'>

Thursday, December 22, 2011

"சுதேசி" யில்கனி மொழி எதிர்காலம் கட்டுரை

அண்ணே வணக்கம்ணே !
ஒரு ஆசாமி ஊருக்கு புதுசா வந்த சாமி(யார்) கிட்டே லைஃப்ல நிம்மதியே இல்லை. என்ன பண்ணலாம்னு கேட்டாரு. சாமி விவரமான ஆளு. ஒரு நா கோழி வளர்க்க /இன்னொரு நாள் நாய் வளர்க்க / இன்னொரு நாள் கிளி வளர்க்கன்னு உபதேசங்களை மாத்தி மாத்தி கொடுத்துக்கிட்டே இருந்தாரு.

என்ட்ரி கொடுத்த ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு விதமா டார்ச்சர் பண்ண - ஒன்னு இன்னொன்னை விரட்ட ஆசாமிக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சிருச்சு. மறு நாள் டக்கர் குட்டி ப்ரதர்னிட்ட கணக்கா பயங்கர விரக்தியோட சாமியை பார்க்க போனாரு.

சாமி நீ வளர்க்க ஆரம்பிச்ச எல்லா ஜீவராசியையும் ஜெ சசி அண்ட் கோவை விரட்டின மாதிரி விரட்டிருன்னாரு. ஷாட் கட்.

மறு நாள் ஆசாமி வந்தான். அக்மார்க் இழந்த சக்தி வைத்தியரை பார்த்து லேகியம் சாப்ட கணக்கா சுஸ்தா வந்தான். சாமி கேட்டாரு.

எப்படிப்பா இருக்கேன்னாரு அதுக்கு ஆசாமி தினத்தந்தி ஹெட் லைன்ஸ் கணக்கா " நிம்மதியா இருக்கேன் சாமி"ன்னான்.

இந்த கதையை ஏன் இப்பம் சொல்றேன்னு கேப்பிக.சொல்றேன். தெய்வம் என்னெல்லாம் கொடுத்திருக்கோ அதனோட மகிமை அதுக நம்மாண்ட இருக்கிற வரை தெரியாது, எதுனா கிரகம் சைடு வாங்கி உள்ளடி கொடுத்து "உள்ளது போச்சுரா நொள்ளை கண்ணா"னு ஆயிட்டா அப்பத்தேன் தெய்வம் நம்மை "எம்மாம்"
கருணையோட ஆசீர்வதிச்சிருந்தாருன்னு புரியும்.

நம்ம கதையும் அப்படித்தேன் ஆயிருச்சு. இந்த 40+ வயதுங்கறது ஒரு ஆணோட லைஃப்ல முக்கியமான காலகட்டம். மேலும் மேலும் தீவிரமா உழைச்சு மேலும் மேலும் சொத்து சுகம்னு சேர்க்க வேண்டிய வயசு.

நாம பைபிள் சொல்றாப்ல ( பறவைகள் விதைப்பதுமில்லை -அறுப்பதுமில்லை) வாழ்ந்துட்ட பார்ட்டி. பழக்கத்தை மாத்திக்க முடியலை. ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப் மாதிரி ஓடிக்கிட்டிருந்தது. எங்க பாட்டி "அவுத்து வுட்ட மாடு மாதிரி"ன்னு சொல்வாள்.அப்படி ஒரு லைஃப்.

மொதல் ஆப்பு மின்வாரியம் வச்சுருச்சு. ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் பவர் கட். இதுக்கு மிந்தி தீப்பெட்டி கணக்கான போர்ஷன்ல பவர் கட் நேரத்துலயும் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தம். ( அதாங்க பலன்களை பதிவு பண்ணி வச்சுக்கறது) .

வாழ்க்கையில உயரனும்ங்கறதை நெஜமாக்க மேல் மாடிக்கு வந்துட்டமா சுத்து வட்டாரத்துல வியாபர தலங்கள் , லாட்ஜுகள்ள ஓடும் ஜெனரேட்டர்கள் சத்தம் மண்டைய பிளக்குது.இதுல என்னத்தை பதிவு பண்றது.

இடையில இந்த காலண்டர் சமாசாரம் ஒன்னு .( இன்னைக்கு பாரத்தை சென்னை ஆஃப்செட் ப்ரிண்டர்ஸ் தலை மேல இறக்கியாச்சுன்னு வைங்க) . ஜோதிடம் 360 நூல் வெளியீடு ஒன்னு. ( பொங்கல் வெளியீடு)

எல்லாம் சேர்ந்து ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ்ல பயங்கர எஃபெக்ட் வந்துருச்சு. இந்த இழவுல ஒரு சாட்சி சொல்லும் கடமை வேற .

அல்லாத்துக்கும் க்ளைமாக்ஸ் மாதிரி காலண்டர் ப்ரிண்டிங் வேலையா சென்னைக்கு போன நம்ம பாப்பாவோட உட்பி + அவள் வேலை பார்க்கும் ஸ்டுடியோ ஓனர் அவளுக்கு செக்யூரிட்டியா போறதால தன்னோட வளர்ப்பு நாயை நம்ம ஆத்துல விட்டுட்டு போயிட்டான். ஏற்கெனவே நம்ம ஆத்துல ஒரு டிக்கெட் இருக்கு.

ஆனால் அது ஸ்னேகா டைப். புதுசா வந்த டிக்கெட் இருக்கே கொய்யால சஞ்சய் காந்தி டைப். நம்ம நரம்பை கழட்டிருச்சு போங்க. இப்பத்தேன் உறைக்குது ஆத்தா நம்மை எந்த அளவுக்கு காபந்து பண்ணி வச்சிருந்தான்னு.

நாளையிலருந்தாச்சும் கொஞ்சம் நிம்மதியா விட்டா "பொளப்ப" பார்க்கலாம். ஆத்தா என்ன பண்றாளோ ஆருக்கு தெரியும்?

எச்சரிக்கை:

கனிமொழியின் எதிர்காலம் குறித்த நம்ம கணிப்பு சுதேசி இதழ்ல வெளியாகியிருக்கு. கடைசி பாராவுல மட்டும் தங்கள் சரக்கை சேர்த்து பப்ளிஷ் பண்ணியிருக்காய்ங்க. ஆன்லைனில் பார்க்க விரும்பறவுக கீழே உள்ள சுட்டிகளை க்ளிக்கி பார்க்கலாம்.

http://sudesi.com/tamil/viewpage?order=21
http://sudesi.com/tamil/viewpage?order=22

(என்னண்ணே சோதிட கேள்விபதில் பகுதிக்கு மொத நாள் வந்த கேள்விகளோட சரி ..கேள்விகளே வரலை.. ஆளுக்கு ஒன்னா தூக்கி தட்டுங்க. இல்லாட்டி ஜா.ரா மாதிரி போலி பெயர்ல கேள்வி கேட்டு பதில் கொடுக்க வேண்டி வந்துரப்போவுது)

No comments: