1.வெளித்தோற்றத்தில் அக்கறை -24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப்:
ஒரு பெண்......... பாவம் ஏதோ சின்ன ஹெல்த் ப்ராப்ளத்துக்கு இருபத்து அஞ்சு பைசா மாத்திரை போட்டுக்கிட்ட பாவத்துக்கு என்னா கதியாச்சுன்னு ஜூ.வில போட்டிருந்தான் .கதி கலங்கி போச்சு.
ஒரு நேரம் முடிஞ்சு இன்னொரு நேரம் ஆரம்பிக்கிறச்ச இந்த நிமிசத்துக்கும் அடுத்த நிமிசத்துக்கும் லிங்க் கட்டாயிருது. என்னா வேணம்னா நடக்கலாம். மரணம் உட்பட. இந்த வாழ்க்கைங்கற நாடகமே டிவி சீரியல் மாதிரி படக்குனு கழட்டிவிட்டுட்டு இவருக்கு பதில் இவருன்னு வாழ்க்கை டைட்டில் கார்டு போட்டுருது.
காலகதி அறிந்த ஒரு பார்ட்டி வெளித்தோற்றத்துல அளவில்லாத அக்கறை காட்டறாருன்னா அவர் கோள்களையும் அவற்றின் சஞ்சாரத்தையும்,அவற்றின் பலா பலனையும் முழுக்க நம்பலைனு அர்த்தம்.
சாமானிய சனம் ரொட்டீனுக்கு அலையுதுன்னா அது வேற கதை .அவிகளுக்கு விவரம் போதாது. மேட்டர் தெரியாது.
செருப்புக்குள்ள காலை நுழைப்பான் காது அறுந்திருக்கும். ஒடனே நோயாளி பொஞ்சாதிய தாலியறுத்து ஸ்லாப் மேல இருந்து ஷூ எடுக்க சொல்லி அதுக்கு பாலிஷ் போட்டு போட்டுக்கிட்டு போவான். ஒரு விபத்து நடக்கும் -வேலை போகும் - தலை போகும் -நெஜமாலுமே அவன் பொஞ்சாதி தாலி அறுந்துரும்.
ஒனக்கு செருப்பு போடவே போதாத காலத்துல ஷூ போட்டா கிரகம் ஒத்துக்கிடுமா என்ன? ஒரு நாள் கூட மிஸ்ஸானதில்லை காலைல 5 மணிக்கு டாண்ணு எந்திரிச்சு , வாய் கொப்புளிச்சு , கக்கா போயிட்டு வாக்கிங் .. என்று ஆரம்பிப்பவர்களை பார்த்தா பரிதாபப்படுங்க. அவரோட ஜாதகத்துல உள்ள 9 கிரகங்களோட பலமும் அவரோட ரொட்டீனை மெயின்டெய்ன் பண்றதுலயே சரியாபோச்சு.
மாறாதது மாற்றம் ஒன்றே என்பது. ஜோதிடத்தின் சாரம். சந்திரன் 6 மணி நேரத்துக்கொரு தாட்டி பாதம் மாறிர்ராரு. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் லக்னம் மாறிடும். சைக்காலஜிப்படி கூட மனுசனுக்கு 4 நிமிசத்துக்கொருதரம் லேசா மூட் மாறுமாம். 2 மணி நேரத்துக்கொருதரம் அடியோட மாறுமாம்.
உண்மை நிலை இப்படியிருக்க பார்ட்டி 24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப் தர்ராருன்னா அவருக்கே கோள்களின் சுழற்சியின் மீது நம்பிக்கையில்லை என்று அர்த்தம். தான் முழுக்க நம்பாத மேட்டரை ஒருத்தன் எதிராளிக்கு சொல்றான்னா அந்த பேச்சுல அவனோட வில் கலந்திருக்காது. அது வாய்ப்பாட்டு.ஆன்மாவின் ராகமல்ல.
2.காசே தான் கடவுளடா என்ற நினைப்பு:
சனம் பணத்துக்கு அலையுதுன்னா அதுக்கு பல காரணம் இருக்கு.(ஒரே உயிரில் ஆரம்பித்து -பல்லுயிராய் பிரிந்து - ஓருயிராக மாற உடலே தடை என்ற பிரமையில் -கொலை தற்கொலை என்ற எண்ணத்தின் உந்துதலில் - முடியாதபோது செக்ஸ் -அதுவும் முடியாதபோது பணம் என்று கொன்ற படி கொல்லப்பட்ட படி வாழறாய்ங்க. இதை புரிஞ்சிக்கிடலாம். ஆனா நாளும் கோளும் அறிஞ்ச ஜோசியருக்கு வாழ்க்கையின் நிலையாமை அப்பட்டமா புரிஞ்சு போய் ,டர்ரடிச்சு கிடக்கனும். அப்படி டர்ரடிச்சு கிடக்கறச்சதான் புதிய கதவுகள் திறக்கும். நெஜமாவே காற்றுவரும்.
அடங்கொய்யால பல்லுயிரா பிரிஞ்சாலும் நாமெல்லாம் ஒரே உயிரய்யா, செல்ஃபோன்ஸ் ஆயிரம் பிராண்டுல இருந்தாலும், சர்வீஸ் ப்ரொவைடர் வேறயா இருந்தாலும் , சேட்டிலைட் ஒன்னுதான். நாமெல்லாம் எங்கய்யா பிரிஞ்சோம். பிணைஞ்சுதான் கிடக்கோம். அகந்தையின் காரணமா அதை புரியாமகிடக்கோம்னு புரிஞ்சிரனும்.
இந்த பிணைப்பை உணர்ந்தவனுக்கு சேரனுங்கற துடிப்பில்லை - அதுக்காக கொல்லனும் -கொல்லப்படனுங்கற அவசியம் இல்லை. அதுக்கான ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸையோ பணத்தையோ தேடிப்போகவேண்டிய அவசியமுமில்லை.
மேலும் ஒவ்வொரு ஜாதகம் ,ஒவ்வொரு ஜாதகரும் தன் ஆன்ம சக்தியை உறிஞ்சறதை அவரால உணரமுடிஞ்சுட்டா சாக்கு போக்கு சொல்லி தப்பத்தான் பார்க்கனுமே தவிர காசு காசுனு அலைய முடியாது.
அட்லீஸ்ட் அடப்போங்கடா நீங்களும் உங்க பணமும்.. நேரம்தாண்டா முக்கியம்ங்கற எண்ணம் அவருக்குள்ள பலமா இருக்கனும். அதை விட்டுட்டு அவரு காசை பார்க்கிறாருன்னா அவருக்கு நாளோ கோளோ முக்கியமில்லைன்னுதானே அர்த்தம். தானே நம்பாத ஒன்னை நம்பினதா பம்மாத்து பண்ற அந்தாளோட வாக்கு பலிக்குங்கறிங்களா?
3.பாசிட்டிவ் அப்ரோச் - மார்க்கெட்டிங் உத்திகள்:
கடந்த பாய்ண்டுக்கான விவரணையத்தான் இன்னொரு தாட்டி சொல்லனும். உண்மையான ஜோதிடன் "ஆளை விடுங்கப்பா"ங்கற மூட்ல தான் இருப்பான். வந்தவனை கழட்டி விடத்தான் பார்ப்பான். அதை விட்டுட்டு ஜாதகத்துல உள்ள மைனஸ் பாய்ண்டையெல்லாம் பூசி மெழுகிட்டு அதெல்லாம் ஒன்னும் பண்ணாது கோவில்ல விளக்கு போடுங்க கணக்கா ஜல்லியடிக்கிறான்னா என்ன அர்த்தம்?
தாளி தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டுபிடிச்சாச்சு. எல்லா கோவில்லயும் பல்புதேன் எரியுது. விளக்குங்கறது கர்பகிருகத்துல ஒன்னோ ரெண்டோ தான் இருக்கு. ஊர் உலகத்துல உள்ளவன் எல்லாம் விளக்கு போட ஆரம்பிச்சா எண்ணைய எங்கன டெப்பாசிட் பண்ணி வைக்கிறதாம்.
மார்க்கெட்டிங் எங்க ஊர்ல ஒரு ஜோசியர் 10 நாளைக்கு மிஞ்சி பலனே சொல்ல மாட்டார். அதுவும் பொத்தாம் பொதுவா இருக்கும். (கஷ்டமோ நஷ்டமோ நடக்கும்/ புதுசா ,நல்லதா எதையாச்சும் செய்விங்க) அதுக்கப்பாறம் என்ன நோண்டினாலும் ஒரு வார்த்தை பெயராது. 11 ஆவது நாள் மறுபடி அவரை போய் பார்க்கவேண்டியதுதேன்.
சிலர் எம்.எல்.எம் மாதிரி ஒருத்தன் மாட்டினா அவனை குழையடிச்சு அவனோட டிபபர்ட்மென்டையே கவுக்க பார்ப்பாய்ங்க. ஒன்னு பலன் சொல்றதால இவிக என்ன இழக்கறாய்ங்கனு தெரிஞ்சிருக்காது அல்லது இவிகளுக்கு இழப்புங்கறதே இருக்காது. ( சூட்சுமமா ரோசிச்சு புரிஞ்சிக்கிடனுங்கோ)
4.தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்:
ஜோதிடத்துக்கு காரகன் புதன். ஜாதகத்துல புத பலம் இல்லேன்னா தான் தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்லாம் வரும். ( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல புதன் பாதி உயிரோட இருந்து இப்படி வியாதிகளையும் கொடுத்து அப்படி பாண்டித்யத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தே கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)
5.ஒழுங்கற்ற பல் , கீச்சுக்குரல் ,திக்குவாய்,பொய் பித்தலாட்டம் -சொந்த ஃபேமிலிலயே வெட்ட்ப்பழி குத்துப்பழி:
ஜாதகத்துல ரெண்டாவதுபாவம் தான் வாக் பலிதத்தை காட்டுது. ரெண்டாமிடம் கெட்டாத்தான் மேற்சொன்ன தீயபலன் எல்லாம் ஏற்படும்.( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல தன பாவமும், தனபாவாதிபதியும் பாதி உயிரோட இருந்து இப்படிப்பட்ட பிரச்சினைகள் + வியாதிகளையும் கொடுத்து அப்படி வாக்பலிதத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)
இன்னம் ஒரு 9 பாய்ண்ட் இருக்குங்கண்ணா அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.
3 comments:
http://adrasaka.blogspot.com/2011/02/blog-post_22.html
வினோத் அவர்களே,
பார்த்தேன். என் கருத்தையும் தெரிவிச்சிருக்கேன்.
சுட்டிக்கு நன்றி.
Post a Comment