'>

Thursday, February 17, 2011

சாதகமா சொல்றதுதான் ஜாதகமா?















தர்ம சாஸ்திரத்துல வைத்தியனையும் ,ஜோதிடனையும் நம்பாதேனு சொல்லியிருக்கு. ஏன்? நமக்கு பெருசா ஏதோ பல்பு மாட்டியிருக்கும் .ஆனா வைத்தியம் "அட இதெல்லாம் ஒன்னுமில்லிங்க.. ஒரு கோர்ஸ் பலான ஊசி போட்டா போயே போச்சு"ம்பாரு.ஜோசியர் கிட்டே போனா " அடடா .. உங்களுக்கு ஆக்சுவலா நல்ல நேரம் ஆரம்பிக்குது . அதான் கெட்ட நேரம் போறதுக்கு முந்தி ஆட்டிவைக்குது"ம்பாரு.

இதனாலதான் தர்ம சாஸ்திரம் வைத்தியனையும் ,ஜோதிடனையும் நம்பாதேனு சொல்லியிருக்கு. எங்கயோ படிச்சேன் சாதகமா சொல்றதுதான் ஜாதகமாம். த பார்ரா! சாதகமா சொல்ல தான் ஆள் வேணம்னா ஆராச்சும் ஒரு லாலா பார்ட்டிய பாருக்கு தள்ளிக்கினு போயி சிங்கிள் பீர் சொன்னாபோதுமே.

ஜோசியர் -வைத்தியர் -வேசி எல்லாம் ஒரே கேட்டகிரில வர்ராய்ங்க (புதன்) இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு? ஏன் அப்படி நிர்ணயிச்சாய்ங்க? கிவ் மீ சம் ஐடியா ப்ளீஸ் !

ஒரு நா நம்மாளு ஒருத்தர் வேற ஒரு பார்ட்டிய கூட்டி வந்தாரு. இன்னாடா மேட்டருனு பார்த்தா அப்பாவுக்கு 60 முடியுதாம்.சஷ்டியப்த பூர்த்தி பண்ணனுமாம். நான் பாட்டுக்கு அடுத்த 7 நாள்ள வர்ர ஒரு முகூர்த்தம் நிர்ணயம் பண்ணேன்.அதுக்கு பார்ட்டி சொந்த பந்தம்லாம் நிறைய இருக்காய்ங்க. அவிகளை எல்லாம் வரவழைக்கனும் .. டிஸ்கஸ் பண்ணனும் அது இதுனு இழுத்தாப்டி.

நானு யோவ் சஷ்டியப்த பூர்த்தி பண்றதா இருந்தா இதான் முகூர்த்தம் . முடிஞ்சா பாரு இல்லாட்டி நடைய கட்டுன்னுட்டு பீடிய எடுத்து பத்திட்டன். கொஞ்ச நாழி ப்ரஸ் மீட்ல மன்மோகனர் மாதிரி மலங்க மலங்க முழிச்சுட்டு எந்திரிச்சு போயிட்டாய்ங்க. எட்டாவது நாள் தாத்தா போய் சேர்ந்துட்டாரு.

இதை நான் சொல்றது நான் ஏதோ பெரிய பண்டிதன்னு காட்டிக்கறதுக்காக இல்லை. ஜோதிஷம்னா என்ன எதிர்காலம் உரைத்தல். நல்லதோ கெட்டதோ உரைச்சுட்டு போயேன். அதுக்குண்டான தில்லிருந்தா சொல். இல்லாட்டி ஓரமா போயி நில்.

ஜாதகங்கறது பேங்க் பாஸ் புக் மாதிரி. பேலன்ஸ் பார்த்து சொல்லு சாமின்னா போட்டு உடைச்சிர வேண்டியதுதான். பாவம் ! அவன் இருப்பை வச்சி மேனேஜ் பண்ணிட்டு போறான். அதை விட்டுட்டு சாதகமா சொல்றேன் பேர்வழி அளந்து விட்டா.. நடந்துரப்போகுதா என்ன?

எங்கயோ படிச்சேன். ஜோதிடன் பலனை சொல்றவன் மட்டும்தேன். அதை தர்ரது ஆ ........ண்டவன். ஆண்டவன்னா பாஸ்ட் டென்ஸ். இறந்த காலம். இப்ப ஆள்றவன் இல்லை. இப்ப ஆள்றது நம்ம பூர்வ வினைகள்.

எல்லா கிரகமும் கேந்திர கோணத்துல நின்னுட்டா அந்த ஜாதகனுக்கு வினையே கிடையாதுனு ஒரு விதி. நம்ம ஜாதகத்துல ( ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்யானு அலுத்துக்கிடாதிங்க - என் லேப்ல முதல் எலி நான் தேன்) சந்திர சுக்கிரர்கள் மட்டும் வாக்குல இருக்காய்ங்க. மத்தவுக கேந்திர கோணம்.

சந்திரன் மனோகாரகன் .சைக்காலஜி எழுதறோம். நட்சத்திரங்களுக்கெல்லாம் இவர் தான் தாதா .அஸ்ட் ராலஜி எழுதறோம். சுக்கிரன்னாலே கில்மா செக்ஸாலஜி எழுதறோம்.

நம்ம வேலை பேசறது எழுதறது. சனம் பைசா கொடுத்தா வாங்கி ஷீர்டி பாபா தன் சமஸ்தானத்துல பங்கு பிரிச்ச மாதிரி பிரிச்சு கொடுத்துரவேண்டியது. கருமம்னு வந்தா பேச்சால வரணும் அ எழுத்தால வரனும்.

வரக்கூடாதுன்னா வாயு பக்ஷணம் பண்ணிக்கிட்டு இருக்கவேண்டியதுதான் அது .முடியுமா? முடியாது.
( நம்ம மேக்சிமம் கப்பாசிட்டி 12 நாளுங்கண்ணா - ஆப்பரேஷன் இந்தியா அமலுக்காக உ.விரதம் இருந்தேன்)

கோதாவுல இறங்கிட்ட பிறவு ஐயோ! எதிராளி என்ன நினைப்பானோ ஏது நினைப்பானோன்னெல்லாம் ரோசிச்சிட்டிருக்க கூடாது. ஏக் மார் தோ துக்கடா. ( நம்ம ஜீவனஸ்தானாதிபதியே செவ்வாய் தான் - செவ்வாய்னாலே கசாப்புதான் )

சனத்துக்கும் நான் சொல்றது ஒன்னுதேன். அல்லா ஜோசியரும் நம்ம மாதிரி துணிஞ்ச கட்டைகளா இருப்பாய்ங்கனு சொல்ல முடியாது. நீங்கதேன் துணிச்சலை தரனும். எதுவா இருந்தாலும் சொல்லுங்கனு கேட்கனும்.

அதை விட்டுட்டு ஃப்ளாட்டுக்கு அட்வான்ஸ் பண்ணிட்டு போயி ஃப்ளாட் வாங்கலாமானு கேட்க கூடாது. காதலிய கர்பம் பண்ணிட்டு பொருத்தம் பார்க்க போகக்கூடாது.

சொந்தத்துல கட்டினா தோஷமில்லேதானே சாமினு போட்டு வாங்க கூடாது ( அத்தை மகள் சோத்துல விஷம் வச்சா சாகமாட்டியளா?)

சொம்மா பேருக்கு பேரு பொருத்தம் பாருங்க சாமி போதும்னு எடுத்துக்கொடுக்ககூடாது. ( பேரை வச்சி தோஷ நிர்ணயம் பண்ண ஆராலயும் முடியாது)

எனக்கு நேரம் சரியில்லை சரி. என் பொஞ்சாதி பேர்ல செய்யலாமானு கேட்க கூடாது ( கிரகம் என்ன தாசில்தாரா? ஏமாந்து போக) ப்ராஜெக்டுல எவன் முடிவெடுக்கிறானோ அவன் தலையெழுத்துதான் வேலை செய்யும்.

ஆக சாதகமா சொல்றது ஜாதகமில்லை. அது ஜோசியருக்குத்தான் சாதகம். உங்களுக்கு பாதகம். சாதகமோ பாதகமோ உடைச்சு சொல்லி உங்களை சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் பண்றதுதான் ஜாதகம்.

இப்படி நிறைய சொல்லவேண்டியிருக்கு. சமயம் வரப்ப மறுபடி ஒரு எட்டு பார்ப்போம்.

No comments: