'>
Showing posts with label கிரகம். Show all posts
Showing posts with label கிரகம். Show all posts

Thursday, March 29, 2012

கிரக வக்ரம் : பகீர் தகவல்கள்


அண்ணே வணக்கம்ணே !
வாரத்துல 3 நாள் நாட்டு நடப்பு . 3 நாள் சோசியப்பதிவுன்னு ஒரு ஏற்பாடு செய்துக்கிட்டு ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்ரோம். சோசியத்துல சரக்கு தீர்ந்துருச்சு போல அதான் நம்ம முருகேசு ரூட்டை மாத்தறாருன்னு கூட சில பேர் அக்கப்போர் பண்ணலாம்.

அசலான மேட்டர் இன்னாடான்னா சோசியத்துல உள்ள எல்லா ஆப்சனையும் எளுதனும்னா பத்து பேரோட ஆயுள் வேணம். அட லக்ன பாவம் ஒன்னை எடுத்துக்கங்க. இங்கன சூ முதல் சுக்ரன் வரை 9 கிரகங்கள் இருந்தா ஜாதகனோட கேரக்டரு என்னவா இருக்கும்னு எளுத ஆரம்பிச்சா 9 நாள் காலி. இப்படியே மத்த 11 பாவத்துக்கும் எளுத ஆரம்பிச்சா 99 நாள் காலி.ஆக 99+9 = 108 நாள் ஒப்பேத்திரலாம்.

இதுல கிரக சேர்க்கை எளுதினா அது ஒரு தொடர். லக்னத்தை மேஷம் டு மீனம் நகர்த்தி எழுதினா ஒரு தொடர். இப்படி அனுமார் வாலா எளுதி தள்ளிக்கிட்டே போகலாம்.

நிர்வாண உண்மைகள் வலைப்பூவை ஆரம்பிச்சப்போன்னுட்டு சின்னதா ஒரு ஃப்ளாஷ் பேக்கை ஆரம்பிக்க போறேன். ஆக்சுவலா இன்னைக்கு எளுத நினைச்சது கிரக வக்ரம் பற்றி.

கிரகங்கள் வக்ரம் பெறும்போது மனித மனம் கடந்த காலத்துக்கு தாவும். கடந்த கால சம்பவங்கள் ரிப்பீட் ஆகலாம். கடந்த கால தொடர்புகள் ரிவைவ் ஆகலாம். இப்பம் சனி வக்ரமானதால நம்மை ஃப்ளாஷ் பேக்க வச்சுருக்காரோ என்னமோ?

ஃப்ளாஷ் பேக்:

நாம நிர்வாண உண்மைகள் வலைப்பூவை ஆரம்பிச்சப்போ நமக்கு தொழில் சோதிடம்ங்கற எண்ணம் சத்தியமா நமக்கில்லை. கண்டதையும் எளுதிக்கிட்டிருந்தோம். ( 2000 ,ஜூலை 31 ல ஆரம்பிச்சு 2008 நவம்பர் வரை ) ஸ்டேட்ல எலீக்சன் சூடு சாஸ்தியாயிரவே தெலுங்கு வலையுலகம் பக்கம் ஒதுங்கினோம்.அங்கன 2009 மே வரை அலப்பறை உட்டு வெற்றி கொடுத்த தெம்புல விட்டதை பிடிக்க தமிழ் பக்கம் ட்ராக் மாறினோம்.

நாம திரும்பி வந்த நேரம் நாலஞ்சு திரட்டிகள் இருக்கவே நூல் பிடிச்சாப்ல போச்சு. நாம கண்டதையும் எளுதினாலும் சனம் நாம எளுதின சோதிட கட்டுரைகளுக்கு நிறைய கவனம் கொடுத்தாய்ங்க. ஆன்லைன் ஜோதிட ஆலோசனை ஆரம்பிச்சோம்.பத்திக்கிச்சு.

ஒரு கட்டத்துல தினத்தந்திக்கு நியூஸ் அடிக்க கூட நேரமில்லாத நிலைமை ஆயிருச்சு. எதை இழந்தாவது காப்பாத்திக்க வேண்டியது சுதந்திரங்கறது நம்ம சித்தாந்தம். தந்திலருந்து கழண்டுகிட்டோம்.

போன வருசம் அனுபவஜோதிடம் டாட் காம் ஆரம்பிச்சம்.சைட்டோட பேருக்கு மரியாதை கொடுக்க சோதிடப்பதிவுகளே எளுதவேண்டியதாயிருச்சு.

சமீபத்துலதான் நமக்கு ரியலைசேஷன் வந்தது . " தத்.. நீ யாரு? உன் லட்சியம் என்ன? நீ என்ன செய்துக்கிட்டிருக்கே"ன்னு மனசாட்சி உலுக்கிருச்சு. அதனாலதேன் வாரத்துல 3 நாள் நாட்டு நடப்பு . 3 நாள் சோசியப்பதிவுன்னு ஒரு முடிவை எடுத்தம்.

நம்ம ஜாதகமே டிஃப்ரன்டான ஜாதகம். லக்னத்துல குரு உச்சம்.பத்துல ராகு. பத்துல ராகு இருந்தா இல்லீகல்னு தெரிஞ்சே தகிடுதத்தம்லாம் செய்து பணம் பார்க்கனும். லக்னத்துல குரு உச்சமா இருந்தா பழி பாவத்துக்கு அஞ்சனும்.

இது ரெண்டையும் பாலன்ஸ் பண்றது பெரிய்ய தலைவலி. இருந்தாலும் எப்படியோ வண்டி ஓடிக்கிட்டுத்தேன் இருக்கு. பாருங்க வயசு ஏற ஏற மொக்கை சாஸ்தியாயிருது.

ஆக்சுவலா ஏற்கெனவே சொன்னாப்ல இன்னைக்கு கிரக வக்ரம் பத்தி எழுதலாம்னு தேன் சின்சியரா ஆரம்பிச்சம்.ஹும் அது . எங்கெங்கயோ போயிருச்சு.

வக்ரம்னா என்ன? மெகாசீரியல்ல இதுவரைன்னு போடறானே அது மாதிரி /வீக்லி மேகசின்ல தொடர்ல நடந்த கதைன்னு போடுவானே அது மாதிரி வச்சுக்கலாம்.

முன்னோக்கி போற கதைய பின்னோக்கி ஓட்டறது .டெக்னிக்கலா சொன்னா ஒரு கிரகம் தான் கடந்து வந்த நட்சத்திர மண்டலத்தினூடாக பின்னோக்கி சஞ்சரிப்பது. இந்த பின்னோக்கிய பயணம் சில சமயம் அதே ராசிக்குள்ள மட்டும் நடக்கலாம். அல்லது அதுக்கு மிந்தின ராசிக்கும் எக்ஸ்டென்ட் ஆகலாம்.

எந்த கிரகம் எப்ப வக்ரமாகுங்கறதுக்கெல்லாம் ஐபிசி மாதிரி பக்கா ரூல்ஸ் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.

தற்சமயம் ச்சொம்மா ஒரு புரிதல் வந்தா போதும் . ஒரு பந்தியை கற்பனை செய்ங்க. 12 இலை போட்டிருக்கு. மேஷம் டு மீனம்னு 12 ராசிக்காரவுகளும் உட்கார்ந்திருக்காய்ங்க.

மொதல்ல ஒருத்தரு வந்து மேஷம் டு ரிஷபம் இலை போடறாரு. மீனம் வரை போட்டபிற்காடு அப்டியே யு டர்ன் அடிச்சு ரிட்டர்ன். அப்படி திரும்பி வரும்போது ஆருக்குனா இலை போடாம விட்டிருந்தா அவிகளுக்கு போடுவார். ( பசியில இலையை தின்னுட்டுருந்தா அது வேற கதை) அப்பாறம் போயி கொத்து கிண்ணம் கொண்டு வந்து பதார்த்தம்லாம் வைப்பாரு. யு டர்ன் - ரிட்டர்ன் போகும்போது ஆருக்குனா பதார்த்தம் விடுபட்டிருந்தா வச்சுட்டு போவாரு.

கிரகங்கள் வக்ரம் ஆகும்போதும் இதான் நடக்குது. வக்ரம்னா யுடர்ன் அடிச்சு போற சப்ளையர் மாதிரி. ஏற்கெனவே பரிமாறியிருந்தா அது கிடைக்காது. விடுபட்டிருந்தா அது கிடைக்கும்.

கிரகங்கள் சாதாரண நிலையில் சஞ்சரிக்கும் போது பலன் பெறாதவர்கள் அவை வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பலன் பெறுவாய்ங்கன்னு ஒரு விதி இருக்கு.

ஆன்லைன் நிறைய சோசியருங்க எழுதப்படாத விதி ஒன்னை வச்சிருக்காய்ங்க.அது என்னன்னா எதாவது ஒரு புஸ்தவத்தை எடுத்துக்க வேண்டியது .ஃபுல் ஸ்டாப் ,கமா கூட மாத்தாம அப்டியே வாந்தி எடுக்க வேண்டியது. அவிகளை அப்டியே சைடுல விட்டுட்டு மேட்டருக்கு போவோம்.

ஒரு கிரகம் வக்ரமாகும் போது கிடைச்ச வேலை அது வக்ர நிவர்த்தியானதும் ஃபணாலாகலாம். ஒரு கிரகம் வக்ரமாகும் போது நடந்த கண்ணாலம் அது வக்ர நிவர்த்தியான பிறவு விவாகரத்துல முடியலாம்.

ஏற்கெனவே சொன்னாப்ல கிரகம் வக்ரமாகும் போது பழைய சம்பவங்கள் ரிப்பீட் ஆறது - பழைய மனிதர்கள் திரும்பி வருவது ( உ.ம் போயஸ் தோட்டத்துக்கு சசிகலா) கூட நடக்கும்.

ஒரு கிரகம் வக்ரமாறதை இன்னம் பர்ஃபெக்டா புரிஞ்சுக்கனும்னா ஃபுல் மப்புல உள்ள மனிதனை கற்பனை பண்ணுங்க.அவன் ரெம்ப நல்லவன்னா அவனுக்குள்ள ஒளிஞ்சிருந்த "வில்லத்தனம்லாம்" வெளிய வரும். அவன் ரெம்ப கெட்டவன்னு வைங்க. மப்பு ஏறினதும் பையில உள்ளதையெல்லாம் வாரி வாரி கொடுப்பான். ( மறு நாள் மப்பு இறங்கினதும் ஆட்டோ பிடிச்சு வந்து கத்தியை கழுத்துல வச்சு வாங்கிருவான் அது வேற கதை)

முக்கியமான சமாசாரம் வக்ர கிரகம் நின்ன இடத்தை வச்சு அது சாதாரணமா நின்னிருந்தா என்ன பலனை தரனும்னு கணிச்சுக்கங்க. அது வக்ரம்ங்கறதால உங்க கணிப்புக்கு நேர் எதிரிடையான பலன் தான் நடக்கும்.

உ.ம் சிம்மத்துக்கு வாக்குல சனி. சாதாரணமா நின்னா வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கனும். அவரு வக்ரங்கறதால கறாரா பேசி காசு பணம் பார்க்கனும்.

Friday, December 2, 2011

சந்திரனும் -கன்யாகுமாரியும்


அண்ணே வணக்கம்ணே !

நேத்து ஜாதகத்தில் /கோசாரத்தில் சூரியன் சரியில்லின்னா பரிகாரத்துக்கு செய்யவேண்டிய தெய்வீக விஷயங்களை சொன்னேன். இன்னைக்கு அவசர அடிக்கு ரங்கா கணக்கா ஸ்டாலின் கைது புரளிய போட்டு ஒப்பேத்திட்டன்.

நம்ம லக்னத்துக்கு 4 ல் சனி வேலை பார்க்காரு. என்ன ஒரு அஜீஸ்மென்டுன்னா அவரு ராசிக்கு 3 ல இருக்கிறதால அவரு எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாத்தேன் இருக்கு. இன்னொரு நா விஸ்தாரமா பேசுவம்.

இப்பமாச்சும் சந்திரன் மேட்டருக்கு போயிரலாம்.

சந்திரன்னா ரெண்டேகால் நாள்ள ராசிய விட்டு ஓடற ஆயா ராம் கயாராம் தானேன்னு நினைச்சுராதிங்க. இவரு மனோகாரகன். சனங்க மனசை ஒரு நொடியில மாத்தி ஆண்டிப்பண்டாரத்த கூட ஆன்டி பின்னாடி அலைய விட்டுருவாரு. இவரு ஜலகாரகன். நம்ம பாடியில 70 சதவீதம் வாட்டர் கன்டென்டுதேன்.

பவுர்ணமி நேரத்துல நமீதா நம்ம மைண்டை அட்ராக்ட் பண்றாப்ல சந்திரன் சமுத்திர தண்ணிய " இழுப்பாரு. சதா சர்வ காலம் நம்ம பாடியில இருக்கிற வாட்டர் கன்டென்டை கவர்ச்சி பண்ணி பேயாட்டம் போட வச்சிருவாரு.( நம்ம பாடியோட வாட்டர் கன்டென்ட் , கர்ப பனிக்குட வாட்டர் கன்டென்ட், சமுத்திர நீர் - இந்த மூன்றி கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதேனு எங்கனயோ படிச்சதா ஞா)

இந்த சந்திரன் பல்பு கொடுக்கற நேரத்துல எந்த சாமிய கும்பிடனும்னா ஆயுதம் தரிக்காத அம்மன். அதுலயும் கன்யாகுமாரி அம்மன் டபுள் ஓகேன்னு சொல்லியிருந்தேன்.

மொதல்ல ஜோதிஷ சாஸ்திரத்துல பார்வதின்னு சொன்னதுக்கு உண்டான லாஜிக்கை பார்த்துட்டு சந்திரனுக்கும் கன்னியாகுமாரிக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.

அர்த்த நாரீஸ்வரரை பார்த்திருப்பிங்க. வலதுப் பகுதியில ஏதோ பந்தயத்துல தோத்த கணக்கா சிவனார் பாதி மீசையோட இருப்பாரு இடது பகுதியில ஆத்தா.

ஆரு உடம்புல பார்த்தாலும் லெஃப்ட் பார்ட் கொஞ்சம் போல வீக்கா தான் இருக்கும்.அதனாலதேன் வலது காலை எடுத்து வைச்சு வாங்கங்கறாய்ங்க போல.

சூரிய நாடி சந்திர நாடி தெரியுமா? நமக்கே ( ஆண்களுக்கு) வலது நாசியில் மூச்சு நடந்தா அது சூரிய நாடி, இடது நாசியில் நடந்தா அது சந்திர நாடி

இது ஆண் ,பெண்களை பொருத்தவரை தலை கீழா மாறும் போல. ( கை ரேகை பார்க்கிறச்ச பெண்ணுக்கு இடதை பார்க்கிறாய்ங்களேன் ஏன்) நாடி பார்க்கிற மேட்டர்ல கூட டிஃப்ரன்ஸ் இருக்கிறதா கேள்வி.(சித்த வைத்திய பார்ட்டிங்க கரீட்டா சொல்லிருவாய்ங்க வெய்ட் அண்ட் சீ)

உயிர்களுக்கெல்லாம் தந்தை சூரியன் தாய் சந்திரன் (மாதிரி) இந்த ஜேஜிங்க லிஸ்ட் படி நம்ம டாடி மிஸ்டர் ஷிவா ,மம்மி ஷிவானி ( அம்மன்)

அதனாலதேன் சூரியன் சரியில்லின்னா சிவனை - சந்திரன் சரியில்லின்னா பார்வதியை வணங்க சொல்லியிருக்காய்ங்க.

கன்னியா குமாரிக்கும் சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? சந்திரன் ஜல காரகன் -சமுத்திரத்து நீரை ஈர்க்க வல்ல கிரகம்.

நீங்க கடல்ல குளிச்சிங்கனா பாடிக்கு வெளியவும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர்.பாடிக்கு உள்ளாறவும் அதே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர் கன்டென்ட்.

அட தண்ணியில இறங்கறதால என்ன அற்புதம் நடந்துரப்போகுதுன்னு நினைப்பிங்க. தண்ணீருக்குள் பொருட்கள் எடையை இழக்கும்.

கிணத்துல தண்ணி சேர்ந்தி குளிச்சவுகளுக்கு இது பக்காவா தெரியும். பக்கெட் தண்ணிக்குள்ள இருக்கிற வரை அசால்ட்டா மேலே வரும். தண்ணிக்கு மேல வந்ததும் மொத ராத்திரியில புதுப்பொஞ்சாதி மாதிரி லந்து பண்ணும்.

உடல் லேசானா மனசும் லேசாகுமா இல்லியா? சாதா தண்ணிக்கும் சொட்டு நீலம் போட்ட தண்ணிக்கும் டிஃப்ரன்ஸ் இருக்கும்ணே. ( ஐ மீன் கடல் நீர்)

இதென்ன கடல் புராணம்னு கேப்பிக சொல்றேன். கன்னியாகுமாரி அம்மன் எங்கன இருக்கா? கன்யாகுமாரியில். அங்கன என்ன இருக்கு கடல் இருக்கு..

சந்திரன் வேகமான வளர்ச்சிக்கு (தளர்ச்சிக்கு) காரகர். கன்யாகுமாரி அம்மன் பாவாடை சட்டையில இருக்கா. அந்த வயசு பெண்கள் எம்மாம் சீக்கிரம் வளர்ந்துருவாய்ங்கனு நமக்கு தெரியும். அதுலயும் சந்திரன் ஜாஜ்வல்யமா ஒளி வீசும் பவுர்ணமி இரவில் கடல்ல ஒரு குளியல் போட்டுட்டு ஆத்தாவை பார்த்து ஹாய் சொல்ட்டு அவளோட மூக்குத்தி அழகுல ஒரு கணம் கிறங்கி - மயங்கி நின்னா மனம் நிற்கும். இதைத்தானே எல்லா தியானிகளும் ட்ரை பண்ணிட்டிருக்காய்ங்க.

நாளைக்கு? செவ்வாய் vs சுப்பிரமணியரை பற்றி பார்ப்போம்.உடுங்க ஜூட்

Friday, March 11, 2011

கிரக தோஷங்கள்: கொடுத்தா போகும்.. வாங்கினா கூடும் « Anubavajothidam.com

கிரகதோஷம்னா குறிப்பிட்ட கிரகம் வீக்கா இருக்குனு அர்த்தம். கிரகம் வீக்கா இருந்தா அதனோட காரகத்வத்துல எல்லாம் நமக்கு நஷ்டம் வரும்.

இதை தவிர்க்க நாம அந்த பேட்டையிலயே என்டர் ஆகக்கூடாது. விவரம் தெரியாம ஆல்ரெடி அந்த ஃபீல்டுல மாட்டிக்கிட்டிங்க. வெளிய வந்துதானே ஆகனும்.

அப்ப அந்த ஃபீல்டுல எதிர்படக்கூடிய நஷ்டத்தை குறைக்க /அவாய்ட் பண்ண குறிப்பிட்ட கிரக காரகத்வம் கொண்ட பொருளை பிறருக்கு கொடுக்கனும். ( அல்லாத்தையும் எங்களுக்கே கொடுன்னு அவாள் சொல்வா. அதை நம்பாதிங்க)

எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரக காரகத்வம் கொண்ட குலத்தினருக்கு, தொழிலினருக்கு கொடுக்கலாம். ஸ்பீட் போஸ்ட் கணக்கா கிரகத்துக்கு மெசேஜ் போயிரும். வேலை நடக்கும். நான் கியாரண்டி. உதாரணமா சனி வீக்குன்னா தலித்துக்கு தரலாம், புதன் வீக்குன்னா ஒரு வைசியருக்கு தரலாம்.

சனி சரியில்லைன்னா ஐரன் ஸ்டில் ஆயில் தரலாம். புதன் சரியில்லின்னா ஸ்டேஷ்னரி,புக்ஸ்,பென் ட்ரைவ், கார்ட் ரீடர் தரலாம். தொடர்ந்து படிக்க

Sunday, March 6, 2011

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

தலைப்பை பார்த்ததுமே உங்களுக்கு விவேக் காமெடி ஞா வந்திருக்கும். ஒவ்வொரு ட்ராஜடியும் ஒரு காமெடிய ஞா படுத்தியே தீரும். சின்ன வயசுல என் ஃப்ரெண்டு ஒருத்தன் அவன் அப்பனை பத்தி பேசும் போது " தே.பையன் ! இந்த தீபாவளிக்கு ஒரு ரோல் கேப் வாங்கிக் கொடுத்துட்டு அடுத்த தீபாவளி வரை வெடிக்கசொல்றேன் மச்சான்" என்பான்.கேட்கிறவுகளுக்கு காமெடி.அனுபவிச்சவனுக்கு ட்ராஜடி. ஆக நம்ம எல்லாரிலும் ஒரு வித சாடிசம் இருக்கு.

ஓகே மேட்டருக்கு வரேன். இந்த வெப் சைட்டை க்ரியேட் பண்ணிக்கொடுத்தவரு ஜோதிஷம் தவிர வேறெதையும் இதுல கொண்டுவராதிங்கன்னு சஜஸ்ட் பண்ணியிருக்காரு. அதனால எப்படியோ இருந்த ஒருத்தன் எப்படியோ ஆக அவன் ஜாதகம் எந்த அளவுக்கு காரணம்னும் ஒரு ஓரமா பார்த்துருவம்.

(பதிவை தொடர்ந்து படிக்க ஹி ஹி..இங்கே அழுத்துங்க)

Saturday, March 5, 2011

உங்க "ஆளு" எந்த கிரகம்?


உங்க மனைவி/காதலி/பட்லின்னு சொல்லிட்டே போனா தலைப்பே பதிவு மாதிரி ஆயிரும். அதனால சுருக்கமா உங்க "ஆளு"ன்னுட்டன்.

கடந்த பதிவுல எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்னு சொன்னேன் இல்லியா. பெட்டர் ஹாஃப்னு சொல்றவுக எந்த கிரகத்தோட ஆதிக்கத்துல இருக்காய்ங்கனு தெரிஞ்சிக்கிட்டா கொஞ்சம் வசதியா இருக்குமே. அதனாலதான் இந்த பதிவு.

அவிக எந்த கிரகத்தோட ஆளுமையில இருக்காய்ங்கங்கறது முக்கியமில்லை. அந்த கிரகம் உங்க ஜாதகத்துல நல்ல இடத்துல அமைஞ்சிருக்கா? பாருங்க அதான் முக்கியம். மேலும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமையில் உள்ள பெண் எப்படி இருப்பான்னு இந்த பதிவுல சொல்லியிருக்கன். இது பெண்களுக்கு மட்டுமில்லை. ஆண்களுக்கும் பொருந்தும்.

இந்த பதிவில் உள்ள குண நலன்களை பொருத்து எந்த கிரகத்தின் ஆதிகத்துல இருக்கிங்கனு தெரிஞ்சிக்கிடலாம். இப்ப ரெண்டு கிரகத்துக்கும் ஒத்துவருமானு பார்த்துக்கிடுங்க.அடுத்தது உங்க ராசி எது? அந்த ராசில உங்க ஆளோட கிரகத்துக்கு இருக்கக்கூடிய பவர் என்னனு பார்த்துக்கிடுங்க.

உதாரணமா உங்காளு சூரிய பெண் என்று வையுங்கள். உங்க ராசி மேஷம் என்று வையுங்கள். அப்போ சூரியன் உங்க ராசியில உச்சம் பெறுவதால் அவிக கமாண்ட் உங்க மேல அதிகமா இருக்கும்னு அர்த்தம்.

அது சரி ராசிகளில் கிரகங்களின் பலத்தை எப்படி தெரிஞ்சிக்கிறதாம்னு கேப்பிக. இங்கே அழுத்தி அங்கே வந்தா சொல்றேன்.



Thursday, March 3, 2011

எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளானட்


இதென்னா இது புது கூத்துன்னு நினைச்சிராதிங்க. இது நாள் வரை நாம பேசிக்கிட்டதென்ன மன்சன் ..மன்சனாதான் கீறான். கிரகங்கள் அவனை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.

ஆனா இன்னைக்கு சொல்றேன் ஒவ்வொரு மனிதனும் ஒரு கிரகம்.எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட் மேன் இன்னிட்டு சொம்மா பேச்சுக்கு சொன்னாலும் வுமன் கூட சேர்த்துத்தேன்.

எப்டி எப்டினு கேப்பிக சொல்றேன்.

ஒவ்வொரு ஜாதகத்துலயும் 9 கிரகம் இருக்கு. அதுல எந்தெந்த கிரகம் வலிமையோட இருக்குன்னு பார்க்கனும். ( பொதுவிதிப்படியோ அ சிறப்பு விதிப்படியோ)

அந்த வலிமையான கிரகங்கள்ள எந்த கிரகம் லக்னத்தோட , அல்லது அஞ்சாவது இடத்தோட கனெக்ட் ஆகியிருக்குதுன்னு பார்க்கனும். அப்ப அந்த மனிதன் அந்த கிரகமாவே மாறிர்ரான். லக்னங்கறது அவனோட உடல்,மனம் ரெண்டையும் காட்டும் இடம். குறிப்பிட்ட கிரகம் அவன் லக்னத்தோட கான்டாக்ட் ஆகியிருக்கும்போது அந்த கிரகத்தோட அதிர்வுகளை அவன் பாடி நல்லாவே க்ராஸ்ப் பண்ணிக்கும். அந்த கிரகம் காரகத்வம் வகிக்கும் எல்லா விஷயத்து மேலயும் அவனுக்கு கமாண்ட் வந்துரும்.

அதே போல அஞ்சாமிடங்கறது அவனோட பூர்வ புண்ணியம் -புத்திய காட்டும் இடம். இந்த இடத்தோட அந்த குறிப்பிட்ட வலிமையான கிரகம் கான்டாக்ட் ஆகும்போது இவன் புத்தி அந்த கிரகம் தொடர்பான மேட்டருங்களை பக்குனு பிடிச்சுக்குது. இவன் அந்த மேட்டர்ஸ்ல ஒரு ஆத்தன்டிக்கேட்டட் பர்சனாயிர்ரான்.

சுத்துவட்டாரத்துல எவனுக்கெல்லாம் அந்த கிரகம் நல்ல நிலையில இருக்கோ அவனுக்கெல்லாம் இவனால நல்லது நடக்கும். எவனுக்கெல்லாம் அந்த கிரகம் கெட்ட நிலையில இருக்கோ அவனுக்கெல்லாம் இவனால கெட்டது நடக்கும்.

இப்படியாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கிரகமா மாறிர்ரான். உதாரணத்துக்கு என் ஜாதகத்தையே எடுத்துக்குவம். என் ஜாதகத்துல லக்னம் கடகமாகி அங்கன குரு உச்சமாயிருக்காரு அஞ்சையும் பார்க்கிறாரு. (இதை நான் 116 தடவையா சொல்றேன்னு ஆருனா கணக்கு வச்சிருந்தா அவிக ஜாதகத்துல புதன் உச்சம்னு அர்த்தம்)

ஆருக்கெல்லாம் ஜாதகத்துல / அல்லது கோசாரத்துல குரு அனுகூலமா இருக்காரோ அ 1 -5-7 ல டச் ஆறாரோ அவிக தான் நம்மை கான்டாக்ட் பண்றாய்ங்க.. புதுசா ஏழை ஏன் சேர்த்தேன்னா 7ங்கறது ஃப்ரண்டை கூட காட்டுது.

தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க

Tuesday, January 4, 2011

அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை ஏன்? எப்படி?

இவருக்கு அந்தணன் என்ற புனைப்பெயரும் உண்டு.அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம் என்பது ஜோதிட மொழி.

இது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னா ..


குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம். ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும்.

யுவார் ஓகே. ஆனால் உங்களை சுத்தி உள்ளவுகளும் ஆரோக்கியமான உடலும்,மனசும் பெற்றிருக்கனுமில்லையா? அப்படி இல்லேன்னா என்ன ஆகும்?

உடல்,மன ஆரோக்கியம் காரணமா நீங்க உற்சாகம், எனர்ஜியோட இருப்பிங்க. அதெல்லாம் சேர்ந்து உங்களை சந்தோஷமா இருக்க வைக்கும்.

ஸ்தூல நிலை வேறயா இருந்தாலும் சந்தோஷமா இருப்பிக.

அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக .அதைப்பார்த்து நாலு பேர் உங்களை நக்கலடிக்கலாம். ஏன் உங்களுக்கு தீமை கூட செய்யலாம் (சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான்)

குரு தனியா நின்னா என்ன ஆயிரும்னு கேப்பிக சொல்றேன். குருன்னா டூ குட்.( Too good/ do good) குருவோட இன்னம் ஏதோ ஒரு கிரகம் சேர்ந்தா இதை கட்டுப்படுத்தும். இல்லாட்டி அரண்மனை வாசக்காலை வெட்டிக்கொடுத்த கர்ணன் கதையா போயிரும்.

தர்மம் பண்ணியே போண்டியான குடும்பம் ஊருக்கு நாலிருக்குல்லியா? நல்லதை பண்றது ஓகே.ஆனால் எதுக்காக பண்றோம்னு ஒரு கேள்வி வருமில்லியா?

கூட வேற ஏதாச்சும் கிரகமிருந்தா அந்த கிரக காரகத்வத்துக்குட்பட்ட ஏதோ ஒரு நோக்கத்துக்காக பண்றான்னு ஜனம் அஜீஸ் பண்ணிப்பாங்க.

அப்படியில்லாம குரு தனிய நின்னா நல்லது பண்றதுக்காகவே நல்லது பண்ண ஆரம்பிச்சுருவம்.

இதை ஜீரணிச்சுக்க முடியாத சனம் உங்க நற்செயலுக்கு விபரீதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து கதை கட்ட ஆரம்பிச்சுரும்.

உதாரணமா நீங்க ஒரு ஏழக்குடும்பத்துக்கு உதவறிங்கனு வைங்க. அந்த வீட்டு பெண்ணை கணக்கு பண்ணத்தான் பண்றிங்கனு கதை கட்டிருவாய்ங்க.

கோவிலை புதுப்பிக்க இறங்கினிங்கனு வைங்க. மூலவர் அடியில புதையல் இருக்குப்பா அதை குறிவச்சுத்தான் இந்த வேலைல இறங்கியிருக்கானு சொல்லிருவாங்க.

குரு தனிய நின்னா வர்ர பிரச்சினை இதான்.


மேலும் குரு ஞாபகசக்தியை,திட்டமிடும் திறமையை,பொறுமைய தரக்கூடிய கிரகம்.வெற்றிக்கு இதுகள விட்டா வேற வழி ஏது? குரு உச்சம் பெற்றதால குரு காரகத்வம் கொண்ட எல்லா மேட்டருமே நல்லா ஒர்க் அவுட் ஆகும் .(பார்க்க: இணைப்பு நெம்பர் டூ )மனுசன் வாழ்க்கையில உசர உசர தனிமைப்பட்டு போயிருவான்.

இதுல குரு வேற தனிய இருந்தா நீங்க தனிமையை விரும்ப ஆரம்பிச்சுருவிங்க. சிங்கம் தனித்திருக்க சிறு நரிகள் எல்லாம் கூட்டா சதி பண்ண ஆரம்பிச்சுரும்.

குருங்கறது பிராமண கிரகம். பிராமணன் தனித்து நின்னு எதையும் கழட்ட முடியாது. அவனுக்கு அரசாங்கத்தோட,சமூகத்தோட ,மக்களோட உதவி தேவை. குரு தனியே நின்னா ஜாதகர் பாட்டுக்கு சோலோவோ தான் செய்ய நினைச்சதை செய்துக்கிட்டு போய்க்கினே இருப்பார்.

அப்ப சனம் தங்களோட கற்பனை சிறகை படபடனு அடிச்சு வதந்தீகளை கிளப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. இதைத்தான் நிந்தனைங்கறது.

Tuesday, November 2, 2010

இந்த பதிவின் மதிப்பும் ரூ 100 தேன்


நவகிரக காரகத்வம் + பரிகாரங்கள்
இதெல்லாம் 1989 முதல்  நாளிதுவரை   நான் சேகரித்தவை. சில நானே கண்டுகொண்டவை (ஜஸ்ட் அனுபவத்தால் ஏற்பட்ட புரிதல்.) இதில் பல அம்சங்கள் பொதுவானவை. தலைமுறை தலைமுறையாக செலாவணியில் உள்ளவை. ஆனால் சில அம்சங்கள் சாஸ்திர விரோதமாக உள்ளதாக சனம் சொல்லலாம். ஆனால் என் அனுபவத்துல இதெல்லாம் சத்தியம்னு டிசைட் ஆயிருச்சு. அதனால ஐ டோன்ட் கேர்.

எல்லா வீட்லயும் ப்ராண்டட் அரிசி,ப்ராண்டட் பருப்புத்தான் வாங்குவாய்ங்க. சிலர் வீட்ல பார்த்தாலே நாக்குல தண்ணி வரும். சில வீட்ல வாய்ல வச்சதும் கண்ல தண்ணி வரும். அதேமாதிரி தான் ஜோதிஷ விதிகளும்.
அவிக விதிகளை நிர்ணயிச்சப்ப இருந்த பல அம்சங்கள், காரணிகள் கோவிந்தா ஆயிருச்சு. உ.ம் விவசாயம், கூட்டு குடும்பம், பால்ய திருமணம், வத வதனு பெத்துப்போட்டுர்ரது, விதவைகள் வதை இப்படி எத்தனையோ அம்சங்கள் காலாவதி ஆயிருச்சு.

இதுக்கேத்தாப்ல விதிகளை மாத்திக்கிற தில்லு நம்மாளுங்களுக்கு இருக்கோ இல்லையோ எனக்கு ஆத்தா கொடுத்தா மாத்திக்கிட்டேன்.  நான் எந்த வஞ்சனையும் பண்ணலை. எதையும் ஒளிக்கலை இந்த நிமிஷம் வரை நான் சேகரிச்ச,செரிச்சுக்கிட்ட மேட்டர் எல்லாத்தயும் பந்தி வச்சுட்டேன்.
இதையெல்லாம் படிச்சுட்டு ஆகா நாமளும் ஜோசியராயிட்டம்னு நினைச்சா நாறிருவிங்க. ஆயிரம் பேரை கொன்னவன் அரை வைத்தியம்பாய்ங்களே அந்த மாதிரி ஆயிரம் ஜாதகத்துக்கு தப்பான பலனை சொல்லி, அது ஏன் தப்பாபோச்சுன்னு ரோசிக்க ரோசிக்கத்தான் உண்மையான ஜோதிடராக முடியும்.

ஒரே ஒரு மேட்டரை தொட்டுக்காட்டிட்டு சப்ஜெக்டை அள்ளி விட்டுர்ரேண்ணா. ஜோதிஷ விதிகளை உருவாக்கினவுக எலக்ட் ரிக் பல்பை கண்டு பிடிச்ச தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி . நாட்ல உள்ள ஜோசியரெல்லாம் எலக்ட் ரிக்கல் கூட்ஸ் கடைக்காரவுக மாதிரி. ச்சொம்மா சரக்கை தள்ளிவிட்டு அள்ளிட்டு இருக்காய்ங்க.

நானெல்லாம் ஸ்க்ரூ லூஸு கேசு. ச்சொம்மா உழப்பிக்கிட்டே இருப்பன். அந்த உழப்பல் மொதல்ல குழப்பினாலும் பின்னொரு சந்தர்ப்பத்துல விளக்கத்தை கொடுத்தது.
இப்போ ஜஸ்ட் ஒரு சின்ன உதாரணம் பார்த்துருவம்.
ஒரு கார் வாங்கறிங்க. அதனோட காரகத்வம் எந்த கிரகத்துக்குரியதுனு கேட்டா (சப்ஜெக்ட்ல ஆர்வம் உள்ளவுக) சுக்கிரன்னு சொல்லிருவிக. ஆனால் அந்த காரோட உபயோகத்தை பொருத்து காரகம் மாறிப்போவுது சாரே.

லோக்கல்ல சுத்த வாங்கியிருந்தா அது சூரிய சம்பந்தப்பட்டது, திடீர் பயணங்களுக்கு மட்டும்னா அது சந்திர சம்பந்தப்பட்டது, வாடகைக்கு விடன்னா அது சுக்கிரன் & புதன் சம்பந்தப்பட்டது.
செகண்ட்ஸ்ல வாங்கியிருந்தா அது சனி சம்பந்தம். எவனையாச்சும் போட்டுத்தள்ளவோ, ரியல் எஸ்டேட் போன்ற செவ் காரகம் கொண்ட தொழிலுக்காகவோ வாங்கியிருந்தா செவ் சம்பந்தம். க்டத்தலுக்கு வாங்கினா ராகு சம்பந்தம், அரசியலுக்கு வாங்கியிருந்தா குரு சம்பந்தம், சன்யாசி பின்னாலயோ, வெளி நாட்டுக்காரன் பின்னாடியோ சுத்த வாங்கியிருந்தா கேது சம்பந்தம். இப்படி அனலைஸ் பண்ண தெரிஞ்சுக்கனும்.

பொம்பளைங்க சமையல்ல காரம் சாஸ்தியாயிட்டா தக்காளி,எண்ணெய்,உப்புனு போட்டு அஜீஸ் பண்ணுவாய்ங்களே அதை மாதிரி . மனசுலாயி!
இப்போ மேட்டருக்கு போயிருவம்

(கிரகங்களே  தங்களொட காரகத்வம் பத்தி உங்களிடம் பேசுவது போல் தன்னிலையில் எழுதியுள்ளேன் இந்த பதிவின் இரண்டாம் பாகத்தில் நான் தந்துள்ள பரிகாரங்களில் பாதிக்கு மேல் என் கண்டுபிடிப்புகள் . நவீனபரிகாரங்கள்னு பேர் வச்சிருக்கன். இதெல்லாம் ஏற்கெனவே என்னுதுதானு டிக்ளேர் ஆயிருச்சு. ஆதிகாலத்துல ஆன்மீகம் அரைகுறையா போட, நிலாச்சாரல் டாட்காம் வெளியிட, ஜோதிட பூமி தொடரே வெளியிட  அரைச்ச மாவுதான். ஏதோ சொந்த பசிக்கு ஒன்னு ரெண்டு சப்பாத்தி தட்டி சாப்பிடுங்க பரவால்லை. ஹோட்டல் கீட்டல் திறந்துராதிங்க பாஸ். காப்பிரைட் ஆக்ட் சட்டம் பாயும் )

1.சூரியன் ஸ்பீக்கிங்:
மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா- பகல்ல பிறந்தவுகளுக்கு தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டி, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள்,பயன் கருதா பொது நலப்பணிகள், 
இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.
பரிகாரங்கள்:
1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
2.சந்திரன் ஸ்பீக்கிங்:
மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.
வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், மதர்லி ஃபிசிக் கொண்ட பெண்கள் இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள், நண்பர்களுடனேயே மோதுதல்,எதிரிகளுடன் நட்பு கொள்ளுதல்  இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி.
பரிகாரங்கள்1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.(தொடரும்)
3. செவ்வாய் ஸ்பீக்கிங்:
மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.
பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.(தொடரும்)
4. ராகு ஸ்பீக்கிங்:
மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே.
பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
5.குரு ஸ்பீக்கிங்:
மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.
 நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!
பரிகாரங்கள்:
1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.
6. சனி ஸ்பீக்கிங்:
மொதல்ல என் காரக்த்வத்தை பார்க்கலாம்.
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.
பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
7. புதன் ஸ்பீக்கிங்:
மொதல்ல என் காரகத்வத்தை பார்த்துரலாம்.
புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.
பரிகாரங்கள்:
1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.(தொடரும்)
8. கேது ஸ்பீக்கிங்:
 நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.
பரிகாரம்:
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
9. சுக்கிரன் ஸ்பீக்கிங்:
வசதியான வீடு , வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றிற்கும் நானே காரகன். தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே.  கலா ரசனை,கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸ், கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்  ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டி எல்லாத்துக்கும் தான் நான் அதிபதி.
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.