'>
Showing posts with label கேது. Show all posts
Showing posts with label கேது. Show all posts

Tuesday, March 19, 2013

ராகு-கேது : ஒரு ஆழமான பார்வை

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டிங்கற சீரிஸ்ல செவ் - செவ் தோஷம் -ஆண்பெண் வித்யாசம் - பரிகாரங்கள் இப்படி சுத்தி அலைஞ்சு நேத்திக்கு செவ் சாப்டர் க்ளோஸ். இன்னைக்கு ராகு -கேதுவை பத்தி பார்த்தாகனும்.இவிகளை பிரிச்சே பார்க்க முடியாதுங்கோ?
ஏன்னா  ரெண்டுமே  நிழல் கிரகங்கள் . ஆன்டிக்ளாக் வைஸ் சஞ்சரிக்கும் கிரகங்கள். ஒன்றை ஒன்று 180 டிகிரில பார்க்கும். ( ரெண்டு  பேரும் ஒருத்தருக்கொருத்தர் 7 ஆம் வீட்டில் இருப்பாய்ங்க)எந்த கிரகத்தோடு சேர்ந்தாலும் அந்த கிரகத்தின் பலத்தை எல்லாம் உறிஞ்சிருவாய்ங்க.
செவ்வாய்க்கு பின்னாடி  நிக்கிற கிரகம்லாம் கிரகயுத்தத்துல தோத்துட்டதா சொல்வாய்ங்க. அந்த செவ்வாயோட சூரியன் சேர்ந்தா செவ் காலி. அந்த சூரியனோட புதன் சேர்ந்தா சூரியனோட பலம் குறையும். அந்த சூரியனுக்கே ஆப்படிக்கிற கிரகம் ராகு.
ஜாதகங்கள்ல ராகு கேதுக்கள் கீழ் கண்ட காம்பினேஷன்ல இருப்பாய்ங்க.
1-7
2-8
3-9
4-10
5-11
6-12
பொதுவிதிப்படி ராகு கேதுக்கள் 3,4,6,10,11,12  ல இருந்தா தோஷமில்லைன்னு சொல்றாய்ங்க.ஆனால் ஒரு ஜாதகத்துல ராகு 3 ல இருந்தா கேது 9 ல இருப்பாரு. ( அப்பாவுக்கு ஆப்பு)
ராகு 4 ல இருந்தா தோஷமில்லேங்கறாய்ங்க.ஆனால் தாய்க்கு நலிவை தரும். வீட்டு வாசப்படிக்கு ,உத்தரத்துக்கு எல்லாம் செதில் பிடிக்கும், வாகனம் திருடு போகவும் வாய்ப்பிருக்கு,படிப்பு காலி.
ராகு 6 ல இருந்தா தோஷமில்லேங்கறாய்ங்க. ஆனால் கேது 12ல இருப்பாரே.ஆரம்பத்துல இருந்து எதிரிகளோட மோதி மோதி கடேசி காலத்துல விரக்தி ஏற்பட்டுரும்
கேதுவாச்சும் பரவாயில்லை உலக வாழ்க்கையிலான பற்றை விட்டுட்டு சன்யாசம் வாங்கிக்கிட்டா ஒழிஞ்சு போன்னு விட்டுருவாரு .சன்னியாசத்துல பக்காவா இருக்கிற வரை நாம சேஃப்.(உ.ம் நித்யானந்தா)சன்னியாசத்துக்கு பங்கம் வந்தா அசிங்கப்படுத்திருவாரு (உ.ம் நித்யானந்தா)
ஆனால் ராகு?  ஊஹூம். ஏன்? ஏன்?ஏன் இந்த கொலைவெறின்னு கேப்பிக. பதில் சீக்கிரமே வருது .ப்ளீஸ் வெய்ட்!
ராகு -கேது ரெண்டு பேர்ல ஒருத்தரு பிரதிகூலமா இருந்தாலே லொள்ளு. இதுல ரெண்டு பேரும் பிரதிகூலமா இருந்தா செமை நாஸ்தி தான். 
இந்த ரெண்டு பேர்ல ஒருத்தரு ஜன்மத்துல இருக்காய்ங்கன்னு  வைங்க. இது தங்களை ரகசியங்களுக்குள் புதைத்துவிடும். ஒரு காலத்துல அரசாங்க ரகசியங்கள் வெளி நாட்டுக்கு லீக் செய்யப்பட்டதாய் பரபரப்பு ஏற்பட்டது ஞா இருக்கலாம்.

கண்டதையும் ரகசியம் என்று குறிப்பிட்டு தொலைத்ததால் - ரகசிய காப்பு இயலாத ஒன்றாய் போனதால்  இது இப்படி  நிகழ்ந்தது

தாங்கள் கண்டதுக்கும் ரகசியம் மெயின்டெய்ன் செய்பவராக இருக்கலாம். ரகசியம்னா "எல்லாத்துலயும்"

நீங்க சுவாசிக்கும் காத்து,குடிக்கும் நீர்,உண்ணும் உணவு எல்லாத்தையும் விசமாக்கிருவாய்ங்க.
சந்தேக புத்தி,போதை பொருட்களில் ஆர்வம், சட்ட விரோத செயல்களில் ஈர்ப்பு வந்திரும். கண்டதுக்கும் சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ண ஆரம்பிச்சுருவிங்க.  உங்களை சுத்தி ஒரு திரை படிஞ்சுரும். சனம் சிண்டை பிச்சுக்குவாய்ங்க. (உங்களை எப்படி புரிஞ்சுக்கறதுன்னுதான்)
ஒன்னு ஒல்லியோ ஒல்லி.இல்லின்னா நீர் உடம்பா இருக்கும்.மேலும் மலைப்பாம்பு மாதிரி   பாடி டாப் டு பாட்டம் ஒரே சைஸா இருக்கலாம். வளைவுகளே இருக்காது.
தின்னதும் உட்கார கூட முடியாது.ஒடனே தூங்கனும். அன்வாரன்டட் மோஷன்ஸ்,வாமிட்டிங் சென்சேஷன்லாம் வரும். ஃபுட் பாய்சன் நடக்கலாம். உங்களை சுத்தி சதிகள் அரங்கேறும். அல்லது நீங்களே அதுல ஒரு ரோல் ப்ளே பண்ணலாம்.
ஜன்மத்துல ஒருத்தர் இருந்தா 7 ல அடுத்தவரு இருப்பாரே. இதனால ஃப்ரெண்ட் ,லவர், பார்ட்னர் ,வைஃப் ஆரா இருந்தாலும் ஒன்னு அவிக உங்களுக்கு ஆப்படிப்பாய்ங்க. அல்லது நீங்க அவிகளுக்கு துரோகம் பண்ணுவிங்க.
உங்களுக்கும் -உங்க மனைவி -உங்க கொலிக்ஸ் எல்லாருக்கும் பாம்போட குணங்கள் வந்துரும். சொசைட்டியோட இன்டராக்சனே இருக்காது.
ரெண்டுல இருந்தா?
ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும்  எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். எவருக்கேனும்ங்கற இடத்துல இதர மதத்தவர்,இதர மொழி பேசுவோர்னு புரிஞ்சுக்கங்க.
3ல் இருந்தால்:
 நீங்க பிறந்த பிறகு உங்கள் தாயாருக்கு அபார்ஷன்,மிஸ்கேரி மாதிரி எதுனா நடக்கலாம். அல்லது உங்களுக்கு பிறகு பிறக்கிறவுக (தங்கை தம்பி) முன்னேற்றம் பாதிக்கப்படும். அதீத மனோதைரியத்தை தரும்.பயணத்துக்கு அஞ்ச மாட்டீங்க. சவுண்ட் பாக்ஸ்ல பிரச்சினை வரலாம்.

எச்சரிக்கை:
சாதாரணமா பதிவு போட ஆரம்பிச்சா அண்ணே வணக்கம்ணேன்னு ஆரம்பிச்சு பட்டுன்னு உடுங்கஜூட்டுல முடிச்சுருவம்.
என்ன ஆச்சுன்னு புரியலை. இந்த பதிவை தவணையில அடிச்சு ஒப்பேத்த வேண்டியதா போயிருச்சு. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா ராகுவை பத்தி தெரிஞ்சுக்க பலருக்கு ஆர்வமில்லை.
அவிக மட்டும் ராகுவை பத்தி என்ன எழுதிரப்போறானோ இந்த மன்சன்னு அப்பப்போ நினைச்சிட்டிருந்தா கூட இந்த நிலை வந்திருக்காது.
நம்ம பதிவுகள் நேயர் விருப்பம் மாதிரி. நீங்க கார்டு கூட போட தேவையில்லை. ச்சொம்மா நினைச்சா போதும்.அது பதிவா வரும்.
என்ன .. இதை படிச்ச நிமிசத்துல இருந்து அப்பப்போ நம்மை நினைச்சுக்குவிங்கல்ல. அப்போ சரி உடுங்க ஜூட்டு.

Monday, December 12, 2011

கேதுவும் வினாயகரும்

நாங்களும் யூத்துதான் !



அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் -கடவுளும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கிற மேட்டர் உங்களுக்கு தெரியும்.இடையில் ஒரு சில பதிவுகள் அவசியம் - அவசரம் கருதி வேற ரூட்ல போயிருச்சு.

இன்னைக்கு கேதுவை பற்றி பார்த்துருவம். இவ‌ருக்குரிய‌ க‌ட‌வுள் வினாய‌க‌ர்னு பஞ்சாங்கம்/ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

மொதல்ல கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்னு பார்த்துருவம் .அப்பாறமா கேதுவால் வரும் இம்சைகளை கட்டுப்படுத்த ஆன்மீக ரீதியில் வேறு ஏதாச்சும் வழி இருக்கான்னும் பார்ப்போம்.

கேது விரக்தியை தந்து இலவச இணைப்பாக ச‌ந்யாச‌த்தை த‌ருப‌வ‌ர், வினாயகருக்கு பெண்டாட்டி,
பிள்ளைகள் கிடையாது. (இவையில்லாத‌வ‌ர் ச‌ந்யாசி தானே.). கேது த‌ர்க‌ம‌ற்ற‌ த‌டைக‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர். பிள்ளையார் த‌டைக‌ளை வில‌க்குப‌வ‌ர்.விக்னம்+ஈஸ்வரன் = விக்னேஸ்வரர் (விக்னம்னா தடைகள்)

ஆஞ்ச‌னேய‌ர் கூட‌ பிர‌ம்ம‌ச்சாரிதான். ஆனால் அவ‌ருக்கு ராம‌னுட‌ன் ஆண்டான்/அடிமை உற‌விருந்த‌து. பிள்ளையாருக்கு அப்ப‌டி ஏதும் கிடையாது. சொந்த‌ அப்பாவின் தேர‌ச்சையே பொடி செய்த‌வ‌ர் அல்ல‌வா? (ப‌ட்ட‌ண‌ம் பொடி இல்லிங்க‌)

கேது என்றால் எளிமை. எளிமைக்கு மறு பெயர் வினாயகர் .மற்ற சாமிகளை ஸ்தாபனம் பண்ணனும்னா கல்லெடுத்து -சிலை செய்து வைக்கனும். ஆனால் பிள்ளையார் அப்படி இல்லை களி மண்ணிருந்தாலோ ஒரு பிடி மஞ்சள் தூள் இருந்தாலோ போதும், அட .. கொஞ்சம் சாணி இருந்தா அதுல கூட "பிடிச்சு"வச்சுரலாம்.

மேலும் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் காரணமா அம்மா மாதிரியே பொஞ்சாதி வேணம்னு ஆத்தங்கரையில அரச மரத்தடியில செட்டில் ஆன பார்ட்டி.

என்ன ஒரு சோகம்னா ஆக்கிரமிப்பு,மணல் கொள்ளை ,கழிவுகள் காரணமா ஆறுகளே காணாம போயிட்டிருக்கு.

கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி.

ஞானம் பிரணவத்தில் அடக்கம். பிரணவத்தின் பொருளை தர்க ரீதியாக விளக்கியவர் ஞான பண்டிதனாகிய முருகன்.

ஆனால் ஓங்காரத்தின் வடிவாகவே இருப்பவர் வினாயகர் எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம்.

ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது. வினாயகருக்கு ரெம்ப பிடித்தமானது.

இதை பத்தி வேலூர் மூலிகை மணி டாக்டர் இரா.கண்ணப்பர் கூட எளுதியிருக்காரு. ( பாம்பு -கீரி சண்டைக்கு பிறகு பாம்புக்கடி வாங்கின கீரி அருகம்புல் முளைச்ச இடத்துக்கு வந்து அது கடிச்சு குதறி – வெளிப்பட்ட ரசம் தன் காயங்களின் மேல படும்படியா செய்யுமாம். உடனே பாம்பு விசம் முறிஞ்சுருமாம்)

அது பச்சைப்புல் , ரசம் , கீரியோட கிட்னி சைஸு, அதனோட கப்பாசிட்டியை பொருத்தவரை ஓகே. ஆனால் நம்ம சைஸுக்கு அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்.

Sunday, December 11, 2011

கேதுவும் வினாயகரும்

அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் -கடவுளும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கிற மேட்டர் உங்களுக்கு தெரியும்.இடையில் ஒரு சில பதிவுகள் அவசியம் - அவசரம் கருதி வேற ரூட்ல போயிருச்சு.

இன்னைக்கு கேதுவை பற்றி பார்த்துருவம். இவ‌ருக்குரிய‌ க‌ட‌வுள் வினாய‌க‌ர்னு பஞ்சாங்கம்/ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

மொதல்ல கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்னு பார்த்துருவம் .அப்பாறமா கேதுவால் வரும் இம்சைகளை கட்டுப்படுத்த ஆன்மீக ரீதியில் வேறு ஏதாச்சும் வழி இருக்கான்னும் பார்ப்போம்.

கேது விரக்தியை தந்து இலவச இணைப்பாக ச‌ந்யாச‌த்தை த‌ருப‌வ‌ர், வினாயகருக்கு பெண்டாட்டி,
பிள்ளைகள் கிடையாது. (இவையில்லாத‌வ‌ர் ச‌ந்யாசி தானே.). கேது த‌ர்க‌ம‌ற்ற‌ த‌டைக‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர். பிள்ளையார் த‌டைக‌ளை வில‌க்குப‌வ‌ர்.விக்னம்+ஈஸ்வரன் = விக்னேஸ்வரர் (விக்னம்னா தடைகள்)

ஆஞ்ச‌னேய‌ர் கூட‌ பிர‌ம்ம‌ச்சாரிதான். ஆனால் அவ‌ருக்கு ராம‌னுட‌ன் ஆண்டான்/அடிமை உற‌விருந்த‌து. பிள்ளையாருக்கு அப்ப‌டி ஏதும் கிடையாது. சொந்த‌ அப்பாவின் தேர‌ச்சையே பொடி செய்த‌வ‌ர் அல்ல‌வா? (ப‌ட்ட‌ண‌ம் பொடி இல்லிங்க‌)

கேது என்றால் எளிமை. எளிமைக்கு மறு பெயர் வினாயகர் .மற்ற சாமிகளை ஸ்தாபனம் பண்ணனும்னா கல்லெடுத்து -சிலை செய்து வைக்கனும். ஆனால் பிள்ளையார் அப்படி இல்லை களி மண்ணிருந்தாலோ ஒரு பிடி மஞ்சள் தூள் இருந்தாலோ போதும், அட .. கொஞ்சம் சாணி இருந்தா அதுல கூட "பிடிச்சு"வச்சுரலாம்.

மேலும் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் காரணமா அம்மா மாதிரியே பொஞ்சாதி வேணம்னு ஆத்தங்கரையில அரச மரத்தடியில செட்டில் ஆன பார்ட்டி.

என்ன ஒரு சோகம்னா ஆக்கிரமிப்பு,மணல் கொள்ளை ,கழிவுகள் காரணமா ஆறுகளே காணாம போயிட்டிருக்கு.

கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி.

ஞானம் பிரணவத்தில் அடக்கம். பிரணவத்தின் பொருளை தர்க ரீதியாக விளக்கியவர் ஞான பண்டிதனாகிய முருகன்.

ஆனால் ஓங்காரத்தின் வடிவாகவே இருப்பவர் வினாயகர் எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம்.

ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது. வினாயகருக்கு ரெம்ப பிடித்தமானது.

இதை பத்தி வேலூர் மூலிகை மணி டாக்டர் இரா.கண்ணப்பர் கூட எளுதியிருக்காரு. ( பாம்பு -கீரி சண்டைக்கு பிறகு பாம்புக்கடி வாங்கின கீரி அருகம்புல் முளைச்ச இடத்துக்கு வந்து அது கடிச்சு குதறி – வெளிப்பட்ட ரசம் தன் காயங்களின் மேல படும்படியா செய்யுமாம். உடனே பாம்பு விசம் முறிஞ்சுருமாம்)

அது பச்சைப்புல் , ரசம் , கீரியோட கிட்னி சைஸு, அதனோட கப்பாசிட்டியை பொருத்தவரை ஓகே. ஆனால் நம்ம சைஸுக்கு அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்.

கீழே உள்ள ஸ்லைட் ஷோவை பார்க்க மாட்டிங்கனு தெரியும். இதெல்லாம் ச்சொம்மா நம்ம திருப்திக்கு போட்டுவைக்கிறதுதேன்



Saturday, September 10, 2011

பில்லி சூனியமும் கேதுவும்


பில்லி சூனியமும் கேதுவும் ஆடியோவை கேட்க கீழ்காணும் ப்ளேயரில் ப்ளே பட்டனை சொடுக்கவும்

Wednesday, September 7, 2011

ஒரு நானோ கார் இலவசம்


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கும் ஆடியோ பாடம் தொடருது. நேத்து ராகு கேதுக்கள் பற்றிய முன்னோட்டம் + துவாதச பாவங்களில் ராகு நின்ற பலனை பார்த்தோம். இன்னைக்கும் ராகு -கேது பற்றிய முன்னோட்டம் தொடருது ( நேத்து மிஸ் பண்ண டேட்டா) .

இத்துடன் துவாதச பாவங்களில் கேது நின்ற பலனையும் சொல்லியிருக்கேன். ஆடியோவா டெக்ஸ்டான்னு ஒரு வாக்கு பதிவு ஆரம்பமாகியிருக்கு. Read More

Friday, February 18, 2011

2011,மே16, ராகு கேது பெயர்ச்சி பலன்


மே16, ராகு கேது பெயர்ச்சி பலன்
அண்ணே வணக்கம்ணே,
என்னடா .. ராசிபலனோட எஃபெக்டே 15 டு 30 பர்சென்ட் தானு சொன்ன முருகேசன் ராசிபலனை வச்சே காலத்தை ஓட்டிர்ராப்ல இருக்குனு நினைச்சிராதிங்க. நம்ம நோக்கம் வெறுமனே பலன் சொல்லிட்டு போறதில்லிங்கோ. அடுத்த ராகு கேது பெயர்ச்சிக்கு நீங்க நம்ம சைட்ல பலன் எழுதற ரேஞ்சுக்கு உங்களை ப்ரிப்பேர் பண்றதுதான் நம்ம நோக்கம். ராகு கேதுவை பத்தி நம்ம ப்ளாக்ல நிறையவே எழுதியிருக்கன். அதையெல்லாம் ஒரு ரவுண்டு படிச்சிங்கனா ஒரு ஐடியா வரும்.

தற்சமயத்துக்கு ராகு கேதுவை பத்தி சின்ன அறிமுகம் கொடுத்துட்டு பலனை பார்க்க போயிருவம். இவிக ஒரு ராசில ஒன்னரை வருச காலம் இருப்பாய்ங்க. ஒருத்தருக்கொருத்தர் 7 ஆவது வீட்ல இருப்பாய்ங்க. மத்த கிரகங்கள் இவிக மத்தில மாட்டினா அது கால சர்ப்பதோஷம். இது கோசாரத்துல எப்ப வருதுனு பாருங்க. கால சர்ப்பதோஷத்தோட ட்ரெய்லரை பார்க்கலாம்.

இவிகளுக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. தாங்கள் நின்ன ராசி,அதனோட அதிபதி,தங்களோட சேர்ந்த கிரகங்களை பொருத்து பலன் தருவாய்ங்க. இதர கிரகங்களை போலவே இவிகளுக்கு காரகத்வம் எல்லாம் உண்டு. (போர்ட் ஃபோலியோ)

உங்களுக்கு ராகு கேதுக்கள் அனுகூலமா இருந்தா அவிக போர்ட் ஃபோலியோல வெற்றிக்கொடி கட்டலாம் . இல்லைன்னா அவிக போர்ட் ஃபோலியோல இருக்கிற அம்சங்கள் உங்களுக்கு டின் கட்டலாம். மொதல்ல போர்ட் ஃபோலியோவ பார்ப்போம்.

போர்ட் ஃபோலியோ ஆஃப் ராகு: (அவரே சொல்றாருங்கோ)
மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே.
ராகு சரியில்லின்னா செய்யவேண்டிய பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்
கேதுவோட போர்ட் ஃபோலியோ:
நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.
கேது சரியில்லைன்னா செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பி.கு:
ராகு கேதுக்கள் இந்திய அரசியலும் ஊழலும் போல பிரிக்கப்பட முடியாத கிரகங்கள் பாஸ்! அதனால உங்களுக்கு ஒருத்தர் சரியில்லைன்னா கூட ரெண்டு பேரோட பரிகாரங்களையும் செய்யறது பெட்டர். ஒய் பிக்காஸ் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிடறதால ஒருத்தர் நல்லாருந்தாலும்,அடுத்தவர் இவரை பார்க்க இவரே இம்சை பண்ணாலும் பண்ணிருவாரு.

மேலும் கேது சுக்கிரனுடைய ராசியிலும், ராகு செவ்வாயுடைய ராசிலயும் இருக்கிறதால கேது சரியில்லாதவுக சுக்கிரன், ராகு சரியில்லாதவுக செவ்வாய் தொடர்பான பரிகாரங்களையும் செய்துக்கறது பெட்டர். ( நம்ம ப்ளாக்லயே தேடுங்க. கிடைக்கும். தேடவேண்டிய வார்த்தை : " நவீன பரிகாரங்கள்"


பெண்கள்:
இன்னொரு முக்கியமான மேட்டருங்கண்ணா கீழே ராகு,கேது ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய பெண்களின் அடையாளங்களை தந்திருக்கன்.ராகு பலம்,கேதுபலம் இல்லாத சமயத்துல இவிகளை டீல் பண்ணா பல்பு வாங்கிருவிங்க டேக் கேர்.

ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்

கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்:

தொடர்ந்துபடிக்க இங்கே அழுத்தவும்.

Friday, February 11, 2011

சந்திரன் கெட்டால்

சந்திரன் கெட்டால் மீன்ஸ்.. நீசமாதல் (விருச்சிகம்) ,ராகு,கேது ,சனி,சேர்க்கை. இவரோட குரு சேர்ந்தா 14 வருசம் நாயடி. ஆனால் சீமான் மாதிரி திருப்பியடிக்க ஆரம்பிச்சா பேயடி ( பட்டாபிசேகமுங்கோ) ,இவரோட சுக்கிரன் சேர்ந்தா செமை கில்மா தான் போல.

எச்சரிக்கை:
இதெல்லாம் பொதுப்பலன் தேன். அப்படியே நம்பி, தேம்பாதிங்க.

சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன உங்கள் புத்தியை மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாவார்.திடீர் பயணங்கள் ஏற்படலாம்.சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வருந்துவதும் நடக்கலாம்.தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
அடிக்கடி வீடு மாறுதல் அ வீட்டு நிதி நிலை மாறுதலை காட்டும். எல்லா வகையிலும் எவ்ரி டூ இயர்ஸுக்கு பெரும் மாற்றம் தெரியும். வாகன விசயத்திலும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கும். சில காலம் சொத்துக்களை விற்று வாழும் நிலையும் ஏற்படலாம். அதே சமயம் திடீர் தனலாபம் ஏற்பட்டு சொத்து வாங்கும் சூழலும் ஏற்படும் இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸ் இருக்கும் சில சமயம் அவை அச்சு அசலாக நிஜமாவதும் உண்டு..

Thursday, February 10, 2011

ராகு கேதுக்கள் கில்மா : 2


எச்சரிக்கை:

நமக்குனு அனுபவஜோதிடம்ங்கற பேர்ல ஒரு வெப்சைட் க்ரியேட் ஆயிருச்சுங்கண்ணா . உபயம் திரு.சரண் . கொஞ்ச நாளைக்கு பழக்கதோஷத்துல ப்ளாகராவே தொடரலாம்னு ஒரு எண்ணம். ( ஹி ஹி அதுக்குள்ளாற இங்கன உள்ள சரக்கையெல்லாம் அங்கன அடுக்கி வைக்கனும்ல)

ஜாதகத்துல ராகு கேதுக்கள் சரியில்லைன்னா தாம்பத்யம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்னு சின்ன ட்ரெய்லரை பார்த்தே அரண்டு போயிருப்பிங்க. ஆனாலும் இந்த பதிவை படிக்க வந்த உங்களுக்கு இன்னம் சில க்ளூஸ் தரேன். அதுவே க்ளூக்கோசா உங்களை உற்சாக படுத்தும்.

ஆல்கஹாலிக்ஸ், ட்ரக் அடிக்ட்ஸ், கள்ள காதல்/கள்ள உறவு , சூதாட்ட பைத்தியம்,கள்ளக்கடத்தல் பண்ணி வரிசையா மாட்டி போண்டியாகிறவன் ஜாதகத்துல எல்லாம் நிச்சயமா ராகு கேது சரியிருக்கமாட்டாய்ங்க.
இவிக செக்ஸ் லைஃப் எந்த லட்சணத்துல இருக்கும்னு சொல்லனுமா என்ன?

ஆமாங்கண்ணா குங்குமத்துல டெக்காமெரான் கதைகள்னு கில்மா கதைகள் தொடரா வந்ததை எத்தீனி பேரு ஞா வச்சிருக்கிங்க ( எனக்கு சுத்தமா மறந்து போச்சு) பை தி பை முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது.

சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. இதுக்கு பின்னாடி அனேக காரண காரியங்கள் இருக்கு. ஆனால் இதையெல்லாம் அறியாத பிராமணர்கள் ( முக்கியமா சம கால) இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிக்கிறதை சகிக்க முடியலை.

பாம்புக்கும் ராகு கேதுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.

பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இது ஒரு பக்கம்னா பாடில அசிமிலேஷன் ,எலிமினேஷன் ப்ராசஸ்ல கக்கா,மூச்சா, வெளி மூச்சு முழுமையா வெளியேறாம பாடில கேம்ப் அடிச்சுருதுங்க.

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை.

இந்த விஷங்களுக்கான குறியீடுதான் பாம்பு. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும்ங்கறதுதான் விஷயமே.. இதுதான் அசலான சங்கதி.


மேலும் ராகு கேது சரியில்லாதவுகளுகு சர்ப்பத்தின் குணம் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரக் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. ( நன்றி : ஓஷோ) பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி "இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க " என்று ஆரம்பித்த நொடியிலேயே " ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு" என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது. அதாவது ஜாதகரோட பாடி நேச்சர், வே ஆஃப் திங்கிங் மாறவே மாறாது, அதை மாத்தனும்னா அவிக லைஃப் ஸ்டைலை மாத்திக்கனும். என்விரான்மென்டை மாத்திக்கனும். சர்ப்பதோஷம் என்னெல்லாம் செய்யுமோ அதை வாலண்டியரா நடக்கவிடனும். அதான் உண்மையான பரிகாரம்.


மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.

இத்தீனி இம்சைய வச்சிக்கிட்டு என்னத்தை கண்ணாலம்? என்னத்த தாம்பத்யம்? அதனால மொதல்ல உங்க குடும்ப ஜோசியரை பார்த்து உங்க ஜாதகத்துல ராகு கேது நல்ல இடத்துல இருக்காய்ங்களானு பார்த்துக்கங்க.

அடடா.. ஜாதகம் இல்லியா? ஜாதகம் இல்லாமயே உங்க ஜாதகத்துல சர்ப்பதோஷம் இருக்கா இல்லியானு தெரிஞ்சிக்க ஒரு வழி இருக்கு .. டட்ட டாஆஆஆஆஆஆஆஆஆய்ங்க் அது அடுத்த பதிவுல

Wednesday, February 9, 2011

ராகு -கேதுக்களும் கில்மாவும்


இன்னாபா நீ அல்லாத்தையும் கில்மாவோட முடிச்சு போடறேனு அலுத்துக்கிடாதிங்க. நம்ம எல்லா செயல்களுக்கும் பின்னாடி உள்ள விருப்பங்கள் ரெண்டே (அது என்னான்னு இத்தீனி பதிவுக்கப்பாறமும் சொன்னா நான் உங்களை அறிவாளினு மதிக்கலைனு அர்த்தம்) அந்த ரெண்டு விருப்பமும் செக்ஸுல தான் நிறைவேறுது. இதுக்கு ஒரு ஆல்ட்டர் நேட்டிவ் தான் பணம். பணம் வருங்கறதுக்காக பதவி, கில்மா கிடைக்குங்கறதுக்காகத்தேன் பணம்,பதவினு அலையறது. ஆக இந்த லோகத்துல கில்மாவுக்கு தொடர்பில்லாத மேட்டரே கிடையாதுங்கோ ..

கில்மாவுக்கு ராகு - கேதுக்கள் எப்படி சப்போர்ட் தர்ராய்ங்க - ராகு கேது பலம் இல்லைன்னா கில்மா என்னாகும்னு இந்த பதிவுல பார்த்துரலாம்.

ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் உங்களுக்கு ராகு கேது பலமில்லேனு அருத்தம். இதான் சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாட்டா இம்சைதானு ஜோதிடம் சொல்லுது.

தோஷத்தை தோஷம் மணந்தா தோஷத்தை காக்காயா தூக்கிட்டு போவும். ஒரு ம..ரும் கிடையாது. சுத்த ஜாதகர்களோட பொழப்பு கெடக்கூடாது + இனம் இனத்தோட சேர்ந்தா பெருசா அதிர்ச்சி , நிராசை ஏற்படாது . கெட்டு அழிஞ்சாலும் ஒழியட்டும்னுதேன் இந்த விதி.


சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும். இதெல்லாம் ஒரு வகையில நிஜமா கூட இருக்கலாம். இல்லேங்கலை. ஆனால் இதெல்லாம் கட்டுச்சோற்று சித்தாந்தங்கள். கொஞ்சம் முக்கினா நிறைய மேட்டர் வெளியவருமுங்கோ.. வெய்ட் அண்ட் சீ.


என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன்.

உதாரணமா 1-7 ல் ராகு கேது:
இந்த அமைப்பு அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதையை தருது . ( என்னதான் காதலுக்கு கண்ணில்லேன்னாலும் அந்த மாதிரி ஒரு "குருட்டு" காதலி/காதலன் இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு வர்ரதுக்குள்ள கிடைக்கிறதுக்குள்ள பயங்கர டீலாயிருவாய்ங்க
சந்தேக புத்தி:
இது காதல்,காமத்துக்கு மட்டுமே இல்லை. நட்புக்கு கூட ஒதகாத சமாசாரம்.
அனைவரையும் நம்பி மோசம் போவது:
பக்கத்து வீட்டு பையனை ஒரு நாள் ஆணியடிக்க கூப்டா பரவாயில்லை. தினம்தினம் கூப்டா
ஈஸி மணி மீது கவர்ச்சி:
இன்னைக்கு பங்கு மார்க்கெட் தூக்கறதும் விழறதுமா இருக்கு. ஒவ்வொரு தாட்டி விழும்போதும் லட்சக்கணக்கான பார்ட்டிங்க ரங்க நாதன் தெரு நடைபாதையில கர்சீஃப் விக்கிற ஸ்டேஜுக்கு வந்துர்ராய்ங்க. அவிக செக்ஸ் லைஃப் என்ன கதியாகும் ரோசிங்க. குரோஸ் கணக்கா வயாக்ரா உபயோகிச்சாலும் காரியம் நடக்காது.
நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டறது:
தெனாலி ராமன் பூனைக்கு பால் வச்ச கதை தெரியும்ல - அட சூடுகண்ட பூனைங்கற பழமொழியாச்சும் தெரியும்ல. இதே கதை தான் இவிகளோடதும்.ஒரு தாட்டி பிரச்சினைல மாட்டினாலே ( முக்கியமா சென்சிட்டிவ் பார்ட்டிங்களுக்கு ) எல்லாமே ஒடுங்கி போயிரும்.
மனைவி /கணவர் நோயாளியாகவோ, உங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம்:
ஜவஹர்லால் நேரு ஹோமோ செக்ஸுனு ஒரு புஸ்தவத்துல படிச்சேன். கமலா நேருவோட ஹெல்த் கண்டிஷன் அப்படி..

மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு:
எண்ணங்களுக்கு சக்தி அதிகம். ஓஷோ சொல்வாரு .. நீ சாகப்போறேனு ஒருத்தனுக்கு சொல்ட்டா சில மாசத்துல அவனோட ஆயுள் ரேகையில வெட்டு விழுந்துருமாம். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"னு சொம்மாவா சொன்னாய்ங்க.


தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் - இதரரின் சந்தேகத்திற்கு ஆளாதல்:
புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.

பிரச்சினைனு வந்தாலே அது மொதல்ல தன்னோட எஃபெக்ட் காட்டறது பேட்டரிமேல தான்.

2ல் ராகு 8ல்கேது :
ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.

இந்த மாதிரி தின்னது ஃபெவிகாலையே கலந்து குடிச்சாலும் பாடில ஒட்டுமா? ரத்தம் விருத்தியாகுமா? பலான இடத்துக்கு பாயுமா? அப்பாறம் எங்கத்து கில்மா?

பெண் ஜாதத்துல இதை மாங்கல்ய தோஷம்ங்கறாய்ங்க கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
ஆத்துக்காரருக்கு டிக்கெட் கொடுத்த ராகு கேது இத்தோட விட்டா பரவாயில்லை - இதர கிரகங்கள்+பாவங்களும் கெட்டிருந்தா அவரு ஆவி ரூபத்துல " பட்டுவண்ண ரோசாவாம் -பார்த்த கண்ணு மூடாதாம் .. பச்சை மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாய்ங்க"னு பாடவேண்டி வந்துரும்.
பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள்:
என்ன தான் மாற்றுத்திறனாளிகள்னு தலையில வச்சு கொண்டாடினாலும் அவிகளோட செக்ஸ் லைஃப் பத்தி ஆராச்சும் ரோசிச்சமா?
சதா சர்வ காலம் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல்:
தம்பதியில ஆரோ ஒருத்தரு இந்த மாதிரி கேரக்டரா அமைஞ்சுட்டா அவிக லைஃப் என்னாகும்? ஆகே பீச்சே புண்ணாகும்.
குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம்:
கடன் உடன் பகைனு மொட்டையா போடறாய்ங்க. கடன் கில்மாவுக்கு உடன் பகைனு போடனும்ங்கோ..
குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்:
இந்த கலகச்சூழல்ல கில்மா சாத்தியமா?
அண்ணே ! இதெல்லாம் ஜஸ்ட் ட்ரெயிலருதேன். இன்னம் பலான பலான மேட்டர்லாம் மஸ்தா கீது. முக்கியமா "அவாள்". இந்த பாய்ண்டை வச்சு எப்படியெல்லாம் கேஷ் பண்ராய்ங்க - பொழப்பை கெடுக்கிறாய்ங்கங்கற மேட்டர் எல்லாம் அடுத்த பதிவில பார்ப்போம்..