'>
Showing posts with label திருமண தாமதம். Show all posts
Showing posts with label திருமண தாமதம். Show all posts

Wednesday, April 11, 2012

லக்னாதிபதி11ல்: திருமணத்தடை


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு லக்னாதிபதி 11 ல நின்னா திருமணத்தடை எப்படி ஏற்படும்னு பார்ப்போம். இந்த 11 ஆமிடத்துக்கு ஒரு சிறப்பு இருக்கு. அது இன்னாடான்னா எந்த பாவாதிபதி இந்த பாவாதிபதி/பாவத்தோட அந்த சம்பந்தப்பட்டாலும் அந்த பாவ காரகம் டபுளாயிரும்.

உ.ம் 4 ஆம் பாவாதிபதி 11 ஆம் பாவாதிபதிக்கு தொடர்பு ஏற்பட்டா ரெண்டு அம்மா , ரெண்டு வாகனம்,ரெண்டு டிகிரி (இது நம்ம அனுபவமுங்கோ)

லக்னாதிபதி 11 ல நின்னா ஒரே ஆளு ரெட்டையாயிருவாரான்னா ஆமாம். குணத்துல. டபுள் மைண்டட் ஃபெல்லோவா இருக்க வாய்ப்பு அதிகம்.

பொதுவா 11 ஐ லாபஸ்தானம்னு சொல்றோம்.லக்னாதிபதின்னாலே ஜாதகர் தான். அப்போ ஜாதகர் லாபம் பார்க்காம எதையும் ...எதையும் செய்யமாட்டாருன்னு சொல்லலாமா? லாபத்தை எதிர்பார்த்து செய்வாருன்னு சொல்லலாம். (மைல்டா இருக்கில்லை) Read More

Sunday, April 8, 2012

திருமணத்தடை : சோதிட ஆய்வு


அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி எங்கே இருந்தாலும் திருமணத்தடைக்கு வாய்ப்பிருக்கிறதை ஒரு தொடரா ஆரம்பிச்சு எளுதிக்கிட்டிருந்தம். இடையில எண் கணிதப்படி எட்டாம் மாசம் மாட்டிக்கிச்சா கேப் விளுந்துருச்சு. விட்டதை தொடரப்போறோம். இதுவரை லக்னாதிபதி 1 முதல் 8 ஆமிடங்களில் இருந்தால் என்ன பலன் -அது எப்படி திருமணத்தடையை ஏற்படுத்தும்னு பார்த்துட்டு வந்தோம்.

இன்னைக்கு லக்னாதிபதி 9 ல இருந்தா திருமணத்தடை எப்படி நிகழும்னு பார்ப்போம். Read More

Tuesday, February 28, 2012

திருமண தாமதம் : உ.பிக்கள்? : பரிகாரம்


அண்ணே வணக்கம்ணே !
நாட்டு நடப்பை பத்தி எளுதறதை ஏறக்குறைய ஏறக்கட்டியாச்சு. ஆனால் ஒன்னு நாம 1986 லருந்து நாட்டை பத்தி ரோசிச்சதும் - ஆப்பரேஷன் இந்தியா 2000 னு அலைக்கழிஞ்சதும் வீண் போகல்லே. இந்தியாவை பணக்கார நாடாக்க நாம செய்த முயற்சியை பார்த்து ஆத்தா மனமிரங்கி ( அல்லது ஒரு சதி பண்ணி) நம்மை கை தூக்கி விட்டுட்டா.

ஆ.இ இல்லாட்டி நம்ம லைஃபுக்கும் கலைஞர் லைஃபுக்கும் வித்யாசமே இருக்காது. நாம என்ன செய்தாலும் அதனோட அதனோட அந்திம இலக்கு ஆ. இ தான்.

சுப்ரீம் கோர்ட் நதிகளை இணைக்கிற மேட்டர்ல ஏதோ குட்டு வச்சாப்ல இருக்கு. நதிகளை இணைக்க ஒரே வழி சிறப்பு ராணுவம்தான்.

கவைக்குதவாத அரசியல் வாதிகளோட எண்ணிக்கை உசந்துக்கிட்டே போயி இப்பம் கோர்ட்டுங்க தான் பரிபாலனம் பண்ணிக்கிட்டிருக்கு.

இவிகளோட அலப்பறை காரணமா அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஏன் ராணுவ அதிகாரிகள் கூட அரசியல்ல குதிக்கப்போறாய்ங்க. நடிகர்களை இந்த பட்டியல்ல கொண்டு வரலை ஏன்னா அவிகளுக்கு மறைமுகமாவாச்சும் அவிக பிம்பத்துக்காச்சும் சனங்களோட இறுக்கமான உறவு இருக்கு. இந்த அதிகாரிங்க கதைதேன் கண்ணை கட்டுது. போதாக்குறைக்கு கோர்ட்டுங்க.

இதெல்லாம் எங்கன போயி முடியப்போகுதோ பயம்மா இருக்கு. பை தி பை சமீபத்திய சட்டமன்ற தேர்தல்கள்ள காங்கிரஸ் பயங்கர பல்பு வாங்கினா பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் கியாரண்டி. உங்க ஓட்டு எவரிக்கன்டி?

நிற்க திருமண தாமதம்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சம். அதுல திருமண தாமதத்துக்கு அப்பா,அம்மா காரணமா இருந்தா அதுக்கென்ன பரிகாரம்னு பார்த்தோம் . நேத்து பி எஸ் என் எல் காரவுக ஸ்ட் ரைக் காரணமா நெட் கனெக்சனை ஃபணாலாக்கிட்டாய்ங்க. ( புது ட்ரெண்டா இருக்கு) அதனாலதான் பதிவு போட லேட்டாயிருச்சு.

மேலும் திருமண தாமதத்துக்கு உ.பிக்கள் காரணமா இருந்தா பரிகாரம் என்னங்கற விஷயத்தை சொல்லவே இல்லை. அதை இன்னைக்கு பார்த்துருவம். Read More


திருமண தாமதம் : உ.பி க்களே காரணமா? « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே!
வழக்கமா நாம பயங்கர மொக்கை போட்டுட்டுதேன் மேட்டருக்கே வருவம். சமீப காலமா பதிவு போடறதுக்குள்ளயே நாக்கு தள்ளுது.இதுல மொக்கைக்கு எங்கன போறது?

ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு 419 பேர் முன் பதிவு செய்திருக்க அவிகளுக்கெல்லாம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை 10 கேள்விகளுக்கு பதில் தர எப்படி கிளிஞ்சிருக்கும்னு நினைச்சு பாருங்க. இது போதாதுன்னு புஸ்தவம் வெளி வந்தாச்சுங்கற சங்கதி தெரிஞ்சு 27 பேர் லைனுக்கு வந்துட்டாய்ங்க.

இதையும் மீறி பதிவு போட்டுட்டு வரேன்னா அது ஆத்தா கருணை தேன். இன்னைக்கு என்ன வேணா ஆகட்டும் மொக்கைக்கு அப்பாறம் தேன் பதிவுன்னு முடிவு பண்ணிட்டம். Read More


Sunday, February 26, 2012

திருமணத்தில் தாமதம் : பெற்றோர் காரணமா?


அண்ணே வணக்கம்ணே !

பொதுவா பார்த்தா குரு,சுக்கிரன்,களத்ர பாவாதிபதி சோனியா இருந்தா தாமதம் ஏற்படும். டீப்பா பார்த்தா லக்னாதிபதியே பல்பு வாங்கியிருந்தாருன்னு வைங்க தாமதம் சகஜம். உ.ம் நீசம், 6,8,12 ல மாட்டறது, அல்லது மேற்படி அதிபதிகளோட சகவாசம் வச்சுக்கறது . அஸ்தங்கதம், நெல்ல இடத்துல நின்னு வக்ரம் அடையறது, இப்படி ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு.

கண்ணாலத்துக்கு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வகையில கோ ஆப்பரேட் பண்ணுது. ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு வகையில கோ ஆப்பரேட் பண்ணுது.

மேஜரான பாவங்கள் கெட்டிருந்து 1 ,2 , 4, 5, 7, ( பெண்ணானால் 8) , 9 , 11 ( ஆணுக்கு ரெண்டாம் கல்யாணம்) ,12 பாவங்கள்ள எதாவது ஒன்னு பேர் சொல்லியிருந்தாலும் கண்ணாலம் நடந்துருது .( மத்ததெல்லாம் மத்த பாவங்களோட பலத்தை பொருத்து நடக்கும் - நடக்காம போகும் .அதுவேற சங்கதி)

அதே போல மேஜரான கிரகங்கள் கெட்டிருந்து குரு,சுக்கிரன் அல்லது 7 ஆம் பாவாதிபதிகள்ள ஒருத்தரு தம் கட்டி நின்னிருந்தாலும் கண்ணாலம் நடந்துருது ( மத்ததெல்லாம் மத்த கிரகங்களோட பலத்தை பொருத்து நடக்கும் - நடக்காம போகும் .அதுவேற சங்கதி)

இந்த ஆங்கிள்ள இந்த பதிவை எழுதினா ஜாதகம் இல்லாதவுக கழண்டுக்குவாய்ங்க. அதனால முந்தா நாள் திருமண தாமதத்துக்கு கொடுத்த காரணங்களை இன்னம் கொஞ்சம் அப்டேட் பண்ணி அவற்றை அடிப்படையா வச்சு அதுக்கு எந்த கிரகம் காரணமா இருக்கலாம்ங்கற ஹன்ச் - அதுக்கு என்ன பரிகாரங்கற டிப்ஸை தந்துர்ரன். Read More