'>
Showing posts with label ஸ்டாலின். Show all posts
Showing posts with label ஸ்டாலின். Show all posts

Thursday, December 1, 2011

ஸ்டாலின் இன்று விடியலில் கைது!



அண்ணே வணக்கம்ணே
நீங்க இந்த பதிவை படிக்கிறதுக்குள்ள ஸ்டாலின் அண்ட் கோ கைது செய்யப்பட்டிருக்கலாம். சென்னை சித்தரஞ்சன் தாஸ் சாலையில் (தேனாம்பேட்டை) உள்ள இடத்தை உரிமையாளர்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கியதாக ஸ்டாலின் ,உதய நிதி மற்றும் நால்வர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்காம்.
அந்த நால்வர் வேணு கோபால் ரெட்டி ராஜா சங்கர் சுப்பாரெட்டி ஸ்ரீனிவாஸ் .

ஐ.பி.சி 506,120 இன்னபிற செக்ஷன்ஸ்ல கேஸ் ஃபைல் ஆயிருக்கு. என்.எஸ்.குமார் என்பவர் தந்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கு. இந்த தகவலையெல்லாம் சென்ட்ரல் கிரைம் ப்ராஞ்ச் அதிகாரிகளை மேற்கோள் காட்டி சாட்சி தினசரி செய்தி வெளியிட்டிருக்கு.

பி.கு:.இந்த பக்கம் நமக்கும் .சோதனை மேல் சோதனை . சிஸ்டம் கோமாவுக்கு போயி திரும்பி சகட்டுமேனிக்கு அலம்பல் பண்ண ஆரம்பிச்சிருச்சு. அதனால கிரகமும் கடவுளும் வரிசையில் சந்திரனை பற்றிய பதிவை மதியத்துக்குள்ள போட்டுர்ரன்.

எச்சரிக்கை: கமெண்ட் சைஸ்ல நாங்களும் ஒரு பதிவு போட்டாச்சுங்கோவ்..

Saturday, April 9, 2011

ஸ்டாலின்,அழகிரி எதிர்காலம்: 2

கடந்த பதிவுல மு.க.அழகிரி மற்றும்  மு.க.ஸ்டாலினோட பெயர் எண்ணை அடிப்படையா கொண்ட சில பலனை தந்திருந்தேன்.ஆனால் சரக்கு நம்முதில்லைன்னு சொன்னது ஞா இருக்கலாம். சோர்ஸ் :http://www.tamilkalanjiyam.com

இப்பம் நம்ம சொந்த சரக்கை அவிழ்த்துவிடறேன். வெறும் எண்கணிதத்தை வச்சு சொல்றது நம்ம மெத்தட் இல்லிங்கண்ணா.

Read More

Friday, April 8, 2011

ஸ்டாலின்,அழகிரி எதிர்காலம்

M.K.Stalin (23)

பெயர் எண் கூட்டுத்தொகை :  23

பெயர் எண்:   5

பெயர் எண் பலன்கள்:

23. 5 வரும் எண்களிலேயே இது மிகவும் அதிர்ஷ்டமானது. இந்த எண் வருகிற பெயரை உடையவர்களுக்கு எடுத்த காரியங்களிலும், எண்ணுகிற எண்ணங்களிலும் வெற்றி உண்டாகும். இவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக வெற்றி பெறும். பிறருக்குச் செய்வதற்கு அரியதாகத் தோன்றும் காரியங்களும் இவர்களுக்கு எளிதாகக் கைகூடிவிடும். பெரிய திட்டங்களை மேற்கொண்டால் பிரபலமாவர். அதன் பயனாக உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதர்களின் ஆதரவும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களின் பாதுகாப்பும் கிடைக்கும். என்வே, இவர்கள் எப்போதும் பெரிய முயற்சிகளில் ஈடுபடுவதே நல்லது. இல்லையெனில் சோம்பல் நிறைந்த சுகவாழ்க்கையாக வாழ்வு முடிந்து விடும். இதை ராஜவசியம் மிகுந்த எண் என்பர்.

M.K.Alagiri ( 18)
பெயர் எண்:   9

பெயர் எண் பலன்கள்:

18. இந்த எண் தெய்விகத்தின் வீழ்ச்சியைக் குறிக்கும். இது கஷ்டங்களையும், வீண் தாமதத்தையும், சூழ்ச்சிகளையும், ஆபத்தான எதிரிகளையும் உண்டு பண்ணும். இந்த எண்ணைப் பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் சுயநலத்தால் தூண்டப்பட்டுச் சமூக விரோதமான காரியங்களில் ஈடுபடுவர். மனமறிந்து தவறான தீய காரியங்களைச் செய்வர். சுயநலம் வளரும், அருளும், அமைதியும் இல்லாத பாபகரமான வாழ்க்கை அமையும். ஆசைகள் நிராசையாகும்.
Source: Suspense