'>
Showing posts with label சனி பெயர்ச்சி. Show all posts
Showing posts with label சனி பெயர்ச்சி. Show all posts

Thursday, December 8, 2011

சனியும் ஆஞ்சனேயரும்

அண்ணே வணக்கம்ணே !
எந்த கிரகம் சரியில்லின்னா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கு.அதுல இன்னைக்கு சனியை பற்றி பார்ப்போம்.

சனி 3,6,10,11 ல் நின்றால் பிரச்சினை இல்லை. இதர இடங்களில் இருந்தால் பிரச்சினை. இப்படி இதர இடங்களில் நின்ற சனியால என்னெல்லாம் பிரச்சினைகள் வரும்னு தெரிஞ்சுக்க இங்கன அழுத்தி 2012 சனிப்பெயர்ச்சி பலன் களை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க.

என்ன? உங்க ராசிக்கு இந்த சனி சரியில்லையா? அப்பம் நீங்க ஆஞ்சனேயரை வணங்கனும். ஆஞ்சனேயருக்கும் சனிக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக சொல்றேன். சனி வேலைக்காரர்களுக்கு காரகம் வகிக்கும் கிரகம். (அடிமைகள்) ஆஞ்சனேயருக்கு ராம தாஸர்னு இன்னொரு பேரும் உண்டு. தாஸ்னா என்ன அருத்தம்? லாஜிக்கலா பார்த்தா சுக்ரீவனுக்குத்தான் அடிமையா இருந்திருக்கனும்.ஆனால் ஆஞ்சனேயர் ராமனுக்கு அடிமையாக மாறினார். ( பாரதி -பாரதி தாசன் /பெரியார் -பெரியார் தாசன்)

சனிபிடிச்சா நீங்களும் யாரோ ஒருத்தருக்கு அடிமையாக வேண்டி வரும். உலக ரீதியில் அப்படி அடிமையா மாறினா உங்க ரெப்புடேஷன் கோவிந்தா. நீங்க ஒரு அடிமைக்கு அடிமையா மாறினா என்ன ஆகும்? சனியோட வேக்குவம் பாதிக்கு பாதி குறைஞ்சு போயிரும்.

சனி பிதுர்களுக்கு காரகர். ( இறந்து போன மூதாதையர்) கிராம தேவதைகள் ,காவல் தேவதைகள்ளாம் ஆரு.இறந்து போன நம் மூதாதையர்கள் தான்.

சனி பிடிச்சா எள் சோறு , எள் எண்ணெய், காக்காய்க்கு சோறு ,பசுமாட்டுக்கு அகத்திக்கீரைன்னு பரிகாரம் சொல்றதெல்லாம் நம்ம பிதுர்களை திருப்தி படுத்தத்தேன்.

இதுல சின்ன சிக்கல் இருக்கு. சனி ஆயுள் காரகன். ஆயுள் காரகனே நமக்கு பிரதிகூலமா இருக்கும் போது வெறும் பிதுர்களை,கிராம தேவதைகளை மட்டும் ப்ரீதி பண்ணிக்கிட்டிருந்தா அவிகளுக்கு நம்ம மேல கவர்ச்சி ஏற்பட்டு " இன்னாத்துக்கு நைனா இம்மாம் வேதனை படறே இங்க வந்துரு"ன்னு கூப்டுக்க சான்ஸ் இருக்கு.

அதனால ஆஞ்சனேயரையும் சைடுல கவனிச்சுக்கங்க. இவரு சஞ்சீவினி மூலிகைய தேடினா லேட் ஆகும்னு அந்த மூலிகை விளைந்த சஞ்சீவினி பர்வதத்தையே தூக்கிக்கிட்டு வந்து ராம லட்சுமணர்களோட உயிரையே காப்பாத்தின பார்ட்டி.

நான் சம்சாரிங்க. அ நான் கில்மா பார்ட்டிங்க. நான் எங்கன இருந்து ஆஞ்சனேயரை கவனிச்சுக்கறதுன்னு கேப்பிக. சொல்றேன்.

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். நீங்க சம்சாரியாவோ /கில்மா பார்ட்டியாவோ இருந்து பிரம்மச்சாரியான ஆஞ்சனேயரை வணங்கறச்ச தான் உங்க ஈகோ சுருங்கும்- ஈகோ இல்லாத பக்திதேன் பலன் தரும். அதனால எந்த வித கில்ட்டியும் இல்லாம ஆஞ்சனேயரை கவனிச்சுக்கோங்க.

ஆஞ்சனேயரை நம்ம இடத்துக்கே வரவழைக்கிற ஒரு டெக்னிக் இருக்கு. அது இன்னாடான்னா ராம நாமம் ஜெபிக்கிறது. ராம காதை வாசிக்கிறது.ராம காதை கேட்கிறது. எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுதோ -எங்கெல்லாம் ராம காதை வாசிக்கப்படுதோ /கேட்கப்படுதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரு ஆஜராயிருவாராம்.

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது. ( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம். ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மரத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்ஜெக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும். கிரகங்களும் பஞ்ச பூதங்களால் ஆனவைதான். கிரகங்களுக்கு நாம கட்டுப்பட்டிருக்கும் நிலை மாறி ..கிரகங்கள் நமக்கு கட்டுப்படும் நிலை வரும்.

இப்பம் புரியுதா..சனி பிடிச்சா ஆஞ்சனேயரை ஏன் வணங்கனும்னு? நாளைக்கு புதனை பற்றி பார்ப்போம்..

Sunday, October 23, 2011

சனிப்பெயர்ச்சி பலன் ( 2011 -2013)


அண்ணே வணக்கம்ணே!
நீங்க இந்த வலைப்பூ/வலைதளத்துக்கு புதுசு - வெறுமனே இன்னொரு ராசிபலனின்னுட்டு நீங்க வந்திருந்தாலும் நோ ப்ராப்ளம் உங்க ராசிய தேடி மேய்ஞ்சுட்டு போயிரலாம். மற்றபடி பழைய பறவை போல வந்த " நம்மாளுங்க " ளுகளுக்கு ஒரு விருந்தே காத்திருக்கு. பன்னெண்டு ராசிகளுக்கான பலனை அடுத்து சனியோட ஜாதகத்தையே தந்திருக்கம்ல.. உடுங்க ஜூட்.

1.மேஷ ராசி:

இவிகளுக்கு சனி 10,11 க்கு அதிபதி. இவர் 7 ல நின்னது பொதுவிதிப்படி நாட் ஓகேன்னாலும் சிறப்புவிதிகளின் படி சில நல்ல பலன்களை பெறமுடியும். செய் தொழிலில் ஒரு பார்ட்னர் அமைய வாய்ப்பிருக்கு. அவரு கருப்பா பயங்கரமா அ பயங்கர கருப்பா இருக்கலாம். ஒரு தலித்தா கூட இருக்கலாம்.

கண்ணாலமாகாத பார்ட்டிங்க தங்கள் தகுதிக்கு பல படி தாழ்ந்த பெண் மீது காதல் கொள்ளலாம். வெகு சிலர் வேலைக்காரி மேட்டர்ல ஜொள்ளு விட்டு ஜோட்டடி வாங்கலாம். அல்லது அப்படி ஒரு அபவாதம் வரலாம். டேக் கேர்.

மூத்த சகோதரர்/ரி வகையில தாமதமாகவேனும் உதவிகள் கிடைக்கலாம். என்ன ஒரு லொள்ளளுன்னா 7 ல உள்ள சனி ஜன்மத்தை பார்க்கிறதால கால், நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகளும் வரலாம்.

குறிப்பு: லக்னாதிபதியான செவ் வக்ரம் பெறுவதால் 2012 ,ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை கொஞ்சம் கேர் ஃபுல்லா இருக்கனும்.

2.ரிசப ராசி:

இவிகளுக்கு 9 ,10 க்கு அதிபதியான சனி 6 ல நின்னது பொதுவிதிப்படி ஓகோ. ஆனால் சிறப்பு விதிப்படி பார்த்தா அஞ்சுல சனி இருக்கிறச்ச எதிர்கொண்ட அவமானங்கள், புத்ரஹானி, புத்தி ஹீனம்லாம் இவிகளை இப்பம் சாடிஸ்டிக்கா மாத்திரும். இந்த ரெண்டரை வருசம் சனங்களை டார்ச்சர் பண்றதே வேலையா ஆயிரலாம். அப்பா நோய் வாய் படலாம் அவரோட விரோதம் வரலாம். சொத்து தகராறு,சேமிப்பு ,முதலீடுல தக்ராறு,தூர தேச தொடர்புகளில் மனகிலேசம் ஏற்படலாம். செய்தொழிலில் கடன் வாங்க வேண்டி வரலாம்.போட்டி சாஸ்தியாயிரும். ஒரு சிலருக்கு தொழில் தொடர்பான வியாதி கூட வரலாம்.

3.மிதுன ராசி:

இவிகளுக்கு 8 , 9 க்கு அதிபதியான சனி 5 ல வர்ரது பொதுவிதிப்படி ரெம்ப கெட்டது. அவமானங்கள், புத்ரஹானி, புத்தி ஹீனம்னு ஃபேஸ் பண்ணவேண்டி வரும். சிலருக்கு தற்கொலை எண்ணமே கூட வரலாம். செத்துப்போனவன்லாம் கனவுல வருவான்.

ஆனால் ஒரு கட்டத்துல அதிர்ஷ்ட வசமா குறைஞ்ச விலைக்கு ஒரு சொத்து அமையலாம். அப்பா,சேமிப்பு ,முதலீடு ,தூர தேச தொடர்பு/பயணத்தில் இருந்த தங்கு தடை திடீர்னு விலகிரும்.

4.கடக ராசி:
இவிகளை பொருத்தவரை சனி 7 ,8 க்கு அதிபதி. இவரு 4 ல வர்ரது பொதுவிதிப்படி நல்லதில்லை. இதனால தாய்க்கு கால் , நரம்பு ,ஆசனம் தொடர்பான உடல் நல பாதிப்பு/பிரிவு , வீடு மாற்றம், வாகன வகையில் நட்டம், மாணவர்களுக்கு கல்வியில் பின்னடைவு, உத்யோகஸ்தர்களுக்கு சீட் சேஞ்ச், ட்ரான்ஸ்ஃபர் இத்யாதி நடக்கலாம்.

ஆனா திருமணமாகாதவர்களுக்கு தாய்வழி உறவுல பொருளாதார ரீதியா பிற்பட்ட குடும்பத்து பெண் மனைவியாகவும் வாய்ப்பிருக்கு.

5.சிம்ம ராசி:
இவிகளுக்கு சனி 6,7க்கான அதிபதி. இவர் 3 ஆமிடத்துக்கு வர்ரது பொதுவிதிப்படி நல்லதுதேன். இதனால் மனோ தைரியம் கூடனும். பிரயாணங்களால்,சகோதரவர்கத்தால் அனுகூலம் ஏற்படனும். அதே நேரம் மனைவியை காட்டும் ஏழாமிடத்து அதிபதியாக இவர் 3 ஆம் பாவத்துக்கு வர்ரதால மனைவிக்கு அல்லல் அலைச்சல் அவிகளுக்கும் உங்களுக்கும் இடையில் உரசல் ஏற்படலாம்.

சகோதரம் நோய் வாய்ப்படுதல் அ அவிகளோட முட்டல் மோதல் ஏற்படலாம்.கடன் வாங்கி பயணம் செய்யவேண்டியும் வரலாம். சவுண்ட் பாக்ஸ்ல பிரச்சினை வரலாம்.

6. கன்னி ராசி:
இவிகளுக்கு சனி 5 ,6 க்கு அதிபதி . இவர் ரெண்டாமிடத்துக்கு வர்ரது பொதுவிதிப்படி நல்லதில்லை. ஆனால் 5 - 2 பாவங்களுக்கிடையில் தொடர்பு திடீர் தனயோகத்தையும் தரலாம். அதே போல 6 -2 பாவங்களுக்கிடையில் தொடர்பு திடீர் தன நஷ்டத்தையும் தரலாம். மேலும் இது உச்ச சனி என்பதால் லாப நஷ்டம் ரெண்டுமே ஹை பட்ஜெட்ல நடக்குமுங்கோ. வாய் பேச்சால விரோதம் வரலாம் (காரியமும் நடக்கலாம்) குடும்பத்துல மெம்பர்ஸ் சாஸ்தியாகலாம் ,

பழைய சோறு/ஆறின சோறு சாப்பிடவேண்டி வரலாம்.( சில காலம்தேன்) சிலருக்கு நரம்பு தொடர்பான கண் நோய் வரலாம்.

7.துலா ராசி:

இவிகளுக்கு சனி 4 ,5 க்கு அதிபதி .இவர் ஜன்மத்துக்கு வர்ரது பொதுவிதிப்படி நல்லதில்லை. இதனால கண்ணாலமாகாத பார்ட்டிங்க தங்கள் தகுதிக்கு பல படி தாழ்ந்த பெண் மீது காதல் கொள்ளலாம். வெகு சிலர் வேலைக்காரி மேட்டர்ல சில்மிஷம் பண்ணி சீப்பட வாய்ப்பிருக்கு. அல்லது அப்படி ஒரு அபவாதம் வரலாம். டேக் கேர்.

ஆனால் கொஞ்சம் உன்னிப்பா பார்த்தா வாரிசுகள், தாய்,வீடு,வாகனம்,கல்வி ஆகியவற்றில் சிரத்தை கூடலாம்/கவனம் தேவைப்படலாம். சிரத்தை -கவனத்துக்கு ஏற்ற பிரதிபலனும் கிடைக்கலாம். எதிர்காலம் குறித்த கவலை உங்களை சரியான ரூட்டுக்கு திருப்பலாம். இப்பம் நீங்க எடுக்கிற முடிவு உழைப்புக்கு அஞ்சாததா இருக்கலாம்.

8.விருச்சிக ராசி:

இவிகளுக்கு சனி 3 ,4 க்கு அதிபதி. இவர் 12க்கு வர்ரது ( ஏழரை ஆரம்பம்) பொது விதிப்படி நல்லதில்லை. ஆனால் சகோதரர்கள்,பயணங்கள், தாய் ,வீடு,வாகனம், கல்வி வகையில் வரும் செலவுகளுக்கு அஞ்சாது செய்துகிட்டு வந்தா தப்பிச்சுரலாம். அந்த செலவு தண்டச்செலவாயிராம பார்த்துக்கங்க.

சுப செலவுகள் தாமதமாகலாம், தூக்கக்குறைவு ,தாம்பத்யத்தில் ஈடு பாடு குறையலாம். இரும்பு பொருள் ஏதாவது தொலைந்து போகலாம், கெட்டுப்போகலாம்.

குறிப்பு: லக்னாதிபதியான செவ் வக்ரம் பெறுவதால் 2012 ,ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை கொஞ்சம் கேர் ஃபுல்லா இருக்கனும்.

9.தனுசு ராசி:

இவிகளுக்கு சனி 2, 3 க்கு அதிபதி. இவர் 11 க்கு வர்ரது பொது விதி/சிறப்பு விதி ரெண்டு விதிப்படியும் நல்லதுதேன். டபுள் தமாக்கான்னா இதான்னு விசில் அடிக்காதிங்க - இன்னொரு கோணத்துல பார்த்தா உங்க லக்னாதிபதியான குருவுக்கும் சனிக்கும் பகை இருக்கிறதால சனி கொடுக்கிற பலன் எல்லாம் "ஒரு மாதிரியா" இருக்கும்.

ஐ மீன் தாமதமா கிடைக்கும் -அது ஏலத்துல வர்ர சொத்தாவோ - சோற்றுக்கில்லாத நிலையில் விற்கப்படும் சொத்தாவோ -கொலை /தற்கொலை நடந்த சொத்தாவோ -லாக் அவுட்ல இருந்த தொழிற்சாலையாவோ இருக்கலாம்.

குறிப்பு:

லக்னாதிபதியான குரு டிசம்பர் 25 வரை வக்ரமா இருக்கிறதால அதுவரை கண்ணாலம் கட்டியும் பிரம்மச்சாரி கதைதேன்.

10.மகர ராசி:

இவிகளுக்கு சனி 1 ,2 பாவங்களுக்கு அதிபதி. இவரு 10 ல் வர்ரது சிறப்போ சிறப்பு. பொதுவிதி,சிறப்பு விதிப்படி பார்த்தாலும் , சனி லக்னாதிபதிங்கறதாலயும் தொட்டுக்காட்ட ஒரு குறையும் இல்லாத நன்மைகள் ஏற்படும்.
கொஞ்சம் போல உடல் உழைப்பு தேவைப்படலாம், சுத்தம் பத்தம் பார்க்கமுடியாது. (கர்மயோகியான உங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா?)

மிதபாஷியான நீங்க பேச்சுக்கு முக்கியத்வமுள்ள துறை/செக்சன்லயும் கலக்குவிங்கன்னா பார்த்துக்கங்களேன். ஆனால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுக்கல் வாங்கல்ல மட்டும் இறங்காதிங்ணா.
மீறி இறங்கினா பாடி ட்ரபுள் கொடுக்க ஆரம்பிச்சிரும். குடும்பத்தை பிரிஞ்சிருந்தவுக ஒன்னு சேருவிங்க.

11.கும்ப ராசி:

இவிகளுக்கு சனி 1 , 12 பாவங்களுக்கு அதிபதி. இவர் 9 ல வர்ரது 50:50 ரேஞ்சுல நன்மை தீமைகளை கலந்து தரக்கூடிய அமைப்பு. லக்னாதிபதியா இவர் 9 ல வர்ரது நல்லதுதேன். இதனால அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனிங்கற மாதிரி "லாக்" ஆகியிருந்த நிலை மாறி மேற்கு திசை நோக்கி இடம் மாற வாய்ப்பிருக்கு. சொத்து,முதலீடு,சேமிப்புன்னு மனசு டைவர்ட் ஆகும்.

அதே நேரம் இவருக்கு விரயாதிபத்யமும் இருக்கிறதால ஆரம்பத்துல அப்பா,அப்பாவழி உறவு,சொத்து,
சேமிப்பு,முதலீடு வகைகளில் வீண் விரயம் /தாமதம் அலைக்கழிக்கும். தீமைகள் சனி துலாத்தில் தங்கும் ரெண்டரை வருட காலத்தில் முதல் ஒன்னேகால் வருசத்துலயும் - நன்மைகள் அடுத்த ஒன்னேகால் வருசத்துலயும் நடக்கலாம்.

12.மீனராசி:

இவிகளுக்கு சனி 12 , 11 பாவங்களுக்கு அதிபதி. இவர் எட்டுல வர்ரது பொதுவிதிப்படி ரெம்ப ரெம்ப கெட்டது. இதற்கான பலனை சுருக்கமா சொன்னா இவிக சொத்தை அடுத்தவன் அனுபவிக்க , அடுத்தவன் கடனுக்கு இவிக பதில் சொல்லவேண்டி வந்துரும். போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட் ,சுடுகாடுல்லாம் கூட பார்க்கவேண்டி வரலாம். ஹனுமான் டாலர் அணியவும். ( டி.வியி வரும் விளம்பர டாலர் அல்ல. கடைகளில் விற்கும் சாதாரண டாலர்) நிரந்தரமாக ராம நாமம் ஜெபிக்கவும். ராம நாமம் ஒலிக்குமிடத்தில் அனுமனுடைய சான்னித்தியம் ஏற்படும். பிராணபயம் உள்ளவர்களுக்கு/ அஷ்டம சனி பாதிப்பில் உள்ளவர்களுக்கு அபயம் தர வல்லவர் ஹனுமான் ஒருத்தருதேன்.

லாபாதிபதியாக இவர் எட்டில் மறைவது லாப நோக்குடன் செய்யும் வேலைகளில் சிக்கலை தரலாம். அதே நேரத்துல இவருக்கு விரயாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகமும் ஏற்படலாம். தீமைகள் சனி துலாத்தில் தங்கும் ரெண்டரை வருட காலத்தில் முதல் ஒன்னேகால் வருசத்துலயும் - நன்மைகள் அடுத்த ஒன்னேகால் வருசத்துலயும் நடக்கலாம்.





சனி பெயர்ச்சி என்றாலே நம்மவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுவது சகஜம். அதிலும் நம் ஜோதிடதிலகங்கள் ( ஹி ஹி.. நாம உட்பட) பேதிக்கு கொடுத்து ஒரு வழி பண்ணிவிடுகிறார்கள்.

சனிப்பெயர்ச்சி என்றால் சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதாகும். சனிப்பெயர்ச்சி 2012 னு தலைப்பை கொடுத்திருந்தாலும் திருக்கணித பஞ்சாங்கப்படி 2011, நவம்பர் 17 ஆம் தேதியே சனி கன்னியிலருந்து துலாமுக்கு மாறிர்ராரு.

ராசிச்சக்கரத்துல துலாம் 7 ஆவது ராசி. இதனால உலக மக்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்,லவர்ஸ்,பார்ட்னர்ஸ்,
மனைவி(கள்) தொடர்பான பிரச்சினையே அதிகமா இருக்கும். துலாமுக்கு அதிபதி சுக்கிரன். இதனால் பெண்களுக்கு பிரச்சினை அதிகரிக்கும்.( வரதட்சிணை கொடுமை சட்டத்தை வாபஸ் வாங்கிருவாய்ங்களோ?) ஆண் பெண்களுக்கு கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். ( இம்பொட்டன்ஸி?)

சுக்கிர காரகம் கொண்ட தொழில்கள் எல்லாம் பாதிக்கப்படும். உ.ம் ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ், பூக்கள் ,கனிகளை பயிர் செய்வோர் நஷ்டமடையலாம். ஹோட்டல் தொழில் பாதிக்கும்.கள்ள உறவுகள் ,கலப்பு மணங்கள் அதிகரிக்கும். தொழிலாளர் வர்கத்தின் கை ஓங்கும். இப்படி இன்னும் பல விஷயங்களை சொல்லலாம்.

சனி அவரவர் ராசிக்கு 3,6,10,11 ராசிகளில் இருந்தால் நன்மையை தருவார் என்பது பொதுவிதி.தற்போது சனி வந்து அமர உள்ள துலாம் சிம்மத்துக்கு 3 ஆமிடம் , ரிஷபத்துக்கு 6 ஆமிடம்,ம்கரத்துக்கு 10 ஆமிடம், தனுசுக்கு 11 ஆமிடம்.

ஆக துலா சனி மேற்படி 4 ராசியினருக்கு நன்மை தரும் நிலயில் உள்ளார். மற்ற ராசியினருக்கு தீமை செய்யு நிலையில் உள்ளார் என்று கொள்கை அளவில்(?) கூறலாம்.

ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது இது மிக மிக தவறானதாகும்.பொது விதி எனும்போதே சிறப்பு விதியும் இருப்பதாகத்தான் பொருள்.சிறப்பு விதியின் படி பார்க்கும் போது பலன் தலை கீழாய் மாறவும் வாய்ப்புள்ளது.

சனிப் பெயர்ச்சி பலன்கள் என்றதுமே ஒவ்வொரு ராசிக்கும் தனி தனியாக பலன் எழுதிவிடுவது தான் வழக்கமாக உள்ளது. அப்படி எழுதும்போது ஒவ்வொரு வாசகரும் 12 ல் ஒரு பாகத்தை மற்றுமே படிக்கிறார். மற்ற 11 பாகங்களை அலட்சியப்படுத்திவிடுகிறார்.

ஆகவே அனைவரும் சனி குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொதுவில் சொல்லி விட்டு பிறகு வேண்டுமானால் ராசி வாரியாக பலன்களைப் பார்ப்போம்.

நம் நாட்டில் நிமிடத்துக்கு 4 குழந்தைகள் பிறக்கின்றனர். சுமார் 120 நிமிடங்களுக்கு அதாவது 2 மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். அதாவது ஒரே ஜாதகம். அதாவது பெரியார் பிறந்த அதே ஜாதகத்தில் பிறந்த 120 x 4 = 480 மைனஸ் 1 குழந்தைகள் என்னாச்சு ?

ஒரே ஒருபெரியார் தான் பஞ்சக்கச்சங்களை எதிர்த்து ஏறக்குறைய செஞ்சுரி அடிக்க முடிகிறது. ( நானும் அப்படித்தான் பெரியார் என்ற நினைப்பில் என் தெலுங்கு வலை தளத்தில் ஐயர்களுடன் மோதி ஆப்பு வைத்துக்கொண்டேன். ஒரு கட்டத்தில் அங்கன இருந்த ஒரே திரட்டியிலும் என் வலைப்பூ தடை செய்யப்பட்டுவிட்டதென்றால் பாருங்களேன்)

ஜாதகமே ஒன்று என்றாலும் - கிரக ஸ்திதிகள் ஒன்றே என்றாலும் இயற்கை மனித யத்தனத்துக்கும் வாய்ப்பு வைத்து தான் செயல்படுகிறது. இந்த அழகில் இரண்டே கால் நாட்களுக்கு ஒரே ராசி தான் எனும்போது , ஒவ்வொரு ராசியிலும் எத்தனை கோடி பேரை அடைக்கிறார்கள் பாருங்கள். ( நாம கணக்குல வீக்கு ஆருனா கணக்கு போட்டு சொல்லுங்கப்பு)

இதுவே முடிவான உண்மை என்றால் இந்திய மக்களின் வாழ்வுக‌ள் 12 விதமாகத்தானே இருக்க முடியும். உண்மை நிலை அப்படியா இருக்கு? நோ ! ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு விதம்.

ஜாதகம் என்பது வாகனம் மாதிரி. ஜாதகப்படி நடக்கும் தசாபுக்திகள் ரோடு மாதிரி , இவர்கள் கூறும் சனி/குரு/ராகு/கேது பெயர்ச்சி எல்லாம் அவ்வப்போது ட்ராஃபிக்கில் ஏற்படும் சிறுமாற்றங்கள் போன்றது. (முதல்வர் வரும்போது ட்ராஃபிக்கை நிறுத்தலியா அது மாதிரி. )

சரி நான் எதற்கு குறுக்கே . 12 ராசிக்காரவுகளும் தெரிஞ்சுக்க வேண்டிய சமாசாரங்களை சனி பகவானையே உங்களுடன் பேசச்சொல்லி விடுகிறேனே.

உங்கள் ஜாதகமே இல்லாமல், பிறப்பு விவரங்களும் இல்லாமல் உங்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் உள்ளாரா இல்லையா என்று தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நிலையில் இலை என்றால் குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை செய்துகொள்ளுங்கள்

ஹலோ சனி ஸ்பீக்கிங்:

செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன்.

கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள்.

சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4 x ரெண்டரை வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன்.

இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன்.

நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன்.

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ் போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.


பரிகாரங்கள்

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது

ஓகே முன்னுரையே பதிவு அளவுக்கு போயிருச்சு. இப்பம் உங்க ராசிக்கு துலா சனி என்னமாதிரியான பலனை தருவாருன்னு பார்த்துருவம்.

( இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமா பிரதிகூலமான்னு மொத்தமா படிச்சுட்டு கடேசியில முடிவு பண்ணுங்க)

சனி அனுகூலமானால்:
நீங்கள் சுதந்திரர் - அடிமைத்தொழிலில் இருந்தாலும் உங்களை கண்டுக்கற நாயே இருக்காது. மலச்சிக்கல் இருக்காது. நீங்க ஆரம்பிக்கிற வேலை ஒன்னு பத்தா டெவலப் ஆகும். ( நல்ல +கெட்டவேலைகள்) உ.ம் ஒரு கடன் வாங்கினா அது இன் டைம் பைசலாகும் பத்து கடன் வாங்குவிங்க. ஒரு பொய் கேஸு போட்டா பத்து கேஸு போடுவிங்க.

ஆப்போசிட் செக்ஸ் அட் ராக்ட் ஆகும் அவிக கோ ஆப்பரேஷன் கிடைக்கும். சிஸ்டர் டைம் என்னனு கேட்டதுக்கு ஈவ் டீசிங் கேஸெல்லாம் தரமாட்டாய்ங்க. அகால போஜனம்,அகால நித்திரை,முகத்துல எண்ணெய் வழியறது, முடி உதிர்ரது மாதிரி லொள்ளெல்லாம் இருக்காது. என்றும் 16 கணக்கா வலம் வருவிக. நிமிர்ந்த நடை பழகும். நீங்க சம்பளமே தரலின்னாலும் தொழிலாளர்கள் கோ ஆப்பரேட் பண்ணுவாய்ங்க.

சனி பிரதிகூலமானால்:

சொந்த தொழிலிலே இருந்தாலும் கண்ட நாய்க்கு பயந்து நடக்கவேண்டியதாயிரும். வேலைகாரவுகளே ஆப்புவச்சிருவாய்ங்க. துவங்கின வேலை ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு நின்னுரும். ஆப்போசிட் செக்ஸால லோள்ஸ். அகால போஜனம் -அகால நித்திரை -பகல் கொட்டாவில்லாம் உண்டு.குடல் கல் குடலாயிரும். முகத்துல எண்ணெய் வழியும் முடி உதிரும் .சின்னவயசா இருந்தாலும் வெள்ளை முடி வரும். முகத்துல கிழட்டுத்தனம் வந்துரும். கூன் போட ஆரம்பிச்சிருவிக.