'>

Friday, December 2, 2011

சந்திரனும் -கன்யாகுமாரியும்


அண்ணே வணக்கம்ணே !

நேத்து ஜாதகத்தில் /கோசாரத்தில் சூரியன் சரியில்லின்னா பரிகாரத்துக்கு செய்யவேண்டிய தெய்வீக விஷயங்களை சொன்னேன். இன்னைக்கு அவசர அடிக்கு ரங்கா கணக்கா ஸ்டாலின் கைது புரளிய போட்டு ஒப்பேத்திட்டன்.

நம்ம லக்னத்துக்கு 4 ல் சனி வேலை பார்க்காரு. என்ன ஒரு அஜீஸ்மென்டுன்னா அவரு ராசிக்கு 3 ல இருக்கிறதால அவரு எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாத்தேன் இருக்கு. இன்னொரு நா விஸ்தாரமா பேசுவம்.

இப்பமாச்சும் சந்திரன் மேட்டருக்கு போயிரலாம்.

சந்திரன்னா ரெண்டேகால் நாள்ள ராசிய விட்டு ஓடற ஆயா ராம் கயாராம் தானேன்னு நினைச்சுராதிங்க. இவரு மனோகாரகன். சனங்க மனசை ஒரு நொடியில மாத்தி ஆண்டிப்பண்டாரத்த கூட ஆன்டி பின்னாடி அலைய விட்டுருவாரு. இவரு ஜலகாரகன். நம்ம பாடியில 70 சதவீதம் வாட்டர் கன்டென்டுதேன்.

பவுர்ணமி நேரத்துல நமீதா நம்ம மைண்டை அட்ராக்ட் பண்றாப்ல சந்திரன் சமுத்திர தண்ணிய " இழுப்பாரு. சதா சர்வ காலம் நம்ம பாடியில இருக்கிற வாட்டர் கன்டென்டை கவர்ச்சி பண்ணி பேயாட்டம் போட வச்சிருவாரு.( நம்ம பாடியோட வாட்டர் கன்டென்ட் , கர்ப பனிக்குட வாட்டர் கன்டென்ட், சமுத்திர நீர் - இந்த மூன்றி கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதேனு எங்கனயோ படிச்சதா ஞா)

இந்த சந்திரன் பல்பு கொடுக்கற நேரத்துல எந்த சாமிய கும்பிடனும்னா ஆயுதம் தரிக்காத அம்மன். அதுலயும் கன்யாகுமாரி அம்மன் டபுள் ஓகேன்னு சொல்லியிருந்தேன்.

மொதல்ல ஜோதிஷ சாஸ்திரத்துல பார்வதின்னு சொன்னதுக்கு உண்டான லாஜிக்கை பார்த்துட்டு சந்திரனுக்கும் கன்னியாகுமாரிக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.

அர்த்த நாரீஸ்வரரை பார்த்திருப்பிங்க. வலதுப் பகுதியில ஏதோ பந்தயத்துல தோத்த கணக்கா சிவனார் பாதி மீசையோட இருப்பாரு இடது பகுதியில ஆத்தா.

ஆரு உடம்புல பார்த்தாலும் லெஃப்ட் பார்ட் கொஞ்சம் போல வீக்கா தான் இருக்கும்.அதனாலதேன் வலது காலை எடுத்து வைச்சு வாங்கங்கறாய்ங்க போல.

சூரிய நாடி சந்திர நாடி தெரியுமா? நமக்கே ( ஆண்களுக்கு) வலது நாசியில் மூச்சு நடந்தா அது சூரிய நாடி, இடது நாசியில் நடந்தா அது சந்திர நாடி

இது ஆண் ,பெண்களை பொருத்தவரை தலை கீழா மாறும் போல. ( கை ரேகை பார்க்கிறச்ச பெண்ணுக்கு இடதை பார்க்கிறாய்ங்களேன் ஏன்) நாடி பார்க்கிற மேட்டர்ல கூட டிஃப்ரன்ஸ் இருக்கிறதா கேள்வி.(சித்த வைத்திய பார்ட்டிங்க கரீட்டா சொல்லிருவாய்ங்க வெய்ட் அண்ட் சீ)

உயிர்களுக்கெல்லாம் தந்தை சூரியன் தாய் சந்திரன் (மாதிரி) இந்த ஜேஜிங்க லிஸ்ட் படி நம்ம டாடி மிஸ்டர் ஷிவா ,மம்மி ஷிவானி ( அம்மன்)

அதனாலதேன் சூரியன் சரியில்லின்னா சிவனை - சந்திரன் சரியில்லின்னா பார்வதியை வணங்க சொல்லியிருக்காய்ங்க.

கன்னியா குமாரிக்கும் சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? சந்திரன் ஜல காரகன் -சமுத்திரத்து நீரை ஈர்க்க வல்ல கிரகம்.

நீங்க கடல்ல குளிச்சிங்கனா பாடிக்கு வெளியவும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர்.பாடிக்கு உள்ளாறவும் அதே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர் கன்டென்ட்.

அட தண்ணியில இறங்கறதால என்ன அற்புதம் நடந்துரப்போகுதுன்னு நினைப்பிங்க. தண்ணீருக்குள் பொருட்கள் எடையை இழக்கும்.

கிணத்துல தண்ணி சேர்ந்தி குளிச்சவுகளுக்கு இது பக்காவா தெரியும். பக்கெட் தண்ணிக்குள்ள இருக்கிற வரை அசால்ட்டா மேலே வரும். தண்ணிக்கு மேல வந்ததும் மொத ராத்திரியில புதுப்பொஞ்சாதி மாதிரி லந்து பண்ணும்.

உடல் லேசானா மனசும் லேசாகுமா இல்லியா? சாதா தண்ணிக்கும் சொட்டு நீலம் போட்ட தண்ணிக்கும் டிஃப்ரன்ஸ் இருக்கும்ணே. ( ஐ மீன் கடல் நீர்)

இதென்ன கடல் புராணம்னு கேப்பிக சொல்றேன். கன்னியாகுமாரி அம்மன் எங்கன இருக்கா? கன்யாகுமாரியில். அங்கன என்ன இருக்கு கடல் இருக்கு..

சந்திரன் வேகமான வளர்ச்சிக்கு (தளர்ச்சிக்கு) காரகர். கன்யாகுமாரி அம்மன் பாவாடை சட்டையில இருக்கா. அந்த வயசு பெண்கள் எம்மாம் சீக்கிரம் வளர்ந்துருவாய்ங்கனு நமக்கு தெரியும். அதுலயும் சந்திரன் ஜாஜ்வல்யமா ஒளி வீசும் பவுர்ணமி இரவில் கடல்ல ஒரு குளியல் போட்டுட்டு ஆத்தாவை பார்த்து ஹாய் சொல்ட்டு அவளோட மூக்குத்தி அழகுல ஒரு கணம் கிறங்கி - மயங்கி நின்னா மனம் நிற்கும். இதைத்தானே எல்லா தியானிகளும் ட்ரை பண்ணிட்டிருக்காய்ங்க.

நாளைக்கு? செவ்வாய் vs சுப்பிரமணியரை பற்றி பார்ப்போம்.உடுங்க ஜூட்

No comments: