'>

Monday, December 12, 2011

கேதுவும் வினாயகரும்

நாங்களும் யூத்துதான் !



அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் -கடவுளும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கிற மேட்டர் உங்களுக்கு தெரியும்.இடையில் ஒரு சில பதிவுகள் அவசியம் - அவசரம் கருதி வேற ரூட்ல போயிருச்சு.

இன்னைக்கு கேதுவை பற்றி பார்த்துருவம். இவ‌ருக்குரிய‌ க‌ட‌வுள் வினாய‌க‌ர்னு பஞ்சாங்கம்/ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

மொதல்ல கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்னு பார்த்துருவம் .அப்பாறமா கேதுவால் வரும் இம்சைகளை கட்டுப்படுத்த ஆன்மீக ரீதியில் வேறு ஏதாச்சும் வழி இருக்கான்னும் பார்ப்போம்.

கேது விரக்தியை தந்து இலவச இணைப்பாக ச‌ந்யாச‌த்தை த‌ருப‌வ‌ர், வினாயகருக்கு பெண்டாட்டி,
பிள்ளைகள் கிடையாது. (இவையில்லாத‌வ‌ர் ச‌ந்யாசி தானே.). கேது த‌ர்க‌ம‌ற்ற‌ த‌டைக‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர். பிள்ளையார் த‌டைக‌ளை வில‌க்குப‌வ‌ர்.விக்னம்+ஈஸ்வரன் = விக்னேஸ்வரர் (விக்னம்னா தடைகள்)

ஆஞ்ச‌னேய‌ர் கூட‌ பிர‌ம்ம‌ச்சாரிதான். ஆனால் அவ‌ருக்கு ராம‌னுட‌ன் ஆண்டான்/அடிமை உற‌விருந்த‌து. பிள்ளையாருக்கு அப்ப‌டி ஏதும் கிடையாது. சொந்த‌ அப்பாவின் தேர‌ச்சையே பொடி செய்த‌வ‌ர் அல்ல‌வா? (ப‌ட்ட‌ண‌ம் பொடி இல்லிங்க‌)

கேது என்றால் எளிமை. எளிமைக்கு மறு பெயர் வினாயகர் .மற்ற சாமிகளை ஸ்தாபனம் பண்ணனும்னா கல்லெடுத்து -சிலை செய்து வைக்கனும். ஆனால் பிள்ளையார் அப்படி இல்லை களி மண்ணிருந்தாலோ ஒரு பிடி மஞ்சள் தூள் இருந்தாலோ போதும், அட .. கொஞ்சம் சாணி இருந்தா அதுல கூட "பிடிச்சு"வச்சுரலாம்.

மேலும் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் காரணமா அம்மா மாதிரியே பொஞ்சாதி வேணம்னு ஆத்தங்கரையில அரச மரத்தடியில செட்டில் ஆன பார்ட்டி.

என்ன ஒரு சோகம்னா ஆக்கிரமிப்பு,மணல் கொள்ளை ,கழிவுகள் காரணமா ஆறுகளே காணாம போயிட்டிருக்கு.

கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி.

ஞானம் பிரணவத்தில் அடக்கம். பிரணவத்தின் பொருளை தர்க ரீதியாக விளக்கியவர் ஞான பண்டிதனாகிய முருகன்.

ஆனால் ஓங்காரத்தின் வடிவாகவே இருப்பவர் வினாயகர் எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம்.

ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது. வினாயகருக்கு ரெம்ப பிடித்தமானது.

இதை பத்தி வேலூர் மூலிகை மணி டாக்டர் இரா.கண்ணப்பர் கூட எளுதியிருக்காரு. ( பாம்பு -கீரி சண்டைக்கு பிறகு பாம்புக்கடி வாங்கின கீரி அருகம்புல் முளைச்ச இடத்துக்கு வந்து அது கடிச்சு குதறி – வெளிப்பட்ட ரசம் தன் காயங்களின் மேல படும்படியா செய்யுமாம். உடனே பாம்பு விசம் முறிஞ்சுருமாம்)

அது பச்சைப்புல் , ரசம் , கீரியோட கிட்னி சைஸு, அதனோட கப்பாசிட்டியை பொருத்தவரை ஓகே. ஆனால் நம்ம சைஸுக்கு அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்.

No comments: