ஹி ஹி ஒரு தாரம் ! 2 தாரம் ! 3 தாரம் ! : இரண்டாம் பகுதியைத்தேன் இந்த தலைப்புல போட்டிருக்கன்.
கடந்த பதிவுல விவாகரத்து -மறுமண யோசனைக்கான காரண காரியங்களை சொல்லியிருந்தேன். பரிகாரங்களை நாளைக்கு சொல்றேனு ச்சூ காட்டிட்டன். ஆக்சுவலா இன்னைக்கு பதிவே கூடாது ஐ மீன் கை கூடாதுன்னுட்டு சத்யசாய்பாபாவுக்கு கேன்சர்?ங்கற பதிவை போட்டுட்டு கழண்டுகிட்ட நொடி படக்குனு பாடி ரெஃப்ரஷ் ஆயிருச்சு.
உங்கள்ள யாரோ நமக்கு க்ளூக்கோஸ் கணக்கா எண்ண அலைகளை அனுப்பறாப்ல இருக்கு. நன்றி. அதனாலதான் இந்த அத்யாயமே வெளிவந்திருக்கு.உலகம் என்னை ஜஸ்ட் ஒரு ஜோதிடனாவே பார்க்குது ( என்ன ஒரு சோகம்?) பேசிக்கலா நான் ஒரு சத்யான்வேஷி. சத்தியத்துக்கான தேடல்ல , பாலைப்பயணத்துல கிடைச்ச ஒயாசிஸ் ஜோதிடம்.
என் தேடல்ல கிடைச்ச சகலத்தையும் என் சகபயணிகளுக்கான உங்களுக்கு அள்ளித்தந்துரனுங்கறதுதான் என் நோக்கம். நமக்கு கடவுள் பட்டமும் வேணா ஷுகர் வந்ததா? கேன்சர் வந்ததா? எலும்பு முறிஞ்சதா? மயக்கமருந்து தராய்ங்களா? அதனால கிட்னி,கல்லீரல் பல்பு வாங்கிருச்சானு கூட வெளி உலகத்துக்கு தெரியாத -தெரியக்கூடாத ஹிப்பாக்ரடிக் வாழ்க்கையோ என் தலைக்கு பின்னாடி பிரபையோ நமக்கு தேவையில்லை நைனா!
நம்ம முருகேசு இன்னா ப்ராண்டு தம் போடறாருனு கண்டுக்கினு தாளி ஒரு நாள் ஒரு பாயிட்டு சிகரட்டோட போய் நி.........ம்...............மதியா அடிச்சுட்டு வரணும்யாங்கற எண்ணம் உங்களுக்குள்ள வந்தா போதும் நான் ஜெயிச்சுட்டேன்னு அர்த்தம்.
நிற்க. புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர்ரதுக்கு மஸ்தா ரீசன்ஸ் இருக்குங்கண்ணா. இதையெல்லாம் பெரிய லிஸ்டா போட்டு மோகம் 30 நாள் ஆசை அறுபது நாள் தானா?ங்கற தலைப்புல தொடர்பதிவே போட்டிருக்கன்.
தேவை உள்ளவுக படிச்சுருங்க. உங்களை சுத்தி உள்ளவுகளுக்கு தேவைன்னு பட்டா இந்த தொடர்பதிவை பத்தி போட்டுக்கொடுங்க. அண்ணாத்தை! குடும்பம் குடும்பங்கற மேட்டர் சுமுகமா போனாலே பாதி பிரச்சினை ஓவர். மேலும்
No comments:
Post a Comment