடர்பதிவுகளாக.
(இந்த தொடர்பதிவுகளின் மதிப்பு ரூ.300 என்பதை கவனத்தில் கொண்டு படித்து பயன் பெறுங்கள் . Pl share and spread )


 எச்சரிக்கை:
கவிதை என்றாலே நம்மவர்களுக்கு மைன்ட் ப்ளாக் ஆகிவிடும். எனவே சக ஜோதிடர்களுக்கும் ஜோதிட மாணவர்களுக்கும் ஜோதிட ஆர்வலர்களுக்கும் நான் சொல்ல நினைப்பதை ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி விடுகிறேன்.

பிறவாமை என்ற பெருவரத்தை பெறத்தான் - பூர்வ கருமங்களை தொலைக்கத்தான் இங்கே வந்திருக்கம். அதுக்கேத்த வாழ்க்கை - அந்த வாழ்க்கை அமைவதற்கு ஏற்ற கிரக ஸ்திதிகள் வர சிலர் பல்லாயிரம் ஆண்டுகள் கூட ஆன்ம வடிவில் காத்திருந்து தான் இந்த பிறவியை எடுத்திருக்கிறோம்.
பெயர் – புகழ் - பொன் - பொருள் - எவ்ள கிடைக்குதோ அந்தளவுக்கு ஆயுள் குறையும். கருமம் கூடும் அல்லது பூர்வ புண்ணியம் கழிஞ்சு போயிரும். அவப்பெயர் - வறுமை - நிராகரிப்புகள் எந்தளவுக்கு கிடைக்குதோ அந்தளவுக்கு பூர்வ கருமம் கழியும். பூர்வ புண்ணியம் அப்படியே இருக்கும்.
எம்.ஜி.ஆர் பட வசனம் போல நீதி – நேர்மை நியாயம்லாம் பின்பற்றி ஈட்டும் பொன் பொருளே நம் ஆயுளை குறைக்கும் -கருமத்தை கூட்டும் - பூர்வ புண்ணியத்தை குறைக்குமென்ற நிலையில் கூட்டி கொடுத்தும் - காட்டி கொடுத்தும் பெறும் பொன் பொருள் என்னெல்லாம் செய்யும்? யோசிங்க.
வே.விக்கள் கூறும் பிரம்மம் தன்னை இந்த பிரம்மாண்ட படைப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த படைப்பின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடும் போது நாம் எம்மாத்திரம். இந்த படைப்பில் இருந்து நம்மை வேறுபடுத்தி பார்த்துக் கொள்வதும் நம்மை மையமாக வைத்தே அனைத்தையும் சிந்திப்பதும் செயலாற்றுவதும் எப்பேர்ப்பட்ட மடமை ?
தந்தையிடமிருந்து விடுபட்டு - தாயின் முட்டை கருவை துளைத்த கணம் முதலே நம்மில் வளர்சிதை மாற்றம் ஏற்பட ஆரம்பித்து விட்டது. அஃதாவது வடிவேலு காமெடி போல செத்து செத்து விளையாட ஆரம்பித்து விட்டோம். மரணம் என்பது நம்மை துரத்தி கொண்டே இருக்கிறது.
இதனால் இருட்டு – பசி - தனிமை - வறுமை – தூரம் -நிராகரிப்பு இப்படி சின்னச் சின்ன விஷயங்களையும் சப் - கான்ஷியஸாய் மரணத்தோடு முடிச்சிட்டு இவற்றில் இருந்து தப்ப துணை – காதல் - செக்ஸ் உதவும் என்று இவற்றிற்காகவும் / செக்ஸ் ஏறக்குறைய  தடை செய்யப்பட்டிருப்பதால் இதற்கு மாற்றாய் பணத்தை உருவகித்துக் கொண்டு பணத்தை துரத்திய படி வாழ்வின் வெற்றி தோல்விகளை பணம் ஒன்றால் மட்டுமே அளவிட்ட படி கருமங்களை கூட்டி - பூர்வ புண்ணியங்களை எல்லாம் இழந்து மீண்டும் பிறவிச் சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறோம். இதை விட முட்டாள்தனம் வேறேதும் உண்டா?
இவற்றை எல்லாம் உணர்ந்து நம் விதியை நாம் தெரிந்து கொண்டு விதி வகுத்த பாதையில் பயணிக்க வேண்டும் என்ற சங்கல்ப்பம் உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் உங்கள் மீது சொரிய ஆரம்பித்துவிடும்.
எதிர்காலம் தரிசனமளிக்கும். உங்கள் வாழ்வை உங்கள் விதிப்படி அமைத்துக் கொள்ளலாம். பூர்வ புண்ணியங்களை விரயமாக்கி விடாமல் – பூர்வ கருமங்களை எல்லாம் ஒழித்து பிறவாமை என்ற பெருவரத்தை பெற்று விடலாம்.
அவ்வாறன்றி ஒரு வேலைவாய்ப்பு - ஒரு திருமணம் -சொந்த வீடு - லக்சரி கார் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் ஜோதிடத்தை அணுகினால் அது கண்ணாமூச்சி காட்ட ஆரம்பித்துவிடும். அப்படியே அவை கிடைத்தாலும் ஜெவுக்கு கிடைத்த ஐஸ்கிரீம் சாக்லெட் கணக்காய் சிறுக கொல்லும்.


ஆறில் இருந்து அறுபது வரை ( கவிதை )



அண்ணே வணக்கம்ணே !
அச்சு நூலாக வெளி வந்து  பட்டைய கிளப்பிய ஜோதிடம் ,மனவியல் பாலியல் கூறுகளின் மகாவெடிப்பு “ ஆறில் இருந்து அறுபது வரை “320 பக்க  நூலின் அத்யாயங்கள் தொடர்பதிவுகளாக.
(இந்த தொடர்பதிவுகளின் மதிப்பு ரூ.300 என்பதை கவனத்தில் கொண்டு படித்து பயன் பெறுங்கள் . Pl share and spread )


இறைவா !

நீ அழுத்தக்காரன், உன்னை நீ
வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை
நான் நெஞ்சழுத்தக்காரன், உன்னை நான்
வெளிப்படுத்தாது விடுவதாயில்லை
நீ ராமனிலும் ராவணனிலும்
ஒரே நேரத்தில் செயல்பட்ட பொறி
உன்னை பொறி வைத்து பிடிப்பதே எனது
ஐம்பொறிகளுக்கு நான் கொடுத்துள்ள செயல் திட்டம்
புராண புருடாக்களையும் மீறி படைப்பின்
ஒரே புருஷன் நீ என்று உணர்கிறேன்
பௌராணிகர்கள் புராண புருஷன் என்றாலும்
ஜோதிடர்கள் கால புருஷன் என்றாலும் நீ
சிங்கிளாக இருக்கும் சிங்கம் என்று அவதானிக்கிறேன்
ஒரே சத்தியத்தை வெவ்வேறானதாய் - புதிதே போல்
வெவ்வேறு ஆசாமிகளுக்கு வெளிப்படுத்திய
உன் கற்பனை வளம் பேஷ் !
அதனால் ஆனது உலக அமைதி ஸ்மாஷ் !
"பிட்டா பிடி" என்று நீ அவ்வப்போது
கொடுத்த சூசகங்களை சூட்டிகை
தனத்துடன் செட்டாக்கி படித்தவன் நான்
இறைவா ! எங்கும் உறைபவா !
உன் முக விலாசத்தை எம்
அக விலாசத்தில் ஒளித்தவா !
ஓருயிராய் இறங்கி வந்து பல்லுயிராய்
பிரிந்து எம்மில் ஒளிர்ந்தவா !

நீ உலகச் சிறையின் ஜெயிலராக இருக்கிறாய்
ஆயுள் தண்டனை கைதிகளுக்கு
ஆர்டர்லி பதவி கொடுத்து என் போன்ற
பிக் பாக்கெட்டுகளுக்கு டின் கட்ட வைக்கிறாய்
இது உனக்கு ஃபன் ! இதன்
பின்னான காரணம் எங்கள் ஸின் !

நீ ஒரு நல்ல தகப்பனை போல் இருக்கிறாய்
கெட்ட குமாரர்கள் வீடு திரும்பும்போது
விருந்து வைக்கிறாய் உன்னை அண்டியே
வாழ்ந்த எம்மை உண்டியில்லை உனக்கு
பட்டினியே மருந்து என்கிறாய்

நீ என் கப்பலின் தலைவன்
ஓட்டை வழியே கடல் நீர் குபு குபுக்கும்போது
கப்பலையே காலி செய்கிறாய்
நான் உன்னை மெட்ராஸ் பாஷையில்
வைதாலும் செவிடனாய் நடிக்கிறாய்
ஆம் நீ ஒரு செவிடன்
உனக்காக எத்தனை எத்தனை கச்சேரிகள்
நீ ஒரு ஊமை உன் மவுன
மொழிக்குத்தான் எத்தனை எத்தனை அகராதிகள்

நீ ஒரு அம்பயர் விளையாட்டு
வீரர்கள் உன்னை பணியும் போது
பாப்கார்ன் சாப்பிடுகிறாய்
அவர்கள் உன்னை புகழ்ந்து
பாடும் போது காது குடைகிறாய்
இவர்கள் எதையேனும் ஆட முற்படும் போது
ஆயிரம் கண்களுடன் பார்க்கிறாய்

இறைவா !
நீ ஒரு நல்ல செவிலித்தாய்
ஒவ்வொரு முறையும் நான் பிரச்சினைகளால்
பிரசவிக்கப்படும் போது
தலை கீழாய் தொங்க விட்டு
புட்டத்தில் அறைகிறாய்
இறைவா !
நான் அனுபவப் பள்ளிக்கு போக
மறுத்து அடம் பிடிக்கும் போதெல்லாம்
என் சட்டைப் பையில் ஒரு ASA சாக்லெட்டை
திணித்து ஆசை வாகனத்தில் ஏற்றுகிறாய்

மரணத்தின் நிழல் கூட மனிதர்களை
விரட்டுவது போல் உன் குறித்த
கற்பனைகள் கூட சிதறிக் கிடக்கும் என்
சிந்தனைகளை திரட்டுகின்றன
நழுவும் காலமானாய். ஒரு நாள் நானும்
காலமாவேன் என்று புரிவித்தாய்
காதலியர் விழி மொழியறியவே அகராதி
தேடிய எனக்கு உன் மொழியற்ற
மொழியும் புரியும் நிலை தந்தாய்
என்னில் நிகழும் ரச வாதத்தை கணிணிக்கு
ரைட் செய்யும் கலை தந்தாய்

கனவாய் கலைந்தாலும் விடியல் கனவாய்
நாள் முழுக்க இதம் தந்தாய்
உன் பாதம் பணிதலும் உனை ஏற்றி
புகழ்தலும் வெற்று என்று ஒற்றறிந்த பின்னும்
நன்றி என்ற வார்த்தையின் கனம்
போதாதோ என்ற தலைகனத்தில் கர்த்தாவே
உன்னை கவிதையில் கனம் பண்ணுகிறேன்

நான் தட்டாமலே திறந்தாய்
நான் கேளாமலே தந்தாய்
அதற்கொரு நன்றியுரைக்கும்
மடமையையும் தந்தாய்

நீ ஒரு ஆசிரியன் கடைசி
வரிசைக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை
முன் வரிசையில் இருக்கும் என்னை
முட்டிக்கு முட்டி தட்டுகிறாய்

நீ ஒரு பொற்கொல்லன்
தகரங்களை புறந்தள்ளி தங்கங்களைத்தான் சுடுகிறாய்
நீ ஒரு ரசவாதி இரும்புகளை தங்கமாக்குகிறாய்
தங்கங்களை ஈயமாக்கி இரும்புகளின்
முன் இளிக்க வைக்கிறாய்

நீ ஒரு சதிகாரன்
உன்னை மறக்கடிக்கும் பலதையும் எமக்கு நினைவூட்டி
உன்னை நினைவுறுத்தும் சிலதையும் நினையாது
தடுக்கும் அம்னீஷியாவுக்கு அடிகோலுகிறாய்

நீ ஒரு நல்ல நடிகன்
நயவஞ்சகர்களிடம் இளித்தவாயனாய்
நடந்து கொள்கிறாய்
அவர்களை அழிவுப்பள்ளத்தாக்கை
நோக்கி செலுத்துகிறாய்

நீ ஒரு நல்ல சலவை தொழிலாளி
துவைத்த துணிகளை வெள்ளாவியில் வைத்து சுடுகிறாய்
அழுக்கு துணிகளையோ வெள்ள நீரில் நனைக்கிறாய்

நீ ஒரு விவரமான சவரத் தொழிலாளி
ஒருவனுக்கு உபயோகித்த அனுபவ ப்ளேடை
மற்றொருவனுக்கு உபயோகிப்பதே இல்லை

நீ ஒரு நல்ல வங்கி காசாளன்
எம் கணக்கில் காசு இருந்தால் நீ
கொடுக்கா திருப்பதில்லை உனக்கு
முகமன் கூறா விட்டாலும்

நீ ஒரு நல்ல இயக்குனன்
கடந்த பிறவியில் பூத உடலிழந்து
ஆன்ம வடிவில் அழுது அரற்றி
நாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக் கொடுத்த
கதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்
இன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை
சகட்டு மேனிக்கு சவட்டுகிறோம்

நீ ஒரு நல்ல நீதிபதி
நீ வழங்கும் பிறருக்கான தீர்ப்புகள்
பத்தாம் வாய்ப்பாடு தனமாய் புரிந்து விடுகின்றன

நீ மோசமான நீதிபதி (?)
எனக்கான உனது தீர்ப்புகள் மட்டும்
புரிவதே இல்லை அல்ஜீப்ரா கணக்காய்




ஆறில் இருந்து அறுபது வரை ( முன்னுரை )


அண்ணே வணக்கம்ணே !
அச்சு நூலாக வெளி வந்து  பட்டைய கிளப்பிய ஜோதிடம் ,மனவியல் பாலியல் கூறுகளின் மகாவெடிப்பு “ ஆறில் இருந்து அறுபது வரை “320 பக்க  நூலின் அத்யாயங்கள் தொடர்பதிவுகளாக.
(இந்த தொடர்பதிவுகளின் மதிப்பு ரூ.300 என்பதை கவனத்தில் கொண்டு படித்து பயன் பெறுங்கள் . Pl share and spread )

முன்னுரை


ஆறில் இருந்து அறுபது வரை என்ற பெயரை இந்த நூலுக்கு இட்ட போதே சுஜாதா கதைகளில் போல மனசுக்குள் கன்று குட்டி உதைத்தது. என்றாலும் தில்லு துரையாய் அறிவித்தாயிற்று.
பிறகு தான் இந்த தலைப்பு வாசகனுக்கு என்ன மாதிரி செய்தியை தந்திருக்கும் என்று யோசித்த போது உதறல் பிறந்தது. அதாவது ஒரு மனிதனுக்கு ஆறு முதல் அறுபது வயது வரை ஜோதிட ரீதியாக தேவைப்படக் கூடிய அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய நூல் இது. இதை மட்டும் வாங்கி படித்து விட்டால் படித்தவற்றை பின்பற்றினால் வாழ்வில் எதிர்படக் கூடிய எல்லா சிக்கல்களையும் அசால்ட்டாய் தவிர்க்க முடியும் என்ற செய்தியை தந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
என் வரையில் நான் ஏதும் ஜோதிட கலையில் நிபுணனோ இன்னொன்றோ அல்ல. இன்றும் என் பரிசீலனைக்கு வரும் ஒவ்வொரு ஜாதகத்திலிருந்தும் ஏதேனும் ஒரு புது விஷயத்தை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்.
எல்லோரையும் போலவே நானும் ஜோதிட விதிகளை மனப்பாடம் செய்தவன் தான். சகட்டுமேனிக்கு அவற்றை அப்ளை செய்து பார்த்தவன் தான். ஆனால் அவ்வாறு அப்ளை செய்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பிறர் போல லூஸ்ல விடாமஎன் மூளையில் பதிந்து கொண்டேன்.
இந்த பதிவுகள் தொடர தொடர ஜோதிட விதிகளில் முக்கியமானவை எவை முக்கியமற்றவை எவை என்பது தெளிவானது.
கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீய பலன்களும் அனைத்தும் நடந்து விடுவதில்லை. ஒரே கிரக ஸ்திதி எந்த இருவருக்கும் ஒரே மாதிரியான பலனை தருவதில்லை. இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம் - கடவுள் கருணை – அப்பா, அம்மா நல்வினை - வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது. நாம் ரெசிப்டிவாக மாறும் போது பிரச்சினை குறைகிறது. ரெபல் ஆகும் போது அது பல மடங்காகிறது.
(ரெசிப்டிவ் : ஏற்புத் தன்மையுடன் இருத்தல்; ரெபல் : பொங்கி எழுதல்).
ஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அடித்து தூள் கிளப்பி விடுகிறது. அதே போல் தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. (நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்).
மேலும் உங்கள் அடுத்த கணம் இந்த கணத்திலான உங்கள் செயலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.
ஒரே ஜாதகத்தில் ஒரே லக்னத்தில் (அதாவது குத்து மதிப்பாக சொன்னால் இரண்டு மணி நேரத்தில்) பிறக்கும் எல்லா குழந்தைகளின் வாழ்வும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நிமிடத்துக்கு 4 குழந்தைகள் என்றால் 120 நிமிடங்களுக்கு 480 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் அதில் ஒன்று தான் சூப்பர் ஸ்டாரோ சூப்பர் ஆக்டரோ ஆகிறது. மற்றவை? இவ்வளவு ஏன் இரட்டை குழந்தைகளின் வாழ்வும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.
இங்கு தான் பல்வேறு காரணிகள் நம் வாழ்வை பாதிப்பதை பிரபாவிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம் வீடு அதன் வாஸ்து நம் பெற்றோர் அவர் தம் வாழ்க்கை முறை அவர்களின் எண்ணங்கள் - நம் சூழல் ஆசிரியர்கள் சக மாணவர்கள் அவர்களில் நமக்கு நெருக்கமானவர்கள் – இறைநம்பிக்கை - அதன் ஆழம் - அல்லது நாத்திகம் இப்படி பல அம்சங்கள் வாழ்க்கையை மடை மாற்றுகின்றன.
என்னதான் ஆயிரம் விதிகளை வகுத்து வைத்திருந்தாலும் ஜோதிடத்தில் ஒரு இருண்மைத் தன்மை இருக்கிறது. எனவே ஜோதிடரானாலும் சரி ஜாதகர்களானாலும் சரி ஜோதிடவியலை ஒரு வித பணிவுடனேயே அணுக வேண்டியிருக்கிறது. வெறுமனே ஜோதிட விதிகளை மட்டும் வைத்துக் கொண்டு எந்திரத்தனமாய் தட்டையாய் ஒரு வித ஆணவத்துடன் அணுகும் போது எல்லா விதிகளுமே கைவிட்டு விடுகின்றன.
சரி படைப்பின் மீதான மஹா விசுவாசத்துடன் அணுகி எதிர்காலத்தைக் கணிக்க முடிந்து விட்டால் மட்டும் என்ன அற்புதம் நிகழ்ந்து விடப்போகிறது? பரிகாரம் என்று டைவர்ட் ஆகி கோழி போனதோடு குரலும் போன கதையாகி விடுகிறது வாழ்க்கை.
நானும் பரிகாரங்களை பரிந்துரைக்கிறேன் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நான் கூறும் பரிகாரங்கள் கிரகங்கள் தரவிருக்கும் கெடு பலனை நம் சமூக - குடும்ப வாழ்க்கையை பாதிக்காதபடி - ப்ரொஃபெஷ்னல் கேரியர் பாதிக்காதபடி நமக்கு நாமே நடத்திக் கொள்வதே.
உடைத்துச் சொன்னால் நம் ஜாதகம் நம்மை எப்படி வாழ அனுமதித்திருக்கிறதோ அப்படி ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வது.
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். படைப்புக்கு எதிராய் செயலாற்றுபவனுக்கு இடையில் ஏற்படுவதே பயம். படைப்பு வகுத்த விதிக்கிணங்க நெகிழ்வு தன்மையோடு வாழ்பவன் அஞ்சத் தேவையில்லை. அவனுக்கு ஞானம் கிடைத்து விடுகிறது அல்லது ஞானம் கிட்டிவிட்ட காரணத்தாலேயே அவன் நெகிழ்வு தன்மையுடன் ஆற்றோடு போகிறான்.
ஜோதிட விதிகள் பரிகாரங்கள் எல்லாம் சரியே (நான் கூறும் லாஜிக்கல் ரெமிடீஸ்). ஆனால் ஓஷோ சொல்வதையும் நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
“The life doesn’t cares your preparations“
என்னைப் பொருத்தவரை நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும்; அறிவுக்கும் உணர்வுக்கும்; உணர்வுக்கும் -உள்ளுணர்வுக்கும் வித்தியாசம் புரிந்தவன். என்னை அறியாது என்னில் மூடநம்பிக்கைகள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் பெரியாரைக் காப்பாக கொண்டவன்.
என் காதுக்கும் - கண்ணுக்கும் வருவனவற்றை தவறாது பரிசீலிப்பவன். ஆனால் என் அனுபவம் சொல்வதை மட்டுமே ஏற்பவன். 1990 மார்ச் மாதம் ப்ராக்டிஸ் துவங்கி 2009 வரையிலும் மக்களை நேரில் சந்தித்து முதலில் கடந்த காலத்தைக் கணித்துச் சொல்லி அது டாலி ஆனால் மட்டுமே எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லி வந்த நிலையிலும் பிறகு ஆன்லைன் ஜோதிட ஆலோசனையை வழங்கி வரும் நிலையிலும் நான் உணர்ந்து கொண்ட சங்கதி ஒன்றே.
நவகிரகங்கள் கடவுளின் மந்திரி சபையில் மந்திரிகளை போன்றவையாகும். பிரதமர் மந்திரிகளுக்கு இலாகா பிரித்துக் கொடுப்பது போல் கடவுள் பூமியில் உள்ள எல்லா விஷயத்தையும் 9 ஆக பிரித்து, அவற்றின் மீதான அதிகாரத்தை ஒவ்வொரு கிரகத்துக்கும் கொடுத்துள்ளார். ஒரு கிரகம் தங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அதன் இலாகாவில் உங்களை அடித்துக் கொள்ள ஆளிருக்காது. அதே கிரகம் கெட்டிருந்தால் அதன் இலாகாவில் நாயடிதான். இது ஜோதிடவியலின் ஸ்தூல சாரம்.
ஆனால் ஒரு மந்திரிக்கும் உங்களுக்கும் வாய்க்கா வரப்பு சண்டை இருந்தாலும் பிரதமர் உங்களுக்கு உதவ முனைந்து விட்டால் மந்திரியால் என்ன செய்ய முடியும்?. ஆனால் கடவுள் என்ற பிரதமர், உங்களுக்கு உதவ முன் வந்து விட்டால் அவரது ஒரே நோக்கம் வெறுங்காவல் கடுங்காவல்” தண்டனைகளை ஒரே டெர்மில் அனுபவிக்கச் செய்து விரைவில் விடுதலை செய்வதே.
அவர் உங்களுக்கு உதவ முன் வந்து விட்டால், எவனோ எனக்கு சூனியம் வைத்து விட்டான் என்று பதறிப் போகும் அளவுக்கு வாழ்க்கை நிலை மாறி விடும். காரணம், இறைவனின் கேரக்டர் அப்படி. இறைவனின் கேரக்டரைப் புரிந்து கொண்டவர் யாரும் உலக வாழ்வை பிரதானமாக கருதும் யாரும் முழு நாத்திகர்களாக மாறிவிடுவார்கள்.
ஆனால் உலக வாழ்வு ஒரு விசித்திரமான சூதாட்டம். இங்கு அனைவரும் தோற்றுத்தான் போகப் போகிறோம். அதிகம் வென்றவன் அதிகமாய் இழப்பான். குறைவாய் வென்றவன் குறைவாய் இழப்பான். நான் மரணத்தைச் சொல்லுகிறேன்.
எந்த மந்திரி நமக்கு ஃபேவர் செய்வான் என்று தலைமைச் செயலகத்தைச் சுற்றி அலைவது ஒரு முறை. நேரடியாக பிரதமரைச் சந்தித்து உதவி கோருவது ஒரு முறை. மந்திரி ஃபேவர் செய்வது என்பது நம் கருமங்களைக் கூட்டும். பிரதமர் ஃபேவர் செய்வது என்பது நம் கருமங்களை அழித்து பிறவாமையைத் தரும்.
இங்கு அனைத்து உயிர்களும் முக்திக்கு தகுதியானவையே. முக்தி என்றால் பிறப்பு இறப்பு என்ற சக்கரத்தில் இருந்து விடுபடுவது. (இந்து மதம் கூறும் முப்பது முக்கோடி தேவர்களும் இப்படி விடுதலை பெற்றவர்களே என்றும் ஒரு கருத்து உண்டு).
விடுதலைக்கு இருக்கும் ஒரே வழி, நம் பூர்வ கருமங்களை அனுபவித்து தீர்த்து விடுவதே. இதை சாத்தியப்படுத்தும் வாழ்வைத்தான் நாம் வேண்டி விரும்பி கேட்டு பெற்று வந்திருக்கிறோம். அடுத்து வரும் கவிதையின் ஒரே ஒரு பத்தி இதை பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்கிறது. முக்தியை சாத்தியப்படுத்தும் வாழ்வைத் தரக்கூடிய கிரக ஸ்திதிக்காக பல்லாயிரம் ஆண்டுகள் கூட காத்திருந்து இந்த பிறவியை எடுத்திருக்கிறோம். ஆக உங்கள் ஜாதகம் உங்கள் தேர்வு தான். உங்கள் ஜாதகப்படி விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்தால் பிறவாமை மட்டுமல்ல இந்த பிறவியிலான வாழ்வும் சுமுகமாக அமைந்து விடும். (கவனிக்க - சுகமாக அல்ல சுமுகமாக).

// நீ ஒரு நல்ல இயக்குனன்
கடந்த பிறவியில் பூத உடலிழந்து
ஆன்ம வடிவில் அழுது அரற்றி
நாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக் கொடுத்த
கதைக்குத் தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்
இன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை
சகட்டு மேனிக்கு சவட்டுகிறோம் //
இப்போது கவிதையை படியுங்கள். சினிமா கிசு கிசு கணக்காய் தவ்விசென்றால் புண்ணியமில்லை. இந்த கவிதையின் ஒவ்வொரு பத்தியும் என் இருபதாண்டு கால தவ வாழ்வின் பலன். உயிரை பணயம் வைத்து நான் பெற்ற அனுபவங்களின் சாரம். கவிதையை படித்து விட்டு முடிவு செய்யுங்கள்.
நீங்கள் அறிந்து கொள்ள அணுக விரும்புவது இறைவனையா? நவகிரகங்களையா?
இந்த நூலின் மூலம் நவகிரகங்களை அவற்றின் பாதிப்புகளை தெரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள். ஆனால் இவையாவும் அந்த கால கணக்கு நோட்டில் வலது பக்கம் பெரிய மார்ஜினில் செய்யும் ரஃப் ஒர்க் போன்றவை. 2 ஜி வழக்கில் 1.76 பக்கத்தில் சங்கிகளும் குடுமிகளும் போட்டுக் கொண்டே போன பூஜ்ஜியங்கள் மாதிரி. சிபிஐ நீதிமன்றம் 1.76 என்ற எண்களை ரத்து செய்து விட்டது. இதன் விளைவு? குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை.
இறைவன் நினைத்தால் நீங்கள் வாய்தா கேட்டு அலையாமல் இருந்தால் குறுகிய காலத்திலேயே விடுதலை நிச்சயம். ஆனால் கிரகங்கள் பரிகாரங்கள் (யாகம் - ஹோமம் இத்யாதி) வாய்தாக்களை வாரி வழங்கலாம். ஆனால் மெரீனாவில் புதைத்து விடும். புதைத்ததை தோண்டி எடுத்து குற்றவாளி என்று அசிங்கப்படுத்தும்.
கவிதைக்கு போயிரலாமா?

Sunday, December 11, 2011

கனி மொழி ஜாதகம் : ஒரு பார்வை

கனிமொழியோட ஜாதகத்தை கணிச்சு பார்த்ததும் மனசுல ஸ்பார்க் ஆன மொதல் விஷயம் "கனியை சனி ஒரு கை பார்க்காம விடமாட்டாரு"ங்கறதுதேன். 1968 ஆம் வருடம், ஜனவரி 5 ஆம் தேதி சூரியன் உச்சியில் இருக்கும் போது பிறந்த கனியோட ஜாதகப்படி அவருடைய லக்னம் மீனம்,ராசி கும்பம். மீனம் ராசி சக்கரத்துல கடேசி ராசிங்கறதால இவிக லைஃப்ல எல்லாமே கடேசியாதான் நடக்கும். மத்தவுக வேணாம்னு கழிச்சதுதேன் கிடைக்கும். கும்பம் ராசிச்சக்கரத்துல 11 ஆவது ராசிங்கறதால லாபம் பார்க்காம எதையும் செய்யமாட்டாய்ங்க.

கடந்த சனி பெயர்ச்சியில சனி அஷ்டமத்துல வந்து உட்கார்ந்து ஆட்டிவச்சதுல இவிக லாபம் பார்த்து இறங்கின காரியம்லாம் இவிக தலைக்கு தீம்பாவே முடிஞ்சுது. இந்த சனிப்பெயர்ச்சிக்கு சனி 9 ல வந்தாலும் அது அப்பாவை காட்டுமிடம்.அப்பா "ஒரு வழி" ஆனபிறகு அல்லது அப்பா கைவிட்ட பிறகு இந்த ஜாதகர் மேற்கு பக்கமா தூரதேசம் போயிரவும் வாய்ப்பிருக்கு.

ஜாதகத்தில் கிரக நிலை:

லக்னத்துல லாப -விரயாதிபதியான சனி , 2 -8 ல் நின்று கடுமையான மாங்கல்ய தோஷத்தை தரும் ராகு கேது ,6 ல் லக்னாதிபதியான குரு , அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன், ( இவருக்குரிய எண் 6 - ஜாதகருக்கு திகார்ல ஒதுக்கப்பட்ட
சி(அ)றை எண் கூட 6 தான்) தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் மற்றும் தாய் & கணவரை காட்டும் புதன் இருக்காய்ங்க. புத்திஸ்தானாதிபதியான சந்திரனும் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதி & அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாபதியான செவ்வாயும் சேர்ந்திருக்காய்ங்க. டெக்னிக்கல் டீட்டெய்ல்ஸ் ஓவர். இப்பம் பலனை பார்ப்போம்.

ஜாதக பலன்:

லக்னாதிபதியான குருவே ஆறுல மாட்டினாரு. கனிக்கு எதிரி ஆருன்னா கனிதான். குரு கங்கண காரகன் (திருமணம்) என்பதால் முதல் திருமணம் தோல்வி. குரு புத்திர காரகன் -அம்மாவின் இந்த சிறை வாசம் மகன் ஆதித்யாவோட மனதை எந்தளவுக்கு பாதித்ததோ -அதன் விளைவாக அம்மா -பிள்ளை உறவு எந்த அளவுக்கு மெலியுமோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ராகு கேதுக்கள்:

2 என்பது வாக்கு ஸ்தானம். எட்டு என்பது ஆயுள் ஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருப்பதால் கனியோட வாக்கு அவர் கழுத்துக்கு தூக்கு.( நீரா ராடியா டேப்பு கேட்டிங்களா?) ஒவ்வொரு பிடி சோறும் விசமாத்தான் இறங்கும். தனிமை -இருட்டு-நிராகரிப்பு இதான் வாழ் நாள் முழுக்க தொடரும்.

"விவகாரங்களை" காட்டும் ஆறாமிடத்தில் நின்ற லக்னாதிபதியான குரு ஜீவனாதிபதியாவும் இருக்கிறதால இவரோட முழு நேரத் தொழிலே "விவகாரமா"த்தான் இருக்கும்.

லக்ன சனி:

கனி சொம்மா இருந்துரலாம்னு நினைச்சாலும் லக்னத்துல நின்ன சனி விடமாட்டாரு. மூன்றாமிடத்தை பார்த்து சகோதரர்களுக்கும் , ஏழாமிடத்தை பார்த்து கணவருக்கும், பத்தாமிடத்தை பார்த்து "பிழைப்புக்கும்" ஆப்பு வைச்சுக்கிட்டே இருப்பாரு.

கனி பிறந்த பிறவுதேன் கலைஞருக்கு "கூடி"வந்ததுன்னு பேசிக்கிறாய்ங்க.அசலான மேட்டர் இன்னான்னா அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன் நின்னதாலதான் கலைஞரு பிழைப்பு நாறிப்போச்சு. சுக்கிரன் என்றால் பெண். இப்படி தமிழ் நாட்டுல ஒரு அம்மாவும் -அப்படி தில்லி "மாதாஜீக்களும் " ( இந்திரா -சோனியா) தாத்தாவுக்கு ஆப்படிக்க இது முக்கிய காரணம்.

தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் நின்னாரு . இதனால இவிக கேரியர் முழுக்க எதிரிகள் நிறைஞ்சிருப்பாய்ங்க. அப்படி யாரும் இல்லைன்னாலும் கனி அம்மாவே ஒரு நலம் விரும்பியை தன் எதிரியா மாத்திக்குவாய்ங்க,

இந்த சூரியனோடு தாய் & கணவரை காட்டும் புதன் இருக்கிறதால இவிகளுக்கு அசலான எதிரி இவிக அம்மாதான். கணவரை கனி எதிரியாத்தான் பாவிப்பாரு.

புத்திஸ்தானாதிபத்தியம் சந்திரனுக்கு கிடைச்சிருக்கு. சந்திரன்னாலே சஞ்சலம், ஆகாய கோட்டைகள்தான். இதுல இவரு விரயத்துல வேற மாட்டினாரு.

இதனால இவரோட "கனவு". எதுவும் நிறைவேறாது. கீழே தள்ளின குதிரை குழியும் பறிச்சாப்ல இந்த சந்திரன் செவ்வாயோட வேற சேர்ந்து "உன்மத்த" நிலைய தருவாரு. செவ்வாய் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதிபத்யம் மற்றும் அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாதிபத்தியம் பெற்று விரயத்தில் நின்றதால இவரோட "வருமானம்லாம்" பறிபோயிரும். இவர் பேச்சுக்கு மதிப்பிருக்காது. குடும்பமும் இவருக்கு ஆதரவா இருக்காது. அப்பா இருந்தும் இல்லாத மாதிரி தான். அப்பா சொத்துலயும் (திமுக?) இவருக்கு உரிய பங்கு கிடைக்காது. சுத்தமா கழட்டி விட்டுருவாய்ங்க.

இதுவரை பார்த்த அம்சமெல்லாம் ஜூஜுபி. சனியோட 7 ஆம் பார்வை மற்றும் செவ்வாயோட எட்டாம் பார்வை கூட்டாக 7 ஆம் இடத்தின் மீது விழுவது என்ன மாதிரி எஃபெக்டை தரும்னு சொன்னா நாஸ்திதான். ஒரு நண்பரும் - ஒரு எதிரியும் கூட்டு சேர்ந்து இவர் உயிருக்கே உலை வைக்கவும் வாய்ப்பிருக்கு..

தற்சமயம் புத மகாதசையில் சனி புக்தி நடக்குது .(13/6/2011 முதல் 23/2/2014 வரை) இவிக லக்னம் மீனம்ங்கறதால புதன் - சனி ரெண்டு பேருமே எதிரிங்கதேன்.தசா நாதனும் -புக்தி நாதனும் ஆளுக்கொரு ஆப்பு வைக்க காத்திருக்காய்ங்க.( வச்சுட்டாய்ங்க)

சனி தலித் இனத்தை காட்டும் கிரகம். தலை மேல உட்கார்ந்த சனி கிரகம். ராசா ரூபத்துல ஆப்படிச்சுருச்சு. புதன் என்றால் ஏஜெண்ட். நீரா ராடியா ஏஜெண்டுதானே.

சனிக்கு லாபம் -விரயம்னு ரெண்டு வித ஆதிபத்யம் இருக்கு. இதனால மேற்சொன்ன காலகட்டத்தில் முதல் பாதி விரயமாவும் - அடுத்த பாதி ஓரளவு லாபமாவும் நடக்க வாய்ப்பிருக்கு. ஆக இதோ பட்டம் -அதோ பதவின்னு என்னதான் அல்லாடினாலும் தப்பித்தவறி அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கணக்கா பதவியே கிடைச்சாலும் 2012 , அக்டோபர் 17 வரைக்கும் செயில்ல தப்ப "உஸ் .. அப்பாடா"ன்னு உட்கார முடியாது,

2012 , அக்டோபர் 17க்கு மேல் நடக்கும் லாபம் கூட மரணம் தொடர்பான "ஆதாயமாக"த்தான் இருக்கும். அந்த ஆதாயம் கூட 23/2/2014 க்கு பிறகு "விரக்தி"யை கொடுத்துரும்.

அடுத்து வரக்கூடியும் 7 வருட கேது தசை முதல் கணவரை போலவே கனிமொழியையும் "சன்யாசி"போல ஆக்கி "பரதேசம்" அனுப்பி வைத்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன்.

,

Friday, November 25, 2011

ஜூ.ஐஸ்வர்யா ஜாதகம் : தாத்தாவுக்கு ஆப்பு


நாட்டு முன்னேற்றத்துக்காவ ஆராரோ என்னென்னமோ பண்றாய்ங்க. நம்ம பங்குக்கு எதுவும் செய்லின்னா நல்லாருக்காதே. அதனால இன்னைக்கு அமிதாப் பச்சனோட பேத்தி - அபிஷேக் பச்சன் & ஐஸ்வர்யாராய் ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சின்னதா ஒரு பதிவு போட முடிவு செய்திருக்கேன்.

மொதல்ல கிரக நிலை:

லக்னம் தனுசு , லக்னாதிபதியே 5 ல வக்ரம் . ரெண்டுல: குளிகன் மாந்தி , ஆறில் கேது,7ல் சந்திரன், 9ல் செவ்,11 ல் சூரிய,சனி சேர்க்கை, 12ல் புத,சுக்ர,ராகு

லக்னாதிபதி 5 ல இருந்தா நல்லதுதேன்.வக்ரமானா? அதுலயும் 4 க்கான் ஆதிபத்யமும் குருவுக்கே கிடைச்சிருக்கு. 4ன்னா அம்மா. அப்போ ஐஸு.. நிலை? 4ங்கறது வீடு,வாகனம்,கல்வின்னு பலதையும் காட்டுமிடம். இந்த பாவாதிபதி 5 ல நின்னா ஓகே.வக்ரமானா? டிசம்பர் 25 வரை வக்ரமே. அப்பம் மேற்படி விஷயங்களில் பல்புதானா?

ரெண்டுங்கறது தனம்,வாக்கு,குடும்பம்,நேத்திரம் இத்யாதிய காட்டுமிடம். இங்கன பாபகிரகங்களான குளிகன் மாந்தி இருக்கிறதால மேற்படி விஷயங்களில் பணால் தானா?

6 ல கேது இருந்தா நல்லதுதேன். கடன் தீரும். நோய் குணமாகும்.வழக்கு ஜெயமாகும். கடன் தீரனும்னா மொதல்ல கடன் ஏற்படனுமே. நோய் குணமாகனும்னா மொதல்ல நோய் வரனுமே.வழக்கு ஜெயமாகனும்னா மொதல்ல வழக்கு வரனுமே..

7 ல் சந்திரன்:
தனுசு லக்னத்துக்கு சந்திரன் அஷ்டமாதிபதி. இவர் 7 ல நின்னு காதல் ,கண்ணாலத்துக்கெல்லாம் எதிர்காலத்துல ஆப்படிக்கப்போறது வேற கதை.தற்சமயத்துக்கு பார்த்தா இவர் லக்னத்தை வேற பார்க்கிறாரே. இதனால சீதள ரோகங்கள்,மனக்கோளாறுகள்,நுரையீரல் பாதிப்பு இத்யாதி வருமோ?

9ல் செவ்:
9ன்னா அப்பா .செவ்வாய்னா கோபம் /யுத்தம்/ரத்தம் 9ன்னா அப்பா வழி சொத்து செவ்வாய் நெருப்பு கிரகமாச்சே. அப்பம் சாம்பல் தானா? இவரு யோகத்தை தரனும்தான். இல்லேங்கலை வக்ர குரு அஞ்சாம் பார்வையா இவரை பார்க்கிறாரே. 9ன்னா தூரபிரயாணத்தை வேற காட்டும். எட்டுங்கறது மர்ம ஸ்தானத்தை காட்டும். 9ங்கறது துடைகளை காட்டும். செவ்வாய்னாலே சர்ஜரி. ஒரு வேளை ..........

11ல் சூரிய சனி சேர்க்கை:

சூரிய,சனி சேர்க்கை இருந்தா அப்பாவுக்காகாதும்பாய்ங்க. ஜாதகருக்கும் அப்பாவுக்கும் ஒத்துவராதும்பாய்ங்க. அப்பா படிப்படியா நொடிச்சு போயிருவாருன்னும் சொல்றாய்ங்க. பாவம் அபிஷேக் பச்சன்.. சூ+சனி சேர்க்கை காரணமா தலை,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் கூட வரலாம். குழந்தை பகல் பத்து மணிக்கு பிறந்ததால பித்ருகாரகன் சூரியனேங்கறதை மறந்துராதிங்க.

இங்கே சனி உச்சம் தனாதிபதி உச்சம் பெற்றால் தனயோகம்னும் சிலர் சொல்வாய்ங்க. ஆனால் லக்னாதிபதி குருங்கறதையும் -சனிக்கும் குருவுக்கும் பகையிருக்கிறதையும் மனசுல வச்சு ரோசிங்க.

சூரியன் இங்கன நீசம்.(அப்பா) சூரியனுக்கு பகைகிரகமான சனி இங்கே உச்சம்ங்கறதை மறக்காதிங்க. கூட்டி களிச்சு சின்னதா கணக்கு போட்டுக்கிட்ட அப்பாறம் கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி பதிவை கேளுங்க.

அயனான மேட்டர்லாம் சொல்லியிருக்கேன்.லைஃப் லாங் உதவும். உடுங்க ஜூட்..

குறிப்பு:
நெட் ஸ்பீட்ல பிரச்சினை உள்ளவுக இங்கன அழுத்தி டவுன் லோட் பண்ணியும் கேட்டுக்கலாம்.

Tuesday, November 22, 2011

ஜாதகம் எப்டி இருந்தாலும் ஜமாய்க்கலாம் வாங்க!

ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் .

ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.

எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.


ஆம் ..மிக சாதாரண ஜாதக‌த்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் ம‌ட்டும் ஈடுப‌ட்டு த‌ன‌யோக‌த்தை அனுப‌விப்ப‌தை காண‌முடிகிற‌து. ம‌ற்ற‌ 8 கிர‌க‌ங்க‌ள், 11 பாவ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ விஷ‌ய‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு க‌ஷ்ட‌ ந‌ஷ்ட‌ங்க‌ள் இருந்தாலும் த‌ன‌ யோக‌ம் ம‌ட்டும் தொட‌ர்கிற‌து.


அதே நேர‌த்தில் 11 பாவ‌ங்க‌ள்,8 கிர‌க‌ங்க‌ள் ந‌ல்ல‌ நிலையில் இருந்தாலும் அவை கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் விஷ‌ங்க‌ளையெல்லாம் விட்டு விட்டு த‌ம் ஜாத‌க‌த்தில் தீய‌ப‌ல‌ன் த‌ரும் ஒரே ஒரு பாவ‌ம் அல்ல‌து ஒரே ஒரு கிர‌க‌த்தின் கார‌க‌த்துவ‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு உல‌கே மாய‌ம் என்று பாடி, சோக‌ம் கொண்டாடுவ‌தையும் காண‌முடிகிற‌து. இந்த‌ க‌ட்டுரைத் தொட‌ருக்கான‌ அடிப்ப‌டை தத்துவ‌ம் இதுதான்…….

நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..

நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள‌ வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

இனி ச‌ற்று விரிவாக‌ பார்ப்போம்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.

லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.

3ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். உட‌ன் பிற‌ந்த‌வ‌ர்க‌ளில் ஜாத‌க‌ங்க‌ளை ஜோதிட‌ரிட‌ம் காட்டி அல்ல‌து தாங்க‌ளே பார்த்து அவ‌ர்களில் யாருடைய‌ ஜாத‌க‌ம் ப‌ல‌ம் வாய்ந்த‌தாக‌ உள்ள‌தோ அவ‌ர்க‌ளுடைய‌ யோச‌னைப்ப‌டி,அவ‌ர்க‌ளின் கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.(குறிப்பிட்ட‌ ச‌கோத‌ர‌ர் அல்ல‌து ச‌கோதிரியின் ராசி த‌ங்க‌ளுக்கு வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக‌ இருக்க‌வேண்டும்)

4ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தாய்,தாய் வ‌ழி உற‌வுக‌ளை காடுமிட‌ம். என‌வே சென்ற‌ ப‌த்தியில் கூறிய‌ ப‌டி தாய்,தாய் வ‌ழி உற‌வுகளின் ஜாத‌கங்களை,ராசிகளை ப‌ரிசீலி‌த்து அதில் தேர்வு பெறுப‌வ‌ரின் யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

5ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது புத்தி,புத்திர‌ர்க‌ளை காட்டுமிட‌ம். என‌வே டேபிள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க் ம‌ட்டும் செய்து வ‌ர‌வேண்டும். வ‌ய‌து வ‌ந்த‌ ம‌க‌ள்/ம‌க‌ன் இருந்தால் அவ‌ர்க‌ள‌து யோச‌னை,துணையை நாட‌லாம்.(அவ‌ர்க‌ளின் ஜாத‌க‌ங்க‌ள் சுப‌ப‌ல‌மாயிருப்ப‌து முக்கிய‌ம். அவ‌ர்க‌ளின் ராசி தங்கள் ராசிக்கு வ‌சிய‌ம் அல்ல‌து ந‌ட்பாக‌ இருப்ப‌தும் முக்கிய‌ம்). மேலும் பெய‌ர் ,புக‌ழுக்கு ஆசைப்ப‌டாது,புத்திர‌,புத்திரிக‌ள் த‌ம் க‌ட்டுப்பாட்டில் இருக்க‌ வேண்டும் என்று எண்ணாது வாழ‌வேண்டும்)

7ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது க‌ண‌வ‌ன்/ம‌னைவியை காட்டுமிட‌ம். கணவன்/ம‌னைவியின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

9ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

11ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.


ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்

"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.


ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர‌ ஸ்தான‌ம். டேபுள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க்கில் ஈடுப‌ட‌க்கூடாது. அதிர்ஷ்ட‌த்தை ந‌ம்பி எந்த‌ செய‌லிலும் இற‌ங்க‌ கூடாது.சொந்த‌ யோசனையுட‌ன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போன‌தே வ‌ழி என்று செய‌ல் ப‌ட‌க்கூடாது."தென்னைய‌ பெத்தா/பிள்ளைய‌ பெத்தா க‌ண்ணீரு!" என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் வ‌ரிக‌ளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வ‌யிறும் வேறு" என்று உண‌ர்ந்து வாழ‌வேண்டும். பிள்ளைக‌ள் மேல் ப‌ற்றை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ கூடாது.


ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது ம‌னைவியை காட்டுமிட‌ம். வீதி வ‌ரை ம‌னைவி என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் த‌த்துவ‌பாட‌ல் வ‌ரி. இற‌ப்புக்கு பின் ந‌ம்முட‌ன் வ‌ர‌ப்போவ‌து இப்பிற‌வியின் நினைவுக‌ளே. என‌வே உள்ளுவ‌தெல்லாம் உய‌ர்வுள்ள‌ல் என்று வாழ‌வேண்டும். ம‌ற்ற‌ உற‌வுக‌ள் எல்லாம் பிற‌ப்பிலேயே அமைந்துவிடுகின்ற‌ன‌. ஆனால் க‌ண‌வ‌ன்/ம‌னைவி என்ற‌ உற‌வு விசயத்தில் ம‌ட்டும் ந‌ம‌க்கு இறைவ‌ன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை த‌ருகிறான். என‌வே 7 ஆம் பாவ‌ம் கெட்டிருப்பின் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ தேர்வு செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.

ஒவ்வொரு ஆணும் உல‌க‌ அழ‌கியே ம‌னைவியாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறான்.

ஒவ்வொரு பெண்ணும் ம‌ன்ம‌த‌னே த‌ன் க‌ண‌வ‌னாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் ய‌தார்த்த‌த்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவ‌ம் கெட்டுள்ள‌ ஆண்,பெண்ணுக்கு அவ‌ர்க‌ள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது ந‌ர‌க‌மாக‌ மாறிவிடுகிறது. அதே நேர‌ம் 7 ஆம் பாவ‌ம் கெட்டிருந்தாலும் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ ஏற்று ஒற்றுமையுட‌ன் வாழ்ந்துவ‌ருவ‌தை காண‌முடிகிற‌து.

9ஆம் பாவம் கெட்டிருந்தால்:

சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.

11 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தை காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ,வட்டிக்கோ ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதர,சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய கூடாது.
குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3,6,8,10,12 பாவங்கள் கெட்டால் என்ன செய்யவேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.
3ஆம் பாவம் கெட்டால் :
மனதில் தைரியம் மிகும்.பிரயாணங்களுக்கு அஞ்சாமல்,கால்களுக்கு சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வந்து பணம்,பொருள் ஈட்டுவீர்கள். சுய‌முய‌ற்சியில் ந‌ம்பிக்கை வைப்பீர்க‌ள்.(அதே நேர‌ம் தைரிய‌ம் அள‌வுக்கு அதிக‌மாகிவிடாம‌ல் பார்த்துக்கொள்ளுங்க‌ள்) பிர‌யாண‌ங்க‌ளால் ஏற்ப‌டும் நோய்க‌ளான‌
பைல்ஸ்,ஆஸ்மா போன்றவை வ‌ராது பார்த்துக்கொள்ள‌ வேண்டும்.தங்கள் பெற்றோர்களுக்கு நீங்க‌ள் தான் இறுதி வாரிசாக‌ இருக்க‌ வாய்ப்பு அதிக‌ம். இத‌ர‌ கிர‌க‌ங்க‌ளின் பாதிப்பால் உங்க‌ளை அடுத்து வாரிசுக‌ள் பிற‌ந்தாலும் அவ‌ர்க‌ளை விட‌ நீங்க‌ள் உய‌ர்ந்த‌ நிலையில் இருப்பீர்க‌ள். என்ன‌ ஒரு பிர‌ச்சினை என்றால் வ‌யதாக‌ வ‌ய‌தாக‌ காதுக‌ள் தான் ட‌ப்பாஸு ஆகிவிடும்
6ஆம் பாவம் கெட்டால் :
6ஆம் பாவம் கெட்டால் எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர்.க‌ட‌ன் க‌ள் தீரும்,நோய்க‌ள் குண‌மாகும்.கோர்ட்டு வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ம் ஏற்ப‌டும்.
8ஆம் பாவம் கெட்டால் :
8ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு துஸ்தான‌ம் என்ப‌தால் இது ப‌ல‌ம் பெறுவ‌து ஆயுட்குறைவை காட்டும். என‌வே இந்த‌ பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால் திடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌டும்.
12ஆம் பாவம் கெட்டால் :
12ஆம் பாவம் தூக்கம், உடலுறவு,செலவுகளை காட்டுமிடமாகும்.
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்த‌துடன் தானும் கெட்டார்."

"ஆன‌ முத‌லில் அதிக‌ம் செல‌வானால் எல்லோர்க்கும் க‌ள்ள‌னாய்,ந‌ல்லோர்க்கும் பொல்ல‌னாம் நாடு"
"விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரிய‌ம் தீர்ந்து விட்டால் சுந்த‌ரியும் பேய் போலே"
இதெல்லாம் நீங்க‌ள் அறியாத‌ ஒன்ற‌ல்ல‌ .. ஆக‌ தூக்க‌ம்,செல‌வு,செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உய‌ர்வு ஏற்ப‌டும் என்ப‌து உறுதி. இவை குறைய‌ 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆக‌வேண்டும். என‌வே தான் மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள் கெட்டிருந்தால் த‌ன‌யோக‌ம் பெற‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று கூற‌வில்லை. மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள்
வாழ்வில் தொல்லைக‌ள் குறைந்து ஆட்டோமேட்டிக்காக‌ த‌ன‌யோக‌ம் ஏற்ப‌ட்டு விடும்.

Tuesday, October 18, 2011

ராஜ பக்சே : நவ 17 முதல் 9 நாள் கண்டம்


அண்ணே! வணக்கம்ணே .. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே அவர்களின் ஜாதக பலனை படிச்சு எஞ்ஜாய் பண்ணியிருப்பிங்கனு நினைக்கிறேன். பார்ட்டிக்கு 08/Oct/2009 => முதல் 26/Nov/2011 வரை குரு தசையில குரு புக்தி நடந்துக்கிட்டிருக்கு. இவருது கன்யா லக்னம். குரு பாவி. நல்லவன் கெட்டவனானா எப்டி இருக்கும்னு நான் சிவப்பு மனிதன் ரஜினிகாந்தை உதாரணம் காட்டி நேத்து விளக்கியிருந்தேன்.

ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்கனும்னா தன்னோட சுயபுக்தியில யோக பலனை தரும்ங்கறது விதி. இந்த யோக பலன்லாம் இன்னைலருந்து ஐ மீன் அக்டோபர் 19 முதல் நவம்பர் 26 வரை தான் . ஆக்யூரேட்டா கணக்கு போட்டா அக்டோபர்ல ஒரு 12 நாள் நவம்பர்ல ஒரு 26 நாள். டோட்டலா பார்த்தா ஜஸ்ட் 38 நாளுதேன்.

அதுக்கப்பாறம் குரு தசையில சனி புக்தி ஆரம்பம். சனி சிவாஜி தி பாஸ்ல ரஜினி மாதிரி சிங்கிளா நின்னிருந்தா அந்த கதை வேற இவரு செவ்வாயோட சேர்ந்திருக்காரு. அதிலயும் நீச செவ். இவருதேன் லக்னத்துக்கு அஷ்டமாதிபதி இந்த சனி செவ் சேர்க்கைய பற்றி நேற்றைய ஆடியோ போஸ்ட்ல படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கேன்.

அதையெல்லாம் மறுபடி ரிப்பீட் பண்ணா சின்னக்குழந்தைங்க பயந்துக்குவாய்ங்க..ஆக மொத்தத்துல நவம்பர் 17 க்கு கோசார சனி ஏழுக்கு வராரு. நவம்பர் 26 க்கு அய்யாவுக்கு குரு புக்தி முடிஞ்சு சனி புக்தி ஆரம்பம். இந்த 9 நாட்கள்ளயே பல்பு வாங்கவும் வாய்ப்பிருக்கு.

இப்பம் நேரம் காலை 7.10. தாளி.. கரீட்டா எட்டுமணிக்கு பிடுங்கிருவாய்ங்க. (கரண்டை சொன்னேன்) அப்பாறம் 11 மணிக்குத்தேன் பவர். அதனால அம்பேல்.

இன்னொரு முக்கியமான சமாசாரம் நம்ம ஜா.ரா வேற ரூட்ல போயி நமக்கு ஆப்படிக்க ஆரம்பிச்சுட்டாரு. அதாவது இதர திரட்டிகள்ள நம்ம பதிவுகளை வெவ்வேறு மெயில் ஐடியில போயி BURY பண்றது. பத்து பேர் இப்படி புதைச்சாலோ - அ ப்ளாக் பண்ணாலோ நம்ம பதிவுகள் உடனே பட்டியல்ல ஏறாது. வெய்ட்டிங் லிஸ்ட்ல மாட்டிக்கும்.

இதை முறியடிக்க பதிவின் கீழே உள்ள ஓட்டுப்பட்டைகள் மூலமா பதிவுக்கு வாக்களிங்க. உடுங்க ஜூட்..

ராஜபக்சே ஜாதக பலன் : ஒரு 360 டிகிரி பார்வை


அண்ணே ! வணக்கம்ணே .. இதான் கடேசி பதிவா என்ன தெரியலை. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஜாதக பலனை ஆடியோ ஃபைலா போட்டிருக்கேன். நமக்கு கிடைச்ச பர்த் டீட்டெயில்ஸ் கரீட்டா இருந்தா பலனும் கரிட்டா இருக்கும். ( 18, நவம்பர் ,1945 ,விடியல் 3.45 , பிறந்த ஊரு: Matara )

ஆடியோவை கேட்டுட்டு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு ராட்டினம் ஏத்தினாலும் பரவால்லை ஸ்டேஷன்ல உள்ள பார்ட்டிகளுக்கு சொசியம் கீசியம் சொல்லி தப்பிக்கலாம். இலங்கைக்கு பார்சல் பண்ணிக்கினு பூட்டா தான் படா பேஜாரா பூடும்.ஆனா அம்மா கீறாய்ங்க. கு.பட்சம் முருகேசனை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக்கூடாதுன்னு ஒரு தீர்மானமாச்சும் போடுவாய்ங்க.

ரெம்ப நாளைக்கப்பாறம் ஆடியோ பதிவு போட்டிருக்கேன். காரணம் பவர் கட். பொறுமையா கேட்டு உங்க கருத்தை தெரிவிங்க.

வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி திருவாளர் ராஜ பக்சேவுடைய ஜாதக பலனை கேளுங்க.

Saturday, September 24, 2011

பிறக்காத குழந்தைக்கு ஜாதக பலன்


அண்ணே வணக்கம்ணே!

நேத்து பிறந்து 44 வயசான பார்ட்டியோட ஜாதக அலசலை கேட்டிங்க. ( ஹி ஹி நம்மோடதுதேன்) இன்னைக்கு இன்னம் பிறக்காத குழந்தைக்கான ஜாதக அலசலை கேளுங்க. கூடவே பரிகாரங்களும் தந்திருக்கேன்.

பர்த் டீட்டெயில்ஸ்:

22-11-2011 , நேரம்: காலை 6.45 பிறக்க போகும் ஊர்: திருச்சியா இருந்தால்.

ஹஸ்தம்: 4 ஆம் பாதம் ராசி : கன்னி . (சக்கரத்தையே இமேஜ் ஃபைலா போட்டிருக்கேன் பாருங்கண்ணா)

இது கிரகங்களின் செயல்பாடு குறித்த ஒரு புரிதலை தரும்னு நம்பறேன். அசலான மேட்டரு இன்னாடான்னா ஒரு பார்ட்டி டேட் ஆஃப் பர்த் தரும்போது வருசத்தை ஒரு வருசம் தள்ளி தந்தாச்சு.

நாம குருட்டுத்தனமா ஜாதகம் போட்டு பலனும் ரிக்கார்டு செய்தாச்சு. நடுவுல டவுட் வந்து பார்த்தா இன்னம் பிறக்காத குழந்தைக்கு பலன் சொன்ன சங்கதி உறைச்சது.

உடனே சரியான பர்த் டீட்டெயில்ஸ் தரச்சொல்லி பார்ட்டிக்கு மெயில் பண்ணிட்டன்.

பதிவு செய்த பலனை என்ன பண்ணலாம்னு தலையை குலுக்கி குலுக்கி ரோசிச்சதுல இந்த உதாரண ஜாதகம் குறித்த அலசலை பதிவா போடலாம்னு தோனுச்சு.

போட்டுட்டன். பொறுமையா கேட்டா கிரகஸ்திதிகளை எப்படி அலசறது -அவற்றின் பலனை எப்படி கிரகிச்சுக்கறது - எப்படி பரிகாரம் சொல்றது போன்ற ஏராளமான விஷயங்களை புரிஞ்சிக்கிடலாம்.

உடுங்க ஜூட்.

போனஸ்:
நேற்றைய ஆடியோ பதிவை நிர்வாண உண்மைகள் மற்றும் அனுபவஜோதிடம் வலைப்பூ & தளங்கள் வழியே கேட்டு பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை ஜஸ்ட் ஆயிரத்து இரு நூற்று எழுபத்து நான்கு. கீப் இட் அப்..

இப்பம் வழக்கம் போல கீழ்காணும் ப்ளேயர்களின் ப்ளே பட்டனை அழுத்தி பாடம் கேளுங்க.

மொதல் ப்ளேயர்ல ஜாதக பலன் இருக்கு. ரெண்டாவது ப்ளேயர்ல பரிகாரம் இருக்கு.




பரிகாரங்கள்:

Wednesday, August 24, 2011

ஜோதிட பாலபாடம்: 6


அண்ணே வணக்கம்ணே !
இந்த பால பாடத்தை பொருத்தவரை இதெல்லாம் ஏ ஃபார் ஆப்பிள் கதைதேன். குதிரைக்கு குர்ரம்னா ஆனைக்கு யர்ரம்னு அர்த்தம் பண்ணிக்கிராதிங்க. ச்சொம்மா ரஃபா ஒரு ஐடியா வரட்டுமேன்னுதான் இதையெல்லாம் கொடுத்துக்கிட்டிருக்கேன்.

இந்த விஷயங்களை படிக்கும் போதே விஷயத்தை மனசுல சேவ் பண்ணிக்க மட்டும் ட்ரை பண்ணாதிங்க. இந்த கிரகஸ்திதிக்கு இந்த பலனை எப்படி தந்தாய்ங்க. இந்த பலனை அடியோட மாத்தக்கூடிய கிரகஸ்திதி வேறென்னன்னு லாஜிக்கலா சிந்திக்கனும்.

உ.ம் பாவம் கெட்டுப்போச்சு -ஒரு வேளை பாவாதிபதி சுபபலம் பெற்றால் என்னாகும்னு ரோசிங்க. அட பாவம் -பாவாதிபதி ரெண்டு பேருமே ஷெட். அப்ப காரகர் என்ன ஆனாருன்னு பாருங்க. Read More


Friday, June 17, 2011

ஜாதகத்தை க்ளோசப்ல பார்க்க ஒரு ட்ரிக்

ஜாதகசக்ரத்தோட ஸ்னாப் ஷாட்டை ஜூம் பண்ணனும்னா கண்ட்ரோல் ப்ளஸ் அழுத்தலாம் . அல்லது ஜாதக இமேஜ் மேல் க்ளிக் பண்ணா போதும். ஜாதகத்தை க்ளோசப்ல பார்த்து பலன் சொல்ல இந்த டெக்னிக் உதவாது.

இதுக்கு நீங்க என்ன பண்ணனும்னா..Read More

Tuesday, June 7, 2011

ஜாதகமும் ஒரு ரேஷன் கார்டு தான்

ஒரு சினிமாவுல வடிவேலு  ஜோசியர்க்கிட்டே  ஜாதகத்துக்கு பதில் ரேஷன் கார்டை கொடுத்துருவாரு. ஆனால் நெஜமாலுமே ஜாதகத்துக்கும்,ரேஷன் கார்டுக்கு லிங்க் இருக்குதுங்கண்ணா. அதை இந்த பதிவுல பார்ப்போம்.பை தி பை துண்டு துக்கடாவா நிறைய டிப்ஸும்  கொடுத்திருக்கேன். மறக்காம உங்க கருத்துக்களை தெரிவிங்க.

ரேஷன் அட்டையில ரெண்டு கேட்டகிரி இருக்கு. ஒன்னு அரிசி அட்டை. இன்னொன்னு சர்க்கரை அட்டை. அரிசி அட்டை இருந்தா தாத்தா ரெண்டு ரூவா அரிசி தருவாரு/அதை ஒரு ரூவாயாக்குவாரு/ அம்மா இலவசமாவே அரிசி தருவாய்ங்க.ஃபேன்,மிக்ஸி,கிரைண்டரு இன்னபிற வாங்கிக்கலாம்.

ஆனால் அதை வச்சுக்கிட்டு எஸ்.எஃப்.சி, சி.எஃப்.சில லோன் கேட்டு போனா "ஓடி பூடு"ம்பாய்ங்க.சக்கரை அட்டைக்கு அரிசி பருப்பு கிடையாது ஆனால் பெரிய பெரிய வேலைல்லாம் செய்யலாம், READ MORE

Friday, April 1, 2011

விசயமே இல்லாத விசயகாந்த் ஜாதகம்

எச்சரிக்கை;
நூலை போல சேலைம்பாய்ங்க. அப்படி பர்த் டீட்டெயில்ஸை வச்சுத்தேன் ஜாதகம். ஏதோ நம்மாளு ஒருத்தரு கும்ப லக்னம்னு கொடுத்த க்ளூவை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதனோட அடிப்படையில போடற பதிவு இது.

இருந்தாலும் நம்ம ஸ்டைல்ல அனுபவத்தையும் - கிரகஸ்திதியையும் மொதல்ல க்ராஸ் செக் பண்ணிருவம். ஐ மீன் இந்த ஜாதகத்துல விசயகாந்த் தெரியறாரா பார்த்துருவம். மேலும் படிக்க

Thursday, March 31, 2011

"ஜெ"வுக்கு ஜூன் 9 வரை நித்திய கண்டம் தேன்

ராகு தசை சந்திர புக்தி உபயத்தில் ஜூன் 9 வரை இழு பறி. அதுக்கு பிறவு ராகு தசையில செவ்வாய் புக்தி. செவ் 3 ஆமிடத்துல இருக்கிறதால அம்மா நெஞ்சுல வீரம் பொங்கும். ஒரு பிடி பிடிச்சுரனும்னு சீறி எழுவாய்ங்க. ஆனால் சகோதரஸ்தானத்துல நின்ன செவ்வாய்க்கு 6 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கிறதால உடன் பிறவா சகோதரியோ அ அம்மா நம்பின ஆரோ ஒரு சகோதரரோ  "டபுள் கேம்" ஆடலாம். அ அவிகளோட அம்மாவுக்கு விரோதம் வந்து கழட்டியும் விடலாம். அப்படி விட்டா அந்த பிரிவு 29/Jun/2012 வரை தொடரும். அ அந்த டபுள் கேமுக்கு அம்மா பலியானாலும் ஆகலாம். இதெல்லாம் தேர்தலுக்கு பிறகு.Read More

Sunday, March 6, 2011

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

தலைப்பை பார்த்ததுமே உங்களுக்கு விவேக் காமெடி ஞா வந்திருக்கும். ஒவ்வொரு ட்ராஜடியும் ஒரு காமெடிய ஞா படுத்தியே தீரும். சின்ன வயசுல என் ஃப்ரெண்டு ஒருத்தன் அவன் அப்பனை பத்தி பேசும் போது " தே.பையன் ! இந்த தீபாவளிக்கு ஒரு ரோல் கேப் வாங்கிக் கொடுத்துட்டு அடுத்த தீபாவளி வரை வெடிக்கசொல்றேன் மச்சான்" என்பான்.கேட்கிறவுகளுக்கு காமெடி.அனுபவிச்சவனுக்கு ட்ராஜடி. ஆக நம்ம எல்லாரிலும் ஒரு வித சாடிசம் இருக்கு.

ஓகே மேட்டருக்கு வரேன். இந்த வெப் சைட்டை க்ரியேட் பண்ணிக்கொடுத்தவரு ஜோதிஷம் தவிர வேறெதையும் இதுல கொண்டுவராதிங்கன்னு சஜஸ்ட் பண்ணியிருக்காரு. அதனால எப்படியோ இருந்த ஒருத்தன் எப்படியோ ஆக அவன் ஜாதகம் எந்த அளவுக்கு காரணம்னும் ஒரு ஓரமா பார்த்துருவம்.

(பதிவை தொடர்ந்து படிக்க ஹி ஹி..இங்கே அழுத்துங்க)

Thursday, February 17, 2011

சாதகமா சொல்றதுதான் ஜாதகமா?















தர்ம சாஸ்திரத்துல வைத்தியனையும் ,ஜோதிடனையும் நம்பாதேனு சொல்லியிருக்கு. ஏன்? நமக்கு பெருசா ஏதோ பல்பு மாட்டியிருக்கும் .ஆனா வைத்தியம் "அட இதெல்லாம் ஒன்னுமில்லிங்க.. ஒரு கோர்ஸ் பலான ஊசி போட்டா போயே போச்சு"ம்பாரு.ஜோசியர் கிட்டே போனா " அடடா .. உங்களுக்கு ஆக்சுவலா நல்ல நேரம் ஆரம்பிக்குது . அதான் கெட்ட நேரம் போறதுக்கு முந்தி ஆட்டிவைக்குது"ம்பாரு.

இதனாலதான் தர்ம சாஸ்திரம் வைத்தியனையும் ,ஜோதிடனையும் நம்பாதேனு சொல்லியிருக்கு. எங்கயோ படிச்சேன் சாதகமா சொல்றதுதான் ஜாதகமாம். த பார்ரா! சாதகமா சொல்ல தான் ஆள் வேணம்னா ஆராச்சும் ஒரு லாலா பார்ட்டிய பாருக்கு தள்ளிக்கினு போயி சிங்கிள் பீர் சொன்னாபோதுமே.

ஜோசியர் -வைத்தியர் -வேசி எல்லாம் ஒரே கேட்டகிரில வர்ராய்ங்க (புதன்) இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு? ஏன் அப்படி நிர்ணயிச்சாய்ங்க? கிவ் மீ சம் ஐடியா ப்ளீஸ் !

ஒரு நா நம்மாளு ஒருத்தர் வேற ஒரு பார்ட்டிய கூட்டி வந்தாரு. இன்னாடா மேட்டருனு பார்த்தா அப்பாவுக்கு 60 முடியுதாம்.சஷ்டியப்த பூர்த்தி பண்ணனுமாம். நான் பாட்டுக்கு அடுத்த 7 நாள்ள வர்ர ஒரு முகூர்த்தம் நிர்ணயம் பண்ணேன்.அதுக்கு பார்ட்டி சொந்த பந்தம்லாம் நிறைய இருக்காய்ங்க. அவிகளை எல்லாம் வரவழைக்கனும் .. டிஸ்கஸ் பண்ணனும் அது இதுனு இழுத்தாப்டி.

நானு யோவ் சஷ்டியப்த பூர்த்தி பண்றதா இருந்தா இதான் முகூர்த்தம் . முடிஞ்சா பாரு இல்லாட்டி நடைய கட்டுன்னுட்டு பீடிய எடுத்து பத்திட்டன். கொஞ்ச நாழி ப்ரஸ் மீட்ல மன்மோகனர் மாதிரி மலங்க மலங்க முழிச்சுட்டு எந்திரிச்சு போயிட்டாய்ங்க. எட்டாவது நாள் தாத்தா போய் சேர்ந்துட்டாரு.

இதை நான் சொல்றது நான் ஏதோ பெரிய பண்டிதன்னு காட்டிக்கறதுக்காக இல்லை. ஜோதிஷம்னா என்ன எதிர்காலம் உரைத்தல். நல்லதோ கெட்டதோ உரைச்சுட்டு போயேன். அதுக்குண்டான தில்லிருந்தா சொல். இல்லாட்டி ஓரமா போயி நில்.

ஜாதகங்கறது பேங்க் பாஸ் புக் மாதிரி. பேலன்ஸ் பார்த்து சொல்லு சாமின்னா போட்டு உடைச்சிர வேண்டியதுதான். பாவம் ! அவன் இருப்பை வச்சி மேனேஜ் பண்ணிட்டு போறான். அதை விட்டுட்டு சாதகமா சொல்றேன் பேர்வழி அளந்து விட்டா.. நடந்துரப்போகுதா என்ன?

எங்கயோ படிச்சேன். ஜோதிடன் பலனை சொல்றவன் மட்டும்தேன். அதை தர்ரது ஆ ........ண்டவன். ஆண்டவன்னா பாஸ்ட் டென்ஸ். இறந்த காலம். இப்ப ஆள்றவன் இல்லை. இப்ப ஆள்றது நம்ம பூர்வ வினைகள்.

எல்லா கிரகமும் கேந்திர கோணத்துல நின்னுட்டா அந்த ஜாதகனுக்கு வினையே கிடையாதுனு ஒரு விதி. நம்ம ஜாதகத்துல ( ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்யானு அலுத்துக்கிடாதிங்க - என் லேப்ல முதல் எலி நான் தேன்) சந்திர சுக்கிரர்கள் மட்டும் வாக்குல இருக்காய்ங்க. மத்தவுக கேந்திர கோணம்.

சந்திரன் மனோகாரகன் .சைக்காலஜி எழுதறோம். நட்சத்திரங்களுக்கெல்லாம் இவர் தான் தாதா .அஸ்ட் ராலஜி எழுதறோம். சுக்கிரன்னாலே கில்மா செக்ஸாலஜி எழுதறோம்.

நம்ம வேலை பேசறது எழுதறது. சனம் பைசா கொடுத்தா வாங்கி ஷீர்டி பாபா தன் சமஸ்தானத்துல பங்கு பிரிச்ச மாதிரி பிரிச்சு கொடுத்துரவேண்டியது. கருமம்னு வந்தா பேச்சால வரணும் அ எழுத்தால வரனும்.

வரக்கூடாதுன்னா வாயு பக்ஷணம் பண்ணிக்கிட்டு இருக்கவேண்டியதுதான் அது .முடியுமா? முடியாது.
( நம்ம மேக்சிமம் கப்பாசிட்டி 12 நாளுங்கண்ணா - ஆப்பரேஷன் இந்தியா அமலுக்காக உ.விரதம் இருந்தேன்)

கோதாவுல இறங்கிட்ட பிறவு ஐயோ! எதிராளி என்ன நினைப்பானோ ஏது நினைப்பானோன்னெல்லாம் ரோசிச்சிட்டிருக்க கூடாது. ஏக் மார் தோ துக்கடா. ( நம்ம ஜீவனஸ்தானாதிபதியே செவ்வாய் தான் - செவ்வாய்னாலே கசாப்புதான் )

சனத்துக்கும் நான் சொல்றது ஒன்னுதேன். அல்லா ஜோசியரும் நம்ம மாதிரி துணிஞ்ச கட்டைகளா இருப்பாய்ங்கனு சொல்ல முடியாது. நீங்கதேன் துணிச்சலை தரனும். எதுவா இருந்தாலும் சொல்லுங்கனு கேட்கனும்.

அதை விட்டுட்டு ஃப்ளாட்டுக்கு அட்வான்ஸ் பண்ணிட்டு போயி ஃப்ளாட் வாங்கலாமானு கேட்க கூடாது. காதலிய கர்பம் பண்ணிட்டு பொருத்தம் பார்க்க போகக்கூடாது.

சொந்தத்துல கட்டினா தோஷமில்லேதானே சாமினு போட்டு வாங்க கூடாது ( அத்தை மகள் சோத்துல விஷம் வச்சா சாகமாட்டியளா?)

சொம்மா பேருக்கு பேரு பொருத்தம் பாருங்க சாமி போதும்னு எடுத்துக்கொடுக்ககூடாது. ( பேரை வச்சி தோஷ நிர்ணயம் பண்ண ஆராலயும் முடியாது)

எனக்கு நேரம் சரியில்லை சரி. என் பொஞ்சாதி பேர்ல செய்யலாமானு கேட்க கூடாது ( கிரகம் என்ன தாசில்தாரா? ஏமாந்து போக) ப்ராஜெக்டுல எவன் முடிவெடுக்கிறானோ அவன் தலையெழுத்துதான் வேலை செய்யும்.

ஆக சாதகமா சொல்றது ஜாதகமில்லை. அது ஜோசியருக்குத்தான் சாதகம். உங்களுக்கு பாதகம். சாதகமோ பாதகமோ உடைச்சு சொல்லி உங்களை சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் பண்றதுதான் ஜாதகம்.

இப்படி நிறைய சொல்லவேண்டியிருக்கு. சமயம் வரப்ப மறுபடி ஒரு எட்டு பார்ப்போம்.

Wednesday, February 16, 2011

சுக்கிர(ல) பலமும் பலான யோகமும்

முதல்ல தலைப்பு தர்ர தவறான அர்த்தத்தை நிவர்த்திக்க வேண்டியது என் கடமை. பலான யோகத்தை தர்ரது ஜஸ்ட் சுக்கிரன் மட்டும்னு நினைச்சுரதிங்க. மத்த 8 கிரகங்களோட பலமும் இதுக்கு தேவைப்படுது.

உதாரணமா சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரபலமும் தேவை. சனி நரம்புகளுக்கு காரகன் என்பதால் சனி பலமும் தேவை. இப்படி கில்மா மேட்டர்ல மத்த 8 கிரகங்களோட பலத்துக்கான அவசியத்தை தொடர்பதிவாவே போட்டாச்சு. ( நீங்க ஊருக்கு புதுசுன்னா பழைய பதிவுகளை தேடிப்படிங்க)

அடுத்து பலான யோகம்னா கண்டவளையெல்லாம் கட்டிலுக்கு கொண்டு வந்துர்ர யோகம்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. ஆக்சுவலா இப்படி காஞ்சான், அலைஞ்சான் ஜாதகத்துல பார்த்திங்கனா சுக்கிரன் கெட்டு குட்டிச்சுவரா போயிருப்பார். க்ளியர் !

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பெண்ணுக்கு அழகு தர்ரது உங்க ஆண்மை. சுக்கிரன் சுப பலமா இருந்தா "ஐம்பதிலும் ஆசைவரும்" புருசன் பொஞ்சாதி உடம்புல பூரிப்பு வரும். முகத்துல திருப்தி, ஆனந்தம்னு கலந்து கட்டியா ஒரு தெய்வீக களை வரும்.

காளிதாசர் வரி வசூலை பத்தி ராசாவுக்கு இன்னா சொன்னாரு தெரீமா " வண்டு பூவுல தேன் எடுக்கிற மாதிரி இருக்கனும்"னாராம். விந்து ஊறின பின்பு இயற்கையா ஏற்படும் உந்துதல் உடலுறவுல முடிஞ்சா சுபம். மேட்டர் வேற மாதிரி போச்சுனு வைங்க ( செயற்கை உந்துதல்/ ஈகோ/ காரணமா கோதாவுல இறங்கறது) ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன மாதிரி "கோ ஆப்பரேசனே இல்லிங்க" - " அவளுக்கு இதுல ஆர்வமே இல்லிங்க"ன்னு குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்கிறது. பொஞ்சாதிய தவிர ஊர்ல கீரவ எல்லாம் உலக அழகியா தெரியறதுனு ஆரம்பிக்கும். அதனாலதான் சொல்றேன். ஆராச்சும் " அலை பாய்ஞ்சா" அங்கே மேட்டர் சரியில்லைனு அர்த்தம்.

விந்துவை சுக்கிலம்னு சொல்றாய்ங்க. (இந்த பெயர் பொருத்தம் ஆக்சிடென்டலுனு நினைக்கிறிங்களா?).


9 கிரகங்கள்ள செக்ஸுக்கு பொறுப்பா இருக்கிற கிரகம் சுக்கிரன். இன உறுப்பு, அதன் வேலைத்திறன், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு, லூப்ரிகேஷன் எல்லாத்துக்கும் இவர் தான் இன் சார்ஜுங்கற மேட்டரை எல்லாம் கடந்த பதிவுலயே சொல்லியாச்சு. ஞா இருக்கில்லை.

ஜோசியத்தை பத்தி ஓரளவு தெரிஞ்சவுக , ஏன் சில மேதைகள் கூட ஒரு கிரகம் பெட்டரான இடத்துல உட்கார்ந்துட்டா போதும் அது தொடர்பான மேட்டர்ல எல்லாம் ஜாதகர் விளையாடுவாருனு நினைச்சுர்ராய்ங்க. இது தவறு.

என் ஜாதகத்துல ஜன்ம லக்னமான கடகத்துலயே குரு உச்சம். குருன்னா கோல்ட். சாதாரண லாஜிக் படி பார்த்தா என் கிட்டே கிலோ கிலோவா கோல்டிருக்கனும். ஆனா யதார்த்தம் அப்படியில்லை. ஏன்? குரு என் ஜாதகத்துல உச்சமா இருக்கிறதால குரு தொடர்பான தாதுக்கள் நம்ம பாடில பல்க்கா இருக்கோ என்னமோ? கோல்ட் மேல எனக்கு பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் கிடையாது. அது அப்பப்போ வரும். போகும் கண்டுக்கறதில்லை. ஆனா அது வந்துக்கிட்டே தான் இருக்கு. போயிட்டே தான் இருக்கு.

இதையே சுக்கிரனுக்கு பொருத்திப்பாருங்க. உங்க ஜாதகத்துல சுக்கிரன் நெஜம்மாவே நல்ல பலத்தோட இருக்காருனு வைங்க. உங்களுக்கு செக்ஸ் மேலயோ, ஆப்போசிட் செக்ஸ் மேலயோ (எதிர்பாலினர்?) பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் இருக்காது. ஆனா அது உங்களை தேடிவரும். வந்தா வரவில் வைப்பிங்க.போனா செலவில் வைப்பிங்க. ஆனா அதை பத்தி ரோசிக்க மாட்டிங்க.

செக்ஸ் மட்டுமில்லை,பணம் மட்டுமில்லை எதை பத்தி வேணம்னாலு சரி நீங்க அதை பத்தி ரோசிக்கிற வரை அது உங்ககிட்டே வராது. ஹவ் லாங் யுவார் ஹேவிங் மணி அட் யுவர் மைண்ட் யு கெனாட் கெட் மணி இன்டு யுவர் பாக்கெட்.

எதுவரை உங்க மைண்ட்ல பணம் இருக்கோ அதுவரை உங்க பாக்கெட்டுக்கு பணம் வராது. இதையே உடைச்சி சொன்னா எதுவரை உங்க மைண்ட்ல செக்ஸ் இருக்கோ அது வரை அது உங்க அவெய்லபிலிட்டிக்கு வராது.

சுக்கிரன் உங்க ஜாதகத்துல உங்களுக்கு சாதகமா இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க சின்ன ட்ரிக் இருக்கு. இந்த பதிவை படிக்கிற வரை செக்ஸ் எனக்கு கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்வியே உங்க மைண்ட்ல இருந்திருக்காது, வந்திருக்காது. விதி வழியே மதி.

ஆக சுக்கிரன் யாரோட ஜாதகத்துல வீக்காயிருக்காரோ அவிகதான் அலைஞ்சு பறை (இசைக்கருவிங்கோ) சாத்துவாய்ங்க. இவிகளுக்கும் கிடைக்கும். எப்படி கிடைக்கும்? நேரம் கெட்ட நேரத்துல, இடம்,பொருள், ஏவல், கால ,தேச,வர்த்தமாங்கள் தவறி கிடைக்கும். பொருந்தா காதல்,கள்ளக்காதல், ஒரு தலை காதல் , சுய இன்பம், ஹோமோ, குத புணர்ச்சி இதெல்லாமே சுக்கிரன் வாரி வழங்க கூடிய தீயபலன்கள்ள
சிலதுதான்.

இதுக்கு காரணம் என்னன்னா.. இவிக மைண்ட் வேணம்னா பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் இத்யாதியினர் காரணமா கரப்ட் ஆகி இயற்கையோட, இயற்கையில் ஒரு பாகமான கிரகங்களோட தொடர்பை இழந்திருக்கலாம். ஆனால் இவிக உடல் ? இது பூமியின் குழந்தை. பூமி சூரியனின் குழந்தை. அதனால இவிக உடலே இவிக ஜாதகத்தை சொல்லிரும். ( கால புருஷ தத்துவம் - உங்க லக்னம் தலை - எட்டாமிடம் தான் மர்மஸ்தானம் - விரயஸ்தானம்தான் கால்)

நிறைகுடம் தளும்பாதுனு கேள்விப்பட்டிருப்பிங்க.இந்த மேட்டர்லயும் அதே ரூல் தேன்.

யாரோட ஜாதகத்துல சுக்கிரன் சுபபலமா இருக்காரோ அவிக உடல்ல எல்லாமே அளவா இருக்கும். பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவா இருக்கும். ஆனால் யாரோட ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்காரோ அவிக உடல்ல எதுவுமே அளவா இருக்காது. பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவுக்கதிகமா இருக்கும்.

ஒரு பால் பாத்திரத்தில வழிய வழிய பாலை ஊத்தி ஸ்டவ் மேல வச்சா ( ஸ்டவ்வை கொளுத்திதான்) அது கொதிக்க ரெம்ப தாமதாமகும். ஆனால் ஒரே ஒரு பாலாடை பாலை ஊத்தி காய வைச்ச உடனே கொதிச்சு உடனே காந்தி ,கருவாடா போயிரும்.

இவிக பழக்க வழக்கங்களை வச்சும் சுக்கிரன் சுபபலமா இருக்காரா , பலவீனமா இருக்காரானு தெரிஞ்சிக்கிடலாம். சுக்கிரன்னா வெறுமனே செக்ஸுக்கு மட்டும் அதிபதி இல்லே.

அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம் எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கார். சுக்கிரன் சுபபலமா இருக்கிற பார்ட்டிங்களுக்கு இது மேல எல்லாம் பெரிசா ஆர்வமிருக்காது. ஆனால் இதெல்லாம் தேடிவரும். தேடிவந்தாலும் அதை அளவாதான் ஏத்துப்பாய்ங்க.ஏன்னா மேற்சொன்ன எல்லாமே உங்க செக்ஸ் பவரை குறைக்கக்கூடிய மேட்டருங்க தான். இவிக உடலே இதை எல்லாம் ப்ரொட்டெஸ்ட் பண்ணும். ( என்னமோப்பா சோஃபால உட்கார்ரதை விட வெறும் நாற்காலில உட்கார்ந்தாதான் வசதியா இருக்குனு பேசுவாங்க)

யார் ஜாதகத்துல சுக்கிரன் பலவீனமா இருக்காரோ அவிக உடல் கொய்ட் ஆப்போசிட்டா ரியாக்ட் ஆகும். மேற்சொன்ன லக்சரி முதலாக வாகனம் தூக்கம் வரை எல்லாத்தையும் அளவுக்கதிகமா கேட்கும் அனுபவிக்கும். அப்பத்தானே பேட்டரி வீக்காயிரும். அதெப்படி வீக்காயிரும்னு கேட்கறிங்க அப்படித்தானே.. சின்ன உதாரணம் :

வாகனம்,பயணங்களோட எஃபெக்ட்:

மனித உடலோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி இதுல விதையில் உள்ள உயிரணுக்கள் உயிர் வாழ முடியாதுனு தான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளியில் படைச்சிருக்கு. நீங்க எதிர்பாலினரை கவரனும்னு நினைச்சா நிறைய நேரம்
அல்ட்ரா மாடர்னா பேண்ட் சட்டைல இருக்கனும். பேண்ட் அணியனும்னா அண்டர்வேர் அணியனும். கண்டவளை கண்ட நேரத்துல பிக் அப் பண்ணனும்னா டூ வீலர்ல மணிக்கணக்கா பயணிக்கனும். இதனால விதைக்கு கிடைக்க வேண்டிய கூல் எஃபெக்ட் கிடைக்காம உயிரணுக்களோட அசையும் திறன் குறைஞ்சுரலாம், கவுண்ட் குறைஞ்சிரலாம். இதுவல்லாம மலச்சிக்கல்ல துவங்கி, பைல்ஸ் வரை அனேக வியாதிகள் வந்து ந்நா ...........றிப்போகலாம்.

நொறுக்கு தீனியோட எஃபெக்ட்:
குழந்தை ஆசனப்பருவத்தை தாண்டி இன உறுப்பை தீண்டி விளையாடற ஸ்டேஜ்ல பெற்றோர் கண்டிப்பால அது மறுபடி ஆசனப்பருவத்துக்கே போகுது. டீன் ஏஜ்ல இதுக்கு வாய்ப்பு குறைஞ்சி போகுது . அதனால டீன் ஏஜன் ஆசனத்தோட ஆரம்பமான வாய் மேல கான்சன்ட்ரேட் பண்றான். வீண் பேச்சு, நொறுக்கு தீனி, சிக்லைட் மெல்றது, பான்,பீடா,பான் பராக் எல்லாத்துக்கும் இதுவு கூட ஒரு காரணம்.

பசியிருந்தா தான் சாப்பாட்டை தின்ன முடியும். நொறுக்கு தீனி அப்படி கிடையாது. பசியே இல்லைன்னாலும் திங்கலாம். ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்.
உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. நொறுக்கு தீனி அதிகரிக்க அதிகரிக்க ஜீரண மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் ( ஒரு ஸ்டேஜ் வரை) அதிகரிக்கும். இனப்பெருக்க மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் எல்லாமே படிப்படியா குறைஞ்சுரும்.

இப்படி ஒவ்வொரு பாயிண்டுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்குது பாஸு.

சுக்கிரன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு அடிக்கடி தங்கள் ஆண்மைல சந்தேகம் வந்துரும் . உடனே அதை சோதிக்க களத்துல இறங்கிருவாய்ங்க. ( சில சமயம் ஆசிரியர்கள் மாணவிகள் மேல, தாத்தாக்கள் குழந்தைகள் மேல சோதிக்கறச்ச தந்தில செய்தியாயிர்ராய்ங்க).

மேலும் இவிக விந்து நீர்த்திருக்கும். நீர்த்த விந்து அடிக்கடி புரள ஆரம்பிக்கும். வெளியேற துடிக்கும். சீக்கிரம் ஸ்கலிதமாயிரும். இதனால் ஒன்ஸ் மோர். பல்வேறு காரணங்களால எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலுறவின் ஆழம் -காலம் குறையும். ஆழம் குறைஞ்சா செக்ஸால கிடைக்க வேண்டிய மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல ரீசெட் பட்டனை அழுத்தின எஃபெக்ட் ,ரிலாக்சேஷன் எதுவுமே பெரிசா கிடைக்காது.

இதுவரை ஜாதகம் இல்லாமயே, உங்க செக்ஸ் மற்றும் இதர பழக்க வழக்கங்களைக்கொண்டே உங்க ஜாதகத்துல சுக்கிரன வீக்கா ஸ்ட்ராங்கானு தெரிஞ்சிக்க சில வழிமுறைகளை சொன்னேன். இதுவே போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா?

வேண்டு கோள்:

நிறையப்பேரு "இதென்னங்க கண்டதுலயும் கில்மாவ கலந்து டீக்கடை பெஞ்சு மாதிரி ஒரு எழுத்து நடை"னு கேட்கிறாய்ங்க ( அதை விட நிறைய பேரு தூள் மா ..சூப்பர்மாங்கறாய்ங்க அது வேற கதை).

ஜோசியம்னா அது வயசாளிங்க சப்ஜெக்டுனு ஒரு இமேஜ் இருக்கு. அது தப்பு. வயசாளிங்க விஷயத்துல ஜோசியம் பார்க்கிறதுன்னா அது ஏற்கக்குறைய போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி. ஆனால் "பசங்க" மேட்டர்ல டாய்க்னசிஸ் மாதிரி. ரெம்பவே யூஸ் ஃபுல். அதனால இளந்தாரிகளை இழுத்துப்போடத்தேன் இந்த சாக்லெட் பூச்சு.

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க? கமெண்ட் ப்ளீஸ்!

Tuesday, February 15, 2011

2011, மே 8 க்கு மேல் மத்திய அரசு கவிழும்?

2011, மே 8 க்கு மேல் மத்திய அரசு ஆட்டம் காணும்
மொதல்ல இந்த பதிவுக்கு இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகம்னுதான் தலைப்பு வச்சேன். அப்பாறம் ஆதித்தனார் எழுத்தாளர் கையேடு மாதிரி கடைசில உள்ளதை தூக்கி டாப்ல கொண்டு வந்தேன்.

நான் வைக்க நினைச்ச தலைப்பு 100% கரீட். இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகமா இருக்கு. இதுக்கும் அவாளோட சதிதான் காரணம். விஐபிங்களுக்கு சின்ன வீட்டை கர்பப்படுத்தறதுக்கு கூட பக்காவா டைம் வச்சு கொடுக்கிற அவாள் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க குறிச்சுக்கொடுத்த டைம் இருக்கே . வயிறு எரியுதுங்க.

லக்னம் ரிஷபம்:
ரிஷப லக்னம் ராசி சக்கரத்துல ரெண்டாவது ராசி. இதனோட குணம் என்னன்னா சுருக்கமா சொன்னா செக்கு மாடு. நம்ம தலைவருங்க நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு போகாம இருக்க காரணம் இதான். நம்ம நாடு செக்கு மாடாட்டம் ஒரே வட்டத்துக்குள்ள சுத்தி சுத்தி வரவும் , அசலான பிரச்சினையை விட்டுட்டு ஜல்லியடிக்கவும் இதான் காரணம். மேலும் தங்களோட செல்வம்,செல்வாக்கு,சொல்வாக்கு,
பணம், குடும்பம்னு அவிக இருக்கவும் இதான் காரணம்.நம்ம தலைவருங்க உசரு போற நேரத்துல கூட "விகட வினோத பரிகாச பிரசங்க பிரியர்களா" இருக்க காரணம் இதான்.

இது ஸ்திர ராசி. தாளி இஞ்சி முரபா விக்கறதுக்கு கூட சரலக்னமா பார்த்து வையின்னு ஜோதிஷம் சொல்லுது. ஆனால் இவ்ளோ பெரிய எஸ்டாப்ளிஷ்மெண்டுக்கு ஸ்திர லக்னத்தை வச்சிருக்கானுவ.

ராசிய பாருங்ககடகம். இதனோட அதிபதி யாரு சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறுவாரு. 24 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திரம் மாறுவாரு. 6 மணிக்கொருதரம் பாதம் மாறுவாரு. 15 நாள் வளர்பிறை, 15 நாள் தேய் பிறை. இந்த ராசிக்காரவுகளுக்குனு ஒரு "சுயம்" இருக்காது. எடுப்பார் கைப்பிள்ளைகள்னா அது இந்த ராசிக்கரவுகதான்.


ரஷ்யா இருந்தவரை அவிக அழிச்சாட்டியத்துக்கெல்லாம் சால்ரா போட்டுக்கிட்டிருந்தம். இப்ப அமெரிக்கா.
சரி இதுவாச்சும் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். சனத்தொகை படபடனு எகிறுது (ரிசபத்துக்கு அதிபதி சுக்கிரன் - கில்மாவுக்கு இவர் தான் அதிபதி) உலகம் போற போக்குல இன்னைக்கும் ஒரு சமயம் இல்லாட்டியும் ஒரு சமயம் சென்டிமென்ட் பார்க்கிற சனம் இந்தியாவுலதான் இருக்காய்ங்கனு ஆறுதல் பட்டுக்கலாம்.

லக்னத்தை பாருங்க ராகு -ஏழைப்பாருங்க கேது. ராகு கேதுக்களிடையில எல்லா கிரகமும் சிக்கி பிதுங்கிக்கிட்டிருக்கு. இதனோட பலன் என்னடான்னா 45 வருசம் வரை சொல்லிக்கிறா மாதிரி டெவலப் மென்டே இருக்காது. மேலும் ஊழல்வாதிகள் + சாமியார்களிடையில நாடாள்வோரும், நாடும், நாட்டு மக்களும் சிக்கி சீரழியனும்.( ஞா இருக்கா திரேந்திர பிரம்மச்சாரி, சந்திராசாமி)

ஜோசியத்துல ஏபிசிடி தெரிஞ்சவன் கூட இந்த மாதிரி ஒரு நேரத்தை ரெக்கமெண்ட் பண்ணமாட்டான். நேரு மாமாவுக்கு நாள் குறிச்சு கொடுத்த பன்னாடை பரதேசி ஆருனு விசாரிக்கனும்ணே.

சரி லக்னமும் - (சொந்த பலம்) ஏழாமிடமும் ( நட்பு நாடுகள்) தான் நாறிப்போச்சு . ரஷ்யா சிதறிப்போகவும் அமெரிக்கா இப்படி அல்லாடவும் நம்ம சங்காத்தமும் ஒரு காரணமுங்கோ.

லக்ன,சப்தமாதிபதிகளாவது பலம் பெற்று உருப்பட வைக்கிற நிலைல இருக்காய்ங்களானு பார்த்தா லக்னாதிபதியான சுக்கிரன் ஆறாமிடத்து( சத்ரு ரோகம் ருணம்) ஆதிபத்யமும் பெற்று 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தாரு.ஆறுன்னா கடன் ..தீராக்கடன். எதிரி (பாக்,சீனா, அட நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்த வங்காளம் கூட தாலியறுக்குதே)

3ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம். (இங்கன சுக்கிரன் நின்னதாலதான் நாடு பத்தி எரியறச்ச கூட மன்மோகன் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் லக்சரியா உலகம் சுத்தபோறாருபோல) இங்கன லக்னாதிபதி நின்னா என்னாகும்? மேலும் அது சுக்கிரங்கறதால சாப்பிடற சோறு, கட்டற துணி,இருக்கிற ஊட்டுக்கும் கூட சனம் அல்லாடவேண்டியதுதேன்.

காலம் காலமா நிலை கொண்ட ஏழ்மை, உணவு தானிய பற்றாக்குறைக்கும், சமீப காலமா பெருகி வரும் ஆண்மையின்மை,செக்ஸ் குற்றங்கள்,பெண்கள் மீதான வன்கொடுமை ,பெண் சிசுக்கொலை இத்யாதிக்கும் இதான் காரணம்.

லக்னாதிபதியான சுக்கிரனோட ஆரெல்லாம் சேர்ந்தாய்ங்கனு பாருங்க. கண்ல ரத்தம் வரும்:

சந்திரன்:
நம்ம நாடு சுதந்திரம் வந்து 63 வருஷம் முடிஞ்சும் அன்னாடங்காய்ச்சியாவே இருக்கவும் எழுவதும்,விழுவதுமா இருக்கவும் இந்த கிரகசேர்க்கை தான் காரணம். ஆறுதல் என்னன்னா ஒரு 15 வருஷம் ஸ்டெபிலிட்டி, நல்ல வளர்ச்சி இருக்கும், அடுத்த 15 வருஷம் இன்ஸ்டெபிலிட்டி, தேக்கம் இருக்கும்.நம்ம தலைவர்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக இருக்கவும் இதான் காரணம். கடல் வழியா வந்து மும்பை தாஜ் ஹோட்டலை தாக்கற அளவுக்கு கொண்டு போனது இந்த கிரக நிலைதான்.

சூரியன்:
இவர் வீர , தீரத்தை தந்தாலும் இவர் நான்காமிடத்துக்கு அதிபதியாக உள்ளதால நம்ம தலைவருங்க நாட்டை பார்த்துக்கறதை விட தங்களோட வீட்டைத்தான் பார்க்கிறாய்ங்க. (4- வீடு) லக்சரியா பயணம் போகவும், ஏற்கெனவே பளபளக்கும் தங்கள் வீட்டை அரசு நிதி கொண்டு "மராமத்து"பண்ணிக்கிறதுலயும் , விமானபயணங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாகன வசதிகளை ஏற்படுத்திக்கிறதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு கடமைய கோட்டை விட்டுர்ராய்ங்க. நம்ம நாடு வீரத்தை காட்டினா ஏழை இந்தியனோட ஓட்டைக்கூரையும் பொத்தலாயிருமுங்கோ. அரைப்பட்டினி முழுப்பட்டினி ஆயிரும்.

புதன்:
இவர் 2/5க்கு அதிபதி 3ல் மாட்டினாரு. ரெண்டுன்னா ரெவின்யூ இன் கம், அஞ்சுன்னா இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி. 3ன்னா பயணம் போறது. பாருங்க நம்ம காசு பணம்லாம் பயணம் போயிருச்சு. நம்ம இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டியெல்லாம் கடல் கடந்து போயி அவிகளுக்கு பொருளீட்டி கொடுக்குது.
புதன்னா கல்வி,மருத்துவம், தொலைதொடர்பு (இதையும் விளக்கனுமா என்ன?)

அடுத்து ரெண்டாவது இடத்தை பாருங்க சப்தமாதிபதி ( நட்பு நாடுகள்) விரயாதிபத்யம் பெற்று ( வேறென்ன ஆப்புதேன்) இங்கு உட்கார்ந்தாரு. அதுவும் ஆரு? செவ்வாய். பாக்கிஸ்தான் பங்காளி நாடு (செவ் -சகோதரகாரகன்) ஆப்பு வைக்கவும் சீனாக்காரன் "இந்தோ சீனா பாய் பாய்னிக்கிட்டேதானே ஆப்பு வச்சதுக்கும் இதான் காரணம்.

உள்ளார்ந்த ஒற்றுமை குலையவும், ஒரு மொழி காரன் இன்னொரு மொழிகாரனோட - இந்த ஸ்டேட்டு
அடுத்த ஸ்டேட்டோட வெட்டி மடிய இதான் காரணம்.

இன்னம் இங்கன ஆரிருக்கானு பார்த்தா சனி. ரிஷபலக்னத்துக்கு யோககாரகனான சனி மாரகஸ்தானங்கற 3ஆவது இடத்துல மாட்டினாரு.இத்தீனி ஓட்டையிருந்தும் இந்தியா சிதறாம இருக்க காரணம் என்னனு கேப்பிக சொல்றேன்.

அஷ்டமாதிபதியான குரு சத்ரு ரோகஸ்தானத்துல உட்கார்ந்தாரு. இவர் மட்டும் இங்கே இல்லேன்னா துண்டு துண்டா பீஸ் பீஸா சிதறிப்போயிருக்கும்.

நம்ம நாட்டை இன்னைக்கு ஒரு விதேசி ஆளவு 1-7ல இருக்கிற ராகு கேது தான் காரணம்.அதுவும் ராகுன்னா விடோயருனு அர்த்தம்.

நம்ம நாட்டை அதிக காலம் ஆண்டவுக எல்லாம் ஒன்னு வெஸ்டர்ன் ஸ்டைல் (நேரு,ராஜீவ்), அல்லது விடோயர்ஸ்/ பேச்சிலர் தான் .இதுக்கு காரணம் கூட 1-7ல இருக்கிற ராகு கேது தான்.

ஆன கண்ணாலத்துக்கு ஆர்கெஸ்ட்ரா எதுக்கு? எதிர்காலம் எப்படி இருக்கும்னு கேப்பிக. சொல்றேன்.

இப்ப 03/Nov/2010 => முதல் 27/Sep/2011 வரை சூரிய தசை ராகு புக்தி நடக்குது. ஆட்சியாளர்களுக்கு கெண்டம்தேன். அரசாங்கம்னு ஒன்னிருக்கானு நினைக்கிறாப்ல ஊழல்வாதிகளும், விதேசிகளும் தூள் கிளப்புவாய்ங்க.

அடுத்து வரப்போற குரு புக்திதான் ஒரு நல்ல அரசை அமைக்கனும். அது 27/Sep/2011 => முதல் 15/Jul/2012 வரைதான் நடக்கும். அப்பாறம் மறுபடி சனிபுக்தி மாட்டிக்குது. அரசு திண்டாட வேண்டியதுதான். இந்த சந்தடில தலித் அமைப்புகள், தொழிலாளர் யூனியன்கள், கம்யூனிஸ்டுகளோட பிராபல்யம் அதிகமாகலாம்.

சூரியதசை முழுக்க (09/Sep/2009 முதல் 09/Sep/2015 )அல்லாட்டமாதான் இருக்கும் அடுத்து வர்ர சந்திர தசையும் (09/Sep/2015 முதல் 08/Sep/2025) ஒன்னும் கழட்டற மாதிரி தோனலை.

2011, மே 8 ஆம் தேதி ராசிக்கு பத்துல குரு வர்ராரு. இப்ப ஆள்றவுகளுக்கு பதவி பறிபோகலாம்.

எச்சரிக்கை:
ஆமாம் முருகேசன் பரிகாரம் அதுஇதுன்னு அவுத்துவிடறிங்களே நம்ம நாட்டை காப்பாத்த எதுனா பரிகாரம் வச்சிருக்கிங்களானு கேப்பிக. சொல்றேன்.அடுத்த பதிவுல.

Tuesday, February 8, 2011

செவ்வாயும் கில்மாவும்



இன்னாபா இது யுத்தகிரகத்தை போயி கில்மாவோட அநியாயத்துக்கு சேர்க்கிறேனு உ.வ பட்டுராதிங்க. பல யுத்தங்கள் வரதுக்கு கில்மாதான் காரணமா இருந்திருக்கு. யுத்தத்துல வேற்றி கிடைச்சாச்சுன்னா கில்மாவுக்கு குறைவே இருக்காது.

செவ்வாய்னா ரத்தம். பலான இடத்துக்கு ரேப்பிட் ஃபோர்ஸ் மாதிரி ரத்தம் பாயலைன்னா அதை அல்பசங்கியைக்கு மட்டும் தான் உபயோகிக்கமுடியும்.

ஆண்,பெண்கள் சுய இன்பம் இத்யாதியில் இறங்காம, பெண்கள் சாகசங்கள் புரியாம இருந்தா முதல் உறவின் போது கருமுத்துக்களை பார்க்கலாம். ( இது எல்லாருக்கும் கட்டாயமில்லிங்கோ) சிவப்புதுளிகள் ஜீரோ வாட்ஸ்ல கரு முத்தாதான் தெரியும்.

பெண்கள் விசயத்துல ஒவ்வொரு மாதவிலக்குக்கப்பாறம் தான் புதிய எக் செல் ஓவரிலருந்து புறப்பட்டு வந்து கருப்பையில தன் காத்திருப்பை துவங்குது . அப்பத்தேன் அவிக "உணர்ச்சிகள்" தீட்டப்பட்டிருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்துல சிவந்திருக்க வேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்டே இருக்கு. இதனோட அடிப்படை என்ன? ரத்த ஓட்டம் கரீட்டா நடக்குதா இல்லியாங்கறதுதேன்.

(ஜாதகததை வைத்து உடல் அமைப்பை சொல்வது போல் (உ.ம் : லக்னம் = தலை,முகம்) உடல் அமைப்பை வைத்து சாதகம் சொல்லமுடியாதா என்பதே சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படை போலும். ஆனால் பாவகிரகங்கள் ஜஸ்ட் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மனதையும் பாதிக்கின்றன.

சிலர் விஷயத்தில் பாவ கிரகங்கள் உடலை பாதிக்காது (இவர்கள் பார்க்க சுந்தர புருஷர்களாய் இருப்பர்) ஆனால் மனதை கோரமாக பாதித்திருக்கும். ( சாடிஸ்டிக் சார்மிங் வில்லனாக இருப்பார்கள்)


எச்சரிக்கை: இதெல்லாம் என் கருத்து /ஊகம்/அனுபவம் மட்டுமே

இவ்ளோ டீட்டெயில்டா போவானேன் செவ்.......வாய்ங்கற பேரை பாருங்க. ஒடனே சால்னா கடையில நமீதா கணக்கா ஒரு கேரக்டர். வெற்றிலை போட்டு சிவந்த வாய் ஞா வரலை. மத்த கிரகங்கள் செரியில்லைன்னா அது சரியில்லை இது சரியில்லைனு தான் சொல்வாய்ங்க. இவரு சரியில்லைன்னா மட்டும் ( லக்னம் முதற்கொண்டு 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருத்தல்) செவ் தோஷம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.

இன்னாபா இது அக்குறும்புனு பொங்கி எழுந்துராதிங்க. மேட்டர் கீது வாத்யாரே. மன்சனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர்ரது வெள்ளயணுக்கள். அது உற்பத்தியாகிறது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜையில. அந்த மஜ்ஜைக்கு காரகன் செவ்வாய். தாளி நோ.எ.ச இல்லாத பார்ட்டிக்கு எந்த ரோகம் தான் வராது?

மேலும் செவ் சரியில்லின்னா ரத்த சுத்தி சரியா இருக்காது. சொறி சிரங்கு கட்டி எல்லாம் வரும். இப்படி காட்பாடியா போன பாடி கொண்டவன் பலவீனனாதான் இருப்பான். கோபத்துக்கு காரணம் இயலாமை. பலவீனனுக்கு இயலாமை அதிகம். கோபமும் அதிகம்.

இப்ப கில்மாவுலயே பாருங்க. எத்தினியோ சந்தர்ப்பத்துல விட்டுக்கொடுக்கவேண்டி வரும். " விளக்கை அணை" "அம்மா தூங்கட்டும் - ஆட்டுக்குட்டி தூங்கட்டும்" செவ் தோஷமுள்ளவன் சீக்கிரத்துல கோபப்படுவான். கோபப்பட்டவனுக்கு காரியம் நடக்காது.

செவ்வாய் காரகத்தின் கீழ் வரும் அம்சங்களையும் அதனால கில்மாவுக்கு வரக்கூடிய ஆப்பையும் இப்ப பார்ப்போம்.
வயதில் இளையவர்கள்:
ஜாதகத்துல செவ் நல்ல இடத்துல உட்கார்ந்தா ஆண்டொன்று கூடுமே தவிர வயதொன்று கூடவே கூடாது. பார்ட்டி சொம்மா நச்சுனு இருப்பாப்டி. சப்போஸ் பார்ட்டி ஜாதகத்துல செவ் சரியில்லைனு வைங்க. சின்னப்பசங்களை எல்லாம் தனக்கு போட்டியா நினைக்கிற சைக்காலஜி வந்துரும். டிஷ் பையன், பால் பாக்கெட் போடற பையன் மேல கூட சந்தேகம் வரும்.( காரணம் உற்சாகத்தை தர்ரது செவ். உற்சாகம் குறைஞ்சிக்கிடக்கறச்ச துடியா இருக்கிற பசங்களை பார்த்தா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வருமா வராதா?)
போலீஸ், மிலிட்டரி, ரயில்வே:
செவ் நல்ல இடத்துல இருந்தா இந்த மாதிரி டிப்பார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும். ( செவ் சரியில்லாத ஜாதகத்துல பிறந்து லஞ்சம் கொடுத்து இந்த வேலையெல்லாம் வாங்கினா செவ்வாயின் இதர காரகங்களான ஆயுதங்கள், வெடி பொருட்கள், அறுவை சிகிச்சை, விபத்து, தீ விபத்து இத்யாதிக்கு பலியாகவேண்டி வரும்ங்கோ. மேற்படி உத்யோகங்கள்ள இருந்தா கண்ணாலம் கன்னா (சீக்கிரமா) ஆகும். அப்பாறம் என்ன கில்மாதான்.
எரிபொருள், மின்சாரம்:
வீட்ல கியாஸ் ஆயிருச்சு. கெரசின் இல்லை. எலக்ட்ரிக் ஓவன்ல ஆக்கி முடிச்சுரலாம்னு பார்த்தா வீராசாமி புண்ணியத்துல கரண்டு வாரா சாமி ஆயிருச்சு. சமையல் எப்படி முடியும். பெட் ரூமுக்கு எப்படி போகமுடியும். செவ் நல்லா இருந்தாதான் எல்லாமே கணக்கா முடியுங்கோ. எரிபொருள் தொடர்பான துறையில வேலை,தொழில் அமைஞ்சாலும் சுராங்கனிக்கா சேக்குதேன். தினம் தினம் அல்வா மல்லிப்பூதேன்..
தர்க்கம், வியூகம்:
அட என்ன பாஸ் எதுலதான் தர்க்கம் பார்க்கிறதுனு விவஸ்தையே இல்லையானு கேப்பிக சொல்றேன். ஆன்மீகத்துல மட்டும் தேன் தர்கம் நாலு காலை தூக்கிரும். உ.ம்: இழப்பவன் பெறுவான். காப்பவன் இழப்பான்.
கில்மாங்கறது உலகியல் வாழ்க்கையில ஒரு அங்கமே. அதனால ஜஸ்ட் ஒரே ஒரு தர்கத்தை கேட்ச் பண்ணினா ஊடல் கீடலையெல்லாம் ஊதித்தள்ளிட்டு காம் நகர்ல அப்பார்ட்மென்டே கட்டிரலாமுங்கோ.
அடுத்தது வியூகம். இதென்ன யுத்தமா வியூகம் வகுக்கனு கேப்பிக சொல்றேன். அச்சம், நாணம்,மடம்,பயிர்ப்பு அது இதுனு சொல்றாய்ங்கல்ல இதெல்லாம் என்னவாம் ஒவ்வொன்னும் ஒரு கோட்டை .இந்த கோட்டைகளுக்கெல்லாம் வேட்டு வைக்கலைன்னா நோ கில்மா. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு வியூகம் வகுத்து டமார் பண்ணாதான் கில்மா.
அறுவை சிகிச்சை:
செவ் சரியில்லைன்னா அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படுது. போதாதகுறைக்கு அவருக்கு சனியோட பார்வை தொடர்பு ஏற்பட்டுதுனு வைங்க அது எவ்ள தூரத்துக்கு போவும்னு சொல்லமுடியாது. அட ஒரு சிசேரியனை எடுத்துக்கங்க. லேடி டாக்டர் " ஒரு ஆறு மாசத்துக்கு பொஞ்சாதிய தங்கச்சி மாதிரி பார்த்துக்கங்க"னு சொல்ட்டா கில்மாவாவது வேறொன்னாவது. இன்னம் ஓவரிய தூக்கறது, யூட் ரஸை தூக்கிர்ரதுனு கதைபோச்சுன்னா ஹார்மோன் சுரப்புலயே பிரச்சினை வந்து சம்சாரத்துக்கு மீசை தாடியெல்லாம் வர ஆரம்பிச்சுரும்.
சமையல்:
யுத்த காரகனான செவ்வாயை சமையலுக்கும் காரகம்னு சொல்லியிருக்காய்ங்க.ரெண்டுக்கு என்ன சம்மந்தம்? யுத்தம்னா மொதல்ல எதிரி நாட்டை வேவு பார்க்கனும், எதிராளியோட படைபலம் ,வியூகம் தெரியனும். அதுக்கேத்தமாதிரி நம்ம படைய பலப்படுத்தனும். சமையல்னா நாம யாருக்கு சமைக்கப்போறோம், அவிக காஞ்சு கிடக்காய்ங்களா?, ஓஞ்சு கிடக்காய்ங்களா? பசியேப்பமா? புளியேப்பமா தெரிஞ்சிக்கிடனும். அப்பாறம் கிச்சன்ல என்ன இருக்கு என்ன இல்லைனு (முக்கியமா கியாஸ்/கரண்ட்) பார்த்துக்கனும்.
யுத்தம்னா மொதல்ல ஏர் பாம்பிங்கா, காலாட்படையா, கடல் வழி தாக்குதலா முடிவு பண்ணனும். சமையல்னா மொதல்ல கொறிக்க ஏதாச்சும் கொடுத்துரலாமா? இல்லை அவசர அடியா பிரியாணி பண்ணி அதுக்கு தயிர் சட்னி கொடுத்துட்டு அதுக்குள்ளாற கோழிகுருமாவ ஒப்பேத்தமுடியுமானுல்லாம் ஸ்கெட்ச் பண்ணனும்.
இப்படி யுத்தத்துக்கும் சமையலுக்கும் நிறைய சம்பந்தமிருக்குங்கோ. சமைக்கிற கணவன் மாரை வச்சு நிறைய ஜோக்கெல்லாம் எழுதறாய்ங்க. ஆனால் சமைக்க தெரிஞ்ச கணவனா இருக்கிறதுல நிறைய லாபம் இருக்கு பாஸ்.
பொஞ்சாதி ஏகத்துக்கு பில்டப் கொடுக்கமுடியாது ( ஸ்டவ்வு கிட்டே நின்னு பாருங்க தெரியும்) - நெஜமாலுமே பொஞ்சாதிக்கு முடியாத சமயம் கோதாவுல இறங்கி கேட்டு கேட்டு செஞ்சா அவிகளுக்கும் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன் ஆகும். மனசுல நன்றி உணர்ச்சி பொங்கும். அது கில்மாவுல கூட முடியலாம்.
ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள்:
செவ் சரியில்லைன்னா இதெல்லாம் வந்து கழுத்தறுக்க ஆரம்பிக்கும். லோ பிபி,ஹை பிபி உள்ளவுக,அல்சர் ,பெப்டிக் அல்சர் உள்ளவுக கில்மாவுக்கும் இந்த வியாதிகளுக்கும் என்ன தொடர்புனு சொல்லலாம்.
மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்:
இதுல வெறி கொண்டு ,வெற்றியே குறியா உள்ளவுகளுக்கு மைண்ட் கில்மா பக்கம் போகவே போகாது. உடம்பு கெட்டுரும்ங்கறதெல்லாம் சொம்மா சாக்கு. மனுஷன் பேசிக்கலா பண்றது ரெண்டுதேன். கொல்றது,கொல்லப்படுவது.இது செக்ஸுல சாத்தியம். ஆனால் இது ரெண்டுமே மேற்படி மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்ல சைக்கலாஜிக்கலா -சுத்தி வளைச்சு நடந்துருது -அதனாலதான் மேற்படி ஃபீல்டுல உள்ள பார்ட்டிங்க கில்மா பக்கம் திரும்பறதில்லை. ஆனால் தமாசு என்னடான்னா அதுகள்ள சாதனை பண்ணி முடிஞ்ச பிற்பாடு பலான மேட்டர்ல ஆர்வம் பீறிட்டு கிளம்பும். சில பிக்காலிங்க (முக்கியமா கோச்சுங்க) "ஏடாகூடமா"பிஹேவ் பண்றாய்ங்கனு கேள்வி. இதுக்கு காரணம் அவன் வெறி கொண்டு ,வெற்றியே குறியா செயல்படலைங்கறதுதேன்.
பால்:
மேட்டருக்கு மின்னாடி ஒரு தம்ளர் பால் (முடிஞ்சா ஒரு சில மசாலாக்கள் சேர்த்து) அடிச்சா தெம்பா இருக்கும்.
கொம்புள்ள பிராணிகள்:
மஞ்சு விரட்டு தெரியும்ல. மஞ்சு விரட்டுல குடல் சரியாம தப்பிச்சா குட்டிக மேலாடை சரிக்கும்னு சரித்திரம் சொல்லுதுல்ல .
மாமிசம்:
இது காம உணர்வை தூண்டும்.

ஆக ஒடனே உங்க குடும்ப ஜோதிடரை சந்திச்சு சாதகத்துல செவ் சாதகமா இல்லியானு ஒடனே தெரிஞ்சிக்கிடுங்க. சாதகமா இல்லாட்டி கீழ்காணும் பரிகாரங்களை ஆரம்பிச்சுருங்க.


1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.