'>
Showing posts with label எதிர்காலம். Show all posts
Showing posts with label எதிர்காலம். Show all posts

Friday, March 23, 2012

ஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்

வணக்கம்ணே.

08/Aug/2012 முதல் ஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம் ஆரம்பமாயிரும்.

யுபிஏ சர்க்காருக்கும் -சோனியா காந்திக்கும் நடக்கப்போற சம்பவங்களை நினைச்சா பரிதாபமா இருக்கு. சர்க்கார் அன்னாடங்காய்ச்சி மாதிரி ஆயிரும்.

ஒவ்வொரு பில்லுக்கு ஒவ்வொரு கட்சியோட ஆதரவை பெற மல்லு கட்ட வேண்டி வரும். தமிழ் நாட்ல மந்திரி சபை நிலவரம் மாதிரி தில்லி காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி விவகாரம் ஆயிரும்.

அவனவன் ஊட்டு மாப்ளை மாதிரி அலட்டப்போறான். சோனியா அம்மா பிழிய பிழிய அழுது கொஞ்ச நாள் சமாளிக்கலாம்.

ஆனால் ரெண்டு மாசத்துல ஆட்சி கவுந்து போனா கூட நான் ஆச்சரியப்படமாட்டேன். உங்களை பதிவுக்குள்ள இழுக்க போட்ட பாரா இது.

பிட்டு படம் மாதிரி இருக்கேன்னு நினைக்காதிங்க. ஒழுங்கு மரியாதையா ஜாதகத்தை அனலைஸ் பண்ணித்தான் எழுதியிருக்கேன்.டோன்ட் ஒர்ரி

காங்கிரஸ் பீகார் தேர்தல்ல பல்பு வாங்கறதுக்கு முந்தியே ஆங்கிலம் தெலுங்கு தமிழ்னு மும்மொழில பதிவு போட்டு சோனியாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அபாயச்சங்கு ஊதின பார்ட்டி நாம.
.இத்தனைக்கும் அப்பம் ஜஸ்ட் நியூமராலஜிப்படியான ஆய்வுத்தேன். இடையில தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் சமயம் ஜெ, கலைஞர்,சோனியா,ராகுல்னு வரிசையா ஜாதகங்களை அனலைஸ் பண்ணி பதிவுகள் போட்டோம்.

தனக்கு வந்தாத்தான் தலைவலியும் சுரமும்ங்கற மாதிரி இந்த மகராசி தில்லியில உட்கார்ந்துக்கிட்டு கிழவாடிங்க பேச்சை கேட்டு ஜகனை கழட்டி விட்டுட்டாய்ங்க. அந்த புள்ளைய சி.எம் ஆக்காம விடறதில்லைன்னு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கம்.

மேலும் உ.பி தேர்தலுக்கு பிறகு யுபிஏ சர்க்காருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிருச்சு. காங்கிரஸ்ல சோனியாம்மா நாற்காலியே ஆட்டம் கண்டு போச்சு. ஆந்திராவுல சோனியா பேரை சொன்னதும் ராம நாராயணன் சினிமா கணக்கா சாமியாடற கிழவாடியெல்லாம் தெலுங்கானா பை எலக்சன்ஸ்ல கட்சி பல்பு வாங்கின பிறவு சி.எம் ராஜினாமா பண்ணனும் - மேலிடம் மாத்தி ரோசிக்கனும்னெல்லாம் அல்ட்டிமேட்டம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

அட நம்ம தாத்தாவே வெளியிலிருந்து ஆதரவு -மந்திரிகள் ராஜினாமா -உண்ணாவிரதம்னு சினிமா காட்ட ஆரம்பிச்சுட்டாருன்னா இன்னா அருத்தம் அம்மாவுக்கு டப்பா டான்ஸ் ஆடிப்போச்சுன்னு தானே அருத்தம்.

தமிழ் ஈழம் மேட்டரை பொருத்தவரை காங்கிரஸை விட பா.ஜ.க வை நம்பலாம் . இங்கனருந்து பத்து அய்யரை அனுப்பி அவிகளுக்கு பிழைப்பு வழிகாட்டவாச்சும் - அங்கன உள்ள இந்து கோவில்களை காப்பாத்தவாச்சும் காட்டடி அடிப்பாய்ங்க.ஆனால் சோனியா,காங்கிரஸ்லாம் இந்த மேட்டர்ல பூட்ட கேஸு.

ஆக சோனியாம்மா ஆடி முடிச்சு ( அல்லது அவிக தலையில உட்கார்ந்த சைத்தான் ஆட்டி முடிச்சு) ஊரைப்பார்க்க பூட்டா நெல்லது நடக்கலாம். அது எப்பம் நடக்கும்னு கொஞ்சம் சின்சியரா பார்ப்போம்.

அம்மாவோட ஜாதக விவரம்: கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது ரிசபராசிங்க. லக்னாதிபதி உச்சம் - அக்காங் நம்ம கலைஞர் தாத்தா ஜாதகத்துல உள்ள அதே அம்சம்தேன். இங்கன ராகு சேர்ந்து தொலைச்சுட்டாரு.

லக்ன சனி:
இந்த அமைப்பு இளமையில் முதுமையை தரும். ஜாதகருக்கு மட்டுமில்லிங்கண்ணா ஜாதகரோட வாழ்க்கைத்துணைக்கும் முதுமைதேன் பரிசு. மேலும் கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளையும் தரும். ஒரு லேபரை கணவராக்கும் (ராஜீவ் காந்தி அந்த சமயம் ஏதோ ப்ரிக் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருனு ஞா)

இதுமட்டுமில்லிங்கண்ணா சீக்கிரமே வா.து யோட கதையை முடிச்சுரும். சனி பிதுர்களுக்கும்,ப்ரேதாத்மக்களுக்கும் காரகர். அதனால ஆ.காரர் சீக்கிரம் ப்ரேதாத்மா ஆயிரவும் வாய்ப்பிருக்கு. சனி கரும காரகன். அதாவது ஏழேழு தலைமுறைக்கு மிந்தி செய்த பாவம்,புண்ணியத்துக்கெல்லாம் கூட கூலி கொடுத்துருவாராம்ல.

இவருக்கு இவிக ஜாதகத்துல சப்தமாதபத்யமும் ,அஷ்டமாதிபத்யமும் ( கணவர் - சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் காட்டுமிடம் இது) கிடைச்சது. கணவர் கதை முற்றும்ங்கறதால இந்த சனி மேற்படி சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் வாட்டி வதக்குதோனு ஒரு சம்சயம். உ.ம் ஒய்.எஸ்.ஆர். வீல் சேர்ல கலைஞர்.

இவர் 3 ஐபார்க்கிறதால சகோதரத்துக்கும் பாதிப்புத்தேன் ( ஸ்பெக்ட்ரம் ஜில அவிகளையும் விஜாரிப்பாய்ங்களாமே) ஆனால் இவரு செமை தகிரியத்தையும் கொடுப்பாருங்கோ. ( சவுண்ட் பாக்ஸு அடி வாங்கவும் வாய்ப்பிருக்கு) ஏழை பார்த்த கதை (வதை) ஆல்ரெடி ஓடிருச்சு. பத்தை வேற பார்க்கிறாருங்கோ.

இதனால சட்டையில்லாதவன் ,கிழிஞ்ச சட்டை போட்டவன், லேபர், பிச்சைக்காரி பணம் கூட அம்மாவுக்கு வந்து சேர வாய்ப்பிருக்கு. ( மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டர் தெரியும்ல)

மரணம் -மரணம் தொடர்பான சொத்து ,சுகங்களுக்கெல்லாம் சனிதேன் இன் சார்ஜு. எட்டாமிடம் காரகம். அம்மாவுக்கு இன்னைக்குள்ள " வானளாவிய அதிகாரம்" உயில் மூலமாவும் /வாரிசு அடிப்படையிலயும் வந்ததுதேன்.

சந்திரன் உச்சம் தேன். (மனோகாரகன்) ஆனால் ராகு கூட சேர்ந்தாரே. இதனால தண்ணீர் மூலமா பரவும் வியாதிகள்,மனோவியாதிகள், நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

கடல் தாண்டியும் "விவகாரங்கள்" நடத்தின மாதிரி கீது. ராசி ரிஷபங்கறதால அம்மாவுக்கும் தாத்தாபோல பணம்,குடும்பம்னா உசுரு.

அதுலயும் ஒரு லொள்ளை பாருங்க சர லக்னத்துக்கு லாபஸ்தானம்தேன் பாதகஸ்தானம் லக்னாதிபதியே இங்கன மாட்னாரு.உபரியா ராகுவோட சேர்க்கை. அம்மாவுக்கு " நெல்ல மனசுங்கோ".

ரெண்டுக்குடையோனும் ஆறுக்குடையோனும் சேர்ந்ததால குடும்ப கலகம் ( மேனகா காந்தி எபிசோட் தெரியும்ல) மேற்படி ரெண்டுக்குடையோன்( தன பாவாதிபதி) தூர தேசங்களை காட்டும் 9 ஆமிடத்தோனான குருவோட சேர்ந்தாருங்கோ. இதனாலதான் ஏதோ நோன்பு அதிரசம் கணக்கா சொந்த பந்தத்துக்கு எதையோ அனுப்பி வச்சுட்டதா சுப்பிரமணியம் ஸ்வாமி உளறி கொட்டறாரோ என்னமோ?

இந்த சேர்க்கை 4 ஆமிடத்துல நடந்தது. 4ங்கறது தாய் வீட்டை காட்டுமுங்கோ ( இத்.........தான மானாங்கறது) ஏதோ சிறுவாடு பணம் தாய் வீட்டுக்கு போகுது.

அடுத்து பாருங்க 4 ஆமிடத்துக்கு இம்மாம் பில்டப் இருந்தாலும் அங்கன விரயாதிபதி சேர்ந்தாருங்கோ. பிச்சையெடுத்தான் பெருமாளு அத்த பிடுங்குச்சாம் அனுமாரு கணக்கா கைய விரிச்சுருவாய்ங்களோ என்னமோ ?

4ன்னா இதயம்ங்கண்ணா இந்த பாவாதிபதியோட விரயாதிபதி சேர்ந்ததால தான் இதயமே இல்லாம நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு தொட்டிலுக்கு முன்னாடி சவப்பெட்டிகள் தயாரானப்பல்லாம் வேடிக்கை பார்த்தாய்ங்களோ என்னமோ?

அஞ்சாமிடத்தை பாருங்க: எண்ணிக்கைய பார்த்தா ஹவுஸ் ஃபுல்லா தோணும். ஆனால் இங்கன விரயாதிபதியான புதன் ஒக்கார்ந்தாரு. அஞ்சுன்னா புத்தி விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா புள்ளை விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா பேர்புகழ் ,மன அமைதி விரயம்னா தெரியுமில்லை.

இதுமட்டுமில்லிங்கண்ணா மிச்சம் மீதி எதுனா பெட்டர் ரிசல்ட் இருந்தாலும் அதை ஒழிச்சுக்கட்ட இங்கன கேது ஒக்கார்ந்தாரு.

என்னதான் எதிரிகளை பத்தி சதா சிந்திச்சு வாழ்ந்தாலும் ( செவ்) சகோதரங்களை தாங்கி பிடிச்சாலும் ( புதன், செவ்) சுக போக ஆடம்பர வாழ்க்கைய நடத்தினாலும் (சுக்கிரன்) இந்த இடத்துல கேது உட்கார்ந்ததால கடாசில மிஞ்ச ப்போறது விரக்தி.

கேது தர்ர சாய்ஸ் ரெண்டுதேன். ஒன்னு பிச்சை எடுக்கனும் அ சன்னியாசியாகனும். பிச்சையே எடுத்தாலும் கிடைக்கனுமில்லை.

இது பூர்வ புண்ணியத்தை காட்டற இடம் . இங்கன கேது உட்கார்ந்ததால அடி விழ ஆரம்பிச்சா தாளி ஏழேழு ஜன்மத்து பாவமும் ஞா வந்து ஞானத்தை தேட ஆரம்பிச்சுரனும். அப்படிவிழும். மேலும் இது வாரிசை காட்டற இடம் (ராகுல்) இங்கன கேது உட்கார்ந்ததால தான இவருக்கு சதா சர்வ காலம் 180 டிகிரில - ஏழாவது வீட்ல இருந்து பார்வை செய்யும் ராகுவோட பேரே வாரிசுக்கு ஃபிக்ஸ் ஆச்சோ என்னமோ?

அஞ்சுல உட்கார்ந்த கேது ராகுலை சன்னியாசியாக்கனும் அ பிச்சைக்காரர் ஆக்கனும். ரெண்டுல ஒன்னு சீக்கிரமே பைசல் ஆயிரும்.

5+3 துணிச்சலான முடிவுகள் 10+3 துணிச்சலான செயல்கள் 5+12 : புத்தி யுக்தியெல்லாம் வீணாஆஆஆஆஆ போயிரனும். 5+4 சதா குடும்ப சிந்தனை ( தாய்வீடுங்கோ) 5+11 சதா லாபம் குறித்த ஆவல், 5+ கேது நிராசை,அவமானம்,அவப்பேர், விரக்தி.

இதாங்கண்ணா அம்மாவோட ஜாதக பலன். இப்பம் தசாபுக்தியை பார்ப்போம்.

சனி தசை சுக்கிர புக்தி (27/Jun/2008 => 27/Aug/2011 )
பாதகாதிபதியோட புக்தி. லக்னாதிபதியே இங்கனதான் ராகுவோட சேர்ந்து உட்கார்ந்தாரு பாதகாதிபதி+சுகஸ்தானாதிபதி+லாபஸ்தானாதிபதியான சுக்கிரனோட கேது சேர்ந்திருக்கிறதால டப்பா டான்ஸ் ஆடப்போறது நிச்சயம்.

இவிக மண வாழ்வை பத்தி ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. (சுக்கிரன்) அதுக்கு காரணம் சுக்கிரனோட கேது சேர்ந்த எஃபெக்ட் தேன். வேணம்னா குரு தசை சுக்கிர புக்தில அம்மாவோட நெலமை எப்படியிருந்ததுன்னு கூகுல்ல தேடிப்பாருங்க (17/Jul/1993 => 16/Mar/1996 ) அதே ரேஞ்சுதேன் இப்ப மறுபடி வரப்போகுது.

இன்னொரு சமாசாரம் பாஸ். சனி தசையில சூரிய புக்தி 27/Aug/2011 அன்று ஆரம்பமாகப்போகுது. இதனோட எஃபெக்ட் ஆறு மாசம் முன்னாடி இருக்கும்னு அனுபவம்.

சூரிய தசையில சனி புக்தியோ ,சனி தசையில சூரிய புக்தியோ வந்தா நாஸ்திதேன். சூரிய குரு சேர்க்கை பத்தி ஸ்லாகிச்சு எழுதியிருந்தேன். ( 2+9) ஆனால் அதே குருவுக்கு ரோகாதிபத்யமும் இருக்குதுங்கோ.வாக்குஸ்தானாதிபதி சத்ரு ரோக ருணஸ்தானாதிபதியோட சேர்ந்தா நம்ம சொற்களே விற்களா மாறி கற்களை மழையா பொழிவிக்குமுங்கோ

சத்தியமே உரைச்சாலும் அது எதிராளிக்கு உரைக்காதுங்கோ . இந்த பீரியட் 08/Aug/2012 வரை நடக்குதுங்கோ. அதனால அடிமேல அடிதேன்.

2012, ஆகஸ்ட் ,8 க்கு அப்புறம் சனிதசையில சந்திர புக்தி ஆரம்பிச்சுரும்.கூட ராகு வேற இருக்காரு. ஒரு பாரால மனம்,சிறு நீரகம், நுரையீரல் பாதிக்கும். தண்ணீர் மூலம் பரவும் வியாதி வரலாம்னு சொல்லியிருக்கனே அதுவரலாம்.

லக்னாதிபதியோடயே ராகு சேர்ந்திருக்கிறதால அவருக்கு ரெட்டையான கேது அஞ்சுல உட்கார்ந்திருக்கிறதால ஒரு பெரிய்ய அவமானம் நடந்து சொல்லிக்காமயே கூட போயிரலாம். ( அட இத்தாலிக்குங்க)

Saturday, January 7, 2012

சோனியா முதல் சிம்பு வரை 2012

அண்ணே வணக்கம்ணே !

புத்தாண்டில் பிரபலங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு திராட்ல விட்டுட்டம். நம்ம வேகத்துக்கு - நமக்கிருக்கிற டைட் ஷெட்யூலுக்கு விடாப்பிடியா டெக்ஸ்டா தொடர்ந்தா இன்னொரு புத்தாண்டு வந்துரும். அதனால சோனியா,ராகுல்,ஜெயலலிதா முதல் சிம்பு ,சூர்யா வரை பிரபலங்களோட எதிர்காலம் 2012ல எப்படி இருக்கும்னு ஆடியோவா தந்திருக்கேன்.

கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.





நம்ம புதிய விருந்தினர் சுந்தரேசன் அவர்களுடைய விபத்து பதிவையும் தந்திருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க.

அதுக்கு மிந்தி ச்சொம்மா டைம் பாஸுக்கு ரெண்டு உபகதை.

ஷீர்டி சாயிபாபா ஷீர்டில செட்டிலான புதுசுல திடீர்னு ஒரு ஆசாமி வந்தான்.பாபாவை அவர் உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு எந்திரிக்க சொன்னான். பாபா எந்திரிச்சாரு. வந்தவன் பாபா சீட்ல உட்கார்ந்துக்கிட்டான். இப்படி ஒரு 3 நாள் ஓடிருச்சு. சனம் பொங்கி எழுந்து வந்தவனை கிளிச்சுரப்பார்க்க பாபா "ஃப்ரீயா உடுங்க"ன்னாரு.

நாலாவது நாள் அந்த ஆசாமி எந்திரிச்சு பாபாவை வணங்கி "வந்து உங்க சீட்ல உட்காருங்க"ன்னான். பாபாவும் உட்கார்ந்தாரு. வந்தவர் பாபாவுக்கு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிட்டாரு.

இந்த உபகதைக்கும் நம்ம சுந்தரேசன் சாரோட வரவுக்கும் அலம்பலுக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தமிருக்குன்னு நினைச்சாலும் நஷ்டமில்லை. நிற்க.

மெர்ஜென்சிக்கு மிந்தி தமிழ் நாட்டு வந்துரு விதவை பென்சன் தரோம்னு இந்திரா காந்தியை திமுக காரவுக சகட்டு மேனிக்கு பேசினாய்ங்க. எமெர்ஜன்சி சமயம் செமர்த்தியா பொங்கல் வாங்கினாய்ங்க.

அதே எமெர்ஜென்சி பீரியட்ல டி.கே.பரூவான்னு ஒரு பார்ட்டி இந்தியாதான் இந்திரா இந்திராதான் இந்தியான்னு ஊத்தி விட்டாரு. அப்பாறம் நடந்த எலக்சன்ல இந்திராவை சனம் ஊத்தி மூடிட்டாய்ங்க.

நாகர் கோவில்ல படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்னு காமராசர் சொன்னாரு எந்திரிக்கவே இல்லை.இதையெல்லாம் ஹிட்ஸ் கணக்கு சொல்லி தாண்டி குதிக்கிற சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை.

நம்ம ஜாதகத்துல ஆறுக்கு எட்டாவது இடம் கடகம் . இங்கனதான் குரு உச்சமா உட்கார்ந்திருக்காரு. குரு சுப கிரகம். நம்ம எதிரிகளுக்கு ரெம்ப டார்ச்சரெல்லாம் கொடுக்க மாட்டாரு.

வில்லன் கெட்டவன்னு வைங்க. அணு அணுவா சித்திரவதை பண்ணுவான்.அப்பாறம்தேன் கொல்லுவான்.

இதுவே வில்லன் ரெம்ப நல்லவன்னு வைங்க.. " டே ..டேய்.. என் கண்ணுக்கு மறைவா கொண்டு போயி ரெம்ப இம்சை -ரத்த சேதம் இல்லாம் பட்டுன்னு முடிச்சுருங்கடான்னு தேன் ஆணை கொடுப்பான்.

அப்படி ஆறுக்கு எட்டுல நின்ன குரு நம்ம எதிரிங்க கதையை முடிச்சுருவாரு. அதுக்காவ நாம நேரத்தை செலவழிக்கிறதா இல்லை.

அதே சமயம் நாம பூனை கணக்கா எலியை ஓடவிட்டு அடிப்பம். அதை பார்த்து அந்த எலி இது சோப்ளாங்கி பூனைன்னு நினைச்சு அசால்ட்டா இருந்தா இந்த பூனைக்கு தேன் லாபம்.

இதையெல்லாம் சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை. அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.

கூகுல்ல தேடு கொட்டும்னாரு. இந்தியாவுல லட்சம் சுந்தரேசன் இருப்பான். அல்லா சுந்தரேசனும் ஆஜர். இதுல இந்த வந்தரேசனை எப்படி கேட்ச் பண்றது? வில் யு கிவ் மீ சம் ஐடியா ப்ளீஸ்?

Sunday, December 11, 2011

கனி மொழி ஜாதகம் : ஒரு பார்வை

கனிமொழியோட ஜாதகத்தை கணிச்சு பார்த்ததும் மனசுல ஸ்பார்க் ஆன மொதல் விஷயம் "கனியை சனி ஒரு கை பார்க்காம விடமாட்டாரு"ங்கறதுதேன். 1968 ஆம் வருடம், ஜனவரி 5 ஆம் தேதி சூரியன் உச்சியில் இருக்கும் போது பிறந்த கனியோட ஜாதகப்படி அவருடைய லக்னம் மீனம்,ராசி கும்பம். மீனம் ராசி சக்கரத்துல கடேசி ராசிங்கறதால இவிக லைஃப்ல எல்லாமே கடேசியாதான் நடக்கும். மத்தவுக வேணாம்னு கழிச்சதுதேன் கிடைக்கும். கும்பம் ராசிச்சக்கரத்துல 11 ஆவது ராசிங்கறதால லாபம் பார்க்காம எதையும் செய்யமாட்டாய்ங்க.

கடந்த சனி பெயர்ச்சியில சனி அஷ்டமத்துல வந்து உட்கார்ந்து ஆட்டிவச்சதுல இவிக லாபம் பார்த்து இறங்கின காரியம்லாம் இவிக தலைக்கு தீம்பாவே முடிஞ்சுது. இந்த சனிப்பெயர்ச்சிக்கு சனி 9 ல வந்தாலும் அது அப்பாவை காட்டுமிடம்.அப்பா "ஒரு வழி" ஆனபிறகு அல்லது அப்பா கைவிட்ட பிறகு இந்த ஜாதகர் மேற்கு பக்கமா தூரதேசம் போயிரவும் வாய்ப்பிருக்கு.

ஜாதகத்தில் கிரக நிலை:

லக்னத்துல லாப -விரயாதிபதியான சனி , 2 -8 ல் நின்று கடுமையான மாங்கல்ய தோஷத்தை தரும் ராகு கேது ,6 ல் லக்னாதிபதியான குரு , அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன், ( இவருக்குரிய எண் 6 - ஜாதகருக்கு திகார்ல ஒதுக்கப்பட்ட
சி(அ)றை எண் கூட 6 தான்) தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் மற்றும் தாய் & கணவரை காட்டும் புதன் இருக்காய்ங்க. புத்திஸ்தானாதிபதியான சந்திரனும் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதி & அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாபதியான செவ்வாயும் சேர்ந்திருக்காய்ங்க. டெக்னிக்கல் டீட்டெய்ல்ஸ் ஓவர். இப்பம் பலனை பார்ப்போம்.

ஜாதக பலன்:

லக்னாதிபதியான குருவே ஆறுல மாட்டினாரு. கனிக்கு எதிரி ஆருன்னா கனிதான். குரு கங்கண காரகன் (திருமணம்) என்பதால் முதல் திருமணம் தோல்வி. குரு புத்திர காரகன் -அம்மாவின் இந்த சிறை வாசம் மகன் ஆதித்யாவோட மனதை எந்தளவுக்கு பாதித்ததோ -அதன் விளைவாக அம்மா -பிள்ளை உறவு எந்த அளவுக்கு மெலியுமோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ராகு கேதுக்கள்:

2 என்பது வாக்கு ஸ்தானம். எட்டு என்பது ஆயுள் ஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருப்பதால் கனியோட வாக்கு அவர் கழுத்துக்கு தூக்கு.( நீரா ராடியா டேப்பு கேட்டிங்களா?) ஒவ்வொரு பிடி சோறும் விசமாத்தான் இறங்கும். தனிமை -இருட்டு-நிராகரிப்பு இதான் வாழ் நாள் முழுக்க தொடரும்.

"விவகாரங்களை" காட்டும் ஆறாமிடத்தில் நின்ற லக்னாதிபதியான குரு ஜீவனாதிபதியாவும் இருக்கிறதால இவரோட முழு நேரத் தொழிலே "விவகாரமா"த்தான் இருக்கும்.

லக்ன சனி:

கனி சொம்மா இருந்துரலாம்னு நினைச்சாலும் லக்னத்துல நின்ன சனி விடமாட்டாரு. மூன்றாமிடத்தை பார்த்து சகோதரர்களுக்கும் , ஏழாமிடத்தை பார்த்து கணவருக்கும், பத்தாமிடத்தை பார்த்து "பிழைப்புக்கும்" ஆப்பு வைச்சுக்கிட்டே இருப்பாரு.

கனி பிறந்த பிறவுதேன் கலைஞருக்கு "கூடி"வந்ததுன்னு பேசிக்கிறாய்ங்க.அசலான மேட்டர் இன்னான்னா அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன் நின்னதாலதான் கலைஞரு பிழைப்பு நாறிப்போச்சு. சுக்கிரன் என்றால் பெண். இப்படி தமிழ் நாட்டுல ஒரு அம்மாவும் -அப்படி தில்லி "மாதாஜீக்களும் " ( இந்திரா -சோனியா) தாத்தாவுக்கு ஆப்படிக்க இது முக்கிய காரணம்.

தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் நின்னாரு . இதனால இவிக கேரியர் முழுக்க எதிரிகள் நிறைஞ்சிருப்பாய்ங்க. அப்படி யாரும் இல்லைன்னாலும் கனி அம்மாவே ஒரு நலம் விரும்பியை தன் எதிரியா மாத்திக்குவாய்ங்க,

இந்த சூரியனோடு தாய் & கணவரை காட்டும் புதன் இருக்கிறதால இவிகளுக்கு அசலான எதிரி இவிக அம்மாதான். கணவரை கனி எதிரியாத்தான் பாவிப்பாரு.

புத்திஸ்தானாதிபத்தியம் சந்திரனுக்கு கிடைச்சிருக்கு. சந்திரன்னாலே சஞ்சலம், ஆகாய கோட்டைகள்தான். இதுல இவரு விரயத்துல வேற மாட்டினாரு.

இதனால இவரோட "கனவு". எதுவும் நிறைவேறாது. கீழே தள்ளின குதிரை குழியும் பறிச்சாப்ல இந்த சந்திரன் செவ்வாயோட வேற சேர்ந்து "உன்மத்த" நிலைய தருவாரு. செவ்வாய் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதிபத்யம் மற்றும் அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாதிபத்தியம் பெற்று விரயத்தில் நின்றதால இவரோட "வருமானம்லாம்" பறிபோயிரும். இவர் பேச்சுக்கு மதிப்பிருக்காது. குடும்பமும் இவருக்கு ஆதரவா இருக்காது. அப்பா இருந்தும் இல்லாத மாதிரி தான். அப்பா சொத்துலயும் (திமுக?) இவருக்கு உரிய பங்கு கிடைக்காது. சுத்தமா கழட்டி விட்டுருவாய்ங்க.

இதுவரை பார்த்த அம்சமெல்லாம் ஜூஜுபி. சனியோட 7 ஆம் பார்வை மற்றும் செவ்வாயோட எட்டாம் பார்வை கூட்டாக 7 ஆம் இடத்தின் மீது விழுவது என்ன மாதிரி எஃபெக்டை தரும்னு சொன்னா நாஸ்திதான். ஒரு நண்பரும் - ஒரு எதிரியும் கூட்டு சேர்ந்து இவர் உயிருக்கே உலை வைக்கவும் வாய்ப்பிருக்கு..

தற்சமயம் புத மகாதசையில் சனி புக்தி நடக்குது .(13/6/2011 முதல் 23/2/2014 வரை) இவிக லக்னம் மீனம்ங்கறதால புதன் - சனி ரெண்டு பேருமே எதிரிங்கதேன்.தசா நாதனும் -புக்தி நாதனும் ஆளுக்கொரு ஆப்பு வைக்க காத்திருக்காய்ங்க.( வச்சுட்டாய்ங்க)

சனி தலித் இனத்தை காட்டும் கிரகம். தலை மேல உட்கார்ந்த சனி கிரகம். ராசா ரூபத்துல ஆப்படிச்சுருச்சு. புதன் என்றால் ஏஜெண்ட். நீரா ராடியா ஏஜெண்டுதானே.

சனிக்கு லாபம் -விரயம்னு ரெண்டு வித ஆதிபத்யம் இருக்கு. இதனால மேற்சொன்ன காலகட்டத்தில் முதல் பாதி விரயமாவும் - அடுத்த பாதி ஓரளவு லாபமாவும் நடக்க வாய்ப்பிருக்கு. ஆக இதோ பட்டம் -அதோ பதவின்னு என்னதான் அல்லாடினாலும் தப்பித்தவறி அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கணக்கா பதவியே கிடைச்சாலும் 2012 , அக்டோபர் 17 வரைக்கும் செயில்ல தப்ப "உஸ் .. அப்பாடா"ன்னு உட்கார முடியாது,

2012 , அக்டோபர் 17க்கு மேல் நடக்கும் லாபம் கூட மரணம் தொடர்பான "ஆதாயமாக"த்தான் இருக்கும். அந்த ஆதாயம் கூட 23/2/2014 க்கு பிறகு "விரக்தி"யை கொடுத்துரும்.

அடுத்து வரக்கூடியும் 7 வருட கேது தசை முதல் கணவரை போலவே கனிமொழியையும் "சன்யாசி"போல ஆக்கி "பரதேசம்" அனுப்பி வைத்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன்.

,

Tuesday, October 18, 2011

ராஜபக்சே ஜாதக பலன் : ஒரு 360 டிகிரி பார்வை


அண்ணே ! வணக்கம்ணே .. இதான் கடேசி பதிவா என்ன தெரியலை. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஜாதக பலனை ஆடியோ ஃபைலா போட்டிருக்கேன். நமக்கு கிடைச்ச பர்த் டீட்டெயில்ஸ் கரீட்டா இருந்தா பலனும் கரிட்டா இருக்கும். ( 18, நவம்பர் ,1945 ,விடியல் 3.45 , பிறந்த ஊரு: Matara )

ஆடியோவை கேட்டுட்டு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு ராட்டினம் ஏத்தினாலும் பரவால்லை ஸ்டேஷன்ல உள்ள பார்ட்டிகளுக்கு சொசியம் கீசியம் சொல்லி தப்பிக்கலாம். இலங்கைக்கு பார்சல் பண்ணிக்கினு பூட்டா தான் படா பேஜாரா பூடும்.ஆனா அம்மா கீறாய்ங்க. கு.பட்சம் முருகேசனை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக்கூடாதுன்னு ஒரு தீர்மானமாச்சும் போடுவாய்ங்க.

ரெம்ப நாளைக்கப்பாறம் ஆடியோ பதிவு போட்டிருக்கேன். காரணம் பவர் கட். பொறுமையா கேட்டு உங்க கருத்தை தெரிவிங்க.

வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி திருவாளர் ராஜ பக்சேவுடைய ஜாதக பலனை கேளுங்க.

Thursday, October 6, 2011

கொஞ்சல் மொழியும் எதிர்காலமும்

ஒரு சம்பவம்/ நிகழ்வு ஒரு பெரிய ஆலமரம்னு வைங்க . அதுக்கான விதை சில சமயம் 100 வருசம் ஏன் பல ஆயிரம் வருசத்துக்கு மிந்தியே விதைக்கப்பட்டிருக்கும். இதையெல்லாம் வாயா வார்த்தையா சொன்னா நம்ப மாட்டிங்க.
அண்ணாதுரை கடவுளே இல்லைனு பேசப்போறாரு . ஆனாலும் அவரோட பேச்சு தேனா இனிக்கனும். சனம் மயங்கனும். அவரோட பேச்சே அவரை சிகரங்கள்ள ஏத்தி வைக்கனும்.

இதுக்கு இயற்கை என்னவிதமான ஏற்பாடுகளை செஞ்சதுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவிங்க. அண்ணாவோட அப்பா மாசாமாசம் திருச்செந்தூர் செந்திலாண்டவருக்கு தேன் அபிஷேகம் - என்ன அபிசேகம்? தேன் அபிஷேகம் செய்தாரு. இதனோட விளைவா அண்ணாவோட பேச்சு தேனா இனிச்சது. சனம் மயங்கியது. அவரை சிகரங்களுக்கு ஏத்தி வச்சது.

இது சீரியஸ். இப்பம் கொஞ்சம் ஃப்ரீயா பேசுவம். ஆம்பளைங்க காதலிக்கிறச்ச அ கண்ணாலமான புதுசுல காதலி/ புதுப்பெண்டாட்டிய விதவிதமா கொஞ்சுவாய்ங்க. ஆனால் அவிக கொஞ்சல் வார்த்தையில அவிக எதிர்காலத்துல அந்த பு.பெ காரணமா எப்படியெல்லாம் அவதிப்படப்போறாய்ங்கன்ற மேட்டர் அடங்கியிருக்கு.

உதாரணத்துக்கு சிலதை பார்ப்போம்

1.மலரே:
நாளைக்கு அவிக கேட்டதை வாங்கித்தராட்டா படக்குனு வாடி - உங்களையும் வாடச்செய்யப்போறாங்கனு அர்த்தம்.

2.மின்னலே;
உங்க சம்பள கவரை கைல வாங்கறச்ச மட்டும் மின்னப் போறாங்கனு அர்த்தம்.

3.மயிலே:
சின்னதா பார்ட்டின்னு வீட்டுக்கு லேட்டா வந்தா அவிக அவ்ள மோசமா கத்தப் போறாங்கனு அர்த்தம்.

4.குயிலே:
அட்சய திருதியை மாசக்கடைசியில வந்தாலும் நகை வாங்க காசு தரலேன்னா அவிக முகம் குயிலைவிட மோசமா கருக்கப்போவுதுன்னு அருத்தம்

5.அன்னமே:
உங்க கிட்டே இருக்கிற ப்ளஸ் -மைனஸ் எல்லாத்தையும் பிரிச்சு எடுத்து மைனசை (மட்டும்) நட்பு உறவு வட்டம் முழுக்க டாம் டாம் போட போறாங்கனு அர்த்தம்.

6.தாமரையே:
அவிக உற்வுக்காரங்க வர்ர சமயம் மட்டும் அவிக முகம் சூரியனை கண்ட தாமரை மாதிரி மலரப்போகுதுன்னு அருத்தம்

7.ஏந்திழையே:
சம்பளப்பணத்தை /வந்த காசு பணத்தை கண்டபடி செலவழிச்சு மாசக்கடைசீல கண்டவங்கிட்டே கை "ஏந்த" விடப் போறாங்கனு அர்த்தம்.

8.கோ....தையே :

3 மாசத்துல "கோ"வென கதறச்செய்து நடந்து போன நஷ்டங்களை நினைச்சு "தை தை"னு குதிக்க வைக்கப் போறாங்கனு அர்த்தம்.

9.நிலவே:
மாசத்துக்கு ஒரு நாள் தான் பவுர்ணமி

10. தேவதையே:
நகைக்கடைக்கு போகலாம்னா "றெக்கை" கட்டிக்கிட்டு பறக்க போறாங்கனு அர்த்தம்.ஷோரூம் போனபிற்பாடு
கண் சிமிட்டவே மறந்துர போறாங்கனு அர்த்தம்.

11.பாவையே:
அவிக ஆத்தாக்காரி ஆட்டிவச்சபடியெல்லாம் ஆடி பாவைக்கூத்து நடத்தப்போறாய்ங்கனு அருத்தம்.

12.கிளியே:
அவிக ஆத்தா சொன்ன பேச்சை எழுத்து தப்பாம கிளிப்பிள்ளை கணக்கா ஒப்பிக்கப்போறாய்ங்கனு அருத்தம்.

Tuesday, September 27, 2011

முன்னாள் நிதி அமைச்சரின் விதி அதோகதி?


நம்ம நாட்டுக்கு சூரியதசையில ராகு புக்தி முடிஞ்சது செப் 27 .அடுத்து நடக்கறது குரு புக்தி. ரிஷபலக்னத்துக்கு அஷ்டமாதிபதியான குரு 6 ல நின்னாரு. இதனால் நம்ம நாட்டோட எதிரிகள் - துரோகிகள் எல்லாம் ஃபணால் ஆயிருவாய்ங்கனு சொல்லி முடிக்கலை. பாக்கிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் முட்டிக்கிச்சு. (எதிரி எதிரியோட மோதறதை பார்த்து ரசிக்கனும் அவ்ளதான்)

இங்கன உத்தமபுத்திரனா வேஷம் கட்டின "சிவகங்கை சின்னப்பயல்" (இந்த விருதை கொடுத்தது ஆருங்க?) வசம்மா சிக்கிக்கிட்டாரு.

நம்ம மணி அண்ணன் தேன் ப.சியோட பிறப்பு விவரங்களை தந்திருந்தாரு (ஜாதகமே தந்தாரு. ஆனல் நம்ம சென்டிமென்ட் படி புதுசாவே போட்டுக்கிட்டம் )

விருச்சிக லக்னம். தனுசு ராசி. ரெண்டுல சந்திரன் கேது , எட்டில் செவ்,சனி,ராகு , 9ல் சுக்கிரன், பத்தில் சூரிய,புதர்கள்,11 ல் குரு இந்த கிரகஸ்திதியை ஆடியோவுல நோண்டி நுங்கெடுத்திருக்கன். வழக்கம் போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

(ஜட்ஜுகளும் கேப்பாய்ங்களோ? - நமக்கு வேற சனிபுக்தி நடக்குதுண்ணே)


Friday, June 3, 2011

கனி,மாறன் எதிர்காலம்

எண்கணிதம்ங்கறதே ஒரு மேஜிக் மாதிரி உட்டாலக்கடின்னெல்லாம் நானே எழுதியிருக்கேன்.அதுக்கு காரணம் என்னன்னா
நீங்க ஒன்னாம் தேதி பிறந்துட்டா போதாது. உங்க ஜாதகத்துல சூரியன் ஓரளவாச்சும் இம்பார்ட்டன்ஸ் பெற்றிருக்கனும். இல்லாட்டி எண்கணிதம் வாயை பிளந்துரும்.
ஆனால் உங்க ஜாதகத்துல சூரியன் உச்சம் ஆட்சின்னு அமைஞ்சு லக்னத்தை ,அஞ்சை இப்படி முக்கியமான ஸ்பாட்டை பார்க்க நீங்க 1, 19,28 தேதிகள்ள பிறக்கலைன்னாலும் சூரியனோட இம்பாக்ட் உங்க வாழ்க்கை மேல நிச்சயமா இருக்கும். Read More

Saturday, April 9, 2011

ஸ்டாலின்,அழகிரி எதிர்காலம்: 2

கடந்த பதிவுல மு.க.அழகிரி மற்றும்  மு.க.ஸ்டாலினோட பெயர் எண்ணை அடிப்படையா கொண்ட சில பலனை தந்திருந்தேன்.ஆனால் சரக்கு நம்முதில்லைன்னு சொன்னது ஞா இருக்கலாம். சோர்ஸ் :http://www.tamilkalanjiyam.com

இப்பம் நம்ம சொந்த சரக்கை அவிழ்த்துவிடறேன். வெறும் எண்கணிதத்தை வச்சு சொல்றது நம்ம மெத்தட் இல்லிங்கண்ணா.

Read More

Friday, April 8, 2011

ஸ்டாலின்,அழகிரி எதிர்காலம்

M.K.Stalin (23)

பெயர் எண் கூட்டுத்தொகை :  23

பெயர் எண்:   5

பெயர் எண் பலன்கள்:

23. 5 வரும் எண்களிலேயே இது மிகவும் அதிர்ஷ்டமானது. இந்த எண் வருகிற பெயரை உடையவர்களுக்கு எடுத்த காரியங்களிலும், எண்ணுகிற எண்ணங்களிலும் வெற்றி உண்டாகும். இவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக வெற்றி பெறும். பிறருக்குச் செய்வதற்கு அரியதாகத் தோன்றும் காரியங்களும் இவர்களுக்கு எளிதாகக் கைகூடிவிடும். பெரிய திட்டங்களை மேற்கொண்டால் பிரபலமாவர். அதன் பயனாக உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதர்களின் ஆதரவும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களின் பாதுகாப்பும் கிடைக்கும். என்வே, இவர்கள் எப்போதும் பெரிய முயற்சிகளில் ஈடுபடுவதே நல்லது. இல்லையெனில் சோம்பல் நிறைந்த சுகவாழ்க்கையாக வாழ்வு முடிந்து விடும். இதை ராஜவசியம் மிகுந்த எண் என்பர்.

M.K.Alagiri ( 18)
பெயர் எண்:   9

பெயர் எண் பலன்கள்:

18. இந்த எண் தெய்விகத்தின் வீழ்ச்சியைக் குறிக்கும். இது கஷ்டங்களையும், வீண் தாமதத்தையும், சூழ்ச்சிகளையும், ஆபத்தான எதிரிகளையும் உண்டு பண்ணும். இந்த எண்ணைப் பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் சுயநலத்தால் தூண்டப்பட்டுச் சமூக விரோதமான காரியங்களில் ஈடுபடுவர். மனமறிந்து தவறான தீய காரியங்களைச் செய்வர். சுயநலம் வளரும், அருளும், அமைதியும் இல்லாத பாபகரமான வாழ்க்கை அமையும். ஆசைகள் நிராசையாகும்.
Source: Suspense

Saturday, February 12, 2011

இந்தியா - ஒரு எண் கணித பார்வை

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த தேதி 15/08/1947. இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 6 வரும். இதன் அதிபதி சுக்கிரன்.(பிறப்பு எண்) தேதி,மாதம்,ஆண்டுகளில் உள்ள இலக்கங்கள் எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 8 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சனி.

நம் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது 26/01/1950 . இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 8 வரும்.(பிறப்பு எண்) இதற்கு அதிபதி சனி.தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 6 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சுக்கிரன்.

ஆக‌ எண்க‌ணித‌ப்ப‌டி ந‌ம் நாடு சுக்கிர‌ன்,ச‌னி ஆதிக்க‌த்தில் உள்ள‌து.

ஜோதிட‌ விதிப்ப‌டி ச‌னியும் சுக்கிர‌னும் ந‌ட்பு கிர‌க‌ங்க‌ளே. ஆன‌ல் ச‌ற்றே ஆழ‌மாக‌ யோசித்தால் இதுவே இந்தியாவின் முன்னேற்ற‌த்தை முட‌க்கியுள்ள‌து என்று ஆணித்த‌ர‌மாக‌ கூற‌லாம். கார‌ண‌ம், ச‌னி ஏழ்மை,ப‌சி,ப‌ட்டினி,தாம‌த‌ம்,கூலிக்கு மார‌டித்த‌ல்,ஏழை ம‌க்க‌ளை இம்சித்து பொருளீட்டுத‌ல்,முதிய‌வ‌ர்க‌ள் அங்க‌ஹீன‌முள்ள்வ‌ர்க‌ளை காட்டும் கிர‌க‌மாகும்.

முட்டிவ‌லியால் அவ‌ஸ்தைப் ப‌ட்ட‌ வாஜ்பாயி,தொண்டு கிழ‌மான‌ பி.வி.ந‌ர‌சிம்ம‌ ராவ்,ஒட்டிய‌ முக‌ம் கொண்ட‌ சோனியா ,எல்லோருமே ச‌னியின் தூதுவ‌ர்க‌ள்தான். இவ‌ர்க‌ளின் தாம‌ஸ‌ புத்தியாலும்,கூலிக்கு மார‌டிக்கும் எண்ண‌த்தாலும் ஏழ்மை அதிக‌ரித்த‌து.

க‌லை உள்ள‌ம் கொண்ட‌ நேரு, இள‌மை தோற்ற‌ம் கொண்ட‌ இந்திரா,ஓவிய‌ரான‌ வி.பி.சிங் எல்லாம் சுக்கிர‌னின் தூதுவ‌ர்க‌ள் . இவ‌ர்க‌ளின் ஆட்சி ச‌னியின் த‌டைக‌ளையும் மிறி ஓர‌ள‌வேனும் ஏழை ம‌க்க‌ளின் உண‌வு,உடை,இருப்பிட‌ம் (சுக்கிர‌னின் ஆதிப‌த்ய‌ம் உள்ள‌) ஆகிய‌ விஷ‌ய‌ங்க‌ளில் அக்க‌றையுட‌ன் ந‌ட‌ந்த‌து.

சுக்கிர‌ன் காத‌ல், சிற்றின்ப‌ங்க‌ளின் மீதான‌ நாட்ட‌த்தை அதிக‌ரிப்ப‌தால் தான் நேருவுக்கும், லேடி மவுண்ட் பேட்ட‌ன் இடையில் காத‌ல், இந்திராவின், ராஜீவின் காத‌ல் திரும‌ண‌ம் ஆகிய‌ன‌ ந‌ட‌ந்த‌தோடு , ராகுல் கதையும் அதே ட்ராக்கில் போகிறது.

ம‌க்க‌ள் தொகையும் பெரும‌ள‌வில் அதிக‌ரித்து வ‌ருகிற‌து. ம‌த்திய‌ அர‌சாங்க‌ முடிவுக‌ளில் பெண்ணான‌ சோனியாவின் ஆதிக்க‌ம் தொட‌ர்ந்து வ‌ருகிற‌து.

சுக்கிர‌ன் என்றால் கூட்டுற‌வு. ச‌னி என்றால் விவ‌சாய‌ம். கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும்.அதிலும் விவ‌சாய‌ கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு ச‌ம‌மான‌ இட‌ம் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும்.மேலும் பூக்க‌ள்,ப‌ழ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ உற்ப‌த்தியில் க‌வ‌ன‌ம் செலுத்தினால் ச‌னி,சுக்கிர‌ தொட‌ர்பினால் ஏற்ப‌ட்ட‌ முன்னேற்ற‌ த‌டைக‌ள் வில‌கி சுக்கிர‌னின் ஆதிக்க‌த்திற்குட்ப‌ட்ட‌ உண‌வு,உடை,இருப்பிட‌ம் ஆகிய‌ன‌ எல்லோருக்கும் கிடைக்கும். அதோடு ம‌க்க‌ள் தொகை பெருக்க‌மும் க‌ட்டுப் ப‌டுத்த‌ப்ப‌டும்.இது ஜோதிட‌ ரீதியில் ம‌ட்டும் அல்ல‌ விஞ்ஞான‌ முறைப்ப‌டியும் சாத்திய‌மே.

இதை .. இந்த கனவை நனவாக்க ஒரு திட்டம் தீட்டி அதன் அமலுக்கும் பிரச்சாரத்துக்கும் உழைத்துவருகிறேன். அது குறித்த முழு விவரங்களை அறிய இங்கே அழுத்துங்கள்

Tuesday, October 5, 2010

உங்கள் எதிர்காலம்

வணக்கம் நைனா! இத்தீனி காலம் கண்டுக்காத விட்டுட்டாலும் அனுபவ ஜோதிடத்துல நீண்ட இடைவெளிக்கு பிறகு  நான் எழுதின பதிவுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கனும்னு முடிவு பண்ணி  மொதல்ல ஒரு கடி ஜோக்.

"ஏங்க அவரு உங்க கூட பிறந்த அண்ணனா?"
"இல்லிங்க எனக்கு ஒரு வருசம் முந்தியே பிறந்துட்டாரு"

ஒரு ஜோசியனா இருந்தாலும் கோசார பலன் சொல்றதுல எனக்கு விருப்பமே கிடையாது.ஏன்னா உங்க ஜாதகம் ஒரு காருனு வச்சிக்கிட்டா, தசாபுக்தி பலன் தான் ரோடு.அப்போ கோசாரம்? சொம்மா காத்து மாதிரி தான்.

உங்க வண்டி (ஜாதகம்) நல்ல மேக்கா இருந்து, ஷாக் அப்சர்பர் எல்லாம் பக்காவா இருந்தா ரோடு எப்படி இருந்தாலும் நோ ப்ராப்ளம். இதுல காத்து  முன்னே இருந்து அடிச்சா என்ன? பின்னே இருந்து அடிச்சா என்ன?

இந்த கோசார பலனெல்லாம் நடந்தா/பலிச்சா  உங்க ஜாதகத்துல சரக்கே இல்லேனு அர்த்தம்.

ஆனாலும் என்ன மயித்துக்கு கோசாரபலன் சொல்றேனு கேப்பிக.

சொல்றேன். நவகிரகங்கள்ள செவ்வா கீறாரே அவரு செமை பவர் ஃபுல்லு நைனா. மத்த கிரகமெல்லாம் செரியில்லைனா அது சரியில்லை இது சரியில்லேனு தனித்தனியா தான் சொல்வாய்ங்க. ஆனால் செவ்வா சரியில்லினா தோஷ ஜாதகம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.( இதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு)

ஜாதகத்துல மட்டுமில்லிங்கனா கோசாரத்துல கூட இவரு பவர்ஃபுல் தான். அக் 17 வரை துலால இருக்கிற இவரு அக் .17 அன்னிக்கு விருச்சிகத்துல வந்து உட்காராரு.
இங்கன ஒன்னரை மாசம் இருக்கப்போறாரு.இது இவருக்கு ஆட்சி வீடு. (இதனால நான் சில ராசிகளுக்கு  சொல்லப்போற தீய பலன் எல்லாம் ரெம்ப குறைய வாய்ப்பிருக்கு)

இத்தீனி நாளு இவரு சுக்கிரனுடைய வீடான துலாவுல இருந்தது தாய்குலத்துக்கு கலைஞர்களுக்குல்லாம் நல்லதில்லிங்கண்ணா. இவரு ராசி மாறிர்ரதால தாய்குலமும், கலைஞர்களும் ஒரு ஒன்னரை மாச காலத்துக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம். நடிகர் முரளி முதலானவர்களின் மரணத்துக்கு துலா செவ்வாயும் ஒரு காரணமே ( இது பொதுப்பலன் தான் - அவிகவிக  ராசிக்கு விருச்சிகம் வில்லங்கமான இடமா இருந்தா பல்பு வாங்கித்தான் ஆகனும்)

சனி செவ் தொடர்பு:
இது பா.ஜ.க காங்கிரஸ் கூட்டுமாதிரி அம்மாம் டேஞ்சர். ( அணு உலை நஷ்டஈடு மசோதா எப்படி நிறைவேறுச்சுங்கறது தெரியுமில்லை?)  சனி செவ் சேர்க்கைன்னு தனிப்பதிவே எழுதியிருக்கேன்.

என்னதான் நவகிரகதோஷத்துக்கு பரிகாரம், நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு கலக்கியிருந்தாலும்  சனி செவ் சேர்க்கை தொடர்புன்னா நமக்கு இப்பயும் டர்ருதான்.

ஆனால நம்முது கடகலக்னம். சிம்மராசி. லக்னாதிபதியும்,ராசி  நாதனும் பரிவர்த்தனம். இதனால  கோசாரத்துல லக்னம் தான் ரெம்ப ஒர்க் அவுட் ஆகும். லக்னத்தை வச்சி பார்த்தா செவ் சனி ஜீவன,அஷ்டமாதிபத்யம் பெற்றிருக்காய்ங்க. அதனால சனி செவ் தொடர்பு வரப்பல்லாம் நாம ரெம்ப பிஸியாயிருவம். (வேறு சில சைட் எஃபெக்ட்ஸ் உண்டு இல்லேங்கலை) இருந்தாலும் டர்ருதான்.

என்னைக்குமில்லாத திரு நாளா கோசார பலன் எழுத இதுவும் ஒரு காரணம் . சனி கன்னியில இருக்காரு. செவ்வாய் விருச்சிகத்துக்கு வரப்போறாரு.அப்படி வந்தா சனி தன்னோட 3 ஆம் பார்வையா செவ்வாயை பார்ப்பார். இதுல மொதல் பல்பு யாருக்குன்னா விருச்சிகத்துக்குத்தான். அடுத்து இவிக ரெண்டு பேரோட பார்வையும் கூட்டா விழறது மிதுன ராசி மேல. இவிகளும் ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்.

இப்படி சனி செவ் தொடர்பு ஏற்படறாதல என்னடா வில்லங்கம்னா ரெண்டு கிரகமும் அனுகூலமா இருந்தா தான் பலனை பெற முடியும்.இல்லின்னா நாஸ்திதான்.

யாருக்கு அனுகூலம்?
அக்டோபர் 17 முதல் செவ்வாய் வந்து தங்கப்போற விருச்சிக ராசி  மகரத்துக்கு 11 ஆமிடம் இது ஓகே , சனியும் 9ல தான் இருக்காரு.(இது கெட்ட இடம் கிடையாது) சனி செவ் தொடர்பால ரெம்ப காலமா  பெண்டிங்ல இருந்த சொத்து, சேவிங்ஸ், தூர தேச தொடர்பு பற்றிய  மேட்டருங்க ஐஸா பைசானு செட்டில் ஆகலாம்.

கும்பத்துக்கு விருச்சிகம் 10 ஆமிடம் இது செவ் க்கு நல்லதுதான். ஆனால் சனி அஷ்டமத்துல மாட்டினாரே .அதுனால ஜஸ்ட் கொஞ்சம் கேர்லெசா இருந்தாலும் ரெட் மார்க் கியாரண்டி ( ரத்த காயமுங்கோ)

மிதுனத்துக்கு விருச்சிகம்  6 ஆமிடம் இது நல்லதுதான், ஆனால் சனி செவ்வாயோட   பார்வைகள் இவிக ராசி மேலயே விழறதால தையல் விழற அளவுக்கு கூட ரெட் மார்க் விழலாம்.டேக் கேர்.

கன்னிக்கு விருச்சிகம்  3 ஆமிடம்ங்கறதால இது ஓகே.ஆனா சனி ஜன்ம சனியா இருக்காரே. இதனால இவிகளுக்கும் ஆபத்து காத்திருக்கு.

கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் அனுகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் வேட்டையாடி விளையாடலாம். பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஒன்னு ரெண்டு  ஃபாலோ பண்ணுங்க  நல்ல பலன் வேகம் பிடிக்கும்.

யாருக்கு பிரதிகூலம்?
மேஷம், ரிஷபம் ,கடகம் ,சிம்மம், துலா, விருச்சிகம், தனுசு , மீனம் ராசிக்காரவுகளுக்கெல்லாம்  பிரதி கூலம்.

கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் பிரதிகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் உசாரா இருந்தா சரி. பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஃபாலோ பண்ணுங்க ( இப்படியாச்சும் தமிழ் நாட்ல வெட்டு குத்து கொலை விபத்தெல்லாம் குறையட்டும்பா)
எச்சரிக்கை:
என்னதான் ஜூம் போட்டு பார்த்து சொன்னாலும் இந்த பலன் எல்லாம் ப்ரிலிமினரிதான். உங்க ஜாதகம், தசாபுக்தி பலன் களை பொருத்து கூடும் குறையும்.

இப்ப கொஞ்சம் தனி தனி ராசிக்கு  டீப்பா பார்ப்போம். 

மேஷம்:
இவிகளுக்கு செவ்வாய்  1,8 க்கு அதிபதி. இவர் எட்டுல வர்ரது கொஞ்சம் கூட நல்லதுல்லிங்கண்ணா. ஜாதகத்துக்கு லக்னம்தான் கடைக்கால் மாதிரி. அந்த லக்னாதிபதியே எட்டுல மறைஞ்சா நாஸ்திதான். எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி ஆயிருவிங்க, ஸ்டெடி மைண்ட் இருக்காது. ஹெல்த் ட்ரபுள் கொடுக்கும். கோபம் அதிகரிக்கும். ரெம்ப சாக்கிரதையா இருக்கனும். ஒரு சிலருக்கு மரண சம்பந்தமான வருமானம் வரலாம்.( உ.ம் எல்.ஐ.சி நஷ்ட ஈடு, உயில் வழி சொத்து)
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 10,11 க்கு அதிபதி இவருக்கு 1,8க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்பட்டதால தொழில் சூடுபிடிக்கும் ,டென்ஷன் கூடும். சின்ன சின்ன காயங்கள் ஏற்படலாம். மூத்த சகோதர சகோதரிக்கு ஆபத்து ஏற்படலாம்.அ அவிகளோட முட்டல் மோதல் பிரிவு ஏற்படலாம்.

ரிஷபம்:
இவிகளுக்கு செவ்வாய்  12, 7 க்கு அதிபதி. இவர்  ஏழுல  வர்ரது கொஞ்சம் வில்லங்கமானது தான். 7ன்னா மனைவி. அவிகளை காட்டற இடத்துல செவ் உட்கார்ரது நல்லதில்லை. 7ல நின்ன கிரகம் லக்னத்தையும் பார்க்கும்(உங்களை) செவ்வாய் காரகத்வம் வகிக்கும் பொருட்களால் வாழ்க்கை துணை(வரு)க்கும், உங்களுக்கும்  இம்சை கஷ்டம் நஷ்டம் ஏற்படும்.
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 9,10 க்கு அதிபதி. 9+12 காரணமா முதலீடு விரயமாகலாம். அப்பாவுக்கு ஹெல்த் ட்ரபுள் அ அவரால ட்ரபுள் வரலாம். அதே சமயம் 9+7 காரணமா  மனைவி செய்தொழில்ல உதவலாம். மனைவியால ஒரு சொத்து கூட சேரலாம்.

மிதுனம்:
இவிகளுக்கு செவ்வாய் 11,6 க்கு அதிபதி .இவர் ஆறுல வர்ரது நல்லதுதான். இதனால சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது)  ஏற்படும். 11க்கு அதிபதி 6 ல வர்ரதால லாபம்ங்கறது சின்னதா ஒரு லிட்டிகேஷன்,வாக்கு வாதத்தோட வரும். உங்க மூத்த சகோதர சகோதிரியோட பிரச்சினை வரலாம்.அ அவிகளூக்கு எதுனா பிரச்சினை வரலாம். பாதம், முட்டிக்கு இடையில உள்ள பகுதில சின்ன பிரச்சினை வரலாம்.

சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 8,9க்கு அதிபதி இவருக்கு 6,11 அதிபதியோட தொடர்பு காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது) பெரிய அளவுல நடக்க வாய்ப்பு ஏற்படுது. அடுத்து சொன்ன எல்டர் ப்ரதர் சிஸ்டர் விவகாரம் கூட மேஜரா நடக்க வாய்ப்பு ஏற்படுது.

கடகம்:
இவிகளுக்கு செவ்வாய் 10,5  க்கு அதிபதி .இவர் அஞ்சுல ஒரு வகையில சூப்பர். . இதனால இதனால் செய்தொழில்ல நல்ல மாற்றம் வளர்ச்சி ஏற்படும்,பெயர் புகழ் கிடைக்கும். அதிர்ஷ்டம் கதவை தட்டும். ஆனால் வாரிசுகளுக்கு ரத்தகாயம், உங்களுக்கு சின்னதா புத்தி குழப்பம், முன்  கோபத்தால் விரோதங்கள்  ஏற்படலாம். தர்கத்துல (லாஜிக்) விளையாடுவிக. எதிரிகளாலயே லாபம் ஏற்படும்னா பார்த்துக்கங்களேன்.

சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி 7,8க்கு அதிபதி. இவருக்கு 10,5க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறதால டீன் ஏஜர்ஸுக்கு தெய்வீக காதல் ஏற்படலாம் (7+5)  வேலையில்லாதவுகளுக்கு வேலை கிடைக்கலாம், தொழில் சூடு பிடிக்கலாம் (10+8). செய்தொழில்ல மனைவியோட உதவி தேவைப்படலாம்.வாரிசுகளுக்கு கால், நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.


சிம்மம்:
இவிகளுக்கு செவ்வாய் 9,4 க்கு அதிபதி .இவர் 4 ல  வர்ரது நல்லதுதான். இதனால வீட்டு மனை வாங்கறது, வீடுகட்டறது,வாகனம் வாங்கறது, எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கறது பிதுரார்ஜித சொத்து கைக்கு கிடைக்கிறது ,சேமிப்பு கைக்கு வர்ரதுல்லாம் நடக்கலாம். அம்மாவோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகமா இருக்கும். கண்ணாலமானவுக  மாமியார் -மருமக சண்டையால சிண்டை பிச்சுக்க வேண்டி வரும்.

இவிகளுக்கு சனி 6,7 க்கு அதிபதி.இவர் 9,4க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால சொத்து மேல கடன், அப்பாவோட வாக்கு வாதம் நிகழலாம். கடன் வாங்கி பொஞ்சாதியோட தூர பிரயாணம் பண்ண வேண்டி வரலாம். முழங்கால்ல பிரச்சினை வரலாம். தாய் வீடு வாகனம் தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். கண்ணாலத்துக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கிறவுகளுக்கு தாய் அ தந்தை வழில வரன் தகையலாம். ( 7+ 4/9)

கன்னி:
இவிகளுக்கு செவ்வாய் 8,3 க்கு அதிபதி .இவர் 3 ல  வர்ரது ஒரு வகையில  நல்லதுதான். இதனால மனசுல தன்னம்பிக்கை ,  தைரியம் அதிகரிக்கும்.பிரயாணங்களால அனுகூலம் ஏற்படும் இசைத்துறையில உள்ளவுக சாதனை படைப்பாய்ங்க. அண்ணன் தம்பிகளோட விவகாரம் இருந்தா உங்க பக்கமா தீர்மானமாகும். ஆனால் இளைய சகோதரன், சகோதிரிக்கு எதுனா தீமை   நடக்கலாம். அல்லது படிப்பு, திருமணம் ,தொழில் காரணமா அவிக பிரிஞ்சு போறதும் நடக்கலாம்.

சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி  5,6 க்கு அதிபதிங்கறதால இவர் 8,3 க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால குழந்தைகளுக்கு சிரமம், அபார்ஷன், அவியளுக்கு அலைச்சல் அ அவிகளால அலைச்சல் ஏற்படலாம். அவப்பெயர் அவமானமும் கிடைக்கலாம். அதே நேரம் 6+8 காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது)  ஏற்படும்.

துலா:
இவிகளுக்கு செவ்வாய் 7,2 க்கு அதிபதி .இவர் 2 ல  வர்ரது   நல்லதுதான். இதனால மனைவியால வருவாய் கூடும், அவிகளோட நெடு நாளைய கோரிக்கையை நிறைவேத்துவிக.( பெருசா ஒன்னுமில்லிங்கண்ணா ஏதோ ஒரு வீட்டு மனை அல்லது எலக்ட்ரிக்கல் சாமான் அம்புட்டுதேங்)   கொடுத்த வாக்கை நிறைவேத்த துடிப்பிக.  அதே நேரத்துல உங்களையும் அறியாம வார்த்தைகள் சூடா வந்துரலாம். கண் சிவக்கலாம். தொண்டைல ரணம் ஏற்படலாம். குடும்பத்துல சூடான வாக்கு வாதங்கள் நடக்கலாம். டேக் கேர்

இவிகளுக்கு சனி 4,5 க்கு அதிபதி.இவர் 7,2க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால வீடு,வாகனம் விற்பனை அ வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டி வரலாம் (4+2)  .கண்ணாலமாகாதவுகளுக்கு தாய் வழியில பழைய விரோதம் உள்ள உறவுல திருமணம் தகையலாம். பரிசா,இன்ப அதிர்ச்சியா சில்லறை புரளலாம். ஒரு சிலர் தங்கள் பூர்வ ஜென்ம காதலியை சந்திக்க வேண்டி வரலாம்.

விருச்சிகம்:
இவருக்கு செவ் . 6,1க்கு அதிபதி. லக்னத்துலயே வந்து ஆட்சி பெறுகிறார். இதனால ஹெல்த் இம்ப்ரூவ் ஆகும் (லேசா உஷ்ண கோளாறு இருக்கலாம்) தன்னம்பிக்கை மிகும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். ரெம்ப நாளா பெண்டிங்ல இருந்த கடன் ஒன்னு தீர்ந்து   நிலம் அ எலக் ட்ரிக்கல் பொருள் வாங்க புதுசா கடன் வாங்க வேண்டி வரலாம். எதிரிகள் லேசா சலசலப்பு காட்டுவாய்ங்க. சாதாரணமாவே குறை கண்டே பேர் வாங்கும் புலவர் நீங்க. அந்த குணம் இப்போ கொஞ்சம் அதிகமாகலாம்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 3,4 க்கு அதிபதி. இவருக்கு 6,1க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால தாய், மற்றும் இளைய சகோதரம்  நோய்வாய்படலாம் அ தகராறு பண்ணலாம். தில்லு துரையாயிருவிங்க.

தனுசு:
இவருக்கு செவ் 5,12க்கு அதிபதி. இவரு 12 ல ஆட்சி பெறுவது நல்லதல்ல. இதனால அவமானம்,துரதிர்ஷ்டம்,புத்தி தடுமாற்றம், கோபம், மின்சாரம்,ஆயுதம் இத்யாதியால நஷ்டம் ஏற்படலாம். செலவுகள் பிச்சிக்கிட்டு போவும். ஃபேன் வைண்டிங்ல புகை வந்துர்ரது,பல்புங்க ஃப்யூஸ் போறதெல்லாம் சகஜமா நடக்கும். பரிகாரம் கட்டாயம் செய்துக்கனும். நிலம், பெரிய எலக்ட் ரிக்கல் பொருள்  விற்பனைக்கு முயற்சி பண்ண வேண்டியிருந்தா செய்யுங்க.சக்ஸஸ் ஆகும். தோஷமும் பரிகாரமாகும்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 2,3 க்கு அதிபதி. இவருக்கு  5,12க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால திடீர் பணவரவு ஏற்பட்டு , திடீர் செலவுகளுக்கு உதவலாம். சகோதரம் மூலமா அதிர்ஷ்டம் கதவை தட்டலாம்.  வாக்குவாதம் ஏற்படலாம்.கண்,வாய்,தொண்டை தொடர்பான பிரச்சினை வரலாம்.

மகரம்:
இவிகளுக்கு செவ் 4,11க்கு அதிபதி இவரு 11ல ஆட்சி பெறுவது நல்லதே. இன்னொரு மனை வாங்கறது (அடிஷ்னல்), இன்னொரு எலக்ட்ரிக்கல் பொருள் /வாகனம் வாங்கறதும் நடக்கலாம். ஜாதகத்துல பசை இருந்தா இன்னொரு வீடே கூட வாங்குவிக. பெரியம்மா, சித்தி மாதிரி தாய் வழி உறவுகள் வந்து போவாய்ங்க.அவிகளால லாபமும் ஏற்படலாம். எதிரிகளாலயே லாபம் , நன்மை ஏற்படும்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,2 க்கு அதிபதி.இவருக்கு 4,11 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால ஒரே நேரத்துல 2 விதமான யோசனை,புத்தி தோணும். டபுள் ட்யூட்டி பார்க்க வேண்டி வரலாம். சின்னதா சைட் பிசினஸுக்கு சான்ஸ் மாட்டலாம். தாய் வீடு வாகனம் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கலாம். இந்த  வகையறாவில் செலவும் ஏற்படலாம். ஒன்னுக்கு ரெண்டா பேசி வம்பை விலை கொடுத்து வாங்கலாம்.

கும்பம்:
இவிகளுக்கு செவ் 3,10க்கு அதிபதி இவரு 10ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால செய்யற தொழில்ல சகோதர சகோதிரிகளோட ஒத்துழைப்பு கிடைக்கலாம். செய் தொழிலிலான முன்னேற்றம் மனதில் தைரியத்தை கூட்டும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு குறிப்பிடத்தக்க  முன்னேற்றம் ஏற்படும். அஷ்டம சனியால ஓஞ்சு போயிருக்கிற இவிகளுக்கு இது நிச்சயமா நல்ல ரிலீஃபை கொடுக்கும். இருந்தாலும் அஷ்டம சனி சமயம் பார்த்து வேலை கொடுத்துராம இருக்க சைவமா மாறிருங்க. ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,12 க்கு அதிபதி இவருகு  3,10 க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறது அந்த அளவுக்கு நல்லதில்லை. தைரியலட்சுமி துணையிருப்பாள்.தொழில் மேல கவனம் கூடும். இளைய சகோதரத்தால செலவு ஏற்படலாம். சேல்ஸ் லைன்ல உள்ளவுகளுக்கு பெட்டரா இருக்கும். தயாரிப்பு துறையில உள்ளவுகளுக்கு விரயம் கூடும்.

மீனம்:
இவிகளுக்கு செவ் 2,9க்கு அதிபதி இவரு 9ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால சில்லறையா சேர்த்த பணம் ஒரு முதலீடா ( வீட்டு மனை/ அ எலக்ட்ரிக்கல் பொருள்) மாறும். பல காலம் நான் ஃபங்ஷனிங் ப்ராப்பர்ட்டியா இருந்தது கைக்கு வந்து செலவுக்கு உதவும். குடும்பத்தோட தீர்த்தயாத்திரை போய்வரவும் வாய்ப்பிருக்கு. தெற்கு திசை அ ஒரு முருகனோட சேத்திரத்துக்கு போய் வருவிக. அப்பாவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் அவருக்கு கொஞ்சம் கோபம் அதிகமாயிரும். ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதியும் வரலாம்.ஏற்கெனவே இருந்தா அது அதிகரிக்கலாம். எழுத்து, ப்ளாக் துறையில் உள்ளவுகளுக்கு டர்னிங் பாயிண்ட் ஏற்படும் தூர தேசத்துலருந்து சில்லறை தேறும்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 11,12க்கு அதிபதி . இவருக்கு 2,9 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால பேச்சு திறமை கை கொடுக்கும்.அப்பப்போ வேலையும் காட்டிரும். கொடுக்கல் வாங்கல் சூடு பிடிச்சாப்ல பிடிச்சு உட்கார்ந்துக்கும். அப்பாவோட உறவு மேம்பட்டாப்லயே இருந்து படக்குனு அத்வானமாயிரும்.


செவ்வாய் காரகத்வம் வகிக்கும் விசயங்கள்: ( செவ்வாயே உங்க கிட்ட பேசற மாதிரி எழுதியிருக்கேன்.)
(செவ்.அனுகூலமா இருந்தா இந்த விசயங்கள்ள லாபம் ஏற்படும். பிரதிகூலமா இருந்தா நஷ்டம் ஏற்படும்)

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

எச்சரிக்கை: 2
விருச்சிக செவ்வாயை கன்னியில் உள்ள சனி பார்வையிடுவதால் தங்களுக்கான பலனில் சனி அனுகூலமாக உள்ளார்  என்று குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் நன்மை ஏற்படும். ஒரு வேளை சனி உங்கள் ராசிக்கு பிரதி கூலம் என்று  குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் தீமை ஏற்படும். ( தன் காரகத்வங்களை சனியே கூறுவது போல் தன்னிலையில் கூறியுள்ளேன்)

சனியின் காரகத்வம்:
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.
பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
இந்த பதிவை மனசுல வச்சிக்கிட்டா அடுத்த ( அக் .17 முதல்) ஒன்னரை மாசம் பெருசா பிரச்சினையில்லாம ஓடிரும் பாஸ். எதுக்குனா நல்லது சனி செவ்வாய் சேர்க்கைங்கற என் பழம்பதிவையும் ஒரு ஓட்டு ஓட்டிட்டிங்கனா பக்கா

பி.கு: அப்பாடா ! இன்னம் ஒன்னரை மாதம் ப்ளஸ் 12 நாளைக்கு இந்த பதிவு சக்கை போடு போடும்