
அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு லக்னாதிபதி 11 ல நின்னா திருமணத்தடை எப்படி ஏற்படும்னு பார்ப்போம். இந்த 11 ஆமிடத்துக்கு ஒரு சிறப்பு இருக்கு. அது இன்னாடான்னா எந்த பாவாதிபதி இந்த பாவாதிபதி/பாவத்தோட அந்த சம்பந்தப்பட்டாலும் அந்த பாவ காரகம் டபுளாயிரும்.
உ.ம் 4 ஆம் பாவாதிபதி 11 ஆம் பாவாதிபதிக்கு தொடர்பு ஏற்பட்டா ரெண்டு அம்மா , ரெண்டு வாகனம்,ரெண்டு டிகிரி (இது நம்ம அனுபவமுங்கோ)
லக்னாதிபதி 11 ல நின்னா ஒரே ஆளு ரெட்டையாயிருவாரான்னா ஆமாம். குணத்துல. டபுள் மைண்டட் ஃபெல்லோவா இருக்க வாய்ப்பு அதிகம்.
பொதுவா 11 ஐ லாபஸ்தானம்னு சொல்றோம்.லக்னாதிபதின்னாலே ஜாதகர் தான். அப்போ ஜாதகர் லாபம் பார்க்காம எதையும் ...எதையும் செய்யமாட்டாருன்னு சொல்லலாமா? லாபத்தை எதிர்பார்த்து செய்வாருன்னு சொல்லலாம். (மைல்டா இருக்கில்லை) Read More
No comments:
Post a Comment