'>

Friday, January 28, 2011

வாங்க சனியை புரிஞ்சிக்கலாம்: 2

ஆராச்சும் குளிக்காம,பல் துலக்காம, முடிவெட்டாம, ஷேவ் பண்ணாம, கிழிஞ்ச,சாயம் போன  பேண்ட் சட்டை  நைஞ்சு போன செருப்பை போட்டுக்கிட்டு வந்த "சனியன் புடிச்சவன் அவனை பார்த்தாலே அருவறுப்பா இருக்குப்பா"ன்னு கூசாம கமெண்ட் அடிப்போம்.

ஆனால் சனி கரும காரகன் .அவனோட கருமத்தையெல்லாம் ஒழிக்கத்தேன் அவனை புடிச்சிருக்காருங்கோ. இதுமட்டுமில்லே காகமும்,பன்றியும்  எப்படி ஊர் அசுத்தத்தையெல்லாம் தின்னு சுத்தம் பண்ணுதோ அப்படி மேற்படி "சனி புடிச்சவன்" நம்ம கிட்டே வந்து நின்னு நாம கொடுக்கிற அஞ்சையோ பத்தையோ வாங்கிக்கிட்டு கூடவே நம்ம கருமத்தையும் வாங்கிக்கிட்டு போறான்.

இப்போ அவன் வெறும் மனிதன் இல்லை. சனியோட தூதுவன். அவனுக்கு  நாம உதவினா நம்ம கருமமும் தொலையும், அவனோட கருமமும் தொலையும் ( நம்ம ஒக்காபிலரில சீடை விட்டுரும்) ஆனால் நமக்கு உதவற எண்ணம் வருமா ? வராது. வரக்கூடாதுன்னுதான்,அவனோட+ நம்ம கருமம் அலையக்
கூடாதுன்னுதான்  சனி  அவனுக்கு மேற்படி கெட் அப்பை கொடுத்திருக்காரு.

சனி பிடிக்கிறதுன்னா 3,6,10,11 தவிர இன்னபிற பாவங்களுக்கு வர்ரதுதான்.  உதாரணமா இப்போ உங்களுக்கு 3ல சனினு வைங்க. ( இப்போ இது கடகத்துக்கு நடக்கு) சோதரஸ்தானத்துல உள்ள சனி உடன் பிறப்புகளையெல்லாம் ஒரு வழி ஆக்கிருவார். ஃபிசிக்கலாவோ -சைக்கலாஜிக்கலாவோ அவிகளை ஹேண்டிகாப்ட் ஆக்கிருவாரு. அப்போ ஆட்டோமெட்டிக்கா உங்களுக்கு ப்ராமினன்ஸ் அதிகரிக்கும். மனசுல தைரியம் கூடும். பிக்னிக் போகனும்,டூர் போகனும்,இண்டர்வ்யூ போகனும்னு காசு பிடுங்கி ஊர் ஊரா சுத்துவிங்க.


இப்படி ஒரு ரெண்டரை வருசம் ஓடிப்போச்சுனு வைங்க. அடுத்து அவரு 4 ஆவது இடத்துக்கு வருவாரு. இது தாய்,வீடு,வாகனத்தையெல்லாம் காட்டற இடம் (இப்போ மிதுனத்துக்கு இது நடக்குது)  இத்தீனி நாளு உடன் பிறப்புக்கு ஆப்பு வச்ச சனி அவிகளுக்கு பெட்டர் ப்ளேஸுக்கு வந்திருக்கலாம். அல்லது  நல்ல இடத்துக்கே வந்திருக்கலாம்.

தாய் மனசுல ஐயய்யோ இவனை இப்படியே விட்டா ஆகாதுப்பா எதுனா பண்ணனுமேங்கற எண்ணம் வந்திருக்கலாம். இதனால உங்க பட்ஜெட்ல வெட்டு விதிக்கலாம். " போன மாசம்தானேடா டூர் போயி வந்தே மறுபடியும் என்னா டூருன்னு கடுகடுக்கலாம்"

உங்களுக்கு மேட்டர் தெரியாது (சனி நாலுக்கு வந்த மேட்டர்தான்) பழைய ஞாபகத்துல ஒத்தைகால்ல நின்னு வாங்கினு போவிங்க. லாலா போட்டோ போடாமயோ வண்டி வாகனத்துல விழுந்து வாரலாம். அல்லது நீங்க டூர் போகலை.

உள்ளூர்லதான் கூட்டாளிகளோட ரூம் போட்டு லாலா போட்டிங்கன்னு தெரிய வந்துரலாம். அம்மா கடிக்கலாம். உடம்பொறப்புங்க நக்கலடிக்கலாம். ரெம்ப கடுப்பானா நீங்க வீட்டை விட்டு வெளியேறலாம். ஒரு வேளை நீங்க படிக்கிற வயசுலருந்தா இந்தா மாரி பொஜிஷன்ல ( நாலாமிடம் கல்வியையும் காட்டும்) படிப்பு மேல எப்படி மைண்ட் போகும்? படிப்புல கோட்டு.

சனி இப்படித்தான் வேலை செய்யறாரு.இன்னம் நிறைய மேட்டர் இருக்குங்கண்ணா... இன்னொரு நா பார்ப்போம். கிண்டி கிழங்கெடுத்துரமாட்டோம்.

2 comments:

Unknown said...

நாலாம் வீடு, தாய், வாகனம், படிப்பு, மற்றும் எந்த விஷயத்துடன் சம்பந்தப்பட்டது ?

Chittoor Murugesan said...

வாங்க வினோத்!
நாலாம் வீடு இதயம், தாய்மொழி,ஸ்தூலமான நிம்மதி(சுகம்ங்கறாய்ங்க ஆனா சுகத்தை காட்டறது 12 ஆமிடம்தேன்)
உங்களை விரும்பறவுக, ஆஃபீஸ்ல உங்க சீட் முதக்கொண்டு நிறைய மேட்டரை காட்டுது.

விகடனை எரிக்க எப்ப புறப்படலாம்? - நக்கல்தேன்
(ஒரு ஐட்டம் போடுங்க பாஸ்.. ஆத்தரா இன்வைட் பண்றேன்)