'>
Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Sunday, April 8, 2012

திருமணத்தடை : சோதிட ஆய்வு


அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி எங்கே இருந்தாலும் திருமணத்தடைக்கு வாய்ப்பிருக்கிறதை ஒரு தொடரா ஆரம்பிச்சு எளுதிக்கிட்டிருந்தம். இடையில எண் கணிதப்படி எட்டாம் மாசம் மாட்டிக்கிச்சா கேப் விளுந்துருச்சு. விட்டதை தொடரப்போறோம். இதுவரை லக்னாதிபதி 1 முதல் 8 ஆமிடங்களில் இருந்தால் என்ன பலன் -அது எப்படி திருமணத்தடையை ஏற்படுத்தும்னு பார்த்துட்டு வந்தோம்.

இன்னைக்கு லக்னாதிபதி 9 ல இருந்தா திருமணத்தடை எப்படி நிகழும்னு பார்ப்போம். Read More

Friday, March 2, 2012

திருமணம்: உள்ள ,உடல் தடைகள்


அண்ணே வணக்கம்ணே..

நேத்திக்கு நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் ராசிகளில் ஆண் பெண் விவரத்தை தர்ரதா சொல்லியிருந்தன். இன்னைக்கு மொதல்ல அதை பார்த்துருவம். Read More


Thursday, March 1, 2012

திருமணம்: உள்ள ,உடல் தடைகள்


அண்ணே வணக்கம்ணே !
ஒரு படத்துல வடிவேலு "ஒரு மனுசன் வீட்ல இருந்து வெளிய வந்து வீடு சேர்ரதுக்குள்ள எத்தீனி கண்டம்டா சாமீ"ன்னு புலம்புவார். கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து பதிவுக்கு வர்ரதுக்குள்ள எத்தீனி டைவர்சனு?

நேத்திக்கு சொன்னாப்ல ஃபேஸ் புக் காரன் ஆப்படிச்சுட்டான். மொபைலுக்கு கோட் அனுப்பறேங்கறான். கோடும் வரமாட்டேங்குது.. லங்கோடும் வரமாட்டேங்குது. இப்பம் என்னடான்னா கோட் லிமிட் தாண்டி போச்சு ஃபர்ஸ்ட் நேம் - லாஸ்ட் நேம் ஃபோட்டோ -டேட் ஆஃப் பர்த் எல்லாம் இருக்கிறாப்ல ஒரு ஐ டி ப்ரூஃப் அனுப்பனுமாம்.

ஜா.ரா ரேன்ஜுக்கு இல்லின்னாலும் நமக்கும் ரெண்டு மூணு பேரிருக்கு. பேங்க்லயே ரெண்டு பேரு (அஃபிடவிட் கொடுத்திருக்கம்) என்னா இழவு இதெல்லாம்? அல்லாரையும் பிளாட்ஃபார வியாபாரி மாதிரி வாங்க வாங்கன்னு ஃபேஸ் புக்குக்கு கூப்டாச்சு. இப்பம் நாமே போகமுடியாத ஆயிருச்சு ( சுமார் 4,000 பேரை கூப்டிருக்கம் - நம்ம கான்டாக்ட்ஸ் அப்படி) பார்ப்பம் பான் கார்ட்ல முருகன் அலியாஸ் முருகேசன் கொடுத்தாப்ல ஞா. நாளைக்கு த்தேன் இந்த இழவை எடுக்கனும்.

நிற்க திருமண தாமதம் மேட்டரை மேரீட் லைஃபுக்கு அப்ளை பண்ணிக்க சொல்லி சொல்லியிருந்தம்.அது எத்தீனி பேரு கண்ல பட்டதோ தெரியலை.

இதுவரை மேற்படி மேட்டருக்கு அப்பா,அம்மா , உ.பிக்கள் காரணமா லொள்ளு இருந்தா என்னா பண்றதுன்னு பார்த்தோம். இன்னைக்கு அசலான மேட்டரு தன் திருமணத்துக்கு தானே தடையா இருக்கிறது. அஸ்கு புஸ்கு அதெப்படினு கேப்பிக. சொல்றேன். Read More

Tuesday, February 28, 2012

திருமண தாமதம் : உ.பிக்கள்? : பரிகாரம்


அண்ணே வணக்கம்ணே !
நாட்டு நடப்பை பத்தி எளுதறதை ஏறக்குறைய ஏறக்கட்டியாச்சு. ஆனால் ஒன்னு நாம 1986 லருந்து நாட்டை பத்தி ரோசிச்சதும் - ஆப்பரேஷன் இந்தியா 2000 னு அலைக்கழிஞ்சதும் வீண் போகல்லே. இந்தியாவை பணக்கார நாடாக்க நாம செய்த முயற்சியை பார்த்து ஆத்தா மனமிரங்கி ( அல்லது ஒரு சதி பண்ணி) நம்மை கை தூக்கி விட்டுட்டா.

ஆ.இ இல்லாட்டி நம்ம லைஃபுக்கும் கலைஞர் லைஃபுக்கும் வித்யாசமே இருக்காது. நாம என்ன செய்தாலும் அதனோட அதனோட அந்திம இலக்கு ஆ. இ தான்.

சுப்ரீம் கோர்ட் நதிகளை இணைக்கிற மேட்டர்ல ஏதோ குட்டு வச்சாப்ல இருக்கு. நதிகளை இணைக்க ஒரே வழி சிறப்பு ராணுவம்தான்.

கவைக்குதவாத அரசியல் வாதிகளோட எண்ணிக்கை உசந்துக்கிட்டே போயி இப்பம் கோர்ட்டுங்க தான் பரிபாலனம் பண்ணிக்கிட்டிருக்கு.

இவிகளோட அலப்பறை காரணமா அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஏன் ராணுவ அதிகாரிகள் கூட அரசியல்ல குதிக்கப்போறாய்ங்க. நடிகர்களை இந்த பட்டியல்ல கொண்டு வரலை ஏன்னா அவிகளுக்கு மறைமுகமாவாச்சும் அவிக பிம்பத்துக்காச்சும் சனங்களோட இறுக்கமான உறவு இருக்கு. இந்த அதிகாரிங்க கதைதேன் கண்ணை கட்டுது. போதாக்குறைக்கு கோர்ட்டுங்க.

இதெல்லாம் எங்கன போயி முடியப்போகுதோ பயம்மா இருக்கு. பை தி பை சமீபத்திய சட்டமன்ற தேர்தல்கள்ள காங்கிரஸ் பயங்கர பல்பு வாங்கினா பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் கியாரண்டி. உங்க ஓட்டு எவரிக்கன்டி?

நிற்க திருமண தாமதம்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சம். அதுல திருமண தாமதத்துக்கு அப்பா,அம்மா காரணமா இருந்தா அதுக்கென்ன பரிகாரம்னு பார்த்தோம் . நேத்து பி எஸ் என் எல் காரவுக ஸ்ட் ரைக் காரணமா நெட் கனெக்சனை ஃபணாலாக்கிட்டாய்ங்க. ( புது ட்ரெண்டா இருக்கு) அதனாலதான் பதிவு போட லேட்டாயிருச்சு.

மேலும் திருமண தாமதத்துக்கு உ.பிக்கள் காரணமா இருந்தா பரிகாரம் என்னங்கற விஷயத்தை சொல்லவே இல்லை. அதை இன்னைக்கு பார்த்துருவம். Read More


திருமண தாமதம் : உ.பி க்களே காரணமா? « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே!
வழக்கமா நாம பயங்கர மொக்கை போட்டுட்டுதேன் மேட்டருக்கே வருவம். சமீப காலமா பதிவு போடறதுக்குள்ளயே நாக்கு தள்ளுது.இதுல மொக்கைக்கு எங்கன போறது?

ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு 419 பேர் முன் பதிவு செய்திருக்க அவிகளுக்கெல்லாம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை 10 கேள்விகளுக்கு பதில் தர எப்படி கிளிஞ்சிருக்கும்னு நினைச்சு பாருங்க. இது போதாதுன்னு புஸ்தவம் வெளி வந்தாச்சுங்கற சங்கதி தெரிஞ்சு 27 பேர் லைனுக்கு வந்துட்டாய்ங்க.

இதையும் மீறி பதிவு போட்டுட்டு வரேன்னா அது ஆத்தா கருணை தேன். இன்னைக்கு என்ன வேணா ஆகட்டும் மொக்கைக்கு அப்பாறம் தேன் பதிவுன்னு முடிவு பண்ணிட்டம். Read More


Saturday, October 29, 2011

ராசிக்கல் -கில்மா - தற்கொலைகள் : ஒரு எக்ஸ்ரே பார்வை


நேற்று கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.

ஆனால் இன்னைக்கு சம்பந்தா சம்பந்தமில்லாம ராசிக்கற்களான்னுட்டு ஃபீல் பண்றவுகளுக்கு ஒரு வார்த்தை. சொல்லப்போற மேட்டர் நெஜமாலுமே நாட்டுக்கு தேவையான மேட்டர். இதை எத்தீனி பேரு அடிஷ்னலா படிச்சா அத்தீனி நன்மைகள் கிடைக்கும்.(1000+)

அதனாலதான் மேற்படி கவர்ச்சி தலைப்பு. தலைப்பு மட்டுமில்லை ராசிக்கற்களை பற்றிய மேட்டரும் தரதா இருக்கேன். மொதல்ல ராசி கற்களை பார்ப்போம். பிற்காடு தற்கொலை மாதிரி சொத்தை மேட்டர்.

வானவில் பத்தி தெரியும். நம்ம கவிஞர்கள் அதை விரயமா ஹீரோவுக்கு அரைஞான் கயிறா , ஹீரோயினுக்கு உள்பாவாடை நாடாவா சகட்டுமேனிக்கு உபயோகிச்சிருக்காய்ங்க. அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயம். விசயத்துக்கு வருவம்.

வானவில்லுல 7 நிறம். ராகு கேது தவிர்த்து பார்த்தா 7 கிரகம். 7 நிறம். இந்த 7 நிறங்களை ஞா வச்சுக்க வெப்கயாரோ என்னமோ சொல்வாய்ங்க.

மேற்படி 7 நிறமும் உருவாகறது சூரிய ஒளியிலருந்துதேன்ங்கறதை சுட்டிக்காட்டவே இந்த பாய்ண்டு. . நீங்க கலைஞர் போட்டிருக்கிற துண்டு மஞ்ச நிறமுன்னு எப்டி கண்டுக்கறிங்கன்னா சூரிய ஒளியில உள்ள 7 நிறங்கள்ள மஞ்சள் நிற ஒளி அந்த மஞ்சத்துண்டு மேல விழறதில்லை.

இந்த லாஜிக் தான் நீங்க உபயோகிக்கிற ஆடை அணிகலன்களின் நிறத்துலயும் வேலை செய்யுது. அது சரி மற்ற ஜோதிடர்கள் ஜாதகத்துல எந்த கிரகம் நல்ல நிலையில் இருக்கோ அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலனை அதிகம் உபயோகிக்க சொல்றாய்ங்க.

நீங்களோ எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரகத்தோட நிறமுள்ள ஆடை அணிகலன்களை தானே அதிகமா உபயோகிக்க சொல்றிங்க ( இது நம்மிடம் ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பெற்ற பார்ட்டிகளுக்கு மட்டும் தான் தெரியும்)

இந்த இரண்டு கருத்துக்கும் பின்னால் உள்ள லாஜிக் என்ன? இதுல எது கரீட் ? எது தவறு? சொல்ல முடியுமா?

சொல்றேன். ( இன்னாபா ராசிக்கல்லை பத்தி சொல்றேன்னுட்டு நிறத்தை பத்தி சொல்றேன்னு கோச்சுக்காதிங்க. நிறம்ங்கறது ஒரு டம்ளர் ரஸ்னா மாதிரி. ராசிக்கல்லுங்கறது ரஸ்னா பவுடர் பாக்கெட் மாதிரி /கான்சன்ட்ரேட் மாதிரி. வெய்ட் அண்ட் சீ பாய்ண்டுக்கு வந்துருவமில்லை ) .

மற்றவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் (பலர் கிளிப்பிள்ளைகள் தான்) சின்னதா லாஜிக் இருக்கக்கூடும். அது என்னன்னு நமக்கு புரியுது. இருந்தாலும் ஜல்லியடிகளுக்கு நாம ஏன் ஸ்டஃப் தரனும்.அதனால நம்முதை மட்டும் நாம கவனிப்போம்.

ஒரு கிரகம் ஜாதகத்துல காங்கிரஸ் கணக்கா சுயேச்சைய விட மோசமா தேஞ்சு போயிருக்குன்னு வைங்க. உங்க பாடியில சூரிய ஒளியிலான அந்த கிரகத்தோட நிறத்தை கிரகிச்சுக்க கூடிய சக்தி மிக அதிகமா இருக்கும். அதே போல சீக்கிரமா வெளிப்படுத்திடக்கூடிய இயல்பும் இருக்கும்.

உதாரணமா வாயிதா போன செல் ஃபோன் பேட்டரியை சார்ஜ்ல போட்டிங்கன்னா பத்து நிமிசத்துல பேட்டரி ஃபுல்லுன்னு காட்டும். ஆனால் ஒரு கால் பேசிமுடிக்கிறதுக்குள்ள பேட்டரி நில் ஆயிரும்.

ஆனா உருப்படியான பேட்டரி நிதானமாதான் சார்ஜ் வாங்கும் . அதே போல நிதானமாதான் சக்தியை வெளிப்படுத்தும்.

பலமிழந்த கிரகம் - சூரிய ஒளியிலான அதனோட நிறத்தை க்ராஸ்ப் பண்ணிக்கற மேட்டர்ல உங்க பாடியை வாயிதா போன பேட்டரியாக்கிரும்.

உதாரணமா உங்க ஜாதகத்துல சூரியன் பல்பு வாங்கியிருக்காருனு வைங்க .அப்பம் உங்க பாடி சூரிய ஒளியில் உள்ள ஆரஞ்சு நிற ஒளியை கப கபன்னு கிரகிச்சுக்க துவங்கும். இதனால உங்களுக்குள்ளே ஈகோ தலைவிரிச்சாட ஆரம்பிச்சுரும்.

தகுதி உடைய மனிதர்கள் மேட்டர்லயே அவிகளை அவிக ஈகோ குழி தோண்டி புதைச்சுருது. இதுல தகுதியில்லாத ஆசாமி ஈகோயிஸ்டா பிஹேவ் பண்ணா என்ன ஆகும்னு ரோசிங்க.

இதுக்குத்தேன் நாம எந்த கிரகம் ஜாதகத்துல வீக்கா இருந்தா அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலைனை அதிகமா யூஸ் பண்ண சொல்றோம்.

உ.ம் மேற்படி சூரிய பலமில்லாத மனிதர் ஆரஞ்சு நிற ஆடை அணிகலனை அதிகம் யூஸ் பண்ணா சூரியனில் உள்ள ஆரஞ்சு நிற கதிர்களை அவிக பாடி கிரகிக்காது.ஏன்னா ஆரஞ்சு நிற கதிர்கள் அவிக பாடி மேல விழவே விழாதே. ( அப்படி விழாததாலதான் அதை ஆரஞ்சு நிற ஆடைன்னு நம்மால சொல்ல முடியுது)

இந்த மேட்டர்தான் ராசிக்கற்கள் மேட்டர்லயும் வேலை செய்யுது. ராசிக்கல்லுங்கறது இதுவரை சொன்ன அதே மேட்டரை இன்னம் கொஞ்சம் ஸ்ட் ராங்கா பண்ணுது.

ஒரே கிரகம் நன்மை & தீமை செய்யக்கூடிய நிலையில இருக்கலாம்.

உ.ம் 1
மிதுனத்துக்கு சனி 8 -9 க்கு அதிபதி. இவிக நீலக்கல் அணியலாம்.
உ.ம் 2
கடகத்துக்கு குரு 6 ,9 க்கு அதிபதி இவிக புஷ்பராகம் அணியலாம்

இதே போல நன்மையே செய்யக்கூடிய கிரக்மா இருந்தாலும் கொஞ்சம் தீமையையும் சேர்த்து தரும்.

உ.ம் 1
சனி யோக காரகனாகும்போது ஏழு தலைமுறைக்கு அழியாத செல்வத்தை தருவாரு.ஆனால் கூடவே அதை நீங்க கிழவாடி ஆன பிற்காடு தருவாரு. கூடவே கஞ்சத்தனம், சோம்பல் இதையெல்லாம் சேர்த்து தருவாரு. மேற்படி சைட் எஃபெக்ட்சை குறைக்க நீலம் அணியலாம்.

( என்ன பாஸ் .. மேட்டர் ஓகேவா? தற்கொலை மேட்டருக்கு போயிரலாமா?)

கேள்வி1:

கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

மனிதர்கள் ஸ்தூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை உந்துவது இரண்டு இச்சைகளே. ஒன்று : கொல்வது இரண்டு: கொல்லத்துடிப்பது.

இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் .

ஆண் பார்வையில்:
விந்து வெளியேறும் வரை அவளை கொல்லுவதாய் உணர்கிறான். பற்குறி பதித்தல், தட்டுதல், கிள்ளுதல், உறுப்பை திணித்தல் ,முரட்டுத்தனமாக இயங்குதல் இத்யாதி மூலம் அவனது கொல்லும் வெறி நிறைவேறுகிறது. விந்து வெளியேறும்போது ஆண் தான் செத்து போவதாய் (குட்டி மரணம்) உணர்கிறான். காலச்சக்கரம் நிற்கிறது.

பெண்பார்வையில்:
ஆரம்பத்தில் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. க்ளைமேக்சில் (விந்து வெளிப்படும்போது) அவனை தான் கொன்றுவிட்டதாய் உணர்ந்து (அடி மனதில்) திருப்தியடைகிறாள்.அவளது கொல்லும் இச்சை நிறைவேறுகிறது.

உடலுறவு என்பது ஆண் -பெண் இருவரின் கொல்லும் -கொல்லப்படும் இச்சைகளை ஒரு சேர தீர்த்து வைக்கவேண்டும். இதற்கு ஆண் தன் உச்சத்தை சற்றே தாமதித்து பெண் உச்சம் பெறுவதை துரிதப்படுத்த வேண்டும்.ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சி அறியும்.

ஆக ஆண் பெண்களின் அடிப்படை இச்சைகள் செக்ஸில் நிறைவேறாத சந்தர்ப்பத்தில் உள்ளடக்கி வைக்கப்பட்ட இச்சைகள் வெடித்து தம் சுயரூபத்தில் வெளிப்படுகின்றன.

பெண் உச்சம் பெற்றாலும் பெறாவிட்டாலும் ஆண் உச்சம் பெற்றுவிடுகிறான். நாளடைவில் இது ஆணில் குற்ற உணர்ச்சியையும் -பெண்ணில் வன்முறையையும் தூண்டுகிறது.

திருமணத்துக்கு முன்னாவது ஆண்,பெண்களின் அடிமனதில் தம் அடிப்படை இச்சைகளுக்கு ஒரு வடிகால் கிட்டும் என்ற கனவாவது மிச்சமிருக்கிறது. திருமணத்துக்கு பின்னோ அந்த கனவும் கலைந்துவிடுகிறது.

பெண்ணுக்கு செக்ஸில் ஆர்வம் குறைகிறது - பெண் செக்ஸை தவிர்க்க ஆரம்பிக்கிறாள். ஆண் தவிக்க ஆரம்பிக்கிறான் இருவரிலும் நிறைவேறாத செக்ஸ் இச்சைகள் வன்முறையாக வெடிக்கின்றன. வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு வலிமை இருக்கும்போது அது கொலையில் முடிகிறது.

வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு இல்லாத போது அது தற்கொலையில் முடிகிறது.

கேள்வி:2

பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

பெண்கள் வீக்கர் செக்ஸ். ( உடலளவில்) இதனால் அவள் தன் வட்டத்தை சிறிதாக்கிக்கொள்கிறாள். ( கேமராவை ஜூம் பண்ண மாதிரி) இதனால் சொந்த பிரச்சினை மட்டுமே பூதாகரமாக மாறுகிறது. தற்கொலைக்கு தூண்டுகிறது.

கேள்வி:3

ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க.

ஆண் ஸ்ட்ராங்கர் செக்ஸ்.அவனோட வட்டம் பெரிது. அவன் வேட்டையாட வேண்டியிருக்கு.அதற்காக சமூக பொருளாதார அமைப்புகளுடன் உறவாட வேண்டியிருக்கு. அதனால தான் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்கள் அவனை தற்கொலைக்கு தூண்டுது.

Monday, July 4, 2011

ஆண்,பெண் வித்யாசம் : 5

அண்ணே வணக்கம்ணே ! ஆண்,பெண் வித்யாசம்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டது ஞா இருக்கலாம். அதை தொடர உத்தேசம். தொடர்ந்து எழுதறதுல ஒரு சிக்கல் இருக்கு. ஒன்னு சுட்டுர்ராய்ங்க. ரெண்டு நமக்கே போரடிச்சுருது. read more

Tuesday, May 10, 2011

மைனஸ் தாலி+பார்ட்னர் : தோஷங்களின் நிலை

"உறவு வரும் -பிரிவு வரும் வாழ்க்கை ஒன்றுதான்"  - இது ஒரு திரைப்படபாடல் வரி. எவனோட வாழ்க்கையிலயோ பிரிவு வந்தா இப்படி ஏதோ ஒரு பாட்டு வரியை எடுத்துவிட்டு ஆறுதல் சொல்ட்டு வந்துரலாம்.

நம்ம லைஃப்லயே பிரிவு வந்துட்டா? - அட் ச்சீ வாய மூடுய்யா! . அபசகுனம்! . எங்க ஊட்டுக்காரி பத்தி இன்னா தெரியும்? சொக்கத்தங்கம்யா. இந்த மாரி கனவுல கூட நடக்காதுய்யான்னு சீறி எழுந்துருவம்.

ஒருத்தருக்காவது " என்னங்க நீங்க அந்த அளவுக்கு எல்லாம் நான் நடந்துக்கிட்டதே இல்லை."ன்னு சொல்ற தில்லு கீதா?

இல்லே!  இல்லே !! இல்லே !!!
( ரெண்டாவது 3 ஆவது இல்லேல்லாம் எக்கோப்பா - ஸ்டீரியோ எஃபெக்டு.)
தொடர்ந்து படிக்க

Monday, April 25, 2011

ம(ன)ண முறிவுகள் - ஜோதிட ஆய்வு

ஹி ஹி ஒரு தாரம் !  2 தாரம் ! 3 தாரம் ! : இரண்டாம் பகுதியைத்தேன் இந்த தலைப்புல போட்டிருக்கன்.

கடந்த பதிவுல விவாகரத்து -மறுமண யோசனைக்கான காரண காரியங்களை சொல்லியிருந்தேன். பரிகாரங்களை நாளைக்கு சொல்றேனு ச்சூ காட்டிட்டன். ஆக்சுவலா இன்னைக்கு பதிவே கூடாது ஐ மீன் கை கூடாதுன்னுட்டு சத்யசாய்பாபாவுக்கு கேன்சர்?ங்கற பதிவை போட்டுட்டு கழண்டுகிட்ட நொடி படக்குனு பாடி ரெஃப்ரஷ் ஆயிருச்சு.

உங்கள்ள யாரோ நமக்கு க்ளூக்கோஸ் கணக்கா எண்ண அலைகளை அனுப்பறாப்ல இருக்கு. நன்றி. அதனாலதான் இந்த அத்யாயமே வெளிவந்திருக்கு.உலகம் என்னை ஜஸ்ட் ஒரு ஜோதிடனாவே பார்க்குது ( என்ன ஒரு சோகம்?) பேசிக்கலா நான் ஒரு சத்யான்வேஷி. சத்தியத்துக்கான தேடல்ல , பாலைப்பயணத்துல  கிடைச்ச ஒயாசிஸ் ஜோதிடம்.

என் தேடல்ல கிடைச்ச சகலத்தையும் என் சகபயணிகளுக்கான உங்களுக்கு அள்ளித்தந்துரனுங்கறதுதான் என் நோக்கம். நமக்கு கடவுள் பட்டமும் வேணா ஷுகர் வந்ததா? கேன்சர் வந்ததா? எலும்பு முறிஞ்சதா? மயக்கமருந்து தராய்ங்களா? அதனால கிட்னி,கல்லீரல்  பல்பு வாங்கிருச்சானு கூட வெளி உலகத்துக்கு தெரியாத -தெரியக்கூடாத ஹிப்பாக்ரடிக் வாழ்க்கையோ என் தலைக்கு பின்னாடி பிரபையோ நமக்கு தேவையில்லை நைனா!

நம்ம முருகேசு இன்னா ப்ராண்டு தம் போடறாருனு கண்டுக்கினு தாளி ஒரு நாள் ஒரு பாயிட்டு சிகரட்டோட போய் நி.........ம்...............மதியா அடிச்சுட்டு வரணும்யாங்கற எண்ணம் உங்களுக்குள்ள வந்தா போதும் நான் ஜெயிச்சுட்டேன்னு அர்த்தம்.

நிற்க. புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர்ரதுக்கு மஸ்தா ரீசன்ஸ் இருக்குங்கண்ணா. இதையெல்லாம் பெரிய லிஸ்டா போட்டு  மோகம் 30 நாள் ஆசை அறுபது நாள் தானா?ங்கற தலைப்புல தொடர்பதிவே போட்டிருக்கன்.

தேவை உள்ளவுக படிச்சுருங்க. உங்களை சுத்தி உள்ளவுகளுக்கு தேவைன்னு பட்டா இந்த தொடர்பதிவை பத்தி போட்டுக்கொடுங்க. அண்ணாத்தை! குடும்பம் குடும்பங்கற மேட்டர் சுமுகமா போனாலே பாதி பிரச்சினை ஓவர். மேலும்