'>

என்னை பற்றி


கடந்த 2009 ,மே முதல்  ரீ என்ட் ரி கொடுத்து 8  லட்சம் வருகைகளை கடந்து வெற்றி நடை போட்டுவரும் வலைஞன். 2000   பதிவுகளை கடந்தவன். தொழில் முறை ஜோதிடன். ஜோதிட ஆய்வாளன். மக்கள் தரும் ஆலோசனை கட்டணத்தை ஊதியமாக கருதி இந்தியாவை பணக்கார நாடாக மாற்றியே தீர்வேன் என்று புலம்பி அலம்பல் செய்துவருபவன்.

சமீபத்தில் வெளியிட்ட ஜோதிடம் 360 நூலில் கூட இதற்காக ஒரு அத்யாயத்தையே வைத்திருப்பவன்.
இதற்காக சந்திரபாபு மீதே வழக்கு போட்டவன். 12 நாள் உண்ணாவிரதம் இருந்தவன். அனைத்தும் இழந்தவன். பின் துளிர்த்தவன்.

கம்யூனிஸ்டோ,பெரியாரிஸ்டோ எந்த இஸ்டோ அல்லன். ஹ்யுமேனிஸ்ட் என்று வேண்டுமானால் சொல்லலாம். மணமாகி (1991) மனைவி, 18 வயது மகள் ,ஸ்வீட்டி என்ற பெண் பாமரேனியன் குட்டி மற்றும் லட்டு எனும்  ஆண் பாமரேனியன் நாய் குட்டி அடங்கிய குடும்பம் என்னுடையது.

ஆன்மீகத்தையும் ஒரு விஞ்ஞானமாக நிரூபிக்க துடிப்பவன். ஃப்ரம் செக்ஸ் டு சூப்பர் பவர் என்ற ஓஷோவின் சித்தாந்தத்தை கொள்கை ரீதியில் ஆதரிப்பவன்.


சான்றோருடைத்து என்ற பெருமை வாய்ந்த சித்தூர்(AP) நகரில் வசிப்பவன். சில காலம் பல நிறுவனங்களில் பணி புரிந்தவன். சமீபத்தில் தினத்தந்தி. Age 43. 1987லேயே முதல் சிறுகதை பாக்யாவில் பிரசுரமானபோதிலும் தமிழ் அச்சு ஊடகத்தில் நிலவும் பிராமணீயத்தால் வெளிச்சத்துக்கு வராதவன்.

லேட்டஸ்ட்  உதாரணமாக நீங்கள் கேள்விப்பட்டும் அறியாத வலைப்பூக்கள் பற்றி பிராமண  பத்திரிக்கைகளில் எழுதப்படுவது. தமிழ்10 ரேங்குகளில் முதல் 50 க்குள் தொடரும்  இந்த வலைப்பூ கண்டு கொள்ளப்படாதது.


2007ல்  ஜோதிட பூமி இதழில்  நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் , அனைவருக்கும் தனயோகம் போன்ற ஜோதிட ஆராய்ச்சி  தொடர்கள் எழுதிய‌வன். சொந்தத்தில் வாங்குவோரை நம்பாமல் விளம்பரதாரர்களை மட்டும் நம்பி  இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் எனும் மாதமிருமுறை (தெலுங்கில்) நடத்துபவன்.

தெலுங்கில் வலை தளம் துவக்கி 2008 நவம்பர் டு மேக்குள் 20000 ஹிட்ஸ் கண்டு அங்கும் பிராமண சதியால் மொக்கையானவன்.

தற்போது தெலுங்கிலும்  ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருபவன்.