அண்ணே வணக்கம்ணே !
நாட்டு நடப்பை பத்தி எளுதறதை ஏறக்குறைய ஏறக்கட்டியாச்சு. ஆனால் ஒன்னு நாம 1986 லருந்து நாட்டை பத்தி ரோசிச்சதும் - ஆப்பரேஷன் இந்தியா 2000 னு அலைக்கழிஞ்சதும் வீண் போகல்லே. இந்தியாவை பணக்கார நாடாக்க நாம செய்த முயற்சியை பார்த்து ஆத்தா மனமிரங்கி ( அல்லது ஒரு சதி பண்ணி) நம்மை கை தூக்கி விட்டுட்டா.
ஆ.இ இல்லாட்டி நம்ம லைஃபுக்கும் கலைஞர் லைஃபுக்கும் வித்யாசமே இருக்காது. நாம என்ன செய்தாலும் அதனோட அதனோட அந்திம இலக்கு ஆ. இ தான்.
சுப்ரீம் கோர்ட் நதிகளை இணைக்கிற மேட்டர்ல ஏதோ குட்டு வச்சாப்ல இருக்கு. நதிகளை இணைக்க ஒரே வழி சிறப்பு ராணுவம்தான்.
கவைக்குதவாத அரசியல் வாதிகளோட எண்ணிக்கை உசந்துக்கிட்டே போயி இப்பம் கோர்ட்டுங்க தான் பரிபாலனம் பண்ணிக்கிட்டிருக்கு.
இவிகளோட அலப்பறை காரணமா அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஏன் ராணுவ அதிகாரிகள் கூட அரசியல்ல குதிக்கப்போறாய்ங்க. நடிகர்களை இந்த பட்டியல்ல கொண்டு வரலை ஏன்னா அவிகளுக்கு மறைமுகமாவாச்சும் அவிக பிம்பத்துக்காச்சும் சனங்களோட இறுக்கமான உறவு இருக்கு. இந்த அதிகாரிங்க கதைதேன் கண்ணை கட்டுது. போதாக்குறைக்கு கோர்ட்டுங்க.
இதெல்லாம் எங்கன போயி முடியப்போகுதோ பயம்மா இருக்கு. பை தி பை சமீபத்திய சட்டமன்ற தேர்தல்கள்ள காங்கிரஸ் பயங்கர பல்பு வாங்கினா பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் கியாரண்டி. உங்க ஓட்டு எவரிக்கன்டி?
நிற்க திருமண தாமதம்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சம். அதுல திருமண தாமதத்துக்கு அப்பா,அம்மா காரணமா இருந்தா அதுக்கென்ன பரிகாரம்னு பார்த்தோம் . நேத்து பி எஸ் என் எல் காரவுக ஸ்ட் ரைக் காரணமா நெட் கனெக்சனை ஃபணாலாக்கிட்டாய்ங்க. ( புது ட்ரெண்டா இருக்கு) அதனாலதான் பதிவு போட லேட்டாயிருச்சு.
மேலும் திருமண தாமதத்துக்கு உ.பிக்கள் காரணமா இருந்தா பரிகாரம் என்னங்கற விஷயத்தை சொல்லவே இல்லை. அதை இன்னைக்கு பார்த்துருவம். Read More
2 comments:
ஜோதிடம் 360 நூல் ஸ்டாக் உள்ளதா?எனக்கு ஒரு copy தேவை.எவ்வளவு M.O செய்ய வேண்டும்? 1 புக்+Postal fees= ?
வாங்க வெ.குருக்கள் (?)
ஒரு பிரதி ரூ.75 கூரியர் கட்டணம் ரூ.25 (தென் இந்திய முகவரிக்கு மட்டும்)
Post a Comment