'>

Sunday, October 17, 2010

ஜோதிடம் கேட்பது எப்படி?

ஜோசியரை தேடறதுக்கு முந்தி ஜோசியத்தை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கனும். ஜோசியங்கறது மாயமோ மந்திரமோ கண்கட்டு வித்தையோ கிடையாது.  இது ஜஸ்ட் கணக்குத்தான். இண்டியன் பீனல் கோட் மாதிரி செக்ஷன் செக்ஷனா பிரிச்சு க்ளாஸ் சப் க்ளாஸ்லாம் உண்டு.

(என்ன ஒரு லொள்ளுன்னா சில நேரம் சிண்டை பிச்சுக்க வைக்கும். ஒரு நாள்  நம்ம கே.வி.முனிசார் ஒரு புஸ்தகத்தை கொடுத்தாரு. பக்கங்களின் ஊடா ரெண்டு அட்டைய குறுக்க வச்சிருந்தாரு.

அவர் சூ காட்டின ரெண்டு பாராவ படிச்சேன்.

மொதல் அட்டை வச்சிருந்த பக்கத்துல ஒரு  பாரா :
லக்னத்துக்கு ஆறுல சூரியன்,செவ்,ராகு, சனி சேர்ந்திருந்தா அவன் அரசனாவான்.

ரெண்டாவது அட்டை வச்சிருந்த பக்கத்துல ஒரு பாரா :
லக்னத்துக்கு ஆறுல சூரியன்,செவ்,ராகு, சனி சேர்ந்திருந்தா அவன் நொண்டியாவான்.

"அடங்கொய்யால" ன்னு அப்ப திட்டித்தீர்த்தேன்.. 

ஆனால் இந்த 21 வருஷமா கிரகங்களோட பேட்டைல ஒதுங்கி இருந்து, பலன் சொல்லி, அந்த பலன் குறிப்பிட்ட ஜாதகருக்கு எப்படி ஒர்க் அவுட் ஆச்சு அ எப்படி மிஸ் ஆச்சுங்கற மேட்டரையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டதுல ஒரு குன்ஸ் வந்துருச்சு. 

இப்போ மேற்சொன்ன கிரக நிலையை வச்சி பலன் சொல்லச் சொன்னா  அல்லது மேற்படி பலனை விளக்க சொன்னா "  பெரிய ஆளுங்களோடல்லாம் விரோதம் வருங்க. இருந்தாலும் ஜெயிச்சு ராஜா ஆவார் .  என்ன ஒரு சோகம்னா ராஜாவாகிற நேரத்துல  ஒரு கால் இருக்காது. பொத்திக்கிட்டு வேலைய பார்த்துக்கிட்டிருந்தா ராஜா ஆகலைன்னாலும் ராஜாவுக்கு சமமான வசதி வாய்ப்புகளோட வாழலாம்.  ஒருக்"கால்" கால் மிச்சமாயிரலாம்.

இதான் ஜோசியத்துல உள்ள சின்ன சிக்கல். மத்தபடி 10  வயசு பையன் கூட (ஏன் வால் பையன் கூட ஜோசியத்தை கத்துக்கிடலாம். இன்னைக்கிருக்கிற மூல  நூல்களே பல நூல்களின் சாரம் தான். (உ.ம் சாராவளி சாரம்) அதை படிச்சுட்டு எழுதற புஸ்தவங்க தான் அதிகம் கிடைக்குது. ஆக நமக்கு கிடைச்சிருக்கிற ரீ போருக்கு வந்துட்ட வண்டி.

ஜோசியத்தை வேதத்துல ஒரு பாகம்னு பூச்சி காட்டி, அவாள் ஒட்டு மொத்த காப்பிரைட் வச்சிருந்தா. பூட்டி பூட்டி வச்சிருந்தா. தலைமுறைக்கு தலைமுறை மட்டும் சொந்த ரத்தங்களுக்கு மட்டும் அதை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க.

முஸ்லீம் படையெடுப்பு , கிழக்கிந்திய கம்பெனியின் வருகை இத்யாதி எல்லாம் அவாளுக்கு வயித்த கலக்கவே பேசாம உருதுவும்,ஆங்கிலமும் கத்துக்கிட்டு
( மெஜாரிட்டி ஆஃப் தி பிராமின்ஸ்) ஜோசியத்தை காத்துல விட்டுட்டாய்ங்க. கதி கெட்டதுங்க,அதிர்ஷ்ட கட்டைங்க மட்டும் விதியில்லாம ஜோசியத்தை கட்டி அழுதுக்கிட்டிருந்தாய்ங்க. அவிகளாச்சும் தங்கள் முன்னோர் பண்ணின தவறை
( சீக்ரெட் மெயின்டெய்னென்ஸ்) பண்ணாம இருந்திருக்கலாம். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏதோ இப்ப சூத்திரங்க கையில மாட்டியிருக்கு சப்ஜெக்ட். அடிச்சு தூள் கிளப்புறாய்ங்க. (இவிகள்ளயும் நம்மை மாதிரி அரைகுறைங்க உண்டுதான் இல்லேங்கல. ஆனா இவிக எதையும் மறைக்கிறதில்ல - போட்டு உடைச்சுர்ராய்ங்க)


சீக்ரெட் மெயின்டெய்ன் பண்றதுல ஒரு சிக்கல் என்னடான்னா சனம் கொஞ்ச நாள்
( வருசம்)  ஜொள்ளு விட்டு பார்த்துட்டு "போடாங்கோத்தா"ன்னிட்டு வேற வேலை பார்க்க போயிருவாய்ங்க. (அப்படித்தான் ஆயிருச்சு - ஏதாச்சும் தேவை ஏற்பட்டா மட்டும் வேண்டா வெறுப்பா வந்து ஒடனே போயிருவாய்ங்க.

மேலும் சப்ஜெக்ட்ல ஜோசியருக்கு உள்ள  சிக்கல் என்ன.. அவர் எந்த அளவு ரிஸ்க் எடுத்து பலன் சொல்றாரு, அது நடக்காம போக எத்தீனி சான்ஸ் இருக்குங்கற விஷயத்தையெல்லாம் க்ளையண்டுக்கிட்ட பகிர்ந்துக்க முடியாது.

உங்க கடந்த காலமும் எதிர்காலமும் ஒரே ரூபா நோட்டோட ரெண்டு துண்டு மாதிரி
உங்க கடந்த காலம்  என்னனு உங்களுக்கு  தெரியும், எதிர் காலம் என்னனு ஜோசியருக்கு மசமசனு தெரியும்.

ரெண்டு துண்டையும் ஒன்னு சேர்த்தாதான் ரெண்டு பேருக்கும் ஒரு ஐடியா வரும்.
உதாரணமா : ஒரு ஜாதகம். அதுல 7ல சனியிருக்காரு.  ஜோசியரு "உங்களுக்கு  திருமணத்துல தாமதம் அ திருமண வாழ்க்கைல சிக்கல் இருக்கனுமே"ன்னு மென்னு விழுங்குவார்.

நீங்க ஒரு ஃப்ரெண்ட் ஆர் எ ஃபோ மாதிரியான நண்பரோட போயிருப்பிங்க அவர் முன்னாடி உண்மைய சொல்ல முடியாது.  "அ அ அதெல்லாம் ஒன்னுமில்லை சாமி. கண்ணாலமெல்லாம் ஆயிருச்சு .. ஒன்னும் பிரச்சினையில்லை" ன்னு சொல்ட்டிங்கனு வைங்க ஜோசியர் பேதியாயிருவாரு.

என்னங்கடா இது டேட் ஆஃப் பர்த் தப்பா , ஜாதகன் எழுதினது தப்பானு குழம்பி போயி சனியை அம்போனு விட்டுருவாரு..

அதனால மொத கண்டிஷன் என்னடான்னா ஜோசியம் பார்க்க தனியா போங்க.  எந்த ஜோசியர் டாக்டர் மாதிரி ஒரு சமயத்துல ஒரு பேஷண்டை மட்டும் கூப்டு கன்சல்ட் பண்றாரோ அவர் கிட்டே மட்டும் போங்க.

ஜோசியருக்கு பணம் கொடுத்து ஹையர் பண்ணது எதுக்கு? உங்க எதிர்காலத்தை ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சுக்கத்தேன். ஆனால் நிறைய பேரு ஜோசியரை டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. எனக்கு எத்தினி பசங்க சொல்லு? ( ஏன் ஒனக்கு தெரியாதா வாத்யாரே)

நீங்க கேட்கிற ஒரு கேள்விக்கு  ஜெனூனா பதில் சொல்ல ஜோசியர் மண்டைய  உடைச்சுக்கனும். நீங்க கேட்கிற கேள்வி எந்த பாவம் தொடர்பானது, எந்த கிரகம் தொடர்பானது, அவர் எங்கே இருக்காரு,லக்னாத் சுபரா பாபரா? அங்கே அவரோட பலம் என்ன? ங்கறதையெல்லாம் அவர் பார்க்கனும்.ஜஸ்ட்  கிரக பலம்ங்கற கான்செப்ட்லயே மொத்தம் 6 வகை இருக்கு. இதுவல்லாது அவரோட சேர்ந்த கிரகம் எது ? அது சுபனா அசுபனா , மறுபடி அவரோட பலம் என்ன?  இப்படி எல்லாத்தயும் பார்த்து கட்டக்கடைசியா பாவ சக்கரம்,  அஷ்டவர்க பரல்களை பார்த்து பதில் சொல்லனும். சொம்மா பூம் பூம் மாடு மாதிரி தலைய ஆட்டறதா இருந்தா ஆயிரம் கேள்விக்கு பதில் சொல்லலாம்.

உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை ஜோசியர் மூலம் தெரிஞ்சுக்க ஒரு கேள்வியை வீணாக்கனுமா என்ன? எனவே உங்க கேள்விகள் எதிர்காலம் தொடர்பானதா இருந்தா நல்லது. ( ஜோசியரோட ஸ்ட்ரெய்ன்  உங்களுக்கு  லாபமா அமையும் )


இந்த நேரத்துல ஜோசியர்களுக்கு ஒரு டிப். சனம் இப்படி கேள்வி கேட்டு நோகடிக்காம இருக்க மொதல்லயே அந்த ஜாதகத்துல உள்ள முக்கியமான கிரக நிலைகளை வச்சு ஒரு அஞ்சு பாய்ண்ட் எடுத்து  விடுங்க. ( உ.ம்: லக்னாதிபதியே மொக்கையாறது, சனி,செவ் தொடர்பு, செவ் தோசம்,சர்ப்ப தோசம், லக்னத்துல அஸ்தங்கத கிரகம் இருக்கிறது)

இதனால வந்தவர் நல்லாவே இம்ப்ரெஸ் ஆறதோட  "இன்னாங்கடா இது நடந்ததையே  சொல்றாரு நடக்கப்போறதை எப்போ சொல்வாருனு டென்ஷன் ஆயிருவாரு.

இதுல ஜோசியருக்கும் லாபம் இருக்கு, குறிப்பிட்ட ஜாதகத்துல எந்த கிரகம் எந்த அளவுக்கு வேலை செய்திருக்குனு ஒரு ஐடியா வந்துரும்.

நீங்க தேடிப்போற ஜோசியரு என்ன முறைல பார்ப்பாருனு மொதல்ல தெரிஞ்சுக்கங்க. ஜாதகமா ஓகே. ஜாதகம்+ நியூமராலஜியா ஓகே , ஜாதகம் + நேமாலஜியா ஓகே. அல்லது பாம் ஹிஸ்டரியா( கை ரேகை) ஓகே.

கைரேகை பார்ட்டின்னா  நிறைய உபகரணம்லாம் வச்சிருக்கனும் நேக்ட் ஐல பார்த்தா ஒரு ம.....ரும் தெரியாது. பொடி தடவி ப்ரிண்ட் எடுத்து , ரேகையோட பாதையில குண்டூரி குத்தி ( பேப்பர்ல பாஸ்) கயிறு கட்டி ,ஸ்கேல்ல அளந்து பூதக்கண்ணாடி வச்சு பார்த்தா ஒரு குன்ஸா சொல்லலாம் ( பலன் நடக்கும் காலத்தை)  கைரேகைல என்னடா தலைவலின்னா என்ன நடக்கும்னு சொல்லிரலாம் எப்போ நடக்கும்னு சொல்றது கொஞ்சம் கஷ்டம்.

ஆனால் கிரகபலங்களை கைரேகைய வச்சு கண்டுக்கறது ரெம்ப ஈஸி. ஜோசியத்துல ஒரு கிரகத்தோட பலத்தை நிர்ணயிக்க 116 விதிகள் இருக்கும். ஆனால் கடைசி வரை குழப்பியடிக்கும். கைரேகைல ச்சோ சிம்பிள்.

மேலே சொன்னதையெல்லாம் விட்டுட்டு ஆரூடம் சொல்றார்,  முகத்தை பார்த்து சொல்றாரு, கை  கட்டைவிரல் ரேகைய வச்சு சொல்றார், மச்சத்த வச்சி சொல்றாரு, பாதரேகைய வச்சு சொல்றாருங்கறதெல்லாம் சந்தேகாஸ்பதமான கேஸுங்க.
(இதுலயும் ஜெனூன் பார்ட்டீஸ் இருக்காய்ங்க. ஆனால் ரேரஸ்ட் ஆஃப் தி ரேர்)

ஆரூடம்னா என்ன?
நீங்க ஜோசியர்கிட்ட போன சமயம் என்ன லக்னம் ஓடுதோ அதையே உங்க ஜன்ம லக்னமா கருதி பலன் சொல்றது ஆரூடம்.

ஆரூடங்கறது எப்போ பார்க்கனும்?

ஜாதகம் இல்லாத சமயம், டேட் ஆஃப் பர்த் தெரியாத சமயம், ஒரு ஆத்திரம் அவசரம் ஆபத்து, எதுனா திருடு போறது, யாராச்சும் கோச்சுட்டு பூட்றது மாதிரி மேட்டர்ல 24 ஹவர்ஸ் அவெய்லபிளா இருக்கிற ஜோசியர்கிட்டே எதிர்பாராம போயி ஆரூடம் கேட்டு அவர் சொன்னா ஒரு லாஜிக் உண்டு. அதை விட்டுட்டு ஒர்க்கிங் டேஸ் ஒர்க்கிங் ஹவர்ஸ், லஞ்ச் அவர், இத்யாதியெல்லாம் ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டு ப்ரியர் அப்பாயிண்ட்மென்டோட சந்திக்கறச்ச ஆரூடம் பார்த்தா வேலைக்காகுமா?

நம்ம லோக்கல் டான் ஒருத்தர் பிரபல தெலுங்கு தினசரில ராசிபலன் எழுதற பார்ட்டிக்கிட்டே ஜோசியம் கேட்க போனாரு. அவரு அசால்ட்டா இவரு போன நேரத்தை கம்ப்யூட்டர்ல தட்டி ஆரூடம் சொல்லி அனுப்பிட்டாரு. ஃபீஸ் எவ்ளோங்கறிங்க ஜஸ்ட் ரூ.10,000 தான்.


சாமுத்ரிகம்:
இதனோட அடிப்படை லக்னம்,லக்னபலத்தை கொண்டு, ஏழாம் பாவம்,ஏழாம் பாவத்தோட பலம் அ லக்னத்தை பார்க்கக்கூடிய கிரகங்களோட பலத்தை வச்சுத்தான் உங்க அனாட்டமி செட் ஆகும். இந்த அடிப்படையிலதான் சாமுத்ரிகம் சொல்றாய்ங்க.

ஆனா அனுபவத்துல பார்க்கும்போது மேற்சொன்ன 1,7 லக்னத்தை பார்க்கிற கிரகம்லாம் உங்க உடலை மட்டும் பாதிக்கும்னு சொல்ல முடியாது. உங்க மைண்டை பாதிக்கலாம். உங்க மனைவிய பாதிக்கலாம். அதானால சாமுத்ரிகம்லாம் அரை கிணறு

மச்ச சாஸ்திரம்:
இது ராகு,கேதுக்களை வச்சி எழுந்த சாஸ்திரம். மத்த கிரகங்களோட இம்பாக்டை எப்படி சொல்வாய்ங்க?

( இன்னம் நிறைய மேட்டர் இருக்குங்கண்ணா அதையெல்லாம் நாளைக்கு பார்ப்போமா?)

1 comment:

perumal shivan said...

anne entha pathivula etharthamana visangala etharthama solli pinnittinga ! unmaiyileye vayiru valikka siriththen !

kurippa enakku eththana pasanga sollu paakkalam ?

mikka nandri !

s.p