'>

Saturday, January 7, 2012

விபத்து : சுந்தரேசன்

எச்சரிக்கை:( சித்தூர்.முருகேசன்)

சுந்தரேசன் அய்யா அவர்கள் நம் வலைப்பூ/வலைதளத்தில் எழுத ஆரம்பித்த பிறகு ஹிட்ஸ் அள்ளிக்கிட்டு போகுது (?) பதிவின் தலைப்பில் உள்ள statcounter தளத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை பாருங்க.

அய்யாவின் பதிவுகளின் எண்ணிக்கை 3 . மூன்று நாட்களுக்கு முன் தம் தளத்தின் வருகைகள் 294 , 330 தேன்.

ஆனால் அய்யா எழுத ஆரம்பிச்ச பிற்காடு அது 414 ,418,368,480ன்னு இஷ்டத்துக்கு எகிறிப்போச்சு.

ஆக அய்யா வருகைக்கு முன்னான சராசரி 318 அய்யா வருகைக்கு பின் சராசரி 420.

ஆக அய்யா வருகைக்கு பின் சராசரியாக நம் தளத்தின் வருகைகள் 102 வரை அதிகரிச்சிருக்கு.

அண்ணாருக்கு நம் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

எவ்வித அப்டேஷனும் இல்லாம நம் நிர்வாண உண்மைகள் வலைப்பூவிற்கான வருகைகளை கீழ் காணும் படத்தில் காணலாம். படத்தை பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்து கண்ட்ரோல் மற்றும் + பட்டனை அழுத்தவும்.





அய்யாவின் வருகைக்கு முன்னான 2 நாள் வருகைகள் (அனுபவஜோதிடம் தளம்) மற்றும் வருகைக்கு பின்னான 3 நாள் வருகைகளை கீழ் காணும் படத்தில் காணலாம்.


அய்யாவின் விபத்து பதிவு இங்கு துவக்கம். அய்யா அலச உள்ள உதாரண ஜாதகத்தை கீழே காணலாம்.

அஸ்ட்ராலஜியில் அனாட்டமி (உடலியல்)" படைப்பை ஒரே நாளில் இரண்டாயிரத்தி பதினேழு பேர் படித்திருக்கிறார்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். உங்களின் அன்பான
பேராதரவினால்அடுத்தடுத்த படைப்புகளை எழுதும் பொழுது ஒருவித பயமும்
தொற்றிக் கொண்டுள்ளது. ஏனெனில் வாசகர்கள் என் மீது நம்பிக்கை வைத்து,
என்னிடம் இன்னும் பல விஷயங்களை எதிர்பார்ப்பதை நினைக்கும் பொழுது
பதட்டமாகவும் உள்ளது.

தொடர்ந்து எனது படைப்பை படித்து வாருங்கள். ஜோதிட உலகில் சூறாவளியை கிளப்பும்விதமாக பல படைப்புகளை உங்களுக்கு தரவிருக்கிறேன். எனது படைப்புகளுக்கு அதிக ஹிட்ஸ் கிடைத்ததற்கு ஒத்துழைப்பு நல்கிய திரு.சித்தூர் முருகேசன் ஐயா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொண்டு இந்த படைப்பை தொடர்கிறேன்.



மேலே உள்ள ஜாதகம் எனக்கு நன்கு அறிமுகம் ஆன நண்பருடையது. இந்த ஜாதகருக்கு
எதிர்பாராதவிதமாக விபத்து நடந்து ஒன்றை மாதகாலமாக ஆஸ்பத்திரியில் அட்மிட்
ஆகி சீரியஸ் நிலையிருந்து உயிர் தப்பியவர்.

விபத்து நடக்கும் என்று எப்படி ஜாதகத்தை பார்த்து சொல்வது?

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் சனியின் சேர்க்கை அல்லது பார்வை இருந்துவிட்டால்
அது விபத்து ஜாதகம் ஆகும். அத்துடன் ராகு அல்லது கேதுவின் சேர்க்கை
அல்லது 3-11 இடங்களில் செவ்வாய், சனி அமர்ந்து விட்டால் விபத்து ஜாதகமே.

மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாய் ரிஷபத்திலும் சனி விருச்சிகத்திலும்
அமர்ந்து தங்களுக்குள் நேர் ஏழாவது பார்வையில் அமர்ந்துள்ள கிரகநிலை
விபத்து நடக்கும் என்பதை காட்டுகிறது.

மேலும் செவ்வாய் ரிஷபத்தில் உள்ளது. ரிஷபத்திற்கு 11 ல் ராகு உள்ளது.
விருச்சிகராசியில் உள்ள சனிக்கு 11 ல் கேதுவும் உள்ளது. எனவே விபத்து
உறுதியாக நடக்கும் என்பது தெளிவாகிறது. இங்கு விபத்து நடக்க
ராகு-கேதுக்களே முக்கியத்துவம் வகிக்கிறது. எப்படி?

பிறந்த ஜாதகத்தில் செவ்வாய்க்கு 3 ல் கோச்சார கேது உள்ளது. பிறந்த கால
சனிக்கு 3 ல் கோச்சார ராகு உள்ளது. இக்கிரக அமைப்பே தற்போது விபத்து
நடக்கக் காரணம் ஆகும்.



பிறந்த ஜாதகத்தில் செவ்வாய்க்கு 11 ல் ராகு இருக்கிறார். அதே போல் சம்பவ
நேரத்தில் 3 ல் கேது இருக்கிறார்.

பிறந்த ஜாதகத்தில் சனிக்கு 11 ல் கேது இருக்கிறார். அதே போல் சம்பவ
நேரத்தில் 3 ல் ராகு இருக்கிறார்.

மேலும் இவருக்கு சம்பவத்தின் போது (12-10-2008) சனி தசையில் ராகு
புக்தியில் செவ்வாய் அந்தரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பிறந்த கால
சந்திரனுக்கு 6 ல் சனியும், 12 ல் செவ்வாய் மற்றும் 10 ல் ராகுவும்
அமர்ந்து சம்பவத்தை நடத்தி உள்ளது. இக்கோர விபத்து நடந்து எண்ணி 45
நாட்கள் மருத்துவமனையில் இருக்கும்படி ஆனது.

விபத்தில் உயிர் பிழைத்ததற்கான காரணங்களை ஆராயும் பொழுது தசா நாதனின்
நட்சத்திரத்தில் நின்ற குரு முக்கியத்துவம் பெறுகிறார். மேலும்
கேதுவையும், சனியையும் பிறந்த கால குரு பார்ப்பது இன்னொரு காரணமாகும்.
பிறந்த கால குரு தன் வீட்டிலும், தசா நாதன் நட்சத்திரத்திலும் இருந்து
கேதுவை பார்ப்பதும் ஒரு சிறப்பு ஆகும். கூடவே இந்த சனி தசையில்தான் உயர்
பதவியும் வசதியும் அடையக்கூடிய நிலைக்கு வந்தார் என்பதும்
குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.




No comments: