'>

Thursday, October 6, 2011

கொஞ்சல் மொழியும் எதிர்காலமும்

ஒரு சம்பவம்/ நிகழ்வு ஒரு பெரிய ஆலமரம்னு வைங்க . அதுக்கான விதை சில சமயம் 100 வருசம் ஏன் பல ஆயிரம் வருசத்துக்கு மிந்தியே விதைக்கப்பட்டிருக்கும். இதையெல்லாம் வாயா வார்த்தையா சொன்னா நம்ப மாட்டிங்க.
அண்ணாதுரை கடவுளே இல்லைனு பேசப்போறாரு . ஆனாலும் அவரோட பேச்சு தேனா இனிக்கனும். சனம் மயங்கனும். அவரோட பேச்சே அவரை சிகரங்கள்ள ஏத்தி வைக்கனும்.

இதுக்கு இயற்கை என்னவிதமான ஏற்பாடுகளை செஞ்சதுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவிங்க. அண்ணாவோட அப்பா மாசாமாசம் திருச்செந்தூர் செந்திலாண்டவருக்கு தேன் அபிஷேகம் - என்ன அபிசேகம்? தேன் அபிஷேகம் செய்தாரு. இதனோட விளைவா அண்ணாவோட பேச்சு தேனா இனிச்சது. சனம் மயங்கியது. அவரை சிகரங்களுக்கு ஏத்தி வச்சது.

இது சீரியஸ். இப்பம் கொஞ்சம் ஃப்ரீயா பேசுவம். ஆம்பளைங்க காதலிக்கிறச்ச அ கண்ணாலமான புதுசுல காதலி/ புதுப்பெண்டாட்டிய விதவிதமா கொஞ்சுவாய்ங்க. ஆனால் அவிக கொஞ்சல் வார்த்தையில அவிக எதிர்காலத்துல அந்த பு.பெ காரணமா எப்படியெல்லாம் அவதிப்படப்போறாய்ங்கன்ற மேட்டர் அடங்கியிருக்கு.

உதாரணத்துக்கு சிலதை பார்ப்போம்

1.மலரே:
நாளைக்கு அவிக கேட்டதை வாங்கித்தராட்டா படக்குனு வாடி - உங்களையும் வாடச்செய்யப்போறாங்கனு அர்த்தம்.

2.மின்னலே;
உங்க சம்பள கவரை கைல வாங்கறச்ச மட்டும் மின்னப் போறாங்கனு அர்த்தம்.

3.மயிலே:
சின்னதா பார்ட்டின்னு வீட்டுக்கு லேட்டா வந்தா அவிக அவ்ள மோசமா கத்தப் போறாங்கனு அர்த்தம்.

4.குயிலே:
அட்சய திருதியை மாசக்கடைசியில வந்தாலும் நகை வாங்க காசு தரலேன்னா அவிக முகம் குயிலைவிட மோசமா கருக்கப்போவுதுன்னு அருத்தம்

5.அன்னமே:
உங்க கிட்டே இருக்கிற ப்ளஸ் -மைனஸ் எல்லாத்தையும் பிரிச்சு எடுத்து மைனசை (மட்டும்) நட்பு உறவு வட்டம் முழுக்க டாம் டாம் போட போறாங்கனு அர்த்தம்.

6.தாமரையே:
அவிக உற்வுக்காரங்க வர்ர சமயம் மட்டும் அவிக முகம் சூரியனை கண்ட தாமரை மாதிரி மலரப்போகுதுன்னு அருத்தம்

7.ஏந்திழையே:
சம்பளப்பணத்தை /வந்த காசு பணத்தை கண்டபடி செலவழிச்சு மாசக்கடைசீல கண்டவங்கிட்டே கை "ஏந்த" விடப் போறாங்கனு அர்த்தம்.

8.கோ....தையே :

3 மாசத்துல "கோ"வென கதறச்செய்து நடந்து போன நஷ்டங்களை நினைச்சு "தை தை"னு குதிக்க வைக்கப் போறாங்கனு அர்த்தம்.

9.நிலவே:
மாசத்துக்கு ஒரு நாள் தான் பவுர்ணமி

10. தேவதையே:
நகைக்கடைக்கு போகலாம்னா "றெக்கை" கட்டிக்கிட்டு பறக்க போறாங்கனு அர்த்தம்.ஷோரூம் போனபிற்பாடு
கண் சிமிட்டவே மறந்துர போறாங்கனு அர்த்தம்.

11.பாவையே:
அவிக ஆத்தாக்காரி ஆட்டிவச்சபடியெல்லாம் ஆடி பாவைக்கூத்து நடத்தப்போறாய்ங்கனு அருத்தம்.

12.கிளியே:
அவிக ஆத்தா சொன்ன பேச்சை எழுத்து தப்பாம கிளிப்பிள்ளை கணக்கா ஒப்பிக்கப்போறாய்ங்கனு அருத்தம்.

No comments: