'>
Showing posts with label சந்திரன். Show all posts
Showing posts with label சந்திரன். Show all posts

Tuesday, February 21, 2012

நிலையற்ற தன்மையை குறைக்க


அண்ணே வணக்கம்ணே !
திங்கள் மாலை கூரியர்ல அனுப்ப முடிஞ்சவுகளுக்கெல்லாம் அனுப்பியாச்சு. விடுபட்டவுக, ஆர்.பிலதான் அனுப்பனுங்கற டிஸ்டன்ஸ்ல உள்ளவுகளுக்கு நேத்திக்கு அனுப்பிட்டம். ( ஜோதிடம் 360 புஸ்தவத்தை சொன்னேன்).
எடைக்கு போட்டா குவார்ட்டருக்கு கூட தேறாத அளவு பிரதிகள்தான் கைவசமிருக்கு. முந்திக்கங்க.அப்பாறம் நம்மை மறுபடி ரீ ப்ரிண்டுக்கு இழுத்துவிட்டுராதிங்க. ஜனவரி 30 க்கு மிந்தி அனுபவஜோதிடம் சைட்டு 25,000 க்குள்ள இருந்தது. இப்பம் பார்த்தா லட்சத்து நாப்பதாயிரம் ( ரேங்கை சொன்னேன் - இண்டியா ரேஞ்சுல) அதனால ரீ ப்ரிண்டுக்கெல்லாம் இன்னம் ஒரு வருசமாச்சும் பிடிக்கும்.ஆமா சொல்ட்டன்.
நேத்து மனித வாழ்விலான நிலையற்ற தன்மைக்கு சோதிட காரணத்தை (சந்திரன்) சொல்லியிருந்தேன். படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்காட்டாலும் லட்டு கணக்கா கேட்ச் பண்ணிட்டிங்க போல. ( புரியாட்டாலும் கமெண்ட் போட டைமில்லாதவுகளுக்காக மீள் பதிவு கணக்கா எதுல இன்ஸ்டெபிளிட்டிங்கற பத்தியை மறுபடி போட்டு - அது எந்த ராசி/லக்னத்துக்குங்கறதையும் சொல்லி - அதுக்கு பரிகாரத்தையும் தந்திருக்கன். தூள் பண்ணுங்க..
கடகராசி /லக்ன காரவுகளுக்கு:
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை இருக்கு. அவ்வப்போது மூட் அவுட்டாயிர்ரம். எளிதில் எரிச்சல்,கோபம் வருது..சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வேதனை படறோம். ( காதல்?) நம்ம பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கு.
பி.கு: இது மீனராசிக்காரவுகளுக்கும் டச் ஆறாப்ல இருக்கும் .ஏன்னா சந்திரன் இவிகளுக்கு பஞ்சமாதிபதி(புத்திஸ்தானம்)

பரிகாரம்:
கடற்கரை ,ஆத்தங்கரை,குளத்தங்கரை ( நெல்ல தண்ணி இருக்கனுங்கோ) , வீட்டுக்கு நைருதில மேல் நிலை குடி நீர்த்தேக்க தொட்டின்னு இருக்கிற வீட்ல வசிக்கப்பாருங்க. மதிப்புள்ள சின்ன வேலைகளையே எடுத்துக்கங்க. (வைரம் மாதிரி ) பெரிய வேலையா இருந்தாலும் ( இரும்பு பாளம்) அதை பார்ட் பார்ட்டா பிரிச்சு டெட் லைன் வைக்காம செய்துட்டு வாங்க.
மனசுக்கு பிடிக்காத வேலைய செய்யவே செய்யாதிங்க. பகை,புகை ,தூசு ,மன அழுத்தம் கூடவே கூடாது. விட்டா மன நோயாளியாயிருவிங்க. எது நடந்தாலும் இதுவும் ரெண்டே கால் நாளைக்குத்தானேன்னு ஃப்ரீயா உடுங்க..

மிதுன ராசி/லக்னம்:
சில நேரம் காசு பணத்தை வீணாக்கறோம். சில நேரம் கால் காசுக்கு லாட்டரி அடிக்கிறோம். சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருக்கிறோம். சில நேரம் குடும்பம்னா அது என் குடும்பம் தான்னு காலரை தூக்கிவிட்டுக்கறோம். சில சமயம் " நான் எங்கயாவது ஒழியறேன்னு" தெருமுனை பெட்டிக்கடையில சிகரட் குடிக்கிறோம்.

பரிகாரம்:
பர்ஸ்.கேஷ் பேக் நீல நிறத்துல டால்ஃபின் ,மீன் இத்யாதி படம் போட்டதா இருந்தா ஓகே. நேச்சர் க்யூர்ல வாட்டர் தெரஃபி பத்தி நிறைய படிச்சு நிறைய பேசுங்க. நீல நிற கூலிங் க்ளாஸ் போடுங்க. டிட் பிட்ஸ் இத்யாதி பழக்கமிருந்தா நீல நிறத்தை யூஸ் பண்ணுங்க.

ரிஷபராசி/லக்னம்:
சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்குது. திடீர் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வருது.
பரிகாரம்:
கிட்டத்துல அருவி , அணை இருந்தா வாரம் ஒரு தாட்டி பிக்னிக் மாதிரி போய்வாங்க ( காஞ்சு கிடக்கிறப்ப வேணா) ப்ரதர் சிஸ்டர் ஆருனா இருந்தா அவிகளோட வாட்டர் கேன் பில்லை நீங்க செட்டில் பண்ணுங்க
அருவி,கடல் ஓசையை ரிங் டோனா வச்சுக்கங்க.

மேஷ ராசி/ லக்னம்:

சில சமயம் அம்மான்னா அம்மாதான். மத்த சொந்தமெல்லாம் சொம்மான்னு சொக்கிப்போயிர்ரம். அவிக உதவாக்கரை தம்பிக்காகவோ , திமிர் பிடிச்ச தங்கைக்காகவோ வக்காலத்து வாங்கும்போது செமை கடுப்பாயிர்ரம்.

பரிகாரம்:
அம்மாவுக்கு நீல நிற புடவை /நைட்டி வாங்கி கொடுங்க.அதுல கடல் காட்சி ப்ரிண்ட் ஆகியிருந்தா ஸ்ரேஷ்டம்.

அம்மாவுக்கு தண்ணி மேட்டர்ல ஹெல்ப் பண்ணுங்க. தோட்டம் கீட்டம் போட்டு நீர்பாய்ச்சுங்க (அவிக டேஸ்டுதேன் முக்கியம்)


சொந்த வீடு கட்டற வரை தாளி இந்த வீட்லயே இருந்துரனும்னு நினைக்கிறோம்.மறுமாசமே சட்டியை தூக்க வேண்டி வந்துருது. உஸ் ..அப்பாடா இனி வண்டியை பத்தி கவலையில்லைன்னு நினைக்கிறோம். மறுவாரமே திருடு போயிருது .அல்லது மூட்டையா கட்டி கொண்டுவரோம்.

பரிகாரம்:
வீட்டுல அக்வேரியம், வீட்டு ஹால் சுவற்றில் அருவி ,கடல் காட்சி போஸ்டர் வைங்க. ஊஞ்சல் மாட்டுங்க. ஈசான்ய மூலையில செயற்கை ஃபவுண்டென் ( மீனியேச்சர்) வைங்க.

வண்டியோட நிறம் நீலமா இருந்தா ( சீ ப்ளூ) நல்லது. ஸ்டிக்கரிங் பண்றப்ப கடல் சமாசாரங்களை போடுங்க

மீன ராசி /லக்னம்:

நம்ம மூளையில பாதி சாணக்யன் -பாதி சகுனின்னு பீத்திக்கறோம். பவரை ஆஃப் பண்ணாமயே ஸ்விட்ச் பாக்ஸ்ல கை விட்டு அல்வா வாங்கறோம்.

பரிகாரம்:
அருவி,கடல் காட்சிகளை கற்பனை செய்ங்க. கன்யாகுமாரி அம்மனை தியானம் பண்ணுங்க

என் பையன் ஜெம் சார்.. னுட்டு அலட்டறோம். அவன் டீச்சரம்மாவை கத்தியால குத்திட்டான்னு தெரிஞ்சு சரிஞ்சு விழறோம்.

பரிகாரம்:
பசங்களுக்கு நீந்த கத்துக்கொடுங்க.

கும்ப ராசி/லக்னம்:

சில சமயம் நான் அஜாத சத்ரு.. எனக்கு விரோதியே கிடையாதுங்கறோம். கடனா.. மூச் ! கடன் உடன் பகை ன்னு வசனம் விடறோம். இன்னை வரைக்கும் நமக்கு ஜூரம் தலைவலி கூட வந்ததில்லைங்கறோம். அடுத்த வாரமே சத்ரு -ரோக -ருண பீடைகள் ரவுண்டு கட்டி அடிக்குது.

பரிகாரம்:
ஒவ்வொரு நாளும் முதல் செலவை கடன் வாங்கி செய்ங்க. பதிவுகளை படிச்சுட்டு ச்சொம்மா போகாம கிளிச்சு கமெண்ட் போடுங்க (சொந்த பேர்ல) கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போயி ஏழை நோயாளிகளுக்காக பிரார்த்தனை பண்ணுங்க. தேவையே இல்லின்னாலும் லம்பா ஒரு அமவுண்டை வங்கில கடனா வாங்கிருங்க.


மகர ராசி/லக்னம்:

சில சமயம் கடவுள் எந்த விஷயத்துல எனக்கு ஆப்படிச்சிருந்தாலும் பொஞ்சாதி மேட்டர்ல தூள் பண்ணிட்டாரு. நம்ம பை. தனங்களுக்கு என்னைக்கோ ஓடிப்போயிருக்கனும்னு க்டவுளுக்கு நன்றி சொல்றோம்.

அடுத்த வாரமே கிரைம் நாவல் கணக்கா பெண்டாட்டியை போட்டு தள்ளிட்டா என்னன்னு ரோசிக்கறோம்.

பரிகாரம்:
மேஷ ராசிக்காரவுக அம்மாவுக்கு என்ன செய்யனும்னு சொல்லியிருக்கமோ அதை நீங்க உங்க மனைவிக்கு செய்ங்க

தனுசு ராசி/லக்னம்:

இன்னும் ஒரு பத்துவருசம் வாத்யாரே .. பையனுக்கு வேலை கிடைச்சு - பெண்ணுக்கு கண்ணாலம் பண்ணி அனுப்பிட்டன்னனா காசி ராமேஸ்வரம்னு சுத்தவேண்டியதுதான்னு டிக்ளேர் பண்றோம். தூக்கத்துலயே டிக்கெட் போட்டுர்ரம்.

பரிகாரம்:
தண்ணி மேட்டர்ல ஸ்ட்ரெய்ன் பண்ணுங்க. ஓவர் ஹெட் டேங்கை/ Sump ஐ கழுவி விடறது ,கை பம்புல தண்ணி அடிக்கிறது . தெருக்குழாய்ல தண்ணி வரலின்னா கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு மனு அனுப்பறது.

விருச்சிக ராசி/லக்னம்:

இதே மாதிரி த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்,

பரிகாரம்:
மேஷ ராசிக்காரவுக அவிக அம்மா மேட்டர்ல என்ன பண்ணனும்னு சொல்லியிருக்கமோ அதை நீங்க உங்க அப்பா மேட்டர்ல செய்ங்க

துலா ராசி/லக்னம்:
செய்தொழில் ,வியாபாரம், உத்யோகத்துல இன்ஸ்டெபிலிட்டி

பரிகாரம்:
மேஷ ராசிக்காரவுக வீடு மேட்டர்ல என்ன செய்யனும்னு சொல்லியிருக்கமோ அதை உங்க ஆஃபீஸ்ல /தொழிலகத்துல /உங்க சீட்ல செய்ங்க (முடிஞ்சதை/மேனேஜ்மென்ட் அனுமதிக்க கூடியதை மட்டும்)

கன்னி ராசி லக்னம்:

மூத்த சகோதர/சகோதிரி,லாபம் கருதிய செயல்களில் அன் சர்ட்டெனிட்டி

பரிகாரம்:
மேஷ ராசிக்காரவுக அவிக அம்மா மேட்டர்ல என்ன பண்ணனும்னு சொல்லியிருக்கமோ அதை நீங்க உங்க எல்டர் ப்ரதர்,சிஸ்டர் மேட்டர்ல செய்ங்க. ஒரு வேளை அவிக இல்லின்னா லாபம் கருதி செயல்படற சமயம் வீட்லயே ஒரு லட்சுமி/சரஸ்வதி சிலை ( உங்க கட்டை விரல் உயரம் தான் இருக்கனும்) வச்சு ஜலாபிஷேகம் பண்ணிட்டு போங்க. ( திரவ ரூபத்துல உள்ள - மங்களகரமான எதையும் உபயோகிக்கலாம் உ.ம் பால் தயிர் பன்னீர்)


சிம்ம ராசி/லக்னம்
தூக்க‌ம்,செக்ஸ் எல்லாத்துலயும் ஒரு வித இன்ஸ்டெபிலிட்டி,அன்செர்ட்டனிட்டி,அப் அண்ட் டவுன்ஸ், Anxious conditions இருக்கும்.

பரிகாரம்:
வாட்டர் பெட்,பில்லோ யூஸ் பண்ணுங்க. அ பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவருக்கு நீல நிற /கடல் காட்சி பொறித்த க்ளாத்தை யூஸ் பண்ணுங்க. பெட் ரூம்ல மேற்படி நிறம் ,காட்சி உள்ள போஸ்டர் வைங்க.


எச்சரிக்கை:

ஜாதகத்துல சந்திர பலம் இருந்தா - யு பி எஸ்+ஸ்டெபிலைசரோட - பவர்ல வேலை செய்ற மாதிரி.

பவர் போனாலும் ( ஐ மீன் கோசாரத்துல சந்திர பலம் இல்லாத நாளிலும்) பேக் அப் கிடைக்கும்.

இருந்தாலும் நிலைமை சில நேரம் மோசமாகும். அப்படி மோசமாறச்ச மட்டும் மேற்படி பரிகாரங்களை உபயோகிங்க. ஒர்க் அவுட்டுதேன்.

ஜாதகத்துல சந்திரன் கெட்டிருந்தா டைரக்ட் பவர்ல வேலை செய்ற மாதிரி. பவர் ஃப்ளக்சுவேஷன் கம்ப்யூட்டரை பாதிக்கிறாப்ல ( டிம் அண்ட் டிப் அடிக்கிறது - ரீ ஸ்டார்ட் ஆயிர்ரது) சந்திரனோட நிலை ரெம்பவே பாதிக்கும்

நீங்க தேன் மேற்படி பரிகாரங்களை கட்டாயம் செய்யனும்.

மாற்றம் திடீர்னு நடக்குதா?


நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலயும் ஒரு வித நிலையற்ற தன்மை இருக்கு. சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை இருக்கு. அவ்வப்போது மூட் அவுட்டாயிர்ரம். எளிதில் எரிச்சல்,கோபம் வருது..சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வேதனை படறோம். ( காதல்?) நம்ம பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கு.
சில நேரம் காசு பணத்தை வீணாக்கறோம். சில நேரம் கால் காசுக்கு லாட்டரி அடிக்கிறோம். சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருக்கிறோம். சில நேரம் குடும்பம்னா அது என் குடும்பம் தான்னு காலரை தூக்கிவிட்டுக்கறோம். சில சமயம் ” நான் எங்கயாவது ஒழியறேன்னு” தெருமுனை பெட்டிக்கடையில சிகரட் குடிக்கிறோம்.
சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்குது. திடீர் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வருது.

இப்படி இன்னும் நிறைய பதில் தெரியாத கேள்விகள். இதற்கெல்லாம் பதில் ....
Read More

Thursday, December 29, 2011

"சேட்டைய" எங்கருந்து ஆரம்பிக்கலாம்?

அண்ணே வணக்கம்ணே !
நாம வேகமா வளர்ரது வெறுமனே காம்ப்ளான்னால மட்டுமில்லை. கில்மா புத்தகம் படிக்கிறதுனாலயும் தேன். மூளையில அறிவு -கில்மா மையங்கள் ரெம்ப கிட்டக்க இருக்காம்.

குளத்துல போட்ட கல் அலைய ஏற்படுத்தறாப்ல கில்மா மையத்தில் ஏற்பட்ட அதிர்வு அறிவு மையத்தை தொட்டு உசுப்பேத்துதாம்.

கில்மா புத்தகம் படிக்காமயே நான் வளர்ந்துட்டேன்னு ஆராச்சும் சொன்னா அது பீலா,ஜல்லி,ரீலு. நாம படிச்ச கில்மா புத்தகங்களை பத்தி எழுதனும்னா ஒரு தொடரே எழுதலாம்.

ஆனால் மத்த கில்மா புத்தகங்களில் இருந்து வேறுபட்ட ஒரு புஸ்தவம் - நம்ம அறிவை தீட்டி -ஜோதிட ஆராய்ச்சிக்கும் உதவின புஸ்தவம் ஒன்னிருக்கு.

அந்த புஸ்தவத்துல அமுத நிலைன்னு ஒரு கான்செப்ட் . அதாவது பெண்களின் உடலில் ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு இடம் ரெம்ப மதமதர்ப்பா இருக்குமாம்.

சேட்டைய அங்கன இருந்து ஆரம்பிச்சா சூப்பர் கில்மான்னு அந்த புஸ்தவத்துல சொல்லியிருந்தாய்ங்க. கம்ப்யூட்டர் பாஷையில சொன்னா குறிப்பிட்ட நாள்ள குறிப்பிட்ட ட்ரைவ் பூட் ஆகுமாம்.

ஜோதிடத்துல ஓரளவு பயிற்சி வந்த பிற்காடு இதை ரோசிச்சு பார்த்தம். தினசரி மாறுதுன்னா அது நட்சத்திரம் தேன். நட்சத்திரம் மாறுதுன்னா சந்திரன் ஒரு நட்சத்திரத்துல ( கூட்டம்) அடுத்த நட்சத்திரத்துக்கு மாறுகிறார்னு அருத்தம்.

சந்திரன் எப்படி அமுத நிலையை ஏற்படுத்துவாருன்னு கேப்பிக சொல்றேன். சந்திர ஒளிக்கு பைத்தியமாக்கிற சக்தி இருக்கிறாப்லயே பைத்தியத்தை குணமாக்கிற சக்தியும் இருக்கு. ( வளர்பிறை -தேய் பிறை)

சூரியன் ஏ.சி கரெண்டுன்னா சந்திரன் டி.சி கரெண்டு. பவர் கட் சமயம் இன்வெர்ட்டரை யூஸ் பண்ணலியா அப்படி சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு சந்திரன் நம்ம பேட்டரிய சார்ஜ் பண்றாரு.

நம்ம பாடில ஒரு இன்வெர்ட்டர் செட் அப் இருக்குன்னு நினைச்சுக்கங்க. ( நெம்பர் ஆஃப் பேட்டரீஸ்) சனம் தர்ர இன்வெர்ட்டர்ல அல்லா பேட்டரியும் கலெக்டிவா வேலை செய்யுது.

ஆனால் நம்ம பாடியில உள்ள பேட்டரிகள் தனியாகவும் -கூட்டாகவும் டூ இன் ஒன்னா வேலை செய்ய முடியும்னு வைங்க.

ஒவ்வொரு பேட்டரியும் ஒவ்வொரு பார்ட் ஆஃப் தி பாடின்னு கற்பனை பண்ணுங்க. டோட்டலா 12 பேட்டரி இருக்கு. ( 12 பாவங்கள் -மனித உடலின் 12 பாகங்களை காட்டும்). ஒவ்வொரு பேட்டரியும் ஒவ்வொரு நாள் ( ஐ மீன் ரெண்டே கால் நாளைக்கு) சார்ஜ் ஆகுதுன்னு வைங்க.

அப்பம் அந்த பார்ட் ஆஃப் தி பாடி ஜாஜ்வல்யமா, மதர் மதர்ப்பா இருக்குமா இல்லையா?

இப்பம் என் ஜன்ம நட்சத்திரம் மகம். சந்திரன் மகம்,பூரம்,உத்தரம் முத பாதத்துல சஞ்சரிக்கும் போது அந்த ரெண்டே கால் நாளும் என் தலை,முகம்லாம் நெல்லா சார்ஜ் ஆகுமா ஆகாதா?

எட்டாவது இடம் லுல்லாவை காட்டுது. சந்திரன் அங்கன சஞ்சரிக்கும் போது அதை சந்திராஷ்டமம்னு சொல்றாய்ங்க.

நினைபெல்லாம் கில்மாவுல இருக்கும் போது இதர காரியங்கள் பாதிக்கப்படுமில்லையா? அதனால தேன் சந்திராஷ்டமம் நல்லதில்லைன்னு சொன்னாய்ங்க போல.

ஜாதகத்துல உள்ள 12 பாவங்களும் 12 உடல் பகுதிகளை காட்டும். (தெரிஞ்சவுக கமெண்ட்ல போட்டு புண்ணியம் கட்டிக்கங்க பாஸ்) அந்தந்த பாவங்கள்ள சந்திரன் சஞ்சரிக்கும் போது அந்த பார்ட்ஸ் ஆஃப் தி பாடியில அமுத நிலை இருக்கும்.

ஃபோர் ப்ளேவை அந்த பார்ட் ஆஃப் தி பாடியிலருந்து துவக்கினா சூப்பர் கில்மா உண்டா இல்லையா? உண்டுன்னு அந்த புஸ்தவத்துல சொல்லியிருக்கு. இதை பற்றிய உங்க கருத்துக்களை ஷேர் பண்ணிக்க மறந்துர்ராதிங்க. உடுங்க ஜூட்



Friday, December 2, 2011

சந்திரனும் -கன்யாகுமாரியும்


அண்ணே வணக்கம்ணே !

நேத்து ஜாதகத்தில் /கோசாரத்தில் சூரியன் சரியில்லின்னா பரிகாரத்துக்கு செய்யவேண்டிய தெய்வீக விஷயங்களை சொன்னேன். இன்னைக்கு அவசர அடிக்கு ரங்கா கணக்கா ஸ்டாலின் கைது புரளிய போட்டு ஒப்பேத்திட்டன்.

நம்ம லக்னத்துக்கு 4 ல் சனி வேலை பார்க்காரு. என்ன ஒரு அஜீஸ்மென்டுன்னா அவரு ராசிக்கு 3 ல இருக்கிறதால அவரு எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாத்தேன் இருக்கு. இன்னொரு நா விஸ்தாரமா பேசுவம்.

இப்பமாச்சும் சந்திரன் மேட்டருக்கு போயிரலாம்.

சந்திரன்னா ரெண்டேகால் நாள்ள ராசிய விட்டு ஓடற ஆயா ராம் கயாராம் தானேன்னு நினைச்சுராதிங்க. இவரு மனோகாரகன். சனங்க மனசை ஒரு நொடியில மாத்தி ஆண்டிப்பண்டாரத்த கூட ஆன்டி பின்னாடி அலைய விட்டுருவாரு. இவரு ஜலகாரகன். நம்ம பாடியில 70 சதவீதம் வாட்டர் கன்டென்டுதேன்.

பவுர்ணமி நேரத்துல நமீதா நம்ம மைண்டை அட்ராக்ட் பண்றாப்ல சந்திரன் சமுத்திர தண்ணிய " இழுப்பாரு. சதா சர்வ காலம் நம்ம பாடியில இருக்கிற வாட்டர் கன்டென்டை கவர்ச்சி பண்ணி பேயாட்டம் போட வச்சிருவாரு.( நம்ம பாடியோட வாட்டர் கன்டென்ட் , கர்ப பனிக்குட வாட்டர் கன்டென்ட், சமுத்திர நீர் - இந்த மூன்றி கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதேனு எங்கனயோ படிச்சதா ஞா)

இந்த சந்திரன் பல்பு கொடுக்கற நேரத்துல எந்த சாமிய கும்பிடனும்னா ஆயுதம் தரிக்காத அம்மன். அதுலயும் கன்யாகுமாரி அம்மன் டபுள் ஓகேன்னு சொல்லியிருந்தேன்.

மொதல்ல ஜோதிஷ சாஸ்திரத்துல பார்வதின்னு சொன்னதுக்கு உண்டான லாஜிக்கை பார்த்துட்டு சந்திரனுக்கும் கன்னியாகுமாரிக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.

அர்த்த நாரீஸ்வரரை பார்த்திருப்பிங்க. வலதுப் பகுதியில ஏதோ பந்தயத்துல தோத்த கணக்கா சிவனார் பாதி மீசையோட இருப்பாரு இடது பகுதியில ஆத்தா.

ஆரு உடம்புல பார்த்தாலும் லெஃப்ட் பார்ட் கொஞ்சம் போல வீக்கா தான் இருக்கும்.அதனாலதேன் வலது காலை எடுத்து வைச்சு வாங்கங்கறாய்ங்க போல.

சூரிய நாடி சந்திர நாடி தெரியுமா? நமக்கே ( ஆண்களுக்கு) வலது நாசியில் மூச்சு நடந்தா அது சூரிய நாடி, இடது நாசியில் நடந்தா அது சந்திர நாடி

இது ஆண் ,பெண்களை பொருத்தவரை தலை கீழா மாறும் போல. ( கை ரேகை பார்க்கிறச்ச பெண்ணுக்கு இடதை பார்க்கிறாய்ங்களேன் ஏன்) நாடி பார்க்கிற மேட்டர்ல கூட டிஃப்ரன்ஸ் இருக்கிறதா கேள்வி.(சித்த வைத்திய பார்ட்டிங்க கரீட்டா சொல்லிருவாய்ங்க வெய்ட் அண்ட் சீ)

உயிர்களுக்கெல்லாம் தந்தை சூரியன் தாய் சந்திரன் (மாதிரி) இந்த ஜேஜிங்க லிஸ்ட் படி நம்ம டாடி மிஸ்டர் ஷிவா ,மம்மி ஷிவானி ( அம்மன்)

அதனாலதேன் சூரியன் சரியில்லின்னா சிவனை - சந்திரன் சரியில்லின்னா பார்வதியை வணங்க சொல்லியிருக்காய்ங்க.

கன்னியா குமாரிக்கும் சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? சந்திரன் ஜல காரகன் -சமுத்திரத்து நீரை ஈர்க்க வல்ல கிரகம்.

நீங்க கடல்ல குளிச்சிங்கனா பாடிக்கு வெளியவும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர்.பாடிக்கு உள்ளாறவும் அதே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர் கன்டென்ட்.

அட தண்ணியில இறங்கறதால என்ன அற்புதம் நடந்துரப்போகுதுன்னு நினைப்பிங்க. தண்ணீருக்குள் பொருட்கள் எடையை இழக்கும்.

கிணத்துல தண்ணி சேர்ந்தி குளிச்சவுகளுக்கு இது பக்காவா தெரியும். பக்கெட் தண்ணிக்குள்ள இருக்கிற வரை அசால்ட்டா மேலே வரும். தண்ணிக்கு மேல வந்ததும் மொத ராத்திரியில புதுப்பொஞ்சாதி மாதிரி லந்து பண்ணும்.

உடல் லேசானா மனசும் லேசாகுமா இல்லியா? சாதா தண்ணிக்கும் சொட்டு நீலம் போட்ட தண்ணிக்கும் டிஃப்ரன்ஸ் இருக்கும்ணே. ( ஐ மீன் கடல் நீர்)

இதென்ன கடல் புராணம்னு கேப்பிக சொல்றேன். கன்னியாகுமாரி அம்மன் எங்கன இருக்கா? கன்யாகுமாரியில். அங்கன என்ன இருக்கு கடல் இருக்கு..

சந்திரன் வேகமான வளர்ச்சிக்கு (தளர்ச்சிக்கு) காரகர். கன்யாகுமாரி அம்மன் பாவாடை சட்டையில இருக்கா. அந்த வயசு பெண்கள் எம்மாம் சீக்கிரம் வளர்ந்துருவாய்ங்கனு நமக்கு தெரியும். அதுலயும் சந்திரன் ஜாஜ்வல்யமா ஒளி வீசும் பவுர்ணமி இரவில் கடல்ல ஒரு குளியல் போட்டுட்டு ஆத்தாவை பார்த்து ஹாய் சொல்ட்டு அவளோட மூக்குத்தி அழகுல ஒரு கணம் கிறங்கி - மயங்கி நின்னா மனம் நிற்கும். இதைத்தானே எல்லா தியானிகளும் ட்ரை பண்ணிட்டிருக்காய்ங்க.

நாளைக்கு? செவ்வாய் vs சுப்பிரமணியரை பற்றி பார்ப்போம்.உடுங்க ஜூட்

Friday, October 14, 2011

மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டரும் ஜோதிடமும் « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே !
சத்ரு ரோக ருண உபாதைகள் இல்லாத பார்ட்டி உலகத்துலயே கிடையாது. இன்னம் சொல்லப்போனா இந்த உபாதைகள் இல்லாத நாடே கிடையாது. இந்த உபாதைகளை தவிர்க்க ஒரு அயனான பரிகாரத்தை தரத்தேன் இந்த பதிவு.

"ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா"னு எழுதி வச்சாரு கண்ணதாசன். இதையே சைக்காலஜி டெக்னிக்கலா மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னு சொல்லுது.

லக்னத்துல அ ஏழுல கச்சா முச்சான்னு கிரகங்கள் இருக்கிறது , அல்லது லக்னாதிபதி கெட்ட சகவாசம் பண்றது, மனோ காரகனான சந்திரன் சகட்டுமேனிக்கு கிரகங்களோட சேர்ந்திருக்கிறது இப்படியா கொத்த கிரக நிலைகள்ள பிறந்தவுக இந்த மன நோய்க்கு ஆளாக வாய்ப்பிருக்கு.

நம்ம ஜாதகத்துல லக்னத்துல சூரியன்,புதன், உச்ச குருன்னு 3 கிரகங்கள். இதுல லக்னாதிபதி+ மனோகாரகனான சந்திரனோட சுக்ர சேர்க்கை.

ஒரு வகையில (ஐ மீன் ஒரு கோணத்துல) பார்த்தா முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் நமக்குள்ளே இருக்கிறதா பீத்திக்கலாம்.

சூரியன் -சிவா - அழித்தல் , புதன் -விஷ்ணு -காத்தல் , குரு -பிரம்மா -படைத்தல் . ஆனால் இன்னொரு கோணத்துல பார்த்தா புதன் விரயாதிபதி , குரு ரோகாதிபதி.

சந்திர சுக்கிர சேர்க்கையிலும் ரெண்டு கோணமிருக்கு. சந்திரன் -மனம் , சுக்கிரன் -கலை ( இதையே சந்திரன்னா மனசு - சுக்கிரன்னா கில்மான்னும் அனலைஸ் பண்ணலாம்)

இதை நெகட்டிவா பார்த்தா சுக்கிரன் பாதாகாதிபதி ( நம்ம கடகலக்னத்துக்கு) . இதனாலதேன் இருக்கிறதுலயே வெள்ளை சாம்பார் தனமான ஜோதிட "கலையை" கூட நம்ம ஆசனத்துக்கு கடப்பாறை கொண்டுவர்ர ரேஞ்சுல வெளிப்படுத்திக்கிட்டிருக்கோம்.

இல்லாட்டி அய்யரு ஊஞ்சல்ல உட்கார்ந்திருந்தாரு -அய்யரம்மா காஃபி கொண்டு வந்து கொடுத்தாய்ங்கனு ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருந்திருந்தா கல்கியிலயே தொடர்கதை எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கலாம்.

சின்ன வயசுல நாம ரெம்ப சென்சிட்டிவ். "ஏண்டா பல் தேய்க்காம இட்லி சாப்பிட்டே இதைவிட ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க போட்ட கமெண்டுகளை படிக்கலாமே" னு அண்ணன் சொன்னதை தாங்கமுடியாம "உங்க சங்காத்தமே வேணாம்னு வீட்டை விட்டே வெளியேறிட்ட கேஸு.

கூச்சம் சாஸ்தி. ஒரு தாட்டி திருப்பதிக்கு போனேன். அண்ணனோட அறையில தான் ஹால்ட். சாயந்திரம் அங்கன இருந்த சொந்தக்காரவுக வீட்டுக்கு போனோம். போறச்ச கல்லா இருந்த குடல் கலக்க ஆரம்பிச்சது . நான் ரூமுக்கு போறேன்னேன். அண்ணன் ஒத்துக்கிடலை.

சொந்தக்காரவுக வீட்டுக்கு போயி போலாம். வாடான்னுட்டான். நான் ங்கோத்தா தேவையே இல்லை. விட்டுரு .ரூம்லயே பார்த்துக்கறேன்னுட்டன். ஆனால் அங்கன போனதும்..

"டே வெள்ளை! ஏதோ வேலையிருக்குன்னியே.. போகனுமா.. போறதாருந்தா போ.. போடா"னு லந்து பண்ண ஆரம்பிச்சிட்டான். பத்து நாளு தங்க போன நாம மறு நாளே பிச்சுக்கிட்டு சித்தூர் வந்துட்டம்.

இதான் நம்ம கேரக்டர். இந்த அழகுல டீன் ஏஜ் பிரச்சினைகளை எல்லாம் ஆருகிட்ட டிஸ்கஸ் பண்றதாம். அப்பத்தேன் திருச்சில இருந்து நம்ம நண்பன் சம்மர் லீவுக்கு வந்திருந்தான். ( கொல்ட்டி -சாம்பார் மேட்டர் சொல்லி நொந்த அதே நண்பன்) அவன் தான் கில்மா மேட்டர்ல அதுவரைக்கும் நமக்கு இருந்த தயக்கம்,கூச்சம், போலித்தனம் எல்லாத்தையும் ஒழிச்சு கட்டினான்.

ஆனால் அந்த ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பண்ண இங்கன ஆள் கிடையாது. அதனால டிஸ்கஸ் பண்ணி தெளிவு பெற ஒரு கவுண்டர் பார்ட் தேவைப்பட்டது. அப்பம் சுஜாதாவோட கணேஷ் வசந்த் ரெம்ப பிரபலம். நமக்கும் சுஜாதா மேல ஒரு அபிமானம் இருந்தது. உபரியா நாம ரஜினி ரசிகன் வேற ( அந்த காலத்துல)

சுஜாதாவோட வசந்த், நம்ம திருச்சி நண்பன், ரஜினி காந்த் + நாம எப்படில்லாம் இருக்கனும்னு நினைக்கிறோமோ அந்த அம்சங்கள் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி முகேஷ்னு ஒரு கேரக்டரை உருவாக்கினோம்.

நாம எழுதற கதைகள் நம்ம கேரக்டர் வந்தா அதுக்கு நிச்சயம் முகேஷ்ங்கற பேருதான். 1991 ல கலப்பு திருமணம் - வேலையின்மை -ஏழ்மை - நாயடில்லாம் நல்லாவே பக்குவப்படுத்த கொஞ்சம் இறங்கி வந்து "அழகு"ங்கற கேரக்டரா மாறினோம்.

முகேஷ் ஹீரோயிக் கேரக்டர். அழகு கொஞ்சம் போல மோரல்ஸ் -லட்சியம்லாம் உள்ள சாமனியன். ஓஷோவை படிக்க ஆரம்பிச்ச பிற்காடுதான் முருகேசனை இந்த முருகேசன் டோட்டலா அங்கீகரிக்க முடிஞ்சது.

இதையெல்லாம் எவனும் சொல்லிக்க மாட்டான். ஆனால் நாம சொல்லிக்குவம்.ஏன்னா நமக்குள்ள எந்த ஹிடன் அஜெண்டாவும் கிடையாது. நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதியாகனும்ங்கற மேட்டரையே உடைச்சாச்சு. இனி மறைக்க என்ன இருக்கு?

அரசியல்ங்கற சர்க்கசை பார்த்து பார்த்து சர்க்கஸ் வீரர்களை எல்லாம் அட்மைர் பண்ண ஆசாமி நாம. நம்ம கேரக்டர் பஃபூன் கேரக்டரா கூட இருக்கட்டும். இன்னைக்கு நாம பார்த்து அட்மைர் பண்ண சர்க்கஸ் வீரர்கள் ஆருமில்லை.

நோ ஐ.சி ( இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) . ஒரு கை பார்த்துர்ரதே சரி. நாம ஜனாதிபதி ஆகிறோமோ இல்லையோ. மனசை நெல்லா சூப்பர் ரின் போட்டு வெளுத்தாச்சு.

ஒதகாத மேட்டரையெல்லாம் போட்டு அடைச்சு நம்ம எழுத்தும் பேச்சும் மலச்சிக்கல் காரனோட அபான வாயு மாதிரி நாற கூடாது. சரி சைக்காலஜி போதும். அஸ்ட்ராலஜி மேட்டர் ஒன்னு சொல்றேன்.

லக்னத்துக்கு ஆறாம் பாவத்துக்கும் தொடர்பு ஏற்பட்டா கடன் ,நோய், வழக்கு இத்யாதி தொல்லைகள் வரும். எந்த காரியத்தை எடுத்தாலும் வாயிதா, தடை.

இதுக்கு நான் ஒரு சில பரிகாரம் சொல்றது வழக்கம்.

1.ஒரே சப்ஜெக்டை எடுத்துக்கங்க. அதுக்கு பாசிட்டிவா ஒரு பக்கம் - நெகட்டிவா ஒரு பக்கம் எழுதுங்க.

உ.ம் வரதட்சிணை நல்லது /வரதட்சிணை கெட்டது.

2.பத்திரிக்கைகள்ள ஆசிரியருக்கு கடிதம்னு ஒரு பகுதி இருக்கும். அதுக்கு ஏதாவது ஒரு புனைப்பெயர்ல உங்க துறை - பகுதியின் பிரச்சினைகளை எழுதி அனுப்புங்க. அந்த புனைப்பெயருக்கு சொந்தம் கொண்டாடாதிங்க.

3.எந்த ஒரு நல்ல வேலையானாலும் சொந்த காசுல செய்யாதிங்க. கடன் வாங்கி செய்ங்க.


உஸ் அப்பாடா.. சைக்காலஜி அஸ்ட்ராலஜி ரெண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு போட்டாச்சு. தமிழ் மணத்துல வெறுமனே சோசியத்தை பத்தி எழுதினா இது செல்ஃப் ப்ரமோஷன் போஸ்டுன்னு ரிமூவ் பண்ணிர்ராய்ங்க தலை.

Friday, February 11, 2011

சந்திரன் கெட்டால்

சந்திரன் கெட்டால் மீன்ஸ்.. நீசமாதல் (விருச்சிகம்) ,ராகு,கேது ,சனி,சேர்க்கை. இவரோட குரு சேர்ந்தா 14 வருசம் நாயடி. ஆனால் சீமான் மாதிரி திருப்பியடிக்க ஆரம்பிச்சா பேயடி ( பட்டாபிசேகமுங்கோ) ,இவரோட சுக்கிரன் சேர்ந்தா செமை கில்மா தான் போல.

எச்சரிக்கை:
இதெல்லாம் பொதுப்பலன் தேன். அப்படியே நம்பி, தேம்பாதிங்க.

சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன உங்கள் புத்தியை மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாவார்.திடீர் பயணங்கள் ஏற்படலாம்.சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வருந்துவதும் நடக்கலாம்.தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
அடிக்கடி வீடு மாறுதல் அ வீட்டு நிதி நிலை மாறுதலை காட்டும். எல்லா வகையிலும் எவ்ரி டூ இயர்ஸுக்கு பெரும் மாற்றம் தெரியும். வாகன விசயத்திலும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கும். சில காலம் சொத்துக்களை விற்று வாழும் நிலையும் ஏற்படலாம். அதே சமயம் திடீர் தனலாபம் ஏற்பட்டு சொத்து வாங்கும் சூழலும் ஏற்படும் இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸ் இருக்கும் சில சமயம் அவை அச்சு அசலாக நிஜமாவதும் உண்டு..