'>
Showing posts with label amman. Show all posts
Showing posts with label amman. Show all posts

Thursday, September 29, 2011

நானுயர நாடுயரும்


பாட்டு கேட்டுத்தான்
எனக்கு வேட்டு வைக்கின்றாய்

வாவி வெட்டுகையில் பாறை வந்துற்றால்
வெடி வைத்து தகர்த்தற்போல்

செழுமை காரணத்தால் - லட்சியம் மறந்த நெஞ்சம்
பாறையாய் மாறுகையில்
கவியூற்று அடை பட
வேட்டு வைத்தல் முறை

இத்துணை கோடி மா(மை)ந்தர்
இவரில் நான் என்ன கொம்பனோ?

கரையும் நெஞ்சம் கண்டே இமயம் ஒத்ததென்று
குடிபுகுந்தாய் என் நெஞ்சம்

பனியிது பாறையாகிவிட்டால்
ஒரு நொடியேனும் தங்குவையோ

நீ தங்கி இருந்தாலன்றி என் நெஞ்சில் ஒளியேது?
என் பேச்சில் ஞானக்கிளியேது?

நெஞ்சை தகர்த்தே போட்டாலும் - நீ தங்கினால் போதுமடி எனில்
மங்கியதெல்லாம் துலங்கும்

சிவனார் உறவாலே மயான சயனம் விரும்பி
என் மனதை மயானமாக்க முனைந்தாலும் சம்மதமே

நீ தங்கி விடு - என்னை துலங்க விடு

கடமை எனக்குண்டு - கடமையின் பின்னொரு தேசம் தானுண்டு
நானுயர நாடுயரும் - தாய் நாட்டின் பீடுயரும்

வலசை போகாது - மனமிசை தொடர்ந்திடவே
எண்ணிய தாயுள்ளம் தனக்கேதான் தனயன் நானடிமை

யாது செய்ய திருவுளமோ?
என் வாழ்வும் இங்கோர் போர்க்களமோ?

சந்தை வாழ்விது சிந்தை தானறியும்
மந்தையிதனோடு மகவு நான் பயணித்தால்

மந்தையோடு நானும் வெட்டுண்டு சாகவேண்டும்

அகந்தை சூரியனே அஸ்தமித்த வேளையிது
அந்திப்பொழுதே போல் இருள் சூழும் நேரமிது

பிள்ளை மனமென்னும் சந்திரன் உதிக்கவில்லை -
தன் காலை பதிக்கவில்லை

மசமசப்பாய் தெரியுதடி எம்மை விழுங்கவரும் புலிக்கூட்டம்
மந்தை இதுவுக்கோ புல் மீது தான் நாட்டம்

வழி நடத்த போறாது
பழி சுமக்க கூடாது

வழி காட்டி ஒளி கூட்டு
வழி நடத்தும் வகையினிலே

விரித்த கடையிதனை கடைக்கண்ணால் நீ கண்டால்
பாடசாலையாகும்.
அபயம் நீ தந்தால் ஆயுத சாலையாகும்

ஏழ்மை எரிக்க களம் கண்டேன்
அதற்கே என்னை தின்னத்தந்தேன்

புடமிட்டது போன்றே துயனாக்கி
மாய உலகில் திரிய விட்டாய்

மருமம் யாவும் அறியவிட்டாய்
மடமை சுவர்கள் சரிய வைத்தாய்

புதையல் ஏதும் கிட்டவில்லை
புதை சேற்றினின்றே மீண்டிட்டேன்

ஓரிரு நாணயம் கண்ணில் பட்டு
புதையலின் இருப்பை உறுதி செய்ய
பயணம் தொடருது உனை நோக்கி

ஞானச்செல்வமதற்கே கன்னமிட்டு
கொள்ளையிடவே அனுமதிப்பாய்

பின் செல்வம் யாவும் பகிர்ந்தளிக்க பரமேசி நீயும்
வரம் தருவாய்

ஆடவர் பெண்டிர் யாவருமே
அக்கினிக்கிரையாய் ஆனபின்னே

ஆக்கிவைத்த விருந்தெல்லாம்
பகிர்ந்து என்ன லாபமடி
இதை பூட்டி வைத்தல் பாபமடி

என் படைப்புகள் யாவும் அச்சாகி
இணையம் என்ற தேரேறி

எண் திக்கும் பரவி ஈங்கிவர்க்கே புது
சன்னல் பலவும் திறந்திடனும்

மாடை வந்தால் மாற்றம் வரும்
என்றே நானும் காத்திருந்தேன்

காசு பணமே வந்த பின்னும்
மாற்றம் இல்லை என் வாழ்வில்

ஏனோ என் மேல் பகை கொண்டாய்
என் பாடு கண்டு நகைக்கின்றாய்

மாற்றம் காணாது திகைக்கின்றேன்
என் உன்மத்தம் பாட்டில் உரைக்கின்றேன்
மாற்றிடு மாற்றிடு இந்நிலையை
போற்றிடும் வையம் என் கலையை.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

Wednesday, August 10, 2011

அவன் அவள் அது : 12


அடிக்கடி ஆத்தா பார்த்துப்பா -அம்பாள் பார்த்துப்பான்னு நாம ஃபிலிம் காட்டறதா சிலர்/பலர் நம்மை தப்பா நினைச்சிருப்பாய்ங்க. கொய்யால எவந்தான் அம்மன் பேரை சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சுப்பான்னு கடுப்பாகியிருப்பாய்ங்க .அவிகளுக்கெல்லாம் ஒரு க்ளேரிஃபிகேஷன் தந்தாப்லயும் இருக்கும் - நமக்கும் ஒரு மலரும் நினைவுகளா இருக்கட்டும்னு அவன் -அவள் -அது என்ற தலைப்பில் ஒரு தொடரை ஆரம்பிச்சோம். இடையில டீல்ல விட்டுட்டம். அப்பாறம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரெண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிச்சோம்.

இந்த அம்மன் பிசினஸ்ல தலை கொடுக்க முக்கியமான காரணம் அவளை நாட எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயமும் தேவையில்லைங்கற ரிலேக்சேஷன் தேன். நாமதேன் விதிகளுக்கு அடங்காத விதிவிலக்காச்சே.(எங்க பக்கத்துல அர்ரா கட்டைனு சொல்வாய்ங்க)

நாம ஒன்னும் இமய மலைக்கு போய் தபஸ் எல்லாம் பண்ணலை. நாம ஒன்னும் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு இல்லை. ஆனாலும் ஜா.ரா மாதிரி ஆட்களோட கம்பேர் பண்ணிக்கிட்டோ என்னவோ ஆத்தாவே நம்மை "சரி இப்படி ஒரு கேரக்டரும் இருக்கட்டும்"னு தன் சபையில சேர்த்துக்கிட்டா.

நம்ம யோகி சார் நம்ம அனுபவங்களை படிச்சுட்டு " பார்த்துங்க ..இதெல்லாம் எதுனா யட்சிணி வேலையா இருக்கப்போகுதுன்னு பேதிக்கு கொடுக்கிறாரு."
Read More

Monday, June 6, 2011

ஆத்தா ஒரு ட்ராகுலா !

இன்னாங்கடா இது நம்ம முருகேசு பெரியாரை சித்தபுருசரும்பாரு - இன்னய தேதிக்கு நான் சாமியாருனு மாஃப் காட்டற திருட்டு பசங்களோட ஒப்பிட்டா பெரியாருதேன் உண்மையான சன்யாசிம்பாரு அம்புட்டுதேன். ஆனால் படக்குனு ஒரு யு டர்ன் அடிச்சு நாத்திகத்துக்கு இறங்கிட்டாரோன்னுட்டு குழம்பிராதிங்க.

என்னை உங்க ஊருக்கு வரச்சொல்லி மெயில் அனுப்பறிங்க. நானு அடப்போங்க சார்.. பஜாருக்கு போகவே நேரமில்லை. நான் எங்க வர்ரதுன்னு கழண்டுக்கறேன். நீங்க வாரம் பத்து நாள் தொடர் மெயில்கள் அனுப்பி வரச்சொல்லி வற்புறுத்தறிங்க.

நான் என்னைக்கு வரேன்னு சொல்லமுடியாது. புறப்படறனன்னைக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன்னு சொல்றேன். உங்க நல்ல நேரமோ என் கெட்ட நேரமோ ஒர்க் அவுட் ஆகி, உங்க வில் பவர் / உங்க எண்ண அலைகள் என்னை கிண்டோ கிண்டுன்னு கிண்ட புறப்படலாம்னுட்டு உங்களுக்கு ஃபொன் பண்றேன். உங்க ஃபோன் ஸ்விட்ச் ஆஃப். நான் புறப்படுவேனா?

ஒரு வேளை நீங்க ஃபோன் ஆன்ல வச்சிருந்து என் காலை எடுத்து பேசி வேலூர் வந்து வந்துருங்க சார் .ஷார்ட். புது பஸ்ஸ்டாண்ட் போகாதிங்க. பழைய பஸ் ஸ்டாண்டுல இறங்கிட்டு ஒரு மிஸ்டு கால் தட்டி விடுங்க நான் பிக் அப் பண்ணிக்கிறேங்கறிங்க.

நானும் நம்பிக்கையா புறப்பட்டு வரேன். பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி ஃபோன் பண்றேன். நீங்க " சார் .. நீங்க என்ன பண்றிங்கண்ணா அப்படியே வெளிய வாங்க.வந்து ஆட்டோ ஸ்டாண்ட்ல்  காந்தி நகருன்னு சொல்லுங்க.  நூறு ரூபாதான் கேட்பான் அப்படியே வந்து"ங்கறிங்க.. நான் என்ன பண்ணுவேன்/

அடப்போங்கடா நீங்களும் உங்க இழவும்னுட்டு அடுத்த பஸ் பிடிச்சு சித்தூரை பார்க்க வந்துருவேன்.

ஒருவேளை .. நீங்க பஸ் ஸ்டாண்ட்ல வெய்ட் பண்ணி என்னை பிக் அப் பண்ணி டீ,காஃபி, பான்,பீடா,பீடி,சிகரட்டு எல்லாம் வாங்கி கொடுத்து ஊட்டுக்கு கூட்டி போயி திண்ணையில உட்கார வச்சுட்டு உள்ள போறிங்க.( உங்க ஊர்ல இன்னம் திண்ணைங்க இருக்கா பாஸ்? எங்க ஊர்ல இடிச்சு கட்ட வசதியில்லாத திவால் பார்ட்டிங்க மட்டும் விட்டு வச்சிருக்காய்ங்க )

அஞ்சு நிமிசம்,பத்து நிமிசம்.பதினைஞ்சு நிமிசம் ஆச்சு . ஆளை காணோம். இன்னாங்கடா இது இந்த வீட்டு எலிவேஷன் மட்டும் உண்மையோ.. பின்னாடி ஒன்னும் இருக்காதோ/ வெட்ட வெளியோ? இந்த ஆளு அப்படியே பொடி நடையா மலையாள பிட்டு படம் பார்க்க போயிட்டாரோன்னுட்டு எனக்கு டவுட்டு வருது.  நான் என்ன பண்ணுவேன். " ஆளை விடுங்கடா"ன்னுட்டு பிச்சிக்கினு சித்தூர்.

இந்த ரேஞ்சுல - இந்த சீரியல்ல தொடர் பதிவே போடலாம். மத்ததை எல்லாம் உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.

ஒரு காலணா சோசியன் நான். உங்களுக்கு மூட்டை அவுத்து கொடுக்கப்போறது ஒன்னும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா வெத்தலை பாக்குல ரூவா வச்சு எனக்கு அழப்போறிங்க. இருந்தாலும் என்னை இன்வைட் பண்ணி ரிசீவ்பண்ணிக்கிட்டு சோசியம் கேட்டுக்கறதிலியே  இத்தனை கண்டமிருக்கு.

அப்படியா கொத்தது ஆத்தாவை இன்வைட் பண்றதுன்னா தமாசா? ஆத்தாவுக்கு கடுப்பானா இன்னா ஆவும்? Read More

Thursday, April 14, 2011

அவன்-அவள்-அது: 5




ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரியவளான புவனேசியின் அந்தப்புறம் வரை முன் அனுமதி இன்றி சென்று வரும் சுகரின் (கிளி உருவம் படைத்த ரிஷி) மறு உருவான   கிளி நம்ம ஊட்டுக்குள்ள வந்து பூஜை ஸ்டாண்ட்ல கேம்ப் அடிச்சுருச்சுனு சொல்லி நிறுத்தியிருந்தேன். அது ஏன் வந்தது? சிறகு சரிவர முளைக்காத ,பறக்க பழகாத குஞ்சா ? தான் போக வேண்டிய தி சைய கூகுல் மேப்ஸ்ல வெரிஃபை பண்ணிக்க முடியாத சந்தர்ப்பத்துல லேண்ட் ஆச்சான்னெல்லாம் நமக்கு தெரியாதுண்ணே. கிளி வந்தது நெஜம். ஏதோ ஒரு வாரம் போல நம்ம உபசாரத்தையெல்லாம் ஏற்று கன்டின்யூ பண்ணது நெஜம்
Read More