'>

Friday, December 2, 2011

செவ்வாயும் -முருகனும்


அண்ணே வணக்கம்ணே

எந்த கிரகம் சரியில்லின்னா எந்த கடவுளை வணங்கனும்னு ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன். அதுல செவ் சரியில்லின்னா முருகனை வணங்கனும்னும் சொல்லியிருந்தேன். அது நம்ம தனுஸ் எழுதின கொலை வெறி பாட்டு மாதிரி டுபாகூரு கிடையாது.அதுக்கு பல காரண காரியங்கள் இருக்கு. செவ்வாய்க்கும் ,முருகனுக்கும் பத்துக்கு பத்து பொருத்தம் இருக்கு.

முருகனை வணங்கினா செவ் தரக்கூடிய பிரச்சினைகள் குறையும். (உ.ம் ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள், நில தகராறுகள்,எதிரிகள்,போட்டியாளர்களால் பிரச்சினைகள் , நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடுகள் )

மொதல்ல முருகனுக்கும் செவ்வாய்க்குமான ஒற்றுமைகளை பார்ப்போம்.

செவ் நெருப்பு கிரகம். முருகன் சிவனார் நெற்றிக்கண்ணின் ஆறு பொறிகளாய் பிறந்து 6 குழந்தைகளாய் மாறியவர்.

செவ் போட்டிக்கு காரகம்.முருகன் ஆஃப்டர் ஆல் ஒரு மாங்கனி கிடைக்கலின்னு மயிலேறி மூவுலகை சுற்றி வந்தவர்.

செவ் கோபத்துக்கு காரகம். உள்ளாட்சி தேர்தல்கள்ள ரிசல்ட்டை மாத்தி லந்து பண்ண கணக்கா போட்டியில் ஜெயிச்ச தனக்கு மாங்கனி தரலைன்னு கோவிச்சுக்கிட்டு போனவர்.

செவ் யுத்தத்துக்கு காரகம். முருகன் அவதாரமே ஒரு மெகா யுத்தத்துக்கானது. (சூர சம்ஹாரம்) செவ் கிரகங்களின் சேனாதிபதி (கமாண்டர் ஆஃப் தி ப்ளேனட்ஸ்) முருகன் தேவசேனாதிபதி.

செவ் ரத்தத்துக்கு காரகம். முருகன் வேட்டுவ பெண்ணை (குறமகள்) மணந்ததால் அவருக்கு தேன் முக்கிய நிவேதன பொருள். தேனுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

முருகனுக்கு பௌமன் என்றும் ஒரு பெயர் இருப்பதாய் ஞா. இந்த வார்த்தை பூமி என்ற வார்த்தையிலிருந்து வந்தது. செவ் பூமிகாரகன்.

செவ் இளையவர்கள்/ யூத்தா காட்சியளிப்பவர்களுக்கு காரகர் .(கௌமார ஸ்வரூபம்) .முருகனுக்கு குமரன் என்றே பெயர் உண்டு. ( காட்ஸ்லயே செம யூத்து நம்மாளுதேன்)

இப்படி அக்கக்கா பிரிச்சு விளக்க ஒரு காரணம் இருக்கு. ஜோசியர் செவ் சரியில்லிங்க முருகன் கோவிலுக்கு போய் வாங்கன்னா மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடி போடறான்யா இந்தாளு. செவ் எங்கயோ இருக்காரு. முருகன் கோவில் நம்ம பேட்டையிலயே இருக்காரு ரெண்டுத்துக்கு என்னா சம்பந்தம்னு நீங்க நினைக்கப்படாது..

சோசியர் ஜஸ்ட் டாக்டர் மாதிரி. ஆரோ விஞ்ஞானிக தங்கள் வாழ்க்கைய தொலைச்சு கண்டுபிடிச்ச மருந்து மாயங்களை நோகாம எழுதி கொடுக்கிற டாக்டர்தான் ஜோசியர். ஜோசியர் அறிவாளியா இல்லாம இருக்கலாம்.ஆனால் ஜோதிட விதிகளை ஏற்படுத்திய ரிஷிகள் மகரிஷிகள் "சரக்குள்ள" ஆட்கள். எனவே சோசியர் சொன்னா கேட்டுக்கோங்க.


No comments: