'>
Showing posts with label கோசாரம். Show all posts
Showing posts with label கோசாரம். Show all posts

Thursday, November 22, 2012

இந்தியாவின் சமீப எதிர்காலம்

சுதந்திர இந்தியாவின் ஜாதகம் :

லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது , ரெண்டுல செவ்( ராணுவ செலவு கழுத்தை நெறிக்க இதுவும் ஒரு காரணம்) 3ஆம் பாவத்துல சுக்கிரன் சூரியன் , சனி ,புதன்,சந்திரன், (அதாவது கடக ராசிங்கோ) 6ல குரு,

9-10 க்கு அதிபதியான சனி  6 ல இருக்காரு.டிசம்பர் 23 முதல் சனி ராகு சேர்க்கை வேற ஏற்படப்போகுது.

நடப்பு:  15/Jul/2012 முதல் 2013,ஜூன் 27 வரை சூரிய தசை சனி புக்தி.

சூரிய தசை:
லக்னாதிபதியான சுக்கிரனோடு சூரியன் சேருவதால் சூரியதசை முழுக்க மக்கள் உணவு,உடை,இருப்பிடத்துக்கு கூட ஆப்பு வந்து  நாறனும்.ஆட்சியாளர்கள் அகங்காரத்தில் ஆட்டம் போடுவார்கள்.

ஆனால் சூரியதசை புத புக்தி வரும்போது அதாவது 2013,ஜூன் 27 க்கு பிறகு உண்மையிலயே ஒரு பொது வேலை திட்டத்துடனான உண்மையான கூட்டணி அரசு அமையவும் வாய்ப்பிருக்கு. ( புதன் சூரியனோட பலத்தை குறைப்பாரு)

சூரிய தசை சனி புக்தி: ( 15/Jul/2012 முதல் 2013,ஜூன் 27 வரை )
இது ஆட்சியாளர்களுக்கு நல்லதில்லை. ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரம் இழக்க நிறைய வாய்ப்பிருக்கு. கருப்பான ஆள், தலித் அ தலித் வாதம் பேசுபவர் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வாய்ப்பிருக்கு.

கோசாரம்:

சனி ( 9/10 = 6) (டிசம்பர் 23 வரை)

வெளி நாட்டு உறவுல சிக்கல் வந்து நிலைமை  ஏடாகூடமாகி  சந்திரசேகர் காலம் போல தங்கத்தை மட்டுமில்லாம இரும்பையும் கூட அடகு வைக்க வேண்டி வரலாம். அதே போல ஆட்சியின் மேலிடத்துக்கு நோய் பாதிப்பு அதிகரிக்கலாம்.

அரசின் ஒவ்வொரு செயலும் நீதிமன்றத்தால் தடை செய்யப்படுதல் - அதிக பட்ச எதிர்ப்பு வருதல் நடக்கலாம்.

கருப்பான ஆள், தலித் அ தலித் வாதம் பேசுபவர் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வாய்ப்பிருக்கு. என்ற பலன் இந்த காலகட்டத்துக்குள்ள நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்கு.


சனி ராகு சேர்க்கை:( டிசம்பர் 23 க்கு பிறகு)

9/10+ராகு காரணமா நாட்டின் சொத்தை வெளி நாட்டுக்காரன் உறிஞ்சி எடுத்துருவான். அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலும் வெளி நாட்டு சக்திகளால் கட்டுப்படுத்தப்படும்.

கருப்பான ஆள், தலித் அ தலித் வாதம் பேசுபவர் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வாய்ப்பிருக்குன்னு சொன்ன பலன்ல சின்ன திருத்தம் இவர் விதவையாக (விடோயர்) அல்லது திருமணமாகாதவராக அல்லது வெளி நாட்டினராக வேறு மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம்..


Wednesday, January 4, 2012

கோட்சார பலன்கள் கணிப்பது எப்படி?: சுந்தரேசன் « Anubavajothidam.com

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கும் நமக்கு டைட் ஷெட்யூல் தேன். ஆனாலும் பதிவை போட்டுரலாம்னு சோனியா ஜாதகத்தை அலசி அடிக்க ஆரம்பிச்சேன். ஜனவரி 1 ஆம் தேதியிலருந்து பவர் கட் இல்லே. ஆனால் பாருங்க சோனியா ஜாதகத்தை அடிக்க ஆரம்பிச்சதும் நாலு தாட்டி லோ ஓல்ட்டேஜ்.சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆயிருச்சு.

தத்.. இது என்னடா கருமம்னு விலகிட்டம். நாளைக்கு அலசி -காயப்போட்டுருவம்ல. இன்னைக்கு நம்ம விருந்தினர் சுந்தரேசன் கோசார பலன் களை பற்றி அனுபவஜோதிடம் டாட் காமில் ஒரு பதிவை போட்டிருக்காரு. இங்கே அழுத்தி படிச்சு வைங்க.

நாளைக்கு சோனியா..

எச்சரிக்கை:
சுந்தரேசனோட எழுத்தை படிக்க படிக்க எங்கயோ ஞம ஞமங்குது, ஜா.ரா வாசம் அடிக்குது.

சரக்கும் சந்தேகத்தை தருது. செமர்த்தியான புஸ்தவம் எதுனா மாட்டி ஜா.ராதான் விளையாடறாரோன்னும் ஒரு ஹஞ்ச்.

பார்ப்போம்.. சபையில எத்தீனி ஜூரிங்க கீறாய்ங்க.ஆரோ ஒருத்தர் .. மேட்டர் எங்கருந்து உருவப்பட்டதுன்னு சொல்லிரமாட்டாய்ங்களா?

அதே நேரம் சுந்தரேன் தானா வந்த ரேசனா இருந்து -சரக்கு அவரோட சொந்த சரக்கா இருந்தா முன் கூட்டியே ஆயிரம் கோடி மன்னிப்புகள் கேட்டுக்கறேன்.

உடுங்க ஜூட்.

Monday, October 24, 2011

ஒரு அனுபவம் - சில பாடங்கள்


சின்னவயசுல சித்தி வீட்டுக்கு போறச்ச -மூட்டை முடிச்சை இறக்கிவச்சுட்டு நாம வாய திறந்தா அந்த வீட்ல எந்த வேலையும் ஓடாது. அல்லாரும் நம்ம வாய பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. அந்த வீட்ல நமக்கு ஒரு அக்கா, நாலு தங்கச்சினு ஞா. சித்தி மட்டும் என்னவாம் ஒரு பக்கம் திட்டித்தீர்த்துக்கிட்டே கரண்டியும் கையுமா சமையலறைக்கும் ஹாலுக்கும் ரன் எடுத்தபடி இருப்பாய்ங்க. நம்ம வாய் சாலம் அப்படி.

அந்த வயசுல முக்கியமா பட்ட மேட்டர்லாம் இப்பம் சப்பை மேட்டராயிருச்சு. அதனால வயசு பிள்ளைங்க கிட்ட எதையாவது பேசனும்னா ரோசிக்க வேண்டியதாயிருக்கு. துருக்கி பூகம்பம்தேன் நம்மை அதிகமா பாதிக்குது. இப்பம் கேரளா ,தமிழகத்துல 3.5 வருசத்துல பூகம்பம் கியாரண்டின்னு சொல்றாய்ங்க.

பூகம்பத்தை விட அதை ஃபேஸ் பண்ணக்கூடிய நிலையில இல்லாத அரசு இயந்திரம்தேன் பேதியாக்குது.பசங்க கிட்டே இடையில என்னப்பா போரடிக்கிறேனா? ச்சொம்மா என் திருப்திக்கு சொல்லாதே..போரடிச்சா சொல்லிருன்னு பேசவேண்டியதாயிருக்கு.

நியூஸ் பேப்பரை எடுத்தா சில பிள்ளைங்க கிரிக்கெட் -சினிமா மட்டும் பார்த்துட்டு (அண்டர்லைன்) போட்டுர்ராய்ங்களா பகீருங்குது. அத்வானியோட மொத ரதயாத்திரையின் போது ஹின்டுவை கூட படிக்கவேண்டியதாயிருந்ததுன்னா பார்த்துக்கங்க. இதனால வீட்ல சின்ன உலகயுத்தமே நடக்கும்.

ஆனால் நம்ம பசங்க ஊஹூம்.. தெலுங்கு பேப்பர்ல தாய்குலத்துக்குன்னு ஒரு இணைப்பு வச்சிருப்பாய்ங்க. வாழைப்பழத்துல அழுகின பாகத்தை கிள்ளிபோடறாப்ல அதை கழட்டி வீசினப்பறம் தான் நாம பேப்பரையே படிக்க ஆரம்பிப்போம்.ஆனால் அதை என்னமோ எஸ்.எஸ்.சி ரிசல்ட் வந்த பேப்பர் மாதிரி என் பொண்ணு வாரிக்கிட்டு போறதை பார்த்தா பகீருங்குது.

நம்ம வாய் சாலத்து மேல நம்பிக்கைய வச்சு ஒரு மேட்டரை சொல்லலாம்னுதேன் இந்தபதிவை ஆரம்பிச்சோம். ரெம்ப சாதாரணமான சம்பவங்கதேன்.ஆனால் இந்த சம்பவங்களை இயற்கை கோர்க்கிற விதமிருக்கே ச்சொம்மா சொல்ல கூடாது நெசமாலுமே தூள் தான்.

நாம விளம்பரத்தையே உள்ளடக்கமா கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்தறது உங்களுக்கு ஞா இருக்கலாம். ஆரம்பத்துல டிடிபி,டிசைன்னு ரெம்பவே அல்லாட வேண்டியிருக்கும்.

இடையில மக டிசைன்ல விளையாட ஆரம்பிச்சபிறகு இம்சை குறைஞ்சது. ( நம்ம சுகுமார்ஜி அவளோட டிசைனை பார்த்துட்டு கண்ணு வலிக்குதுன்னுட்டாரு - அப்படி சொன்னதோட நிக்காம கலர் செலக்சனுக்கு ஒரு சூட்சுமத்தையும் சொல்லிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கிட்டாரு.) இப்பம் தீபாவளி ஸ்பெஷல் டிசைன் பண்ணிக்கிட்டிருக்கம்.

நாம வாழறது தெலுங்கு தேசத்துலயாச்சே அதனால என்னதான் வெறுமனே விளம்பரம்னாலும் சுந்தரதெலுங்குலயும் மேட்டர் வரும். வந்தே தீரும். இந்தபிரச்சினைய ராம்பாபு சாஃப்ட்வேரை வச்சு சமாளிச்சிட்டிருந்தோம். சிஸ்டத்தை ஃபார்மட் அடிக்கிறப்ப பேக் அப் எடுக்காம கோட்டை விட்டாச்சு.

நெட்ல தேடு தேடுன்னு தேடறோம். ஒன்னும் பெயரலை. தேடலின் சமயம் மாலை 4.30 முதல் 7 வரை. பொஞ்சாதி டிவி ரிமோட்டை தேட நொந்து போயிட்டம். கொய்யால தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்ங்கறதெல்லாம் பீலாவா? எவனோ ஒருத்தனுக்கு அம்பதோ நூறோ கொடுத்து அடிச்சுவிடாம இந்த ஸ்ட்ரெய்ன் தேவையான்னு ஆயிருச்சு.

சில அட்வர்டைசர்ஸை சந்திக்கவேண்டியிருந்ததால தேடும் பணியே பணியா கொள்ளாம வெளிய புறப்பட்டாச்சு. ஒரு பார்ட்டி ஃபோட்டோ கொடுக்க அதை ஸ்கான் பண்ணியாகனும். வீட்ல மெகாசைஸ் ஸ்கானர் இருந்தாலும் அதை கனெக்ட் பண்ணா தாளி கீ போர்ட் வேலை செய்யாது அ மௌஸ் வேலை செய்யாது அ ரெண்டும் வேலை செய்யாது.

இந்த லொள்ளை தாங்கமுடியாமயே ஸ்கான் பதிவுக்கெல்லாம் லாங் லீவ் விட்டாச்சு.அதனால ஓரளவு பழக்கமான நெட் சென்டருக்கு போய் ஸ்கான் பண்ண சொன்னேன்.

கொக்குக்கு ஒன்னேமதிங்கற மாதிரி டொக்கா நெட் ஆசாமிய தெலுங்கு சாஃப்ட்வேர் பற்றி விஜாரிச்சேன். அவரு அங்குர் சாவ்ட் வேரை சிபாரிசு பண்ணதோட சி.டி.கொண்டாங்க லோட் பண்ணித்தரேன்னாப்ல.

ரூ.25000 ஐ ஒரே நாள்ள செலவழிச்ச ரிக்கார்டுக்கு சொந்தக்காரங்கற பயத்துல வெளியவர்ரச்ச ரூ30க்கு மேல கொண்டு வர்ரதில்லை. அந்த ரூ30 செலவழியற வரை வீடு திருமபறதில்லை. செலவழிஞ்சுட்டா வெளிய நிக்கறதில்லை.

பையில பார்த்தா சிடிக்கு தான் தேறும் போல.என்னதான் சாஃப்ட் வேர் ஓசின்னாலும் ரைட்டிங் சார்ஜாச்சும் தரனும்னு வீட்டுக்கு ஃபோன் அடிச்சு சில்லறை கொண்டுவரச்சொன்னேன். அம்பதா கொண்டுவந்தாய்ங்க.

சரி இருக்கட்டும்னு வச்சுக்கிட்டு நெட் ஆசாமிக்கு ரைட்டிங் சார்ஜு கொடுத்துட்டு ரூ40 ஐ பையில வச்சுக்கிட்டு பஜாருக்கு போனேன்.

ம்னசுல எல்லையில்லாத தகிரியம் தாளி எவனையும் போய் கெஞ்சத் தேவையில்லை. தன் கையே தனக்குதவின்னு அடிச்சு தூள் கிளப்பலாம்.( நம்முது சிம்மராசி -சனி ரெண்டுலருந்து மூணை பார்க்கிறாரு)

அங்கருந்து நேர சத்யாவோட நகைக் கடை. ச்சொம்மா இருந்தவனை தீபாவளி பூஜைக்கு ஆந்தை வாகனத்தோட லட்சுமி சிலை வச்சு செய்யுன்னு ஜும் ஏத்தி விட்டாச்சு. ஆனா ஆர்டர் கொடுக்கிற சமயம் இன்னொரு ஆசாமி சத்யாவுக்கு டபுள் டோஸா வினோலாக்ஸ் கொடுக்க ஆந்தை வாகனம் கான்சல். ஆனாலும் சிலை ஓகே.

அன்னைக்கப்பாறம் சத்யாவுக்கு கான்டாக்டல போகலை. இந்த கேப்ல சென்னை போய் பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சு வந்திருக்காரு போல. நம்மை பார்த்ததும் கண்ணனை பார்த்த ராதை கணக்கா வா வா ..னுட்டு கடைய விட்டு இறங்கி வண்டியேறிட்டாப்ல ( அவரோட வண்டிதான்)

ஷகரான கடை பூஜை முடிக்க பகல் 12 ஆகும் (இடையிடையில வியாபாரம்) டிஃபன் 2 மணிக்கு சோறு நாலு மணிக்கு ராத்திரி சோறு பன்னெண்டு மணிக்குத்தேன்.

வண்டி நேர புக்ஸ்டோர் போயிருச்சு. அங்கன பூஜைக்கான இன்விட்டேஷனை போட பந்தா கவர் (டிசைன்+ப்ரிண்டிங் நம்ம மகதேன்) , ரெண்டு மார்க்கர்லாம் வாங்கியாச்சு. பையில கைய விடறாரு காசை காணோம் . கொஞ்ச நா இடைவெளிக்கப்பாறம் நம்மை பார்த்த உணர்ச்சி வேகத்துல கல்லாவுல இருந்து காசை எடுக்காமயே கிளம்பிட்டாப்ல.

சித்தூரு ஊரு சின்னதா இருந்தப்ப வேற கதை. ஒவ்வொரு கடைகாரருக்கும் தன்னோட ஒவ்வொரு கிராக்கியோடவும் பர்சனல் டச் இருக்கும். இப்பம் எவன் முகத்தை பார்க்கிறான்? அந்த நிமிசத்துல சத்யாவோட மன நிலைய வர்ணிக்கனும்னா தனிப்பதிவே போடனும். தீபாவளி பர்ச்சேஸ் மட்டும் ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு செய்துட்டு வந்திருக்கிற பார்ட்டி. என்னமா ஃபீல் பண்ணியிருப்பாருன்னு நினைச்சுப்பாருங்க.

பில்லு எவ்ளோங்கறிங்க? கரீட்டா நாப்பது ரூவா. நாம படக்குனு எடுத்து நீட்ட சத்யாவுக்கு ஒரே ஆச்சரியம் . ( இவன் முப்பதுக்கு மேல வச்சிருக்க
மாட்டானே..அதுலயும் நேரம் இப்ப ராத்திரி எட்டாகுதே)

ராத்திரி எட்டுங்கறது சத்யாவோட டீ டைம். கடைலருந்து "டுப்கி"அடிச்சாவது டீ குடிக்கிற கிராக்கி.ஆனால் அவர் கையிலயும் கால் காசில்லை. நம்ம கையிலயும் காசில்லை.

புஸ்தவ கடைக்கும் - சத்யா கடைக்கும் மிஞ்சிப்போனா 100 அடி தூரமிருக்கலாம் அவ்ளதான்.ஆனால் கையறு நிலை.

சத்யாவுது மீனராசி.சனி எட்டை பார்க்கிறாரு. ரெண்டு மூனு வாரத்துக்கு மிந்திதான் 407 வேன் காரன் ரைட்ல பூந்து வண்டியோட டேஞ்சர் லைட்ஸ் காலி, நெம்பர் ப்ளேட் வளைஞ்சு போச்சு. இப்பம் இந்த மாதிரி.

இப்பம் சொல்லுங்க .ஜோதிடம் மூட நம்பிக்கையா?

Tuesday, October 5, 2010

உங்கள் எதிர்காலம்

வணக்கம் நைனா! இத்தீனி காலம் கண்டுக்காத விட்டுட்டாலும் அனுபவ ஜோதிடத்துல நீண்ட இடைவெளிக்கு பிறகு  நான் எழுதின பதிவுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கனும்னு முடிவு பண்ணி  மொதல்ல ஒரு கடி ஜோக்.

"ஏங்க அவரு உங்க கூட பிறந்த அண்ணனா?"
"இல்லிங்க எனக்கு ஒரு வருசம் முந்தியே பிறந்துட்டாரு"

ஒரு ஜோசியனா இருந்தாலும் கோசார பலன் சொல்றதுல எனக்கு விருப்பமே கிடையாது.ஏன்னா உங்க ஜாதகம் ஒரு காருனு வச்சிக்கிட்டா, தசாபுக்தி பலன் தான் ரோடு.அப்போ கோசாரம்? சொம்மா காத்து மாதிரி தான்.

உங்க வண்டி (ஜாதகம்) நல்ல மேக்கா இருந்து, ஷாக் அப்சர்பர் எல்லாம் பக்காவா இருந்தா ரோடு எப்படி இருந்தாலும் நோ ப்ராப்ளம். இதுல காத்து  முன்னே இருந்து அடிச்சா என்ன? பின்னே இருந்து அடிச்சா என்ன?

இந்த கோசார பலனெல்லாம் நடந்தா/பலிச்சா  உங்க ஜாதகத்துல சரக்கே இல்லேனு அர்த்தம்.

ஆனாலும் என்ன மயித்துக்கு கோசாரபலன் சொல்றேனு கேப்பிக.

சொல்றேன். நவகிரகங்கள்ள செவ்வா கீறாரே அவரு செமை பவர் ஃபுல்லு நைனா. மத்த கிரகமெல்லாம் செரியில்லைனா அது சரியில்லை இது சரியில்லேனு தனித்தனியா தான் சொல்வாய்ங்க. ஆனால் செவ்வா சரியில்லினா தோஷ ஜாதகம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.( இதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு)

ஜாதகத்துல மட்டுமில்லிங்கனா கோசாரத்துல கூட இவரு பவர்ஃபுல் தான். அக் 17 வரை துலால இருக்கிற இவரு அக் .17 அன்னிக்கு விருச்சிகத்துல வந்து உட்காராரு.
இங்கன ஒன்னரை மாசம் இருக்கப்போறாரு.இது இவருக்கு ஆட்சி வீடு. (இதனால நான் சில ராசிகளுக்கு  சொல்லப்போற தீய பலன் எல்லாம் ரெம்ப குறைய வாய்ப்பிருக்கு)

இத்தீனி நாளு இவரு சுக்கிரனுடைய வீடான துலாவுல இருந்தது தாய்குலத்துக்கு கலைஞர்களுக்குல்லாம் நல்லதில்லிங்கண்ணா. இவரு ராசி மாறிர்ரதால தாய்குலமும், கலைஞர்களும் ஒரு ஒன்னரை மாச காலத்துக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம். நடிகர் முரளி முதலானவர்களின் மரணத்துக்கு துலா செவ்வாயும் ஒரு காரணமே ( இது பொதுப்பலன் தான் - அவிகவிக  ராசிக்கு விருச்சிகம் வில்லங்கமான இடமா இருந்தா பல்பு வாங்கித்தான் ஆகனும்)

சனி செவ் தொடர்பு:
இது பா.ஜ.க காங்கிரஸ் கூட்டுமாதிரி அம்மாம் டேஞ்சர். ( அணு உலை நஷ்டஈடு மசோதா எப்படி நிறைவேறுச்சுங்கறது தெரியுமில்லை?)  சனி செவ் சேர்க்கைன்னு தனிப்பதிவே எழுதியிருக்கேன்.

என்னதான் நவகிரகதோஷத்துக்கு பரிகாரம், நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு கலக்கியிருந்தாலும்  சனி செவ் சேர்க்கை தொடர்புன்னா நமக்கு இப்பயும் டர்ருதான்.

ஆனால நம்முது கடகலக்னம். சிம்மராசி. லக்னாதிபதியும்,ராசி  நாதனும் பரிவர்த்தனம். இதனால  கோசாரத்துல லக்னம் தான் ரெம்ப ஒர்க் அவுட் ஆகும். லக்னத்தை வச்சி பார்த்தா செவ் சனி ஜீவன,அஷ்டமாதிபத்யம் பெற்றிருக்காய்ங்க. அதனால சனி செவ் தொடர்பு வரப்பல்லாம் நாம ரெம்ப பிஸியாயிருவம். (வேறு சில சைட் எஃபெக்ட்ஸ் உண்டு இல்லேங்கலை) இருந்தாலும் டர்ருதான்.

என்னைக்குமில்லாத திரு நாளா கோசார பலன் எழுத இதுவும் ஒரு காரணம் . சனி கன்னியில இருக்காரு. செவ்வாய் விருச்சிகத்துக்கு வரப்போறாரு.அப்படி வந்தா சனி தன்னோட 3 ஆம் பார்வையா செவ்வாயை பார்ப்பார். இதுல மொதல் பல்பு யாருக்குன்னா விருச்சிகத்துக்குத்தான். அடுத்து இவிக ரெண்டு பேரோட பார்வையும் கூட்டா விழறது மிதுன ராசி மேல. இவிகளும் ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்.

இப்படி சனி செவ் தொடர்பு ஏற்படறாதல என்னடா வில்லங்கம்னா ரெண்டு கிரகமும் அனுகூலமா இருந்தா தான் பலனை பெற முடியும்.இல்லின்னா நாஸ்திதான்.

யாருக்கு அனுகூலம்?
அக்டோபர் 17 முதல் செவ்வாய் வந்து தங்கப்போற விருச்சிக ராசி  மகரத்துக்கு 11 ஆமிடம் இது ஓகே , சனியும் 9ல தான் இருக்காரு.(இது கெட்ட இடம் கிடையாது) சனி செவ் தொடர்பால ரெம்ப காலமா  பெண்டிங்ல இருந்த சொத்து, சேவிங்ஸ், தூர தேச தொடர்பு பற்றிய  மேட்டருங்க ஐஸா பைசானு செட்டில் ஆகலாம்.

கும்பத்துக்கு விருச்சிகம் 10 ஆமிடம் இது செவ் க்கு நல்லதுதான். ஆனால் சனி அஷ்டமத்துல மாட்டினாரே .அதுனால ஜஸ்ட் கொஞ்சம் கேர்லெசா இருந்தாலும் ரெட் மார்க் கியாரண்டி ( ரத்த காயமுங்கோ)

மிதுனத்துக்கு விருச்சிகம்  6 ஆமிடம் இது நல்லதுதான், ஆனால் சனி செவ்வாயோட   பார்வைகள் இவிக ராசி மேலயே விழறதால தையல் விழற அளவுக்கு கூட ரெட் மார்க் விழலாம்.டேக் கேர்.

கன்னிக்கு விருச்சிகம்  3 ஆமிடம்ங்கறதால இது ஓகே.ஆனா சனி ஜன்ம சனியா இருக்காரே. இதனால இவிகளுக்கும் ஆபத்து காத்திருக்கு.

கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் அனுகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் வேட்டையாடி விளையாடலாம். பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஒன்னு ரெண்டு  ஃபாலோ பண்ணுங்க  நல்ல பலன் வேகம் பிடிக்கும்.

யாருக்கு பிரதிகூலம்?
மேஷம், ரிஷபம் ,கடகம் ,சிம்மம், துலா, விருச்சிகம், தனுசு , மீனம் ராசிக்காரவுகளுக்கெல்லாம்  பிரதி கூலம்.

கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் பிரதிகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் உசாரா இருந்தா சரி. பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஃபாலோ பண்ணுங்க ( இப்படியாச்சும் தமிழ் நாட்ல வெட்டு குத்து கொலை விபத்தெல்லாம் குறையட்டும்பா)
எச்சரிக்கை:
என்னதான் ஜூம் போட்டு பார்த்து சொன்னாலும் இந்த பலன் எல்லாம் ப்ரிலிமினரிதான். உங்க ஜாதகம், தசாபுக்தி பலன் களை பொருத்து கூடும் குறையும்.

இப்ப கொஞ்சம் தனி தனி ராசிக்கு  டீப்பா பார்ப்போம். 

மேஷம்:
இவிகளுக்கு செவ்வாய்  1,8 க்கு அதிபதி. இவர் எட்டுல வர்ரது கொஞ்சம் கூட நல்லதுல்லிங்கண்ணா. ஜாதகத்துக்கு லக்னம்தான் கடைக்கால் மாதிரி. அந்த லக்னாதிபதியே எட்டுல மறைஞ்சா நாஸ்திதான். எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி ஆயிருவிங்க, ஸ்டெடி மைண்ட் இருக்காது. ஹெல்த் ட்ரபுள் கொடுக்கும். கோபம் அதிகரிக்கும். ரெம்ப சாக்கிரதையா இருக்கனும். ஒரு சிலருக்கு மரண சம்பந்தமான வருமானம் வரலாம்.( உ.ம் எல்.ஐ.சி நஷ்ட ஈடு, உயில் வழி சொத்து)
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 10,11 க்கு அதிபதி இவருக்கு 1,8க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்பட்டதால தொழில் சூடுபிடிக்கும் ,டென்ஷன் கூடும். சின்ன சின்ன காயங்கள் ஏற்படலாம். மூத்த சகோதர சகோதரிக்கு ஆபத்து ஏற்படலாம்.அ அவிகளோட முட்டல் மோதல் பிரிவு ஏற்படலாம்.

ரிஷபம்:
இவிகளுக்கு செவ்வாய்  12, 7 க்கு அதிபதி. இவர்  ஏழுல  வர்ரது கொஞ்சம் வில்லங்கமானது தான். 7ன்னா மனைவி. அவிகளை காட்டற இடத்துல செவ் உட்கார்ரது நல்லதில்லை. 7ல நின்ன கிரகம் லக்னத்தையும் பார்க்கும்(உங்களை) செவ்வாய் காரகத்வம் வகிக்கும் பொருட்களால் வாழ்க்கை துணை(வரு)க்கும், உங்களுக்கும்  இம்சை கஷ்டம் நஷ்டம் ஏற்படும்.
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 9,10 க்கு அதிபதி. 9+12 காரணமா முதலீடு விரயமாகலாம். அப்பாவுக்கு ஹெல்த் ட்ரபுள் அ அவரால ட்ரபுள் வரலாம். அதே சமயம் 9+7 காரணமா  மனைவி செய்தொழில்ல உதவலாம். மனைவியால ஒரு சொத்து கூட சேரலாம்.

மிதுனம்:
இவிகளுக்கு செவ்வாய் 11,6 க்கு அதிபதி .இவர் ஆறுல வர்ரது நல்லதுதான். இதனால சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது)  ஏற்படும். 11க்கு அதிபதி 6 ல வர்ரதால லாபம்ங்கறது சின்னதா ஒரு லிட்டிகேஷன்,வாக்கு வாதத்தோட வரும். உங்க மூத்த சகோதர சகோதிரியோட பிரச்சினை வரலாம்.அ அவிகளூக்கு எதுனா பிரச்சினை வரலாம். பாதம், முட்டிக்கு இடையில உள்ள பகுதில சின்ன பிரச்சினை வரலாம்.

சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 8,9க்கு அதிபதி இவருக்கு 6,11 அதிபதியோட தொடர்பு காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது) பெரிய அளவுல நடக்க வாய்ப்பு ஏற்படுது. அடுத்து சொன்ன எல்டர் ப்ரதர் சிஸ்டர் விவகாரம் கூட மேஜரா நடக்க வாய்ப்பு ஏற்படுது.

கடகம்:
இவிகளுக்கு செவ்வாய் 10,5  க்கு அதிபதி .இவர் அஞ்சுல ஒரு வகையில சூப்பர். . இதனால இதனால் செய்தொழில்ல நல்ல மாற்றம் வளர்ச்சி ஏற்படும்,பெயர் புகழ் கிடைக்கும். அதிர்ஷ்டம் கதவை தட்டும். ஆனால் வாரிசுகளுக்கு ரத்தகாயம், உங்களுக்கு சின்னதா புத்தி குழப்பம், முன்  கோபத்தால் விரோதங்கள்  ஏற்படலாம். தர்கத்துல (லாஜிக்) விளையாடுவிக. எதிரிகளாலயே லாபம் ஏற்படும்னா பார்த்துக்கங்களேன்.

சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி 7,8க்கு அதிபதி. இவருக்கு 10,5க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறதால டீன் ஏஜர்ஸுக்கு தெய்வீக காதல் ஏற்படலாம் (7+5)  வேலையில்லாதவுகளுக்கு வேலை கிடைக்கலாம், தொழில் சூடு பிடிக்கலாம் (10+8). செய்தொழில்ல மனைவியோட உதவி தேவைப்படலாம்.வாரிசுகளுக்கு கால், நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.


சிம்மம்:
இவிகளுக்கு செவ்வாய் 9,4 க்கு அதிபதி .இவர் 4 ல  வர்ரது நல்லதுதான். இதனால வீட்டு மனை வாங்கறது, வீடுகட்டறது,வாகனம் வாங்கறது, எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கறது பிதுரார்ஜித சொத்து கைக்கு கிடைக்கிறது ,சேமிப்பு கைக்கு வர்ரதுல்லாம் நடக்கலாம். அம்மாவோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகமா இருக்கும். கண்ணாலமானவுக  மாமியார் -மருமக சண்டையால சிண்டை பிச்சுக்க வேண்டி வரும்.

இவிகளுக்கு சனி 6,7 க்கு அதிபதி.இவர் 9,4க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால சொத்து மேல கடன், அப்பாவோட வாக்கு வாதம் நிகழலாம். கடன் வாங்கி பொஞ்சாதியோட தூர பிரயாணம் பண்ண வேண்டி வரலாம். முழங்கால்ல பிரச்சினை வரலாம். தாய் வீடு வாகனம் தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். கண்ணாலத்துக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கிறவுகளுக்கு தாய் அ தந்தை வழில வரன் தகையலாம். ( 7+ 4/9)

கன்னி:
இவிகளுக்கு செவ்வாய் 8,3 க்கு அதிபதி .இவர் 3 ல  வர்ரது ஒரு வகையில  நல்லதுதான். இதனால மனசுல தன்னம்பிக்கை ,  தைரியம் அதிகரிக்கும்.பிரயாணங்களால அனுகூலம் ஏற்படும் இசைத்துறையில உள்ளவுக சாதனை படைப்பாய்ங்க. அண்ணன் தம்பிகளோட விவகாரம் இருந்தா உங்க பக்கமா தீர்மானமாகும். ஆனால் இளைய சகோதரன், சகோதிரிக்கு எதுனா தீமை   நடக்கலாம். அல்லது படிப்பு, திருமணம் ,தொழில் காரணமா அவிக பிரிஞ்சு போறதும் நடக்கலாம்.

சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி  5,6 க்கு அதிபதிங்கறதால இவர் 8,3 க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால குழந்தைகளுக்கு சிரமம், அபார்ஷன், அவியளுக்கு அலைச்சல் அ அவிகளால அலைச்சல் ஏற்படலாம். அவப்பெயர் அவமானமும் கிடைக்கலாம். அதே நேரம் 6+8 காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது)  ஏற்படும்.

துலா:
இவிகளுக்கு செவ்வாய் 7,2 க்கு அதிபதி .இவர் 2 ல  வர்ரது   நல்லதுதான். இதனால மனைவியால வருவாய் கூடும், அவிகளோட நெடு நாளைய கோரிக்கையை நிறைவேத்துவிக.( பெருசா ஒன்னுமில்லிங்கண்ணா ஏதோ ஒரு வீட்டு மனை அல்லது எலக்ட்ரிக்கல் சாமான் அம்புட்டுதேங்)   கொடுத்த வாக்கை நிறைவேத்த துடிப்பிக.  அதே நேரத்துல உங்களையும் அறியாம வார்த்தைகள் சூடா வந்துரலாம். கண் சிவக்கலாம். தொண்டைல ரணம் ஏற்படலாம். குடும்பத்துல சூடான வாக்கு வாதங்கள் நடக்கலாம். டேக் கேர்

இவிகளுக்கு சனி 4,5 க்கு அதிபதி.இவர் 7,2க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால வீடு,வாகனம் விற்பனை அ வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டி வரலாம் (4+2)  .கண்ணாலமாகாதவுகளுக்கு தாய் வழியில பழைய விரோதம் உள்ள உறவுல திருமணம் தகையலாம். பரிசா,இன்ப அதிர்ச்சியா சில்லறை புரளலாம். ஒரு சிலர் தங்கள் பூர்வ ஜென்ம காதலியை சந்திக்க வேண்டி வரலாம்.

விருச்சிகம்:
இவருக்கு செவ் . 6,1க்கு அதிபதி. லக்னத்துலயே வந்து ஆட்சி பெறுகிறார். இதனால ஹெல்த் இம்ப்ரூவ் ஆகும் (லேசா உஷ்ண கோளாறு இருக்கலாம்) தன்னம்பிக்கை மிகும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். ரெம்ப நாளா பெண்டிங்ல இருந்த கடன் ஒன்னு தீர்ந்து   நிலம் அ எலக் ட்ரிக்கல் பொருள் வாங்க புதுசா கடன் வாங்க வேண்டி வரலாம். எதிரிகள் லேசா சலசலப்பு காட்டுவாய்ங்க. சாதாரணமாவே குறை கண்டே பேர் வாங்கும் புலவர் நீங்க. அந்த குணம் இப்போ கொஞ்சம் அதிகமாகலாம்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 3,4 க்கு அதிபதி. இவருக்கு 6,1க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால தாய், மற்றும் இளைய சகோதரம்  நோய்வாய்படலாம் அ தகராறு பண்ணலாம். தில்லு துரையாயிருவிங்க.

தனுசு:
இவருக்கு செவ் 5,12க்கு அதிபதி. இவரு 12 ல ஆட்சி பெறுவது நல்லதல்ல. இதனால அவமானம்,துரதிர்ஷ்டம்,புத்தி தடுமாற்றம், கோபம், மின்சாரம்,ஆயுதம் இத்யாதியால நஷ்டம் ஏற்படலாம். செலவுகள் பிச்சிக்கிட்டு போவும். ஃபேன் வைண்டிங்ல புகை வந்துர்ரது,பல்புங்க ஃப்யூஸ் போறதெல்லாம் சகஜமா நடக்கும். பரிகாரம் கட்டாயம் செய்துக்கனும். நிலம், பெரிய எலக்ட் ரிக்கல் பொருள்  விற்பனைக்கு முயற்சி பண்ண வேண்டியிருந்தா செய்யுங்க.சக்ஸஸ் ஆகும். தோஷமும் பரிகாரமாகும்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 2,3 க்கு அதிபதி. இவருக்கு  5,12க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால திடீர் பணவரவு ஏற்பட்டு , திடீர் செலவுகளுக்கு உதவலாம். சகோதரம் மூலமா அதிர்ஷ்டம் கதவை தட்டலாம்.  வாக்குவாதம் ஏற்படலாம்.கண்,வாய்,தொண்டை தொடர்பான பிரச்சினை வரலாம்.

மகரம்:
இவிகளுக்கு செவ் 4,11க்கு அதிபதி இவரு 11ல ஆட்சி பெறுவது நல்லதே. இன்னொரு மனை வாங்கறது (அடிஷ்னல்), இன்னொரு எலக்ட்ரிக்கல் பொருள் /வாகனம் வாங்கறதும் நடக்கலாம். ஜாதகத்துல பசை இருந்தா இன்னொரு வீடே கூட வாங்குவிக. பெரியம்மா, சித்தி மாதிரி தாய் வழி உறவுகள் வந்து போவாய்ங்க.அவிகளால லாபமும் ஏற்படலாம். எதிரிகளாலயே லாபம் , நன்மை ஏற்படும்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,2 க்கு அதிபதி.இவருக்கு 4,11 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால ஒரே நேரத்துல 2 விதமான யோசனை,புத்தி தோணும். டபுள் ட்யூட்டி பார்க்க வேண்டி வரலாம். சின்னதா சைட் பிசினஸுக்கு சான்ஸ் மாட்டலாம். தாய் வீடு வாகனம் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கலாம். இந்த  வகையறாவில் செலவும் ஏற்படலாம். ஒன்னுக்கு ரெண்டா பேசி வம்பை விலை கொடுத்து வாங்கலாம்.

கும்பம்:
இவிகளுக்கு செவ் 3,10க்கு அதிபதி இவரு 10ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால செய்யற தொழில்ல சகோதர சகோதிரிகளோட ஒத்துழைப்பு கிடைக்கலாம். செய் தொழிலிலான முன்னேற்றம் மனதில் தைரியத்தை கூட்டும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு குறிப்பிடத்தக்க  முன்னேற்றம் ஏற்படும். அஷ்டம சனியால ஓஞ்சு போயிருக்கிற இவிகளுக்கு இது நிச்சயமா நல்ல ரிலீஃபை கொடுக்கும். இருந்தாலும் அஷ்டம சனி சமயம் பார்த்து வேலை கொடுத்துராம இருக்க சைவமா மாறிருங்க. ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,12 க்கு அதிபதி இவருகு  3,10 க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறது அந்த அளவுக்கு நல்லதில்லை. தைரியலட்சுமி துணையிருப்பாள்.தொழில் மேல கவனம் கூடும். இளைய சகோதரத்தால செலவு ஏற்படலாம். சேல்ஸ் லைன்ல உள்ளவுகளுக்கு பெட்டரா இருக்கும். தயாரிப்பு துறையில உள்ளவுகளுக்கு விரயம் கூடும்.

மீனம்:
இவிகளுக்கு செவ் 2,9க்கு அதிபதி இவரு 9ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால சில்லறையா சேர்த்த பணம் ஒரு முதலீடா ( வீட்டு மனை/ அ எலக்ட்ரிக்கல் பொருள்) மாறும். பல காலம் நான் ஃபங்ஷனிங் ப்ராப்பர்ட்டியா இருந்தது கைக்கு வந்து செலவுக்கு உதவும். குடும்பத்தோட தீர்த்தயாத்திரை போய்வரவும் வாய்ப்பிருக்கு. தெற்கு திசை அ ஒரு முருகனோட சேத்திரத்துக்கு போய் வருவிக. அப்பாவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் அவருக்கு கொஞ்சம் கோபம் அதிகமாயிரும். ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதியும் வரலாம்.ஏற்கெனவே இருந்தா அது அதிகரிக்கலாம். எழுத்து, ப்ளாக் துறையில் உள்ளவுகளுக்கு டர்னிங் பாயிண்ட் ஏற்படும் தூர தேசத்துலருந்து சில்லறை தேறும்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 11,12க்கு அதிபதி . இவருக்கு 2,9 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால பேச்சு திறமை கை கொடுக்கும்.அப்பப்போ வேலையும் காட்டிரும். கொடுக்கல் வாங்கல் சூடு பிடிச்சாப்ல பிடிச்சு உட்கார்ந்துக்கும். அப்பாவோட உறவு மேம்பட்டாப்லயே இருந்து படக்குனு அத்வானமாயிரும்.


செவ்வாய் காரகத்வம் வகிக்கும் விசயங்கள்: ( செவ்வாயே உங்க கிட்ட பேசற மாதிரி எழுதியிருக்கேன்.)
(செவ்.அனுகூலமா இருந்தா இந்த விசயங்கள்ள லாபம் ஏற்படும். பிரதிகூலமா இருந்தா நஷ்டம் ஏற்படும்)

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

எச்சரிக்கை: 2
விருச்சிக செவ்வாயை கன்னியில் உள்ள சனி பார்வையிடுவதால் தங்களுக்கான பலனில் சனி அனுகூலமாக உள்ளார்  என்று குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் நன்மை ஏற்படும். ஒரு வேளை சனி உங்கள் ராசிக்கு பிரதி கூலம் என்று  குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் தீமை ஏற்படும். ( தன் காரகத்வங்களை சனியே கூறுவது போல் தன்னிலையில் கூறியுள்ளேன்)

சனியின் காரகத்வம்:
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.
பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
இந்த பதிவை மனசுல வச்சிக்கிட்டா அடுத்த ( அக் .17 முதல்) ஒன்னரை மாசம் பெருசா பிரச்சினையில்லாம ஓடிரும் பாஸ். எதுக்குனா நல்லது சனி செவ்வாய் சேர்க்கைங்கற என் பழம்பதிவையும் ஒரு ஓட்டு ஓட்டிட்டிங்கனா பக்கா

பி.கு: அப்பாடா ! இன்னம் ஒன்னரை மாதம் ப்ளஸ் 12 நாளைக்கு இந்த பதிவு சக்கை போடு போடும்