இது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னா ..
குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம். ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும்.
யுவார் ஓகே. ஆனால் உங்களை சுத்தி உள்ளவுகளும் ஆரோக்கியமான உடலும்,மனசும் பெற்றிருக்கனுமில்லையா? அப்படி இல்லேன்னா என்ன ஆகும்?
உடல்,மன ஆரோக்கியம் காரணமா நீங்க உற்சாகம், எனர்ஜியோட இருப்பிங்க. அதெல்லாம் சேர்ந்து உங்களை சந்தோஷமா இருக்க வைக்கும்.
ஸ்தூல நிலை வேறயா இருந்தாலும் சந்தோஷமா இருப்பிக.
அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக .அதைப்பார்த்து நாலு பேர் உங்களை நக்கலடிக்கலாம். ஏன் உங்களுக்கு தீமை கூட செய்யலாம் (சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான்)
குரு தனியா நின்னா என்ன ஆயிரும்னு கேப்பிக சொல்றேன். குருன்னா டூ குட்.( Too good/ do good) குருவோட இன்னம் ஏதோ ஒரு கிரகம் சேர்ந்தா இதை கட்டுப்படுத்தும். இல்லாட்டி அரண்மனை வாசக்காலை வெட்டிக்கொடுத்த கர்ணன் கதையா போயிரும்.
தர்மம் பண்ணியே போண்டியான குடும்பம் ஊருக்கு நாலிருக்குல்லியா? நல்லதை பண்றது ஓகே.ஆனால் எதுக்காக பண்றோம்னு ஒரு கேள்வி வருமில்லியா?
கூட வேற ஏதாச்சும் கிரகமிருந்தா அந்த கிரக காரகத்வத்துக்குட்பட்ட ஏதோ ஒரு நோக்கத்துக்காக பண்றான்னு ஜனம் அஜீஸ் பண்ணிப்பாங்க.
அப்படியில்லாம குரு தனிய நின்னா நல்லது பண்றதுக்காகவே நல்லது பண்ண ஆரம்பிச்சுருவம்.
இதை ஜீரணிச்சுக்க முடியாத சனம் உங்க நற்செயலுக்கு விபரீதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து கதை கட்ட ஆரம்பிச்சுரும்.
உதாரணமா நீங்க ஒரு ஏழக்குடும்பத்துக்கு உதவறிங்கனு வைங்க. அந்த வீட்டு பெண்ணை கணக்கு பண்ணத்தான் பண்றிங்கனு கதை கட்டிருவாய்ங்க.
கோவிலை புதுப்பிக்க இறங்கினிங்கனு வைங்க. மூலவர் அடியில புதையல் இருக்குப்பா அதை குறிவச்சுத்தான் இந்த வேலைல இறங்கியிருக்கானு சொல்லிருவாங்க.
குரு தனிய நின்னா வர்ர பிரச்சினை இதான்.
மேலும் குரு ஞாபகசக்தியை,திட்டமிடும் திறமையை,பொறுமைய தரக்கூடிய கிரகம்.வெற்றிக்கு இதுகள விட்டா வேற வழி ஏது? குரு உச்சம் பெற்றதால குரு காரகத்வம் கொண்ட எல்லா மேட்டருமே நல்லா ஒர்க் அவுட் ஆகும் .(பார்க்க: இணைப்பு நெம்பர் டூ )மனுசன் வாழ்க்கையில உசர உசர தனிமைப்பட்டு போயிருவான்.
இதுல குரு வேற தனிய இருந்தா நீங்க தனிமையை விரும்ப ஆரம்பிச்சுருவிங்க. சிங்கம் தனித்திருக்க சிறு நரிகள் எல்லாம் கூட்டா சதி பண்ண ஆரம்பிச்சுரும்.
குருங்கறது பிராமண கிரகம். பிராமணன் தனித்து நின்னு எதையும் கழட்ட முடியாது. அவனுக்கு அரசாங்கத்தோட,சமூகத்தோட ,மக்களோட உதவி தேவை. குரு தனியே நின்னா ஜாதகர் பாட்டுக்கு சோலோவோ தான் செய்ய நினைச்சதை செய்துக்கிட்டு போய்க்கினே இருப்பார்.
அப்ப சனம் தங்களோட கற்பனை சிறகை படபடனு அடிச்சு வதந்தீகளை கிளப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. இதைத்தான் நிந்தனைங்கறது.
4 comments:
//சிங்கம் தனித்திருக்க சிறு நரிகள் எல்லாம் கூட்டா சதி பண்ண ஆரம்பிச்சுரும்.//
:))
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் ...
அந்தணன் தனித்து நின்றால் அவதிகள்
ஆயிரம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்,
அதன் அர்த்தத்தத்தை மிக அற்புதமாக
விளக்கியிருக்கிறீர்கள்
super
என் ஜோதிட குருவே!
வாங்க கணேசன் !
நமக்கு அல்லாரும் குரு தான்.ஆனால் நாம ஆருக்கு குருவில்லிங்கோ ..
Post a Comment