'>
Showing posts with label saturn. Show all posts
Showing posts with label saturn. Show all posts

Thursday, December 8, 2011

சனியும் ஆஞ்சனேயரும்

அண்ணே வணக்கம்ணே !
எந்த கிரகம் சரியில்லின்னா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கு.அதுல இன்னைக்கு சனியை பற்றி பார்ப்போம்.

சனி 3,6,10,11 ல் நின்றால் பிரச்சினை இல்லை. இதர இடங்களில் இருந்தால் பிரச்சினை. இப்படி இதர இடங்களில் நின்ற சனியால என்னெல்லாம் பிரச்சினைகள் வரும்னு தெரிஞ்சுக்க இங்கன அழுத்தி 2012 சனிப்பெயர்ச்சி பலன் களை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க.

என்ன? உங்க ராசிக்கு இந்த சனி சரியில்லையா? அப்பம் நீங்க ஆஞ்சனேயரை வணங்கனும். ஆஞ்சனேயருக்கும் சனிக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக சொல்றேன். சனி வேலைக்காரர்களுக்கு காரகம் வகிக்கும் கிரகம். (அடிமைகள்) ஆஞ்சனேயருக்கு ராம தாஸர்னு இன்னொரு பேரும் உண்டு. தாஸ்னா என்ன அருத்தம்? லாஜிக்கலா பார்த்தா சுக்ரீவனுக்குத்தான் அடிமையா இருந்திருக்கனும்.ஆனால் ஆஞ்சனேயர் ராமனுக்கு அடிமையாக மாறினார். ( பாரதி -பாரதி தாசன் /பெரியார் -பெரியார் தாசன்)

சனிபிடிச்சா நீங்களும் யாரோ ஒருத்தருக்கு அடிமையாக வேண்டி வரும். உலக ரீதியில் அப்படி அடிமையா மாறினா உங்க ரெப்புடேஷன் கோவிந்தா. நீங்க ஒரு அடிமைக்கு அடிமையா மாறினா என்ன ஆகும்? சனியோட வேக்குவம் பாதிக்கு பாதி குறைஞ்சு போயிரும்.

சனி பிதுர்களுக்கு காரகர். ( இறந்து போன மூதாதையர்) கிராம தேவதைகள் ,காவல் தேவதைகள்ளாம் ஆரு.இறந்து போன நம் மூதாதையர்கள் தான்.

சனி பிடிச்சா எள் சோறு , எள் எண்ணெய், காக்காய்க்கு சோறு ,பசுமாட்டுக்கு அகத்திக்கீரைன்னு பரிகாரம் சொல்றதெல்லாம் நம்ம பிதுர்களை திருப்தி படுத்தத்தேன்.

இதுல சின்ன சிக்கல் இருக்கு. சனி ஆயுள் காரகன். ஆயுள் காரகனே நமக்கு பிரதிகூலமா இருக்கும் போது வெறும் பிதுர்களை,கிராம தேவதைகளை மட்டும் ப்ரீதி பண்ணிக்கிட்டிருந்தா அவிகளுக்கு நம்ம மேல கவர்ச்சி ஏற்பட்டு " இன்னாத்துக்கு நைனா இம்மாம் வேதனை படறே இங்க வந்துரு"ன்னு கூப்டுக்க சான்ஸ் இருக்கு.

அதனால ஆஞ்சனேயரையும் சைடுல கவனிச்சுக்கங்க. இவரு சஞ்சீவினி மூலிகைய தேடினா லேட் ஆகும்னு அந்த மூலிகை விளைந்த சஞ்சீவினி பர்வதத்தையே தூக்கிக்கிட்டு வந்து ராம லட்சுமணர்களோட உயிரையே காப்பாத்தின பார்ட்டி.

நான் சம்சாரிங்க. அ நான் கில்மா பார்ட்டிங்க. நான் எங்கன இருந்து ஆஞ்சனேயரை கவனிச்சுக்கறதுன்னு கேப்பிக. சொல்றேன்.

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். நீங்க சம்சாரியாவோ /கில்மா பார்ட்டியாவோ இருந்து பிரம்மச்சாரியான ஆஞ்சனேயரை வணங்கறச்ச தான் உங்க ஈகோ சுருங்கும்- ஈகோ இல்லாத பக்திதேன் பலன் தரும். அதனால எந்த வித கில்ட்டியும் இல்லாம ஆஞ்சனேயரை கவனிச்சுக்கோங்க.

ஆஞ்சனேயரை நம்ம இடத்துக்கே வரவழைக்கிற ஒரு டெக்னிக் இருக்கு. அது இன்னாடான்னா ராம நாமம் ஜெபிக்கிறது. ராம காதை வாசிக்கிறது.ராம காதை கேட்கிறது. எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுதோ -எங்கெல்லாம் ராம காதை வாசிக்கப்படுதோ /கேட்கப்படுதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரு ஆஜராயிருவாராம்.

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது. ( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம். ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மரத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்ஜெக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும். கிரகங்களும் பஞ்ச பூதங்களால் ஆனவைதான். கிரகங்களுக்கு நாம கட்டுப்பட்டிருக்கும் நிலை மாறி ..கிரகங்கள் நமக்கு கட்டுப்படும் நிலை வரும்.

இப்பம் புரியுதா..சனி பிடிச்சா ஆஞ்சனேயரை ஏன் வணங்கனும்னு? நாளைக்கு புதனை பற்றி பார்ப்போம்..

Friday, January 28, 2011

வாங்க சனியை புரிஞ்சிக்கலாம்: 2

ஆராச்சும் குளிக்காம,பல் துலக்காம, முடிவெட்டாம, ஷேவ் பண்ணாம, கிழிஞ்ச,சாயம் போன  பேண்ட் சட்டை  நைஞ்சு போன செருப்பை போட்டுக்கிட்டு வந்த "சனியன் புடிச்சவன் அவனை பார்த்தாலே அருவறுப்பா இருக்குப்பா"ன்னு கூசாம கமெண்ட் அடிப்போம்.

ஆனால் சனி கரும காரகன் .அவனோட கருமத்தையெல்லாம் ஒழிக்கத்தேன் அவனை புடிச்சிருக்காருங்கோ. இதுமட்டுமில்லே காகமும்,பன்றியும்  எப்படி ஊர் அசுத்தத்தையெல்லாம் தின்னு சுத்தம் பண்ணுதோ அப்படி மேற்படி "சனி புடிச்சவன்" நம்ம கிட்டே வந்து நின்னு நாம கொடுக்கிற அஞ்சையோ பத்தையோ வாங்கிக்கிட்டு கூடவே நம்ம கருமத்தையும் வாங்கிக்கிட்டு போறான்.

இப்போ அவன் வெறும் மனிதன் இல்லை. சனியோட தூதுவன். அவனுக்கு  நாம உதவினா நம்ம கருமமும் தொலையும், அவனோட கருமமும் தொலையும் ( நம்ம ஒக்காபிலரில சீடை விட்டுரும்) ஆனால் நமக்கு உதவற எண்ணம் வருமா ? வராது. வரக்கூடாதுன்னுதான்,அவனோட+ நம்ம கருமம் அலையக்
கூடாதுன்னுதான்  சனி  அவனுக்கு மேற்படி கெட் அப்பை கொடுத்திருக்காரு.

சனி பிடிக்கிறதுன்னா 3,6,10,11 தவிர இன்னபிற பாவங்களுக்கு வர்ரதுதான்.  உதாரணமா இப்போ உங்களுக்கு 3ல சனினு வைங்க. ( இப்போ இது கடகத்துக்கு நடக்கு) சோதரஸ்தானத்துல உள்ள சனி உடன் பிறப்புகளையெல்லாம் ஒரு வழி ஆக்கிருவார். ஃபிசிக்கலாவோ -சைக்கலாஜிக்கலாவோ அவிகளை ஹேண்டிகாப்ட் ஆக்கிருவாரு. அப்போ ஆட்டோமெட்டிக்கா உங்களுக்கு ப்ராமினன்ஸ் அதிகரிக்கும். மனசுல தைரியம் கூடும். பிக்னிக் போகனும்,டூர் போகனும்,இண்டர்வ்யூ போகனும்னு காசு பிடுங்கி ஊர் ஊரா சுத்துவிங்க.


இப்படி ஒரு ரெண்டரை வருசம் ஓடிப்போச்சுனு வைங்க. அடுத்து அவரு 4 ஆவது இடத்துக்கு வருவாரு. இது தாய்,வீடு,வாகனத்தையெல்லாம் காட்டற இடம் (இப்போ மிதுனத்துக்கு இது நடக்குது)  இத்தீனி நாளு உடன் பிறப்புக்கு ஆப்பு வச்ச சனி அவிகளுக்கு பெட்டர் ப்ளேஸுக்கு வந்திருக்கலாம். அல்லது  நல்ல இடத்துக்கே வந்திருக்கலாம்.

தாய் மனசுல ஐயய்யோ இவனை இப்படியே விட்டா ஆகாதுப்பா எதுனா பண்ணனுமேங்கற எண்ணம் வந்திருக்கலாம். இதனால உங்க பட்ஜெட்ல வெட்டு விதிக்கலாம். " போன மாசம்தானேடா டூர் போயி வந்தே மறுபடியும் என்னா டூருன்னு கடுகடுக்கலாம்"

உங்களுக்கு மேட்டர் தெரியாது (சனி நாலுக்கு வந்த மேட்டர்தான்) பழைய ஞாபகத்துல ஒத்தைகால்ல நின்னு வாங்கினு போவிங்க. லாலா போட்டோ போடாமயோ வண்டி வாகனத்துல விழுந்து வாரலாம். அல்லது நீங்க டூர் போகலை.

உள்ளூர்லதான் கூட்டாளிகளோட ரூம் போட்டு லாலா போட்டிங்கன்னு தெரிய வந்துரலாம். அம்மா கடிக்கலாம். உடம்பொறப்புங்க நக்கலடிக்கலாம். ரெம்ப கடுப்பானா நீங்க வீட்டை விட்டு வெளியேறலாம். ஒரு வேளை நீங்க படிக்கிற வயசுலருந்தா இந்தா மாரி பொஜிஷன்ல ( நாலாமிடம் கல்வியையும் காட்டும்) படிப்பு மேல எப்படி மைண்ட் போகும்? படிப்புல கோட்டு.

சனி இப்படித்தான் வேலை செய்யறாரு.இன்னம் நிறைய மேட்டர் இருக்குங்கண்ணா... இன்னொரு நா பார்ப்போம். கிண்டி கிழங்கெடுத்துரமாட்டோம்.

Monday, January 24, 2011

வாங்க சனியை புரிஞ்சிக்கலாம்

சனி பிடிச்சா நல்லதுங்கோ !
அரசியல் கட்சி கூட்டங்களில் தலைவர் வருவதற்கு முன் குட்டித்தலைவர்கள் "அலப்பறை"செய்வார்களே அப்படி நம்ம சுகுமார்ஜி சனி பற்றிய தொடரை தொடரும் வரை "அப்படி இப்படி" கதை பண்ணலாம்னு ஒரு உத்தேசம்.

நம்ம (சிம்ம)  ராசிக்கு எப்படியும் வாக்கு ஸ்தானத்துல சனி. கண்டதை பேசி /எழுதி வாங்கிக்கட்டிக்கிறத விட பகவானை பத்தியே பேசிர்ரது பெட்டரில்லையா?

இந்த தொடர் இப்படி திராட்ல நிக்க கூட சனி தான் காரணம். ஆமாங்கண்ணே தாமதத்துக்கு காரகர் அவர். ஜன்மத்துல நின்னா ஆசாமியே மந்தம். ரெண்டுல நின்னா வாக்கு மந்தம்/ நிஷ்டூர வாக்கு இப்படிபலன் போகுது.

அல்லாருக்கும் சனின்னா உதறல்தேன். ஏன்னா ரயில் தாமதத்தை பத்தி பேசறச்ச சொல்வாய்ங்க "லைஃப் டைம் டிலே"ன்னு  அப்படி கூட ஆயிரும்.சனின்னா கிழவாடிங்க/கிழட்டுத்தன்மை எய்திவிட்ட பசங்க. எங்க ஒய்.எஸ்.ஆர் கூட எட்டாம் நெம்பர்தான். தாளி 55 வயசுலதான் சி.எம் ஆகமுடிஞ்சது.  அதுவரை நாயடி.

சரிய்யா 2004 எலக்சனுக்கு மிந்தி அவருக்கு கால் ஃப்ராக்சர் ஆச்சு. ஒடனே சொன்னேன். பார்ட்டிதான்யா சி.எம். அது எப்படின்னா சனி பிடிக்கிறச்ச தலைல அடிபடும். சனி விட்டுப்போறச்ச கால்ல அடிபடும். உங்க வீட்டு எங்க வீட்டு அடில்லாம் கணகில்லிங்கண்ணா.

கடவுள் பிரதமர். ஒரு பிரதமர் எப்படி தன் மந்திரிகளுக்கு துறைகளை பிரிச்சுக்கொடுக்கிறாரோ அப்படி கடவுள் பிரிச்சு கொடுத்த சனியோட போர்ட் ஃபோலியோவ பாருங்க. அவர் கேரக்டரை ஈசியா புரிஞ்சிக்கலாம்.

அவரே சொல்றாரு பாருங்க:

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.


*சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

*மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.

* 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி தசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். சனி குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யாது. ஒரு வேளை சனி குறிப்பிட்ட ஜாதகத்துக்கு பாவியாகவோ,மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையை தந்து பின் பாதியில் தீமையை தருவான்.

*கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனை தந்தால் மறுபாதி அந்த அளவுக்கு கெடுபலன் களை தராது.

* சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.

* சனி உங்க ராசிக்கு 3,6,10,11 ல சஞ்சரிச்சா நல்லது. துலா,மகர,கும்ப ராசிக்காரவுகளுக்கு ஜன்ம சனி பெருசா பாதிப்பை தராது (ஏன்னா இங்கன அவர் உச்சம்/ஆட்சி/மூலதிரிகோணம். இருந்தாலும் கில்மாவுல மனச விட்டா கையேந்தி பவன்ல எல்லாம் கை நீட்டி நாறிருவிங்க சாக்கிரதை.


தற்சமயம் சனி கடகத்துக்கு 3 ல்,மேஷத்துக்கு 6ல், தனுசுக்கு 10 ல் விருச்சிகத்துக்கு 11ல் சஞ்சரிக்கிறார். சனி மட்டும் அனுகூலமா இருந்தா வேலை ஆகும்.ஆனா இன்டைம் ஆகாது. குருவும் அனுகூலமா இருந்தா இன் டைம் ஆகலாம்.

இந்த யோகம் கடகம்,விருச்சிகத்துக்கு இருக்கு. மேஷராசிக்காரவுக கொஞ்சம் போல செலவழிச்சு காரியத்தை சாதிக்கலாம். மத்தவுகளுக்கு சனி பிரதிகூலமாத்தான் இருக்காரு. அவிக சில பரிகாரங்கள் செய்தா சமாளிக்கலாம்.

சனிக்குரிய பரிகாரங்கள்:

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.

விஞ்ஞான விளக்கம்:

சனியை ஆசன துவாரத்துக்கு காரகர்னு சொல்றாய்ங்க. இது டூவீலருக்கு சைலன்சர் மாதிரி. தமிழ் சினிமாவுல பார்த்திருப்பிங்க. ஒரு வண்டி ஸ்டார்ட் ஆகக்கூடாதுன்னா சைலன்சரை ஒரு எலுமிச்சை/ஆரஞ்சு பழத்தை வச்சு சீல் பண்ணிட்டா போதும். இதே இழவைத்தான் சனி பகவான் செய்றார். அதனாலதான் சனி பிடிச்சப்ப மலச்சிக்கல், அகால போஜனம்,அகால நித்திரைல்லாம் சாத்தியமாகுது.

இது ஏன் நடக்குதுன்னா சனி அனுகூலமா இருந்தா நீங்க சுதந்திர பறவை ( நீங்க ஒரு க்ளர்க்காவே இருந்தாலும் உங்க டிப்பார்ட்மென்ட் ஹெட் உங்க பாக்கெட்ல இருப்பாரு) சனி பிடிச்சா அடிமை. "அடிமையோட நேரம் அடியை கையில இருக்காதுங்கோ. முதலாளி சொல்ற /விடற நேரத்துல தான் சாப்பிட முடியும், அவர் அவிழ்த்துவிட்டாத்தான் தூங்கமுடியும்.

எத்தனை கேடு கெட்ட மனிதனா இருந்தாலும் அவன் உள்மனது சுதந்திரத்தைத்தான் விரும்புது. இந்த சனியோ அவனை அடிமையாக்கிருது. இந்த மென்டல் ஒர்ரி அவனோட ஃபீடிங்க் டைமை மாத்தி,குழப்பி, டைஜஸ்டிங் சிஸ்டத்தையே  நாஸ்தி பண்ணிருது.

ஜெனட்டிகலா நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு உள்ளவுகளுக்கு ஏழரை சனில அது அதிகமாயிர்ரதை பார்க்கமுடியுது.

ஆணுக்கு சனி விட்டா கண்ணாலம்:
ஏன்னா இவன் அடிமையா இருக்ககூடாதே. இவனுக்கு ஒரு அடிமை வரனும்.அதான் பொஞ்சாதி

பெண்ணுக்கு சனி பிடிச்சா கண்ணாலம்:
பெண்ணுக்கு சனி பிடிச்சாத்தான் கண்ணாலமாகுது.ஏன்னா முதலிரவுல மானபங்கம் நடக்கனும், அவள் அடிமையாகனும்.கிழட்டுத்தன்மைய அடையனுமே.இதெல்லாம் ஆஃப்டர் மேரேஜ்தானே சாத்தியம்.

சனிய பத்தி முழுக்க  சொல்லனும்னா 80  பதிவாச்சும் போடனும். நான் ரெடி நீங்க ரெடியா?

Tuesday, January 11, 2011

சனி பிடிக்குமா? பிடிக்காதா?_ பகுதி 1



யாருக்கெல்லாம் சனிபகவானை பிடிக்காது? கை தூக்குங்க என்றால் இப்பொழுது நானும் எழுத்துக்களை பதிப்பிக்க முடியாது :)

நம்ம எல்லாருக்குமே சனி என்றால் அலர்ஜிதான்... ஆனால் நம் ஒவ்வொருவரோடும் கலந்து விட்ட அவரை எப்படி பிடிக்க இயலும்? அதெப்படி எனக்கு ஏழரை முடிஞ்சிடுச்சே... கண்ட சனி முடிஞ்சிடுச்சே... ஜென்ம சனி முடிஞ்சிடுச்சே... ன்னாலும் அவர் தன்வேகத்தை குறைத்துக்கொண்டாரே தவிர உன்னைவிட்டு அகலவில்லை... அகலவும் மாட்டார்... அவர் ஒருவேளை அகலும் சமயத்தில் நாம் உடலாலும், உயிராலும் பிணைக்கப்பட்டிருக்க மாட்டோம்.

எந்த ஜாதகனுக்கும் அவரே ஆயுள் காரகன்

அவரில்லாத நிலை, நீயும் இல்லாததற்குச் சமம். அவரை எப்படியறிலாம்? உன் கண்களை சிறிது நேரம் மூடியிருந்தாலே அவர் முன்னாலிருப்பார்... அவர் இருளுக்குரியவர்... ஆம் கருமையின் வண்ணம் அவர்தானே.

மகரத்திற்கும், கும்பத்திற்கும் அதிபதியாக இருந்தும், தன் ராசிக்கூட்டத்தை சேர்ந்தவராகிலும் நீதி பரிபாலனையில் எப்பக்கமும் சாயாத சாயாவின் மகன்.. சாயா சூரியனின் இரண்டாவது மனைவி... முதல் மனைவியின் நகல் அவள்...

ஆம் சூரியனின் புத்திரனே சனி, அதனால் தான் அவன் சனிபகவான்.

சில கதைகள் கரடியாக இருப்பதுண்டு... ஆனால் கிரகங்கள் பற்றிய கதைகள் தன் கதைகளோடு, கிரகங்களின் தன்மைகளை விவரணை செய்யும்... கதைகளை அனர்த்தம் செய்தலாகாது... 2011 அல்ல 3011 ஆனாலும் சில விசயங்களும், உண்மைகளும் மாற்றமில்லாத தன்மை கொண்டது. தமிழர்களின் வாழ்க்கை முறைகளோடும், நம் முன்னோர்களோடும் சித்தர்கள் என்றுமே கலந்திருந்திருக்கின்றனர்... அவர்கள் செய்திகளை அப்படியே சொல்லாது, குழுஊகுறியாக சொல்லப்பட்ட (சொல்வது ஒன்று... சொல்லவருவது ஒன்று... உள்ளர்த்தமாக இருப்பது ஒன்று) வார்த்தைகள்... ஆக பலமுறை யோசித்தாலன்றி உண்மை விளங்காது...

விசயத்தை அப்படியே கிரகித்தல், ஏற்கனவே இருக்கிற பத்தோடு, பதினொன்றாக சேகரித்தல், பிறகு ஆற அமர அலசுதல், அதில் ஒத்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல்... இவைகளே உண்மை அறிவுறுத்தும் வழிகள்... ஆனால் இப்போதைய நிலை,  

கோவணமே கட்டாதவன், அடுத்தவன் கோவணம் கிழிஞ்சிருக்குன்னு கிண்டல் செய்தானாம்கிற கதைதான் உலகில் நிகழ்கிறது.

எனக்கென்னமோ இந்த விசயங்கள் குறித்த பதிவு பதிவிட காரணியே சனிதான் என்று எனக்குப்படுகிறது... ஒருவனை வேலை வாங்குவதில் அவன் மன்னன்... அதுமட்டுமல்ல வேலை வழங்குவதிலும் மன்னன்.

நீ நல்ல வேலைக்காரன் என்ற பெயரை நீ சுமப்பாயானால் சனி உன் ஜாதகத்தில் சரி என்று அர்த்தம்... உனக்குக்கீழாக வேலைக்காரர்களிருந்தால் சனி உன் ஜாதகத்தில் அமோகம் என்று அர்த்தம். நீ மாடுபோல் பிறருக்காக உழைப்பதாக இருந்தால் கொஞ்சம் சனி பகவானுக்குரிய கடன் பாக்கி வைத்திருக்கிறாய் என்று அர்த்தம்.

ஒரு ஜாதகனுக்கு பரிட்சை தந்து பாடம் தருவதில் சனி கில்லாடி. முப்பது ஆண்டுக்காலம் ஒரு ஜாதகன் திசைமாறினாலும் சனி தடம் மாறுவதில்லை... மூன்று முப்பதுகள் அவன் தன்னைக்கொண்டு ஜாதனை ஆக்கிரமிப்பான். மூன்று முப்பதே 90 ஆண்டுகளாகி விடுவதல் அதற்குமேல் மனிதன் தாக்குபிடிக்க இயலாதிருக்கிறான்...திசா புத்திகளில் ஆரம்பமுள்ளோரே மூன்றாம் சுற்றைக்காண இயலும்.

ஒரு குழந்தையை அவன் வசீகரிப்பானால், அக்குறை  அதன் தகப்பனையே பாதிக்கும். என்ன ஒரு இளகிய மனம் பாருங்க :)

திருமண நிகழ்வுக்கு குருவைவிட அதிக காரணி சனிபகவான் தான். ஒவ்வொரு கணமும் உன்னை செம்மைபடுத்துவதில் சனிக்கு நிகர் சனியே... 12, 1, 2 ஆன ஏழரைகாலங்களில் அவர் ஆற்றலுக்கு இணைந்து போவதைதவிர வேறெதும் உன்னால் செய்ய இயலாது... ஒரு நதியில் ஆடும் நாணலைப்போல் அவரின் ஓட்டத்தில் உன்னை ஒப்படைப்பதே சரியான வழி.

ஆனால் நாமாகவே வேலியில் ஓடுகிற ஓணானை டவுசருக்குள் விட்டகதை தான் இப்பொழுதிருக்கிற வாழ்க்கை முறைகள்... சனிபகவானை விருந்து வைத்து அழைத்த கதையாக இருக்கிறது... அவரும்... இந்தா வாங்கிக்க... என்று நம்மை தாளித்துவிடுகிறார்...

எப்படி?






அடுத்த பதிவில் பார்க்கலாமே...
:)