புதிய வரவுகளுக்காக இந்த ரிவிஷன். மறதி பார்ட்டிகளும் ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. மத்தவுக ஸ்க்ரால் பண்ணிரலாம்
கடவுளின் மந்திரி சபை:
நவகிரகங்கள் கடவுளின் மந்திரிசபையில் மந்திரிகளை போன்றவையாகும். பிரதமர் மந்திரிகளுக்கு இலாகா பிரித்து கொடுப்பது போல் கடவுள் பூமியில் உள்ள எல்லா விஷயத்தையும் 9 ஆக பிரித்து அவற்றின் மீதான அதிகாரத்தை ஒவ்வொரு கிரகத்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிரகம் தங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அதன் இலாகாவில் உங்களை அடித்துக் கொள்ள ஆளிருக்காது.அந்த இலாகா தொடர்பான எல்லா மேட்டர்லயும் சக்ஸஸ்தான். ஆனால் அதே கிரகம் உங்களுக்கு 50:50 ரேஷோல ஃபேவரா இருந்தா என்ன செய்ய? 70 முதல் 85 சதவீதம் உங்களுக்கு அன் ஃபேவரபிளா இருந்தா என்ன செய்ய?
ஒரு மந்திரிக்கும் உங்களுக்கு வெட்டுப்பழி குத்துப்பழி இருக்குனு வைங்க. அந்த மினிஸ்டரி தொடர்பான காண்ட் ராக்டுக்கு ட்ரை பண்ணுவிகளா? வாலை அவுத்து விடுவிகளா? மாட்டிங்க..அதே மாதிரி தான் கிரகங்களும் . கிரகங்களோட காரகத்வத்தை தெரிஞ்சிக்கிட்டு அந்த லிஸ்டுல எதையெல்லாம் விட்டுர முடியுமோ அதையெல்லாம் விட்டுட்டா மீதியுள்ள மேட்டர்ல கிராண்ட் சக்ஸஸ் ஆகலாம். இது கிரகம் கெட்டிருக்கிற சாதகர்களுக்கு மட்டுமில்லை, கிரகம் பலம் பெற்றுள்ள ஜாதகர்களுக்கும் பொருந்தும்.
லோ ஓல்ட்டேஜ் உள்ள போது எப்படி மோட்டரை எல்லாம் ஆஃப் பண்ணா ட்யூப் லைட்டுங்க வெளிச்சத்தை வாரி இறைக்குமோ அப்படியே மத்த மேட்டர்ல பல்பு போடும்.
இந்த ஆப்ஷன் கிரகங்களோட காரக்த்வத்துல மட்டுமில்லை பாவங்கள் விஷயத்திலும் இருக்கு.
உங்க ஜாதகம்ங்கறது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி யை போன்றதாகும். ஒவ்வொரு சேனலும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கோணத்தை காட்டும். இதில் 12 பெட்டிகள் உள்ளனவல்லவா? முதல் பெட்டி தான் லக்னம். லக்னம் உட்பட மொத்தம் 12 பாவங்கள் உள்ளன.
எந்த சேனலுக்கு சிக்னல் வீக்கா இருக்கோ அதை ரெம்ப நேரம் பார்த்தா என்ன ஆகும்? கண்ணை கட்டும். கடுப்பாவும். அப்போ என்ன செய்யனும்?
தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளை மட்டும் சிக்னல் வீக்காயிருக்கிற சேனல்ல பார்த்துட்டு சேனல் தாவிர வேண்டியதுதான்.மொதல்ல 12 சேனல்கள்ள ஒளிபரப்பாகிற நிகழ்ச்சிகளை சொல்றேன்
12 சேனல்கள்:
ஜாதகத்தில் 12 சேனல்கள் உள்ளதாக சொன்னேன். அவற்றில் தெரியக் கூடிய விஷயங்களை இப்போது பார்ப்போம்.
முதல் சேனல்:(லக்னம்)
உங்கள் உடல்,மன நலம்,நிறம்,குணம்
2ஆவது சேனல்:
(தன பாவம்)தனம்,வாக்கு,குடும்பம்,கண்கள்
3 ஆவது சேனல்:
சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்
பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்
4ஆவது சேனல்:
தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்
5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு
6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாமன்,வயிறு
7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்
8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத ,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சத்ரு, தீராத ரோகம், தீர்க்கமுடியாத ருணம்(கடன்),சிறைப் படுதல், மஞ்சள் கடிதாசு கொடுத்தல்,அடிமையாதல்,மேஜர் விபத்து, ஆப்பரேஷன்,மர்மஸ்தானம்
9.ஆவது சேனல்:
தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து,
சேமிப்புக்கள்,தூர பிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.
10ஆவது சேனல்:
வாழும் வழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோகம்,வியாபாரம்
11.ஆவது சேனல்:
மூத்த சகோதிரி/சகோதரன்,லாபம்.
12ஆவது சேனல்:
தூக்கம்,செக்ஸ்,மரணம்,மரணத்துக்கு பின்னான நிலை,செலவு செய்யும் விதம்,பாதங்கள்.
உங்களுக்கு ஜாதகம் இருந்தாலும் இல்லேன்னாலும், உங்க ஜாதகத்துல மேற்படி 12 பாவங்கள் வீக்கா இருந்தாலும் ஸ்ட்ராங்கா இருந்தாலும் கீழ்காணும் 12 பாயிண்ட்ஸை ஃபாலோ பண்ணீங்கனா 12 பாவங்களில் உள்ள தீய பலன்கள் உங்களை அண்டாது.
1.எளிமையா இருங்க. மேக்கப் பண்ணாதிங்க. வழுக்கைய மறைக்க தொப்பி, தொப்பைய மறைக்க பெல்ட் எல்லாம் போடாதிங்க. ஃப்ரீயா உடுங்க பாஸ்
2.குறைவா பேசுங்க. சிக்கனமா இருங்க.குடும்பத்துல தாமரை இலை தண்ணீர் மாதிரி இருங்க. விழிச்சிருக்கிற நேரத்துல ( சான்ஸ் கிடைக்கிறப்ப) கண்ணை லேசா மூடிக்கிட்டு இருங்க.
3.சகோதர,சகோதிரிகள்(இளைய) விஷயத்துல பூசிக்கிடாதிங்க. ஆனா அவிகளுக்கு உதவலாம். ( செவ்வாய் 8,12 ல ,சனி 1,4,8,12 ல இல்லாத நேரத்துல பிரயாணத்துக்கு பின் வாங்காதிங்க- சனி 7 லருந்தா டபுள்ஸ் மட்டும் போவக்கூடாது) வெறுமனே சவால் விடாதிங்க
4.தாய் விஷயத்துல பூசிக்கிடாதிங்க, ஆனா அவிகளுக்கு சர்வீஸ் பண்ணுங்க. வீட்ல அடைஞ்சு கிடக்காதிங்க (உலகம் பெருசு தலை!) வாகனத்தை அளவுக்கு மீறி யூஸ்பண்ணாதிங்க. (ஆசனத்துல கட்டி வரும், வீர்யத்திலான உயிரணுக்களோட எண்ணிக்கை தான் குறையும்) தேவையே இல்லேன்னாலும் ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹிந்தி, ஜெர்மன் இப்படி புதுசா எதுனா கத்துக்கிடுங்க
5.பேர் புகழுக்கு அலையாதிங்க -உங்களை நீங்களே தாழ்த்தி பேசுங்க - பிள்ளைகள் விஷயத்துல பூசிக்கிடாதிங்க. ஆனால் செலவழிக்க வேண்டிய மேட்டர்ல செலவழிங்க. பணம் சொம்மா கொட்டும்னு ஆகாச கோட்டை கட்டாதிங்க
6.வராதுனு தெரிஞ்சாலும் சின்ன தொகைகளை கைமாத்தா கொடுங்க. சின்ன சின்ன தலைவலி,ஜுரத்துக்கெல்லாம் மாத்திரை மருந்துனு ஓடாதிங்க. பகைவர்க்கு அருள்வாய் நெஞ்சேங்கறத ஃபாலோ பண்ணுங்க
7.இந்த உலகத்துக்கு தனியா வந்தோம் தனியா தான் போப்போறோம்.மத்ததெல்லாம் சந்தை கூட்டம். ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் எண்ணிக்கைய அளவோட வச்சுக்கங்க.இவிகளோட செலவழிக்கிற நேரத்தையும் குறைங்க. ஆனால் அவிகளுக்கு தாராளமா உதவலாம்.
8.நெத்தி வேர்வை நிலத்துல சிந்த உழையுங்கள். அப்பப்போ ரஜினி மாதிரி காணாம போயிருங்க. வாய்ப்பிருந்தா ஜெயிலுக்கு போங்க ( கைதிகளுக்கு எதுனா லட்டு, ஜாங்கிரி மாதிரி கொடுக்க). தனிமைய விரும்புங்க
9.அப்பாவோட ரெம்ப பூசிக்காதிங்க.அவர் மேல டிப்பெண்ட் ஆகாதிங்க. அவர் சொத்தை முடிஞ்சவரை அனுபவிக்காதிங்க. ஆனா சர்வீஸ் பண்ணுங்க. டூர், புண்ணிய க்ஷேத்திரம்னு ஜொள்ளு விடாதிங்க( தானா அமைஞ்சா போய் வரலாம்) வாயை கட்டி வயித்தை கட்டி சேர்த்து வைக்காதிங்க. முக்கியமா ப்ரைவேட் சிட்ஸ், நகை சீட்டு வேணா
10.உங்களூது டேபிள் ஒர்க் ஆ இருந்தாலும் ப்ரைவேட்டா ஃபீல்ட் ஒர்க்கும் பண்ணுங்க.
11.மூத்த சகோதர சகோதிரியோட ரெம்ப பூசிக்காதிங்க. எதுல கை வச்சாலும் லாபத்துகாகவேனு போகாதிங்க.
12.கஞ்சத்தனம் பண்ணாம தாராளமா செலவழிங்க. சாப்பட்டை, தூக்கத்தை,செக்ஸை குறைங்க ( செக்ஸை குறைக்க வழி அதுக்குன்னே பிறந்தாப்ல அனுபவிச்சுர்ரதுதான்)
No comments:
Post a Comment