'>

Sunday, December 11, 2011

கனி மொழி ஜாதகம் : ஒரு பார்வை

கனிமொழியோட ஜாதகத்தை கணிச்சு பார்த்ததும் மனசுல ஸ்பார்க் ஆன மொதல் விஷயம் "கனியை சனி ஒரு கை பார்க்காம விடமாட்டாரு"ங்கறதுதேன். 1968 ஆம் வருடம், ஜனவரி 5 ஆம் தேதி சூரியன் உச்சியில் இருக்கும் போது பிறந்த கனியோட ஜாதகப்படி அவருடைய லக்னம் மீனம்,ராசி கும்பம். மீனம் ராசி சக்கரத்துல கடேசி ராசிங்கறதால இவிக லைஃப்ல எல்லாமே கடேசியாதான் நடக்கும். மத்தவுக வேணாம்னு கழிச்சதுதேன் கிடைக்கும். கும்பம் ராசிச்சக்கரத்துல 11 ஆவது ராசிங்கறதால லாபம் பார்க்காம எதையும் செய்யமாட்டாய்ங்க.

கடந்த சனி பெயர்ச்சியில சனி அஷ்டமத்துல வந்து உட்கார்ந்து ஆட்டிவச்சதுல இவிக லாபம் பார்த்து இறங்கின காரியம்லாம் இவிக தலைக்கு தீம்பாவே முடிஞ்சுது. இந்த சனிப்பெயர்ச்சிக்கு சனி 9 ல வந்தாலும் அது அப்பாவை காட்டுமிடம்.அப்பா "ஒரு வழி" ஆனபிறகு அல்லது அப்பா கைவிட்ட பிறகு இந்த ஜாதகர் மேற்கு பக்கமா தூரதேசம் போயிரவும் வாய்ப்பிருக்கு.

ஜாதகத்தில் கிரக நிலை:

லக்னத்துல லாப -விரயாதிபதியான சனி , 2 -8 ல் நின்று கடுமையான மாங்கல்ய தோஷத்தை தரும் ராகு கேது ,6 ல் லக்னாதிபதியான குரு , அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன், ( இவருக்குரிய எண் 6 - ஜாதகருக்கு திகார்ல ஒதுக்கப்பட்ட
சி(அ)றை எண் கூட 6 தான்) தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் மற்றும் தாய் & கணவரை காட்டும் புதன் இருக்காய்ங்க. புத்திஸ்தானாதிபதியான சந்திரனும் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதி & அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாபதியான செவ்வாயும் சேர்ந்திருக்காய்ங்க. டெக்னிக்கல் டீட்டெய்ல்ஸ் ஓவர். இப்பம் பலனை பார்ப்போம்.

ஜாதக பலன்:

லக்னாதிபதியான குருவே ஆறுல மாட்டினாரு. கனிக்கு எதிரி ஆருன்னா கனிதான். குரு கங்கண காரகன் (திருமணம்) என்பதால் முதல் திருமணம் தோல்வி. குரு புத்திர காரகன் -அம்மாவின் இந்த சிறை வாசம் மகன் ஆதித்யாவோட மனதை எந்தளவுக்கு பாதித்ததோ -அதன் விளைவாக அம்மா -பிள்ளை உறவு எந்த அளவுக்கு மெலியுமோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ராகு கேதுக்கள்:

2 என்பது வாக்கு ஸ்தானம். எட்டு என்பது ஆயுள் ஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருப்பதால் கனியோட வாக்கு அவர் கழுத்துக்கு தூக்கு.( நீரா ராடியா டேப்பு கேட்டிங்களா?) ஒவ்வொரு பிடி சோறும் விசமாத்தான் இறங்கும். தனிமை -இருட்டு-நிராகரிப்பு இதான் வாழ் நாள் முழுக்க தொடரும்.

"விவகாரங்களை" காட்டும் ஆறாமிடத்தில் நின்ற லக்னாதிபதியான குரு ஜீவனாதிபதியாவும் இருக்கிறதால இவரோட முழு நேரத் தொழிலே "விவகாரமா"த்தான் இருக்கும்.

லக்ன சனி:

கனி சொம்மா இருந்துரலாம்னு நினைச்சாலும் லக்னத்துல நின்ன சனி விடமாட்டாரு. மூன்றாமிடத்தை பார்த்து சகோதரர்களுக்கும் , ஏழாமிடத்தை பார்த்து கணவருக்கும், பத்தாமிடத்தை பார்த்து "பிழைப்புக்கும்" ஆப்பு வைச்சுக்கிட்டே இருப்பாரு.

கனி பிறந்த பிறவுதேன் கலைஞருக்கு "கூடி"வந்ததுன்னு பேசிக்கிறாய்ங்க.அசலான மேட்டர் இன்னான்னா அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன் நின்னதாலதான் கலைஞரு பிழைப்பு நாறிப்போச்சு. சுக்கிரன் என்றால் பெண். இப்படி தமிழ் நாட்டுல ஒரு அம்மாவும் -அப்படி தில்லி "மாதாஜீக்களும் " ( இந்திரா -சோனியா) தாத்தாவுக்கு ஆப்படிக்க இது முக்கிய காரணம்.

தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் நின்னாரு . இதனால இவிக கேரியர் முழுக்க எதிரிகள் நிறைஞ்சிருப்பாய்ங்க. அப்படி யாரும் இல்லைன்னாலும் கனி அம்மாவே ஒரு நலம் விரும்பியை தன் எதிரியா மாத்திக்குவாய்ங்க,

இந்த சூரியனோடு தாய் & கணவரை காட்டும் புதன் இருக்கிறதால இவிகளுக்கு அசலான எதிரி இவிக அம்மாதான். கணவரை கனி எதிரியாத்தான் பாவிப்பாரு.

புத்திஸ்தானாதிபத்தியம் சந்திரனுக்கு கிடைச்சிருக்கு. சந்திரன்னாலே சஞ்சலம், ஆகாய கோட்டைகள்தான். இதுல இவரு விரயத்துல வேற மாட்டினாரு.

இதனால இவரோட "கனவு". எதுவும் நிறைவேறாது. கீழே தள்ளின குதிரை குழியும் பறிச்சாப்ல இந்த சந்திரன் செவ்வாயோட வேற சேர்ந்து "உன்மத்த" நிலைய தருவாரு. செவ்வாய் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதிபத்யம் மற்றும் அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாதிபத்தியம் பெற்று விரயத்தில் நின்றதால இவரோட "வருமானம்லாம்" பறிபோயிரும். இவர் பேச்சுக்கு மதிப்பிருக்காது. குடும்பமும் இவருக்கு ஆதரவா இருக்காது. அப்பா இருந்தும் இல்லாத மாதிரி தான். அப்பா சொத்துலயும் (திமுக?) இவருக்கு உரிய பங்கு கிடைக்காது. சுத்தமா கழட்டி விட்டுருவாய்ங்க.

இதுவரை பார்த்த அம்சமெல்லாம் ஜூஜுபி. சனியோட 7 ஆம் பார்வை மற்றும் செவ்வாயோட எட்டாம் பார்வை கூட்டாக 7 ஆம் இடத்தின் மீது விழுவது என்ன மாதிரி எஃபெக்டை தரும்னு சொன்னா நாஸ்திதான். ஒரு நண்பரும் - ஒரு எதிரியும் கூட்டு சேர்ந்து இவர் உயிருக்கே உலை வைக்கவும் வாய்ப்பிருக்கு..

தற்சமயம் புத மகாதசையில் சனி புக்தி நடக்குது .(13/6/2011 முதல் 23/2/2014 வரை) இவிக லக்னம் மீனம்ங்கறதால புதன் - சனி ரெண்டு பேருமே எதிரிங்கதேன்.தசா நாதனும் -புக்தி நாதனும் ஆளுக்கொரு ஆப்பு வைக்க காத்திருக்காய்ங்க.( வச்சுட்டாய்ங்க)

சனி தலித் இனத்தை காட்டும் கிரகம். தலை மேல உட்கார்ந்த சனி கிரகம். ராசா ரூபத்துல ஆப்படிச்சுருச்சு. புதன் என்றால் ஏஜெண்ட். நீரா ராடியா ஏஜெண்டுதானே.

சனிக்கு லாபம் -விரயம்னு ரெண்டு வித ஆதிபத்யம் இருக்கு. இதனால மேற்சொன்ன காலகட்டத்தில் முதல் பாதி விரயமாவும் - அடுத்த பாதி ஓரளவு லாபமாவும் நடக்க வாய்ப்பிருக்கு. ஆக இதோ பட்டம் -அதோ பதவின்னு என்னதான் அல்லாடினாலும் தப்பித்தவறி அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கணக்கா பதவியே கிடைச்சாலும் 2012 , அக்டோபர் 17 வரைக்கும் செயில்ல தப்ப "உஸ் .. அப்பாடா"ன்னு உட்கார முடியாது,

2012 , அக்டோபர் 17க்கு மேல் நடக்கும் லாபம் கூட மரணம் தொடர்பான "ஆதாயமாக"த்தான் இருக்கும். அந்த ஆதாயம் கூட 23/2/2014 க்கு பிறகு "விரக்தி"யை கொடுத்துரும்.

அடுத்து வரக்கூடியும் 7 வருட கேது தசை முதல் கணவரை போலவே கனிமொழியையும் "சன்யாசி"போல ஆக்கி "பரதேசம்" அனுப்பி வைத்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன்.

,

No comments: