'>
Showing posts with label super astrologer. Show all posts
Showing posts with label super astrologer. Show all posts

Tuesday, May 31, 2011

சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் டு டிஸ்கஸ்

 3.ஜோதிஷத்துக்கு அடிப்படையே ஆன்மீகம் தான். ஆன்மீக தேடலோ, செல்வமோ இல்லாத பார்ட்டி சொன்னா எல்லாமே பல்லை இளிக்கும். ஜோசியருக்கு மட்டுமில்லை ஆர்வலருக்கும் இதெல்லாம் இருக்கனும்.

4.படைப்பாளி கையில உள்ள அஜெண்டாவ பிட் அடிக்கிற முயற்சி இது. அந்தாளு பெரீ கில்லாடி அஜெண்டா அமலாக தொடங்கிட்ட பிறவு கூட படக்குனு கண்ட் ரோல் ஜெட் கொடுத்துருவாரு

5.ஜோதிஷத்துக்கு பேஸ் ரிஷிகளோட ஸ்டடி. அவிகளுக்கு அந்த பலத்தை தந்தது அவிக தவம். நான் ட்ரான்ஸ்ல எழுதிட்ட கவிதைய சாதாரணமா இருக்கிறச்ச படிக்க கூட முடியாம போயிருது. அதனால அவிக என்னா மூட்ல எழுதினாய்ங்க்ளோ அந்த மூட் ஜோதிடருக்கு இருந்தாதான் அதையெல்லாம் புரிஞ்சிக்கிட முடியும் Read More

Friday, May 27, 2011

சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் : 3

அண்ணே வணக்கம்ணே,
சூப்பர் ஜோதிடராக டிப்ஸ்ங்கற இந்த தொடரோட மொத அத்யாயம் ரெம்ப மொக்கையா போச்சுன்னுட்டு ரெண்டாவது சாப்டர்ல டிப்ஸ் மழையா பொழிஞ்சாச்சு.

தானிக்கி தீனிக்கி சரிபோயிந்தி. இப்பம் இன்னம் சில டிப்ஸ் பார்த்துட்டு நின்னு நிதானமா ரோசிப்பம்

1.லக்னத்தை நெல்லா ஸ்கேன் பண்ணிக்கனும். ஏன்னா இது ஜாதகரை காட்டற இடம். லக்னத்துல ஆரு   நின்னா? ஆரெல்லாம் பார்க்கிறான்னு நிதானமா நோட் பண்ணிக்கனும். குரு பார்த்தா கோடி புண்ணியம் அது இதுன்னு ஜல்லியடிக்காம நிறுத்தி நிதானமா பார்க்கனும்.

இங்கே சுபர்/அசுபர்ங்கற ப்ரஸ்தாவனை வந்தே தீரும். நைசர்கிக சுபத்வ பாபத்வத்தை கணக்குலயே வச்சுக்காதிங்க. லக்னாத் சுபத்வ பாபத்வம் தான் முக்கியம்.

குரு நைசர்கிக சுபர். ஆனால் இவரு ரிஷபலக்னத்துக்கு அஷ்டமாதிபதி. குரு லக்னத்தை பார்த்தா என்ன ஆகும்?

சனி நைசர்கிக பாவி . ஆனா மகரத்துக்கு ? லக்னாதிபதியே இவர் தான்  இவர் லக்னத்தை பார்த்தா  நல்லதுதானே. புலி குரூர மிருகமா இருந்தாலும் தன் குட்டிக்கு அது தாய் தானே.Read More

Thursday, May 26, 2011

சூப்பர் ஜோதிடராக டிப்ஸ்! ( நெஜமாலுமே)

1.ஒர்ஜினல் புக்ஸ் படிங்க ( உரை எக்ஸ்க்யூஸ் )

2.மனப்பாடம் பண்ணாதிங்க (ஒரு சிலதை தவிர - ஐ மீன் கிரக,பாவ காரகத்வம் மற்றும் ஒரு சில பொது சிறப்பு விதிகள்)

3.படிக்க ஆரம்பிச்ச வாரம் - பத்து நாள்ல தாளி ஜோதிடமே நம்ம பாக்கெட்லங்கற ஃபீலிங் வரும். அதை வளரவிடாதிங்க. (இப்படித்தேன் அந்த காலத்துல நானும் அலைஞ்சேன்)
Read More