'>

Saturday, February 5, 2011

சந்திர பலமும் கில்மாவும்

சந்திர பலமும் கில்மாவும்

நாட் நாட் சினிமாலருந்து, லேட்டஸ்ட் படம் வரை டூயட்டுன்னா சந்திரனை ஒரு மேண்டேஜ் ஷாட்டாவாச்சும் காட்டிர்ராய்ங்க. ஏன்னா கில்மாவுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு இது. மனித மனதின் அடியாழத்தில் இது பொதிஞ்சு கிடக்கு.

உச்சி வெய்யில்ல கூட "ஷோ"போடற சிங்கங்கள் இருக்கலாம். ஆனால் ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். விதியில்லாத குறைக்கு போடலாமே தவிர சந்திரன் அதுவும் வளர்பிறை சந்திரன் அதுவும் பவுர்ணமி சந்திரனோட ஒளியில உரசி ,உலவி, கொஞ்சி மகிழறதுல இருக்கிற த்ரில்லே வேற.

பவுர்ணமி சந்திரன் கடல் நீரை ஈர்ப்பது அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர்தான். தெரியாத மேட்டர் என்னடான்னா ஹ்யூமன் பாடில உள்ள வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனும் ,சமுத்திர நீரோட கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதான்ங்கறது.

மனுஷனொட பாடில 90% வாட்டர் கன்டென்டுதானு நினைக்கிறேன். தாளி ரெண்டு மூனு தாட்டி வாயால,வயித்தால போனா டெலிவரி ஆன பெண் மாதிரி டீலாயிர்ரம். தோல் எல்லாம் பாட்டி கணக்கா சுருங்க ஆரம்பிச்சுரும். இதான் சந்திரனுக்கும் ஹ்யூமன் பாடிக்கும் உள்ள லிங்க்.

ஜோதிஷத்துல சந்திரன் மனோகாரகன்னு சொல்றாய்ங்க. அதாவது மனசுக்கு அதிபதி இவரு. சந்திர பலம் இருந்தா நல்ல மனமிருக்கும். மனோபலமிருக்கும்னு அர்த்தம். சந்திரனுக்கு மதினு இன்னொரு பேர். மதிங்கற வார்த்தைக்கு மரியாதை கொடு. ரெஸ்பெக்ட் (அதர்ஸ்)னும் ஒரு அர்த்தம் உண்டு. நல்ல மனசு இருக்கிறவன் எவனையும் அவமதிக்கமாட்டான். மலையாளத்துல மதிங்கற வார்த்தைக்கு போதும்னு ஒரு அர்த்தம் இருக்கு. நல்ல மனசுன்னா என்ன? போதுங்கற மனசுதான். மதி (சந்திரன்) நல்ல இடத்துல இருந்தாதேன் மன்சன் மதி(போதும்)ன்னுவான்.நீங்க போதும்னு நின்னுட்டா எல்லாமே உங்களை தேடிவரும். எனக்கே எனக்கேனு அலைஞ்சு பறைசாத்தினா உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கதைதேன்.

"எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு"னு ஒரு பழமொழி இருக்கு. எண்ணம்னா வந்து போற எண்ணங்கள் இல்லை. எண்ணங்களுக்கெல்லாம் விதையான எண்ணம் அது நல்லதா இருந்தா இன் ப்ராசஸ் மனம் நல்லதா மாறிரும். மனம்போல் வாழ்வுங்கறதால வாழ்வும் பெட்டரா மாறிரும். மேற்படி விதை எண்ணம் எங்கருந்து விதைக்கப்படுதுனு புரியலை. ஜீன் வழியானு சொல்றாய்ங்க. அப்ப என்.டி.ஆர் போட்ட டஜன் குட்டியும் ஏன் டம்மி பீசாயிருச்சு. நம்ம தாத்தா மேட்டர்ல கூட அழகிரிக்கும்,
ஸ்டாலினுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு.. இங்கே தான் சந்திரன் விளையாடறாரு.

சந்திர ஆதிக்கத்துல உள்ளவுக இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமானவுகனு ஒரு கணக்கிருக்கு. (ஸ் ..அப்பாடா ..நம்முதும் கடக லக்னம் தேன் -வாக்குல சந்திரன் -ஆக நம்ம பேச்சு/எழுத்து இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கம் தான் போல)

மனமிருந்தால் மார்கம் உண்டுங்கறாய்ங்க. "அவன் மனசு வைக்கலைப்பா.." " ஐயா மனசு வச்சா இதெல்லாம் ஜுஜுபி" இந்த கான்வர்சேஷன் எல்லாம் நெஜம் தான் பாஸ்! மனசு வச்சாத்தான் எதையும் சாதிக்க முடியும். அதுக்கு சந்திரபலம் தேவை.

தெலுங்குல சந்தோஷம் சகம் பலம்ங்கறான். சந்தோஷத்தை தர்ரது ஸ்தூலமான பொருட்கள் இல்லே. சனம் பொருளுக்கு அலையுதுன்னா அதுல கிடைச்சுருமோங்கற எண்ணத்துலதான். வெறும் பொருட்களால சந்தோஷம் கிடைச்சுர்ர மாதிரி இருந்தா அவனவன் 3 ட்யூட்டி பண்ணுவான். சந்தோசத்தை தர்ரது மனசு.

மனசுல உள்ளதெல்லாம் ரெண்டே ரெண்டு கோரிக்கை தேன். ஒன்னு கொல்லனும் ரெண்டு கொல்லப்படனும். இது ரெண்டுக்கும் வாய்ப்புள்ள எல்லா மேட்டர்லயும் மனசு துள்ளும். இது ரெண்டுமே செக்ஸுல சாத்தியமாகுது.அதனாலதான் கில்மாவுக்கு இம்மாம் கிராக்கி.

மனசு ஒத்துழைக்கலைன்னாலும் ஆஃபீஸ் வேலைய வேணம்னா செய்துர முடியும். ஆனால் கில்மா மேட்டர்ல இது இம்பாசிபிள். அதுவும் நீங்க ஆண் என்றால் அசம்பவம். சந்திர பலம் இருந்தாதான் மனசு ஒத்துழைக்கும்.

கும்ப லக்ன காரவுகளுக்கு இவர் சஷ்டமாதிபதி (6) ங்கறதால இவர் 8 அ 12லருந்தா பெட்டர்
தனுசு லக்ன காரவுகளுக்கு இவர் அஷ்டமாதிபதிங்கறதால 6 அ 12ல இருந்தா பெட்டர்.
சிம்ம லக்ன காரவுகளுக்கு இவர் விரயாதிபதிங்கறதால 6 அ 8லருந்தா பெட்டர்.

அதே மாதிரி சந்திரனோட 6,8,12 அதிபதிகள் சேர்ரது, ராகு கேதுக்கள் ஜாய்ன் பண்ணிக்கிறது , நீசமாயிர்ரது (விருச்சிக ராசி) சனி கூட்டு சேர்ரதுல்லாம் இருந்தா மன நலம் கோவிந்தா. மனம் கெட்டா மண வாழ்வும் போயிந்தா..

(சந்திர பலத்தை பத்தியே இன்னம் மஸ்தா சொல்லனும் நைனா அடுத்த பதிவுல பார்ப்போம்..உடு ஜூட்)



தெலுங்குல கூட மதிங்கற வார்த்தை இருக்கு . ஆனா அதை madhi ன்னு ப்ரனவுன்ஸ் பண்ணமாட்டாய்ங்க. mathiன்னு ப்ரனவுன்ஸ் பண்றாய்ங்க. "நா மதி நின்னு பிலிச்சிந்தி கானமை வேணு கானமை" என் மனம் உன்னை அழைக்குது கானமாய் முரளி கானமாய் "னு அர்த்தம்.

மதிங்கற வார்த்தைக்கு முகம்னும் ஒரு அர்த்தம் இருக்குங்கோ .உ.ம் பானுமதி (சூரியனை போன்ற முகமுடையவள்) சந்திரமதி (சந்திரனை போன்ற முகமுடையவள்) மதின்னா மனம் . மனம் மலர்ந்திருந்தா முகமும் மலர்ந்திருக்கும்.

No comments: