'>
Showing posts with label தொழில். Show all posts
Showing posts with label தொழில். Show all posts

Wednesday, August 3, 2011

தொழில் உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே,

நேத்து தொழிலை கவனிச்சே ஆகவேண்டிய கட்டாயம்.அதனால நேற்றைய பதிவு கொஞ்சம் போல சோனியாயிருச்சு. அதை ஈடுகட்ட இன்னைக்கு நோன்டி நுங்கெடுத்துரனும்னுதேன் ஆரம்பிக்கிறேன்.ஆத்தா விட்ட வழி.

ஆணோ பெண்ணோ எந்த உயிரா இருந்தாலும் அதனுடைய சப்கான்ஷியஸ் மைண்ட்ல இயற்கை பொதிஞ்சு வச்சிருக்கிற பேசிக்கல் கமாண்டுகள் ரெண்டு

1.உயிர் வாழ்தல் 2.பரவுதல்

இந்த ரெண்டு கான்செப்டுக்காக செய்யும் போது தொழில் உத்யோகத்துல ஆண் பெண்களிடையில் எந்த வித்யாசமும் வர்ரதில்லை.

உயிர் வாழ்தல் இரண்டு விதம்:

உயிர் வாழ்தல்னா "உசுரை கையில பிடிச்சுக்கிட்டு" வாழறது ஒரு விதம். இது பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.

உயிர் வாழ்தல்னா தான் உயிர் வாழ்வதை உலகத்துக்கே கம்யூனிக்கேட் செய்தபடி -தன் சர்வைவலை பன்முறை உறுதி செய்துகொண்டபடி வாழறது இன்னொரு விதம் இது பலம் வாய்ந்தவர்களின் லைஃப் ஸ்டைல்


பரவுதல் ரெண்டு விதம்:

பரவுதல்னா விந்தை கொட்டுதலோ அ கொட்டப்பட்ட விந்தை ஏற்று பெற்றுத்தள்ளுதலோ பலகீனர்களின் லைஃப் ஸ்டைல். Read More

Tuesday, August 2, 2011

தொழில்,உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு அடிச்சு பிடிச்சு 9 பாவம் முடிச்சு இப்பம் பத்தாம் பாவத்துக்கு வந்திருக்கம். இது ஜாதகரோட தொழில்,உத்யோகம் இத்யாதிய காட்டும் பாவம். இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு இடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

ஜாதகத்துல 9 ஆம் பாவத்தை தர்மஸ்தானம் -10 ஆம் பாவத்தை கர்மஸ்தானம்னு சொல்வாய்ங்க. இந்த ரெண்டு பாவாதிபதிகளும் சம்பந்தப்படறதை தர்ம கர்மாதிபதி யோகம்னு சொல்றாய்ங்க. தொழில்ல முழு ஈடுபாட்டை காட்டறவன் செய்யும் தொழிலே தெய்வம்னு இருந்துருவான்.இதனால கோவில் குளம் தானம் தருமம் இத்யாதி மேல எல்லாம் அவனுக்கு ஈர்ப்பு இருக்காது. ( இந்த நிலை 10 ஆம் பாவம் பலம் பெற்றா கிடைக்கும்) Read More

Friday, February 25, 2011

365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா



365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா 3 மேட்டர் உங்க ஜாதகப்படி கரீட்டா செட் ஆயிட்டா போதும். ஒன்னு செய் தொழில். ரெண்டு மனைவி மூணு வீடு . அப்ப மத்த விசயம்லாம் ஆத்துல அடிச்சிக்கினு போனா பரவால்லியானு கேப்பிக.

நிதானமா ரோசிங்க. ஒரு நாள்ள -24 மணி நேரத்துல மனுஷன் கு.பட்சம் 8 மணி நேரமாச்சும் தொழில்,உத்யோகம்,வேலைன்னு செலவழிச்சாகனும். அதனால தொழில் மேட்டர் ஜாதகப்படி அமைஞ்சுட்டா 8 மணி நேரம் கிரக பீடனங்களிலிருந்து எஸ்கேப். ( மீன் தண்ணில இருக்கிறாப்ல சேஃப் - உங்க ஜாதகத்துக்கு தொடர்பில்லாத வேலையில இருந்தா அது மனுஷன் நீச்சலடிக்கிற மாதிரி -அல்லாரும் குற்றாலீஸ்வரன் ஆயிரமுடியாதில்லியா -மூச்சு வாங்கும் -நாக்கு தள்ளும் -எப்படா கரையேறுவோம்னு தான் இருக்கும்)

அடுத்து நைட் 10 டு மார்னிங் 10 AM 12 மணி நேரம் வீட்டுல செலவழிக்கவேண்டியிருக்கு. அதனால வீடு ,பொஞ்சாதி கரீட்டா அமையனும் இல்லாட்டி இந்த 12 மணி நேரம் நரகமாயிரும். தாளி வீடு சரியில்லாதவன்,பொஞ்சாதி பிடுங்கல்ல இருந்து தப்பிக்க நினைக்கிறவன் தான் இன்ன பிற ஆக்டிவிட்டீஸுக்கு வர்ரான்.

மேற்சொன்ன 3 மேட்டர் கரீட்டா செட் ஆயிருச்சுன்னா 20 மணி நேரம் மன்சன் சேஃப் ஆயிர்ரான். இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் உங்க தொழில் உங்க ஜாதகப்படித்தான் அமைஞ்சிருக்கான்னு தெரிஞ்சிக்கனும். உங்க வீடு,மனைவி மேட்டர்லயும் இதை செய்யனும். அப்படியில்லேன்னா மெல்ல மெல்ல ரூட்டை மாத்தி உங்க பேட்டைக்கு வந்துரனும்.( பொஞ்சாதி மேட்டர்ல மட்டும் இது கஷ்டம்தேன். மொதல் பார்ட்டி இருக்கிறச்ச ரெண்டாவது பார்ட்டிக்கு ட்ரை பண்ணா மகிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டு கதை ஒரு பக்கம்னா இந்த ஒரு செயல் உங்களுக்கு அப்பாறம் உங்க வம்ச விருட்சத்துல வரப்போற ஏழு தலைமுறைக்கு ஆப்பாயிரும்.

அவிக தங்களோட சிக்கலை என்னாட்டம் ஆளுக்கு சொன்னா நாங்க போட்டு குடுத்துருவம். (உங்க முன்னோர் ஆரோ ஒன்னுக்கு ரெண்டா கண்ணாலம் கட்டியிருக்காய்ங்க.அதனாலதான் உங்க கண்ணாலம் தள்ளிப்போகுது -குடும்பவாழ்க்கையில சிக்கல்னு) நீங்க செத்து எந்த லோகத்துல இருந்தாலும் அவிக சாபத்தை வேற வாங்கனும்.

இதுவரை கமிட் ஆகாதவிங்க வேணம்னா ட்ரை பண்ணலாம். ( எனக்கு வரப்போற பொஞ்சாதி எப்படியிருப்பானு சோசியரை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு சூஸ் பண்ணிக்கலாம். ஏற்கெனவே ஆனவுக (கண்ணாலத்தை சொன்னேன்) உங்க ஜாதகப்படி பொஞ்சாதி எப்படியிருக்கனும்னு கண்டுக்கிட்டு அவிக ட்ரஸ் அப், மேக்கப், கெட் அப், தொழில் இத்யாதியில மாற்றம் கொண்டு வர ட்ரை பண்ணலாம். வீடு மேட்டர்ல யுவார் ஃப்ரீ.

"கட்டிடக்கலை ஒரு அறிமுகம்"னு ஒரு புக் ஒர்க்ல அதனோட ஆசிரியர் கே.வி.முனியோட கோ ஆப்பரேட் பண்ண சமயம் அவர் ஒரு பாய்ண்ட் சொன்னாரு.

ருணானுபந்த ரூபேணா பசு,பத்னி ,சுதாலயானு ஒரு ஸ்லோகம் இருக்காம். "சுதா" என்றால் பிள்ளைகள், ஆலயா என்றால் வீடு. பூர்வ கர்ம வினைகளுக்கேத்தாப்ல தான் கால் நடை, மனைவி, வீடுல்லாம் அமையும்னு ஸ்லோகம் சொல்லுது.

மாதா,பிதா,குரு தெய்வங்கற லிஸ்டுல தெய்வம் கடாசில வந்தாலும் தெய்வத்தோட அருளாலயே மொதல்
மூணும் அமையறாப்ல பசு,பத்னி,சுதா,ஆலயாங்கற லிஸ்டுல ஆலயா(வீடு) கடைசில வந்தாலும் வீட்டைபொறுத்து மத்த தெல்லாம் அமைய வாய்ப்பிருக்கு - விதியை மதியால் வெல்ல நினைக்கிறவன் அதை வீட்டின் மூலம் நிறைவேத்தலாம்னு சொன்னாரு.

அவரோட நோக்கம் வாஸ்துப்படி வீட்டை அமைச்சிக்கனுங்கறது. ஆனால் நான் சொல்ல வர்ரது வேற . உங்க ஜாதகப்படி நீங்க எந்த மாதிரி வீட்ல வாழனுமோ அந்த மாதிரி வீட்டை அமைச்சிக்கிட்டாலே போதும் ( உ.ம் ஆக்னேய குறைபாடுள்ள வீடு ) சுத்தம் சுகாதாரம்லாம் நமக்குத்தேன் முக்கியம். கெளுத்தி மீனுக்கு சேறுதான் சொர்கம்ங்கோ.


சரிங்கண்ணா இந்த பதிவுல மனுஷனோட 24 மணி நேரத்துல கு.ப 8 மணி நேரத்தை விழுங்கிர்ர தொழிலை பத்தி விலாவாரியா இங்கே பார்ப்போம்.