'>
Showing posts with label asstrologer. Show all posts
Showing posts with label asstrologer. Show all posts

Friday, May 17, 2019

ஆறில் இருந்து அறுபது வரை : கிரகங்களுக்கிடையிலான உறவு


கிரகங்களுக்கிடையிலான உறவு :
சூரியனுக்கு   சுக்கிரன் சனி ராகு - கேது பகை
சந்திரனுக்கு   புதன் சுக்கிரன் சனி ராகு - கேது பகை
செவ்வாய்க்கு புதன் சனி ராகு - கேது பகை
புதனுக்கு     சந்திரன் செவ்வாய் குரு - கேது பகை
குருவுக்கு     புதனும் - சுக்கிரனும் பகை
சுக்கிரனுக்கு  சூரியன் - சந்திரன் - குரு பகை
சனிக்கு       சூரியன் சந்திரன் செவ்வாய் - கேது பகை
ராகுவுக்கு     சூரியன் சந்திரன் - செவ்வாய் பகை
கேதுவுக்கு    சூரியன் சந்திரன் செவ்வாய் - புதன் பகை

பாவங்களின் வகைகள் :
1-4-7-10 கேந்திரம்
1-5-9 கோணம்
3-12 அபோக்லிபம்
2-6-8-11 பணபரம்
6-8-12 துஸ்தானங்கள்
இதன் உபயோகம், கோணங்களில் சுபர்கள் பெஸ்ட் - பாபர்கள் பெட்டர். கேந்திரங்களில் பாபர்கள் பெஸ்ட், சுபர்கள் பெட்டர் என்பதை அறியவே. 6-8-12 க்குடைவர்கள் இந்த 6-8-12 பாவங்களிலேயே மாறி மாறி உட்கார்ந்திருக்கிறார்களா என்பதை அறிவதே.




ஆறில் இருந்து அறுபது வரை :மரணத்தை தள்ளிப்போட


மரணத்தை தள்ளிப்போட :
ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட் / நூஸ்ஃபியர் (மனிதர்களின் எண்ணங்களால் ஏற்படும் அமானுஷ சூழல்) மாறிப்போவுது. அவன் மேல உண்மையான பாசம் / அட்டாச்மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன் பாடில பயோ-கெமிஸ்ட்ரி மாறிப் போவுது. அவனுடைய சப்-கான்ஷியஸ்லயோ, அன்-கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது. அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.
அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப் போன உங்க சொந்தக்காரவுக, அப்பா, அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப் போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம்.
பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அல்லது உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம் பிடிச்சு போய் பார்த்திருப்பாங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க. (ரொம்ப உணர்வு பூர்வமா) ஓஷோ "சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள்நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது" ங்கறார்.
பழைய கடன்காரன் / கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரை வழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன் என்னவோ நல்ல வசதியா தான் இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன். "என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான். யோசிச்சுப் பாருப்பா"ன்னேன். "அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்"னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான். இது ஏறக்குறைய ஃபைனான்சியல் முடியும் போது அரக்க பரக்க செட்டில் செய்வது போன்றதே.
இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான நான் அவருக்கு. நான் ஒரு சட்டை, ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்.ரத்தினம்பொடி, பஸ் டிரைவருங்க உபயோகிக்கிற சிகப்பு டவல் வாங்கி கொடுத்தேன். அவரோட ஃபேவரட் ஐட்டம்ஸ் இதெல்லாம். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணாம போய் அரைமணி நேரத்துல கிடைச்சா. எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன். இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும் போதே பெண்டாட்டி பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன். (இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது. ஆனாலும் புது பொஞ்சாதியோட ஒரு மாசம் போல தங்கி இருந்தேன்). பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச்மென்ட் கூட இருக்காது) பார்க்கும் போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.
இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே. ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும், ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ / ஆடு, மாடு, கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி நாற்காலில இருந்து தவறி விழும். யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல / வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.
1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச்-க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை லாஜிக்கே இல்லாம விழுந்து செம சில்லறை. அந்த காலகட்டத்துல ரெண்டு கையையும் விட்டுட்டு சர்க்கஸ் பண்ற ரேஞ்சு நம்முது. எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோகநாதம் நாயக்கர் மறுநாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க்டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை டெஸ்க்டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு. மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாம தான் T.A, DA, HRA கணக்குகள், டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.
மரணம் இவனை ஹலோ சொல்லப் போற தினம் வீட்ல இருந்து புறப்படும் போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும். சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ, சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்னச் சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளிப் போட முடியும். ஒரு தடவை தள்ளிப் போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.

Thursday, May 16, 2019

ஆறில் இருந்து அறுபது வரை : ராகு / கேதுக்கள் நின்ற பலன்


ராகு / கேதுக்கள் நின்ற பலன் :

ஜாதக சக்கரத்துல உசுருள்ள இடங்கள்னா தெரியுமா?
1-3-4-5-6-7-9-11 இதெல்லாம் உசுருள்ள இடங்கள்
1 - நீங்க
3 - இளைய சகோதரம்
4 - தாய்
5 - குழந்தைங்க
6 - தாய்மாமன்
7 - மனைவி
9 - அப்பா
11- மூத்த சகோதரம்
(இந்த பட்டியலை உள்வாங்கிருங்க. ஏன்னா இதே நூலின் பல அத்தியாயங்களில் இது பிரஸ்தாபிக்கப்பட இருக்கிறது)
இந்த ராகு / கேதுக்கள் மேற்கண்ட உசுருள்ள இடங்களில் இருந்தால் அவிகள (லக்னத்துல இருந்தா உங்களை இதர இடங்களில் இருந்தா அந்த பாவ காரக நபரை) என்ன பண்ணுவாய்ங்க?
ராகு இருந்தா உருக்குவார். இல்லை ஊளைச் சதையாக்கிருவாரு. எல்லாமே மூடு மந்திரமா இருக்கும். பகல்ல தூங்கி வழிவாய்ங்க. ராத்திரில செம ஷார்ப் ஆயிருவாய்ங்க (பலான அர்த்தம்லாம் இல்லை). மேலை நாட்டு பண்பாடு, பழக்கவழக்கங்களை ஆதரிப்பாய்ங்க. சொந்த இனம், மதம், மொழி, சாதியினரோடு ஏன் குடும்பத்தாரோடு கூட ஒட்டுதல் இருக்காது.
எந்த வேலையா இருந்தாலும் ஊரு நாட்ல எவனும் செய்யாத மாடல்ல செய்ய நினைப்பாய்ங்க. ராகு பலம் இருந்தா கொஞ்ச காலம் சமூகத்தால அவதிப்பட்டாலும் அதே சமூகத்தால அங்கீகரிக்கப்படுவாய்ங்க. லைஃபே ஒரு கேம்ப்ளிங் மாதிரி இருக்கும். நைட் ஷிஃப்ட் வேலையில இருக்கலாம். வெளிநாட்ல இருக்கலாம். ஈசி மணி மேல கவர்ச்சி சட்டவிரோத செயல்கள், சதி செய்யலாம். சதிக்கு பலியாகலாம்.
மேற்படி உசுருள்ள இடங்கள்ள கேது இருந்தா சம்பந்தப்பட்டவரை சாமியார் / சாமியாரிணி ஆக்கிருவாரு. நம்ம ஜாதகத்துல நாலாமிடத்துல இருந்தாரு. நாம டீன் ஏஜ்ல என்டர் ஆகற வரைக்கும் அப்பா ஜில்லா ஜில்லாவா ட்ரான்ஸ்ஃபர். அம்மா நாலு பிள்ளைங்க, ஒரு மாமியாரோட அல்லாடி அல்லாடி ஜென் நிலைக்கு வந்துட்டாய்ங்க.
இந்த ராகு / கேது ரெண்டு பேருமே உசுருள்ள இடத்துல இருந்தா சம்பந்தப்பட்டவுகளுக்கு வைத்திய சாஸ்திரத்துக்கு பிடிபடாத நோய்குறிகளையும், உபாதைகளையும் கொடுப்பாய்ங்க. வீக்கம் / முறையற்ற வளர்ச்சி இனம் புரியாத பலகீனத்தைக் கொடுப்பாங்க.
ராகு லக்னத்துல இருந்தாலும் 7ல இருந்தாலும் ஒரே பலனானு கேப்பிக. ராகுவோ, கேதுவோ லக்னத்துல இருந்தா ஏழைப் பார்ப்பாங்க. ஏழுல இருந்தா லக்னத்தை பார்ப்பாங்க. இவர் அவரை பார்ப்பாரு, அவரை இவரு பார்ப்பாரு. சதா சர்வ காலம் ஒருத்தருக்கொருத்தர் சம சப்தத்துல, அதாவது 180 டிகிரியிலேயே இருக்கிற பார்ட்டிங்க. ராகுவுக்கும் கேதுவுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரே வார்த்தையில சொன்னா ராகு உசுருள்ள இடத்துல இருந்தா அந்த கேரக்டரை
1. சூதாடியாவோ அல்லது வாழ்க்கையையே ஒரு சூதாட்டமா மாத்திக்கிறவராவோ
2. ஆல்கஹாலிக்காவோ
3. பேஷண்டாவோ
(பாடியில பாய்சன் அல்லது ஃபாரின் பாடிஸ் அல்லது ஒத்துப்போகாத மெடிசின் பெரிய புரட்சிய வெடிக்கச் செய்யும்)
4. உருப்படாத ஆசாமியாவோ
(அதாவது மக்கள் பார்வையில ஜாதகர் என்னமோ சின்சியரா ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டே தான் இருப்பாரு)
5. ஈசி மணிக்காக மெனக்கெடுபவராவோ மாத்திருவாரு அல்லது அப்படி ஒரு தோற்றம் சமுதாயத்துல ஏற்பட்டுரும். இவரோட இன்டராக்ட் ஆகும் சனம் இப்படியாக்கொத்த கிராக்கிகளா இருப்பாங்க.
இதுவே உசுருள்ள இடத்துல கேது இருந்தா அந்த பார்ட்டிய பிச்சைக்காரரா மாத்திருவாரு அல்லது சன்யாசி ஆக்கிருவாரு. (உ.ம் 9 ஆம் பாவத்துல இருந்தா அப்பாவ)
ஒரு ஜாதகத்துல ராகு / கேது கெட்டாலே நாஸ்தி தான். இது பாடி, மைண்ட், வே ஆஃப் திங்கிங், டெசிஷன் மேக்கிங், இன்டராக்சன், கொடுக்கல் வாங்கல், மோட் ஆஃப் லிவிங் இப்படி எல்லாத்தையும் நாறடிச்சுரும். இப்ப கொஞ்சம் டீட்டெய்லா பார்ப்பம்.

ஆறில் இருந்து அறுபது வரை :ராகு கேதுக்கள் பலமும் -பலவீனமும்


குறிப்பு :
ராகு / கேது பலம் உடையவர்களிடமும் இந்த இயல்பு இருந்தாலும் ராப்போதுகளில் புதுமையான – உருப்படியான -சட்டத்துக்குட்பட்ட செயல்களில் ஈடுபடுவர். ஆனால், சர்ப்பதோஷர்கள் சதி திட்டங்கள் தீட்டுவதும் - சட்ட விரோத செயல்கள் குறித்து சிந்திப்பதுமாய் இருக்கலாம். கள்ள உறவு கேஸ்களில் மெஜாரிட்டியினர் சர்ப்பதோஷர்களாக இருப்பதற்கும் இதுவே காரணம்.
பரிணாம சித்தாந்தத்தை கண்ட டார்வின் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று மட்டும் சொல்லவில்லை. நீரில் தோன்றிய முதல் உயிரில் இருந்து அனைத்து ஜீவ ராசிகளின் கல்யாண குணங்களும் மனிதனில் இருப்பதாய் சொல்லி இருக்கிறார்.
சில வகை பாம்புகள் புணர்வுக்கு பிறகு பெண் பாம்பின் புழையில் ஒரு வித சுரப்பைச் செலுத்தி சீல் இடும் என்று படித்திருக்கிறேன். இதை சட்டப்படியான மனைவி படி தாண்டினாள் என்று போட்டு தள்ளுவோரைக் காட்டிலும் கள்ள காதலி கைமாறினாள் என்று போடுவோரும் / கள்ளக்காதலியின் கணவனை போடுவோருமே அதிகம் என்ற செய்தியோடு இணைத்துப் பாருங்கள். சர்ப்பதோஷர்களுக்கு இந்த "சீல்" இடும் மனோதத்துவம் இருக்கலாம் என்று தோன்றுகிறதல்லவா? ஸ்தூலமாய் முடியாததை அவர்கள் மனம் "கட்டுப்பாடுகள்" மூலம் செயல்படுத்துகிறது போலும்.
கறையான் புற்றில் பாம்பு குடியேறுவது போல் இவர்கள் இதரரின் திறமை – உழைப்பு - இயக்கங்களை கைப்பற்றலாம். அதே சமயம் ராகு / கேது பலமுடையவர்கள் ஆதர்ச புருஷர்களின் ஆதர்சங்களை மற்றொரு தளத்துக்கு கொண்டு செல்வார்கள்.
இப்படி ராகு / கேதுக்களின் காரகம் என்பது ஜீன்களில் துவங்கி பல அம்சங்களுக்கு விரிகிறது.








Tuesday, May 31, 2011

சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் டு டிஸ்கஸ்

 3.ஜோதிஷத்துக்கு அடிப்படையே ஆன்மீகம் தான். ஆன்மீக தேடலோ, செல்வமோ இல்லாத பார்ட்டி சொன்னா எல்லாமே பல்லை இளிக்கும். ஜோசியருக்கு மட்டுமில்லை ஆர்வலருக்கும் இதெல்லாம் இருக்கனும்.

4.படைப்பாளி கையில உள்ள அஜெண்டாவ பிட் அடிக்கிற முயற்சி இது. அந்தாளு பெரீ கில்லாடி அஜெண்டா அமலாக தொடங்கிட்ட பிறவு கூட படக்குனு கண்ட் ரோல் ஜெட் கொடுத்துருவாரு

5.ஜோதிஷத்துக்கு பேஸ் ரிஷிகளோட ஸ்டடி. அவிகளுக்கு அந்த பலத்தை தந்தது அவிக தவம். நான் ட்ரான்ஸ்ல எழுதிட்ட கவிதைய சாதாரணமா இருக்கிறச்ச படிக்க கூட முடியாம போயிருது. அதனால அவிக என்னா மூட்ல எழுதினாய்ங்க்ளோ அந்த மூட் ஜோதிடருக்கு இருந்தாதான் அதையெல்லாம் புரிஞ்சிக்கிட முடியும் Read More