'>

Friday, May 17, 2019

ஆறில் இருந்து அறுபது வரை : டிகிரி



டிகிரி:
டிகிரின்னதும் பி.ஏ – பி.காம்னு நினைச்சுராதிய. ஒரு ராசியை ஒன்பது பாகமா பிரிச்சா நட்சத்திர சாரம் தெரியும். முப்பது பகுதியா பிரிச்சா? அது தான் டிகிரி.
ஒரு ராசிக்கு 30 டிகிரி. 12 ராசிக்கு 360 டிகிரி. ஒரு கிரகம் ஒரு ராசியின் முதல் டிகிரியில் நிற்பதற்கும், 15ஆவது டிகிரியில் நிற்பதற்கும், 30ஆவது டிகிரியில் நிற்பதற்கும் வித்தியாசம் வருமா? வராதா?.
ஒரு தலைவர் முதல்வரா / பிரதமரா பொறுப்பேத்துக்கிட்ட மொத 3 மாசத்துக்கும், கடைசி 3 மாசத்துக்கும் வித்தியாசம் இருக்குமா? இருக்காதா?.
ஒவ்வொரு கிரகமும் பலனளிக்கும் காலம்னு சில விதிகள் இருக்கு. சூரியன், செவ்வாய் ஆரம்ப காலத்திலேயே பலன் தருவாங்க. சந்திரன், புதன் அவர்கள் காலம் முழுக்கவும் –குரு, சுக்கிரன் மத்திய காலத்திலும் – சனி, ராகு, கேது பிற்பகுதியிலும் பலன் தருவார்கள்.
இதன் படி சூரியன், செவ்வாய் ஒரு ராசியின் ஆரம்ப டிகிரிகளில் இருந்தால் சிரேஷ்டம். குரு, சுக்கிரன் மத்திய டிகிரிகளில் இருந்தால் – சனி, ராகு, கேது பிற்பாதி டிகிரிகளில் இருந்தால் இன்னம் கொஞ்சம் ஆக்டிவா எஃபெக்ட் பண்ணுவாங்க தானே?.
கம்ப்யூட்டரில் ஜாதகம் கணிக்கும் போது கிரக ஸ்திதி கீழ்கண்டவாறு வரும்.
டிகிரி பார்ப்பதில் இன்னொரு உபயோகமும் உண்டு. கிரகம் ஏதேனும் அஸ்தங்கதம் ஆகியுள்ளதா என்று அக்யுரேட்டா தெரிஞ்சுக்கலாம்.
அஸ்தங்கதம் என்பது ஏதேனும் கிரகம் (ராகு-கேது-புதனை தவிர்த்து) சூரியனுக்கு 10 டிகிரிக்குள் இருந்தால் அது அஸ்தங்கதமான கிரகம். பலன் தராது என்பதை நினைவில் வையுங்கள்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நைசர்கிக சுப கிரகங்கள் பகலிலும், நைசர்கிக பாப கிரகங்கள் இரவிலும் அதிகமாய் பாதிக்கும்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நைசர்கிக சுப கிரகங்கள் வளர்பிறையிலும், நைசர்கிக பாப கிரகங்கள் தேய்பிறையிலும் அதிகமாய் பாதிக்கும்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நைசர்கிக சுப கிரகங்கள் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலும், நைசர்கிக பாப கிரகங்கள் ஆடி முதல் மார்கழி மாதம் வரை அதிகம் பாதிக்கும்

No comments: