
அண்ணே வணக்கம்ணே !
பொதுவா பார்த்தா குரு,சுக்கிரன்,களத்ர பாவாதிபதி சோனியா இருந்தா தாமதம் ஏற்படும். டீப்பா பார்த்தா லக்னாதிபதியே பல்பு வாங்கியிருந்தாருன்னு வைங்க தாமதம் சகஜம். உ.ம் நீசம், 6,8,12 ல மாட்டறது, அல்லது மேற்படி அதிபதிகளோட சகவாசம் வச்சுக்கறது . அஸ்தங்கதம், நெல்ல இடத்துல நின்னு வக்ரம் அடையறது, இப்படி ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு.
கண்ணாலத்துக்கு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வகையில கோ ஆப்பரேட் பண்ணுது. ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு வகையில கோ ஆப்பரேட் பண்ணுது.
மேஜரான பாவங்கள் கெட்டிருந்து 1 ,2 , 4, 5, 7, ( பெண்ணானால் 8) , 9 , 11 ( ஆணுக்கு ரெண்டாம் கல்யாணம்) ,12 பாவங்கள்ள எதாவது ஒன்னு பேர் சொல்லியிருந்தாலும் கண்ணாலம் நடந்துருது .( மத்ததெல்லாம் மத்த பாவங்களோட பலத்தை பொருத்து நடக்கும் - நடக்காம போகும் .அதுவேற சங்கதி)
அதே போல மேஜரான கிரகங்கள் கெட்டிருந்து குரு,சுக்கிரன் அல்லது 7 ஆம் பாவாதிபதிகள்ள ஒருத்தரு தம் கட்டி நின்னிருந்தாலும் கண்ணாலம் நடந்துருது ( மத்ததெல்லாம் மத்த கிரகங்களோட பலத்தை பொருத்து நடக்கும் - நடக்காம போகும் .அதுவேற சங்கதி)
இந்த ஆங்கிள்ள இந்த பதிவை எழுதினா ஜாதகம் இல்லாதவுக கழண்டுக்குவாய்ங்க. அதனால முந்தா நாள் திருமண தாமதத்துக்கு கொடுத்த காரணங்களை இன்னம் கொஞ்சம் அப்டேட் பண்ணி அவற்றை அடிப்படையா வச்சு அதுக்கு எந்த கிரகம் காரணமா இருக்கலாம்ங்கற ஹன்ச் - அதுக்கு என்ன பரிகாரங்கற டிப்ஸை தந்துர்ரன். Read More
1 comment:
தொடர்ந்து சிறந்த பதிவுகளை வெளியிடும் உங்களுக்கு நன்றி
Post a Comment