'>
Showing posts with label remedies. Show all posts
Showing posts with label remedies. Show all posts

Saturday, December 3, 2011

ராகுவும் -துர்கையும்


அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் கடவுளும்ங்கற தலைப்புல ஒரு மினி தொடர் ஆரம்பிச்சு சூரியன்,சந்திரன்,செவ் ஆகிய கிரகங்கள் சரியில்லின்னா வணங்க வேண்டிய தெய்வங்கள் அதற்கும் அந்த கிரக காரகத்வத்துக்கும் என்ன சம்பந்தம்னு பார்த்துக்கிட்டு வந்தோம்.

இன்னைக்கு ராகுவும் துர்கையும்.

சிவனார் ஆலால விஷத்தை விழுங்கிட்டதாவும் அப்பம் ஆத்தாதான் கப்புன்னு கழுத்தை பிடிச்சு அதை நிறுத்தினதாவும் படிச்சிருப்பிங்க.ராகுன்னா விஷம். அந்த விஷத்தை தடுத்து நிறுத்தின ஆத்தாவை வணங்கினா ராகுவால் வரக்கூடிய ஆல்கஹாலிசம்,ட்ரக் அடிக்சன்,மெடிக்கல் அலர்ஜி,ஃபுட் பாய்சன் ஆகிய பிரச்சினைகளை தவிர்க்கமுடியும்.

ராகு சர்ப்ப கிரகங்களில் ஒன்று. மனித உடலில் மூலாதார கேந்திரத்தில் சக்தி ஸ்வரூபமாக இருக்கும் குண்டலி சக்தி ஒரு பாம்பின் வடிவில் தன் வாலை தானே கடித்தபடி உள்ளதா யோக நூல்கள் சொல்லுகின்றன.

இந்த சக்தி சாதனைகளின் விளைவாக உச்சந்தலையில் உள்ள சஹஸ்ராரத்தை அடைவதே யோகத்தின் லட்சியம். சஹஸ்ராரம் சிவ தத்துவம். சிவனை அடையவேண்டும்ங்கற ஸ்பார்க் சக்தி மனசுல விழுந்துட்டா அப்பாறம் ஸ்ரீஹரிகோட்டாவுல இருந்து புறப்படற ஏவுகணை மாதிரி சர்..தான்

நதி கடலை தேடி ஓடுவது போல - சக்தி சிவனை தேடி செல்வது இயல்பு. சூரியன் தலைக்கு காரகன்.சூரிய பலமில்லாதவர்கள் சிவனை வணங்க வேண்டும் என்று சொல்வதற்கு இது கூட ஒரு காரணமா இருக்கலாம்.

நமக்கு அறிவு சாஸ்தியாச்சா. ஒரு ராத்திரி சிவன் அசமஞ்சமா உச்சாணி கொம்புல உட்கார்ந்திருக்க சக்தி மட்டும் ஏன் அல்லாடனும், சிவனும் ஒரு படி இறங்கி வந்தா சந்திப்பு ஈஸியா நடக்குமேன்னு ஐடியா வந்தது.

சீனர்கள் சொல்லும் யின் -யாங் - நாம சொல்ற சிவ-சக்தி தத்துவம் ரெண்டும் ஒன்னுதேன். ஒன்னுக்கொன்னு பரஸ்பரம் ஈர்ப்பு கொண்டவை .

ஹ்ரீம் ங்கறது புவனேஸ்வரி பீஜம் - பெண் தன்மை வாய்ந்தது. ஓம்ங்கறது ஆண் தத்துவம். எனவே மந்திர உச்சாடனத்தின் போது ஓம் சொல்லும் போது மூலாதாரத்தின் மீதும் - ஹ்ரீம் சொல்லும் போது சஹஸ்ராரத்தின் மீது கவனம் வைத்து ஜெபிச்சுக்கிட்டிருந்தம்.

மாத்தி யோசிக்கிறதுன்னா இதானே. ஆனா அதுவரை ஏற்படாத புது வித வைபரேஷன்ஸ் -அனுபவங்கள் எல்லாம் ஏற்பட்டதென்னவோ நிஜம்.

இப்படி மாத்தி யோசிக்கிற தில்லை தர்ரது ராகு. ஆனா மாத்தி ரோசிச்சதால செம மாத்து வாங்காம இருக்கனும்னா ராகு பலம் தேவை. அந்த ராகு பலம் இல்லின்னா துர்கையோட கருணையாச்சும் தேவை.

ராகுன்னா லாட்டரி. ஆத்தா அருளை மிஞ்சின லாட்டரி என்ன இருக்கு? ராகுன்னா இருட்டு.துர்கையின் சஞ்சாரம் ராப்போதில் தான் நடக்கும். (ஹை வே பெட் ரோலிங் மாதிரிங்கோ). பாம்புக்கும் துர்கைக்கும் இன்னொரு லிங்க் இருக்கு. ஒரு வீரமணி கடவுள் இல்லை இல்லவே இல்லைன்னு கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டிருக்க இன்னொரு வீரமணி "சக்தியின் வடிவம் பாம்பு - சத்தியமாய் நீ நம்பு"ன்னு பாடி வச்சிருக்காரு.

சாதாரணமா "அவாள்" பூஜிக்காத அம்மன் கோவில்ல எல்லாம் பாம்பு புத்து இருக்கும். அட்லீஸ்ட் அம்மன் தலை மேல ஏழு தலை பாம்பு படம் விரிச்சாப்ல இருக்கும். இப்படியா கொத்த கோவில்ல "அவாள்" பூஜை பண்ணிட்டிருந்தா அது ஆக்கிரமிப்பா கூட இருக்கலாம்.

ராகுவால் வந்த தோஷம் குறைய பிராமணர்கள் பூஜிக்காத புற்று உள்ள அம்மன் கோவிலுக்கு போறது நச் பரிகாரம்.

வருத்தம்:
இந்த மினி தொடர்ல வணங்க வேண்டிய சாமிக்கும் -கிரகத்துக்கும் என்ன சம்பந்தம்னு தான் சொல்லிக்கிட்டு வர்ரோம். கிரக நிலையை பொருத்து "எப்படி" வணங்கறதுங்கற மேட்டர் விடுபட்டு போச்சு.அதையெல்லாம் இன்னொரு சமயம் இன்னொரு மினி தொடரா பார்ப்போம்.

Friday, December 2, 2011

செவ்வாயும் -முருகனும்


அண்ணே வணக்கம்ணே

எந்த கிரகம் சரியில்லின்னா எந்த கடவுளை வணங்கனும்னு ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன். அதுல செவ் சரியில்லின்னா முருகனை வணங்கனும்னும் சொல்லியிருந்தேன். அது நம்ம தனுஸ் எழுதின கொலை வெறி பாட்டு மாதிரி டுபாகூரு கிடையாது.அதுக்கு பல காரண காரியங்கள் இருக்கு. செவ்வாய்க்கும் ,முருகனுக்கும் பத்துக்கு பத்து பொருத்தம் இருக்கு.

முருகனை வணங்கினா செவ் தரக்கூடிய பிரச்சினைகள் குறையும். (உ.ம் ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள், நில தகராறுகள்,எதிரிகள்,போட்டியாளர்களால் பிரச்சினைகள் , நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடுகள் )

மொதல்ல முருகனுக்கும் செவ்வாய்க்குமான ஒற்றுமைகளை பார்ப்போம்.

செவ் நெருப்பு கிரகம். முருகன் சிவனார் நெற்றிக்கண்ணின் ஆறு பொறிகளாய் பிறந்து 6 குழந்தைகளாய் மாறியவர்.

செவ் போட்டிக்கு காரகம்.முருகன் ஆஃப்டர் ஆல் ஒரு மாங்கனி கிடைக்கலின்னு மயிலேறி மூவுலகை சுற்றி வந்தவர்.

செவ் கோபத்துக்கு காரகம். உள்ளாட்சி தேர்தல்கள்ள ரிசல்ட்டை மாத்தி லந்து பண்ண கணக்கா போட்டியில் ஜெயிச்ச தனக்கு மாங்கனி தரலைன்னு கோவிச்சுக்கிட்டு போனவர்.

செவ் யுத்தத்துக்கு காரகம். முருகன் அவதாரமே ஒரு மெகா யுத்தத்துக்கானது. (சூர சம்ஹாரம்) செவ் கிரகங்களின் சேனாதிபதி (கமாண்டர் ஆஃப் தி ப்ளேனட்ஸ்) முருகன் தேவசேனாதிபதி.

செவ் ரத்தத்துக்கு காரகம். முருகன் வேட்டுவ பெண்ணை (குறமகள்) மணந்ததால் அவருக்கு தேன் முக்கிய நிவேதன பொருள். தேனுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

முருகனுக்கு பௌமன் என்றும் ஒரு பெயர் இருப்பதாய் ஞா. இந்த வார்த்தை பூமி என்ற வார்த்தையிலிருந்து வந்தது. செவ் பூமிகாரகன்.

செவ் இளையவர்கள்/ யூத்தா காட்சியளிப்பவர்களுக்கு காரகர் .(கௌமார ஸ்வரூபம்) .முருகனுக்கு குமரன் என்றே பெயர் உண்டு. ( காட்ஸ்லயே செம யூத்து நம்மாளுதேன்)

இப்படி அக்கக்கா பிரிச்சு விளக்க ஒரு காரணம் இருக்கு. ஜோசியர் செவ் சரியில்லிங்க முருகன் கோவிலுக்கு போய் வாங்கன்னா மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடி போடறான்யா இந்தாளு. செவ் எங்கயோ இருக்காரு. முருகன் கோவில் நம்ம பேட்டையிலயே இருக்காரு ரெண்டுத்துக்கு என்னா சம்பந்தம்னு நீங்க நினைக்கப்படாது..

சோசியர் ஜஸ்ட் டாக்டர் மாதிரி. ஆரோ விஞ்ஞானிக தங்கள் வாழ்க்கைய தொலைச்சு கண்டுபிடிச்ச மருந்து மாயங்களை நோகாம எழுதி கொடுக்கிற டாக்டர்தான் ஜோசியர். ஜோசியர் அறிவாளியா இல்லாம இருக்கலாம்.ஆனால் ஜோதிட விதிகளை ஏற்படுத்திய ரிஷிகள் மகரிஷிகள் "சரக்குள்ள" ஆட்கள். எனவே சோசியர் சொன்னா கேட்டுக்கோங்க.


சந்திரனும் -கன்யாகுமாரியும்


அண்ணே வணக்கம்ணே !

நேத்து ஜாதகத்தில் /கோசாரத்தில் சூரியன் சரியில்லின்னா பரிகாரத்துக்கு செய்யவேண்டிய தெய்வீக விஷயங்களை சொன்னேன். இன்னைக்கு அவசர அடிக்கு ரங்கா கணக்கா ஸ்டாலின் கைது புரளிய போட்டு ஒப்பேத்திட்டன்.

நம்ம லக்னத்துக்கு 4 ல் சனி வேலை பார்க்காரு. என்ன ஒரு அஜீஸ்மென்டுன்னா அவரு ராசிக்கு 3 ல இருக்கிறதால அவரு எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாத்தேன் இருக்கு. இன்னொரு நா விஸ்தாரமா பேசுவம்.

இப்பமாச்சும் சந்திரன் மேட்டருக்கு போயிரலாம்.

சந்திரன்னா ரெண்டேகால் நாள்ள ராசிய விட்டு ஓடற ஆயா ராம் கயாராம் தானேன்னு நினைச்சுராதிங்க. இவரு மனோகாரகன். சனங்க மனசை ஒரு நொடியில மாத்தி ஆண்டிப்பண்டாரத்த கூட ஆன்டி பின்னாடி அலைய விட்டுருவாரு. இவரு ஜலகாரகன். நம்ம பாடியில 70 சதவீதம் வாட்டர் கன்டென்டுதேன்.

பவுர்ணமி நேரத்துல நமீதா நம்ம மைண்டை அட்ராக்ட் பண்றாப்ல சந்திரன் சமுத்திர தண்ணிய " இழுப்பாரு. சதா சர்வ காலம் நம்ம பாடியில இருக்கிற வாட்டர் கன்டென்டை கவர்ச்சி பண்ணி பேயாட்டம் போட வச்சிருவாரு.( நம்ம பாடியோட வாட்டர் கன்டென்ட் , கர்ப பனிக்குட வாட்டர் கன்டென்ட், சமுத்திர நீர் - இந்த மூன்றி கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதேனு எங்கனயோ படிச்சதா ஞா)

இந்த சந்திரன் பல்பு கொடுக்கற நேரத்துல எந்த சாமிய கும்பிடனும்னா ஆயுதம் தரிக்காத அம்மன். அதுலயும் கன்யாகுமாரி அம்மன் டபுள் ஓகேன்னு சொல்லியிருந்தேன்.

மொதல்ல ஜோதிஷ சாஸ்திரத்துல பார்வதின்னு சொன்னதுக்கு உண்டான லாஜிக்கை பார்த்துட்டு சந்திரனுக்கும் கன்னியாகுமாரிக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.

அர்த்த நாரீஸ்வரரை பார்த்திருப்பிங்க. வலதுப் பகுதியில ஏதோ பந்தயத்துல தோத்த கணக்கா சிவனார் பாதி மீசையோட இருப்பாரு இடது பகுதியில ஆத்தா.

ஆரு உடம்புல பார்த்தாலும் லெஃப்ட் பார்ட் கொஞ்சம் போல வீக்கா தான் இருக்கும்.அதனாலதேன் வலது காலை எடுத்து வைச்சு வாங்கங்கறாய்ங்க போல.

சூரிய நாடி சந்திர நாடி தெரியுமா? நமக்கே ( ஆண்களுக்கு) வலது நாசியில் மூச்சு நடந்தா அது சூரிய நாடி, இடது நாசியில் நடந்தா அது சந்திர நாடி

இது ஆண் ,பெண்களை பொருத்தவரை தலை கீழா மாறும் போல. ( கை ரேகை பார்க்கிறச்ச பெண்ணுக்கு இடதை பார்க்கிறாய்ங்களேன் ஏன்) நாடி பார்க்கிற மேட்டர்ல கூட டிஃப்ரன்ஸ் இருக்கிறதா கேள்வி.(சித்த வைத்திய பார்ட்டிங்க கரீட்டா சொல்லிருவாய்ங்க வெய்ட் அண்ட் சீ)

உயிர்களுக்கெல்லாம் தந்தை சூரியன் தாய் சந்திரன் (மாதிரி) இந்த ஜேஜிங்க லிஸ்ட் படி நம்ம டாடி மிஸ்டர் ஷிவா ,மம்மி ஷிவானி ( அம்மன்)

அதனாலதேன் சூரியன் சரியில்லின்னா சிவனை - சந்திரன் சரியில்லின்னா பார்வதியை வணங்க சொல்லியிருக்காய்ங்க.

கன்னியா குமாரிக்கும் சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? சந்திரன் ஜல காரகன் -சமுத்திரத்து நீரை ஈர்க்க வல்ல கிரகம்.

நீங்க கடல்ல குளிச்சிங்கனா பாடிக்கு வெளியவும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர்.பாடிக்கு உள்ளாறவும் அதே கெமிக்கல் காம்பினேஷன் கொண்ட வாட்டர் கன்டென்ட்.

அட தண்ணியில இறங்கறதால என்ன அற்புதம் நடந்துரப்போகுதுன்னு நினைப்பிங்க. தண்ணீருக்குள் பொருட்கள் எடையை இழக்கும்.

கிணத்துல தண்ணி சேர்ந்தி குளிச்சவுகளுக்கு இது பக்காவா தெரியும். பக்கெட் தண்ணிக்குள்ள இருக்கிற வரை அசால்ட்டா மேலே வரும். தண்ணிக்கு மேல வந்ததும் மொத ராத்திரியில புதுப்பொஞ்சாதி மாதிரி லந்து பண்ணும்.

உடல் லேசானா மனசும் லேசாகுமா இல்லியா? சாதா தண்ணிக்கும் சொட்டு நீலம் போட்ட தண்ணிக்கும் டிஃப்ரன்ஸ் இருக்கும்ணே. ( ஐ மீன் கடல் நீர்)

இதென்ன கடல் புராணம்னு கேப்பிக சொல்றேன். கன்னியாகுமாரி அம்மன் எங்கன இருக்கா? கன்யாகுமாரியில். அங்கன என்ன இருக்கு கடல் இருக்கு..

சந்திரன் வேகமான வளர்ச்சிக்கு (தளர்ச்சிக்கு) காரகர். கன்யாகுமாரி அம்மன் பாவாடை சட்டையில இருக்கா. அந்த வயசு பெண்கள் எம்மாம் சீக்கிரம் வளர்ந்துருவாய்ங்கனு நமக்கு தெரியும். அதுலயும் சந்திரன் ஜாஜ்வல்யமா ஒளி வீசும் பவுர்ணமி இரவில் கடல்ல ஒரு குளியல் போட்டுட்டு ஆத்தாவை பார்த்து ஹாய் சொல்ட்டு அவளோட மூக்குத்தி அழகுல ஒரு கணம் கிறங்கி - மயங்கி நின்னா மனம் நிற்கும். இதைத்தானே எல்லா தியானிகளும் ட்ரை பண்ணிட்டிருக்காய்ங்க.

நாளைக்கு? செவ்வாய் vs சுப்பிரமணியரை பற்றி பார்ப்போம்.உடுங்க ஜூட்

Wednesday, November 30, 2011

கிரகமும் கடவுளும் : சூரியன்

அண்ணே வணக்கம்ணே..

நேத்து எந்த ப்ளேனட் சரியில்லினா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு லிஸ்டை கொடுத்திருந்தேன்.. இதுக்கான காரண காரியங்களை நாளுக்கு தரேன்னு வாயிதா வாங்கியிருந்தேன். நேற்றைய பதிவை மிஸ் பண்ணவுக வசதிக்காக அந்த பட்டியல் மறுபடியும் இங்கே கொடுத்து கா.கா விளக்க ட்ரை பண்றேன்.

1.சூரியன்:

சூரியன்,சூரிய நாராயணன்,காயத்ரி (நான் படிச்ச புஸ்தவங்கள்ள சிவன்)

விளக்கம்:
ஜாதகத்துல சூரிய பலம் இல்லேன்னா கால்ஷியம் குறை பாட்டால் வரக்கூடிய வியாதிகள் வரும். இதனால பல்,தலை,எலும்பு ,முதுகெலும்பு எல்லாமே பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு.மேலும் ஜாதகர் இன்சோம்னியாவால் அவதி படுவார்(தூக்கமின்மை) .மறு நாள் ஜாய்ண்ட் பெய்ன்ஸ்,கண் எரிச்சல், சிடுசிடுப்பு,கடுகடுப்பு எல்லாம் இருக்கும். அப்பாவோட மிஸ் கம்யூனிகேஷன்ஸ் இருக்கும். ( பத்து மணி வரைக்கும் தூங்கிக்கிட்டு இருந்தா ராத்திரி பாருக்கு போய் சரக்கடிச்சுட்டு வந்து படுத்த அப்பனுக்கு கூட பைல்ஸ் கணக்கா எரியும்ல)

இவிகளை சூரியனை வழிபட சொல்றோம்.சூரிய வழிபாடுன்னா சூரிய நமஸ்காரம். இதை விடியல்ல தான் செய்யனும். ரா முச்சூடும் தூங்கலின்னாலும் காலங்கார்த்தாலை எந்திரிச்சு முறைப்படி சூரிய நமஸ்காரம் செய்தா மறுபடி தூங்க முடியாது. மதியம் கொஞ்சம் கண்ணசர்ந்தா மேட்டர் ஓகே.

இதை இப்படியே கன்டின்யூ பண்ணா மேற்சொன்ன உபாதைகள் நாளடைவில் குறைஞ்சு கிட்டே வரும். மேலும் சூரிய ஒளியில விட்டமின் டி, விட்டமின் ஈ எல்லாம் இருக்காம். (போனஸ்).

சூரியன்னா ஈகோ. வெறுமனே சூ.ந பண்ணிட்டு போறதால பெருசா உபயோகம் இருக்காது. கொஞ்சம் ரோசிக்கனும் -படிக்கனும். சூரியனை பத்தி அதனோட பிரம்மாண்டத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டா ஈகோ குறையவும் வாய்ப்பிருக்கு.

மேலும் சோனிங்கதான் ஈகோவுக்கு விக்டிம்ஸ். படிப்படியா ஹேல் அண்ட் ஹெல்த்தியா மாறிட்டா ஈகோவும் சுருங்கிக்கிட்டே போகும் . இதையெல்லாம் பார்க்கிற நைனாவும் சந்தோசப்படுவாரு. ( டாடி). சூரியனுக்குரிய திசையாக " நடு" என்று சொல்லப்பட்டிருக்கு.

நம்ம பாடில " நடு " தொப்புள் தான். காயத்ரி மந்திரத்தை ஒழுங்கான ஸ்ருதியில சொன்னா தொப்புள் பகுதியில அழுத்தம் ஏற்படும். தொப்புள் தான் நாடி நரம்புகள் கிராஸ் ஆகிப்போற கிராஸ் ரோட் /ஜங்சன் பாய்ண்ட்டுன்னு சொல்றாய்ங்க. காயத்ரி மந்திரத்தை ஜெபிச்சா எல்லா நாடி நரம்புகளும் ஆக்டிவேட் ஆகும். உடல் நலம்,மன நலம் மேம்படும். ஈகோ கரைஞ்சு போகும்..

யத்பாவம் தத்பவதி - நாம எதை நினைக்கிறோமோ அதுவா மாறுவோம். இந்த விதிப்படி சூரியன் எப்படி பங்சுவலா பலன் கருதா கருமம் செய்கிறாரோ அப்படி ஒரு ட்யூட்டி கான்ஷியஸ் வரும். சூரியன் எப்படி இருட்டை துரத்தி ஒளியை தராரோ அப்படியே ஜாதகரும் சமூகத்து இருட்டை துரத்தி பகுத்தறிவை ஓளி வீச செய்வார்.

நாளைக்கு சந்திரனுக்குரிய தெய்வம் - அதன் பின்னாடி உள்ள காரண காரியங்களை பார்ப்போம்.

Friday, September 9, 2011

சர்ப்ப தோஷம் : பரிகாரங்கள் ஆடியோ


சர்ப்பதோஷம்னா ராகு கேதுக்கள் லக்னத்துலருந்து 3,6,10,11,4,12 தவிர இதர இடங்களில் இருப்பது. இதற்கான பரிகாரத்தை கேட்க கீழ் காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்குங்க

Saturday, May 28, 2011

ரஜினி நலம் பெற நறுக் பரிகாரம்

பார்ட்டி ஹேல் அண்ட் ஹெல்த்தியா இருக்கிறப்பயே ஃபுட் பாய்சன்,  நுரையீரல், சிறு நீரக பாதிப்பு இத்யாதியை முன் கூட்டியே கணிச்சு தெரிவிச்ச பதிவின் முக்கிய பகுதிகளை மறுபடி இங்கே தரேன். இன்னைக்கு நடந்துக்கிட்டிருக்கிறதை அன்னைக்கே ஐ மீன் 2011,பிப்ரவரி 28 ஆம் தேதியே கரீட்டா கணிச்ச தில்லு தந்த தில்லால  ரஜினி நலம் பெற சில நறுக் பரிகாரங்களை இங்கே தர்ரேன்.

தொடர்ந்து படிக்க

Wednesday, October 13, 2010

ஜாதகத்தையே செயலிழக்க செய்ய

புதிய வரவுகளுக்காக இந்த ரிவிஷன்.   மறதி பார்ட்டிகளும் ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. மத்தவுக ஸ்க்ரால் பண்ணிரலாம்

க‌ட‌வுளின் ம‌ந்திரி ச‌பை:
ந‌வ‌கிர‌க‌ங்க‌ள் க‌ட‌வுளின் ம‌ந்திரிச‌பையில் ம‌ந்திரிக‌ளை போன்ற‌வையாகும். பிர‌த‌ம‌ர் ம‌ந்திரிக‌ளுக்கு இலாகா பிரித்து கொடுப்ப‌து போல் க‌ட‌வுள் பூமியில் உள்ள‌ எல்லா விஷ‌ய‌த்தையும் 9 ஆக‌ பிரித்து அவ‌ற்றின் மீதான‌ அதிகார‌த்தை ஒவ்வொரு கிர‌க‌த்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிர‌க‌ம் த‌ங்க‌ள் ஜாத‌க‌த்தில் ந‌ல்ல‌ நிலையில் இருந்தால் அத‌ன் இலாகாவில் உங்க‌ளை அடித்துக் கொள்ள‌ ஆளிருக்காது.அந்த இலாகா தொடர்பான எல்லா மேட்டர்லயும் சக்ஸஸ்தான். ஆனால் அதே கிர‌க‌ம் உங்களுக்கு 50:50 ரேஷோல ஃபேவரா இருந்தா என்ன செய்ய? 70 முதல் 85 சதவீதம் உங்களுக்கு அன் ஃபேவரபிளா இருந்தா என்ன செய்ய?

ஒரு மந்திரிக்கும் உங்களுக்கு வெட்டுப்பழி குத்துப்பழி இருக்குனு வைங்க. அந்த மினிஸ்டரி தொடர்பான காண்ட் ராக்டுக்கு ட்ரை பண்ணுவிகளா? வாலை அவுத்து விடுவிகளா? மாட்டிங்க..அதே மாதிரி தான் கிரகங்களும் . கிரகங்களோட காரகத்வத்தை தெரிஞ்சிக்கிட்டு அந்த லிஸ்டுல எதையெல்லாம் விட்டுர முடியுமோ அதையெல்லாம் விட்டுட்டா மீதியுள்ள மேட்டர்ல கிராண்ட் சக்ஸஸ் ஆகலாம். இது கிரகம் கெட்டிருக்கிற சாதகர்களுக்கு மட்டுமில்லை, கிரகம் பலம் பெற்றுள்ள ஜாதகர்களுக்கும் பொருந்தும்.

லோ ஓல்ட்டேஜ் உள்ள போது எப்படி மோட்டரை எல்லாம் ஆஃப் பண்ணா ட்யூப் லைட்டுங்க வெளிச்சத்தை வாரி இறைக்குமோ அப்படியே மத்த மேட்டர்ல பல்பு போடும்.

இந்த ஆப்ஷன் கிரகங்களோட காரக்த்வத்துல மட்டுமில்லை பாவங்கள் விஷயத்திலும் இருக்கு.

உங்க ஜாதகம்ங்கறது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி யை போன்றதாகும். ஒவ்வொரு சேனலும் உங்க‌ள் வாழ்வின் ஒவ்வொரு கோணத்தை காட்டும். இதில் 12 பெட்டிகள் உள்ளனவல்லவா? முதல் பெட்டி தான் லக்னம். லக்னம் உட்பட மொத்தம் 12 பாவங்கள் உள்ளன.

எந்த சேனலுக்கு சிக்னல் வீக்கா இருக்கோ அதை ரெம்ப நேரம் பார்த்தா என்ன ஆகும்? கண்ணை கட்டும். கடுப்பாவும்.  அப்போ என்ன செய்யனும்?

தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளை மட்டும் சிக்னல் வீக்காயிருக்கிற சேனல்ல பார்த்துட்டு சேனல் தாவிர வேண்டியதுதான்.மொதல்ல 12 சேனல்கள்ள ஒளிபரப்பாகிற நிகழ்ச்சிகளை சொல்றேன்

12 சேன‌ல்க‌ள்:

ஜாத‌க‌த்தில் 12 சேன‌ல்க‌ள் உள்ள‌தாக‌ சொன்னேன். அவ‌ற்றில் தெரிய‌க் கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளை இப்போது பார்ப்போம்.


முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்


2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்


3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்


4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்


5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு


6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு


7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்


8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்


9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.


10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

உங்களுக்கு ஜாதகம் இருந்தாலும் இல்லேன்னாலும், உங்க ஜாதகத்துல மேற்படி 12 பாவங்கள் வீக்கா இருந்தாலும் ஸ்ட்ராங்கா இருந்தாலும் கீழ்காணும் 12 பாயிண்ட்ஸை ஃபாலோ பண்ணீங்கனா 12 பாவங்களில் உள்ள தீய பலன்கள் உங்களை அண்டாது.

1.எளிமையா இருங்க. மேக்கப் பண்ணாதிங்க. வழுக்கைய மறைக்க தொப்பி, தொப்பைய மறைக்க பெல்ட் எல்லாம் போடாதிங்க. ஃப்ரீயா உடுங்க பாஸ்

2.குறைவா பேசுங்க. சிக்கனமா இருங்க.குடும்பத்துல தாமரை இலை தண்ணீர் மாதிரி இருங்க. விழிச்சிருக்கிற நேரத்துல ( சான்ஸ் கிடைக்கிறப்ப) கண்ணை லேசா மூடிக்கிட்டு இருங்க.

3.சகோதர,சகோதிரிகள்(இளைய) விஷயத்துல பூசிக்கிடாதிங்க. ஆனா அவிகளுக்கு உதவலாம். ( செவ்வாய் 8,12 ல ,சனி 1,4,8,12 ல இல்லாத நேரத்துல பிரயாணத்துக்கு பின் வாங்காதிங்க- சனி 7 லருந்தா டபுள்ஸ் மட்டும் போவக்கூடாது) வெறுமனே சவால் விடாதிங்க

4.தாய் விஷயத்துல பூசிக்கிடாதிங்க, ஆனா அவிகளுக்கு சர்வீஸ் பண்ணுங்க. வீட்ல அடைஞ்சு கிடக்காதிங்க (உலகம் பெருசு தலை!)  வாகனத்தை அளவுக்கு மீறி யூஸ்பண்ணாதிங்க. (ஆசனத்துல கட்டி வரும், வீர்யத்திலான உயிரணுக்களோட எண்ணிக்கை தான் குறையும்) தேவையே இல்லேன்னாலும் ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹிந்தி, ஜெர்மன் இப்படி புதுசா எதுனா கத்துக்கிடுங்க

5.பேர் புகழுக்கு அலையாதிங்க -உங்களை நீங்களே தாழ்த்தி பேசுங்க - பிள்ளைகள் விஷயத்துல பூசிக்கிடாதிங்க. ஆனால் செலவழிக்க வேண்டிய மேட்டர்ல செலவழிங்க. பணம்  சொம்மா கொட்டும்னு ஆகாச கோட்டை கட்டாதிங்க

6.வராதுனு தெரிஞ்சாலும் சின்ன தொகைகளை கைமாத்தா கொடுங்க. சின்ன சின்ன தலைவலி,ஜுரத்துக்கெல்லாம் மாத்திரை மருந்துனு ஓடாதிங்க. பகைவர்க்கு அருள்வாய் நெஞ்சேங்கறத ஃபாலோ பண்ணுங்க

7.இந்த உலகத்துக்கு தனியா வந்தோம் தனியா தான் போப்போறோம்.மத்ததெல்லாம் சந்தை கூட்டம். ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் எண்ணிக்கைய அளவோட வச்சுக்கங்க.இவிகளோட செலவழிக்கிற நேரத்தையும் குறைங்க. ஆனால் அவிகளுக்கு தாராளமா உதவலாம்.

8.நெத்தி வேர்வை நிலத்துல சிந்த உழையுங்கள். அப்பப்போ ரஜினி மாதிரி காணாம போயிருங்க. வாய்ப்பிருந்தா ஜெயிலுக்கு போங்க ( கைதிகளுக்கு எதுனா லட்டு, ஜாங்கிரி மாதிரி கொடுக்க). தனிமைய விரும்புங்க

9.அப்பாவோட ரெம்ப பூசிக்காதிங்க.அவர் மேல டிப்பெண்ட் ஆகாதிங்க. அவர் சொத்தை முடிஞ்சவரை அனுபவிக்காதிங்க. ஆனா சர்வீஸ் பண்ணுங்க. டூர், புண்ணிய க்ஷேத்திரம்னு ஜொள்ளு விடாதிங்க( தானா அமைஞ்சா போய் வரலாம்) வாயை கட்டி வயித்தை கட்டி சேர்த்து வைக்காதிங்க. முக்கியமா ப்ரைவேட் சிட்ஸ், நகை சீட்டு வேணா

10.உங்களூது டேபிள் ஒர்க் ஆ இருந்தாலும் ப்ரைவேட்டா  ஃபீல்ட் ஒர்க்கும் பண்ணுங்க.

11.மூத்த சகோதர சகோதிரியோட ரெம்ப பூசிக்காதிங்க. எதுல கை வச்சாலும் லாபத்துகாகவேனு போகாதிங்க.

12.கஞ்சத்தனம் பண்ணாம தாராளமா செலவழிங்க. சாப்பட்டை, தூக்கத்தை,செக்ஸை குறைங்க ( செக்ஸை குறைக்க வழி அதுக்குன்னே பிறந்தாப்ல அனுபவிச்சுர்ரதுதான்)