'>

Friday, May 17, 2019

ஆறில் இருந்து அறுபது வரை :தேவதைகளுக்கு யாகங்கள்


அண்ணே வணக்கம்ணே !

பழைய நன்னி விசுவாசத்துல இந்த ப்ளாக் வழியா  நம்மை அறிந்த சனத்தை திராட்டுல விட்டுரக் கூடாதுங்கற அக்கறையில ஆறில் இருந்து அறுபது வரை நூலின் அத்யாயங்கள் பலவற்றை இங்கே கொடுத்தன்.

அடுத்தடுத்த அத்யாயங்கள் நம்ம அனுபவஜோதிடம் வெப்சைட்ல பிரசுரமாகும்.

சிரமத்துக்கு வருந்துகிறேன்.

தேவதைகளுக்கு யாகங்கள் :
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும். (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ - அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். உ.ம் பட்டாடைகளுக்குச் சுக்கிரன் அதிபதி.
லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். உ.ம் செவ்வாய் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்திஸ்தானம் - செவ்வாய்க்குரிய கடவுள் சுப்ரமணியர் - சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப் பாருங்கள்!
செவ்வாய் 2டிலோ - 8டிலோ - 12டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம் - தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம். காரணம் 2 என்பது தனபாவம் - செவ்வாய் நெருப்புக்கு அதிபதி - ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன். 8 என்பது ஆயுள்பாவம்பெரு நஷ்டங்களைக் காட்டும் இடம் – 12 என்பது விரயபாவம் - நஷ்டங்களைக் காட்டும் இடம் - இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன். யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன் வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித் தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குரு கிரகத்தின் தோஷம் குறையும்.



ஆறில் இருந்து அறுபது வரை : கிரகங்களுக்கிடையிலான உறவு


கிரகங்களுக்கிடையிலான உறவு :
சூரியனுக்கு   சுக்கிரன் சனி ராகு - கேது பகை
சந்திரனுக்கு   புதன் சுக்கிரன் சனி ராகு - கேது பகை
செவ்வாய்க்கு புதன் சனி ராகு - கேது பகை
புதனுக்கு     சந்திரன் செவ்வாய் குரு - கேது பகை
குருவுக்கு     புதனும் - சுக்கிரனும் பகை
சுக்கிரனுக்கு  சூரியன் - சந்திரன் - குரு பகை
சனிக்கு       சூரியன் சந்திரன் செவ்வாய் - கேது பகை
ராகுவுக்கு     சூரியன் சந்திரன் - செவ்வாய் பகை
கேதுவுக்கு    சூரியன் சந்திரன் செவ்வாய் - புதன் பகை

பாவங்களின் வகைகள் :
1-4-7-10 கேந்திரம்
1-5-9 கோணம்
3-12 அபோக்லிபம்
2-6-8-11 பணபரம்
6-8-12 துஸ்தானங்கள்
இதன் உபயோகம், கோணங்களில் சுபர்கள் பெஸ்ட் - பாபர்கள் பெட்டர். கேந்திரங்களில் பாபர்கள் பெஸ்ட், சுபர்கள் பெட்டர் என்பதை அறியவே. 6-8-12 க்குடைவர்கள் இந்த 6-8-12 பாவங்களிலேயே மாறி மாறி உட்கார்ந்திருக்கிறார்களா என்பதை அறிவதே.




ஆறில் இருந்து அறுபது வரை : டிகிரி



டிகிரி:
டிகிரின்னதும் பி.ஏ – பி.காம்னு நினைச்சுராதிய. ஒரு ராசியை ஒன்பது பாகமா பிரிச்சா நட்சத்திர சாரம் தெரியும். முப்பது பகுதியா பிரிச்சா? அது தான் டிகிரி.
ஒரு ராசிக்கு 30 டிகிரி. 12 ராசிக்கு 360 டிகிரி. ஒரு கிரகம் ஒரு ராசியின் முதல் டிகிரியில் நிற்பதற்கும், 15ஆவது டிகிரியில் நிற்பதற்கும், 30ஆவது டிகிரியில் நிற்பதற்கும் வித்தியாசம் வருமா? வராதா?.
ஒரு தலைவர் முதல்வரா / பிரதமரா பொறுப்பேத்துக்கிட்ட மொத 3 மாசத்துக்கும், கடைசி 3 மாசத்துக்கும் வித்தியாசம் இருக்குமா? இருக்காதா?.
ஒவ்வொரு கிரகமும் பலனளிக்கும் காலம்னு சில விதிகள் இருக்கு. சூரியன், செவ்வாய் ஆரம்ப காலத்திலேயே பலன் தருவாங்க. சந்திரன், புதன் அவர்கள் காலம் முழுக்கவும் –குரு, சுக்கிரன் மத்திய காலத்திலும் – சனி, ராகு, கேது பிற்பகுதியிலும் பலன் தருவார்கள்.
இதன் படி சூரியன், செவ்வாய் ஒரு ராசியின் ஆரம்ப டிகிரிகளில் இருந்தால் சிரேஷ்டம். குரு, சுக்கிரன் மத்திய டிகிரிகளில் இருந்தால் – சனி, ராகு, கேது பிற்பாதி டிகிரிகளில் இருந்தால் இன்னம் கொஞ்சம் ஆக்டிவா எஃபெக்ட் பண்ணுவாங்க தானே?.
கம்ப்யூட்டரில் ஜாதகம் கணிக்கும் போது கிரக ஸ்திதி கீழ்கண்டவாறு வரும்.
டிகிரி பார்ப்பதில் இன்னொரு உபயோகமும் உண்டு. கிரகம் ஏதேனும் அஸ்தங்கதம் ஆகியுள்ளதா என்று அக்யுரேட்டா தெரிஞ்சுக்கலாம்.
அஸ்தங்கதம் என்பது ஏதேனும் கிரகம் (ராகு-கேது-புதனை தவிர்த்து) சூரியனுக்கு 10 டிகிரிக்குள் இருந்தால் அது அஸ்தங்கதமான கிரகம். பலன் தராது என்பதை நினைவில் வையுங்கள்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நைசர்கிக சுப கிரகங்கள் பகலிலும், நைசர்கிக பாப கிரகங்கள் இரவிலும் அதிகமாய் பாதிக்கும்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நைசர்கிக சுப கிரகங்கள் வளர்பிறையிலும், நைசர்கிக பாப கிரகங்கள் தேய்பிறையிலும் அதிகமாய் பாதிக்கும்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நைசர்கிக சுப கிரகங்கள் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலும், நைசர்கிக பாப கிரகங்கள் ஆடி முதல் மார்கழி மாதம் வரை அதிகம் பாதிக்கும்