'>
Showing posts with label Astrologer. Show all posts
Showing posts with label Astrologer. Show all posts

Friday, May 17, 2019

ஆறில் இருந்து அறுபது வரை :தேவதைகளுக்கு யாகங்கள்


அண்ணே வணக்கம்ணே !

பழைய நன்னி விசுவாசத்துல இந்த ப்ளாக் வழியா  நம்மை அறிந்த சனத்தை திராட்டுல விட்டுரக் கூடாதுங்கற அக்கறையில ஆறில் இருந்து அறுபது வரை நூலின் அத்யாயங்கள் பலவற்றை இங்கே கொடுத்தன்.

அடுத்தடுத்த அத்யாயங்கள் நம்ம அனுபவஜோதிடம் வெப்சைட்ல பிரசுரமாகும்.

சிரமத்துக்கு வருந்துகிறேன்.

தேவதைகளுக்கு யாகங்கள் :
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும். (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ - அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். உ.ம் பட்டாடைகளுக்குச் சுக்கிரன் அதிபதி.
லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். உ.ம் செவ்வாய் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்திஸ்தானம் - செவ்வாய்க்குரிய கடவுள் சுப்ரமணியர் - சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப் பாருங்கள்!
செவ்வாய் 2டிலோ - 8டிலோ - 12டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம் - தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம். காரணம் 2 என்பது தனபாவம் - செவ்வாய் நெருப்புக்கு அதிபதி - ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன். 8 என்பது ஆயுள்பாவம்பெரு நஷ்டங்களைக் காட்டும் இடம் – 12 என்பது விரயபாவம் - நஷ்டங்களைக் காட்டும் இடம் - இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன். யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன் வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித் தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குரு கிரகத்தின் தோஷம் குறையும்.



ஆறில் இருந்து அறுபது வரை : கிரகங்களுக்கிடையிலான உறவு


கிரகங்களுக்கிடையிலான உறவு :
சூரியனுக்கு   சுக்கிரன் சனி ராகு - கேது பகை
சந்திரனுக்கு   புதன் சுக்கிரன் சனி ராகு - கேது பகை
செவ்வாய்க்கு புதன் சனி ராகு - கேது பகை
புதனுக்கு     சந்திரன் செவ்வாய் குரு - கேது பகை
குருவுக்கு     புதனும் - சுக்கிரனும் பகை
சுக்கிரனுக்கு  சூரியன் - சந்திரன் - குரு பகை
சனிக்கு       சூரியன் சந்திரன் செவ்வாய் - கேது பகை
ராகுவுக்கு     சூரியன் சந்திரன் - செவ்வாய் பகை
கேதுவுக்கு    சூரியன் சந்திரன் செவ்வாய் - புதன் பகை

பாவங்களின் வகைகள் :
1-4-7-10 கேந்திரம்
1-5-9 கோணம்
3-12 அபோக்லிபம்
2-6-8-11 பணபரம்
6-8-12 துஸ்தானங்கள்
இதன் உபயோகம், கோணங்களில் சுபர்கள் பெஸ்ட் - பாபர்கள் பெட்டர். கேந்திரங்களில் பாபர்கள் பெஸ்ட், சுபர்கள் பெட்டர் என்பதை அறியவே. 6-8-12 க்குடைவர்கள் இந்த 6-8-12 பாவங்களிலேயே மாறி மாறி உட்கார்ந்திருக்கிறார்களா என்பதை அறிவதே.




ஆறில் இருந்து அறுபது வரை : டிகிரி



டிகிரி:
டிகிரின்னதும் பி.ஏ – பி.காம்னு நினைச்சுராதிய. ஒரு ராசியை ஒன்பது பாகமா பிரிச்சா நட்சத்திர சாரம் தெரியும். முப்பது பகுதியா பிரிச்சா? அது தான் டிகிரி.
ஒரு ராசிக்கு 30 டிகிரி. 12 ராசிக்கு 360 டிகிரி. ஒரு கிரகம் ஒரு ராசியின் முதல் டிகிரியில் நிற்பதற்கும், 15ஆவது டிகிரியில் நிற்பதற்கும், 30ஆவது டிகிரியில் நிற்பதற்கும் வித்தியாசம் வருமா? வராதா?.
ஒரு தலைவர் முதல்வரா / பிரதமரா பொறுப்பேத்துக்கிட்ட மொத 3 மாசத்துக்கும், கடைசி 3 மாசத்துக்கும் வித்தியாசம் இருக்குமா? இருக்காதா?.
ஒவ்வொரு கிரகமும் பலனளிக்கும் காலம்னு சில விதிகள் இருக்கு. சூரியன், செவ்வாய் ஆரம்ப காலத்திலேயே பலன் தருவாங்க. சந்திரன், புதன் அவர்கள் காலம் முழுக்கவும் –குரு, சுக்கிரன் மத்திய காலத்திலும் – சனி, ராகு, கேது பிற்பகுதியிலும் பலன் தருவார்கள்.
இதன் படி சூரியன், செவ்வாய் ஒரு ராசியின் ஆரம்ப டிகிரிகளில் இருந்தால் சிரேஷ்டம். குரு, சுக்கிரன் மத்திய டிகிரிகளில் இருந்தால் – சனி, ராகு, கேது பிற்பாதி டிகிரிகளில் இருந்தால் இன்னம் கொஞ்சம் ஆக்டிவா எஃபெக்ட் பண்ணுவாங்க தானே?.
கம்ப்யூட்டரில் ஜாதகம் கணிக்கும் போது கிரக ஸ்திதி கீழ்கண்டவாறு வரும்.
டிகிரி பார்ப்பதில் இன்னொரு உபயோகமும் உண்டு. கிரகம் ஏதேனும் அஸ்தங்கதம் ஆகியுள்ளதா என்று அக்யுரேட்டா தெரிஞ்சுக்கலாம்.
அஸ்தங்கதம் என்பது ஏதேனும் கிரகம் (ராகு-கேது-புதனை தவிர்த்து) சூரியனுக்கு 10 டிகிரிக்குள் இருந்தால் அது அஸ்தங்கதமான கிரகம். பலன் தராது என்பதை நினைவில் வையுங்கள்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நைசர்கிக சுப கிரகங்கள் பகலிலும், நைசர்கிக பாப கிரகங்கள் இரவிலும் அதிகமாய் பாதிக்கும்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நைசர்கிக சுப கிரகங்கள் வளர்பிறையிலும், நைசர்கிக பாப கிரகங்கள் தேய்பிறையிலும் அதிகமாய் பாதிக்கும்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நைசர்கிக சுப கிரகங்கள் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலும், நைசர்கிக பாப கிரகங்கள் ஆடி முதல் மார்கழி மாதம் வரை அதிகம் பாதிக்கும்

ஆறில் இருந்து அறுபது வரை : ஜோதிட விதிகள் – விதிவிலக்குகள்

ஜோதிட விதிகள் – விதிவிலக்குகள்

விதிகள் உண்டு விதிவிலக்குகள் உண்டு - கணக்குகள் உண்டு - கணிப்புகள் உண்டு. அதே சமயம் நம்ம வெப்சைட் பேரை ஞாபகம் வச்சுக்கங்க அனுபவ ஜோதிடம்”. ஆமாங்க உங்க அனுபவம் தான் ஃபைனல். உங்க ஜாதகத்தை மட்டும் நோண்டி நுங்கெடுக்கிறாப்ல இருந்தாலும் பரவால்ல, பாதிப்பு ஒரு தனிப்பட்ட ஆளுக்கு தான். நீங்க பாட்டுக்கு அள்ளி விடஆரம்பிச்சுராதிங்க.
அப்படி அள்ளி விடறதா இருந்தா விதிகளை விட கிரக காரகங்களில் எதெல்லாம் ஜாதகருக்கு அனுகூலமாய் இருந்திருக்கிறது, பாவ காரகங்களில் எதெல்லாம் அனுகூலமாய் இருந்திருக்கிறது என்று பார்த்து, கேட்டு தெளிந்து எதிர்காலம் பற்றிய கணிப்புகள் சொல்லுங்க. இதையே உங்க கேஸ்லயும் அப்ளை பண்ணா புண்ணியமா போகும்.
உங்களில் பலர் ஜோதிடத்தின் அடிப்படை அம்சங்களில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாய் இருக்கலாம். இதுவரை நான் சொல்லி வந்த ஆராய்ச்சி பூர்வமான விஷயங்களை பெரிதும் விரும்பலாம்.
உங்களில் சிலர் குறைந்தபட்சம் நான் ஏற்கனவே வெளியிட்ட 5 நூல்களை கூட படிக்காதவர்களாக - என் வலைப்பூ - வலைதள பதிவுகளை கூட படிக்காதவர்களாக இருக்கக் கூடும். அவர்களையும் அரவணைத்து ஒருங்கிணைத்து செல்லவே நான் விரும்புகிறேன். ராகு / கேதுக்களைப் பற்றி மட்டுமல்ல உங்கள் ஜாதகத்திலான வேறு எந்த கிரகம் தரும் பலனைப் பற்றி அறிய வேண்டுமானாலும் பல்வேறு அம்சங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டாக வேண்டும். 

ஆறில் இருந்து அறுபது வரை :மரணத்தை தள்ளிப்போட


மரணத்தை தள்ளிப்போட :
ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட் / நூஸ்ஃபியர் (மனிதர்களின் எண்ணங்களால் ஏற்படும் அமானுஷ சூழல்) மாறிப்போவுது. அவன் மேல உண்மையான பாசம் / அட்டாச்மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன் பாடில பயோ-கெமிஸ்ட்ரி மாறிப் போவுது. அவனுடைய சப்-கான்ஷியஸ்லயோ, அன்-கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது. அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.
அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப் போன உங்க சொந்தக்காரவுக, அப்பா, அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப் போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம்.
பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அல்லது உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம் பிடிச்சு போய் பார்த்திருப்பாங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க. (ரொம்ப உணர்வு பூர்வமா) ஓஷோ "சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள்நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது" ங்கறார்.
பழைய கடன்காரன் / கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரை வழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன் என்னவோ நல்ல வசதியா தான் இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன். "என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான். யோசிச்சுப் பாருப்பா"ன்னேன். "அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்"னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான். இது ஏறக்குறைய ஃபைனான்சியல் முடியும் போது அரக்க பரக்க செட்டில் செய்வது போன்றதே.
இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான நான் அவருக்கு. நான் ஒரு சட்டை, ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்.ரத்தினம்பொடி, பஸ் டிரைவருங்க உபயோகிக்கிற சிகப்பு டவல் வாங்கி கொடுத்தேன். அவரோட ஃபேவரட் ஐட்டம்ஸ் இதெல்லாம். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணாம போய் அரைமணி நேரத்துல கிடைச்சா. எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன். இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும் போதே பெண்டாட்டி பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன். (இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது. ஆனாலும் புது பொஞ்சாதியோட ஒரு மாசம் போல தங்கி இருந்தேன்). பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச்மென்ட் கூட இருக்காது) பார்க்கும் போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.
இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே. ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும், ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ / ஆடு, மாடு, கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி நாற்காலில இருந்து தவறி விழும். யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல / வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.
1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச்-க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை லாஜிக்கே இல்லாம விழுந்து செம சில்லறை. அந்த காலகட்டத்துல ரெண்டு கையையும் விட்டுட்டு சர்க்கஸ் பண்ற ரேஞ்சு நம்முது. எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோகநாதம் நாயக்கர் மறுநாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க்டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை டெஸ்க்டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு. மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாம தான் T.A, DA, HRA கணக்குகள், டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.
மரணம் இவனை ஹலோ சொல்லப் போற தினம் வீட்ல இருந்து புறப்படும் போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும். சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ, சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்னச் சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளிப் போட முடியும். ஒரு தடவை தள்ளிப் போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.

ஆறில் இருந்து அறுபது வரை : வாயும் இன உறுப்பும்


வாயும் இன உறுப்பும் :
வாயும் ஆசனமும் ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவுமா இருக்கு. ஆசனத்தை ஒட்டித்தான் இன உறுப்பும் அமைஞ்சிருக்கு. வாய்ல ஏற்பட்ட அசைவு குளத்தில் எறிந்த கல் குளமெங்கும் அலைகளை ஏற்படுத்துவது போல் ஆசனத்தையும், ஆசனத்தை ஒட்டி இருக்கிற இன உறுப்பையும் போய் தொடுது. இங்கிலீஷ்ல மவுத்துன்னா வாய். உருதுல மௌத்துன்னா சாவு. மவுத்தால (வாய்) மவுத் வர (மரணம்) வாய்ப்பிருக்குங்கோ. வாய்ப்பு என்ன மரணம் வந்தே உடும்.
வாயை கட்டணும். வாயை கட்டினா வவுத்தையும் கட்டலாம். இல்லைன்னா தமிழ்நாடு போலீஸ் மாதிரி நித்ய கர்பம், ஆண்மையின்மை, முழங்கால் வலி, மேசிவ் ஹார்ட் அட்டாக் எல்லாம் வந்துரும்.
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காமசக்தி என்பதால் அவன் படைத்தே ஆக வேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ். தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்லது செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காமசக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை. போதுமான சக்தியற்றவன் பேசுபவன் / எழுதுபவன் ஆகிறான். ஒய்.எஸ்.ஆர் அணைகளை கட்டினார். எங்க தந்திரபாபு கிராஃபிக்ஸ் வச்சு சினிமா காட்டறாரு (3 வருசமா). கோக்கு மாக்காக எழுதி / பேசித் தொலைத்தால் வாயில் வெட்டி விடுகிறார்கள். தின்னி பண்டாரங்கள் கூட இதே கேஸ் தான்.
ஓரல் செக்ஸ் / குத புணர்ச்சி எல்லாம் சுற்றுவழி. இன உறுப்பில் அதிர்வுகள் வேண்டும் என்றால் காரியத்தில் இறங்க வேண்டியது தானே. அதுவும் நேர் வழியில். பாஜக தமிழகத்தில் செய்வது போல் குத புணர்ச்சி ஏன்? பிஸ் பிஸ் ரகங்கள் செய்வது போல் ஹேவிளம்புவது ஏன்?
வள்ளுவர் நா காக்க என்றது பேச்சு தீனி இரண்டையும் மனதில் வைத்துதானே? இதை பின்பற்றினால் ஆயுள் கூடும். குறைந்த பட்சம் அல்ப்பாயுசுல போயிர மாட்டம்.


ஆறில் இருந்து அறுபது வரை :ஆறாம் பாவம்


ஆறாம் பாவம் :
சத்ரு ரோக ருண உபாதைகளை காட்டும் பாவம்.
பாக்சீனா இமிசை இல்லின்னா நம்ம மிலிட்டரி பட்ஜெட்டை 25 சதவீதமா குறைச்சு எப்பமோ உருப்பட்டிருப்போம். முடியல தானே? தமிழ்நாடு போலவே அனைத்து மாநிலங்களும் பொது மருத்துவத்தின் மீது கவனம் செலுத்தியிருந்தால்? நாட்ல உள்ள ஹீலர்கள் / போலி டாக்டர்களை எல்லாம் உள்ள வச்சிருந்தா? சகட்டுமேனிக்கு கடன் வாங்கி, கடனுக்கான வட்டி மீதான வட்டிக்கு வட்டி கட்டவே மேஜர் ஷேர் ஆஃப் பட்ஜெட் நாசமாகாம இருந்தா இந்தியா எப்பமோ வல்லரசாகியிருக்கும் தானே?
நம்ம திருப்பதி பெருமாளையே எடுத்துக்கங்க. கண்ணாலத்துக்கு கடன் வாங்கி குபேரன் கிட்டே சிக்கி தானே சனங்களோட பாடாவதி ப்ரேயரை எல்லாம் கேட்டுக் கிட்டு நிற்கிறாரு.
ஆகவே இந்த ஆறாம் பாவம்ங்கறது கெட்டு குட்டிச்சுவரா போகனும். அப்பத்தேன் மேற்படி உபாதைகள் இல்லாம நாம வாழ முடியும். அஃதாவது இங்கே எட்டுக்குடையவரோ, 12க்குடையவரோ நின்னா, சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண விமுக்தி போன்ற நல்ல பலனை எல்லாம் பெற முடியும் அல்லது இந்த ரோகாதிபதி 8 அல்லது 12ல் நின்றாலும் நல்லதே.
இதர உயிருள்ள பாவங்களில் நின்னா / உயிருள்ள பாவாதிபதிகளோட சேர்ந்தா அந்த பாவம் தொடர்பான மனிதர்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படும் அல்லது ஜாதகருக்கு அவர்களுடன் கருத்து வேறுபாடுகள், விரோதங்கள் வரலாம்.
உ.ம் ஆறுக்குடையவர் நான்கில் நின்றால் தாய்.


ஆறில் இருந்து அறுபது வரை :தனபாவம்


தனபாவம் :
பணம் பாதாளம் வரை பாயும்இது தமிழக அரசியலில் பிரபலமான கொட்டேஷனாயிருச்சு. சொல்வலன் சோர்விலன், வாயுள்ள பிள்ளை பிழைக்கும். (நான் டிடிவியை சொல்லல). நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம், பஞ்சேந்திரியானால் நைனம் பிரதானம் (ஐம்பொறிகளில் தலையாயது கண். இதெல்லாம் நீங்க அறியாததா?
தனபாவம் என்பது உங்கள் வருவாய், வாக்குவன்மை, குடும்பம், கண்கள் ஆகியவற்றை காட்டும் பாவம். இங்கு சுபர் நின்றால் அதிகபட்ச கன்ஸ்யூமர் சர்ப்லஸ் உங்க க்ளையண்ட்ஸுக்கும், குறைவான மார்ஜின் உங்களுக்கும் கிடைக்கும். நீங்க கிடைச்ச காசை போதும்னு சொன்னாலும் பரவால்ல வச்சுக்கங்கனு கூடுதலா கொடுப்பாங்க.
இங்கு நின்ற கிரகம் யாவும் ஏழாம் பார்வையாய் எட்டையும் பார்க்கும். இங்கு சுபகிரகம் நின்றால் ஐசியு எல்லாம் பார்க்காம பொட்டுனு போயிரலாம்.
இங்கே பாவகிரகம் இருந்தா எதிராளி தோள்ள துண்டை போட்டு இழுத்து வசூல் செய்விங்க. உசுரும் சில காலம் இழுத்து தான் போகும்.
சுபர் நிற்பின் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை கூடும். பாவர் நிற்பின் குறையும். சுபர் நிற்பின் குறைவாக பேசுவீர்கள், ஆயுள் கூடும். பாபர் நிற்பின் அதிகம் பேசுவீர்கள், ஆயுள் குறையும்.
சுபர் நிற்பின் குடும்பத்தினர் வாலன்டியரா கோ-ஆப்பரேட் பண்ணுவாங்க. பாபர் நிற்பின் மிரட்டி, உருட்டி வேலைய சாதிக்கனும்.


ஆறில் இருந்து அறுபது வரை : லக்னாதிபதி 8 ல் &லக்னாதிபதி 12 ல்


லக்னாதிபதி 8 ல் :
யோகாசனங்களில் சவாசனம் என்று ஒன்றுண்டு. அதை அறிந்து செய்து வரவும். நான் அறிந்த சவாசனம் - பிணத்தை கிடத்துவது போல் நெடுஞ்சாண் கிடையாக படுத்துக் கொள்ளவும். கால் கட்டை விரல்கள் ஒன்றை ஒன்று தொட வேண்டும். கைகள்? வயிற்றின் மீது, பார்வை? கூரை மீது அல்லாது மூக்கு நுனி மீது. இதுவரை வாழ்ந்து முடிந்த முன்னோர்களின் வாழ்க்கை கதைகளை எல்லாம் மனக்கண் முன் கொண்டு வர வேண்டும். (இதுக்கு நீங்க இவற்றை சேகரிக்கனுமில்லையா? ஆகவே பெரியவிகள விஜாரிச்சு டேட்டா பேஸ் தயாரிங்க).

லக்னாதிபதி 12 ல் :
சேல்ஸ் லைனை பிடிங்க அல்லது பயணங்களுக்கு அதிக வாய்ப்புள்ள வேலை / துறை. விரயாதிபதி அல்லது விரயத்தில் நின்ற கிரகங்கள் தொடர்பான நிறத்தில் pillow cover, bedspread, night lamp, Dining table cover, தட்டு இருக்குமாறு ப்ளான் பண்ணிக்கங்க.
பொது : மேற்சொன்ன 3 பிரிவினரும் இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கிட்டா  நோ ப்ராப்ளம்.


ஆறில் இருந்து அறுபது வரை : லக்னாதிபதி 6 ல்


லக்னாதிபதி 6 ல் :
வாழ்நாள் முழுக்க சத்ரு, ரோக, ருண உபாதைகள். இதற்கு பரிகாரம், ஒரே சப்ஜெக்டை எடுத்துக்கிட்டு பாசிட்டிவா ஒரு பக்கம், நெகட்டிவா ஒரு பக்கம் எழுதிப் பாருங்க.
உ.ம் வரதட்சிணை நல்லது / வரதட்சிணை நல்லதல்ல.
நம் நாட்கள் காலையில் டீ / காபியில் துவங்கி இரவு பாலில் முடிகின்றன. எனவே, பால் கடனுக்கு / அக்கவுண்ட்ல / கடன் வாங்கிய காசில் வாங்கவும். குடும்பத்தோடு டிவியில் வரும் விவாத நிகழ்ச்சிகள் பார்க்கவும். நகராட்சி, மாநகராட்சி பகுதியளவிலான பிரச்சினைகளை ஏதேனும் புனைப் பெயருடன் லெட்டர் டு எடிட்டர் பகுதிக்கு எழுதி வரவும். எப்போதும் புனைப் பெயருக்கு சொந்தம் கொண்டாடாதீர்கள் அல்லது ஃபேக் ஐடி வச்சுக்கிட்டு சமூக ஊடகங்களில். வீட்டைத் தேடி ஆட்டோ வர அளவுக்கெல்லாம் போயிராதிங்ணா.

Thursday, May 16, 2019

ஆறில் இருந்து அறுபது வரை : ராகு - கேதுக்கள்


ராகு - கேதுக்கள்

ஆறில் இருந்து அறுபது வரை என்பது ஒரு வசதிக்காக எளிமைப்படுத்தலுக்காக வைக்கப்பட்ட தலைப்பு தான். உண்மையில் தந்தையிடமிருந்து உயிரணு விடுபட்டு - தாயின் முட்டை கருவை துளைத்த கணம் முதலே கிரகங்கள் தம் பாதிப்பை துவக்கி விடுகின்றன. தந்தையின் உயிரணுவின் மீதும் தாயின் முட்டைக்கரு மீதும் அவரவர் ஜாதகங்களிலான கிரகங்கள் ஏற்கனவே தம் தாக்கத்தை செலுத்தியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
கிரகங்களை பட்டியலிட சொன்னால் ஒரு ஜோதிடர் சூரியன் – சந்திரன் – செவ் – ராகு – குரு – சனி – புதன் – கேது -சுக்கிரன் என்று தான் பட்டியலிடுவார். காரணம் தசைகள் இந்த வரிசையில் தான் வருகின்றன. ஆனால் நான் ராகு - கேதுவில் இருந்து இந்த நூலை துவங்குகிறேன். ஏன் இப்படி என்று போகப் போக புரிந்து கொள்வீர்கள்.
ராகு - கேதுக்களின் இருப்பை வைத்து நாகதோஷம் / சர்ப்பதோஷம் உள்ளதா என்று தானே கணிக்க முடியும். இதெல்லாம் திருமண சமயத்தில் தானே பார்ப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறதல்லவா?
ராகுவின் பிரதான காரகம் பிதாமஹ காரகன். கேதுவின் பிரதான காரகம் மாதாமஹ காரகன்”. அதாவது, ராகு - தந்தைவழி தாத்தா / பாட்டியையும்; கேது - தாய்வழி தாத்தா / பாட்டியையும் குறிப்பவர்களாவர்.
மேற்படி தாத்தா / பாட்டிகளின் நல்ல அம்சங்கள் (மரபியல் கூறுகள்) குழந்தைக்கு வர வேண்டும் என்றால் அதன் ஜாதகத்தில் ராகு - கேதுக்கள் நல்ல இடத்தில் அமைந்திருக்க வேண்டும். கருவிலே திரு என்றால் இது தானே? விஞ்ஞான பூர்வமாய் சொன்னால் பாசிட்டிவ் ஜெனட்டிக் ஃபீச்சர்ஸ் குழந்தைக்கு வர ராகு - கேது பலம் அவசியம்.
குழந்தையின் பெற்றோர்கள் என்னமோ 32 லட்சணங்களும் பொருந்தியவர்களாய் இருந்தாலும் விதையும் நிலமும் அமோகமாய் இருந்தாலும் குழந்தை உருப்படாமல் போக அதன் ஜாதகத்தில் ராகு கேது கெட்டிருந்தால் போதும்.
பொது விதிப்படி ராகு கேதுக்கள் 3-4-6-10-11-12 பாவங்களில் நின்றால் தோஷமில்லை. நல்லது. ராகு கேதுக்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் சம சப்தகத்தில் இருப்பார்கள். அதாவது ஒருவருக்கொருவர் 7ஆம் இடத்தில் இருப்பார்கள். இதன்படி ராகு 3ல் இருந்தால் கேது ஒன்பதில் இருப்பார். மூன்றில் உள்ள ராகு மனோ தைரியத்தை தருவார். இது நல்லதே. ஆனால் ஒன்பதில் உள்ள கேது அப்பாவை சாமியாராக / பிச்சைக்காரராக்கி விடுவாரே?
ஆறில் உள்ள ராகு சத்ரு ஜெயம் - ரோக நிவர்த்தி - ருண விமுக்தி போன்ற நல்ல பலனை தந்தாலும் 12ல் உள்ள கேது தூக்கம் - தாம்பத்யம் இத்யாதியில் வில்லங்கம் செய்வாரே?
10ல் உள்ள ராகு புதுமை பித்தனாக்கி - தொழிலில் கொடிகட்டி பறக்க விட்டாலும் நாலில் உள்ள கேது தாய்க்கு நலிவை தருவாரே.
11ல் உள்ள ராகு சினிமா லாட்டரி - வைன்ஸ் போன்ற தன் காரகங்களில் ஹிட் அடிக்க வைத்தாலும் ஐந்தில் உள்ள கேது அவமானம் – மறதி - புத்தி குழப்பம் போன்ற தீய பலனை தந்து விடுவாரே?
ராகு - கேதுக்கள் எங்கெல்லாம் இருந்தால் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளதோ அங்கு அவை இருந்தால் இத்தனை பிரச்சினை வரும் எனும் போது இங்கே ராகு - கேதுக்கள் இருந்தால் நல்லது என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது?
ராகு - கேதுக்கள் மேற்படி பாவங்களில் நிற்பதால் உலகியல் ரீதியாக மேற்சொன்ன தீய பலன் விளைந்தாலும் தாய் / தந்தைவழி - தாத்தா / பாட்டிகளின் நல்ல அம்சங்கள் குழந்தைக்கு வருவதை அவர்கள் அனுபவத்தில் கண்டிருக்க வேண்டும்.
ராகு - கேதுக்களை தாய் / தந்தைவழி – தாத்தா / பாட்டிகளின் நல்ல அம்சங்களை கொண்டு வரும் தூதர்கள் என்ற கோணத்தில் இப்போது பார்ப்போம்.


Friday, May 27, 2011

சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் : 3

அண்ணே வணக்கம்ணே,
சூப்பர் ஜோதிடராக டிப்ஸ்ங்கற இந்த தொடரோட மொத அத்யாயம் ரெம்ப மொக்கையா போச்சுன்னுட்டு ரெண்டாவது சாப்டர்ல டிப்ஸ் மழையா பொழிஞ்சாச்சு.

தானிக்கி தீனிக்கி சரிபோயிந்தி. இப்பம் இன்னம் சில டிப்ஸ் பார்த்துட்டு நின்னு நிதானமா ரோசிப்பம்

1.லக்னத்தை நெல்லா ஸ்கேன் பண்ணிக்கனும். ஏன்னா இது ஜாதகரை காட்டற இடம். லக்னத்துல ஆரு   நின்னா? ஆரெல்லாம் பார்க்கிறான்னு நிதானமா நோட் பண்ணிக்கனும். குரு பார்த்தா கோடி புண்ணியம் அது இதுன்னு ஜல்லியடிக்காம நிறுத்தி நிதானமா பார்க்கனும்.

இங்கே சுபர்/அசுபர்ங்கற ப்ரஸ்தாவனை வந்தே தீரும். நைசர்கிக சுபத்வ பாபத்வத்தை கணக்குலயே வச்சுக்காதிங்க. லக்னாத் சுபத்வ பாபத்வம் தான் முக்கியம்.

குரு நைசர்கிக சுபர். ஆனால் இவரு ரிஷபலக்னத்துக்கு அஷ்டமாதிபதி. குரு லக்னத்தை பார்த்தா என்ன ஆகும்?

சனி நைசர்கிக பாவி . ஆனா மகரத்துக்கு ? லக்னாதிபதியே இவர் தான்  இவர் லக்னத்தை பார்த்தா  நல்லதுதானே. புலி குரூர மிருகமா இருந்தாலும் தன் குட்டிக்கு அது தாய் தானே.Read More

Monday, February 21, 2011

போலி ஜோதிடர்களை கண்டறிய


1.வெளித்தோற்றத்தில் அக்கறை -24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப்:

ஒரு பெண்......... பாவம் ஏதோ சின்ன ஹெல்த் ப்ராப்ளத்துக்கு இருபத்து அஞ்சு பைசா மாத்திரை போட்டுக்கிட்ட பாவத்துக்கு என்னா கதியாச்சுன்னு ஜூ.வில போட்டிருந்தான் .கதி கலங்கி போச்சு.

ஒரு நேரம் முடிஞ்சு இன்னொரு நேரம் ஆரம்பிக்கிறச்ச இந்த நிமிசத்துக்கும் அடுத்த நிமிசத்துக்கும் லிங்க் கட்டாயிருது. என்னா வேணம்னா நடக்கலாம். மரணம் உட்பட. இந்த வாழ்க்கைங்கற நாடகமே டிவி சீரியல் மாதிரி படக்குனு கழட்டிவிட்டுட்டு இவருக்கு பதில் இவருன்னு வாழ்க்கை டைட்டில் கார்டு போட்டுருது.

காலகதி அறிந்த ஒரு பார்ட்டி வெளித்தோற்றத்துல அளவில்லாத அக்கறை காட்டறாருன்னா அவர் கோள்களையும் அவற்றின் சஞ்சாரத்தையும்,அவற்றின் பலா பலனையும் முழுக்க நம்பலைனு அர்த்தம்.

சாமானிய சனம் ரொட்டீனுக்கு அலையுதுன்னா அது வேற கதை .அவிகளுக்கு விவரம் போதாது. மேட்டர் தெரியாது.

செருப்புக்குள்ள காலை நுழைப்பான் காது அறுந்திருக்கும். ஒடனே நோயாளி பொஞ்சாதிய தாலியறுத்து ஸ்லாப் மேல இருந்து ஷூ எடுக்க சொல்லி அதுக்கு பாலிஷ் போட்டு போட்டுக்கிட்டு போவான். ஒரு விபத்து நடக்கும் -வேலை போகும் - தலை போகும் -நெஜமாலுமே அவன் பொஞ்சாதி தாலி அறுந்துரும்.

ஒனக்கு செருப்பு போடவே போதாத காலத்துல ஷூ போட்டா கிரகம் ஒத்துக்கிடுமா என்ன? ஒரு நாள் கூட மிஸ்ஸானதில்லை காலைல 5 மணிக்கு டாண்ணு எந்திரிச்சு , வாய் கொப்புளிச்சு , கக்கா போயிட்டு வாக்கிங் .. என்று ஆரம்பிப்பவர்களை பார்த்தா பரிதாபப்படுங்க. அவரோட ஜாதகத்துல உள்ள 9 கிரகங்களோட பலமும் அவரோட ரொட்டீனை மெயின்டெய்ன் பண்றதுலயே சரியாபோச்சு.

மாறாதது மாற்றம் ஒன்றே என்பது. ஜோதிடத்தின் சாரம். சந்திரன் 6 மணி நேரத்துக்கொரு தாட்டி பாதம் மாறிர்ராரு. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் லக்னம் மாறிடும். சைக்காலஜிப்படி கூட மனுசனுக்கு 4 நிமிசத்துக்கொருதரம் லேசா மூட் மாறுமாம். 2 மணி நேரத்துக்கொருதரம் அடியோட மாறுமாம்.

உண்மை நிலை இப்படியிருக்க பார்ட்டி 24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப் தர்ராருன்னா அவருக்கே கோள்களின் சுழற்சியின் மீது நம்பிக்கையில்லை என்று அர்த்தம். தான் முழுக்க நம்பாத மேட்டரை ஒருத்தன் எதிராளிக்கு சொல்றான்னா அந்த பேச்சுல அவனோட வில் கலந்திருக்காது. அது வாய்ப்பாட்டு.ஆன்மாவின் ராகமல்ல.

2.காசே தான் கடவுளடா என்ற நினைப்பு:

சனம் பணத்துக்கு அலையுதுன்னா அதுக்கு பல காரணம் இருக்கு.(ஒரே உயிரில் ஆரம்பித்து -பல்லுயிராய் பிரிந்து - ஓருயிராக மாற உடலே தடை என்ற பிரமையில் -கொலை தற்கொலை என்ற எண்ணத்தின் உந்துதலில் - முடியாதபோது செக்ஸ் -அதுவும் முடியாதபோது பணம் என்று கொன்ற படி கொல்லப்பட்ட படி வாழறாய்ங்க. இதை புரிஞ்சிக்கிடலாம். ஆனா நாளும் கோளும் அறிஞ்ச ஜோசியருக்கு வாழ்க்கையின் நிலையாமை அப்பட்டமா புரிஞ்சு போய் ,டர்ரடிச்சு கிடக்கனும். அப்படி டர்ரடிச்சு கிடக்கறச்சதான் புதிய கதவுகள் திறக்கும். நெஜமாவே காற்றுவரும்.

அடங்கொய்யால பல்லுயிரா பிரிஞ்சாலும் நாமெல்லாம் ஒரே உயிரய்யா, செல்ஃபோன்ஸ் ஆயிரம் பிராண்டுல இருந்தாலும், சர்வீஸ் ப்ரொவைடர் வேறயா இருந்தாலும் , சேட்டிலைட் ஒன்னுதான். நாமெல்லாம் எங்கய்யா பிரிஞ்சோம். பிணைஞ்சுதான் கிடக்கோம். அகந்தையின் காரணமா அதை புரியாமகிடக்கோம்னு புரிஞ்சிரனும்.

இந்த பிணைப்பை உணர்ந்தவனுக்கு சேரனுங்கற துடிப்பில்லை - அதுக்காக கொல்லனும் -கொல்லப்படனுங்கற அவசியம் இல்லை. அதுக்கான ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸையோ பணத்தையோ தேடிப்போகவேண்டிய அவசியமுமில்லை.

மேலும் ஒவ்வொரு ஜாதகம் ,ஒவ்வொரு ஜாதகரும் தன் ஆன்ம சக்தியை உறிஞ்சறதை அவரால உணரமுடிஞ்சுட்டா சாக்கு போக்கு சொல்லி தப்பத்தான் பார்க்கனுமே தவிர காசு காசுனு அலைய முடியாது.

அட்லீஸ்ட் அடப்போங்கடா நீங்களும் உங்க பணமும்.. நேரம்தாண்டா முக்கியம்ங்கற எண்ணம் அவருக்குள்ள பலமா இருக்கனும். அதை விட்டுட்டு அவரு காசை பார்க்கிறாருன்னா அவருக்கு நாளோ கோளோ முக்கியமில்லைன்னுதானே அர்த்தம். தானே நம்பாத ஒன்னை நம்பினதா பம்மாத்து பண்ற அந்தாளோட வாக்கு பலிக்குங்கறிங்களா?


3.பாசிட்டிவ் அப்ரோச் - மார்க்கெட்டிங் உத்திகள்:
கடந்த பாய்ண்டுக்கான விவரணையத்தான் இன்னொரு தாட்டி சொல்லனும். உண்மையான ஜோதிடன் "ஆளை விடுங்கப்பா"ங்கற மூட்ல தான் இருப்பான். வந்தவனை கழட்டி விடத்தான் பார்ப்பான். அதை விட்டுட்டு ஜாதகத்துல உள்ள மைனஸ் பாய்ண்டையெல்லாம் பூசி மெழுகிட்டு அதெல்லாம் ஒன்னும் பண்ணாது கோவில்ல விளக்கு போடுங்க கணக்கா ஜல்லியடிக்கிறான்னா என்ன அர்த்தம்?

தாளி தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டுபிடிச்சாச்சு. எல்லா கோவில்லயும் பல்புதேன் எரியுது. விளக்குங்கறது கர்பகிருகத்துல ஒன்னோ ரெண்டோ தான் இருக்கு. ஊர் உலகத்துல உள்ளவன் எல்லாம் விளக்கு போட ஆரம்பிச்சா எண்ணைய எங்கன டெப்பாசிட் பண்ணி வைக்கிறதாம்.

மார்க்கெட்டிங் எங்க ஊர்ல ஒரு ஜோசியர் 10 நாளைக்கு மிஞ்சி பலனே சொல்ல மாட்டார். அதுவும் பொத்தாம் பொதுவா இருக்கும். (கஷ்டமோ நஷ்டமோ நடக்கும்/ புதுசா ,நல்லதா எதையாச்சும் செய்விங்க) அதுக்கப்பாறம் என்ன நோண்டினாலும் ஒரு வார்த்தை பெயராது. 11 ஆவது நாள் மறுபடி அவரை போய் பார்க்கவேண்டியதுதேன்.

சிலர் எம்.எல்.எம் மாதிரி ஒருத்தன் மாட்டினா அவனை குழையடிச்சு அவனோட டிபபர்ட்மென்டையே கவுக்க பார்ப்பாய்ங்க. ஒன்னு பலன் சொல்றதால இவிக என்ன இழக்கறாய்ங்கனு தெரிஞ்சிருக்காது அல்லது இவிகளுக்கு இழப்புங்கறதே இருக்காது. ( சூட்சுமமா ரோசிச்சு புரிஞ்சிக்கிடனுங்கோ)


4.தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்:
ஜோதிடத்துக்கு காரகன் புதன். ஜாதகத்துல புத பலம் இல்லேன்னா தான் தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்லாம் வரும். ( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல புதன் பாதி உயிரோட இருந்து இப்படி வியாதிகளையும் கொடுத்து அப்படி பாண்டித்யத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தே கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)

5.ஒழுங்கற்ற பல் , கீச்சுக்குரல் ,திக்குவாய்,பொய் பித்தலாட்டம் -சொந்த ஃபேமிலிலயே வெட்ட்ப்பழி குத்துப்பழி:

ஜாதகத்துல ரெண்டாவதுபாவம் தான் வாக் பலிதத்தை காட்டுது. ரெண்டாமிடம் கெட்டாத்தான் மேற்சொன்ன தீயபலன் எல்லாம் ஏற்படும்.( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல தன பாவமும், தனபாவாதிபதியும் பாதி உயிரோட இருந்து இப்படிப்பட்ட பிரச்சினைகள் + வியாதிகளையும் கொடுத்து அப்படி வாக்பலிதத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)

இன்னம் ஒரு 9 பாய்ண்ட் இருக்குங்கண்ணா அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Sunday, February 20, 2011

கத்தோலிக்க பெரியார்

தமிழ் கத்தோலிக்கன் என்ற வ்லைப்பூவுக்கு சொந்தக்காரர் தாமென்னவோ ஈ.வெ.ரா என்ற நினைப்பில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.ஏதோ ஹிட்ஸை கூட்டிக்க இப்படி ஒரு பதிவை போட்டிருந்தா ஓகே. ( நாமளும் இந்த கேஸ்தானே சுஜாதாவையே கிழிச்சிருக்கன் -ஆனால் அவரோட எழுத்தை படிச்சுத்தேன் எழுத்து மேலயே ஒரு கவுரதை வந்துது -இதையும் மறைச்சதில்லை)

ஆனால் பாவம் ..தான் எழுதினதையெல்லாம் அவர் முழுக்க நம்பி பதிவு போட்டிருந்தா மட்டும் கஷ்டம். தவளை எங்கனா கத்திக்கிடலாம். பாம்பு கண்டுக்கிடாது. பாம்புக்கு மஸ்தா வேலை கீறப்ப, அது ஏதோ தன் வேலைய தான் பார்த்துக்கிட்டிருக்கிறப்ப "மணலுள் புதைந்து வாழ் நுணலெல்லாம்" கத்த ஆரம்பிச்சா அதுவும் ஊர் பேர் எல்லாம் மென்ஷன் பண்ணி சவால் கேட்டா விடாது பாம்பு.

இப்படித்தேன் ஒரு பார்ட்டி திருஷ்டி சுத்தி போட்ட லெமன்ல தான் ஜூஸ் போட்டு குடிப்பேன்னு அடம் பிடிச்சது .நம்ம கிட்டே மோதறச்ச ட்ராயிங் டீச்சர். நமக்கு வெட்டிப்பேச்செல்லாம் பிடிக்காதுங்கோ. உடனே ஒரு கால் காயிதம் எடுத்து 5 பாய்ண்ட் எழுதிக்கொடுத்தேன். 6 மாசம் கழிச்சு பேசிக்கலாம்னேன்.கால் காயிதத்துல நாம எழுதிக்கொடுத்தமாதிரி சாக்கடை ஓரமாவே டப்பாவ பிடிச்சுக்கிட்டு பொழப்ப ஓட்டவேண்டியதாயிருச்சு.

ஆரோ ஒரு ஜோசியரை(?) -ஊர் பேர் போட்டு புள்ளிவிவரம் கொடுத்திருக்காரு. இந்த மாதிரி உபகதையெல்லாம் ஞானும் நிறைய எழுதியிருக்கன். ஆனால் ஊர் பேர் எல்லாம் போடக்கூடாது. தமிழ் கத்தோலிக்கருக்கு என் அறிவுரை இதான். பை தி பை பெரியாரோட வாழ்க்கையில ஒரு சம்பவம். யாரோ வந்து விபூதி நீட்டறாய்ங்க. ( வச்சு விடறாய்ங்களா என்ன ஞா இல்லை) ஸ்பாட்ல எதிர்பார்ட்டி இருக்கிற வரை அதை துடைக்கலை. ஏன்னா விபூதி கொடுத்தவரோட மனசை காயப்படுத்தக்கூடாதுங்கற பெரியமனுஷத்தனம்.

பெரியாருக்கு வமிசா வழியா வந்த கோவில் தர்ம கர்த்தா பொறுப்பை கடைசிவரை நிறைவேத்திக்கிட்டிருந்த கதை தெரியுமா? சாமி பேரை சொல்ல ஊரை ஏமாத்தற சங்கராச்சாரி, நித்யானந்தா மாதிரி சாமிகளை விட ஈ.வெ.ராம சாமி தேன் உண்மையான துறவிங்கறது என் முடிபு.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா - இது உண்மையான ஆன்மீகம். " மானவ சேவே மாதவ சேவா -இது உண்மையான ஆத்தீகம். இது ரெண்டுத்துக்கும் நடுவுல பூந்தா அது அமாவாசை இருட்டு பெருச்சாளினு அர்த்தம்.

பார்ட்டியோட தர்ம சந்தேகம்(?) என்னடான்னா "ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?"
ஏன்யா டாக்டருக்கு பன்றிக்காய்ச்சல் வருவது தெரீமானு கூட கேப்பிக போல. பேசிக்கலா ஜோசியரும் ஒரு மனுஷ ஜன்மம் தேன். அவருக்கும் கக்கா,மூச்சா, நல்ல நேரம்,கெட்ட நேரம் எல்லாம் வரும். அவரு தன்னைப்பத்தியே 24 மணி நேரம் ,365 நாள் நினைச்சிட்டிருந்தா மக்களுக்கு என்னத்த சொல்லமுடியும்.
அப்படியே அவரு தன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பார்த்தாலும் அது அவரோட ஜாதகம்னாலும் சனி -செவ் சேர்க்கைக்கு கூட எங்கனா ரிலாக்சேஷன் இருக்கான்னுதான் பார்ப்பாரு. (இதுவே ஊரான் ஜாதகம்னா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு)

ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியணும் தான். அவிக ஈகோ ,தன்னோடதுங்கற எண்ணம் முழுக்க தெரிய விடறதில்லை. அதுக்காவ அது பெரிய டிஸ்குவாலிஃபிகேஷன் ஆயிருமா என்ன?

லாயருக்கு தண்டனை கிடைக்காதா? தாளி தீர்ப்பு சொல்ற நீதிபதிக்கு , சட்டத்தை வடிவமைக்கிற எம்.எல்.ஏ,எம்.பிக்கே தண்டனை கிடைக்குது. ஆனானப்பட்ட இந்திராகாந்திக்கே கைவிலங்கு போட்டாய்ங்க. அவிகளையும் நம்ம கத்தோலிக்க பெரியார் கூண்ட்ல் ஏத்திருவாரு போல.


"கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" கர்த்தர் வேற கர்த்தரோட படைப்பு வேற இல்லை. கோள்களும் படைப்பின் ஒரு பாகமே. நான் கர்த்தாவுக்கு மட்டும் பயப்படுவேன் அவரோட படைப்புக்கு பயப்படமாட்டேன்னா அது அவிக ஞானத்துக்கு சம்பந்தப்பட்ட மேட்டர். நாம அம்பேல்.

//நாம் எல்லோருமே எப்போதாவது ஜோசியர்களை சந்தித்திருப்போம். நம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகுது என தெரிந்து கொள்ள. இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என புட்டு புட்டு வைக்கும் இவர்களின் எதிர்காலத்தில், என்ன நடக்கும் என, இவர்களுக்கு தெரியுமா? என்னும் சந்தேகம் நீண்ட நாட்களாகவே எனக்கு இருக்கிறது//

பாஸ்! உங்களுக்கு அந்த சந்தேகமே வேணா.. உங்களை மாதிரி பார்ட்டிகளோட சந்தேகத்தை நிவர்த்திக்கத்தான் கடவுள் சூப்பர் டூப்பர் யோக ஜாதகத்துல என்ன மாதிரி ஒரு அராத்தை படைச்சு - உங்களை மாதிரியெல்லாம் பேச வச்சு -ஸ்டெப் பை ஸ்டெப்பா தேத்தி வச்சிருக்காரு.

உங்களுக்கொரு ரகசியத்தை சொல்லவா? என்னோட ஜாதகம் யோகஜாதகம்னு ஜோதிடம் கன்ஃபார்ம் பண்ணாம இருந்திருந்தா தாளி ..நானும் உங்க பக்கம் இருந்துக்கிட்டு உங்களை மாதிரியே வெட்டிப்பதிவு போட்டுக்கிட்டிருந்திருப்பேன்.

//என் ஊரிலுள்ள ஒரு ஜோசியருக்கு நடந்த சம்பவம்தான்.//

ஒரு ஜோசியருக்கே இல்லை. ஜோதிடத்தை ஜஸ்ட் ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம்மா பார்த்து "தொழில்" நடத்தற எல்லா பிக்காலிகளுக்கும் இப்படித்தேன் நடக்கும். மேட்டர் ரெம்ப பர்சனலா போறதால நான் ஜகா வாங்கிக்கறேன் பாஸ்!

//இப்போ நம்ம ஜோஷிய திலகங்கள் சதீஷ் குமார், சித்தூர் முருகேசன் இன்னும் சிலர் பிரபல பதிவர்களாக இருப்பதால் இதை கேட்டு விட்டால் போச்சு என தோன்றியது. அதுதான் இந்த பதிவு.//

பதில் கொடுத்தாச்சு . வவுறு ரெம்பி போச்சா.(தொண்டை வரை வந்திருக்கனுமே ) உங்க நல்ல நேரம் சதீஷ் பார்வைக்கு உங்க பதிவு போகலை போல.அவரும் பரிமாறினாருன்னு வைங்க .. அஜீரணம்தான்

//இந்த ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?//
100% தெரியும் வாத்யாரே.. இப்ப நமக்கு செவ் தசையில குரு புக்தி நடக்கு. குரு 6/9 க்கு அதிபதி. மொதல்ல ஒரு வழக்கோ, கைதோ நடக்கும். அப்பாறம் லைம் லைட்டுதேன்.( நம்முது கடக லக்னம் -லக்னத்துல குரு உச்சம்)

தனி மனிதர்களை வைத்து முடிவெடுக்காதிங்க..அப்பாறம் எந்தெந்த பாதிரியெல்லாம் அஜால் குஜால் பண்ணினாய்ங்கனு லிஸ்ட் போடவேண்டிவந்துரும். கிறிஸ்தவம் புனிதமானது - யாரோ ஒரு பாதிரியார் வேணம்னா அராத்தா இருக்கலாம். அதே மாதிரி ஜோதிடம் புனிதமானது. யாரோ ஒரு ஜோதிடர் வேணம்னா டுபுக்கா இருக்கலாம்

பி.கு: தங்கள் உத்தேசம் ஜஸ்ட் ஒரு பரபரப்பை கிளப்புவது மட்டுமேயானால் என் பதிவில் இத்தனை காட்டம் தேவையில்லை. ஆனா என்ன பண்றது நமக்கு வாக்குஸ்தானத்துல சனி. பதிவு உங்க மனசை புண்படுத்தியிருந்தா சாரி.

Saturday, December 11, 2010

சோதிடம் தன்னை இகழ்

சோதிடம் தன்னை இகழ், அப்படின்னு நான் சொல்லலீங்க. நம்ம பாரதி தான் சொன்னாரு. அவரபத்தி நான் சொல்லனுமா என்ன? அம்புட்டு விபரம் உள்ளவரு... முற்போக்கு சிந்தனையாளரு, வரப்போறத முன்கூட்டியே அறியத்தந்த ஞானமுள்ளவரு தப்பா சொல்லிருப்பாருங்களா?

ஒரு வாரமா இதே சிந்தனைல இருந்தேன். முருகேசனும் எதாவது போடுங்க, போடுங்கன்னு சொல்லிட்டே இருந்தாரா... அதான் இப்படி ஒரு பாம் போட்டுட்டேன்.

சோதிடம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னால ஜாதகம் அப்படின்னுதான் சொல்லுவாங்க... அதாவது சாதகமா சொல்லுறது...யாருக்கு? எவன் குறைகேட்டு வார்ரானோ அவனுக்கு... என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு யோசித்தா தெரியாதா... என்னங்க பெரிய இது? நெருப்ப தொட்டா சுடும்னுதான் தெரியுமே... இத தொட்டு பார்த்துவேற தெரிஞ்சுக்கனுமா?

என்னதான் கிரகம், கிரகம்னாலும் வரப்போறத சொல்ல முடியுமா? ஒரே ஒரு உதாரணம் கிடைக்குமா? நடந்து முடிஞ்சப்பறம் நான் இத அப்பவே சொன்னேனே அப்படின்னு சவடால் வேற... உங்க அவசரத்துக்கு நாங்க என்ன பிரியாணியா?

நாடி பார்த்தா (மருத்துவரில்லீங்க) இப்படி நடக்குமுங்க...

“உங்க ஆத்தா பேரு ஒரு நதி பேருல்ல இருக்கனுமே” அப்படிம்பாரு
பார்க்கவந்தவரோட ஆத்தா பேரு கங்கம்மாள்னு இருக்கும்.... உணர்ச்சி வசப்பட்டு “அட, ஆமாங்க” னுவார்...

ஏங்க, சொல்லும்போதே கங்கம்மாள்னு சொல்ல வேண்டிதான...அதென்ன குறிப்பு?

இப்ப நான், இனிமே என்ன சொல்ல போறேன்னு கண்டு பிடிச்சீங்களா? என்னடா உள்ள இருந்துகிட்டே நோண்டறேன்னு நினைக்கிறீங்களா? இடிப்பார் இல்லாத அரசு, நம்ம தாத்தா அரசு மாதிரி பம்மிகிட்டே இருக்க வேண்டிதான். அப்ப அப்ப ஒரு கிளி.. இல்ல கிழிக்கனும்ல... அப்பதாங்க இதெல்லாம் சரியாவரும்...

மனசில இருக்கிறத எத்தன நாளு மூடி மறைக்கிறது... வாங்க... என்னோட கை சேருங்க...ரெண்டுல ஒன்னு பார்த்துடலாங்க... நல்லா கேள்வி கேட்டாதான் விளெங்கும். நான் இருகேங்க உங்களுக்காக கேள்வி கேக்க... நீங்களும் கேக்கனும்மா? சரி...

ஆனா, கேள்வி கேக்கணும்னா ஒரு கண்டிசன்... சபைக்குள்ள வந்து கேள்வி கேக்கனும்... சொம்மா வெளிய இரிந்திக்கின்னு கூவப்படாது...

சா(ஜா)தகமே இல்லன்னாலும் பரவாயில்ல, வாங்க பிரிச்சு மேஞ்சிரிவோம்... சும்மாவே ஒரு கேள்விக்கு ஒரு பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற பார்ட்டி நம்ம முருகேசு... நாம கேக்குற கேள்வில பத்து பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற நிலமை வரணுங்கோ... அப்புறம் எங்கே பதிவு போடுறது... அதனால நல்ல பலமான கேள்வியா தயாரிங்க...

Sunday, October 17, 2010

ஜோதிடம் கேட்பது எப்படி?

ஜோசியரை தேடறதுக்கு முந்தி ஜோசியத்தை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கனும். ஜோசியங்கறது மாயமோ மந்திரமோ கண்கட்டு வித்தையோ கிடையாது.  இது ஜஸ்ட் கணக்குத்தான். இண்டியன் பீனல் கோட் மாதிரி செக்ஷன் செக்ஷனா பிரிச்சு க்ளாஸ் சப் க்ளாஸ்லாம் உண்டு.

(என்ன ஒரு லொள்ளுன்னா சில நேரம் சிண்டை பிச்சுக்க வைக்கும். ஒரு நாள்  நம்ம கே.வி.முனிசார் ஒரு புஸ்தகத்தை கொடுத்தாரு. பக்கங்களின் ஊடா ரெண்டு அட்டைய குறுக்க வச்சிருந்தாரு.

அவர் சூ காட்டின ரெண்டு பாராவ படிச்சேன்.

மொதல் அட்டை வச்சிருந்த பக்கத்துல ஒரு  பாரா :
லக்னத்துக்கு ஆறுல சூரியன்,செவ்,ராகு, சனி சேர்ந்திருந்தா அவன் அரசனாவான்.

ரெண்டாவது அட்டை வச்சிருந்த பக்கத்துல ஒரு பாரா :
லக்னத்துக்கு ஆறுல சூரியன்,செவ்,ராகு, சனி சேர்ந்திருந்தா அவன் நொண்டியாவான்.

"அடங்கொய்யால" ன்னு அப்ப திட்டித்தீர்த்தேன்.. 

ஆனால் இந்த 21 வருஷமா கிரகங்களோட பேட்டைல ஒதுங்கி இருந்து, பலன் சொல்லி, அந்த பலன் குறிப்பிட்ட ஜாதகருக்கு எப்படி ஒர்க் அவுட் ஆச்சு அ எப்படி மிஸ் ஆச்சுங்கற மேட்டரையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டதுல ஒரு குன்ஸ் வந்துருச்சு. 

இப்போ மேற்சொன்ன கிரக நிலையை வச்சி பலன் சொல்லச் சொன்னா  அல்லது மேற்படி பலனை விளக்க சொன்னா "  பெரிய ஆளுங்களோடல்லாம் விரோதம் வருங்க. இருந்தாலும் ஜெயிச்சு ராஜா ஆவார் .  என்ன ஒரு சோகம்னா ராஜாவாகிற நேரத்துல  ஒரு கால் இருக்காது. பொத்திக்கிட்டு வேலைய பார்த்துக்கிட்டிருந்தா ராஜா ஆகலைன்னாலும் ராஜாவுக்கு சமமான வசதி வாய்ப்புகளோட வாழலாம்.  ஒருக்"கால்" கால் மிச்சமாயிரலாம்.

இதான் ஜோசியத்துல உள்ள சின்ன சிக்கல். மத்தபடி 10  வயசு பையன் கூட (ஏன் வால் பையன் கூட ஜோசியத்தை கத்துக்கிடலாம். இன்னைக்கிருக்கிற மூல  நூல்களே பல நூல்களின் சாரம் தான். (உ.ம் சாராவளி சாரம்) அதை படிச்சுட்டு எழுதற புஸ்தவங்க தான் அதிகம் கிடைக்குது. ஆக நமக்கு கிடைச்சிருக்கிற ரீ போருக்கு வந்துட்ட வண்டி.

ஜோசியத்தை வேதத்துல ஒரு பாகம்னு பூச்சி காட்டி, அவாள் ஒட்டு மொத்த காப்பிரைட் வச்சிருந்தா. பூட்டி பூட்டி வச்சிருந்தா. தலைமுறைக்கு தலைமுறை மட்டும் சொந்த ரத்தங்களுக்கு மட்டும் அதை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க.

முஸ்லீம் படையெடுப்பு , கிழக்கிந்திய கம்பெனியின் வருகை இத்யாதி எல்லாம் அவாளுக்கு வயித்த கலக்கவே பேசாம உருதுவும்,ஆங்கிலமும் கத்துக்கிட்டு
( மெஜாரிட்டி ஆஃப் தி பிராமின்ஸ்) ஜோசியத்தை காத்துல விட்டுட்டாய்ங்க. கதி கெட்டதுங்க,அதிர்ஷ்ட கட்டைங்க மட்டும் விதியில்லாம ஜோசியத்தை கட்டி அழுதுக்கிட்டிருந்தாய்ங்க. அவிகளாச்சும் தங்கள் முன்னோர் பண்ணின தவறை
( சீக்ரெட் மெயின்டெய்னென்ஸ்) பண்ணாம இருந்திருக்கலாம். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏதோ இப்ப சூத்திரங்க கையில மாட்டியிருக்கு சப்ஜெக்ட். அடிச்சு தூள் கிளப்புறாய்ங்க. (இவிகள்ளயும் நம்மை மாதிரி அரைகுறைங்க உண்டுதான் இல்லேங்கல. ஆனா இவிக எதையும் மறைக்கிறதில்ல - போட்டு உடைச்சுர்ராய்ங்க)


சீக்ரெட் மெயின்டெய்ன் பண்றதுல ஒரு சிக்கல் என்னடான்னா சனம் கொஞ்ச நாள்
( வருசம்)  ஜொள்ளு விட்டு பார்த்துட்டு "போடாங்கோத்தா"ன்னிட்டு வேற வேலை பார்க்க போயிருவாய்ங்க. (அப்படித்தான் ஆயிருச்சு - ஏதாச்சும் தேவை ஏற்பட்டா மட்டும் வேண்டா வெறுப்பா வந்து ஒடனே போயிருவாய்ங்க.

மேலும் சப்ஜெக்ட்ல ஜோசியருக்கு உள்ள  சிக்கல் என்ன.. அவர் எந்த அளவு ரிஸ்க் எடுத்து பலன் சொல்றாரு, அது நடக்காம போக எத்தீனி சான்ஸ் இருக்குங்கற விஷயத்தையெல்லாம் க்ளையண்டுக்கிட்ட பகிர்ந்துக்க முடியாது.

உங்க கடந்த காலமும் எதிர்காலமும் ஒரே ரூபா நோட்டோட ரெண்டு துண்டு மாதிரி
உங்க கடந்த காலம்  என்னனு உங்களுக்கு  தெரியும், எதிர் காலம் என்னனு ஜோசியருக்கு மசமசனு தெரியும்.

ரெண்டு துண்டையும் ஒன்னு சேர்த்தாதான் ரெண்டு பேருக்கும் ஒரு ஐடியா வரும்.
உதாரணமா : ஒரு ஜாதகம். அதுல 7ல சனியிருக்காரு.  ஜோசியரு "உங்களுக்கு  திருமணத்துல தாமதம் அ திருமண வாழ்க்கைல சிக்கல் இருக்கனுமே"ன்னு மென்னு விழுங்குவார்.

நீங்க ஒரு ஃப்ரெண்ட் ஆர் எ ஃபோ மாதிரியான நண்பரோட போயிருப்பிங்க அவர் முன்னாடி உண்மைய சொல்ல முடியாது.  "அ அ அதெல்லாம் ஒன்னுமில்லை சாமி. கண்ணாலமெல்லாம் ஆயிருச்சு .. ஒன்னும் பிரச்சினையில்லை" ன்னு சொல்ட்டிங்கனு வைங்க ஜோசியர் பேதியாயிருவாரு.

என்னங்கடா இது டேட் ஆஃப் பர்த் தப்பா , ஜாதகன் எழுதினது தப்பானு குழம்பி போயி சனியை அம்போனு விட்டுருவாரு..

அதனால மொத கண்டிஷன் என்னடான்னா ஜோசியம் பார்க்க தனியா போங்க.  எந்த ஜோசியர் டாக்டர் மாதிரி ஒரு சமயத்துல ஒரு பேஷண்டை மட்டும் கூப்டு கன்சல்ட் பண்றாரோ அவர் கிட்டே மட்டும் போங்க.

ஜோசியருக்கு பணம் கொடுத்து ஹையர் பண்ணது எதுக்கு? உங்க எதிர்காலத்தை ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சுக்கத்தேன். ஆனால் நிறைய பேரு ஜோசியரை டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. எனக்கு எத்தினி பசங்க சொல்லு? ( ஏன் ஒனக்கு தெரியாதா வாத்யாரே)

நீங்க கேட்கிற ஒரு கேள்விக்கு  ஜெனூனா பதில் சொல்ல ஜோசியர் மண்டைய  உடைச்சுக்கனும். நீங்க கேட்கிற கேள்வி எந்த பாவம் தொடர்பானது, எந்த கிரகம் தொடர்பானது, அவர் எங்கே இருக்காரு,லக்னாத் சுபரா பாபரா? அங்கே அவரோட பலம் என்ன? ங்கறதையெல்லாம் அவர் பார்க்கனும்.ஜஸ்ட்  கிரக பலம்ங்கற கான்செப்ட்லயே மொத்தம் 6 வகை இருக்கு. இதுவல்லாது அவரோட சேர்ந்த கிரகம் எது ? அது சுபனா அசுபனா , மறுபடி அவரோட பலம் என்ன?  இப்படி எல்லாத்தயும் பார்த்து கட்டக்கடைசியா பாவ சக்கரம்,  அஷ்டவர்க பரல்களை பார்த்து பதில் சொல்லனும். சொம்மா பூம் பூம் மாடு மாதிரி தலைய ஆட்டறதா இருந்தா ஆயிரம் கேள்விக்கு பதில் சொல்லலாம்.

உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை ஜோசியர் மூலம் தெரிஞ்சுக்க ஒரு கேள்வியை வீணாக்கனுமா என்ன? எனவே உங்க கேள்விகள் எதிர்காலம் தொடர்பானதா இருந்தா நல்லது. ( ஜோசியரோட ஸ்ட்ரெய்ன்  உங்களுக்கு  லாபமா அமையும் )


இந்த நேரத்துல ஜோசியர்களுக்கு ஒரு டிப். சனம் இப்படி கேள்வி கேட்டு நோகடிக்காம இருக்க மொதல்லயே அந்த ஜாதகத்துல உள்ள முக்கியமான கிரக நிலைகளை வச்சு ஒரு அஞ்சு பாய்ண்ட் எடுத்து  விடுங்க. ( உ.ம்: லக்னாதிபதியே மொக்கையாறது, சனி,செவ் தொடர்பு, செவ் தோசம்,சர்ப்ப தோசம், லக்னத்துல அஸ்தங்கத கிரகம் இருக்கிறது)

இதனால வந்தவர் நல்லாவே இம்ப்ரெஸ் ஆறதோட  "இன்னாங்கடா இது நடந்ததையே  சொல்றாரு நடக்கப்போறதை எப்போ சொல்வாருனு டென்ஷன் ஆயிருவாரு.

இதுல ஜோசியருக்கும் லாபம் இருக்கு, குறிப்பிட்ட ஜாதகத்துல எந்த கிரகம் எந்த அளவுக்கு வேலை செய்திருக்குனு ஒரு ஐடியா வந்துரும்.

நீங்க தேடிப்போற ஜோசியரு என்ன முறைல பார்ப்பாருனு மொதல்ல தெரிஞ்சுக்கங்க. ஜாதகமா ஓகே. ஜாதகம்+ நியூமராலஜியா ஓகே , ஜாதகம் + நேமாலஜியா ஓகே. அல்லது பாம் ஹிஸ்டரியா( கை ரேகை) ஓகே.

கைரேகை பார்ட்டின்னா  நிறைய உபகரணம்லாம் வச்சிருக்கனும் நேக்ட் ஐல பார்த்தா ஒரு ம.....ரும் தெரியாது. பொடி தடவி ப்ரிண்ட் எடுத்து , ரேகையோட பாதையில குண்டூரி குத்தி ( பேப்பர்ல பாஸ்) கயிறு கட்டி ,ஸ்கேல்ல அளந்து பூதக்கண்ணாடி வச்சு பார்த்தா ஒரு குன்ஸா சொல்லலாம் ( பலன் நடக்கும் காலத்தை)  கைரேகைல என்னடா தலைவலின்னா என்ன நடக்கும்னு சொல்லிரலாம் எப்போ நடக்கும்னு சொல்றது கொஞ்சம் கஷ்டம்.

ஆனால் கிரகபலங்களை கைரேகைய வச்சு கண்டுக்கறது ரெம்ப ஈஸி. ஜோசியத்துல ஒரு கிரகத்தோட பலத்தை நிர்ணயிக்க 116 விதிகள் இருக்கும். ஆனால் கடைசி வரை குழப்பியடிக்கும். கைரேகைல ச்சோ சிம்பிள்.

மேலே சொன்னதையெல்லாம் விட்டுட்டு ஆரூடம் சொல்றார்,  முகத்தை பார்த்து சொல்றாரு, கை  கட்டைவிரல் ரேகைய வச்சு சொல்றார், மச்சத்த வச்சி சொல்றாரு, பாதரேகைய வச்சு சொல்றாருங்கறதெல்லாம் சந்தேகாஸ்பதமான கேஸுங்க.
(இதுலயும் ஜெனூன் பார்ட்டீஸ் இருக்காய்ங்க. ஆனால் ரேரஸ்ட் ஆஃப் தி ரேர்)

ஆரூடம்னா என்ன?
நீங்க ஜோசியர்கிட்ட போன சமயம் என்ன லக்னம் ஓடுதோ அதையே உங்க ஜன்ம லக்னமா கருதி பலன் சொல்றது ஆரூடம்.

ஆரூடங்கறது எப்போ பார்க்கனும்?

ஜாதகம் இல்லாத சமயம், டேட் ஆஃப் பர்த் தெரியாத சமயம், ஒரு ஆத்திரம் அவசரம் ஆபத்து, எதுனா திருடு போறது, யாராச்சும் கோச்சுட்டு பூட்றது மாதிரி மேட்டர்ல 24 ஹவர்ஸ் அவெய்லபிளா இருக்கிற ஜோசியர்கிட்டே எதிர்பாராம போயி ஆரூடம் கேட்டு அவர் சொன்னா ஒரு லாஜிக் உண்டு. அதை விட்டுட்டு ஒர்க்கிங் டேஸ் ஒர்க்கிங் ஹவர்ஸ், லஞ்ச் அவர், இத்யாதியெல்லாம் ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டு ப்ரியர் அப்பாயிண்ட்மென்டோட சந்திக்கறச்ச ஆரூடம் பார்த்தா வேலைக்காகுமா?

நம்ம லோக்கல் டான் ஒருத்தர் பிரபல தெலுங்கு தினசரில ராசிபலன் எழுதற பார்ட்டிக்கிட்டே ஜோசியம் கேட்க போனாரு. அவரு அசால்ட்டா இவரு போன நேரத்தை கம்ப்யூட்டர்ல தட்டி ஆரூடம் சொல்லி அனுப்பிட்டாரு. ஃபீஸ் எவ்ளோங்கறிங்க ஜஸ்ட் ரூ.10,000 தான்.


சாமுத்ரிகம்:
இதனோட அடிப்படை லக்னம்,லக்னபலத்தை கொண்டு, ஏழாம் பாவம்,ஏழாம் பாவத்தோட பலம் அ லக்னத்தை பார்க்கக்கூடிய கிரகங்களோட பலத்தை வச்சுத்தான் உங்க அனாட்டமி செட் ஆகும். இந்த அடிப்படையிலதான் சாமுத்ரிகம் சொல்றாய்ங்க.

ஆனா அனுபவத்துல பார்க்கும்போது மேற்சொன்ன 1,7 லக்னத்தை பார்க்கிற கிரகம்லாம் உங்க உடலை மட்டும் பாதிக்கும்னு சொல்ல முடியாது. உங்க மைண்டை பாதிக்கலாம். உங்க மனைவிய பாதிக்கலாம். அதானால சாமுத்ரிகம்லாம் அரை கிணறு

மச்ச சாஸ்திரம்:
இது ராகு,கேதுக்களை வச்சி எழுந்த சாஸ்திரம். மத்த கிரகங்களோட இம்பாக்டை எப்படி சொல்வாய்ங்க?

( இன்னம் நிறைய மேட்டர் இருக்குங்கண்ணா அதையெல்லாம் நாளைக்கு பார்ப்போமா?)