காந்தி என்றதும் கரன்சியில் சிரிக்கிறாரே அவரா
என்பவனுக்கும்
கண்ணன் என்றதும் செமை கில்மா பார்ட்டியில்லை
என்பவனுக்கும்
இடையில் இல்லை ஒரு வித்யாசம்.
காந்தி எப்படி கரன்சி நோட்டில் கொச்சைப்படுத்தப்பட்டாரோ
அப்படியே கண்ணனும் ..கோவில்களில்..
மனித மனம் ரொம்ப விசித்திரமானது.
அதன் வாசல் குட்டையெனில்
அதற்குள் நுழையும் பிம்பங்களும்
குறுகி விடுகின்றன.
கண்ணன் அவனை சுற்றி
எத்தனை பொய்க்கதைகள்
வட்டமிட்டாலும்
அவன் கீதை எந்த அளவுக்கு
மலினப்படுத்தப்பட்டு விட்டாலும்
அவனும் -அதுவும் அவற்றிலிருந்து
பிரிந்தே - உயர்ந்தே நிற்பது
அவன் அதிர்வுகள் இன்னும் இங்கு மிச்சமிருப்பதை
உணர்த்துகிறது.
கம்பீர கலைஞன் ஒப்பனை கலைக்கப்பட்டும்
கம்பீரமாகவே இருப்பது போல
கண்ணனிடம் இருந்து தெய்வத்தன்மையும்
அளப்பரிய சக்திகளும் அப்புறப்படுத்தப்பட்டாலும்
அவன் உயரம் குறைய மறுக்கிறது.
எப்போது -எங்கே -யாரிடம் -எதை எடுக்கவேண்டும்
என்பதை போலவே
எப்போது -எங்கே -யாருக்கு -எதை கொடுக்கவேண்டும்
என்பதை அவன் தெரிந்து வைத்திருந்தது
எனக்கு அதிர்ச்சியை தரவில்லை.
அவனிலான முதிர்ச்சி
தரிசனம் தருகிறது.
அவன் கீதை ஒரு சாதனையாளனின் போதனை
சாதிக்க முடியாதவர்கள்
போதிக்காத விஷயம் தான் எது?
ஆயர்குல பெண்ணின் வெண்ணையை புசித்து
நான் பெண் வாசம் படாதவன் எனில்
உபவாசம் இருந்தது உண்மை எனில்
வழி விடு என்று அவன் கேட்க நதி நகர்ந்து கொள்கிறது.
காரணம் எதுவும் அவனுள் பிரவேசித்து
அப்பால் சென்று விட்டதே.
எதுவும் அவன் ஆளுமையை மாசுப்படுத்த முடியவில்லை
அவன் வாழ்ந்த வாழ்க்கையும் தான்.
அம்னெஸ்டி, -இன்டர் நேஷ்னல் மீடியா- மனித உரிமைகள்
சமூக வலைகள்
எல்லாம் இருக்கும் இக்காலத்திலும்
ஒரு அரசை எதிர்ப்பது தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கிறது
இவை எதுவும் இல்லாத காலத்தில்
மக்களை திரட்டி மன்னனை மாற்றுதல் அதிமனித செயல்.
கண்ணன் ஒருவனோ - பலரின் பன்முக பண்புகளால்
திரட்டப்பட்ட கற்பனையோ
எதுவாக இருந்தாலும்
அவன் குறித்த நினைவுகள்
மதுவாக போதை தருகின்றன.
Showing posts with label தமிழ் கவிதை. Show all posts
Showing posts with label தமிழ் கவிதை. Show all posts
Saturday, September 15, 2012
Thursday, October 6, 2011
கில்மா கவிதைகள்

பாஸ்! கவிதைகள்ள எத்தனையோ ரகம் பார்த்திருப்பிங்க . ஹிஸ்டரி ரிக்கார்டா இப்பம் நம்ம சைட்ல இருந்து கில்மா கவிதைகள்.
அவனுக்கு ஊரில் உள்ளவன் பெண்டாட்டியெல்லாம்
தேவைப்பட்டது.
அவன் மனைவியோ ட்ரைவரே போதும் என்றாள்
* * *
அவன் எதற்காகவும் தேர்தல் டிக்கெட்டை விட்டுக்கொடுக்க
முடியாது என்று சிலும்பினான்.
தலைவருக்கு தன் மனைவியை
விட்டுக்கொடுத்த தைரியம் அவனுக்கு
* * *
படுக்கையறையில் எழ மறுத்தது
குளியலறையில் சீறியது
ஹாலி ஆட்டம் போட்டது
புதுக்கணவனின் ஈகோ
என்னடா நம்ம முருகேசன் கூட கமெண்ட் சைஸ்ல பதிவு போட ஆரம்பிச்சுட்டாரான்னு நொந்துராதிங்க. காதலர்கள்/புதுக்கணவர்கள் தம் காதலி/புதுமனைவியை கொஞ்சும் மொழிகளிலேயே அவர்களின் எதிர்காலமும் அடங்கியிருக்குங்கற "சரித்திரப்புகழ் பெறப்போகும்" பதிவை படிக்க இங்கே அழுத்துங்க..
Thursday, September 29, 2011
நானுயர நாடுயரும்

பாட்டு கேட்டுத்தான்
எனக்கு வேட்டு வைக்கின்றாய்
வாவி வெட்டுகையில் பாறை வந்துற்றால்
வெடி வைத்து தகர்த்தற்போல்
செழுமை காரணத்தால் - லட்சியம் மறந்த நெஞ்சம்
பாறையாய் மாறுகையில்
கவியூற்று அடை பட
வேட்டு வைத்தல் முறை
இத்துணை கோடி மா(மை)ந்தர்
இவரில் நான் என்ன கொம்பனோ?
கரையும் நெஞ்சம் கண்டே இமயம் ஒத்ததென்று
குடிபுகுந்தாய் என் நெஞ்சம்
பனியிது பாறையாகிவிட்டால்
ஒரு நொடியேனும் தங்குவையோ
நீ தங்கி இருந்தாலன்றி என் நெஞ்சில் ஒளியேது?
என் பேச்சில் ஞானக்கிளியேது?
நெஞ்சை தகர்த்தே போட்டாலும் - நீ தங்கினால் போதுமடி எனில்
மங்கியதெல்லாம் துலங்கும்
சிவனார் உறவாலே மயான சயனம் விரும்பி
என் மனதை மயானமாக்க முனைந்தாலும் சம்மதமே
நீ தங்கி விடு - என்னை துலங்க விடு
கடமை எனக்குண்டு - கடமையின் பின்னொரு தேசம் தானுண்டு
நானுயர நாடுயரும் - தாய் நாட்டின் பீடுயரும்
வலசை போகாது - மனமிசை தொடர்ந்திடவே
எண்ணிய தாயுள்ளம் தனக்கேதான் தனயன் நானடிமை
யாது செய்ய திருவுளமோ?
என் வாழ்வும் இங்கோர் போர்க்களமோ?
சந்தை வாழ்விது சிந்தை தானறியும்
மந்தையிதனோடு மகவு நான் பயணித்தால்
மந்தையோடு நானும் வெட்டுண்டு சாகவேண்டும்
அகந்தை சூரியனே அஸ்தமித்த வேளையிது
அந்திப்பொழுதே போல் இருள் சூழும் நேரமிது
பிள்ளை மனமென்னும் சந்திரன் உதிக்கவில்லை -
தன் காலை பதிக்கவில்லை
மசமசப்பாய் தெரியுதடி எம்மை விழுங்கவரும் புலிக்கூட்டம்
மந்தை இதுவுக்கோ புல் மீது தான் நாட்டம்
வழி நடத்த போறாது
பழி சுமக்க கூடாது
வழி காட்டி ஒளி கூட்டு
வழி நடத்தும் வகையினிலே
விரித்த கடையிதனை கடைக்கண்ணால் நீ கண்டால்
பாடசாலையாகும்.
அபயம் நீ தந்தால் ஆயுத சாலையாகும்
ஏழ்மை எரிக்க களம் கண்டேன்
அதற்கே என்னை தின்னத்தந்தேன்
புடமிட்டது போன்றே துயனாக்கி
மாய உலகில் திரிய விட்டாய்
மருமம் யாவும் அறியவிட்டாய்
மடமை சுவர்கள் சரிய வைத்தாய்
புதையல் ஏதும் கிட்டவில்லை
புதை சேற்றினின்றே மீண்டிட்டேன்
ஓரிரு நாணயம் கண்ணில் பட்டு
புதையலின் இருப்பை உறுதி செய்ய
பயணம் தொடருது உனை நோக்கி
ஞானச்செல்வமதற்கே கன்னமிட்டு
கொள்ளையிடவே அனுமதிப்பாய்
பின் செல்வம் யாவும் பகிர்ந்தளிக்க பரமேசி நீயும்
வரம் தருவாய்
ஆடவர் பெண்டிர் யாவருமே
அக்கினிக்கிரையாய் ஆனபின்னே
ஆக்கிவைத்த விருந்தெல்லாம்
பகிர்ந்து என்ன லாபமடி
இதை பூட்டி வைத்தல் பாபமடி
என் படைப்புகள் யாவும் அச்சாகி
இணையம் என்ற தேரேறி
எண் திக்கும் பரவி ஈங்கிவர்க்கே புது
சன்னல் பலவும் திறந்திடனும்
மாடை வந்தால் மாற்றம் வரும்
என்றே நானும் காத்திருந்தேன்
காசு பணமே வந்த பின்னும்
மாற்றம் இல்லை என் வாழ்வில்
ஏனோ என் மேல் பகை கொண்டாய்
என் பாடு கண்டு நகைக்கின்றாய்
மாற்றம் காணாது திகைக்கின்றேன்
என் உன்மத்தம் பாட்டில் உரைக்கின்றேன்
மாற்றிடு மாற்றிடு இந்நிலையை
போற்றிடும் வையம் என் கலையை.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
Subscribe to:
Posts (Atom)