'>
Showing posts with label planets. Show all posts
Showing posts with label planets. Show all posts

Friday, December 2, 2011

செவ்வாயும் -முருகனும்


அண்ணே வணக்கம்ணே

எந்த கிரகம் சரியில்லின்னா எந்த கடவுளை வணங்கனும்னு ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன். அதுல செவ் சரியில்லின்னா முருகனை வணங்கனும்னும் சொல்லியிருந்தேன். அது நம்ம தனுஸ் எழுதின கொலை வெறி பாட்டு மாதிரி டுபாகூரு கிடையாது.அதுக்கு பல காரண காரியங்கள் இருக்கு. செவ்வாய்க்கும் ,முருகனுக்கும் பத்துக்கு பத்து பொருத்தம் இருக்கு.

முருகனை வணங்கினா செவ் தரக்கூடிய பிரச்சினைகள் குறையும். (உ.ம் ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள், நில தகராறுகள்,எதிரிகள்,போட்டியாளர்களால் பிரச்சினைகள் , நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடுகள் )

மொதல்ல முருகனுக்கும் செவ்வாய்க்குமான ஒற்றுமைகளை பார்ப்போம்.

செவ் நெருப்பு கிரகம். முருகன் சிவனார் நெற்றிக்கண்ணின் ஆறு பொறிகளாய் பிறந்து 6 குழந்தைகளாய் மாறியவர்.

செவ் போட்டிக்கு காரகம்.முருகன் ஆஃப்டர் ஆல் ஒரு மாங்கனி கிடைக்கலின்னு மயிலேறி மூவுலகை சுற்றி வந்தவர்.

செவ் கோபத்துக்கு காரகம். உள்ளாட்சி தேர்தல்கள்ள ரிசல்ட்டை மாத்தி லந்து பண்ண கணக்கா போட்டியில் ஜெயிச்ச தனக்கு மாங்கனி தரலைன்னு கோவிச்சுக்கிட்டு போனவர்.

செவ் யுத்தத்துக்கு காரகம். முருகன் அவதாரமே ஒரு மெகா யுத்தத்துக்கானது. (சூர சம்ஹாரம்) செவ் கிரகங்களின் சேனாதிபதி (கமாண்டர் ஆஃப் தி ப்ளேனட்ஸ்) முருகன் தேவசேனாதிபதி.

செவ் ரத்தத்துக்கு காரகம். முருகன் வேட்டுவ பெண்ணை (குறமகள்) மணந்ததால் அவருக்கு தேன் முக்கிய நிவேதன பொருள். தேனுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

முருகனுக்கு பௌமன் என்றும் ஒரு பெயர் இருப்பதாய் ஞா. இந்த வார்த்தை பூமி என்ற வார்த்தையிலிருந்து வந்தது. செவ் பூமிகாரகன்.

செவ் இளையவர்கள்/ யூத்தா காட்சியளிப்பவர்களுக்கு காரகர் .(கௌமார ஸ்வரூபம்) .முருகனுக்கு குமரன் என்றே பெயர் உண்டு. ( காட்ஸ்லயே செம யூத்து நம்மாளுதேன்)

இப்படி அக்கக்கா பிரிச்சு விளக்க ஒரு காரணம் இருக்கு. ஜோசியர் செவ் சரியில்லிங்க முருகன் கோவிலுக்கு போய் வாங்கன்னா மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடி போடறான்யா இந்தாளு. செவ் எங்கயோ இருக்காரு. முருகன் கோவில் நம்ம பேட்டையிலயே இருக்காரு ரெண்டுத்துக்கு என்னா சம்பந்தம்னு நீங்க நினைக்கப்படாது..

சோசியர் ஜஸ்ட் டாக்டர் மாதிரி. ஆரோ விஞ்ஞானிக தங்கள் வாழ்க்கைய தொலைச்சு கண்டுபிடிச்ச மருந்து மாயங்களை நோகாம எழுதி கொடுக்கிற டாக்டர்தான் ஜோசியர். ஜோசியர் அறிவாளியா இல்லாம இருக்கலாம்.ஆனால் ஜோதிட விதிகளை ஏற்படுத்திய ரிஷிகள் மகரிஷிகள் "சரக்குள்ள" ஆட்கள். எனவே சோசியர் சொன்னா கேட்டுக்கோங்க.


சந்திரனும் -கன்யாகுமாரியும்


அண்ணே வணக்கம்ணே !

நேத்து ஜாதகத்தில் /கோசாரத்தில் சூரியன் சரியில்லின்னா பரிகாரத்துக்கு செய்யவேண்டிய தெய்வீக விஷயங்களை சொன்னேன். இன்னைக்கு அவசர அடிக்கு ரங்கா கணக்கா ஸ்டாலின் கைது புரளிய போட்டு ஒப்பேத்திட்டன்.

நம்ம லக்னத்துக்கு 4 ல் சனி வேலை பார்க்காரு. என்ன ஒரு அஜீஸ்மென்டுன்னா அவரு ராசிக்கு 3 ல இருக்கிறதால அவரு எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாத்தேன் இருக்கு. இன்னொரு நா விஸ்தாரமா பேசுவம்.

இப்பமாச்சும் சந்திரன் மேட்டருக்கு போயிரலாம்.

சந்திரன்னா ரெண்டேகால் நாள்ள ராசிய விட்டு ஓடற ஆயா ராம் கயாராம் தானேன்னு நினைச்சுராதிங்க. இவரு மனோகாரகன். சனங்க மனசை ஒரு நொடியில மாத்தி ஆண்டிப்பண்டாரத்த கூட ஆன்டி பின்னாடி அலைய விட்டுருவாரு. இவரு ஜலகாரகன். நம்ம பாடியில 70 சதவீதம் வாட்டர் கன்டென்டுதேன்.

பவுர்ணமி நேரத்துல நமீதா நம்ம மைண்டை அட்ராக்ட் பண்றாப்ல சந்திரன் சமுத்திர தண்ணிய " இழுப்பாரு. சதா சர்வ காலம் நம்ம பாடியில இருக்கிற வாட்டர் கன்டென்டை கவர்ச்சி பண்ணி பேயாட்டம் போட வச்சிருவாரு.( நம்ம பாடியோட வாட்டர் கன்டென்ட் , கர்ப பனிக்குட வாட்டர் கன்டென்ட், சமுத்திர நீர் - இந்த மூன்றி கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதேனு எங்கனயோ படிச்சதா ஞா)

இந்த சந்திரன் பல்பு கொடுக்கற நேரத்துல எந்த சாமிய கும்பிடனும்னா ஆயுதம் தரிக்காத அம்மன். அதுலயும் கன்யாகுமாரி அம்மன் டபுள் ஓகேன்னு சொல்லியிருந்தேன்.

மொதல்ல ஜோதிஷ சாஸ்திரத்துல பார்வதின்னு சொன்னதுக்கு உண்டான லாஜிக்கை பார்த்துட்டு சந்திரனுக்கும் கன்னியாகுமாரிக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.

அர்த்த நாரீஸ்வரரை பார்த்திருப்பிங்க. வலதுப் பகுதியில ஏதோ பந்தயத்துல தோத்த கணக்கா சிவனார் பாதி மீசையோட இருப்பாரு இடது பகுதியில ஆத்தா.

ஆரு உடம்புல பார்த்தாலும் லெஃப்ட் பார்ட் கொஞ்சம் போல வீக்கா தான் இருக்கும்.அதனாலதேன் வலது காலை எடுத்து வைச்சு வாங்கங்கறாய்ங்க போல.

சூரிய நாடி சந்திர நாடி தெரியுமா? நமக்கே ( ஆண்களுக்கு) வலது நாசியில் மூச்சு நடந்தா அது சூரிய நாடி, இடது நாசியில் நடந்தா அது சந்திர நாடி

இது ஆண் ,பெண்களை பொருத்தவரை தலை கீழா மாறும் போல. ( கை ரேகை பார்க்கிறச்ச பெண்ணுக்கு இடதை பார்க்கிறாய்ங்களேன் ஏன்) நாடி பார்க்கிற மேட்டர்ல கூட டிஃப்ரன்ஸ் இருக்கிறதா கேள்வி.(சித்த வைத்திய பார்ட்டிங்க கரீட்டா சொல்லிருவாய்ங்க வெய்ட் அண்ட் சீ)

உயிர்களுக்கெல்லாம் தந்தை சூரியன் தாய் சந்திரன் (மாதிரி) இந்த ஜேஜிங்க லிஸ்ட் படி நம்ம டாடி மிஸ்டர் ஷிவா ,மம்மி ஷிவானி ( அம்மன்)

அதனாலதேன் சூரியன் சரியில்லின்னா சிவனை - சந்திரன் சரியில்லின்னா பார்வதியை வணங்க சொல்லியிருக்காய்ங்க.

கன்னியா குமாரிக்கும் சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? சந்திரன் ஜல காரகன் -சமுத்திரத்து நீரை ஈர்க்க வல்ல கிரகம்.

நீங்க கடல்ல குளிச்சிங்கனா பாடிக்கு வெளியவும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர்.பாடிக்கு உள்ளாறவும் அதே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர் கன்டென்ட்.

அட தண்ணியில இறங்கறதால என்ன அற்புதம் நடந்துரப்போகுதுன்னு நினைப்பிங்க. தண்ணீருக்குள் பொருட்கள் எடையை இழக்கும்.

கிணத்துல தண்ணி சேர்ந்தி குளிச்சவுகளுக்கு இது பக்காவா தெரியும். பக்கெட் தண்ணிக்குள்ள இருக்கிற வரை அசால்ட்டா மேலே வரும். தண்ணிக்கு மேல வந்ததும் மொத ராத்திரியில புதுப்பொஞ்சாதி மாதிரி லந்து பண்ணும்.

உடல் லேசானா மனசும் லேசாகுமா இல்லியா? சாதா தண்ணிக்கும் சொட்டு நீலம் போட்ட தண்ணிக்கும் டிஃப்ரன்ஸ் இருக்கும்ணே. ( ஐ மீன் கடல் நீர்)

இதென்ன கடல் புராணம்னு கேப்பிக சொல்றேன். கன்னியாகுமாரி அம்மன் எங்கன இருக்கா? கன்யாகுமாரியில். அங்கன என்ன இருக்கு கடல் இருக்கு..

சந்திரன் வேகமான வளர்ச்சிக்கு (தளர்ச்சிக்கு) காரகர். கன்யாகுமாரி அம்மன் பாவாடை சட்டையில இருக்கா. அந்த வயசு பெண்கள் எம்மாம் சீக்கிரம் வளர்ந்துருவாய்ங்கனு நமக்கு தெரியும். அதுலயும் சந்திரன் ஜாஜ்வல்யமா ஒளி வீசும் பவுர்ணமி இரவில் கடல்ல ஒரு குளியல் போட்டுட்டு ஆத்தாவை பார்த்து ஹாய் சொல்ட்டு அவளோட மூக்குத்தி அழகுல ஒரு கணம் கிறங்கி - மயங்கி நின்னா மனம் நிற்கும். இதைத்தானே எல்லா தியானிகளும் ட்ரை பண்ணிட்டிருக்காய்ங்க.

நாளைக்கு? செவ்வாய் vs சுப்பிரமணியரை பற்றி பார்ப்போம்.உடுங்க ஜூட்

Wednesday, November 30, 2011

கிரகமும் கடவுளும் : சூரியன்

அண்ணே வணக்கம்ணே..

நேத்து எந்த ப்ளேனட் சரியில்லினா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு லிஸ்டை கொடுத்திருந்தேன்.. இதுக்கான காரண காரியங்களை நாளுக்கு தரேன்னு வாயிதா வாங்கியிருந்தேன். நேற்றைய பதிவை மிஸ் பண்ணவுக வசதிக்காக அந்த பட்டியல் மறுபடியும் இங்கே கொடுத்து கா.கா விளக்க ட்ரை பண்றேன்.

1.சூரியன்:

சூரியன்,சூரிய நாராயணன்,காயத்ரி (நான் படிச்ச புஸ்தவங்கள்ள சிவன்)

விளக்கம்:
ஜாதகத்துல சூரிய பலம் இல்லேன்னா கால்ஷியம் குறை பாட்டால் வரக்கூடிய வியாதிகள் வரும். இதனால பல்,தலை,எலும்பு ,முதுகெலும்பு எல்லாமே பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு.மேலும் ஜாதகர் இன்சோம்னியாவால் அவதி படுவார்(தூக்கமின்மை) .மறு நாள் ஜாய்ண்ட் பெய்ன்ஸ்,கண் எரிச்சல், சிடுசிடுப்பு,கடுகடுப்பு எல்லாம் இருக்கும். அப்பாவோட மிஸ் கம்யூனிகேஷன்ஸ் இருக்கும். ( பத்து மணி வரைக்கும் தூங்கிக்கிட்டு இருந்தா ராத்திரி பாருக்கு போய் சரக்கடிச்சுட்டு வந்து படுத்த அப்பனுக்கு கூட பைல்ஸ் கணக்கா எரியும்ல)

இவிகளை சூரியனை வழிபட சொல்றோம்.சூரிய வழிபாடுன்னா சூரிய நமஸ்காரம். இதை விடியல்ல தான் செய்யனும். ரா முச்சூடும் தூங்கலின்னாலும் காலங்கார்த்தாலை எந்திரிச்சு முறைப்படி சூரிய நமஸ்காரம் செய்தா மறுபடி தூங்க முடியாது. மதியம் கொஞ்சம் கண்ணசர்ந்தா மேட்டர் ஓகே.

இதை இப்படியே கன்டின்யூ பண்ணா மேற்சொன்ன உபாதைகள் நாளடைவில் குறைஞ்சு கிட்டே வரும். மேலும் சூரிய ஒளியில விட்டமின் டி, விட்டமின் ஈ எல்லாம் இருக்காம். (போனஸ்).

சூரியன்னா ஈகோ. வெறுமனே சூ.ந பண்ணிட்டு போறதால பெருசா உபயோகம் இருக்காது. கொஞ்சம் ரோசிக்கனும் -படிக்கனும். சூரியனை பத்தி அதனோட பிரம்மாண்டத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டா ஈகோ குறையவும் வாய்ப்பிருக்கு.

மேலும் சோனிங்கதான் ஈகோவுக்கு விக்டிம்ஸ். படிப்படியா ஹேல் அண்ட் ஹெல்த்தியா மாறிட்டா ஈகோவும் சுருங்கிக்கிட்டே போகும் . இதையெல்லாம் பார்க்கிற நைனாவும் சந்தோசப்படுவாரு. ( டாடி). சூரியனுக்குரிய திசையாக " நடு" என்று சொல்லப்பட்டிருக்கு.

நம்ம பாடில " நடு " தொப்புள் தான். காயத்ரி மந்திரத்தை ஒழுங்கான ஸ்ருதியில சொன்னா தொப்புள் பகுதியில அழுத்தம் ஏற்படும். தொப்புள் தான் நாடி நரம்புகள் கிராஸ் ஆகிப்போற கிராஸ் ரோட் /ஜங்சன் பாய்ண்ட்டுன்னு சொல்றாய்ங்க. காயத்ரி மந்திரத்தை ஜெபிச்சா எல்லா நாடி நரம்புகளும் ஆக்டிவேட் ஆகும். உடல் நலம்,மன நலம் மேம்படும். ஈகோ கரைஞ்சு போகும்..

யத்பாவம் தத்பவதி - நாம எதை நினைக்கிறோமோ அதுவா மாறுவோம். இந்த விதிப்படி சூரியன் எப்படி பங்சுவலா பலன் கருதா கருமம் செய்கிறாரோ அப்படி ஒரு ட்யூட்டி கான்ஷியஸ் வரும். சூரியன் எப்படி இருட்டை துரத்தி ஒளியை தராரோ அப்படியே ஜாதகரும் சமூகத்து இருட்டை துரத்தி பகுத்தறிவை ஓளி வீச செய்வார்.

நாளைக்கு சந்திரனுக்குரிய தெய்வம் - அதன் பின்னாடி உள்ள காரண காரியங்களை பார்ப்போம்.

Friday, February 25, 2011

365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா



365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா 3 மேட்டர் உங்க ஜாதகப்படி கரீட்டா செட் ஆயிட்டா போதும். ஒன்னு செய் தொழில். ரெண்டு மனைவி மூணு வீடு . அப்ப மத்த விசயம்லாம் ஆத்துல அடிச்சிக்கினு போனா பரவால்லியானு கேப்பிக.

நிதானமா ரோசிங்க. ஒரு நாள்ள -24 மணி நேரத்துல மனுஷன் கு.பட்சம் 8 மணி நேரமாச்சும் தொழில்,உத்யோகம்,வேலைன்னு செலவழிச்சாகனும். அதனால தொழில் மேட்டர் ஜாதகப்படி அமைஞ்சுட்டா 8 மணி நேரம் கிரக பீடனங்களிலிருந்து எஸ்கேப். ( மீன் தண்ணில இருக்கிறாப்ல சேஃப் - உங்க ஜாதகத்துக்கு தொடர்பில்லாத வேலையில இருந்தா அது மனுஷன் நீச்சலடிக்கிற மாதிரி -அல்லாரும் குற்றாலீஸ்வரன் ஆயிரமுடியாதில்லியா -மூச்சு வாங்கும் -நாக்கு தள்ளும் -எப்படா கரையேறுவோம்னு தான் இருக்கும்)

அடுத்து நைட் 10 டு மார்னிங் 10 AM 12 மணி நேரம் வீட்டுல செலவழிக்கவேண்டியிருக்கு. அதனால வீடு ,பொஞ்சாதி கரீட்டா அமையனும் இல்லாட்டி இந்த 12 மணி நேரம் நரகமாயிரும். தாளி வீடு சரியில்லாதவன்,பொஞ்சாதி பிடுங்கல்ல இருந்து தப்பிக்க நினைக்கிறவன் தான் இன்ன பிற ஆக்டிவிட்டீஸுக்கு வர்ரான்.

மேற்சொன்ன 3 மேட்டர் கரீட்டா செட் ஆயிருச்சுன்னா 20 மணி நேரம் மன்சன் சேஃப் ஆயிர்ரான். இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் உங்க தொழில் உங்க ஜாதகப்படித்தான் அமைஞ்சிருக்கான்னு தெரிஞ்சிக்கனும். உங்க வீடு,மனைவி மேட்டர்லயும் இதை செய்யனும். அப்படியில்லேன்னா மெல்ல மெல்ல ரூட்டை மாத்தி உங்க பேட்டைக்கு வந்துரனும்.( பொஞ்சாதி மேட்டர்ல மட்டும் இது கஷ்டம்தேன். மொதல் பார்ட்டி இருக்கிறச்ச ரெண்டாவது பார்ட்டிக்கு ட்ரை பண்ணா மகிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டு கதை ஒரு பக்கம்னா இந்த ஒரு செயல் உங்களுக்கு அப்பாறம் உங்க வம்ச விருட்சத்துல வரப்போற ஏழு தலைமுறைக்கு ஆப்பாயிரும்.

அவிக தங்களோட சிக்கலை என்னாட்டம் ஆளுக்கு சொன்னா நாங்க போட்டு குடுத்துருவம். (உங்க முன்னோர் ஆரோ ஒன்னுக்கு ரெண்டா கண்ணாலம் கட்டியிருக்காய்ங்க.அதனாலதான் உங்க கண்ணாலம் தள்ளிப்போகுது -குடும்பவாழ்க்கையில சிக்கல்னு) நீங்க செத்து எந்த லோகத்துல இருந்தாலும் அவிக சாபத்தை வேற வாங்கனும்.

இதுவரை கமிட் ஆகாதவிங்க வேணம்னா ட்ரை பண்ணலாம். ( எனக்கு வரப்போற பொஞ்சாதி எப்படியிருப்பானு சோசியரை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு சூஸ் பண்ணிக்கலாம். ஏற்கெனவே ஆனவுக (கண்ணாலத்தை சொன்னேன்) உங்க ஜாதகப்படி பொஞ்சாதி எப்படியிருக்கனும்னு கண்டுக்கிட்டு அவிக ட்ரஸ் அப், மேக்கப், கெட் அப், தொழில் இத்யாதியில மாற்றம் கொண்டு வர ட்ரை பண்ணலாம். வீடு மேட்டர்ல யுவார் ஃப்ரீ.

"கட்டிடக்கலை ஒரு அறிமுகம்"னு ஒரு புக் ஒர்க்ல அதனோட ஆசிரியர் கே.வி.முனியோட கோ ஆப்பரேட் பண்ண சமயம் அவர் ஒரு பாய்ண்ட் சொன்னாரு.

ருணானுபந்த ரூபேணா பசு,பத்னி ,சுதாலயானு ஒரு ஸ்லோகம் இருக்காம். "சுதா" என்றால் பிள்ளைகள், ஆலயா என்றால் வீடு. பூர்வ கர்ம வினைகளுக்கேத்தாப்ல தான் கால் நடை, மனைவி, வீடுல்லாம் அமையும்னு ஸ்லோகம் சொல்லுது.

மாதா,பிதா,குரு தெய்வங்கற லிஸ்டுல தெய்வம் கடாசில வந்தாலும் தெய்வத்தோட அருளாலயே மொதல்
மூணும் அமையறாப்ல பசு,பத்னி,சுதா,ஆலயாங்கற லிஸ்டுல ஆலயா(வீடு) கடைசில வந்தாலும் வீட்டைபொறுத்து மத்த தெல்லாம் அமைய வாய்ப்பிருக்கு - விதியை மதியால் வெல்ல நினைக்கிறவன் அதை வீட்டின் மூலம் நிறைவேத்தலாம்னு சொன்னாரு.

அவரோட நோக்கம் வாஸ்துப்படி வீட்டை அமைச்சிக்கனுங்கறது. ஆனால் நான் சொல்ல வர்ரது வேற . உங்க ஜாதகப்படி நீங்க எந்த மாதிரி வீட்ல வாழனுமோ அந்த மாதிரி வீட்டை அமைச்சிக்கிட்டாலே போதும் ( உ.ம் ஆக்னேய குறைபாடுள்ள வீடு ) சுத்தம் சுகாதாரம்லாம் நமக்குத்தேன் முக்கியம். கெளுத்தி மீனுக்கு சேறுதான் சொர்கம்ங்கோ.


சரிங்கண்ணா இந்த பதிவுல மனுஷனோட 24 மணி நேரத்துல கு.ப 8 மணி நேரத்தை விழுங்கிர்ர தொழிலை பத்தி விலாவாரியா இங்கே பார்ப்போம்.

Saturday, February 5, 2011

சந்திர பலமும் கில்மாவும்

சந்திர பலமும் கில்மாவும்

நாட் நாட் சினிமாலருந்து, லேட்டஸ்ட் படம் வரை டூயட்டுன்னா சந்திரனை ஒரு மேண்டேஜ் ஷாட்டாவாச்சும் காட்டிர்ராய்ங்க. ஏன்னா கில்மாவுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு இது. மனித மனதின் அடியாழத்தில் இது பொதிஞ்சு கிடக்கு.

உச்சி வெய்யில்ல கூட "ஷோ"போடற சிங்கங்கள் இருக்கலாம். ஆனால் ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். விதியில்லாத குறைக்கு போடலாமே தவிர சந்திரன் அதுவும் வளர்பிறை சந்திரன் அதுவும் பவுர்ணமி சந்திரனோட ஒளியில உரசி ,உலவி, கொஞ்சி மகிழறதுல இருக்கிற த்ரில்லே வேற.

பவுர்ணமி சந்திரன் கடல் நீரை ஈர்ப்பது அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர்தான். தெரியாத மேட்டர் என்னடான்னா ஹ்யூமன் பாடில உள்ள வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனும் ,சமுத்திர நீரோட கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதான்ங்கறது.

மனுஷனொட பாடில 90% வாட்டர் கன்டென்டுதானு நினைக்கிறேன். தாளி ரெண்டு மூனு தாட்டி வாயால,வயித்தால போனா டெலிவரி ஆன பெண் மாதிரி டீலாயிர்ரம். தோல் எல்லாம் பாட்டி கணக்கா சுருங்க ஆரம்பிச்சுரும். இதான் சந்திரனுக்கும் ஹ்யூமன் பாடிக்கும் உள்ள லிங்க்.

ஜோதிஷத்துல சந்திரன் மனோகாரகன்னு சொல்றாய்ங்க. அதாவது மனசுக்கு அதிபதி இவரு. சந்திர பலம் இருந்தா நல்ல மனமிருக்கும். மனோபலமிருக்கும்னு அர்த்தம். சந்திரனுக்கு மதினு இன்னொரு பேர். மதிங்கற வார்த்தைக்கு மரியாதை கொடு. ரெஸ்பெக்ட் (அதர்ஸ்)னும் ஒரு அர்த்தம் உண்டு. நல்ல மனசு இருக்கிறவன் எவனையும் அவமதிக்கமாட்டான். மலையாளத்துல மதிங்கற வார்த்தைக்கு போதும்னு ஒரு அர்த்தம் இருக்கு. நல்ல மனசுன்னா என்ன? போதுங்கற மனசுதான். மதி (சந்திரன்) நல்ல இடத்துல இருந்தாதேன் மன்சன் மதி(போதும்)ன்னுவான்.நீங்க போதும்னு நின்னுட்டா எல்லாமே உங்களை தேடிவரும். எனக்கே எனக்கேனு அலைஞ்சு பறைசாத்தினா உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கதைதேன்.

"எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு"னு ஒரு பழமொழி இருக்கு. எண்ணம்னா வந்து போற எண்ணங்கள் இல்லை. எண்ணங்களுக்கெல்லாம் விதையான எண்ணம் அது நல்லதா இருந்தா இன் ப்ராசஸ் மனம் நல்லதா மாறிரும். மனம்போல் வாழ்வுங்கறதால வாழ்வும் பெட்டரா மாறிரும். மேற்படி விதை எண்ணம் எங்கருந்து விதைக்கப்படுதுனு புரியலை. ஜீன் வழியானு சொல்றாய்ங்க. அப்ப என்.டி.ஆர் போட்ட டஜன் குட்டியும் ஏன் டம்மி பீசாயிருச்சு. நம்ம தாத்தா மேட்டர்ல கூட அழகிரிக்கும்,
ஸ்டாலினுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு.. இங்கே தான் சந்திரன் விளையாடறாரு.

சந்திர ஆதிக்கத்துல உள்ளவுக இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமானவுகனு ஒரு கணக்கிருக்கு. (ஸ் ..அப்பாடா ..நம்முதும் கடக லக்னம் தேன் -வாக்குல சந்திரன் -ஆக நம்ம பேச்சு/எழுத்து இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கம் தான் போல)

மனமிருந்தால் மார்கம் உண்டுங்கறாய்ங்க. "அவன் மனசு வைக்கலைப்பா.." " ஐயா மனசு வச்சா இதெல்லாம் ஜுஜுபி" இந்த கான்வர்சேஷன் எல்லாம் நெஜம் தான் பாஸ்! மனசு வச்சாத்தான் எதையும் சாதிக்க முடியும். அதுக்கு சந்திரபலம் தேவை.

தெலுங்குல சந்தோஷம் சகம் பலம்ங்கறான். சந்தோஷத்தை தர்ரது ஸ்தூலமான பொருட்கள் இல்லே. சனம் பொருளுக்கு அலையுதுன்னா அதுல கிடைச்சுருமோங்கற எண்ணத்துலதான். வெறும் பொருட்களால சந்தோஷம் கிடைச்சுர்ர மாதிரி இருந்தா அவனவன் 3 ட்யூட்டி பண்ணுவான். சந்தோசத்தை தர்ரது மனசு.

மனசுல உள்ளதெல்லாம் ரெண்டே ரெண்டு கோரிக்கை தேன். ஒன்னு கொல்லனும் ரெண்டு கொல்லப்படனும். இது ரெண்டுக்கும் வாய்ப்புள்ள எல்லா மேட்டர்லயும் மனசு துள்ளும். இது ரெண்டுமே செக்ஸுல சாத்தியமாகுது.அதனாலதான் கில்மாவுக்கு இம்மாம் கிராக்கி.

மனசு ஒத்துழைக்கலைன்னாலும் ஆஃபீஸ் வேலைய வேணம்னா செய்துர முடியும். ஆனால் கில்மா மேட்டர்ல இது இம்பாசிபிள். அதுவும் நீங்க ஆண் என்றால் அசம்பவம். சந்திர பலம் இருந்தாதான் மனசு ஒத்துழைக்கும்.

கும்ப லக்ன காரவுகளுக்கு இவர் சஷ்டமாதிபதி (6) ங்கறதால இவர் 8 அ 12லருந்தா பெட்டர்
தனுசு லக்ன காரவுகளுக்கு இவர் அஷ்டமாதிபதிங்கறதால 6 அ 12ல இருந்தா பெட்டர்.
சிம்ம லக்ன காரவுகளுக்கு இவர் விரயாதிபதிங்கறதால 6 அ 8லருந்தா பெட்டர்.

அதே மாதிரி சந்திரனோட 6,8,12 அதிபதிகள் சேர்ரது, ராகு கேதுக்கள் ஜாய்ன் பண்ணிக்கிறது , நீசமாயிர்ரது (விருச்சிக ராசி) சனி கூட்டு சேர்ரதுல்லாம் இருந்தா மன நலம் கோவிந்தா. மனம் கெட்டா மண வாழ்வும் போயிந்தா..

(சந்திர பலத்தை பத்தியே இன்னம் மஸ்தா சொல்லனும் நைனா அடுத்த பதிவுல பார்ப்போம்..உடு ஜூட்)



தெலுங்குல கூட மதிங்கற வார்த்தை இருக்கு . ஆனா அதை madhi ன்னு ப்ரனவுன்ஸ் பண்ணமாட்டாய்ங்க. mathiன்னு ப்ரனவுன்ஸ் பண்றாய்ங்க. "நா மதி நின்னு பிலிச்சிந்தி கானமை வேணு கானமை" என் மனம் உன்னை அழைக்குது கானமாய் முரளி கானமாய் "னு அர்த்தம்.

மதிங்கற வார்த்தைக்கு முகம்னும் ஒரு அர்த்தம் இருக்குங்கோ .உ.ம் பானுமதி (சூரியனை போன்ற முகமுடையவள்) சந்திரமதி (சந்திரனை போன்ற முகமுடையவள்) மதின்னா மனம் . மனம் மலர்ந்திருந்தா முகமும் மலர்ந்திருக்கும்.

Thursday, February 3, 2011

கிரக பலமும் கில்மாவும்: 1

அண்ணே வணக்கம்னே.. ஒவ்வொரு தொடரை முடிச்சதுமே " இத்தீனி நாளு எப்படியோ காலத்தை ஓட்டியாச்சு..இனி என்னத்த எழுதறது"னு ஒரு திகில் பரவும். ஆனால் பாருங்க முருகர் முக்தித்தருனு  அடியெடுத்து தர அருணகிரி நாதர் எழுதின மாதிரி,  வியாசர் சொல்ல சொல்ல எழுதின வினாயகர் மாதிரி அதும்பாட்டுக்கு போய்க்கினே கீது.

எல்லாம் நல்லாருக்கு தம்பி.. எல்லாத்துலயும் கில்மாவை ஏன் கொண்டு சேர்க்கறேனு அண்ணன் மாருங்க சிலரு கேட்கிறாய்ங்க. நான் என்ன ஆருக்காச்சும் எச்சி உமிஞ்சி சத்தியமா பண்ணி தந்திருக்கேன்.கூகுல் ஸ்டேட்ஸ்ல  டாப் டென் போஸ்டு எதுனு பார்த்தா இந்த சமாசாரம்தேன் மொதல்ல நிக்கிது.

நான் எழுதறது நான் மட்டும் வாசிச்சிக்க இல்லை. நாலு பேரு ( ஹி ஹி..இப்பல்லாம் அபவ் 500 தேன்) படிக்கனும். சுஜாதால்லாம் போண்டாவுல விஷம் வச்சாய்ங்க. நான் கசப்பு மாத்திரைக்கு ஷுகர் கோட் தரேன். நல்லதை நல்லவழியிலயே சாதிக்கிறது ராமரோட ரூட்டு. நல்லதை கெட்ட வழியில போயாச்சும் சாதிக்கிறது கிருஷ்ணர் வழி.

என் நோக்கம் புனிதமானது. ஆன்மீகத்துக்கான முதல் படி கில்மாதான். "காமி கானி வாடு மோட்ச காமி காலேடு" காமத்தை கடந்து வரனும்னா ( ஓஷோ ) அதை என்னா ஏதுனு நிறுத்தி நிதானமா விசாரிச்சுரனும். சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவனையும் சந்தோசப்படுத்துவான். ஒன்னு நாலாகி நாலு நாற்பதான ஒட்டு மொத்த  சமூகமே சந்தோசமா மாறும். தெலுங்குல "சந்தோஷம் சகம் பலம்"னுவாய்ங்க.

மனுஷன் என்னா செய்தாலும் அதும்பின்னாடி இருக்கிற ரெண்டே உந்துதல் கொல்லுதல்,கொல்லப்படுதல். இது ரெண்டுமே  விழிப்பு,ஆழத்துடன் கூடிய செக்ஸுல சாத்தியம். ( காரே மூரேனு காஞ்ச மாடு கம்பங்கொல்லைல விழுந்த மாதிரி செயல்பட்டா செக்ஸுல கூட  இது சாத்தியமில்லாம போயிரும்)

செக்ஸ் மறுக்கப்பட்டா, செக்ஸ் தடை செய்யப்பட்டா,செக்ஸுல உண்மையான ஆர்காசம் கிட்டலின்னா அது வன்முறையா, பண வெறியா, பதவி வெறியா மாறி வெளிப்படுதாம். அதென்ன உண்மையான ஆர்காசம்னு கேப்பாய்ங்க.

ஆணுக்கு ஜஸ்ட் செமன் வெளிப்பட்டா அது ஆர்காசம்னு நினைக்கிறாய்ங்க. இது தவறு ஒரு முறை ஈடுபட்டா பத்து பதினைஞ்சு நாளைக்கு அந்த எண்ணம் கூட வரக்கூடாது. அப்பத்தேன் காரியம் முறைப்படி நடந்திருக்குனு அர்த்தம்.

குறைஞ்ச மார்க் வந்தவுக இம்ப்ரூவ்மென்டுக்கு கட்டின கதையா தினம் தினம் அதே  நினைவு வந்தா காரியம் முறைபப்டி நடக்கலைனு அர்த்தம்.பெண்கள் நிலை இதை விட மோசம். பார்க்க லேட்டஸ்ட் சர்வேக்கள்.

ஓகே ஓகே முன்னோட்டம் போதும் விஷயத்துக்கு வரேன். கடந்த 12 தினங்களாக  செக்ஸ் விஷயத்துல சக்ஸஸ் ஆக  துவாதசபாவங்கள் எப்படி இருக்கனும்னு விவரிச்சேன்.

நாளைலருந்து சக்ஸஸ் ஃபுல் கில்மாவுக்கு ஒன்பது கிரகங்களின் நிலை எப்படி இருக்கனும். ஒன்பது கிரகங்களும் கில்மாவுக்கு எப்படியெல்லாம் ஹெல்ப் ஃபுல்லா இருக்குதுனு பார்ப்போம். பை தி பை எந்த கிரகமாவது சோனியா இருந்தா அதனோட எஃபெக்ட் என்ன? அதை எப்படி ஓவர்கம் பண்றது? அதுக்கு லாஜிக்கல் ரெமிடீஸ் என்னங்கறதையும் பார்ப்போம்.

நம்ம வலைப்பூக்கள் எல்லாமே நித்ய கண்டம் பூர்ணாசுதேன். எப்ப ஆரு தடை பண்ணுவாய்ங்கனு தெரியாது.அதனால உடனே சைட்ல மெம்பராயிருங்க..ட்
உடு ஜூட்