'>

Saturday, December 18, 2010

பிரதமர் ராஜினாமா? ராகுல் புதிய பிரதமர்?


அண்ணே வணக்கம்ணே,
ஆந்திராவுல திடீர்னு தாத்தாவை(ரோசய்யா)  தூக்கி எறிஞ்சுட்டு கிரண்குமார் ரெட்டியை குந்த வச்ச மாதிரி சென்ட்ரல்ல கூட மன்மோகனாரை போய்ட்டு வாங்கன்னுட்டு ராகுலை தூக்கி ஒக்கார வச்சுருவாய்ங்களோனு ஒரு சம்சயம்.

மன்மோகனார் உலகவங்கி உத்யோகஸ்தரா இருக்கலாம். இன்னைக்கும் பென்ஷன் வாங்கிட்டு இருக்கலாம். ஆனால் டெலிகாம் ஊழல்ல பங்கு வாங்கியிருப்பாருன்னு சுப்பிரமணியம் ஸ்வாமி மாதிரி அராத்து அய்யர் கூட சொல்லலை.

இன்னைய தேதிக்கு பலமுறை மன்மோகனார் " நான் போறேன்னு " சொல்லியிருப்பாரு. கதி,விதி இல்லாத குறைக்கு  கைய,காலை பிடிச்சு தொடர வச்சிட்டு வந்தாய்ங்க.  ஆனால் இன்னைக்கு ?

அடப்போங்கய்யா  உங்க கட்சியும் வேணா கொடியும் வேணான்னுட்டு கிளம்பிப்போற மூடுக்கு மன்மோகன் வந்திட்டிருப்பாரு. இது ஒரு பாய்ண்ட்.

அல்லாரும் அய்யய்யோ ராகுல் இந்து தீவிரவாதம்தான் டூ டேஞ்சர்னு அமெரிக்க தூதர் முன்னாடி வாயை கொடுத்து ....ஐ புண்ணாக்கிக்கிட்ட இந்த சந்தர்ப்பத்துல , பீகார்ல காங்கிரஸ் பாடைய தூக்க நாலே பேர் ஜெயிச்சிருக்கிற இந்த சந்தர்ப்பத்துல  ராகுலை பிரதமராக்குவாய்ங்களான்னு கேப்பிக.

கட்சியோட கிராஃப் மேலே போயிக்கினு இருந்தப்ப மகனுக்கு "இப்போதுதானடா பொறுமை"ன்னு சோனியா சொல்லிட்டிருந்திருக்கலாம். ஆனால் இன்னைக்கு கட்சியோட கதையே கந்தலாகிட்டு இருக்கு.

இப்ப இல்லைன்னா எப்பத்துக்கும் இல்லைங்கற நிலை வந்துருச்சு. 3ஜி ஸ்பெக்ட் ரம்ல காசை வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு இப்ப பத்தினி வேசம் போட்டு நோட்டீஸ் கொடுக்கிறோம், ரத்து பண்ணுவோம்னு வசனம் விட்டா பணத்தை கொட்டிக்கொடுத்த கார்ப்போரேட் கம்பெனிங்க சொம்மா இருக்காது.இப்பல்லாம் எம்.பியா பிரதமரை தீர்மானிக்கிறான். கார்போரேட் கம்பெனிக தானே  நிர்ணயிக்குது.
ஏமாந்த கம்பெனிங்கல்லாம் சேர்ந்து யுபிஏ சர்க்காருக்கு சாவு மணி அடிக்கிறது கியாரண்டி.

ஆந்திராவுல ஜகன் ஆட்சியை கவிழ்க்க மாட்டேன்னு சொல்றதை பார்த்தா சென்ட் ரல் லெவல்ல  யுபிஏக்கு ஆப்பு வைக்க  வேற ஒரு ரகசிய ஆப்பரேஷன் ஆரம்பமாயிட்டாப்ல இருக்கு. இல்லைன்னா எங்க ஊரு பாபு சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறதென்னா அதுக்கு சென்ட் ரல் லெவல்ல தேர்ட் ஃப்ரண்ட் (?) கட்சி தலைங்க வந்து ஆதரவு தெரிவிக்கிறதென்ன?

தெலுங்கானா இஷ்யூவும் அறுப்புக்கு வருது. மத்திய போலீஸ்படைகளை தெலுங்கானால குவிச்சிட்டிருக்காய்ங்க. மூக்கருக்கு ( கே.சந்திர சேகர் ராவ்) மூக்கறுப்பு நிச்சயம் போல இருக்கு.பீகார்ல சங்கு ஊதியாச்சு.

"என்னப்பா இப்படி ஆயிபோச்சே"ன்னு சோனியா கேட்க அதுக்கு ராகுல்  என்ன சொல்லியிருப்பாரு கிழவாடிகளை வச்சுக்கிட்டு மேய்க்க முடியலைம்மா.. வேணம்னா டோட்டலா என் கிட்டே விடு. என் வழிக்கு வா"

ஊழலை பத்தி பேசவோ,பீகார் தோல்விய பத்தி பேசவோ காங்கிரசென்ன கம்யூனிஸ்டா? மொத்தத்துல சோனியாவுக்கு கேடு காலம் வந்திருச்சு. ( உயிர் எண் 9. இது எட்டாவது ரவுண்டு )

மன்மோகனார் ஆட்சி கவிழ்ந்தா மக்கள் மத்தில எறும்பு கடிச்ச மாதிரி அனுதாபம் கூட வராது. இதுவே ராகுலாரை பிரதமராக்கினா? அய்யய்யோ சின்ன புள்ளைப்பா , பதவிக்கு வந்து பத்து நாள் ஆகலை அதுக்குள்ளாற கவுத்துட்டாய்ங்களேனு ஒரு அனுதாபம் வரும்.

மேலும் அரிசி விலை,சரித்திரம்லாம் தெரியாத  சிக்ஸ் ட்ராக் ரோடும், சைபர் சிட்டியும் வன்டா நாடு முன்னேறிரும்னு நினைக்கிற சின்னபயபுள்ளைக வீ வாண்ட் ராகுல்னுட்டு இருக்காய்ங்க.

தமிழகத்துல கட்சி ஏற்கெனவே வழுக்கை.உதிரி கட்சிகளை சேர்த்துக்கிட்டு தனிய  நின்னா  உதிர்ந்து போக ஒரு ம..ரும் கிடையாது. டோட்டலா ராகுல் ஆப்பரேஷன் பண்ணுவார். சக்ஸஸ் ஆச்சுன்னா  ராகுல் தூள்னிரலாம்.  ஃபெயில் ஆச்சுன்னா கேடர் சரியா ஒத்துழைக்கலைன்னிரலாம்.

இப்படியெல்லாம் கணக்குபண்ணி ஒரு ராஜினாமாவும், ஒரு புதியபிரதமரையும் பத்திரிக்கைகளோட மொதப்பக்க தலைப்பு செய்திக்கு தானம் பண்ணிருவாய்ங்களோனு ஒரு கணக்கிருக்கு. பார்ப்போம்


எச்சரிக்கை:
எதிர்காலத்தை பத்தி எழுதறப்ப நாமவழக்கமா கிரகம் என்ன சொல்லுதோ அதை மட்டும் எழுதறதுதான் வழக்கம். சனம் நம்மை கிட்டே இதைத்தான் எதிர்பார்க்கிறாய்ங்க.ஆனால் இந்த பதிவை மட்டும் ஜோதிஷம்+என் சிக்ஸ்த் சென்ஸை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன். ப்ளீஸ் நோட் திஸ் பாய்ண்ட்

3 comments:

Unknown said...

ராகுல், சோனியா ஜாதகம் இருக்கா ?
அங்க ஜாதகம் சாதகம இருக்கா, இல்ல பாதகமா இருக்கா ?

பொன் மாலை பொழுது said...

நல்ல கிண்டாலாத்தான் எழுதுறீங்க.
கீப் இட்டு அப்பு ! :)))

Chittoor Murugesan said...

ராகுல்,சோனியா ஜாதகம்லாம் இல்லை. டேட் ஆஃப் பர்த் வச்சி ந்யூமராலஜிக்கலா ஒரு அனலைஸ் பண்ணி வச்சிருக்கேன்