'>
Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Tuesday, April 10, 2012

சத்திரியர்-பிராமணர் உறவு :யம்மா ! அலார்ட் ஆய்க்கோங்க


அண்ணே வணக்கம்ணே !
சட்டம் இருக்கிறதே அதை மீறத்தேன்னு சிலர் செயல்பட்டுக்கிட்டிருப்பாய்ங்க.அவிகளை அரசியல்வாதின்னு சொல்றது வளக்கம்.

நாமளும் எதிர்கால அரசியல்வாதிங்கறதாலயோ என்னமோ எந்த விதியை ஏற்படுத்தினாலும் அதை பின்பத்த நம்ம ஜாதகம் விடமாட்டேங்குது. வாரத்துல மொத 3 நாள் அரசியல் பதிவு -அதுக்கப்பாறம் 3 நாள் சோசியப்பதிவுன்னு ஒரு விதியை வச்சுக்கிட்டம்.ஆனால் நேத்து போட்ட பதிவு டூ இன் ஒன் ஆயிருச்சு.

நாம அய்யர் மாருக்கு விருது கொடுக்கிறதை எதிர்க்கலை.அவிகள்ளயே எத்தனையோ உத்தமருங்க இருக்காய்ங்க. அவியளை தேடிப்பிடிச்சு கொடுத்தா ஆரு வேணாங்க போறோம். கொய்யால கஜினி முகமது,கோரி முகமது காலத்துலருந்து பிரிட்டீஷ் காரன் காலம் வரை எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து இப்பம் அம்மா காலம் வரைக்கும் ஜஸ்ட் சாதிய மட்டும் வச்சு "லாபியிங்" பண்ணியே காரியத்தை சாதிச்சுர்ரதைதான் சகிக்க முடியலை. Read More

Tuesday, March 27, 2012

ஜெ -கலைஞர் ரகசிய ஒப்பந்தம் « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே !
இது ஏதோ புதிய சேதின்னு உ.வ பட்டுராதிங்கண்ணே. எதிர்கட்சியா இருக்கிறச்ச ஆளுங்கட்சியோட "ஒத்து" போற மேட்டரை கலைஞரின் நீண்ட அரசியல் வரலாற்றில் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் காலத்துலயே "ஒரு சில" விஷயங்களை" கண்டுக்காம விட்டுர்ரது கலைஞரோட ஸ்டைல். பல்கேரியா,பால்டிக்கா ஊழல்லருந்து பல விஷயங்களை இதுக்கு உதாரணமா சொல்லுவாய்ங்க. இப்படி கண்டுக்காம விடனும்னா கலைஞரை கண்டுக்கிடனும்னு ஒரு விதி பிரச்சாரத்துல இருக்கு.

இப்பம் ஜெ மேட்டர்ல கூட இது தொடருது போல. என்ன ஒரு வித்யாசம்னா ஆளுங்கட்சியா இருக்கிறப்பயே ஒப்பந்தம் தொடர்ந்து கிட்டுதான் வந்தது. மிடாஸுக்கு டாஸ்மாக் ஆர்டர்.

லேட்டஸ்டா சொல்லனும்னா சசிகலா மேட்டரை சொல்லலாம். கலைஞர் "ஃப்ரீயா" இருந்திருந்தா இந்நேரத்துக்கு கிளிச்சிருப்பாரு. சசிகலா மேட்டர் என்ன சாதாரண மேட்டரா? கூட்டு கொள்ளையில பங்கு தகராறு. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டங்கறாப்ல ஜெ-சசி முட்டிக்கிறாய்ங்கன்னா கலைஞருக்கு இன்னா மேரி சான்ஸு.ஆனால் தாத்தா எதுவும் கண்டுக்கறாப்ல இல்லை.

மேட்டர் இன்னாடான்னா அம்மா கலைஞரை கண்டுக்கினாங்க போல. இந்த அணு உலை மேட்டரை எடுத்துக்கங்க. தினமலர்ல வர்ர செய்திக்கும் - கலைஞர்/ சன் நியூஸ்ல வர்ர செய்திக்கும் அதனோட தொனிக்கும் பெருசா வித்யாசமே இல்லை.

பரிதி இளம்வழுதி கட்சிக்குள்ள போர்க்குரல் எழுப்பறாரு. அவர் வீட்ல ரெய்டு நடக்குது. இதெல்லாம் ஒப்பந்தமில்லாம வேறென்ன?

கலைஞரோட சைக்காலஜி வித்யாசமான சைக்காலஜி. தாத்தா தெனாலிராமன் பூனை மாதிரி.ஒரு தாட்டி நாக்கு வெந்து போனா அந்த திக்கு திசைக்கு கூட போகமாட்டாரு. எமர்ஜென்சி காலத்துல இந்திரா காந்தியை எதிர்த்து பொங்கல் வச்சுக்கிட்டதுலருந்து சென்ட்ரல் கவர்மென்டுன்னாலே தாத்தாவுக்கு குளிர்.சுரம்.

விடுதலைப்புலிகள் மேட்டர்ல அளவுக்கு மீறி இழைஞ்சு ஆட்சிய பலி கொடுத்ததுலருந்து விடுதலைப்புலிகள் மேட்டருன்னா நடுக்கம்.

எம்.ஜி.ஆரே உசுரோட வந்து கலைஞரண்ணே .. நான் இருக்கேன் மோதிப்பார்த்துரலாம்னா கூட தாத்தா அம்பேலுதேன்.

தமிழ் நாடா நாதியத்து கிடக்குது . கட்சியா கலகலத்து கிடக்குது. குடும்பமா நிலை குலைஞ்சு கிடக்குது. கு.ப குடும்ப நலம் கருதியாவது சசி கலா மேட்டர்ல தூள் பண்ண வேண்டிய தாத்தா " எவனோ செத்தான் எனக்கென்ன போச்சு"ன்னு இருக்கிறாருன்னா இன்னா அருத்தம்.

அம்மா அய்யாவை கண்டுக்கிட்டாய்ங்க போல. இந்த மேட்டர்ல அம்மா மட்டும் ஒழுங்குன்னு நினைச்சுராதிங்க. அம்மாவுக்கு ஆதி நாட்கள்ளருந்தே ஒரு கொள்கை. கொய்யால கண்ணால வீடா கண்ணால பொண்ணா இருக்கனும். கருமாதி வீடா பொணமா இருக்கனும். ரெண்டும் இல்லியா நான் கொட நாடு போறேன்.

ஜா -ஜென்னு கட்சி பிளந்து கிடந்த சமயம் எம்.எல்.ஏ பதவிக்கு ராஜினாமா லெட்டர் எளுதி வச்சிருந்த பார்ட்டிதானே அம்மா. அப்பாறம் பார்த்தா ரஜினி மாதிரி முட்டி தேஞ்ச சனம் தைரியலட்சுமின்னு லாலி பாடறாய்ங்க.

நம்ம சன நாயகத்துல எரியற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு பார்த்து ச்சூஸ் பண்ற நிலைமை தான் இருக்கு. இதுல ரெண்டு கொள்ளியுமே மொள்ளமாரி கொள்ளியா இருக்கு.

சரி ஒளியட்டும் இதுக்கப்பாறம் எதுனா சாய்ஸ் இருக்கான்னு பார்த்தா விசயகாந்த். வை.கோ. வை.கோவாச்சும் அவார்ட் ஃபிலிம் மாதிரி .விசயகாந்துக்கு என்ன கேடு.

பலீஞ்சடுகுடு விளையாட வேண்டிய நேரத்துல பார்ட்டிய காணவே காணோம். இதான் தமிழ் சனங்க தலை எழுத்து போல.

Tuesday, October 11, 2011

கலைஞர் ஐயா போதும் விட்டுருங்க!

பால்ய சினேகிதன் ஒருத்தன் (சித்தூருதேன்) குடும்பம் திருச்சில செட்டில் ஆனதால திருச்சி வாசியாயிட்டான்.சம்மருக்கு சித்தூர் வந்தா நம்ம மாடியறையிலதான் கேம்ப். ரெம்ப ஜாலி டைப்பு. சுய இன்பத்தை பற்றி நமக்கிருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கின புண்ணியவான். ஒரு நாள் தன் இயல்புக்கு மாறா தன் சோகத்தை பகிர்ந்துக்கிட்டான்.

"வெள்ளை ! ( நம்ம நிக் நேம்) திருச்சி போனா ஆந்திராகொல்ட்டிங்கறான்.ஆந்திராபக்கம் போனா அரவா நா கொடுக்குங்கறான் நான் யார்ரா?"

ஏ.கு இதே உணர்வை ரஜினி கூட வெளிப்படுத்தினதா ஞா. தெலுங்கு ப்ளாக்ல ஒரு தாட்டி நாம போட்ட அரசியல் பதிவுக்கு கமெண்ட் போட்ட அனானி அலக்கை " டேய் சாம்பார் ! ( தமிழாளுங்களுக்கு இந்தப்பக்கம் அதான் பேரு) ஆந்திர அரசியலை பத்தி பேசாதே"ன்னூருச்சு.

அதை நம்ம விரோதிகள்ளாம் கப்புனு பிடிச்சுக்கிட்டு சாம்பாருன்னு விளிச்சே கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டானுவ. இந்த வார்த்தையோட ரெப்புடேஷனை எக்ஸ்ப்ளாய்ட் பண்றது்க்கு சாம்பார்காடுன்னுட்டு ஒரு புதிய ப்ளாகையே ஆரம்பிச்சுட்டம் அது வேற கதை.

ஆமாம் எதுக்கு இத்தனாம் பெரிய மொக்கைனு கேப்பிக சொல்றேன். இன்னைக்கு மௌனிசார் - மற்றும் கலைஞரை பத்தி நாம போடப்போற பதிவு இப்படி ஒரு கமென்டை வரவச்சுருமோன்னு சம்ஸயம்.

கலைஞர் டிவில அவரோட பேச்சு,கல்கியில மௌனியோட ஓ பக்கம் படிச்ச எஃபெக்ட்ல இந்த பதிவை போடறேன்.

திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்துல சவால் விடுகிறேன்னு ஆரம்பிச்ச கலைஞர் படக்குனு பம்மி சவால்ங்கறது ஆணுக்கு ஆண் விடறதுன்னு சைடு வாங்கிட்டாரு. பாவம் நெஜமாலுமே கலைஞர் இந்தி படிக்கலைபோலும். சவால்னா கேள்வின்னு அருத்தம். வயசான காலத்துல ஜெயில் வாசல்ல எல்லாம் எங்கனுருந்து தர்ணா பண்றதுன்னு பதுங்கிட்டாரு போல.

கலைஞர் சென்னை அறிவாலயத்துக்கான நிலத்தை வாங்கினப்ப 10 உரிமையாளர்கள்ள ஒருத்தரை மட்டும் சென்னைக்கு அழைத்து மிரட்டி எழுதி வாங்கிட்டதா அம்மா குற்றம் சாட்டினாய்ங்களாம். அதுக்கு தாத்தா கவுண்டர் கொடுத்தாரு (சாதியில்லிங்கணா) .

பத்து பேரும் கை.எ போட்டிருக்காய்ங்கனு பத்திரத்தை காட்டினாரு ( ஜிராக்ஸுதேன்) . நிலம் திமுக அறக்கட்டளை பேர்ல வாங்கப்பட்டது. கட்டளையில எம்.ஜி.ஆரும் ஒரு உறுப்பினர்னு எடுத்து விட்டாரு.

உரிமையாளர்கள்ள எத்தீனி பேர் கை.எ போட்டாய்ங்கங்கறது தாத்தாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான பிரச்சினை. ஒருத்தரை மிரட்ட முடிஞ்சவுகளுக்கு பாக்கி 9 பேரை தூக்கிட்டு போயி மிரட்ட எத்தீனி தேசாலம் ஆகும்?

அறக்கட்டளையில எம்.ஜி.ஆர் உறுப்பினரா இருந்தா என்ன அவரோட தாத்தா இருந்தா என்ன? மேலும் பொருளாளரா இருந்த வாத்யாரு "கணக்கு "கேட்டுத்தானே வெளிய வந்தாரு.

இதெல்லாம் ஒரு பக்கம். அசலான மேட்டருக்கு வரேன். மேடைப்பேச்சில் இங்கனயும் போலித்தனம் இருக்கு. காங்கிரஸ் காரவுக (அதிலயும் சொந்த செல்வாக்கில்லாதவுக) இந்திரா ,ராஜீவ்,சோனியா பேரை சொல்லும் போது உ.வ படுவாய்ங்க.சந்திரபாபு தேர்தல் நேரத்துல மட்டும் என்.டிஆர் பேரை சொல்வாரு (ஆனால் அவர் குரல்ல உணர்ச்சியே இருக்காது) . ஜகன் பிளாட்பாரத்துல லேகியம் விக்கிறவன் மாடுலேஷன்ல ஒய்.எஸ்.ஆர் பேரை சொல்வாரு. அம்புட்டுதேன்.

ஆனால் திருச்சி கலைஞர் பேச்சுல பேச்சு நெடுக தியாகம்,இனம்,மொழி,தமிழர்,திராவிடர், பம்பாடு ,கலாச்சாரம்னு ஏகப்பட்ட ஜல்லி.

கலைஞர் கைக்கு அதிகாரம் வர்ரதுக்கு மிந்தி அவர் பேச்சுல ஓரளவு உணமை இருந்திருக்கலாம். ஆனால் இத்தீனி தபா சி.எம்மா இருந்துட்டு கம்பெனி வாசல்ல கூட்டம் போட்ட தொழிற்சங்க தலைவரு கணக்கா பேசறதை புரிஞ்சிக்கிட முடியலிங்கண்ணா.

தாளி .. அவர் பேச்சுல ஒவ்வொரு வார்த்தையும் பொய் -ஒவ்வொரு எழுத்தும் பொய். பொய்யை தவிர வேறில்லை.

இந்த போலியான, நாடகத்தனமான பேச்சுக்கு அப்பப்போ கூட்டத்துல இருந்து ஆரவாரம் வேற. தமிழர்களோட மூளை பொய்க்கு இந்த அளவுக்கு பழகிப்போச்சு போல.

இன்னைக்கும் இந்த கையறு நிலையிலயும் பொய்யும்,போலித்தனமும் தொடருதுன்னா ஆரவாரம் செய்தவுகளை போலவே கலைஞருக்கும் பொய் பழகிப்போச்சு போல.

இப்பத்துக்கும் ஒன்னம் குடிமுழுகிப்போகலை. உடனடியா பொதுக்குழுவை கூட்டி ரகசிய வாக்குப்பதிவு நடத்தி ஸ்டாலினா அழகிரியான்னு முடிவு பண்ணிரலாம். ( என் கவலை என்னன்னா ஸ்டாலின் கூட ஏறக்குறைய கலைஞர் மாதிரியேதான் பேசினாரு - எனவே பொதுக்குழுவுல ஸ்டாலின் மகனா (மருமகன்?) அழகிரி மகனான்னு முடிவு பண்ணிட்டாலும் பெட்டர்)

தாத்தா பேசாம ( அண்டர்லைன்) வீட்டோட இருந்துக்கறது நல்லது. கட்சி இப்பயாச்சும் யதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டு - உண்மைய உணர்ந்து உண்மைய பேச ஆரம்பிக்கனும். யார் மேல எல்லாம் வழக்குகள் பாஞ்சிருக்கோ அவிகளையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணிட்டு ( வழக்கறிஞர் அணி சட்ட உதவி தரட்டும் அது வேற கதை) இனிமேலாச்சும் உண்மையான மக்கள் பிரச்சினையை கையில் எடுக்கனும்.

இல்லாட்டி திமுகவை யாராலும் அழிக்க முடியாது கலைஞரை தவிரங்கற விமர்சனம் நெஜமாயிரும். மேற்படி கூட்டத்துல ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்க கலைஞரும் -அவர் வாயும் -உதடுகளும் பட்ட பாடிருக்கே. எனக்கே வலிச்சது. அவற்றின் போக்கு மலச்சிக்கல் காரன் கழிவறையில முக்கற மாதிரியே பட்டது. தாத்தா போதும்.ரெஸ்ட் எடுங்க. அதான் பெஸ்ட். கு.ப உங்க கடந்த கால சாதனைகளை நினைச்சுபார்த்து ஆறுதல் அடையறோம்.

( நம்ம மௌனி சாரு சின்னதா புதுசா ஒரு அரசியலமைப்பு சட்டத்தையே கல்கியில எழுத முயற்சி பண்ணியிருக்காரு. அதுல உள்ள ஓட்டைகளை -அதன் பின் ஒளிந்திருக்கும் ஹிடன் அஜெண்டாவை நாளைக்கு கிழிக்கிறேன்)

ஆருப்பா " ஆந்திரா கொட்டிக்கு தமிழக அரசியலை பற்றி பேச என்ன தகுதி" ன்னு கமெண்ட் போட்டுருங்க. ஒரு குறை தீந்துரும்.

Tuesday, July 26, 2011

கலைஞர் இதயம் மீண்டும் இனிக்கும் :"ஜெ"வுக்கு ஆப்பு?


ஆமங்கண்ணா . மாறன் அண்ட் கோ மறுபடி வந்து கோவுர்த்துக்கிட்டப்ப 'இதயம் இனித்தது. கண்கள் பனித்தன"ன்னுசொன்னாரே அதே சீக்வென்ஸ் வந்துருச்சு. ஒருத்தரோட லாபம் இன்னொருத்தருக்கு நஷ்டமா முடியறது -ஒருத்தரோட ஆனந்தம் இன்னொருத்தருக்கு துக்கமா முடியறதுதேன் வாழ்க்கை.

கடகலக்ன காரவுகளுக்கு ரகசிய டார்ச்சர் கொடுக்கவே ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு பார்ட்டி ஆஜராயிரும். ஆனால் கடகம் ஜல தத்துவமாச்சே. "கடலுக்கென்ன மூடி"னுட்டு பொங்கி எழுந்துட்டா எல்லா கச்சாடாவும் அடிச்சிக்கிட்டு போயிரும்.

இதே கான்செப்ட் தேன் தாத்தா லைஃப்லயும் நடக்குது போல (கடக லக்னம்) . பிள்ளைகள்/பொஞ்சாதி/துணைவி ,( ஏன்யா நான் கரெக்டா பேசறனா/) சோனியா,தயா, ராசா அல்லாரும் மாறி மாறி ஆளுக்கொரு பக்கம் இழுக்க பழகிட்டாய்ங்க.

நம்ம ஜா.ரா வும் இவன் நாம போடற 'உவேக்' கமெண்டையெல்லாம் முருகேசன் ரகசியமா வச்சுப்பாங்கற தகிரியத்துல ரெம்ப ஓவரா போயிட்டாரு. அதேன் மொத்தத்தையும் அப்ரூவ் பண்ணிட்டன். கருப்பு ஆடு ஜா.ராதாங்கறதுக்கு ஆயிரம் ஆதாரம் இந்த கமென்ட்ஸ்லயே கிடைக்கும். என்ன கொஞ்சம் போல மூக்கை பொத்திக்கிடனும் தட்ஸால். நாறும்.

இன்னா.............ஆது கலைஞர் இதயம் மீண்டும் இனிக்குமா எப்டின்னு மொதல்ல சொல்லுப்பாம்பிங்க சொல்றேன்.அதுக்குத்தேன் இந்த பதிவு. Read More

Tuesday, April 19, 2011

கலைஞரை வீழ்த்தினா ‘ஜெ’வும் ஆத்தாதான். « Anubavajothidam.com

அண்ணே வணக்கம்ணே,
ஆத்தா எனக்குள்ள ஜனிச்சா, சித்தாடை கட்டி சலங்கை ஒலிக்க நடை போட்டா , ஜெட் கேட்டகிரி ரேஞ்சுல என்னை தொடர்ந்தாள்னு சொல்லியிருந்தேன். நம்பறவா நம்பட்டும். நம்பாதவாளை பத்தி நமக்கு அக்கறையில்லே.Read More

கலைஞரை வீழ்த்தினா ‘ஜெ’வும் ஆத்தாதான். « Anubavajothidam.com

அண்ணே வணக்கம்ணே,
ஆத்தா எனக்குள்ள ஜனிச்சா, சித்தாடை கட்டி சலங்கை ஒலிக்க நடை போட்டா , ஜெட் கேட்டகிரி ரேஞ்சுல என்னை தொடர்ந்தாள்னு சொல்லியிருந்தேன். நம்பறவா நம்பட்டும். நம்பாதவாளை பத்தி நமக்கு அக்கறையில்லே.Read More

Monday, April 11, 2011

தேர்தல் நாள்: மாறும் ஜோதிட கணிப்பு

தேர்தல் 2011, ஏப்ரல் 13 , காலை எட்டுமணிக்கு ஆரம்பம். உயிர் எண் 4 அதிபதி ராகு. அம்மா ஜாதகத்துல ராகு 11 ல கீறாரு. வெஸ்டர்ன் டான்ஸ், சினிமா பெர்ஃபார்மென்ஸுனு தாளிச்சவுக அம்மா. இதுக்கெல்லாம் உதவி ராகுதேன். பிரிச்சு பாருங்க தேதிய கூட்டினாலும் 4 வருது, மாசமும் 4 , வருசமும் 4 . ஆக எண் கணிதப்படி இது ராகுவோட ஆதிக்கத்துல உள்ள நாள். ராகு அம்மாவுக்கு அனுகூலம்.Read More

Saturday, February 26, 2011

ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்


அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட "வீடு வரை உறவு - வீதி வரை மனைவி - காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்"னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல - கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது. சனி 6 மாசம் முந்தி அடுத்த ராசியோட பலனை தருவாருன்னு ஒரு விதி. அப்போ அவர் 3 ஆவது ராசில -தன் உச்ச ராசியான துலாவுல இருக்கிறாப்ல பலன் தரனும்.

மே 16 ஆம் தேதி ராகு கேது 4,10 க்கு வந்துர்ராய்ங்க . இவிக 3 மாசம் முன்னாடி வேலை செய்யனும்னு விதி. ( பிப்ரவரி 16 முதலே). மே 8 ஆம்தேதி குரு 8லருந்து 9க்கு வந்துர்ராரு

அதே நேரம் சனி ரெண்டுல இருக்கிறதால கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

புக்தி நாதனான சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா - அதாங்க ரூ 250)

Thursday, February 24, 2011

கலைஞர் ஒரு விதவை


இன்னாடா இது அக்குறும்பா கீது. ஆம்பளை போய் விதவையாக முடியுமான்னு கேப்பிக. சொல்றேன்.மனைவியை இழந்த ஆணை விதவன் என்று சொல்லும் சம்பிரதாயம் இங்கில்லே.(மேல் சேவனிஸ்ட் சொசைட்டிப்பா). ஆனால் மனைவியை இழந்தவர்களை குறிப்பிட ஒரு வார்த்தை இல்லேன்னாலும் இழந்தது இழந்ததுதானே.

"அவர் ஏங்க கல்யாணம் கட்டிக்கலை?"
"அவர் தன் லட்சியத்தை கண்ணாலம் கட்டிக்கிட்டாருப்பா"

"ஹும்.. உங்களுக்கு மொதல் பெண்டாட்டி உங்க ஆஃபீஸ் - நான் ரெண்டாவதுதான்"

இந்த வசனம்லாம் கேட்டிருப்பிக. கலைஞரும் அப்படித்தான் லட்சியத்தை மணந்து அரசியல் வாழ்க்கைய துவக்கினாரு. ஆனால் அவரோட ஜாதக மகிமை லட்சியம் செத்துப்போச்சு. ஆமாங்கண்ணா அவர் ஜாதகம் கீழே:

கடக லக்னம் -லக்னாதிபதி உச்சம் -இது சந்திரங்கறதாலதான் ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா லைஃப் போகுது. 14 வருஷம் வனவாசத்துக்கும் இதான் காரணம். (வளர்பிறை -தேய் பிறை)

தன,வாக்கு ,குடும்பஸ்தானாதிபதியோட சேர்க்கை - இதனால தான் அவரு குடும்பத்தை பிரிய , அட்லீஸ்ட் விட்டுக்கொடுக்க மறுக்கறாரு. ரெண்டு எட்டுல ராகு கேது ( இதைத்தான் மாங்கலிய தோஷம்ங்கறாய்ங்க- இந்த அமைப்பாலதான் கலைஞரோட லட்சியம் செத்துப்போயி அவரு விதவையாயிட்டாரு)

7,8 க்கு அதிபதியான சனி 4 ஆவது இடத்துல உச்சம். 8ங்கறது மரணத்தை காட்டற இடம் - 4ங்கறது "வீட் மற்றும் தன்னவரை" காட்டற இடம் . கணக்கு டாலி ஆயிருச்சா. ராசா ஒரு தலித். அவரை தன்னவருன்னு சேர்த்ததால சிறைக்குள் பூத்த சின்ன சின்ன மலர்கள் பார்ட் டூ எழுத வச்சிர்ராப்ல இருக்கு. ( சிறைப்படலுக்கு சனியே காரகன்)

6,9க்கு அதிபதியான குரு அஞ்சுல கீறாரு. அஞ்சுன்னா புத்திஸ்தானம், பெயர் புகழை காட்டற இடம். 6ன்னா சத்ரு ரோக ருணங்களை காட்டற இடம். குரு ரோகாதிபதியா வேலை செய்தா "இந்திராவுக்கு பென்ஷன் தரோம்" பாணில வார்த்தைய விட்டு ஆப்பு. அவரு பாக்யாதிபதியா வேலை செய்தா எம்.ஜி.ஆர் உடல் நலம் பாதித்து ப்ரூக்ளின்ல இருந்தா உருக்கமா உடன் பிறப்புக்கு கடிதம்.

ஒரு சமயம் டாப்பு. ஒரு சமயம் பயங்கர ஆப்பு.ரெண்டுத்துக்குமே தலைவரோட புத்தி தான் காரணமாகுது. குருன்னா அவாள். அவிக மேல பாசம்,துவேசம் மாறி மாறி வரவும் இதான் காரணம்.

ஏழுல செவ் உச்சம்.7ங்கறது ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம். செவ்வாய்னா எதிரி. பாவம் தலீவரு ஆரை நண்பர்னு நினைக்கிறாய்ங்களோ அவிகளே ஆப்பு வைக்க இதான் காரணம். அதே போல ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் எல்லாருமே குழி தோண்டவும் இதான் காரணம்.

இவர் 7லருந்து ஜன்மத்தை பார்க்கிறதால சட்டுனு கோவம் வந்துருது. ஆருனா ரிப்போர்ட்டர் வில்லங்கமா கேள்வி கேட்டா " எந்த பேப்பரு"ன்னு சீறவு இதான் காரணம்.

இந்த ஜாதகத்துக்கு செவ்வாய் தான் யோககாரகன்.இவர் 7ல உட்கார்ந்து உச்சம் பெற்றார். அதனால பெரியா(ரோட)ளுங்களோட சகவாசம் ஏற்பட்டுது. செவ்வாய் சகோதர காரகர் (அண்ணா தம்பி) அதனாலதான் அண்ணா ஒரு லைஃப் கொடுத்தார். உடன்பிறப்புங்க கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. இவர் தான் ஒன்னும் கொடுக்கமாட்டேங்கறாரு.

4/11 க்கு அதிபதி விரயத்துல உட்கார்ந்தாரு. அதாவது வீடு வாசல் எல்லாம் விரயமா போயிரனும். இந்த பாய்ண்டை ஆரோ கிட்னி உள்ள ஜோசியர் கேட்ச் பண்ணி சொன்னதால வீட்டை "தானம்" பண்ணிட்டாரு போல.

தானம்னா என்ன ? தாரை வார்த்து கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ள போட்டுக்கிட்டு இறங்கிரனும்.அதான் தானம். அதை விட்டுட்டு................( வேணம்பா பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கெதுக்கு -சென்னை டு சித்தூர் எவ்ள நேரம் ஆயிரப்போவுது)

அப்பாறம் பாருங்க சோதரஸ்தானாதிபதியான புதன் விரயத்துல போய் பவர் ஃபுல்லா இருக்காரு. எம்.ஜி.ஆரையும் சகோதரர்னு தானே விளிச்சிட்டிருந்தார் ( பேச்சு -எழுத்துல) புதனுக்குரிய கடவுள் விஷ்ணு. ராம -சந்திரன்னா அது வைஷ்ணவ நாமம்தானே. அதான் பாவம் வாத்யாருகிட்டே செமர்த்தியா வாங்கி கட்டிக்கினாரு.

கம்யூனிகேஷன்ஸுக்கு அதிபதியான புதன் பலம் பெற்றார். இதனால தான் ஒரு பக்க வசன காலம் முதல் ஒரு வார்த்தை வசனம் வரை குப்பை கொட்டறாரு.அந்த புதன் விரயத்துல உள்ளதால தன் பக்க வாதத்தை எடுத்து வைக்கிறப்ப மாத்திரம் மொக்கையாயிருது. (லேட்டஸ்ட் உதாரணம்: ஸ்பெக்ட்ரம் ஜி).
அதே போல டாக்டர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் யாராலயும் உபயோகமில்லாம போக இதான் காரணம்.


அது சரிங்கண்ணா ஏன் சோனியா அம்மா இப்படி இம்சை பண்றாய்ங்கனு கேப்பிக.சொல்றேன். கடகலக்னத்துக்கு வுமன் தான் எமன். (ஜெயலலிதா கதை ஆச்சு.இப்ப சோனியா ) ராகுன்னா விதவைய காட்டற கிரகம்.

நம்ம தலீவருக்கு ராகு கேது பாப கத்திரி யோகத்தை தந்திருக்காய்ங்க. அதாவது ஒரு விதவையால தனம்,சொல் வாக்கு,செல்வாக்கு, குடும்பம் எல்லாமே பறிபோகனும். ராகு எட்டை பார்க்கிறதால (வேணாங்கண்ணா ஓவரா போயிரும்) அதுவும் போகனும்.

ஆடு ஆரை நம்புது? கசாப்புக்காரனைத்தானே நம்புது. சரி இந்த கேது தசையில தாத்தாவுக்கு ஆப்புதானான்னு கேப்பிக சொல்றேன்.

இன் ஜெனரல் கேது தசை/புக்தி யாருக்குமே ஒர்க் அவுட் ஆவதில்லை. காரணம் கேது ஞான காரகன். இவர் ஞானத்தை தான் தருவார். துன்பங்கள் மூலம் தான் ஞானம் பாசிபிள். ஒரு வேளை நீங்கள் ஆராய்ச்சி துறையிலோ , தியானம், சன்னியாச வாழ்விலோ இருந்தாலன்றி கேது கொஞ்சமேனும் தீய பலனை தராது விட மாட்டார். தினசரி ஒரு மணி நேரமேனும் காவி வேட்டி அணியவும். மாதம் ஒரு கோவிலில் ரா தங்கவும்னு சொல்லலாம். ஆனால் தலீவர் கோச்சுக்குவார்.

வேணம்னா ஒன்னு பண்ணலாம் கேது ராகு சமசப்தகத்துல இருக்கிறதால மஞ்ச சால்வைய தூக்கிப்போட்டுட்டு மேற்சொன்ன ஒரு மணி நேரம் கருப்பு சால்வை அணியலாம். பெரியார் சம்பந்தப்பட்ட இடத்துல ராத்தங்கலாம்..

என்னைக்கேட்டா அல்டிமேட் பரிகாரம்:

அந்த காலத்து வானப்ரஸ்தம் மாதிரி தாளி என் சொச்ச வாழ்க்கைய பெரியார் கொள்கைய பரப்ப உபயோகிக்கப்போறேன்னுட்டு கருப்பு சால்வையோட ரோட்ல இறங்கிர்ரதான். அழகிரியா ஸ்டாலினாங்கறதை தொண்டர்கள் முடிவு செய்யட்டுமே.

ஜாதக உதவி: வகுப்பறை http://classroom2007.blogspot.com/2007/03/blog-post_21.html