பால்ய சினேகிதன் ஒருத்தன் (சித்தூருதேன்) குடும்பம் திருச்சில செட்டில் ஆனதால திருச்சி வாசியாயிட்டான்.சம்மருக்கு சித்தூர் வந்தா நம்ம மாடியறையிலதான் கேம்ப். ரெம்ப ஜாலி டைப்பு. சுய இன்பத்தை பற்றி நமக்கிருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கின புண்ணியவான். ஒரு நாள் தன் இயல்புக்கு மாறா தன் சோகத்தை பகிர்ந்துக்கிட்டான்.
"வெள்ளை ! ( நம்ம நிக் நேம்) திருச்சி போனா ஆந்திராகொல்ட்டிங்கறான்.ஆந்திராபக்கம் போனா அரவா நா கொடுக்குங்கறான் நான் யார்ரா?"
ஏ.கு இதே உணர்வை ரஜினி கூட வெளிப்படுத்தினதா ஞா. தெலுங்கு ப்ளாக்ல ஒரு தாட்டி நாம போட்ட அரசியல் பதிவுக்கு கமெண்ட் போட்ட அனானி அலக்கை " டேய் சாம்பார் ! ( தமிழாளுங்களுக்கு இந்தப்பக்கம் அதான் பேரு) ஆந்திர அரசியலை பத்தி பேசாதே"ன்னூருச்சு.
அதை நம்ம விரோதிகள்ளாம் கப்புனு பிடிச்சுக்கிட்டு சாம்பாருன்னு விளிச்சே கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டானுவ. இந்த வார்த்தையோட ரெப்புடேஷனை எக்ஸ்ப்ளாய்ட் பண்றது்க்கு சாம்பார்காடுன்னுட்டு ஒரு புதிய ப்ளாகையே ஆரம்பிச்சுட்டம் அது வேற கதை.
ஆமாம் எதுக்கு இத்தனாம் பெரிய மொக்கைனு கேப்பிக சொல்றேன். இன்னைக்கு மௌனிசார் - மற்றும் கலைஞரை பத்தி நாம போடப்போற பதிவு இப்படி ஒரு கமென்டை வரவச்சுருமோன்னு சம்ஸயம்.
கலைஞர் டிவில அவரோட பேச்சு,கல்கியில மௌனியோட ஓ பக்கம் படிச்ச எஃபெக்ட்ல இந்த பதிவை போடறேன்.
திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்துல சவால் விடுகிறேன்னு ஆரம்பிச்ச கலைஞர் படக்குனு பம்மி சவால்ங்கறது ஆணுக்கு ஆண் விடறதுன்னு சைடு வாங்கிட்டாரு. பாவம் நெஜமாலுமே கலைஞர் இந்தி படிக்கலைபோலும். சவால்னா கேள்வின்னு அருத்தம். வயசான காலத்துல ஜெயில் வாசல்ல எல்லாம் எங்கனுருந்து தர்ணா பண்றதுன்னு பதுங்கிட்டாரு போல.
கலைஞர் சென்னை அறிவாலயத்துக்கான நிலத்தை வாங்கினப்ப 10 உரிமையாளர்கள்ள ஒருத்தரை மட்டும் சென்னைக்கு அழைத்து மிரட்டி எழுதி வாங்கிட்டதா அம்மா குற்றம் சாட்டினாய்ங்களாம். அதுக்கு தாத்தா கவுண்டர் கொடுத்தாரு (சாதியில்லிங்கணா) .
பத்து பேரும் கை.எ போட்டிருக்காய்ங்கனு பத்திரத்தை காட்டினாரு ( ஜிராக்ஸுதேன்) . நிலம் திமுக அறக்கட்டளை பேர்ல வாங்கப்பட்டது. கட்டளையில எம்.ஜி.ஆரும் ஒரு உறுப்பினர்னு எடுத்து விட்டாரு.
உரிமையாளர்கள்ள எத்தீனி பேர் கை.எ போட்டாய்ங்கங்கறது தாத்தாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான பிரச்சினை. ஒருத்தரை மிரட்ட முடிஞ்சவுகளுக்கு பாக்கி 9 பேரை தூக்கிட்டு போயி மிரட்ட எத்தீனி தேசாலம் ஆகும்?
அறக்கட்டளையில எம்.ஜி.ஆர் உறுப்பினரா இருந்தா என்ன அவரோட தாத்தா இருந்தா என்ன? மேலும் பொருளாளரா இருந்த வாத்யாரு "கணக்கு "கேட்டுத்தானே வெளிய வந்தாரு.
இதெல்லாம் ஒரு பக்கம். அசலான மேட்டருக்கு வரேன். மேடைப்பேச்சில் இங்கனயும் போலித்தனம் இருக்கு. காங்கிரஸ் காரவுக (அதிலயும் சொந்த செல்வாக்கில்லாதவுக) இந்திரா ,ராஜீவ்,சோனியா பேரை சொல்லும் போது உ.வ படுவாய்ங்க.சந்திரபாபு தேர்தல் நேரத்துல மட்டும் என்.டிஆர் பேரை சொல்வாரு (ஆனால் அவர் குரல்ல உணர்ச்சியே இருக்காது) . ஜகன் பிளாட்பாரத்துல லேகியம் விக்கிறவன் மாடுலேஷன்ல ஒய்.எஸ்.ஆர் பேரை சொல்வாரு. அம்புட்டுதேன்.
ஆனால் திருச்சி கலைஞர் பேச்சுல பேச்சு நெடுக தியாகம்,இனம்,மொழி,தமிழர்,திராவிடர், பம்பாடு ,கலாச்சாரம்னு ஏகப்பட்ட ஜல்லி.
கலைஞர் கைக்கு அதிகாரம் வர்ரதுக்கு மிந்தி அவர் பேச்சுல ஓரளவு உணமை இருந்திருக்கலாம். ஆனால் இத்தீனி தபா சி.எம்மா இருந்துட்டு கம்பெனி வாசல்ல கூட்டம் போட்ட தொழிற்சங்க தலைவரு கணக்கா பேசறதை புரிஞ்சிக்கிட முடியலிங்கண்ணா.
தாளி .. அவர் பேச்சுல ஒவ்வொரு வார்த்தையும் பொய் -ஒவ்வொரு எழுத்தும் பொய். பொய்யை தவிர வேறில்லை.
இந்த போலியான, நாடகத்தனமான பேச்சுக்கு அப்பப்போ கூட்டத்துல இருந்து ஆரவாரம் வேற. தமிழர்களோட மூளை பொய்க்கு இந்த அளவுக்கு பழகிப்போச்சு போல.
இன்னைக்கும் இந்த கையறு நிலையிலயும் பொய்யும்,போலித்தனமும் தொடருதுன்னா ஆரவாரம் செய்தவுகளை போலவே கலைஞருக்கும் பொய் பழகிப்போச்சு போல.
இப்பத்துக்கும் ஒன்னம் குடிமுழுகிப்போகலை. உடனடியா பொதுக்குழுவை கூட்டி ரகசிய வாக்குப்பதிவு நடத்தி ஸ்டாலினா அழகிரியான்னு முடிவு பண்ணிரலாம். ( என் கவலை என்னன்னா ஸ்டாலின் கூட ஏறக்குறைய கலைஞர் மாதிரியேதான் பேசினாரு - எனவே பொதுக்குழுவுல ஸ்டாலின் மகனா (மருமகன்?) அழகிரி மகனான்னு முடிவு பண்ணிட்டாலும் பெட்டர்)
தாத்தா பேசாம ( அண்டர்லைன்) வீட்டோட இருந்துக்கறது நல்லது. கட்சி இப்பயாச்சும் யதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டு - உண்மைய உணர்ந்து உண்மைய பேச ஆரம்பிக்கனும். யார் மேல எல்லாம் வழக்குகள் பாஞ்சிருக்கோ அவிகளையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணிட்டு ( வழக்கறிஞர் அணி சட்ட உதவி தரட்டும் அது வேற கதை) இனிமேலாச்சும் உண்மையான மக்கள் பிரச்சினையை கையில் எடுக்கனும்.
இல்லாட்டி திமுகவை யாராலும் அழிக்க முடியாது கலைஞரை தவிரங்கற விமர்சனம் நெஜமாயிரும். மேற்படி கூட்டத்துல ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்க கலைஞரும் -அவர் வாயும் -உதடுகளும் பட்ட பாடிருக்கே. எனக்கே வலிச்சது. அவற்றின் போக்கு மலச்சிக்கல் காரன் கழிவறையில முக்கற மாதிரியே பட்டது. தாத்தா போதும்.ரெஸ்ட் எடுங்க. அதான் பெஸ்ட். கு.ப உங்க கடந்த கால சாதனைகளை நினைச்சுபார்த்து ஆறுதல் அடையறோம்.
( நம்ம மௌனி சாரு சின்னதா புதுசா ஒரு அரசியலமைப்பு சட்டத்தையே கல்கியில எழுத முயற்சி பண்ணியிருக்காரு. அதுல உள்ள ஓட்டைகளை -அதன் பின் ஒளிந்திருக்கும் ஹிடன் அஜெண்டாவை நாளைக்கு கிழிக்கிறேன்)
ஆருப்பா " ஆந்திரா கொட்டிக்கு தமிழக அரசியலை பற்றி பேச என்ன தகுதி" ன்னு கமெண்ட் போட்டுருங்க. ஒரு குறை தீந்துரும்.
Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts
Tuesday, October 11, 2011
Monday, April 11, 2011
2 வருசத்துக்கப்பாறம் அரசியலுக்கு : ரஜினி தகவல்
2 வருசத்துக்கப்பாறம் அரசியலுக்கு : ரஜினி தகவல்
தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரியை வீட்டுக்கு அழைச்சு பேசிட்டிருந்தப்ப ரஜினிய அவரு கூப்டாராம் ( வேற எதுக்கு? அரசியலுக்குத்தேன்) அப்ப ரஜினி அய்யா ஒடைச்சு சொன்னாராம். சினிமால இருந்துக்கிட்டு அரசியலுக்கு வரமாட்டேன். என் கடைசி படத்தை முடிச்ச பிறவு 2 வருஷம் கழிச்சு வருவேன்னாராம்.
அடங்கொய்யால நீ வா .. வராம போ. ஆனால் இந்த மேட்டரை ஷேர் பண்ணிக்க செலக்ட் பண்ண மன்சனை வச்சே உன் ரூட்டு எப்டினு கணக்கு போட்டுருவம்.
கலைஞரை ஆஹா ஓஹோனு புகழ்ந்ததையெல்லாம் கலைஞர் டிவில போட்டு தாளிக்கிறாய்ங்க. கண்டுக்கலை. ஸ்டாலின் வந்தா சால்வை போடற. யாரோ பாய் வந்தா விஷ் பண்றே. கலைஞர் டிவில பா.ஜ.க தலைவருங்க பேட்டியெல்லாம் வருதுங்கண்ணா..
அப்போ சோனியா கை கொடுக்கப்போறது நெஜம் தானா? தாத்தாவுக்கு மூக்குல வேர்த்துதான் உறவுக்கு கை கொடுக்க ஆரம்பிச்சிட்டாரா?
ரஜினிய நேரடியா சேர்த்துக்கிட்டா லொள்ளு ( ஸ்டாலினுக்கு பிரச்சினையாயிருமே) அதனால பா.ஜ.க வுல வுட்டு ஆட்ட சொல்லலாம்னு கணக்கா..
மண்டை காயுதுப்பா..
செய்தி உபயம் : சாட்சி தெலுங்கு தினசரி
தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரியை வீட்டுக்கு அழைச்சு பேசிட்டிருந்தப்ப ரஜினிய அவரு கூப்டாராம் ( வேற எதுக்கு? அரசியலுக்குத்தேன்) அப்ப ரஜினி அய்யா ஒடைச்சு சொன்னாராம். சினிமால இருந்துக்கிட்டு அரசியலுக்கு வரமாட்டேன். என் கடைசி படத்தை முடிச்ச பிறவு 2 வருஷம் கழிச்சு வருவேன்னாராம்.
அடங்கொய்யால நீ வா .. வராம போ. ஆனால் இந்த மேட்டரை ஷேர் பண்ணிக்க செலக்ட் பண்ண மன்சனை வச்சே உன் ரூட்டு எப்டினு கணக்கு போட்டுருவம்.
கலைஞரை ஆஹா ஓஹோனு புகழ்ந்ததையெல்லாம் கலைஞர் டிவில போட்டு தாளிக்கிறாய்ங்க. கண்டுக்கலை. ஸ்டாலின் வந்தா சால்வை போடற. யாரோ பாய் வந்தா விஷ் பண்றே. கலைஞர் டிவில பா.ஜ.க தலைவருங்க பேட்டியெல்லாம் வருதுங்கண்ணா..
அப்போ சோனியா கை கொடுக்கப்போறது நெஜம் தானா? தாத்தாவுக்கு மூக்குல வேர்த்துதான் உறவுக்கு கை கொடுக்க ஆரம்பிச்சிட்டாரா?
ரஜினிய நேரடியா சேர்த்துக்கிட்டா லொள்ளு ( ஸ்டாலினுக்கு பிரச்சினையாயிருமே) அதனால பா.ஜ.க வுல வுட்டு ஆட்ட சொல்லலாம்னு கணக்கா..
மண்டை காயுதுப்பா..
செய்தி உபயம் : சாட்சி தெலுங்கு தினசரி
Thursday, March 31, 2011
"ஜெ"வுக்கு ஜூன் 9 வரை நித்திய கண்டம் தேன்
ராகு தசை சந்திர புக்தி உபயத்தில் ஜூன் 9 வரை இழு பறி. அதுக்கு பிறவு ராகு தசையில செவ்வாய் புக்தி. செவ் 3 ஆமிடத்துல இருக்கிறதால அம்மா நெஞ்சுல வீரம் பொங்கும். ஒரு பிடி பிடிச்சுரனும்னு சீறி எழுவாய்ங்க. ஆனால் சகோதரஸ்தானத்துல நின்ன செவ்வாய்க்கு 6 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கிறதால உடன் பிறவா சகோதரியோ அ அம்மா நம்பின ஆரோ ஒரு சகோதரரோ "டபுள் கேம்" ஆடலாம். அ அவிகளோட அம்மாவுக்கு விரோதம் வந்து கழட்டியும் விடலாம். அப்படி விட்டா அந்த பிரிவு 29/Jun/2012 வரை தொடரும். அ அந்த டபுள் கேமுக்கு அம்மா பலியானாலும் ஆகலாம். இதெல்லாம் தேர்தலுக்கு பிறகு.Read More
Subscribe to:
Posts (Atom)