'>

Friday, December 2, 2011

வீடும் -வீடு பேறும்


அண்ணே வணக்கம்ணே !
இந்த எழுத்தும் ஒரு பேச்சுதேன். என்ன சைலன்ட் மோட்ல நடக்குது. இந்த பேச்சே மனிதன் காட்டில் வாழ்ந்தப்போ வேட்டைக்காக கூட்டத்தை பிரிஞ்சு மறுபடி கூடினப்போ ஆரம்பிச்சிருக்கும் போல. அப்பாறம் மன்சன் சஞ்சார வாழ்க்கைய விட்டு ஸ்திரவாசம் ஏற்படுத்திக்கிட்டப்போ ஊட்டுக்கு வந்து பொஞ்சாதி கிட்டே பீலா விடறதில ஆரம்பிச்சிருக்கும் போல.

அப்படி பீலா விடும்போது கொலிக்ஸ் ஆரும் உண்மைய போட்டு உடைக்காம இருக்கனும்னே மன்சன் வீட்டை கட்ட ஆரம்பிச்சானான்னும் நமக்கு ஒரு சம்சயம்.ஆனால் இந்த வீடு சமாசாரத்துக்கு பேசிக்கே கில்மா தான்னு அடிச்சு சொல்ல தோனுது.

காட்டு வாழ்க்கையில வேட்டையாடும் திறன் - சஞ்சார வாழ்க்கையில குதிரையேற்றம் இத்யாதி, ஸ்திரவாசத்துல தொழில் திறன் ,செல்வ செழிப்பை காட்டி குட்டிங்களை கரெக்ட் பண்ண மன்சங்கள்ள சிலரு ஆதிமன்சங்களாவே நின்னுட்டாய்ங்க போல.

அவன் பொஞ்சாதிய இவன் ,இவன் பொஞ்சாதிய அவன்னு கரெக்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கனும். அதுலயும் காட்டுவாழ்க்கையிலான லைஃப் ரிஸ்க் எல்லாம் ஸ்திரவாசத்துல இல்லியா ஆதி மன்சங்க ஸ்டேஜ்ல நின்னுட்ட பார்ட்டிங்க பயங்கர லந்து பண்ணியிருப்பாய்ங்க போல.

அவனவன் தன் பொஞ்சாதிய கட்டி காப்பாத்தவே வீடு மாதிரி எதையோ செய்ய ஆரம்பிச்சு அது இன்னைக்கு நில அபகரிப்புக்கு தனிப்பிரிவு போடற ரேஞ்சுக்கு பிக்காப் ஆயிருச்சுனு நினைக்கிறேன்.

மழை வெயில்ல இருந்து காப்பாத்திக்க வீடுதான் தேவைன்னு கிடையாதே. மொத்தத்துல வீடுங்கறதே கில்மாவை எந்த இன்டரப்ஷனும் -இன்செக்யூரிட்டியும் இல்லாம அனுபவிக்கத்தேன் உருவாகியிருக்கனும்.
அதுலயும் சொந்த வீடுங்கறது ஒவ்வொரு மன்சனுக்கும் ஒரு கனவாவே இருக்கு.

சொந்த வீடுங்கறது என்ன? இந்த சமூகத்துக்கு தனிமனிதன் போடும் லட்சுமண ரேகை. எம்.ஜி.ஆர் தொப்பி இல்லாம இருக்க முடிஞ்ச இடம் அவரோட வீடுதேன். கலைஞர் கருப்பு கண்ணாடி இல்லாம இருக முடிஞ்ச இடம் அவரோட வீடுதேன்.

மன்சன் விட்டு விடுதலையாகி ஆராமா இருக்க முடிஞ்ச இடம் வீடுதேன். வீடுங்கறது அவன் உள் மனப்படிமங்களின் ஸ்தூல வடிவம் - சரீரத்தின் நீட்சின்னு சொல்லலாம். அந்த மேட்டர்ல கன்டின்யுனிட்டி கெடுவதை மன்சன் லைக் பண்றதில்லை.அதனாலதேன் சொந்த வீடு கனவா போச்சு.

ஆரோ ஒரு மனோதத்துவ விஞ்ஞானி நம்ம கனவுகளுக்கெல்லாம் அடிப்படை கில்மான்னு சொல்லிவச்சிருக்காராம். இதை முழுக்க முழுக்க மறுக்க முடியுமா?

குகைகளில் வாழ்ந்த ஆதிமனிதனின் உள் மன தொன்ம படிமங்கள் அவனை வீடு கட்ட வைக்குது. மனிதனை வீடு பற்றி கன்வு காண வைக்குது போல.

டார்வின் ஒவ்வொரு உயிரோட குணாம்சமும் மன்சன்லயும் இருக்குங்கறதை தன் தன் பரிணாம தத்துவத்துக்கு ஆதாரமா சுட்டி விஸ்தாரமான உதாரணங்களை கொடுத்து ஸ்தாபிக்கிறார். வீடு பற்றி கனவு காணுவோர் கூடு கட்டி /குகை/வளையில் வசிக்கும் ஜீவராசிகளின் குணங்களை கொண்டவர்களாக இருக்கலாம்.

வீடு பற்றிய கனவுகளை கணக்கில் எடுக்காது காலத்தை தள்றவுக இன்னபிற ஜீவராசிகளின் குணங்களை கொண்டவர்களாக இருக்கலாம்.

இதையெல்லாம் படிச்சுட்டு "வக்ரம் புடிச்ச மன்சன்யா எல்லாத்துலயும் இதே இழவா"ன்னு திட்டிக்காதிங்க. உடலுறவை தெலுங்கு சமஸ்கிருத மொழிகளில் சம்யோகம்னு சொல்வாய்ங்க. யோகம் என்றால் கலத்தல்.
சம் என்பது சிறப்பு விகுதி.

உடலுறவில் ஆண் பெண் கலக்கிறார்கள்.அதன் மூலம் (அது ஆழமானதாக இருந்தால் இயற்கையோடும் கலக்கிறார்கள் - இயற்கையில் இருந்து தம்மை பிரிக்கும் மனதை - ஈகோவை கடக்கிறார்கள்.

யோகம்ங்கற வார்த்தைக்கும் கலத்தல்ங்கறது தான் பொருள்.யோகம் மனிதனை இறைவனோடு கலக்கிறது.
இறைவனோடு இவன் கலந்து தான் இருந்தான். பிறப்புக்கு முன் ஆகட்டும் -இறப்புக்கு பின் ஆகட்டும் இறைவனோடு கலந்துதான் இருந்திருப்பான்/இருக்கப்போகிறான்.

இறைவனோடு - இவன் கலந்திருந்த நினைவுகள் சப் கான்ஷியஸ்ல இருக்கலாம். இறைவன் தன்னை இயற்கையின் வடிவத்துல வெளிப்படுத்தியிருக்கான். பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதி. அவளை சேர்ந்தால் இயற்கையை -இயற்கையாக தன்னை வெளிப்படுத்திக்கிட்ட இறைவனை கலந்த நிறைவு மனிதனுக்கு ஏற்படுது.

மனம் கடந்த நிலையை வீடு பேறுன்னு சொல்லலாம். அந்த வீடு பேற்றின் ஃபோன்சாய்க் வடிவமே வீடுன்னு நான் சொன்னா மறுக்க முடியுமா? இறைவனின் சாங்கத்யத்துல மன்சன் எப்படி நிச்சிந்தையா இருக்கானோ அப்படி ஒரு ஃபீலிங்கை நாலு சுவர்கள் கொடுக்குது. மனிதனோட அசலான நோக்கம் அந்த நாலு சுவர் கிடையாது.

அவன் பிறப்புக்கு முன் தான் பெற்றிருந்த நிச்சிந்தையான நிலையை - மனமற்ற நிலையை - அகம் (ஈகோ) கடந்த நிலையை மீண்டும் பெற விரும்புறான். இயற்கையாக வெளிப்படுத்தி கொண்டிருக்கும் இறைவனுடன் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதியான பெண்ணின் மூலம் இறைவனை கூட கனவு காண்றான்.

நான் பல தடவை சொல்வது போல மன்சனுக்கு எது அவெய்லபிளோ அதனோட அருமை பெருமை உறைக்கவே உறைக்காது. வீடு மேட்டர்ல கூட இதே நிலை தான். அது அன் அவெய்லபிளா இருந்தப்போ ஒடம்பெல்லாம் எண்ணெய் பூசிக்கிட்டு தெருவெல்லாம் புரள்றான். அது அவெய்லபிள் ஆனதும் அடுத்த ஸ்டாப்பிங்கை பற்றி ரோசிக்க ஆரம்பிச்சுர்ரன்.

ஆக்சுவலா இவன் கனவு காணும் வீடு இவன் சொந்த கனவில்லை.வாடகை கனவு . இவன் கனவு காணும் வீடு இவன் சொந்த வீடு அல்ல. இவன் வாழ்ந்த வீட்டின் நகல்.

(இப்டி ஊடு மேட்டர்ல சொல்ல மஸ்தா மேட்டருங்க இருக்குங்ணா இன்னொரு சந்தர்ப்பத்துல நோண்டி நுங்கெடுப்போம். அதுவரைக்கும் அம்பேல் வைத்து விடைபெறுவது ..ஹி ஹி சொல்லனுமா என்ன?)

No comments: