'>

Saturday, December 3, 2011

ராகுவும் -துர்கையும்


அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் கடவுளும்ங்கற தலைப்புல ஒரு மினி தொடர் ஆரம்பிச்சு சூரியன்,சந்திரன்,செவ் ஆகிய கிரகங்கள் சரியில்லின்னா வணங்க வேண்டிய தெய்வங்கள் அதற்கும் அந்த கிரக காரகத்வத்துக்கும் என்ன சம்பந்தம்னு பார்த்துக்கிட்டு வந்தோம்.

இன்னைக்கு ராகுவும் துர்கையும்.

சிவனார் ஆலால விஷத்தை விழுங்கிட்டதாவும் அப்பம் ஆத்தாதான் கப்புன்னு கழுத்தை பிடிச்சு அதை நிறுத்தினதாவும் படிச்சிருப்பிங்க.ராகுன்னா விஷம். அந்த விஷத்தை தடுத்து நிறுத்தின ஆத்தாவை வணங்கினா ராகுவால் வரக்கூடிய ஆல்கஹாலிசம்,ட்ரக் அடிக்சன்,மெடிக்கல் அலர்ஜி,ஃபுட் பாய்சன் ஆகிய பிரச்சினைகளை தவிர்க்கமுடியும்.

ராகு சர்ப்ப கிரகங்களில் ஒன்று. மனித உடலில் மூலாதார கேந்திரத்தில் சக்தி ஸ்வரூபமாக இருக்கும் குண்டலி சக்தி ஒரு பாம்பின் வடிவில் தன் வாலை தானே கடித்தபடி உள்ளதா யோக நூல்கள் சொல்லுகின்றன.

இந்த சக்தி சாதனைகளின் விளைவாக உச்சந்தலையில் உள்ள சஹஸ்ராரத்தை அடைவதே யோகத்தின் லட்சியம். சஹஸ்ராரம் சிவ தத்துவம். சிவனை அடையவேண்டும்ங்கற ஸ்பார்க் சக்தி மனசுல விழுந்துட்டா அப்பாறம் ஸ்ரீஹரிகோட்டாவுல இருந்து புறப்படற ஏவுகணை மாதிரி சர்..தான்

நதி கடலை தேடி ஓடுவது போல - சக்தி சிவனை தேடி செல்வது இயல்பு. சூரியன் தலைக்கு காரகன்.சூரிய பலமில்லாதவர்கள் சிவனை வணங்க வேண்டும் என்று சொல்வதற்கு இது கூட ஒரு காரணமா இருக்கலாம்.

நமக்கு அறிவு சாஸ்தியாச்சா. ஒரு ராத்திரி சிவன் அசமஞ்சமா உச்சாணி கொம்புல உட்கார்ந்திருக்க சக்தி மட்டும் ஏன் அல்லாடனும், சிவனும் ஒரு படி இறங்கி வந்தா சந்திப்பு ஈஸியா நடக்குமேன்னு ஐடியா வந்தது.

சீனர்கள் சொல்லும் யின் -யாங் - நாம சொல்ற சிவ-சக்தி தத்துவம் ரெண்டும் ஒன்னுதேன். ஒன்னுக்கொன்னு பரஸ்பரம் ஈர்ப்பு கொண்டவை .

ஹ்ரீம் ங்கறது புவனேஸ்வரி பீஜம் - பெண் தன்மை வாய்ந்தது. ஓம்ங்கறது ஆண் தத்துவம். எனவே மந்திர உச்சாடனத்தின் போது ஓம் சொல்லும் போது மூலாதாரத்தின் மீதும் - ஹ்ரீம் சொல்லும் போது சஹஸ்ராரத்தின் மீது கவனம் வைத்து ஜெபிச்சுக்கிட்டிருந்தம்.

மாத்தி யோசிக்கிறதுன்னா இதானே. ஆனா அதுவரை ஏற்படாத புது வித வைபரேஷன்ஸ் -அனுபவங்கள் எல்லாம் ஏற்பட்டதென்னவோ நிஜம்.

இப்படி மாத்தி யோசிக்கிற தில்லை தர்ரது ராகு. ஆனா மாத்தி ரோசிச்சதால செம மாத்து வாங்காம இருக்கனும்னா ராகு பலம் தேவை. அந்த ராகு பலம் இல்லின்னா துர்கையோட கருணையாச்சும் தேவை.

ராகுன்னா லாட்டரி. ஆத்தா அருளை மிஞ்சின லாட்டரி என்ன இருக்கு? ராகுன்னா இருட்டு.துர்கையின் சஞ்சாரம் ராப்போதில் தான் நடக்கும். (ஹை வே பெட் ரோலிங் மாதிரிங்கோ). பாம்புக்கும் துர்கைக்கும் இன்னொரு லிங்க் இருக்கு. ஒரு வீரமணி கடவுள் இல்லை இல்லவே இல்லைன்னு கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டிருக்க இன்னொரு வீரமணி "சக்தியின் வடிவம் பாம்பு - சத்தியமாய் நீ நம்பு"ன்னு பாடி வச்சிருக்காரு.

சாதாரணமா "அவாள்" பூஜிக்காத அம்மன் கோவில்ல எல்லாம் பாம்பு புத்து இருக்கும். அட்லீஸ்ட் அம்மன் தலை மேல ஏழு தலை பாம்பு படம் விரிச்சாப்ல இருக்கும். இப்படியா கொத்த கோவில்ல "அவாள்" பூஜை பண்ணிட்டிருந்தா அது ஆக்கிரமிப்பா கூட இருக்கலாம்.

ராகுவால் வந்த தோஷம் குறைய பிராமணர்கள் பூஜிக்காத புற்று உள்ள அம்மன் கோவிலுக்கு போறது நச் பரிகாரம்.

வருத்தம்:
இந்த மினி தொடர்ல வணங்க வேண்டிய சாமிக்கும் -கிரகத்துக்கும் என்ன சம்பந்தம்னு தான் சொல்லிக்கிட்டு வர்ரோம். கிரக நிலையை பொருத்து "எப்படி" வணங்கறதுங்கற மேட்டர் விடுபட்டு போச்சு.அதையெல்லாம் இன்னொரு சமயம் இன்னொரு மினி தொடரா பார்ப்போம்.

No comments: