அண்ணே வணக்கம்ணே,
சூப்பர் ஜோதிடராக டிப்ஸ்ங்கற இந்த தொடரோட மொத அத்யாயம் ரெம்ப மொக்கையா போச்சுன்னுட்டு ரெண்டாவது சாப்டர்ல டிப்ஸ் மழையா பொழிஞ்சாச்சு.
தானிக்கி தீனிக்கி சரிபோயிந்தி. இப்பம் இன்னம் சில டிப்ஸ் பார்த்துட்டு நின்னு நிதானமா ரோசிப்பம்
1.லக்னத்தை நெல்லா ஸ்கேன் பண்ணிக்கனும். ஏன்னா இது ஜாதகரை காட்டற இடம். லக்னத்துல ஆரு நின்னா? ஆரெல்லாம் பார்க்கிறான்னு நிதானமா நோட் பண்ணிக்கனும். குரு பார்த்தா கோடி புண்ணியம் அது இதுன்னு ஜல்லியடிக்காம நிறுத்தி நிதானமா பார்க்கனும்.
இங்கே சுபர்/அசுபர்ங்கற ப்ரஸ்தாவனை வந்தே தீரும். நைசர்கிக சுபத்வ பாபத்வத்தை கணக்குலயே வச்சுக்காதிங்க. லக்னாத் சுபத்வ பாபத்வம் தான் முக்கியம்.
குரு நைசர்கிக சுபர். ஆனால் இவரு ரிஷபலக்னத்துக்கு அஷ்டமாதிபதி. குரு லக்னத்தை பார்த்தா என்ன ஆகும்?
சனி நைசர்கிக பாவி . ஆனா மகரத்துக்கு ? லக்னாதிபதியே இவர் தான் இவர் லக்னத்தை பார்த்தா நல்லதுதானே. புலி குரூர மிருகமா இருந்தாலும் தன் குட்டிக்கு அது தாய் தானே.Read More
No comments:
Post a Comment