'>
Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Sunday, August 14, 2011

ரஜினியை சந்தித்தேன் 2011


2009 மே மாசத்துல ஆன்லைன் ஜோதிட ஆலோசனை சூடு பிடிச்சதுலருந்து அவுட் டோர் கன்சல்டன்சிக்கு போறதே கிடையாது. இருந்தாலும் நம்ம கெட்ட நேரம் ஒரு மெட்ராஸ் பார்ட்டி நை நைன்னு நச்சரிச்சுட்டே இருக்கவே தெரியாத்தனமா புறப்பட்டோம். அதிகாலை பாலவினாயகரை பிடிச்சு கோயம்பேடுல இறங்கி நண்பருக்கு ஃபோன் போட்டோம்.

நண்பர் நம்மை பிக் அப் பண்ண வழக்கமா டூவீலர்ல தான் வருவார். நேத்தென்னவோ பந்தாவா இன்னோவால வந்தார். கார் சென்னை சாலைகளில் பறக்க ஆரம்பிச்சது. நாமும் வழக்கப்படி பராக்கு பார்த்துக்கிட்டே கிடந்தோம்.

படக்குனு கார் நின்னது.ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபம்னு ஒரு போர்டு தெரிஞ்சதும்..திகீர்னுச்சு " "என்னப்பா இது ரஜினியோட கல்யாண மண்டபம் மாதிரி இருக்கு"ன்னு கேட்டம். நண்பர் சிரிச்சிக்கிட்டே நீங்க சந்திக்கப்போறது ரஜினி சாரை தான்னு சொன்னார்.

' இதென்னடா வம்பா போச்சு. நாம கேள்விபட்டது நிஜமா இருந்தா ஆர்.எம்.வீ இருந்தப்ப எதுனா அட்வென்சர் பண்ணிட்டு அவரோட ஆஃபீஸ்ல போய் உட்கார்ந்துக்குவாரு. இப்பம் ஆர்.எம்.வீயே பிரச்சினை வந்தா எந்த ஆஃபீஸுக்கு போறதுன்னு தெரியாம கிடப்பாரு. எந்த தைரியத்துல நம்மை கூப்பிட வச்சிருப்பான் மன்சன்."ன்னு சிந்தனைகள் ஓட நண்பரை பின் தொடர்ந்தோம். ஓடினா துரத்துவாய்ங்க.துரத்தினா பிடிச்சுருவாய்ங்க. ச்சொம்மா ஆயாசம் தேன் மிச்சம்.

ரஜினி ஒரு சோஃபால வெள்ளை குர்தாவும் பட்டை கொட்டை இத்யாதி அலங்காரங்களோட இருக்க நண்பர் நம்மை அறிமுகம் செய்தார்.

அதுக்கப்பாறம் நடந்த உரையாடல் இதோ : Read More

Monday, August 1, 2011

ரஜினி வாயில் "நாதாரி" என்ற வார்த்தை


ஆமாங்ணா ரஜினி ஒரு படத்துல நாதாரிங்கற வார்த்தைய பஞ்ச்சாவே உபயோகிச்சிருக்காரு. என்ன படம் என்ன படம்னு கேப்பிக. (ட்விட்டர்ல என்னை ஃபாலோ பண்ற பார்ட்டிகளுக்கு பதில் தெரிஞ்சிருக்கலாம்) சொல்றேன்.

அதுக்கு மிந்தி நாதாரிங்கறதுக்கு என்ன அருத்தம்? ஆருனா சொல்லுங்கப்பு. ப்டையப்பாவுல என்ன பஞ்ச்? "என் வழி தனி வழி" இதை தெலுங்குல டப் பண்ணப்ப " நா தாரி ரஹதாரி"ன்னு வச்சிருந்தாய்ங்க. நா = என்னோட தாரி = வழி .

ரஹதாரின்னா = ராஜ பாட்டை /ஹைவே இப்படி அருத்தம்.

நம்ம ஜோலிக்கு வந்தா கோலி காலினு ஜா.ராவுக்கு சொல்லத்தேன் இந்த பதிவு. இது நாலு பேரை போய் சேரனும்ல அதுக்குத்தேன் வில்லங்க தலைப்பு+ லீடு. பதிவுக்கு போயிரலாமா? Read More

Wednesday, July 27, 2011

ரஜினியும் ஆனந்த விகடனும்


ரஜினிக்கு ஆனந்த விகடன் என்னவோ? ஆ.விக்கு ரஜினி என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் ரஜினி நமக்கு ஆசான்.

ஆமாங்னா ரஜினி என்னோட ஆசான். ( பாஸு /குரு /தலை இப்படி என்ன வார்த்தைய போட்டுக்கிட்டாலும் பரவால்லை). அவரு ரெட்டை ஹீரோ -மல்ட்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்டுகள்ள நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலருந்தே நமக்கு ரஜினி மேல ஒரு லவ் வந்துருச்சு. இதுக்கு என் அண்ணனும் காரணம். காரணம் அவன் ரஜினி ரசிகன். ரஜினி நமக்கு ஒரு ஆசான்ங்கற மாதிரி ஃபீலிங் வந்தது "தம்பிக்கு எந்த ஊரு" படத்துல.

அதுக்கு காரணம் இருக்கு. அந்த காலக்கட்டத்துல நாம படத்துல அறிமுக காட்சி ரஜினி மாதிரி இருந்தம். ரஜினி எப்படியெல்லாம் மோல்ட் ஆகிறாருங்கற பில்டப் ரெம்ப பிடிச்சிருந்தது. ( என் ஃபேவரிட் காட்சி ரஜினி செக்ஸ் புக் படிக்கிற காட்சிதேன்)

நாம வகுத்து வச்சிருக்கிற/கண்டுபிடிச்சு வச்சிருக்கிற தியரி பிரகாரம் உலக ஆண்களையெல்லாம் ரஜினி அ கமல் கேட்டகிரியில அடைச்சுரலாம். இதுல நாம கமல் கேட்டகிரி. ஆனால் ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ்ங்கற மாதிரியோ /ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாவோ நமக்கு ரஜினி மேலதேன் ஆர்வம் வந்தது.
Read More

Friday, June 24, 2011

வீடு மாறும் ரஜினி : வாஸ்து குறித்த பகீர் உண்மை


வாஸ்துவும் ஜாதகம் மாதிரிதான். 100% வாஸ்து உள்ள வீடு அசாத்தியம் .எந்த வீடும் நன்மை தீமை இரண்டையும் கலந்து தான் தரும்.

உ.ம்: கிழக்கு,வடக்கு பகுதியில தெரு , காலி இடம் இருந்தா ஆண்கள் கோழைகளாவும் - பெண்களை அடிமைகளா ட்ரீட் பண்றவுகளாவும் மாறிருவாய்ங்க

தீமைய தவிர்க்க வீடு மாறினா ...

அ) அடுத்த 1.5 வருடத்துக்கு பழைய வீட்டோட வாஸ்துதான் வேலை செய்யும்.
ஆ) பத்துவட்டிக்காரனுக்கு செட்டில் பண்ணிட்டு வங்கிக்கடனுக்கு போக நினைச்ச கதைதான்.
இ) ப.வ.காரன் விடமாட்டான். அப்படியே மீறிப்போனா வங்கி மேனேஜருக்கும் வத்தி வ்ச்சுருவான்
ஈ) பழை வீட்ல இன்னம் என்னெல்லாம் தீமை நடக்கனும்னு இருக்கோ அந்த தீமை எல்லாம் குறுகிய காலத்துலயே நடந்துர வாய்ப்பிருக்கு
உ) முக்கியமா பழைய வீட்டிலிருந்தபோது பெற்ற நன்மையை உடனே இழக்க நேரிடும்.

செய்தி: சூப்பர்ஸ்டார் வீடு மாறுகிறார்


பிட்டா (ப)பிடிங்க !

1.ஒரு நிறுவனத்தில் 6 மாதத்துக்கு மிஞ்சி பிரச்சினை இல்லாமல் பணியில் தொடர்ந்தால் உங்கள் சென்சிட்டிவிட்டி ரேட் குறைந்துவிட்டது என்று அர்த்தம்.

அதே நிறுவனத்தில் ரெண்டரை வருடத்துக்கு மிஞ்சி தொடர்ந்தால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது அல்லது அந்த நிறுவனம் பெட்டர் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் ஐந்து வருடம் தொடர்ந்து விட்டால் உங்களில் எதுவோ செத்துவிட்டது அல்லது அந்த நிறுவனம் பெஸ்ட் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வும் பெற்றுவிட்டால் அந்த நிறுவனமோ அ நீங்களோ பாஸ்டை ரெவ்யு பண்ணிக்கவே இல்லை வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவே இல்லை என்று அர்த்தம்

ஓய்வு பெற்ற பிறகும் அதே நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்றால் உங்களை போன்ற ஜால்ரா உலகத்திலேயே இல்லைன்னு அர்த்தம். அல்லது அந்த நிறுவனம் மிக மிக உன்னதமான நிர்வாகத்தை கொண்டுள்ளது என்று அர்த்தம்


2.கடவுளுக்கு இஸ்லாம்ல சதிகாரன் (மாக்கிர்) என்று ஒரு பெயர் உண்டு.கெட்டவுகளை வச்சு நெல்லவுகளுக்கு எதிராவும் சதி பண்றாரு. ஆனால் இந்த ப்ராசஸ்ல நெல்லவுகளுக்கு கிடைக்கிறது கர்ம நாசம், ஜன்ம ராஹித்யம் ( மறு பிறவி இருக்காது) - ஞானம். கெட்டவுகளுக்கு கிடைக்கிறது பாவம்.

அதுக்காவ கெட்டவனுக்கு விருது ,பட்டம்லாம் கிடைக்காது. எவனெல்லாம் கூட்டு சேர்ந்து ஆப்படிச்சானோ அவனுகளுக்குள்ளயே விவகாரம் வரும். ஒருத்தன் அடுத்தவனை ஒழிச்சு கட்ட பார்ப்பான். அவனுக்கு வச்ச வெடி இவன் பேண்டுக்குள்ளயே வெடிக்கும். உ.ம் : ராஜ பக்சே - பொன்சேகா , ராசா -தயா நிதிமாறன், பிரணப்-சிதம்பரம் ( பிரதமர் பதவிக்கான ரேஸ்ல முந்தத்தான் சிதம்பரம் சாரு ..பிரணப் சாம்பர்ல உளவு பார்த்ததா குற்றச்சாட்டு)

Saturday, June 18, 2011

மனம் (வ)திருந்தாத ரஜினி

சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வில் இருக்கும் ரஜினி ராணா மூலம் மகிழ்விக்க வருவதாய் ரசிகர்களுக்கு அன்பு கடிதம் ஒன்றை தீட்டியிருக்கிறார்.

ங்கொயால லெட்டர் பேட் ,கவர் ஸ்டாம்ப், டிடிபி சார்ஜ் கூட கிடையாது,
இந்த கடிதத்தின் மூலம் தான் தனது கடந்த கால செயல்களுக்கு வருந்தவுமில்லை.மனம் திருந்தவும் போவதில்லை என்று ஒளிவு மறைவில்லாது டிக்ளேர் செய்திருக்காரு. வாழ்க.Read More

Sunday, May 22, 2011

ரஜினியின் மறு பிறவி எங்கே ?

அண்ணே வணக்கம்ணே.. அடச்சீ என்னய்யா இது அச்சாணியமா மறுபிறவி கிறு பிறவின்னிக்கிட்டு இப்ப என்ன நடந்து போச்சு?  சீக்கிரமே நல்ல ஆரோக்கியத்தோட ,துடிப்போட திரும்பிவரப்போறாரு  தலைவருன்னுட்டு உணர்ச்சி வசப்பட்டுராதிங்க.

ஏன் எட்டாங்கிளாஸ் படிக்கிற பையனை  ஸ்கூல் ஃபைனல்ஸ் முடிச்ச பிற்பாடு  எந்த காலேஜ்ல சேர்க்கலாம்னு அவன் எட்டாங்கிளாஸ் படிக்கிறப்ப ரோசிக்கக்கூடாதா என்ன? ரஜினி நல்லபடி திரும்பி வரட்டும். நிறைவா 120 வருசம் வாழட்டும் . நமக்கொன்னும் அப்ஜெக்சன் கிடையாது.

இந்த பிறவி மேட்டர்ல  நமக்குன்னு ஒரு ஃபார்முலா இருக்கு. அதை வச்சு ஒரு சில விஷயங்களை சொல்றேன். Read More

Saturday, May 14, 2011

ரஜினியை சந்திரமுகி ஆவி துரத்துகிறதா?

சந்திரமுகி படம் மலையாள படத்தின் ரீமேக் என்பது தெரிந்ததே. அதில் நடித்த சவுந்தர்யா, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதே படத்தில் நடித்த விஷ்ணுவர்த்தன் திடீர் மாரடைப்பால் இறந்தார். இந்த அடிப்படையில் ரஜினியின் திடீர் உடல் நல பாதிப்பை அணுகி தெலுங்கு சேனல் ஒன்று சிறப்பு செய்தியை ஒளிபரப்பியது. சந்திரமுகி உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதா என்பதே கேள்விக்குரியது. ஒரு வேளை உண்மைக்கதையாகவே இருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் மேற்படி ஆவி சந்தோசம்தேன் பட்டிருக்கனும். (ஃப்ரீ பப்ளிசிட்டி கிடைக்குதுல்ல) Read More

Friday, April 29, 2011

ரஜினி மருத்துவமனையில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றி அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தீவிர ரத்தக்கொதிப்பால் அவதிப்பட்டதாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தனியார் தெலுங்கு டிவி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி ரஜினி அ.தி.மு.கவுக்கு ஓட்டளிப்பது போன்ற படங்கள் வெளியானதும் - பின் சினிமா பட  ப்ரிவ்யூ ஒன்றில் கலைஞரை  தர்மசங்கடத்துடன்  சந்தித்ததையும் ஊடங்கள் வெளிச்சம் போட்டது தெரிந்ததே.

சமீபத்தில் ராணா படத்தில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த  வடிவேலுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும் செய்திகள் வெளிவந்தன.

இந்த  நிலையில் ரஜினியின் ரத்தக்கொதிப்பு  சாதாரண உடல் நலக்குறைவா? அல்லது மேற்சொன்ன  சம்பவங்களின் விளைவாக ஏற்பட்ட  தீவிர  மன அழுத்தத்தின் விளைவா என்பது கேள்விக்குரியது.

எப்படியோ ரஜினி சீக்கிரமே உடல் நலம் தேறிட கடவுள் அருள் புரியட்டும்

பி.கு:
நாமாச்சும் வெறுமனே அனுமதின்னு தான் கொடுத்தோம் - நக்கீரனை பாருங்க .. ஷூட்டிங்ல மூச்சு திணறலாம் -தீவிர சிகிச்சைப்பிரிவாம் -இடையில ஒரு பார்ட்டி வழக்கமான செக் அப்புனு மெழுகுது ..எது நெஜம் எது பொய்யினு இந்த காலத்துல தெரிஞ்சிகறதுக்குள்ள சிண்டை பிச்சுக்கலாம்னு தோணிப்போகுது..

Monday, April 11, 2011

2 வருசத்துக்கப்பாறம் அரசியலுக்கு : ரஜினி தகவல்

2 வருசத்துக்கப்பாறம் அரசியலுக்கு : ரஜினி தகவல்

தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரியை வீட்டுக்கு அழைச்சு பேசிட்டிருந்தப்ப ரஜினிய அவரு கூப்டாராம் ( வேற எதுக்கு? அரசியலுக்குத்தேன்) அப்ப ரஜினி அய்யா ஒடைச்சு சொன்னாராம். சினிமால இருந்துக்கிட்டு அரசியலுக்கு வரமாட்டேன். என் கடைசி படத்தை முடிச்ச பிறவு 2 வருஷம் கழிச்சு வருவேன்னாராம்.

அடங்கொய்யால நீ வா .. வராம போ. ஆனால் இந்த மேட்டரை ஷேர் பண்ணிக்க செலக்ட் பண்ண மன்சனை வச்சே உன் ரூட்டு எப்டினு கணக்கு போட்டுருவம்.

கலைஞரை ஆஹா ஓஹோனு புகழ்ந்ததையெல்லாம்  கலைஞர் டிவில போட்டு தாளிக்கிறாய்ங்க. கண்டுக்கலை. ஸ்டாலின் வந்தா சால்வை போடற. யாரோ பாய் வந்தா விஷ் பண்றே. கலைஞர் டிவில பா.ஜ.க தலைவருங்க  பேட்டியெல்லாம் வருதுங்கண்ணா..

அப்போ சோனியா கை கொடுக்கப்போறது நெஜம் தானா? தாத்தாவுக்கு மூக்குல வேர்த்துதான் உறவுக்கு கை கொடுக்க ஆரம்பிச்சிட்டாரா?

ரஜினிய நேரடியா சேர்த்துக்கிட்டா லொள்ளு ( ஸ்டாலினுக்கு பிரச்சினையாயிருமே) அதனால பா.ஜ.க வுல வுட்டு ஆட்ட சொல்லலாம்னு கணக்கா..

மண்டை காயுதுப்பா..

செய்தி உபயம் : சாட்சி தெலுங்கு தினசரி

Monday, February 28, 2011

ரஜினி : ஒரு ஜோதிட ஆய்வு


தெலுங்குல கீடெஞ்சி மேலெஞ்சுனு ஒரு சொலவடை இருக்கு. அதாவது ஒரு காரியத்தை செய்யறதுக்கு மிந்தி இதனால என்னெல்லாம் கெடுதல் நடக்கும்னு எண்ணி பார்க்கிறது. இது யாருக்கு உபயோகமோ இல்லையோ ஜோதிடருக்கு ரெம்ப யூஸ் ஃபுல். இந்த உருப்படாத ஜாதகத்தை பத்தி எழுதினால் என்ன நடக்கும்னு சின்னதா கணக்கு போட்டு பார்த்துட்டுதேன் தகிரியமா எழுதறேன்.( எல்லாத்தயும் ஆத்தாளே பார்த்துப்பான்னு ஒரு நினைப்பு)

ஜனனம்: 12/12/1950 நட்சத்திரம்: திருஓணம் ராசி: மகரம் ,லக்னம் : சிம்மம்.முதல்ல கிரக நிலைய பார்ப்போம்:
2 ஆவது இடத்துல கேது சனி, நாலாவது இடத்துல சூரியன், அஞ்சுல சுக்கிர புதன், ஆறுல சந்திரன்,செவ்வாய், 7ல குரு, எட்டுல ராகு

இந்த விரிவான ஆய்வுக்கட்டுரையை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க

Wednesday, October 6, 2010

"பால் தாக்கரே எனக்கு தெய்வம் மாதிரி "-ரஜினி

சூப்பற (எழுத்துப்பிழை இல்லிங்கோ) ஸ்டார் ரஜினி பால் தக்கரேவை சந்திச்சிருக்காரு. சந்திச்சது மட்டுமில்லை "பால தாக்கரே எனக்கு தெய்வம் மாதிரி "ன்னு சொல்லியிருக்காரு. மராட்டிய படங்கள்ள நடிக்க ஆர்வமா இருக்கிறதாவும் சொல்லியிருக்காரு.



ஆரிந்த பால் தாக்கரே! மொழி வெறியர், மண்ணின் மைந்தர் வாதத்தை தூக்கிப்பிடிச்சு அங்கன உள்ள தமிழர்களை பேதியாக்கினவரு. மத அடிப்படை வாதி. திடீர் திடீர்னு கண்டமேனிக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்து லா அண்ட் ஆர்டருக்கு ஆப்பு வைக்கிறவரு. உட்கட்சி சன நாயகத்துல நம்பிக்கை இல்லாதவரு.குடும்ப அரசியலுக்கு மையம்.



பாக்கிஸ்தான் கிரிக்கெட் ஆடவரக்கூடாதுன்னு மைதானத்தை கொந்தி விட்ட பார்ட்டி. இவரை ஒவ்வொரு வியர்வை துளிக்கும் ஒரு பவுனை கொடுத்த தமிழ் நாட்டு சூப்பற ஸ்டார் தெய்வங்கறாரு.



எங்கப்போயி முட்டிக்கிறது. ஆக பூனைக்குட்டி வெளிய வந்துருச்சு. இனம் இனத்தோட சேர்ந்துருச்சு. ஏ தாழ்ந்த தமிழகமேன்னு அண்ணா எந்த முகூர்த்தத்துல சொன்னாரோ அது கல்வெட்டு மாதிரி ஆயிருச்சு.



என்ன தம்பி .. எந்திரனை 8 ஆவது தடவையா பார்க்கப்போறியா.. போ போ.. பாவம் ரஜினி சார் வீட்ல அரிசியில்லை, கலா நிதி மாறன் சார் வீட்ல பருப்பில்லை. சங்கர் சார் வீட்ல கேஸ் தீர்ந்துருச்சாம். நீ போய் படம் பார்த்தாதான் அவிக சோறே திங்க முடியும் போய் வா.



அடங்கொய்யால .. திராவிடனை பத்தியும் ,தமிழனை பத்தியும் ரஜினி சாரி கரீட்டா தெரிஞ்சு வச்சிருக்காருப்பா. சொரணை கெட்ட ஜென்மங்கன்னு .



எந்திரன் ட்ரெய்லர் ரிலீஸ்ல போப் மேல ஜோக். பால் தாக்கரே தெய்வம். வேறென்ன .. அதெல்லாம் துடைச்சி விட்டுட்டு போய் வா கண்ணு ..அப்படியே அடுத்த ஷோ எப்பனு தெரிஞ்சிக்கிட்டு வா..



ரஜினி சாரு சிம்ம லக்னம்,மகரராசில பிறந்தவரு. அவருது கால சர்ப்ப தோஷ ஜாதகம்.