'>
Showing posts with label அம்மன். Show all posts
Showing posts with label அம்மன். Show all posts

Tuesday, January 24, 2012

அவன்-அவள்-அது : 22


அண்ணே வணக்கம்ணே !

நம்ம சாக்தேய அனுபவங்களை மீண்டும் தொடரப்போறதா சொல்லியிருந்தேன்.( கணக்குக்கு இது 22 ஆவது சாப்டர்). இதுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தேன்.( ஜோதிடம் 360)

ஆத்தா தலைவிரி கோலமா சூலத்தை தூக்கிக்கிட்டு பி.டி உஷா ,ஷைனி ஆபிரகாம் கணக்கா ஓடிவர்ரதை கற்பனை பண்ணா நமக்கும் கொஞ்சம் போல உணர்ச்சி வருது.இல்லேங்கலை.ஆனால் நம்மை பொருத்தவரை அவள் சத்ய ரூபிணி,தர்ம ரூபிணி.

நாம சத்தியத்தை காத்திருந்தா - தருமத்தை பின்பற்றி நடந்தா அவள் பாட்டுக்கு விஜய்கிட்டே ஆட்டோகிராஃப் கேட்க துரத்தற டீன் ஏஜ் பெண் மாதிரி நம்மை ஃபாலோ பண்ணிக்குவாங்கறது நம்ம புரிதல்.

எத்தனையோ தியான முயற்சிகள் - ஜபங்களில் ஏற்படாத உணர்ச்சி ஒரு உதவாக்கரை மசாலா படம் பார்க்கிறச்ச ஏற்பட்டுது. குண்டலி விலைவாசி மாதிரி சர்ருனு ஏறி தலையில குடை ராட்டினம் கணக்கா சுத்துச்சு.

நீங்க தமிழ்ல அம்மன்ங்கற பேர்ல பார்த்திருப்பிங்க. தெலுங்குல அம்மோரு. க்ளைமாக்ஸ் பாட்டு ஃப்ளோர் டிக்கெட் தாய்குலத்தை டார்கெட் பண்ணி போட்ட பாட்டுதேன். ஆனால் அதுல ஒரே வரி.. நம்மை பாடாய் படுத்திருச்சு.

ஈரோயினை வில்லன் ஈரோவை சீரோவாக்கி ரேப்ப ட்ரை பண்றாரு.அப்பம் ஈரோயின் ஈரோவையும் தன் கற்பையும் காப்பாத்திக்க ஆத்தாவை கூப்பிடறாள்.அதேன் சிச்சுவேஷன்.

அதுல ஃப்ளோர் டிக்கெட் சனத்தை உசுப்பேத்தறாப்ல எத்தனையோ வரிகள். ஆனால் நம்மை பரவச நிலைக்கு கொண்டு போன வரிகள் " சண்டிவை ,துர்கவை"னுட்டு ஆரம்பமாகுது அந்த சரணத்தோட கடைசி வரியா " "சத்யமேவஜெயதேனனி சாட்டிம்பக்க ரா"ன்னுட்டு வரும்.

அந்த சரணம் என்னவோ ரொட்டீனாத்தான் ஆரம்பமாகுது. அந்த பில்டப் எல்லாம் நாம அறிஞ்சதுதேன். நம்ம பாடியோ -மைண்டோ பெருசா ரெஸ்பாண்ட் ஆகல்லை. ஆனால் அந்த கடைசி வரி இருக்கே.அங்கனதான் மண்டைக்குள்ள ஒரு "பிக் பாங்கே" நடந்தது.

அந்த வரிக்கு அருத்தம் " சத்தியம் தான் வெல்லும்னு இந்த சகத்துக்கு அறிவிக்க வா"


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.

என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.

ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.

கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.

1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி "ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது. கொய்யால.. நான் நாறிட்டா எனக்கு பின்னாடி எவனாச்சும் ஆத்தா - சீத்தான்னா சனம் நக்கலடிச்சே அவனை நோகடிச்சுருவாய்ங்க. நான் நாற கூடாதுங்கற வீம்பு வந்துருச்சு.

ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமயத்துல ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் -சமூகத்தின் பாராமுகமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு. அதற்கு முன்பு இருந்த க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.

என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன். அவன் எப்படியா கொத்த லக்காடின்னு கடந்த பதிவுல எழுதியிருந்தேன்.

ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

ஆரம்பத்துல அவனுக்கு சம்பளம் வர்ரச்ச நமக்கு சம்பளம் கொடுத்துருவான்னு ஒரு பிரமை. மாசத்துல மொதல் வாரம் வருவான். என்னமோ ஸ்கூப் கிடைச்சுட்டாப்ல அவசர அவசரமா புறப்படுவான். நாம பின் பளுவு.

நேர எங்க போவாங்கறிங்க? பார் அண்ட் ரெஸ்டாரண்ட் தேன். போனதும் அவனுக்கு ஆர்டர் பண்ணிக்குவான். நாம வாய்ல விரல் போட்டு பார்த்துக்கிட்டிருப்பன். குடிச்சு முடிச்சுட்டு மிச்சம் மீதி சேவரீஸை பார்சல் பண்ணி கொண்டுவரச்சொல்லி கோவில் பிரசாதம் கணக்கா நம்ம கிட்டே கொடுத்து "ஸவாமி ! இதை உங்க டாட்டருக்கு கொடுங்க"ம்பான்.

நாம அறிமுகம் செய்த யூனியன் சேர்மன் கிட்டே ரூ.5,000 க்கு இன்டென்ட் போட்டான். அவரு ரூ.2000 கொடுத்துட்டு நமக்கு இன்ஃபார்ம் பண்ணாரு. நம்மாளு எம்மாம் பெரிய லக்காடின்னு சுருங்க சொல்லி.. போனது போவட்டும். இனி கொடுக்காதேன்னேன்.

இப்படி ஒன்னு ரெண்டில்லை. ஆயிரம்.

சில மாசங்கள்ள பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து மேற்படி நிருபன். என‌க்கும் அவனுக்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து அதே ஃபேக்ஸ் நெம்பருக்கு போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு "முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ நிருபன் நான்+ பிரபா மேனேஜர்+ விளம்பர மேனேஜர் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.


அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் அந்த நிருபனுக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

மேற்படி நிருபன் என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.

"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன். ஒவ்வொரு எலக்சன்லயும் அந்தாளுக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். .சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். மேனேஜர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார்..

நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம். சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாஷ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 60 வயசு.. அப்போ 52 ஆ) .

தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு "ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா" என்று கேட்டார். உடனே முன்னேறி.."வந்திருக்கம் சார்!" என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது நிக் நேமை குறிப்பிட்டு "அவன் தானே" என்றார்.

அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் நிக் நேம் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.

" கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் ஸ்டேஷனுக்கு வர்ரது அவசியம்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்"

இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து."அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?""ஹெட் கான்ஸ்டபிள் சார்"உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார்.

" உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது" அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் நிருபன் திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அவன் திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது

இப்பம் இங்கே அழுத்தி மேற்படி பாடல் வரிகளை கேட்டுப்பாருங்க. ரெண்டாவது சரணம் துர்கவை ,சண்டிவைன்னு ஆரம்பமாகும்போது அலார்ட் ஆயிக்கங்க. கடைசி வரியில அந்த பரவச நிலை உங்களுக்கும் ஏற்பட்டுதுன்னா உங்களுக்கும் சத்தியம் குறித்த அனுபவம் இருக்குன்னு அருத்தம்.

Monday, January 23, 2012

அம்மனின் வாகனம் ஆடு


அண்ணே வணக்கம்ணே !

பக்த சனங்க சைக்காலஜி என்னன்னா இவியளுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் சாமிய கண்ணில்லையா, கையில்லயா காலில்லியான்னு ஏகத்துக்கும் கிராஸ் பண்ணுவாய்ங்க.ஆனால் இவிகளுக்கு நல்லது நடக்கும் போது டீல்ல விட்டுருவாய்ங்க.

அது என்னமோ நாம தேன் விசித்திரமான கேரக்டராச்சே. பிரச்சினைன்னு வரும்போது "மட்டும்" ஜேஜிக்கு சோப்பு போடறது நமக்கு பிடிக்காது. சனங்களையும் இப்படித்தேன் டீல் பண்றோம். சோத்துக்கில்லாத நாள்ளயே ஆறு மாசத்துக்கு ஒருக்கா வசதி வந்தாலும் மொதல்ல ஃபுல் டாக் டைம் போட்டுக்கிட்டு "ஒன்னுமில்லை பாஸ்.. ச்சொம்மாதேன்.. டச்ல இருக்கனுமில்லையா"ன்னு பேசற கேஸு நாம.ஜேஜிகிட்டயா வேற மாதிரி நடப்போம்.

நம்ம அம்பறாத்துணியில கச்சாமுச்சான்னு அம்புகள் இருக்கு.பிரச்சினைன்னு வரும்போது அல்லாத்தையும் ஒன்னு பின்னாடி ஒன்னு விட்டுட்டு ..அம்புகள் தீர்ந்த பின்னாடி அம்பறாத்துணியை வீசி ,வில்லை எடுத்து வாத்யார் கணக்கா சுழற்றி அப்பயும் வேலைக்காகலின்னாதான் ஆத்தாளை கூப்டுவம். என்னதான் கேடு கெட்ட மன்ச ஜன்மம்னாலும் பெரியார் ,என்.டி.ஆர் ஊட்டிவிட்ட செல்ஃப் ரெஸ்பெக்ட்னு ஒன்னு இருக்கில்லை.

அப்பம்..ஆத்தாளும்.. சே பாவம் என்னைக்கும் கூப்டாத புள்ளை கூப்டுது. நெஜமாலுமே கிரிட்டிக்கல் போலன்னு பட்டுன்னு புலிமேலயோ ,சிங்கத்து மேலயோ ஏறி ஆஜராயிருவா. இந்த தாட்டி ஆட்டுமேல ஏறி வந்திருக்கா.read more

Thursday, September 29, 2011

நானுயர நாடுயரும்


பாட்டு கேட்டுத்தான்
எனக்கு வேட்டு வைக்கின்றாய்

வாவி வெட்டுகையில் பாறை வந்துற்றால்
வெடி வைத்து தகர்த்தற்போல்

செழுமை காரணத்தால் - லட்சியம் மறந்த நெஞ்சம்
பாறையாய் மாறுகையில்
கவியூற்று அடை பட
வேட்டு வைத்தல் முறை

இத்துணை கோடி மா(மை)ந்தர்
இவரில் நான் என்ன கொம்பனோ?

கரையும் நெஞ்சம் கண்டே இமயம் ஒத்ததென்று
குடிபுகுந்தாய் என் நெஞ்சம்

பனியிது பாறையாகிவிட்டால்
ஒரு நொடியேனும் தங்குவையோ

நீ தங்கி இருந்தாலன்றி என் நெஞ்சில் ஒளியேது?
என் பேச்சில் ஞானக்கிளியேது?

நெஞ்சை தகர்த்தே போட்டாலும் - நீ தங்கினால் போதுமடி எனில்
மங்கியதெல்லாம் துலங்கும்

சிவனார் உறவாலே மயான சயனம் விரும்பி
என் மனதை மயானமாக்க முனைந்தாலும் சம்மதமே

நீ தங்கி விடு - என்னை துலங்க விடு

கடமை எனக்குண்டு - கடமையின் பின்னொரு தேசம் தானுண்டு
நானுயர நாடுயரும் - தாய் நாட்டின் பீடுயரும்

வலசை போகாது - மனமிசை தொடர்ந்திடவே
எண்ணிய தாயுள்ளம் தனக்கேதான் தனயன் நானடிமை

யாது செய்ய திருவுளமோ?
என் வாழ்வும் இங்கோர் போர்க்களமோ?

சந்தை வாழ்விது சிந்தை தானறியும்
மந்தையிதனோடு மகவு நான் பயணித்தால்

மந்தையோடு நானும் வெட்டுண்டு சாகவேண்டும்

அகந்தை சூரியனே அஸ்தமித்த வேளையிது
அந்திப்பொழுதே போல் இருள் சூழும் நேரமிது

பிள்ளை மனமென்னும் சந்திரன் உதிக்கவில்லை -
தன் காலை பதிக்கவில்லை

மசமசப்பாய் தெரியுதடி எம்மை விழுங்கவரும் புலிக்கூட்டம்
மந்தை இதுவுக்கோ புல் மீது தான் நாட்டம்

வழி நடத்த போறாது
பழி சுமக்க கூடாது

வழி காட்டி ஒளி கூட்டு
வழி நடத்தும் வகையினிலே

விரித்த கடையிதனை கடைக்கண்ணால் நீ கண்டால்
பாடசாலையாகும்.
அபயம் நீ தந்தால் ஆயுத சாலையாகும்

ஏழ்மை எரிக்க களம் கண்டேன்
அதற்கே என்னை தின்னத்தந்தேன்

புடமிட்டது போன்றே துயனாக்கி
மாய உலகில் திரிய விட்டாய்

மருமம் யாவும் அறியவிட்டாய்
மடமை சுவர்கள் சரிய வைத்தாய்

புதையல் ஏதும் கிட்டவில்லை
புதை சேற்றினின்றே மீண்டிட்டேன்

ஓரிரு நாணயம் கண்ணில் பட்டு
புதையலின் இருப்பை உறுதி செய்ய
பயணம் தொடருது உனை நோக்கி

ஞானச்செல்வமதற்கே கன்னமிட்டு
கொள்ளையிடவே அனுமதிப்பாய்

பின் செல்வம் யாவும் பகிர்ந்தளிக்க பரமேசி நீயும்
வரம் தருவாய்

ஆடவர் பெண்டிர் யாவருமே
அக்கினிக்கிரையாய் ஆனபின்னே

ஆக்கிவைத்த விருந்தெல்லாம்
பகிர்ந்து என்ன லாபமடி
இதை பூட்டி வைத்தல் பாபமடி

என் படைப்புகள் யாவும் அச்சாகி
இணையம் என்ற தேரேறி

எண் திக்கும் பரவி ஈங்கிவர்க்கே புது
சன்னல் பலவும் திறந்திடனும்

மாடை வந்தால் மாற்றம் வரும்
என்றே நானும் காத்திருந்தேன்

காசு பணமே வந்த பின்னும்
மாற்றம் இல்லை என் வாழ்வில்

ஏனோ என் மேல் பகை கொண்டாய்
என் பாடு கண்டு நகைக்கின்றாய்

மாற்றம் காணாது திகைக்கின்றேன்
என் உன்மத்தம் பாட்டில் உரைக்கின்றேன்
மாற்றிடு மாற்றிடு இந்நிலையை
போற்றிடும் வையம் என் கலையை.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

Saturday, September 17, 2011

அம்மனுக்கும் வேசிக்கும் ஒற்றுமை


அம்மனுக்கும் ( நம்ம ஒக்காபிலரில ஆத்தா) வேசிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னன்னு சொல்றவுகளுக்கு என்ன கொடுக்கலாம்னு நீங்களே சொல்லுங்க. (ஆத்தா பல்பு கொடுத்துருவான்னு ஆருனா சொன்னா நம்பாதிங்க.

அதுசரி அனுபவஜோதிடத்துக்கும் வேசிக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக .சொல்றேன்.அதுக்கு இன்றைய ஆடியோ பதிவை கேட்டே ஆகனும். வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

Thursday, August 18, 2011

பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியம்


இந்த தொடர்ல பூஜ்ஜியத்துலருந்து புதுசா ஆரம்பிச்ச நமக்கு ஆத்தா எப்படி ஒரு ராஜ்ஜியத்தையே கொடுத்தாங்கற விஷயத்தை சுருக்கமாவாச்சும் சொல்லத்தான் போறேன். இது ஏதோ என் ஒருத்தனுக்கு கிடைச்ச அனுபவம்னு நினைக்காதிங்க. அவள் ஜகன் மாதா - ஜகத்ஜனனி - லோக மாதா அவளோட பார்வையில எல்லாரும் சமம்தான்.

அவள் பார்வையில போலி முருகேசன் கூட சமம் தான். அவரு இந்த மாதிரி போலி கமெண்ட் எல்லாம் போட்டு ஒரு அவுட்லெட்டை தேடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிருக்கும். அதனாலதேன் ஆத்தா அவருக்கு இப்படி ஒரு வடிகாலை ஏற்படுத்தி கொடுத்திருக்கா.

இந்த அவன் அவள் அது தொடரை படிச்சிக்கிட்டு வர்ரவுக என் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வச்சு நான் ஜெபிச்ச அதே மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிச்சா நான் பெற்ற அதே அனுபவங்கள் அதே அளவுக்கு அவிகளுக்கு கிடைக்காட்டாலும் அவிக சாதனைய பொறுத்து நிச்சயமா அவிக லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் வந்தே தீரும்னு உறுதி தர்ரேன்.

அந்த மந்திரம் கீழே: Read More

Wednesday, August 17, 2011

அவன் அவள் அது : 16


வாடகைப் பணம்கொடுக்க முடியாம அல்லாடினது - ஆத்தா கூட சமயத்துல உதவ மாட்டேங்கறாளேன்னு மனம் நொந்தது - ஆத்தா பட்டப்பகல்ல - சமய புரம் மாரியம்மனா காட்சி கொடுத்தது இத்யாதியை கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.

கண்ணாலமாறதுக்கு மிந்தியே ஆஃபீஸ், ஸ்கூல் ,ட்யுட்டோரியல்ஸ் இத்யாதிக்கு ரென்டட் பில்டிங்ல இருந்ததுண்டு - கண்ணாலத்துக்கப்பாறம் ஏவரேஜா வருசத்துக்கு ரெண்டு வீடு மாறினதும் உண்டு. இதை சொல்ல காரணம் அத்தீனி ஹவுஸ் ஓனரை பார்த்த அனுபவம் நமக்கிருக்குன்னு சொல்லத்தேன்.

ஆனால் இந்த பதிவுல சொல்லப்போற ஓனர் மாதிரி ஒரு ஓனரை அதுக்கு மிந்தியும் பார்க்கலை.அதுக்கப்பாறமும் பார்க்கலை. இந்த கேரக்டரை பற்றியும் அவனுக்கு ஆத்தா கொடுத்த ஷாக் பற்றியும்........ Read More

Tuesday, August 16, 2011

கில்மாவும் ஆன்மீகமும்


காமி கானி வாடு மோட்சகாமி காலேடு - இது தெலுங்கு பழமொழி. இதுக்கு " காமத்தை விரும்புபவனாய் இல்லாதவன் மோட்சத்தை விரும்புபவனாக முடியாதுன்னு அருத்தம். கில்மா ஒரு படப்பாடல்னா ஆன்மீகம் சூப்பர் ஹிட் இரவு காட்சி.

2000 டிசம்பர் 23 முதல் நாளிது வரையிலான என் ஆன்மீக அனுபவங்களை சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். அனுபவங்கள்னா இதுல கில்மாவும் அடக்கம் தானே.

அதை விட்டுட்டு எழுதினா இது எப்படி முழுமையான அனுபவமாகும். Read More

Saturday, August 13, 2011

வசிய மந்திரம்


ஆத்தாளை அடுத்த பிற்பாடு 2000 டிசம்பர் 23 முதல் ஏற்பட்ட என் ஆன்மீக அனுபவங்களை ஒன்னு விடாம சொல்லனுங்கற உத்தேசத்தோட தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். எந்த மேட்டரா இருந்தாலும் க்ளைமாக்ஸ் கண்ணுக்கு தெரியற வரைதேன் ப்ரிப்பரேஷ்ன்லாம். அதுக்கப்பாறம் காட்டடிதேன்.
எந்த விதமான முன் தயாரிப்பும் இல்லாம ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுருவம்.
Read More

Thursday, August 11, 2011

விளக்கை அணைச்சு..


அண்ணே வணக்கம்ணே !
விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற தலைப்புல ஒரு பதிவு போட்டது ஞா இருக்கலாம். அன்னாஹசாரே ஜோக் பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விளக்கை அணைக்க சொல்லியிருக்காரு.

இதெல்லாம் ச்சொம்மா ட்ரெய்லர் மாதிரிதான். இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ தெரியலை. 2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கறது நம்ம கணிப்பு Read More

Tuesday, August 9, 2011

கழுத்தளவு நீரில் மந்திர ஜெபம்


உதாரணமா கழுத்தளவு தண்ணியில ஜெபம் பண்றது. இதுல என்னா நடந்துரும்னு கேப்பிக. சொல்றேன். ஹ்யூமன் பாடியோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி. மின்சாரம் கடத்தும் திறனை கண்டக்டிவிட்டினு சொல்றாய்ங்க. மிக குறைந்த உஷ்ண நிலையில் இந்த கண்டக்டிவிட்டி அதிகரிக்கும்ங்கறது விஞ்ஞான உண்மை.

ஹ்யூமன் பாடில மிக குறைஞ்ச அளவு மின்சாரம் இருக்குங்கறது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம். மின்சாரத்தை நீள வாக்கில் ஓட விட்டா என்ன எஃபெக்ட் ? வட்டவடிவில் ஓடவிட்டால் என்ன எஃபெக்டுங்கறதை முன்னொரு பதிவில் சொன்னதா ஞா. Read More

Monday, August 8, 2011

அவன் அவள் அது : 11?


அண்ணே வணக்கம்ணே.. ஆத்தாவுக்கும் நமக்கும் எப்படி கனெக்சன் ஆச்சு - ஆத்தாளை நாம எப்படி அப்ரோச் பண்ணோம் -ஆத்தா நம்மை எப்படி அப்ரோச் பண்ணாள்?

நம்ம டீலிங் எப்படியிருந்தது -ஆத்தாவுக்கு நாம என்ன கொடுத்தோம் ஆத்தா நமக்கு என்னெல்லாம் கொடுத்தா கொடுத்துக்கிட்டிருக்காங்கறதை பத்தி ஒரு தொடர்பதிவு போட நினைச்சு ஆரம்பிச்சோம். அது ஏனோ எதுக்கோ எப்படியோ அப்படியே நின்னுப்போச்சு. ஆமை முட்டை வச்ச இடத்தை நினைச்சா அது பொரியுமாமே அதுமாதிரி ஆத்தா எங்கருந்தோ நம்மை ஆப்பரேட் பண்றாள். நாமளும் ஆடிக்கிட்டிருக்கோம்.

தொடரை எந்த லைன் அப்ல ஆரம்பிச்சோம்.எதுவரை வந்ததுனு கூட ஞா இல்லை. நாம என்ன வீக்லியில தொடரா எழுதறோம் சினாப்சிஸ் -வச்சுக்கிட்டு போன வாரம் என்ன எழுதினோம்னு பார்த்துக்கிட்டு எழுத .

பணம் காசு வர மந்திரம் கேட்டோம் - பீஜங்களின் தொகுப்பே தந்துட்டாய்ங்க. ஜெபிக்க ஆரம்பிச்சோம்.ஸ்தூலமா லெமன் - மஞ்ச தண்ணி (அப்பாறம் பட்டை லவுங்கம் சேர்ந்துக்கிச்சு)

உடுப்பி ஹோட்டல் சாப்பாடு கணக்கா இருக்கவேண்டிய சாப்பாட்ல தொடர்ந்து காரம் மஞ்ச தண்ணிய டேஸ்ட் பண்ணி பார்த்தா பயங்கர காரம். அப்பாறம் மஞ்ச தூள் ப்ராண்டை மாத்திட்டம்.

மஞ்ச தண்ணி வைக்க லேட்டானா ரத்த காயம் அ ருத்ர தாண்டவம். மேற்படி மந்திரத்துக்குரிய ஐ மீன் ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரிய அம்மன் பேரு புவனேஸ்வரி. முன் அனுமதியில்லாம இந்தம்மாவோட அந்தப்புரம் வ்ரை போய் தகவல் சொல்லும் அதிகாரம் படைச்சவுக ரெண்டு பேரு ஒருத்தர் ஆஞ்சனேயர். இன்னொருத்தர் கிளி முகம் கொண்ட ரிஷி (பேர் என்னங்கண்ணா? மறந்து போச்சு)

ஒரு நா ஒரு கிளி நம்ம போர்ஷனுக்குள்ள நுழைஞ்சுருச்சு.ஒரு 9 நாள் தங்கியிருந்துச்சு. நாம தியானம் பண்ணிக்கிட்டிருக்க ( ஐமீன் பீஜ ஜெபம்) பாம்பு வந்துருச்சு. எட்செட்ரா எல்லாம் சொல்லியிருப்பன்.

இந்த செனேரியோல நடந்த ஒரு சம்பவம் மட்டும் ரெம்ப த்ரில்லா இருக்கும். ஒரு இடைவெளிக்கப்புறம் இந்த தொடரை படிக்கிற உங்களுக்கும் ஒரு இன்வால்வ்மென்ட் வரும். Read More


Friday, July 29, 2011

ஆடி அ(ம்)மாவாசை ஸ்பெசல்


அண்ணே !
வணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.

வழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.

சில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.

ஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.

ஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா? தொட்டதை எழுதினேனா? படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.
Read More

Tuesday, May 17, 2011

அவ்ள் ஒரு " நவ" ரச நாடகம்

பெண்ணோட மாரை பத்தி எழுதாத கவிஞனே கிடையாது. நம்ம கலைஞர்  தாத்தா கூட " இரு பந்து ஆட ஒரு பந்து ஆடும் பாவையர்"னு எழுதியிருக்காரு.

"மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்"

"அது காயா ..இது பழமா கொஞ்சம் தொட்டுப்பார்க்கட்டுமா"

"சோளி கே பீச்சே க்யாஹை" Read More

Monday, May 16, 2011

அவன்-அவள்-அது: 13

நாலு நாள் கேம்ப் போய்ட்டு வீட்டுக்கு  வரிங்க. ஓட்டல்லயும்,மெஸ்லயும் தின்னு நாக்கே செத்துப்போன ஃபீலிங். அம்மாவை " ஏம்மா எதுனா சூடா செய்யேன்.."ங்கறிங்க.

உடனே அம்மா கேஸ் ஏஜென்ஸிக்கு ஃபோன் பண்ணி கேஸ் புக் பண்ணி - ஸ்டவ் வாங்கி - மார்க்கெட் போய் வந்து சமைக்கிறாய்ங்களா? Read More

Wednesday, May 4, 2011

அவன் அவள் அது :11

இங்கன என்னெல்லாம் பேர் இருக்குதோ அதெல்லாம் ஆத்தாளோட பேர் தேன். ஆனால் அனாமிகான்னும் ஒரு பேரை வச்சிருக்கா. பேர் இன்னா பேரு பேர்ல கீற அல்லா எழுத்துமே அவள் தான் ( பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா)

அல்லா பேரையும் ஜஸ்டிஃபை பண்ணிரலாம். அதென்னா உண்ணாமுலையம்மன். ஆனானப்பட்ட முருகனுக்கே தங்க கிண்ணத்துலதேன் ஏற்கெனவே கறந்த பாலை கொடுத்ததா கேள்வி. ஞான சம்பந்தருக்கும் இதே ஃபார்முலாதேன். Read More

Friday, April 29, 2011

அம்மை அவள் கையில்

ஆதி தேவன் அருள் வேட்டல்

எலி ஏறும் ஏந்தலே
புலி ஏறும் ஏந்திழையை
ஏற்றிப்பாடுதற்கே
போற்றி புகழுதற்கே

என் கனித்தமிழை கனிய விடு
கணிணியில் வடியவிடு
தனித்தமிழாய் தரணியெங்கும்
வலம் வர ஆணை கொடு

           -  நூல் -      

பற்றுச்செலவெல்லாம்
பண்ணிலே எழுதிட்டேன் - வாழ்வு
அற்ற குளம் ஆனாலும்
வற்றாதிருந்த தமிழ்
வற்றும்  நாளாச்சோ?

வான் வரை உயர்ந்திட்டு
வான் உறை தேவர் செவி
பற்றி இழுக்கும் தமிழ்
தரணியில் புதிராகி
புரியாது போனதென்றே
புவி மிசை  இறக்கி வைத்தேன்

அன்னையை அடுத்த பின்னே
அவள் எனில்
கருவாகி உருவாகி நடமாட
துவங்கிடவும்

அவள் கால் சலங்கை ஒலியதனால்
என்னில் துலங்கிட்ட
துரித மாற்றமெல்லாம்
தூய தமிழ் கொண்டே
கூறிட் துணிவு கொண்டேன்.

உரையில் சொல்லி வைத்தால்
பிறையெல்லாம் பிதற்றலாகும்
அகரம் அறியாத அறிவிலிகள்
தூற்றலாகும்

பண்ணில் இறுக்கி வைக்க
பண்டைத்தமிழ் ஆய்ந்த அறிஞரே அண்டிடுவர்
மறை பொருள் கண்டிடுவர்
பிறை மதி கொண்டோர்க்கும்
உட் பொருள் விண்டிடுவர்.

அம்மை அவள் கையில் பொம்மை என்றானேன் - தாய்
பசுவின் பின்னேகும் இளைய கன்றானேன்

மறுமைக்கு பாதையிட்டு பக்குவமாய் எனை நடத்தி -பின்
இம்மைக்கும் இடம் கொடுத்தாள் ட்

உமையெனை இமையெனவே காத்திட்டாள்
என்னுள் புதுமலராய் பூத்திட்டாள்

சினிமா மோகத்தில் சீமைக்கு பறந்தேகி
சீர் கெட்டு மீண்ட மகன்

உச்சியில் கை வைத்து
பிச்சியாய் கண் கலங்கி அன்னை ஒருத்தி ஆங்கே

மண் மகிமை உணர்த்துதற்போல்
மாதா அவள் எனக்கு தன் மகிமை உணர்த்திட்டாள்

அந்த மகன் ஏர் பிடித்து
விளை நிலத்தை உழுதாற்போல்

இந்த மகன் உள  நிலத்தில்
பீஜத்தை விதைத்திருந்தேன்

பொற்பதம் பிடித்த பின்னே
அற்புதமும் ஓர் அற்புதமோ?

நகரும் நகர் வாழும் நரரும் நகையாரோ நாளெல்லாம்.
பகரும் பதம் புரிந்தால் பகையாரோ பாரோரெல்லாம்

கண்ணார கண்டாலே கண்கட்டு என்றிடுவார்
வெறும் வாயாலே நான் சொல்ல ஏற்பரோ அவணியிலே

பெற்றதை நான் சொல்ல ஊற்றுகிறான் என்றிடுவார்
கற்றதை நான் சொல்ல சுற்றுகிறான் என்றிடுவார்

ஆரென்ன சொன்னாலும் தடையில்லை
அன்னையை அடுத்த பின்னே பின்னை ஒரு முடையில்லை


(தொடரும்)

Saturday, April 23, 2011

உஜிலா தேவியும் -உஜாலா சொட்டு நீலமும்

அண்ணே வணக்கம்ணே!

வம்பு வழக்கு வேணாம்னு ஒதுங்கி ஒதுங்கி போனாலும் 6 மாசத்துக்கு ஒன்னு வந்து மாட்டிக்குதுங்கண்ணா.

என்னவோ பெரியமன்ச தராவா கீதேனு அப்பப்போ பார்த்துக்கிட்டிருந்த
உஜிலா தேவி  யை உஜாலா சொட்டு நீலம் இல்லாமயே வெளுக்க முடிவு பண்ணிட்டன்.

மேற்படி   வலைப்பூவில் பா.ஜ.க வாசம் வீசுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டவன் நான். மேற்படி வலைப்பூ
//இன்றைய கிறிஸ்த்துவர்களில் 98 சதவீதம் பேர் இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை புரியாதவர்கள் அவர் சொற்படி நடக்காதர்கள் இன்று தங்களை கிறிஸ்த்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் மனிதர்கள் அவர் கூறியப்படி மட்டுமே வாழ்க்கை முறையை நடத்தி கொண்டிருந்தால் இன்யை உலகில் எந்த சிக்கலுமே இல்லாமல் இருந்திருக்கும்// என்கிறது .

இதே பத்தியில் ஏசு என்ற இடத்தில் இந்துக்டவுளருள் ஒருவர் பெயரையும் கிறிஸ்தவர்கள் என்ற இடத்தில் இந்துக்கள் என்ற வார்த்தையையும் போட்டு எழுத உஜிலா தேவிக்கு மனம் + தில் இருந்தால் பா.ஜ.க வாசம் என்ற குற்ற்ச்சாட்டை  வாபஸ் வாங்கிக்கொள்ள நான் தயார்.

வார்த்தைகளை மாற்றிப்போட்டு எழுத அவர் தயாரில்லை என்றால் என் குற்றச்சாட்டு அக்மார்க் உண்மை என்று அர்த்தம் 

பை தி பை அவன் அவள் அது தொடரை ஆவலுடன் படிக்கும் அந்த நானூறு பேரில் நீங்களும் ஒருவரானால் பத்தாம் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க

Friday, April 22, 2011

அவன்-அவள்-அது : 9

இந்த அவன்-அவள்-அது தொடரை படிச்சுட்டு சமைத்துப்பார் புஸ்தவம் மாதிரி ஆன்மீக முன்னேற்றத்துக்கான டூஸ் அண்ட் டோன்ட்ஸை பத்தி ஒரு பதிவு போட்டா என்னன்னு மஸ்தா பேரு கேட்டுக்கிட்டே இருக்காய்ங்க. (ஹி ஹி ஒரே ஒரு பார்ட்டிதேன்.அதுவும் ஒரே ஒரு தாட்டித்தேன்)

என்னை நான் ஆன்மீக விஞ்ஞானின்னெல்லாம் சொல்லிக்கிட்டு வரைஞ்சு தள்ள ஆரம்பிச்சா  அது கேணத்தனமாயிரும்.  நமக்கு நடந்ததெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடென்டல். தொடர்ந்து படிக்க

Thursday, April 21, 2011

அவன்-அவள்-அது:8

ஆத்தா நமக்கு கொடுத்த ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி பத்தி சொல்லிர்ரன்.பிள்ளை டாஸ்மாக்லயே குடியிருப்பான் ஆனா அம்மாக்காரி " ஊர் உலகத்துல எவன் குடிக்கலை.. ஏதோ எம் புள்ளை உடம்பு வலிக்கு கொஞ்சமா குடிப்பான் போல"ன்னுதான் சொல்வா.

புள்ளை கிட்டே  மட்டும் " டேய் பாவி கேட்கிறவுகளுக்கு பதில் சொல்ல முடியலடா .கண்ட நாயி உன்னை கண்ட படி பேச .பெத்தவயிறு பத்தி எரியுதுடா.. அந்த குடியை விட்டுத்தொலைக்கக்கூடாதாடா'னு புலம்புவாள்.Read More

Tuesday, April 19, 2011

கலைஞரை வீழ்த்தினா ‘ஜெ’வும் ஆத்தாதான். « Anubavajothidam.com

அண்ணே வணக்கம்ணே,
ஆத்தா எனக்குள்ள ஜனிச்சா, சித்தாடை கட்டி சலங்கை ஒலிக்க நடை போட்டா , ஜெட் கேட்டகிரி ரேஞ்சுல என்னை தொடர்ந்தாள்னு சொல்லியிருந்தேன். நம்பறவா நம்பட்டும். நம்பாதவாளை பத்தி நமக்கு அக்கறையில்லே.Read More