இன்னாங்கடா இது நம்ம முருகேசு பெரியாரை சித்தபுருசரும்பாரு - இன்னய தேதிக்கு நான் சாமியாருனு மாஃப் காட்டற திருட்டு பசங்களோட ஒப்பிட்டா பெரியாருதேன் உண்மையான சன்யாசிம்பாரு அம்புட்டுதேன். ஆனால் படக்குனு ஒரு யு டர்ன் அடிச்சு நாத்திகத்துக்கு இறங்கிட்டாரோன்னுட்டு குழம்பிராதிங்க.
என்னை உங்க ஊருக்கு வரச்சொல்லி மெயில் அனுப்பறிங்க. நானு அடப்போங்க சார்.. பஜாருக்கு போகவே நேரமில்லை. நான் எங்க வர்ரதுன்னு கழண்டுக்கறேன். நீங்க வாரம் பத்து நாள் தொடர் மெயில்கள் அனுப்பி வரச்சொல்லி வற்புறுத்தறிங்க.
நான் என்னைக்கு வரேன்னு சொல்லமுடியாது. புறப்படறனன்னைக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன்னு சொல்றேன். உங்க நல்ல நேரமோ என் கெட்ட நேரமோ ஒர்க் அவுட் ஆகி, உங்க வில் பவர் / உங்க எண்ண அலைகள் என்னை கிண்டோ கிண்டுன்னு கிண்ட புறப்படலாம்னுட்டு உங்களுக்கு ஃபொன் பண்றேன். உங்க ஃபோன் ஸ்விட்ச் ஆஃப். நான் புறப்படுவேனா?
ஒரு வேளை நீங்க ஃபோன் ஆன்ல வச்சிருந்து என் காலை எடுத்து பேசி வேலூர் வந்து வந்துருங்க சார் .ஷார்ட். புது பஸ்ஸ்டாண்ட் போகாதிங்க. பழைய பஸ் ஸ்டாண்டுல இறங்கிட்டு ஒரு மிஸ்டு கால் தட்டி விடுங்க நான் பிக் அப் பண்ணிக்கிறேங்கறிங்க.
நானும் நம்பிக்கையா புறப்பட்டு வரேன். பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி ஃபோன் பண்றேன். நீங்க " சார் .. நீங்க என்ன பண்றிங்கண்ணா அப்படியே வெளிய வாங்க.வந்து ஆட்டோ ஸ்டாண்ட்ல் காந்தி நகருன்னு சொல்லுங்க. நூறு ரூபாதான் கேட்பான் அப்படியே வந்து"ங்கறிங்க.. நான் என்ன பண்ணுவேன்/
அடப்போங்கடா நீங்களும் உங்க இழவும்னுட்டு அடுத்த பஸ் பிடிச்சு சித்தூரை பார்க்க வந்துருவேன்.
ஒருவேளை .. நீங்க பஸ் ஸ்டாண்ட்ல வெய்ட் பண்ணி என்னை பிக் அப் பண்ணி டீ,காஃபி, பான்,பீடா,பீடி,சிகரட்டு எல்லாம் வாங்கி கொடுத்து ஊட்டுக்கு கூட்டி போயி திண்ணையில உட்கார வச்சுட்டு உள்ள போறிங்க.( உங்க ஊர்ல இன்னம் திண்ணைங்க இருக்கா பாஸ்? எங்க ஊர்ல இடிச்சு கட்ட வசதியில்லாத திவால் பார்ட்டிங்க மட்டும் விட்டு வச்சிருக்காய்ங்க )
அஞ்சு நிமிசம்,பத்து நிமிசம்.பதினைஞ்சு நிமிசம் ஆச்சு . ஆளை காணோம். இன்னாங்கடா இது இந்த வீட்டு எலிவேஷன் மட்டும் உண்மையோ.. பின்னாடி ஒன்னும் இருக்காதோ/ வெட்ட வெளியோ? இந்த ஆளு அப்படியே பொடி நடையா மலையாள பிட்டு படம் பார்க்க போயிட்டாரோன்னுட்டு எனக்கு டவுட்டு வருது. நான் என்ன பண்ணுவேன். " ஆளை விடுங்கடா"ன்னுட்டு பிச்சிக்கினு சித்தூர்.
இந்த ரேஞ்சுல - இந்த சீரியல்ல தொடர் பதிவே போடலாம். மத்ததை எல்லாம் உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.
ஒரு காலணா சோசியன் நான். உங்களுக்கு மூட்டை அவுத்து கொடுக்கப்போறது ஒன்னும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா வெத்தலை பாக்குல ரூவா வச்சு எனக்கு அழப்போறிங்க. இருந்தாலும் என்னை இன்வைட் பண்ணி ரிசீவ்பண்ணிக்கிட்டு சோசியம் கேட்டுக்கறதிலியே இத்தனை கண்டமிருக்கு.
அப்படியா கொத்தது ஆத்தாவை இன்வைட் பண்றதுன்னா தமாசா? ஆத்தாவுக்கு கடுப்பானா இன்னா ஆவும்? Read More

No comments:
Post a Comment