'>
Showing posts with label ராகுல். Show all posts
Showing posts with label ராகுல். Show all posts

Friday, January 27, 2012

அடுத்த பிரதமர் ஆரு ? : பகீர் முடிவுகள்

அண்ணே.. வணக்கம்ணே !
சோதிட பதிவை எதிர்பார்த்து வந்திருந்திங்கனா சாரி.. இது இந்தியா டுடே ஆர்க் சர்வே முடிவுகளை பற்றிய பதிவு.

நேரமில்லாததால ஹைலைட்ஸ் மட்டும் இங்கே:

வறுமை ஒழிப்புக்கு பாடுபட கூடிய கட்சி பா.ஜ.க ன்னுட்டு 31 % பேரு நம்பறாய்ங்க. இந்த மேட்டர்ல , காங்கிரஸ் கட்சியை 26% பேர் தான் நம்பறாய்ங்க.( இன்னுமா இந்த சனம் நம்மை நம்பறாய்ங்க: சோனியா)

* சிறந்த பிரதமர் மோடின்னு சொன்னவுக 24 சதம், ராகுலுன்னு சொன்னவுக 17 சதவீதத்துக்கும் குறைவு

* ஒடனே எலக்சன் வந்தா காங்கிரஸ் கட்சிக்கு 110 சீட்டுக்கு மேல வராது.

* பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு 140 க்கும் குறைவான சீட்டுதான் வரும்

* சமாஜ் வாதி (முலாயம்) , பி.எஸ்.பி (மாயா) , அ.தி.மு.க , பி.ஜே.டி ( நவீன் பட்னாயக்) மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்( ஜகன்) போன்ற கட்சிகள் தான் அடுத்த பிரதமரை டிசைட் பண்ணுவாய்ங்க

கொசுறு:
உங்க தொகுதியில ஹசாரே நின்னா ஓட்டு போடுவிகளான்னு கேட்டா 60% பேர் " நிச்சயமா போடுவோம்"னு சொல்லியிருக்காய்ங்க.

ஆனால் ராகுல் நின்னா அவருக்கு ஓட்டு போடுவோம்னு சொன்னவுக 24% தேன்




Saturday, December 3, 2011

ராகுவும் -துர்கையும்


அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் கடவுளும்ங்கற தலைப்புல ஒரு மினி தொடர் ஆரம்பிச்சு சூரியன்,சந்திரன்,செவ் ஆகிய கிரகங்கள் சரியில்லின்னா வணங்க வேண்டிய தெய்வங்கள் அதற்கும் அந்த கிரக காரகத்வத்துக்கும் என்ன சம்பந்தம்னு பார்த்துக்கிட்டு வந்தோம்.

இன்னைக்கு ராகுவும் துர்கையும்.

சிவனார் ஆலால விஷத்தை விழுங்கிட்டதாவும் அப்பம் ஆத்தாதான் கப்புன்னு கழுத்தை பிடிச்சு அதை நிறுத்தினதாவும் படிச்சிருப்பிங்க.ராகுன்னா விஷம். அந்த விஷத்தை தடுத்து நிறுத்தின ஆத்தாவை வணங்கினா ராகுவால் வரக்கூடிய ஆல்கஹாலிசம்,ட்ரக் அடிக்சன்,மெடிக்கல் அலர்ஜி,ஃபுட் பாய்சன் ஆகிய பிரச்சினைகளை தவிர்க்கமுடியும்.

ராகு சர்ப்ப கிரகங்களில் ஒன்று. மனித உடலில் மூலாதார கேந்திரத்தில் சக்தி ஸ்வரூபமாக இருக்கும் குண்டலி சக்தி ஒரு பாம்பின் வடிவில் தன் வாலை தானே கடித்தபடி உள்ளதா யோக நூல்கள் சொல்லுகின்றன.

இந்த சக்தி சாதனைகளின் விளைவாக உச்சந்தலையில் உள்ள சஹஸ்ராரத்தை அடைவதே யோகத்தின் லட்சியம். சஹஸ்ராரம் சிவ தத்துவம். சிவனை அடையவேண்டும்ங்கற ஸ்பார்க் சக்தி மனசுல விழுந்துட்டா அப்பாறம் ஸ்ரீஹரிகோட்டாவுல இருந்து புறப்படற ஏவுகணை மாதிரி சர்..தான்

நதி கடலை தேடி ஓடுவது போல - சக்தி சிவனை தேடி செல்வது இயல்பு. சூரியன் தலைக்கு காரகன்.சூரிய பலமில்லாதவர்கள் சிவனை வணங்க வேண்டும் என்று சொல்வதற்கு இது கூட ஒரு காரணமா இருக்கலாம்.

நமக்கு அறிவு சாஸ்தியாச்சா. ஒரு ராத்திரி சிவன் அசமஞ்சமா உச்சாணி கொம்புல உட்கார்ந்திருக்க சக்தி மட்டும் ஏன் அல்லாடனும், சிவனும் ஒரு படி இறங்கி வந்தா சந்திப்பு ஈஸியா நடக்குமேன்னு ஐடியா வந்தது.

சீனர்கள் சொல்லும் யின் -யாங் - நாம சொல்ற சிவ-சக்தி தத்துவம் ரெண்டும் ஒன்னுதேன். ஒன்னுக்கொன்னு பரஸ்பரம் ஈர்ப்பு கொண்டவை .

ஹ்ரீம் ங்கறது புவனேஸ்வரி பீஜம் - பெண் தன்மை வாய்ந்தது. ஓம்ங்கறது ஆண் தத்துவம். எனவே மந்திர உச்சாடனத்தின் போது ஓம் சொல்லும் போது மூலாதாரத்தின் மீதும் - ஹ்ரீம் சொல்லும் போது சஹஸ்ராரத்தின் மீது கவனம் வைத்து ஜெபிச்சுக்கிட்டிருந்தம்.

மாத்தி யோசிக்கிறதுன்னா இதானே. ஆனா அதுவரை ஏற்படாத புது வித வைபரேஷன்ஸ் -அனுபவங்கள் எல்லாம் ஏற்பட்டதென்னவோ நிஜம்.

இப்படி மாத்தி யோசிக்கிற தில்லை தர்ரது ராகு. ஆனா மாத்தி ரோசிச்சதால செம மாத்து வாங்காம இருக்கனும்னா ராகு பலம் தேவை. அந்த ராகு பலம் இல்லின்னா துர்கையோட கருணையாச்சும் தேவை.

ராகுன்னா லாட்டரி. ஆத்தா அருளை மிஞ்சின லாட்டரி என்ன இருக்கு? ராகுன்னா இருட்டு.துர்கையின் சஞ்சாரம் ராப்போதில் தான் நடக்கும். (ஹை வே பெட் ரோலிங் மாதிரிங்கோ). பாம்புக்கும் துர்கைக்கும் இன்னொரு லிங்க் இருக்கு. ஒரு வீரமணி கடவுள் இல்லை இல்லவே இல்லைன்னு கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டிருக்க இன்னொரு வீரமணி "சக்தியின் வடிவம் பாம்பு - சத்தியமாய் நீ நம்பு"ன்னு பாடி வச்சிருக்காரு.

சாதாரணமா "அவாள்" பூஜிக்காத அம்மன் கோவில்ல எல்லாம் பாம்பு புத்து இருக்கும். அட்லீஸ்ட் அம்மன் தலை மேல ஏழு தலை பாம்பு படம் விரிச்சாப்ல இருக்கும். இப்படியா கொத்த கோவில்ல "அவாள்" பூஜை பண்ணிட்டிருந்தா அது ஆக்கிரமிப்பா கூட இருக்கலாம்.

ராகுவால் வந்த தோஷம் குறைய பிராமணர்கள் பூஜிக்காத புற்று உள்ள அம்மன் கோவிலுக்கு போறது நச் பரிகாரம்.

வருத்தம்:
இந்த மினி தொடர்ல வணங்க வேண்டிய சாமிக்கும் -கிரகத்துக்கும் என்ன சம்பந்தம்னு தான் சொல்லிக்கிட்டு வர்ரோம். கிரக நிலையை பொருத்து "எப்படி" வணங்கறதுங்கற மேட்டர் விடுபட்டு போச்சு.அதையெல்லாம் இன்னொரு சமயம் இன்னொரு மினி தொடரா பார்ப்போம்.

Thursday, November 10, 2011

எதிர்கால பிரதமர் மோடியா? : ஜோதிட ஆய்வு


அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு டபுள் தமாக்கா. ஜோசியராக ஆசையான்னு நேத்து ஒரு மினி தொடரை ஆரம்பிச்சம். அதை 1,112 + 400 = 1,512 பேர் படிச்சாய்ங்க இன்றைய பதிவோட தலைப்பை படிச்சுட்டு என்னடா இது அதுக்குள்ளார முருகேசன் ட்ராக் மாறிட்டாருன்னு நொந்துக்காதிங்க. இன்னைக்கு நரேந்திர மோடியோட ஜாதக கணிப்பை எடுத்துக்கிட்டாலும் இந்த பதிவுல ஜோசியராக ஆசைப்படறவுகளுக்கு தேவையான டிப்ஸ் ஏராளமா கொட்டிக்கிடக்கு.Read More

Wednesday, May 18, 2011

ராகுல் விட்டதெல்லாம் ரீலு : ஐ.பி.என் சானலில் அம்பலம்

உ.பி மானிலம் நொய்டாவில் கற்பழிப்புகள் நடந்ததாகவும், 70 கிளர்ச்சிக்காரர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் வருங்கால நிரந்தர பிரதமர் ராகுல் இஷ்டேத்துக்கு ரீலு விட்டது அல்லாருக்கும் ஞா இருக்கும்.

சாலை அமைக்கும் பணிக்காக நஷ்ட ஈடு வழங்கி  உ.பி.அரசு விளை நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால் திடீர் என்று மக்கள் அரசு கொடுத்த நஷ்ட ஈடு போதாது என்று கூடுதல் நஷ்ட ஈடு கேட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் பின்னணியில் எந்தெந்த அரசியல் கட்சியோட லாபம் எல்லாம் இருந்திருக்கும்னு தெரியாத பப்பாவா நீங்க

(அங்கன பி.எஸ்.பி ஆட்சி  நடக்குது. அது காங்கிரஸுக்கு ஆகாத கட்சி - ஆனால் இவிக பிரதமர் மேல நம்பிக்கை  தீர்மானத்துக்கு ஆதரவா ஓட்டெடுப்பில் கலந்துக்கக்கூடாதுன்னு மடிப்பிச்சை கேட்கிறப்ப ஆகும் கட்சிங்கறத ஞா வச்சுக்கிட்டு படிங்க)

ராகுலை பாவம் சொம்மா சொல்லக்கூடாது காங்கிரசை ஒழிச்சுக்கட்டவே ஸ்டேட் ஸ்டேட்டா போற பார்ட்டி. பீகார் ஆச்சு, கேரளா ஆச்சு,தமிழ் நாடு ஆச்சு ஆந்திரா ஆச்சு இப்பம் உ.பி.

விடிஞ்சும் விடியாத நேரத்துல  பெரிய ஹீரோ மாதிரி  பைக்ல லிஃப்ட் வாங்கி நொய்டா போனாரு.ஏறக்குறைய 20 மணி நேரம் அங்கனயே சாயா குடிச்சு,சமூசா தின்னு டைம் பாஸ் பண்ணிக்கினாரு. சாஸ்திரத்துக்கு அரெஸ்ட் ஆகி அதுக்குனே காத்திருந்த மாதிரி  " நானும் தியாகிதான் நானும் தியாகி"தான்னு கூவிக்கிட்டே ஊட்டுக்கு பூட்டாரு.

இதுல இந்தியன்னு சொல்லிக்கவே வெட்கப்படறேன்னு ஒரு வசனம் வேற. ஆம்பளைன்னு சொல்லிக்க வெட்கப்படறேன்னா அறுத்துக்க சொல்லலாம்.

இந்தியன்னு சொல்லிக்க வெட்கப்படறவுகளை என்ன சொல்ல? ஓ இத்தாலிக்கு போயிருன்னு சொல்லலாம்ல.

இதெல்லாம் நடந்த கதைங்கண்ணா. லேட்டஸ்ட் அப்டேட் என்னன்னா நொய்டா டு தில்லிக்கப்பாறம் உ.பி நொய்டாலருந்து கிராமத்தினர் சிலர் ,ஒரு பெண் ஆகியோரை கூட கூப்டுக்கினு போய் மன்மோகனாரை பார்த்திருக்காரு.

மீடியால உட்ட ரீலு,டகுலு அல்லாத்தையும் மன்மோகனார் காதுல போட்டுட்டாரு. இதற்கிடையில் உ.பி ஜெயலலிதா மாயாவதி ஓவர் ஆக்சன் பண்ண  போலீஸ்காரவுகளை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாய்ங்க.

இதை எல்லாம் பார்த்த ஐ.பி.என் சேனல் நொய்டால உண்மையா என்னதான் நடக்குதுன்னு துருவ ஆரம்பிச்சுட்டாய்ங்க.

அவிக துருவல்ல நொய்டாவில் கற்பழிப்புகள் நடந்ததாகவும், 70 கிளர்ச்சிக்காரர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் வருங்கால நிரந்தர பிரதமர் ராகுல் விட்டதெல்லாம் ரீலுன்னு ப்ரூவ் ஆயிருக்கு. போட்டுக்கிழிக்க ஆரம்பிச்சிருக்காய்ங்க.

ராசா வீட்டு முட்டை ஏழை வீட்டு அம்மியை உடைக்கும்ங்கற மாதிரி கீதுபா.. இந்த மானங்கெட்ட காங்கிரஸ் தலைவருங்க ஒடனே அடப்பம் தூக்கிக்கினு ராசா மகனுக்கு வக்காலத்து வாங்கிக்கினு கீறாய்ங்க. தூத்தெறிக்க..

அந்த ராகுலு  நெஜமாலுமே சத்திய சந்தன்னா இதே வேகத்தை ஈழத்தமிழர்கள் மேட்டர்ல காட்டியிருக்கலாம்லியா?   அட காங்கிரஸ் ஆளும் மானிலங்கள்ள நில கையகப்படுத்தலே நடக்கலியா? அங்கன எல்லாம் விவசாயிங்க கிளர்ச்சியில ஈடுபடலியா?

பிணத்தை கட்டியழும் போதும் தாண்டவக்கோனே ..பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோனேங்கறது கரீட்டா கீதுங்கண்ணா..

Monday, March 14, 2011

சோனியாவுக்கு ராகுல் ஜாதகமும் ஆப்பு

பீகார் மேட்டர்லயே ராகுல் டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இருந்தாலும் அதை ஜோதிட ரீதியாவும் உறுதிப்படுத்திக்கனுங்கற எண்ணத்துல தான் இந்த பதிவே . ஐயாவுது மிதுன லக்னம்,விருச்சிக ராசி. ஜாதகத்தை தூக்கி பக்கத்துல வைங்க. தாளி விருச்சிக ராசிங்கறதே அரசியலுக்கு ஒரு டி க்வாலிஃபிகேஷன் தேன். மக்கள் ஆதரவு பெறனும்னா சந்திர பலம் ரெம்ப முக்கியம். விருச்சிகத்துல தான் சந்திரன்  நீசமாகறாரே. அப்பாறம் எங்கே சப்போர்ட்டு ?

Friday, February 11, 2011

சந்திரன் கெட்டால்

சந்திரன் கெட்டால் மீன்ஸ்.. நீசமாதல் (விருச்சிகம்) ,ராகு,கேது ,சனி,சேர்க்கை. இவரோட குரு சேர்ந்தா 14 வருசம் நாயடி. ஆனால் சீமான் மாதிரி திருப்பியடிக்க ஆரம்பிச்சா பேயடி ( பட்டாபிசேகமுங்கோ) ,இவரோட சுக்கிரன் சேர்ந்தா செமை கில்மா தான் போல.

எச்சரிக்கை:
இதெல்லாம் பொதுப்பலன் தேன். அப்படியே நம்பி, தேம்பாதிங்க.

சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன உங்கள் புத்தியை மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாவார்.திடீர் பயணங்கள் ஏற்படலாம்.சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வருந்துவதும் நடக்கலாம்.தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
அடிக்கடி வீடு மாறுதல் அ வீட்டு நிதி நிலை மாறுதலை காட்டும். எல்லா வகையிலும் எவ்ரி டூ இயர்ஸுக்கு பெரும் மாற்றம் தெரியும். வாகன விசயத்திலும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கும். சில காலம் சொத்துக்களை விற்று வாழும் நிலையும் ஏற்படலாம். அதே சமயம் திடீர் தனலாபம் ஏற்பட்டு சொத்து வாங்கும் சூழலும் ஏற்படும் இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸ் இருக்கும் சில சமயம் அவை அச்சு அசலாக நிஜமாவதும் உண்டு..

Saturday, December 18, 2010

பிரதமர் ராஜினாமா? ராகுல் புதிய பிரதமர்?


அண்ணே வணக்கம்ணே,
ஆந்திராவுல திடீர்னு தாத்தாவை(ரோசய்யா)  தூக்கி எறிஞ்சுட்டு கிரண்குமார் ரெட்டியை குந்த வச்ச மாதிரி சென்ட்ரல்ல கூட மன்மோகனாரை போய்ட்டு வாங்கன்னுட்டு ராகுலை தூக்கி ஒக்கார வச்சுருவாய்ங்களோனு ஒரு சம்சயம்.

மன்மோகனார் உலகவங்கி உத்யோகஸ்தரா இருக்கலாம். இன்னைக்கும் பென்ஷன் வாங்கிட்டு இருக்கலாம். ஆனால் டெலிகாம் ஊழல்ல பங்கு வாங்கியிருப்பாருன்னு சுப்பிரமணியம் ஸ்வாமி மாதிரி அராத்து அய்யர் கூட சொல்லலை.

இன்னைய தேதிக்கு பலமுறை மன்மோகனார் " நான் போறேன்னு " சொல்லியிருப்பாரு. கதி,விதி இல்லாத குறைக்கு  கைய,காலை பிடிச்சு தொடர வச்சிட்டு வந்தாய்ங்க.  ஆனால் இன்னைக்கு ?

அடப்போங்கய்யா  உங்க கட்சியும் வேணா கொடியும் வேணான்னுட்டு கிளம்பிப்போற மூடுக்கு மன்மோகன் வந்திட்டிருப்பாரு. இது ஒரு பாய்ண்ட்.

அல்லாரும் அய்யய்யோ ராகுல் இந்து தீவிரவாதம்தான் டூ டேஞ்சர்னு அமெரிக்க தூதர் முன்னாடி வாயை கொடுத்து ....ஐ புண்ணாக்கிக்கிட்ட இந்த சந்தர்ப்பத்துல , பீகார்ல காங்கிரஸ் பாடைய தூக்க நாலே பேர் ஜெயிச்சிருக்கிற இந்த சந்தர்ப்பத்துல  ராகுலை பிரதமராக்குவாய்ங்களான்னு கேப்பிக.

கட்சியோட கிராஃப் மேலே போயிக்கினு இருந்தப்ப மகனுக்கு "இப்போதுதானடா பொறுமை"ன்னு சோனியா சொல்லிட்டிருந்திருக்கலாம். ஆனால் இன்னைக்கு கட்சியோட கதையே கந்தலாகிட்டு இருக்கு.

இப்ப இல்லைன்னா எப்பத்துக்கும் இல்லைங்கற நிலை வந்துருச்சு. 3ஜி ஸ்பெக்ட் ரம்ல காசை வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு இப்ப பத்தினி வேசம் போட்டு நோட்டீஸ் கொடுக்கிறோம், ரத்து பண்ணுவோம்னு வசனம் விட்டா பணத்தை கொட்டிக்கொடுத்த கார்ப்போரேட் கம்பெனிங்க சொம்மா இருக்காது.இப்பல்லாம் எம்.பியா பிரதமரை தீர்மானிக்கிறான். கார்போரேட் கம்பெனிக தானே  நிர்ணயிக்குது.
ஏமாந்த கம்பெனிங்கல்லாம் சேர்ந்து யுபிஏ சர்க்காருக்கு சாவு மணி அடிக்கிறது கியாரண்டி.

ஆந்திராவுல ஜகன் ஆட்சியை கவிழ்க்க மாட்டேன்னு சொல்றதை பார்த்தா சென்ட் ரல் லெவல்ல  யுபிஏக்கு ஆப்பு வைக்க  வேற ஒரு ரகசிய ஆப்பரேஷன் ஆரம்பமாயிட்டாப்ல இருக்கு. இல்லைன்னா எங்க ஊரு பாபு சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறதென்னா அதுக்கு சென்ட் ரல் லெவல்ல தேர்ட் ஃப்ரண்ட் (?) கட்சி தலைங்க வந்து ஆதரவு தெரிவிக்கிறதென்ன?

தெலுங்கானா இஷ்யூவும் அறுப்புக்கு வருது. மத்திய போலீஸ்படைகளை தெலுங்கானால குவிச்சிட்டிருக்காய்ங்க. மூக்கருக்கு ( கே.சந்திர சேகர் ராவ்) மூக்கறுப்பு நிச்சயம் போல இருக்கு.பீகார்ல சங்கு ஊதியாச்சு.

"என்னப்பா இப்படி ஆயிபோச்சே"ன்னு சோனியா கேட்க அதுக்கு ராகுல்  என்ன சொல்லியிருப்பாரு கிழவாடிகளை வச்சுக்கிட்டு மேய்க்க முடியலைம்மா.. வேணம்னா டோட்டலா என் கிட்டே விடு. என் வழிக்கு வா"

ஊழலை பத்தி பேசவோ,பீகார் தோல்விய பத்தி பேசவோ காங்கிரசென்ன கம்யூனிஸ்டா? மொத்தத்துல சோனியாவுக்கு கேடு காலம் வந்திருச்சு. ( உயிர் எண் 9. இது எட்டாவது ரவுண்டு )

மன்மோகனார் ஆட்சி கவிழ்ந்தா மக்கள் மத்தில எறும்பு கடிச்ச மாதிரி அனுதாபம் கூட வராது. இதுவே ராகுலாரை பிரதமராக்கினா? அய்யய்யோ சின்ன புள்ளைப்பா , பதவிக்கு வந்து பத்து நாள் ஆகலை அதுக்குள்ளாற கவுத்துட்டாய்ங்களேனு ஒரு அனுதாபம் வரும்.

மேலும் அரிசி விலை,சரித்திரம்லாம் தெரியாத  சிக்ஸ் ட்ராக் ரோடும், சைபர் சிட்டியும் வன்டா நாடு முன்னேறிரும்னு நினைக்கிற சின்னபயபுள்ளைக வீ வாண்ட் ராகுல்னுட்டு இருக்காய்ங்க.

தமிழகத்துல கட்சி ஏற்கெனவே வழுக்கை.உதிரி கட்சிகளை சேர்த்துக்கிட்டு தனிய  நின்னா  உதிர்ந்து போக ஒரு ம..ரும் கிடையாது. டோட்டலா ராகுல் ஆப்பரேஷன் பண்ணுவார். சக்ஸஸ் ஆச்சுன்னா  ராகுல் தூள்னிரலாம்.  ஃபெயில் ஆச்சுன்னா கேடர் சரியா ஒத்துழைக்கலைன்னிரலாம்.

இப்படியெல்லாம் கணக்குபண்ணி ஒரு ராஜினாமாவும், ஒரு புதியபிரதமரையும் பத்திரிக்கைகளோட மொதப்பக்க தலைப்பு செய்திக்கு தானம் பண்ணிருவாய்ங்களோனு ஒரு கணக்கிருக்கு. பார்ப்போம்


எச்சரிக்கை:
எதிர்காலத்தை பத்தி எழுதறப்ப நாமவழக்கமா கிரகம் என்ன சொல்லுதோ அதை மட்டும் எழுதறதுதான் வழக்கம். சனம் நம்மை கிட்டே இதைத்தான் எதிர்பார்க்கிறாய்ங்க.ஆனால் இந்த பதிவை மட்டும் ஜோதிஷம்+என் சிக்ஸ்த் சென்ஸை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன். ப்ளீஸ் நோட் திஸ் பாய்ண்ட்